Category Archives: Paisa News

Paisa News – News about Business and Finance

டி.சி.எஸ். நிறுவன காலாண்டு லாபம் – ரூ. 8,042 கோடி

டி.சி.எஸ். நிறுவன காலாண்டு லாபம் – ரூ. 8,042 கோடி 

TCS Quarterly net profit to Rs. 8,042 Crore – Q2FY20

டாட்டா குழுமத்தின் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டி.சி.எஸ்.(TCS) நிறுவனம் 2019-20ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு முடிவுகளை இன்று(10-10-2019) வெளியிட்டது. செப்டம்பர் மாத காலாண்டில் நிறுவனத்தின் விற்பனை 38,977 கோடி ரூபாயாகவும், இயக்க லாபம் 10,225 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.

நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ. 8,042 கோடியாக சொல்லப்பட்டுள்ளது. கடந்த 2018ம் வருட செப்டம்பர் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 7,901 கோடி ரூபாயாக இருந்தது. இதனுடன் ஒப்பிடும் போது, நடப்பில் சொல்லப்பட்ட நிகர லாபம் 1.78 சதவீத வளர்ச்சியாகும்.

கடந்த 2018-19ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் விற்பனை அளவு ரூ. 36,854 கோடியாகவும், இயக்க லாபம் ரூ. 10,278 கோடியாகவும் இருந்துள்ளது கவனிக்கத்தக்கது. நடப்பு நிதி வருடத்தின் முதலாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் தற்போதைய விற்பனை வருவாய் 2 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.

அதே வேளையில் ஜூன் மாத காலாண்டுடன் லாபத்தை ஒப்பிடும் போது, ஒரு சதவீத சரிவை சந்தித்துள்ளது. ஜூன் 2019 காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 8,131 கோடியாகும். நிறுவனத்தின் இயக்க லாப அளவு கடந்த 12 மாதங்களில் சராசரியாக 26 சதவீத  வளர்ச்சியை பெற்றுள்ளது.

டி.சி.எஸ். நிறுவனம் தனது முதலீட்டாளர்களுக்கு பங்கு ஒன்றுக்கு 45 ரூபாய் ஈவு தொகை(Dividend) வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போதைய தேதியில் இந்த நிறுவனத்தின் பங்கு 2005 ரூபாயில் வர்த்தகமாகி உள்ளது. கடந்த ஒரு வருடத்தில் இதன் பங்கு விலை 4 சதவீத சரிவையும், ஒரு மாதத்தில் 8 சதவீத சரிவையும் சந்தித்துள்ளது.

ஐந்து வருட காலத்தில் நிறுவனத்தின் பங்கு விலை 50 சதவீதம் மற்றும் பத்து வருட காலத்தில் 614 சதவீத வருவாயை முதலீட்டாளர்களுக்கு அளித்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய ஐ.டி. நிறுவனமான டி.சி.எஸ்.(Tata Consultancy Services) சந்தை மதிப்பு ரூ. 7.52 லட்சம் கோடியாக உள்ளது.

நிறுவனத்திற்கு கடன் எதுவும் பெரிதாக இல்லை. கடந்த பத்து வருடங்களில் விற்பனை சராசரி அளவு 18 சதவீதமாக உள்ளது. லாப வளர்ச்சியும் பத்து வருடங்களில் சராசரியாக 20 சதவீதமாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

உலகெங்கிலும் பொருளாதார மந்த நிலை காணப்படுகிறது – சர்வதேச நாணய நிதியம்

உலகெங்கிலும் பொருளாதார மந்த நிலை காணப்படுகிறது – சர்வதேச நாணய நிதியம் 

Worldwide Economy Slowdown seen – IMF

தற்போது உலகெங்கும் ஒருவித பொருளாதாரம் சார்ந்த மந்த நிலை தென்படுகிறது. இது திடீரென ஏற்பட்டதல்ல, கடந்த இரண்டு வருட காலமாகவே காணப்பட்டு வரும் மந்த நிலை தான். சீன-அமெரிக்க வர்த்தக போரில் துவங்கி, உள்நாட்டில் ஐ.எல்.எப்.எஸ்.(IL & FS) நிறுவனம் நிதி சிக்கலில் வெளிப்பட, தற்போது ஒவ்வொரு நாட்டிலும் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி சொல்லிக்கொள்ளும் படி இல்லை.

 

2008ம் ஆண்டுக்கு பிறகு, மற்றுமொரு பொருளாதார வீழ்ச்சி நடப்பில் ஏற்படுமா என்ற கேள்வி பலரிடம் எழும்பியுள்ளது. உலகமயமாக்கல் வந்த பிறகு, ஒவ்வொரு நாடும் வளர்ச்சி பாதையில் சென்றிருப்பினும், வெவ்வேறு நாடுகளில் ஏற்படக்கூடிய பிரச்சனை மற்ற நாடுகளின் பொருளாதாரத்தையும் பாதித்து வருவது இயல்பு.

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

சமீபத்தில் சர்வதேச நாணய நிதியம்(International Monetary Fund) சார்பில் உலக பொருளாதாரம் சார்ந்த சில விஷயங்களும், அதற்கான ஆய்வுகளும் பேசப்பட்டன. நடப்பு 2019ம் ஆண்டில் உலகின் கிட்டத்தட்ட 90 சதவீத நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மிகக்குறைவாகவே இருக்கும் என கூறியுள்ளது. இதன் தாக்கம் 2020ம் வருடத்திலும் இருக்கும் என தெரிவித்துள்ளது.

 

நாடுகளிடையே ஏற்பட்டுள்ள வர்த்தக போரால், 2020ம் ஆண்டில் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 700 பில்லியன் டாலர்கள் அளவு சரிவு ஏற்படும் எனவும் கூறியுள்ளது. இது உலக பொருளாதார வளர்ச்சியில் 0.8 சதவீதம் என்பது கவனிக்கத்தக்கது.

 

இதன் விளைவாக ஒவ்வொரு நாட்டிலும் பொருளாதார தேக்கம் ஏற்பட்டு, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு, கடந்த சில வருடங்களில் காணாத மிக குறைவான விகிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சொல்லப்பட்டுள்ள உலக பொருளாதாரம், ஒரு ஒத்திசைக்கப்பட்ட பொருளாதார மந்த நிலையாக உள்ளது. இதனை சரி செய்ய ஒவ்வொரு நாடும் பரஸ்பர புரிந்துணர்வு மூலமே தீர்வை பெற முடியும். 

 

கடந்த முறை ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையை விட, இம்முறை ஏற்பட்டுள்ள மந்த நிலை நீடித்த காலமாக சொல்லப்படுகிறது. உள்நாட்டில் நுகர்வு தேவையை(Consumption Demand) அதிகரித்தால் மட்டுமே, பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் சமயங்களில் சரிக்கட்ட முடியும். 

 

நடப்பு காலாண்டு (அக்டோபர்-டிசம்பர்) நுகர்வு மற்றும் விற்பனை அளவு, உள்நாட்டை பொறுத்தவரை மிகவும் கவனிக்கக்கூடிய காரணிகளாகும். 2019-20ம் நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாயை பெருக்க கூடிய காலண்டாகவும் இது பார்க்க முடிகிறது. இவற்றில் சரிவு ஏற்படும் நிலையில், அவை மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும், நாட்டின் நிதி பற்றாக்குறையிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

யெஸ் பேங்க் – மீண்டும் ஏற்றம் பெறுமா ?

யெஸ் பேங்க் – மீண்டும் ஏற்றம் பெறுமா ?

Yes Bank – Getting the Boom Again ?

தனியார் வங்கியான, ‘யெஸ் பேங்க்(YES Bank)’ – பிரமிப்பான வளர்ச்சி முதல் பிரச்சனை வரை என யெஸ் வங்கியின் குறுகிய கால வரலாற்றை நமது தளத்தில் ஏற்கனவே சொல்லியிருந்தோம். யெஸ் வங்கி, நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்.டி.எப்.சி. வங்கி(HDFC) போல வளர்ச்சியடையுமா என பல முதலீட்டாளர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அதன் வீழ்ச்சி பெரும்பாலும் வங்கி நிர்வாக சிக்கலில் தான் முடிந்தது.

அதன் நிறுவனர் திரு. ராணா கபூர் வங்கியை பற்றி கூறுகையில், ‘ இங்கே(Yes Bank) வைரங்கள் எப்போதும் உள்ளன. என்னுடைய ஒரு பங்கினை கூட நான் விற்க போவதில்லை ‘ என்று கூறியிருந்தார். ஆனால் தற்போதைய நிலைமை வேறு. தனது பங்குகளை விற்று விட்டார் ராணா கபூர். தான் அடமானம் வைத்த பங்குகளை, பரஸ்பர நிதி நிறுவனங்களும் விற்று விட்டன.

வங்கியை செயலாற்ற தேவையான முதலீட்டை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறது யெஸ் வங்கி. வேகமாக வளர்ந்து வரும் வங்கிகளில் யெஸ் வங்கி முன்னிலை வகிக்க, அதன் பங்கு விலை கடந்த ஒரு வருடத்தில் 80 சதவீத இழப்பை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2017ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ஒரு சதவீதத்திற்கும் கீழான வாராக்கடனை(Gross NPA) கொண்டிருந்த இந்த வங்கி, நடப்பு நிதியாண்டின் ஜூன் காலாண்டு முடிவில் மொத்த வாராக்கடன் அளவு 5 சதவீதத்தை தாண்டியுள்ளது. நிறுவனத்தின் லாப அளவிலும் கடந்த மூன்று வருடங்களில் 12 சதவீத இழப்பை கொண்டுள்ளது.

யெஸ் வங்கியின் பங்கு மலிவான விலையில் தற்போது கிடைக்கப்பெற்றாலும், நிதிச்சிக்கலில் இருந்து மீட்கப்பட்டு, மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பினால் மட்டுமே, அது மலிவான விலையில் முதலீடாக கருதப்படும். இருப்பினும், தற்போதைய நிலையில் சிறு முதலீட்டாளர்கள் இந்த பங்கினை வாங்கி குவித்து வருகின்றனர்.

வங்கியில் நிறுவனர்களின் பங்களிப்பு குறைவு, நிறுவனர்களின் பங்கு அடமானம்(Pledging), குறைவான வட்டி பாதுகாப்பு விகிதம்(Low ICR) மற்றும் வாராக்கடன் அளவு அதிகரித்து வருவது ஆகியவை யெஸ் வங்கியின் செயல்பாட்டை பாதித்துள்ளது. வங்கியின் கடன்-பங்கு விகிதம்(Debt to Equity) 12.50 ஆக உள்ளது. நிப்டி50(Nifty50) ல் இருக்கும் இந்த பங்கு, ஒரு ஸ்மால் கேப்(Small Cap) பங்குகளை போன்று தற்போது விலையில் காணப்படுகிறது.

சமீபத்தில் இந்த பங்கின் விலை குறைந்ததற்கு காரணமாக சொல்லப்படுவது, நிறுவனர்கள் தங்கள் பங்குகளை விற்றதால் எனவும், இடைப்பட்ட நாட்களில் சில ஏற்றத்தை பெற்றதற்கு, மிகப்பெரிய நிறுவனங்கள் இந்த வங்கியில் முதலீடு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட், யெஸ் வங்கியின் குறிப்பிட்ட பங்குகளை வாங்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், நிறுவனம் இந்த செய்தியை மறுத்துள்ளது.

எப்படி இருப்பினும் யெஸ் வங்கிக்கு தற்போதைய தேவை, கணிசமான முதலீடு மட்டுமே, ஊடக செய்திகள் அல்ல. முதலீடு இருக்கும் பட்சத்தில், இது தனது பழைய வளர்ச்சி பாதையை நோக்கி பயணம் செய்ய பல காலாண்டுகள் பிடிக்கலாம். சத்யம் நிறுவனம் மீட்டெடுக்கப்பட்டதை போல, யெஸ் வங்கி மீட்டெடுக்கப்படுமா மற்றும் முதலீட்டாளர்களுக்கு பயனை கொடுக்குமா என்பதனை பொறுத்திருந்து ஆராய்வோம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

அப்போ ‘பேர்ல் வைன்’, இப்போ ‘கோல்டு வைன்’ – அடுத்த சதுரங்க வேட்டை

அப்போ ‘பேர்ல் வைன்’, இப்போ ‘கோல்டு வைன்’ – அடுத்த சதுரங்க வேட்டை  

MLM Scam Alert – Goldvine World

திட்டம் இது தான் – நீங்கள் இந்த திட்டத்தில் 20 டாலர்கள் மட்டும் முதலீடு செய்தால் போதும். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 1440/- மட்டுமே முதலீடு செய்த மூன்று மாதங்களில் 23 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம். இதை விட பெரிய வாய்ப்பு, நீங்கள் மூன்று வருடங்களில் 37 கோடி ரூபாய் சம்பாதிக்கலாம். மேலும் 744 கோடி ரூபாய் வரை சம்பாதிப்பதற்கான வாய்ப்பும் கொடுக்கப்படுகின்றன. உங்களுடைய முதலீடு வெறும் 20 டாலர்கள்.

நீங்கள் எந்தவொரு பொருட்களையும் இங்கே விற்க தேவையில்லை. மற்றவர்களுக்கு நீங்கள் இந்த வாய்ப்பை (ஆள் சேர்ப்பது) அளித்தால் போதும். உங்களுக்கான வருவாய் எளிதாகி நீங்கள் விரைவில் கோடீஸ்வரராகலாம். என்ன ரெடியா ?

முன்னர் ‘பிட்காயின்(Bitcoin)’ என்று சொல்லப்படும் கிரிப்டோ நாணயத்தை அடிப்படையாக கொண்டு ‘பேர்ல் வைன் (Pearlvine)’ என்ற திட்டம் வந்தது. தற்போது இதனை போலவே, ‘கோல்டுவைன்(Goldvine)’ என்றொரு புதிய திட்டம் வந்துள்ளது. கோல்டுவைன் என்பது ஒரு நிறுவனம் அல்ல எனவும், அது ஒரு தானியங்கியாக செயல்படும் மென்பொருள் எனவும் குறிப்பிட்ட இணையதளம் சொல்கிறது. இந்த தானியங்கி மென்பொருளில் முதலீடு செய்யும் அனைவரும் கோல்டுவைனின் முதலாளிகள் எனவும் விவரிக்கிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கோல்டுவைன் மென்பொருள் மூலம் முதலீடு செய்யும் ஒருவருக்கு, ‘OneMato’ எனப்படும் டிவிடெண்ட் (ஈவுத்தொகை) யூனிட்கள் ஒதுக்கப்படும் எனவும், அந்த யூனிட்களை அவர் எப்போது வேண்டுமானாலும் விற்று விடலாம் எனவும் சொல்லப்படுகிறது. கோல்டுவைனில் ஒருவர் எந்தவொரு பொருட்களையும் விற்க தேவையில்லை என அத்திட்டத்தில் முதலீடு செய்துள்ளவர்கள் கூறுகின்றனர். முதலீடுகள் அனைத்தும் இணைய வழியே, அதற்கான ஆவணங்கள் மற்றும் கிளைகள் என்று எதுவுமில்லை.

‘பல்லேடியம்(Palladium)’ என்ற தரவரிசையில் 20 டாலர்களை மட்டும் முதலீடு செய்து, ‘கோல்டு’ என்று சொல்லப்படும் வரிசை மூலம் குறுகிய காலத்தில் 744 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என சொல்கின்றனர். இந்த திட்டத்தில் மற்றவர்களை அறிமுகப்படுத்தி, அவர்களையும் 20 டாலர்கள் முதலீட்டை மேற்கொள்ள செய்தால் போதும், வருவாய் ஈட்ட முடியும் என்கின்றனர். சொல்லப்பட்ட இணையதளத்தில் மேற்கோள் காட்டப்பட்ட நபர்களுக்கும், அவர்களின் புகைப்படங்களுக்கும்(Fake Team – Stealing People’s Identity) சம்மந்தமில்லை என்று மற்றொரு தளம் எச்சரிக்கிறது.

வருங்காலத்தில் மெய்நிகர் நாணயங்கள்(Cryptocurrency) உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என சொன்னாலும், நம் நாட்டில் தற்போதைய நிலையில் அது தடை செய்யப்பட்டதே. நிதி நிர்வாகத்தில் இருக்கும் ஒழுங்குமுறை ஆணையத்தால் இன்னும், மெய்நிகர் நாணயம் செயல்பாட்டை புரிந்து கொள்ள முடியாத நிலையில், இதனை சார்ந்த சதுரங்க வேட்டை தளங்கள் இந்தியாவில் வளம் வந்த வண்ணம் உள்ளன. எந்தவொரு தொழிலும் விற்பனையை சார்ந்தே உள்ளன. அப்படியென்றால் விற்பனைக்கு ஒரு பொருளோ அல்லது சேவையோ இருக்க வேண்டும். வெறும் ஆட்களை சேர்ப்பதை கொண்டு ஒரு தொழில் வளர்ச்சி பெற்று விடாது. மல்டி லெவல் மார்க்கெட்டிங்(MLM) என சொல்லிக்கொண்டு, நம்மை போன்ற வளரும் நாடுகளில் பல ஏமாற்று மோசடி திட்டங்கள் வந்தும், காணாமல் போய்விட்டன. அந்த திட்டத்தை செயல்படுத்தியவரும், முதலீடு செய்தவர்களின் பணத்தை சுருட்டி கொண்டு ஓடுவதும் சாதாரணமான விஷயமாகி மாறி விட்டது.

அரசு நிர்வகிக்கும் பங்குச்சந்தை, பொருட்சந்தை(Commodity Exchange) மற்றும் நாணய சந்தையை(Currency Exchange) பற்றி நம்மால் தெளிவாக புரிந்து கொள்ள முடியாத நிலையில், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டிருப்பதாக சொல்லப்படும் கோல்டுவைன் போன்ற செயல்முறையை நம்மால் எவ்வாறு புரிந்து கொள்ள முடியும். பணம் மட்டுமே ஒருவருக்கு தேவையெனினும் பணம் சார்ந்த பேராசை மட்டுமே இருப்பது ஆரோக்கியமானதல்ல.

அமெரிக்காவில் மேலே சொல்லப்பட்ட மூன்று சந்தைகளிலும் அவர்களது பங்கு மக்கள் தொகையில் 60 சதவீதத்திற்கும் மேல். அதுவே நம் நாட்டில் 10 சதவீதத்திற்கும் கீழாக உள்ளது. நிதி சார்ந்த திட்டத்திலும், அதனை சார்ந்த முதலீடுகளையும் நாம் சரியாக புரிந்து கொள்வதற்கான கால அவகாசம் தேவைப்படுகிறது. வங்கி, காப்பீடு, பரஸ்பர நிதிகள், நிதிச்சந்தைகள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் போன்றவற்றில் உள்ள நிறை குறைகளை நாம் புரிந்து கொள்வதே சற்று சிக்கலான விஷயமாக உள்ளன. அப்படியிருக்கும் போது, வெறும் ஆட்களை சேர்க்கும் திட்டமாக சொல்லப்படும் இது போன்ற விஷயங்களில் ஒருவர் கவனமாக இருப்பது அவசியம்.

மல்டி லெவல் மார்க்கெட்டிங் அல்லது நெட்ஒர்க் மார்க்கெட்டிங்(Network Marketing) துறைக்கு ஒவ்வொரு நாட்டிலும், வெவ்வேறான விதிமுறைகள் உள்ளன. இந்த துறை பொதுவாக பொருட்களை அல்லது சேவைகளை வாடிக்கையாளர்களிடம் நேரிடையாக விற்க முடிவெடுக்கிறது. இதற்கு தேவையான நபர்களை, விற்பனையாளராக தேர்ந்தெடுத்து நிறுவனத்தின் பொருட்களை விற்பனை செய்கிறது. இதன் மூலம் இடைத்தரகர்கள் இல்லாமல், ஒரு பொருள் அல்லது சேவையை வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகிறது.

ஆனால், பொருளோ அல்லது சேவையோ இல்லாமல் ஆட்களை சேர்ப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம், கோடீஸ்வரர் ஆகலாம் எனில், அது ஒரு மோசடியே. ஒருவரால் குறைந்த பணத்தில், எந்தவொரு தொழிலையும் மேற்கொள்ளாமல், விற்பனை வளர்ச்சி இல்லாமல் உடனடியாக பணம் சம்பாதிக்க முடியுமா ? அப்படி ஒரு திட்டம் உண்மையென்றால், ஏன் அம்பானியும், அதானியும் மாபெரும் கட்டிடங்களை எழுப்பி, வேலையாட்களை கொண்டு பேரம் பேசி தொழில் செய்ய வேண்டும்.  

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இன்னும் பி.ஏ.சி.எல்.(PACL) நிறுவன பிரச்சனை தீர்வு காணப்படவில்லை. இது போன்ற மோசடிகள் ஏராளம். சதுரங்க வேட்டை முதலாளிகளுக்கும், கோடீஸ்வரர்களுக்குமானதல்ல… அதன் இலக்கு குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசை கொண்டவர்களுக்கு !

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.15 சதவீதமாக குறைப்பு, வங்கிக்கடன் உண்மையில் குறையுமா ?

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.15 சதவீதமாக குறைப்பு, வங்கிக்கடன் உண்மையில் குறையுமா ?

Repo Rate cut to 5.15 Percent – RBI Policy – Does the bank cut the rates for its Customers ?

2019-20ம் நிதியாண்டின் மத்திய நிதிக்கொள்கை குழு(Monetary Policy Committee) சார்பிலான நான்காவது கூட்டம் நேற்று நிறைவுபெற்றது. மூன்று நாட்களாக நடந்த கூட்டத்தில், வங்கிகளின் ரெப்போ வட்டி விகிதத்தை 25 புள்ளிகள் வரை குறைக்க முடிவெடுக்கப்பட்டது. இதனையடுத்து 5.40 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம்(REPO Rate) நேற்று 5.15 சதவீதமாக சொல்லப்பட்டது.

மத்திய நிதிக்கொள்கை குழுவில் பங்கேற்ற ஆறு உறுப்பினர்களும் வட்டி விகித குறைப்புக்கு ஆதரித்து வாக்களித்தனர். நாட்டின் பணவீக்கம் மத்திய ரிசர்வ் வங்கியின் குறுகிய கால இலக்கான 4 சதவீதம் என்ற அளவிற்குள் உள்ளதால், பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் பொருட்டு வட்டி விகிதம் குறைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

ரெப்போ விகிதம் 5.15 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ(Reverse REPO) விகிதம் 4.90 சதவீதமாகவும் அறிவிக்கப்பட்டது. வங்கி வட்டி விகிதம்(Bank Rate) 5.40 சதவீதமாகவும், ரொக்க கையிருப்பு விகிதம் 4 சதவீதமாகவும் மற்றும் எஸ்.எல்.ஆர்.(SLR) விகிதம் 18.75 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது.

வங்கி கடன் மற்றும் வைப்புக்கான அடிப்படை விகிதம் 8.95 சதவீதத்திலிருந்து 9.40 சதவீதமாக சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு வருடத்திற்கு மேலான டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் 6.25 % – 7.00 % என்ற அளவில் உள்ளது. சேமிப்புக்கணக்குக்கான வட்டி 3.25 % – 3.50 % இருக்கிறது.

பாரத ரிசர்வ் வங்கியால்(RBI) முன்னர் சொல்லப்பட்ட 2019-20ம் நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாகும். ஆனால் தற்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான மதிப்பீட்டை 6.1 சதவீதமாக குறைத்துள்ளது. 2019-20ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5.3 சதவீதமாகவும், இரண்டாம் அரையாண்டில் இது 6.6 சதவீதத்திலிருந்து 7.2 சதவீதத்திற்குள் இருக்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

ரெப்போ வட்டி விகிதம் குறைந்திருப்பினும், இதனை வங்கிகள் முழுமையாக வாடிக்கையாளர்களுக்கு அளித்தால் மட்டுமே, அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு துணைபுரியும். நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி பெரிய வளர்ச்சியை பெறாவிட்டாலும், மூன்றாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அக்டோபர் – டிசம்பர் வரையிலான காலம் பண்டிகை காலம் என்பதால், நிறுவனத்தின் விற்பனை அதிகரிக்க கூடும். நிறுவனங்களுக்கான வருமான வரியும் குறைக்கப்பட்டுள்ளதால் அவற்றின் லாபம் மற்றும் தொழில் விரிவாக்கமும் நடைபெறும். தற்போது சொல்லப்பட்ட ரெப்போ வட்டி விகித குறைப்பு, வாடிக்கையாளர்களிடம் சரியாக செல்லும் போது நுகர்வு தன்மையும்(Consumption) அதிகரிக்கும். நிறுவனம் கடனுக்காக செலுத்தக்கூடிய வட்டி விகிதமும் குறையும் என்பது நாட்டின் வளர்ச்சிக்கு சாதகமானது.

டெக் மஹிந்திரா(Tech Mahindra) நிறுவன தலைவர் குர்னானி கூறும் போது, ‘ பல நாடுகளில் மிகக்குறைந்த வட்டி விகிதம் அல்லது வட்டியில்லா கடன் எனும் இலக்கை நோக்கி செல்லும் நிலையில், தற்போது சொல்லப்பட்ட ரெப்போ விகித குறைப்பு போதுமானதாக தெரியவில்லை ‘ என கூறியுள்ளார்.

கடந்த காலத்தில் பாரத ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்தாலும், வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகித பலனை அளிப்பதில்லை. சமீபத்தில் ரெப்போ விகித இணைப்பிலான வங்கி வட்டி(Repo Rate Linked Loans) விகிதத்தை அளிக்கும் படி, பாரத ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதனை அனைத்து வங்கிகளும் நடைமுறையில் கொண்டு வரும் பட்சத்தில், அது வாடிக்கையாளர்களின் நலனை பாதுகாக்கும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் – அக்டோபர் 2019

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் – அக்டோபர் 2019

Small Savings Scheme Interest rates for the Period – October to December 2019

அஞ்சலக மற்றும் வங்கிகளின் அக்டோபர் முதல் டிசம்பர் வரை காலத்திற்கான சிறு சேமிப்பு வட்டி விகிதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பில் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைந்திருப்பினும், குறைந்த பணவீக்கம் காணப்படும் நிலையில், பி.எப்.(Provident Fund) போன்ற சேமிப்புக்கு வட்டி விகிதம் நன்றாக உள்ளன.

கடந்த ஜூலை மாதம் முதல் செப்டம்பர் வரையிலான காலத்திற்கு சொல்லப்பட்ட வட்டி விகிதம் தான் தற்போதும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் அக்டோபர் – டிசம்பர் காலாண்டிற்கு மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இருப்பினும், தற்போதைய பொருளாதார மந்த நிலையில் இது ஒரு நல்ல வட்டி விகிதமே.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பொதுவாக வங்கிகளின் வட்டி விகிதம் குறையும் போது, கடன் பத்திரங்களின்(Bond Yield) வட்டி விகிதம் அதிகரிக்கும். இதே போல, வங்கிகளின் வட்டி விகிதம் அதிகமாகும் போது கடன் பத்திரங்களில் வட்டி விகிதம் குறைவாக இருக்கும். இப்போதைய சூழ்நிலையில், வங்கி வட்டி விகிதம் குறைவாக இருப்பதால், பரஸ்பர நிதி திட்டங்களின்(Mutual Funds – Debt Funds) மூலம் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். இதன் வாயிலாக பணவீக்கத்தை தாண்டிய வட்டி வருவாயை பெறலாம்.

வங்கிகள் வட்டி விகிதம் குறைந்து வந்தாலும், சிறு சேமிப்புக்கான வட்டி விகிதம் சற்று சாதகமாக உள்ளன. அஞ்சலக மற்றும் வங்கி சேமிப்பு 5 வருட டேர்ம் டெபாசிட் திட்டத்திற்கு 7.70 சதவீதமும், 5 வருட மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு 8.60 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.

Small Savings Interest rate October 2019

தேசிய சேமிப்பு பத்திரம்(National Savings Certificate) ஐந்து வருட கால அளவிற்கு 7.90 சதவீதம் என சொல்லப்பட்டுள்ளது. பி.பி.எப்.(PPF) என சொல்லப்படும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்திற்கு 7.90 சதவீத வட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு பி.எப். பிடித்தம் உள்ளது. இதனை போன்ற சேமிப்பு வாய்ப்பு இல்லாதவர்கள், பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.

பி.பி.எப்.(Public Provident Fund) திட்டத்தில் முதலீடு செய்யும் போது, வருமான வரி சட்டம் 80சி பிரிவின் கீழ் வருமான வரி சலுகையும் உண்டு. அதே போல், இதன் மூலம் கிடைக்கக்கூடிய வட்டி வருவாய் மற்றும் முதிர்வு தொகைக்கும் வரி இல்லை என்பது சாதகமான விஷயம். 

செல்வமகள் சேமிப்பு(Sukanya Samriddhi) திட்டத்தில் 8.40 சதவீதமும், கிசான் விகாஸ் பத்திரத்திற்கு 7.60 சதவீத வட்டியும் கூறப்பட்டுள்ளது. குறுகிய காலத்திற்கு தேவையான ஒரு வருட டெபாசிட் செய்யும் பட்சத்தில், அதற்கான வட்டி விகிதம் 6.90 சதவீதமாகும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

செப்டம்பர் மாதத்திலும் வெளியேறிய அந்நிய முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கிய உள்ளூர் முதலீட்டாளர்கள்

செப்டம்பர் மாதத்திலும் வெளியேறிய அந்நிய முதலீட்டாளர்கள், பங்குகளை வாங்கிய உள்ளூர் முதலீட்டாளர்கள்

FII / DII Trading Activity – September 2019

கடந்த செப்டம்பர் மாதத்தின் இரண்டு வர்த்தக நாட்களில் இந்திய பங்குச்சந்தை பெரிய ஏற்றத்தை கண்டிருந்தது. நிதி அமைச்சரின் நிறுவனங்களுக்கான வரிச்சலுகை அறிவிப்பை அடுத்து, சந்தை ஏற்றம் பெற்றது நினைவிருக்கலாம். இருப்பினும், பொருளாதாரம் சார்ந்த காரணிகள் இன்னும் வளர்ச்சி பாதைக்கு திரும்பாததால் அந்நிய முதலீட்டாளர்களின் பங்களிப்பு குறைவாகவே காணப்படுகிறது.

செப்டம்பர் மாதத்தில் அந்நிய முதலீட்டாளர்கள் ரூ. 1.03 லட்சம் கோடிக்கு பங்குகளை வாங்கியும், ரூ. 1.10 லட்சம் கோடி மதிப்பிற்கு பங்குகளை விற்றும் உள்ளனர். அவர்களது நிகர விற்பனை கடந்த மாதத்தின் முடிவில் 6,624 கோடி ரூபாயாக இருந்துள்ளது.

அதே வேளையில், உள்ளூர் முதலீட்டாளர்கள் ரூ. 84,873 கோடி மதிப்பில் பங்குகளை வாங்கியும், 72,382 கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்றும் உள்ளனர். எனவே உள்ளூர் முதலீட்டாளர்களின் நிகர கொள்முதல் 12,490 கோடி ரூபாயாக இருந்தது. உள்ளூர் முதலீட்டாளர்கள் கடந்த 5 மாதங்களாக பங்குகளை வாங்கி குவித்துள்ளனர்.

சொல்லப்பட்ட மாதத்தில் 19 நாட்கள் வர்த்தகம் நடைபெற்றது. இவற்றில் அந்நிய முதலீட்டாளர்கள் 14 நாட்கள் பங்குகளை விற்றுள்ளனர். அதே சமயம் உள்ளூர் முதலீட்டாளர்கள் 17 நாட்கள் பங்குகளை வாங்கியுள்ளது கவனிக்கத்தக்கது.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தையில் நடப்பாண்டு மே மாதம் முதல் பங்குகளை விற்று வருகின்றனர். இந்திய சந்தையில் நடுத்தர மற்றும் சிறு நிறுவனங்களின் பங்குகள் விலை பெருவாரியான வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அதே நேரத்தில் லார்ஜ் கேப்(Large Cap) என சொல்லப்படும் பெரு நிறுவன பங்குகளின் விலை அதிக மதிப்பில் காணப்படுகின்றன.

உலகளவில் காணப்படும் பொருளாதார மந்த நிலை தீர்வு பெறாமல் உள்ளது. இரு நாடுகளிடையேயான வர்த்தக போர், கச்சா எண்ணெய் நாடுகளில் காணப்படும் எல்லை பதற்றம், உள்நாட்டில் நிலவும் பொருளாதார வளர்ச்சி குறைவு ஆகியவை சந்தைக்கு பாதகமாக உள்ளன.

வரவிருக்கும் நாட்களில் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள், பணவீக்கம், மொத்த உள்நாட்டு உற்பத்தி குறியீடு(GDP) மற்றும் வங்கி வட்டி விகிதம் போன்றவை சந்தையை நகர்த்தும். 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த பங்குதாரர் – ஆண்டு பொதுக்கூட்டம்

ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த பங்குதாரர் – ஆண்டு பொதுக்கூட்டம்

Shareholder of Reliance Group Companies warned the Promoter – Annual General Meeting

ரிலையன்ஸ் குழும நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் நேற்று (30-09-2019) மும்பையில் நடைபெற்றது. திரு. அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் குழுமத்தில் ரிலையன்ஸ் கேப்பிடல், ரிலையன்ஸ் நிப்பான் லைப், ரிலையன்ஸ் பவர், இன்ப்ரா(Reliance Infra) மற்றும் ரிலையன்ஸ் நேவல்(Reliance Naval & Engg) ஆகிய நிறுவனங்கள் உள்ளடங்கியுள்ளன.

அனில் அம்பானியின் குழும நிறுவனங்கள் அனைத்தும் கடன் சிக்கலில் உள்ளன. ஏறக்குறைய அனைத்து நிறுவனங்களும் நஷ்டத்தில் இயங்கி வருவதால், அதன் சந்தை மதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் பெருவாரியான பணத்தை இழந்துள்ளனர்.

ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்திற்கு கடனாக ரூ. 46,160 கோடியும், ரிலையன்ஸ் பவர்(Reliance Power) ரூ. 30,450 கோடி, ரிலையன்ஸ் இன்ப்ரா ரூ. 17,770 கோடி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் ரூ. 47,600 கோடி கடனாகவும் கொண்டுள்ளது. ரிலையன்ஸ் நேவல் மற்றும் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கும் ரூ. 10,905 கோடி கடனாக உள்ளது. பெரும்பாலான நிறுவனங்களில் நிறுவனர்களின் பங்கு அடமானத்தில்(Pledging) உள்ளது கவனிக்கத்தக்கது.

நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அனில் அம்பானி பேசுகையில், நிறுவனத்தின் கடன்களை குறைத்து வருவதாகவும், அடுத்த 18 மாதங்களில் மேலும் சில கடன்களை அடைப்பதற்கான தீர்வுகளை கண்டுள்ளதாகவும் கூறினார். ஏற்கனவே ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் திவால் நிலைக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், தற்போது ரிலையன்ஸ் நேவல் நிறுவனமும் பெரும் நிதிச்சிக்கலில் உள்ளது.

ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டு வரும் கடன் சேவை, வரும் டிசம்பர் மாதம் முதல் இந்த சேவையை நிறுத்த உள்ளதாகவும் அனில் அம்பானி கூறியுள்ளார். ஆண்டு பொதுக்கூட்டத்தில் நிறுவனத்தின்(Reliance ADAG) மீது பல குறைகள் எழுப்பப்பட்டன. பிரச்சனைகளும், அதற்கான தீர்வுகளும் பரிசீலிக்கப்படுவதாக நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த சமயத்தில், கூட்டத்தில் இருந்த பங்குதாரர் ஒருவர், சொல்லப்பட்ட பிரச்சனைகள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் தீர்க்கப்படவில்லை எனில், நிறுவனத்தின் மீது வழக்கு தொடர போவதாக எச்சரித்தார். அந்த பங்குதாரர் ரிலையன்ஸ் குழும நிறுவனத்தில் இதுவரை 3 கோடி ரூபாய் முதலீடு செய்ததாகவும், தற்போதைய நிலையில் தான் 90 சதவீத முதலீட்டை இழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

சொல்லப்பட்ட இழப்பிற்கு நிறுவனமே பொறுப்பாகும் எனவும், நிறுவனத்தில் முதலீடு செய்த பல முதலீட்டாளர்களுக்கு பண இழப்பு ஏற்பட்டதற்கு நிறுவனத்தின் நிர்வாக திறமையின்மை தான் காரணம் எனவும் கூறினார். இதுவரை கம்பெனி சட்டம் 2013ன் கீழ் பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் மீது பங்குதாரர்கள் சார்பில் முதல் வகுப்பு வழக்கு பதிவு செய்யப்படவில்லை. அவ்வாறு சொல்லப்பட்ட பங்குதாரர் வழக்கை பதிவு செய்யும்பட்சத்தில், நம் நாட்டில் இதுவே முதன்முறையாக இருக்கும்.

ரிலையன்ஸ் இன்ப்ரா நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஒரு வருடத்தில் 380 ரூபாய் என்ற விலையிலிருந்து 28 ரூபாய்க்கு சரிந்துள்ளது. இதே போல ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் பங்கு விலை 32 ரூபாயிலிருந்து 2 ரூபாய்க்கும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் பங்கு விலை 18 ரூபாயிலிருந்து 65 பைசாவிற்கும் வந்துள்ளது. ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுவனத்தின் பங்கு ஒரு வருடத்திற்கு முன்பு 300 ரூபாய் என்ற விலையில் வர்த்தகமாகி கொண்டிருந்த நிலையில், தற்போது இந்த பங்கின் விலை 24 ரூபாயாக உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பான் – ஆதார் எண் இணைப்பிற்கான காலக்கெடு நீட்டிப்பு – டிசம்பர் 31, 2019

பான் – ஆதார் எண் இணைப்பிற்கான காலக்கெடு நீட்டிப்பு – டிசம்பர் 31, 2019

PAN – Aadhaar Linking extended to 31, December, 2019

பான் – ஆதார் எண் இணைப்பிற்கான காலக்கெடு நாளையுடன் (30-09-2019) முடிவடையும் நிலையில், தற்போது அதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பிற்கான கடைசி தேதியாக 2019ம் ஆண்டின் டிசம்பர் 31ம் தேதியாக சொல்லப்பட்டுள்ளது.

கடந்த பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரி தாக்கல் செய்பவர்கள் பான்(PAN) எண் இல்லையென்றாலும், ஆதார் எண்ணை கொண்டு வரி தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. வருமான வரி தாக்கல் செயல்முறையில் பான் எண்ணுக்கு மாற்றாக ஆதார்(Aadhaar) எண் சொல்லப்பட்டிருந்தது.

இருப்பினும், பான் மற்றும் ஆதார் எண்ணை இணைப்பதில் எந்த மாற்றமும் சொல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அதன் காலக்கெடுவில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியம்(Central Board of Direct Taxes) சார்பில் ஏழாவது முறையாக பான்-ஆதார் எண் காலக்கெடு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தனி நபர் வருமான வரி தாக்கல் செய்பவர்கள், தாக்கல் செய்த பின் மின்னணு சரிபார்ப்பு(E-verify Return) செய்தால் மட்டுமே, அது முழுமையான வரி தாக்கல் செய்ததாக கருதப்படும். தற்போதைய நிலையில் மின்னணு சரிபார்ப்பு எளிமையாக்கப்பட்டுள்ளது.

தணிக்கைக்கு(Audited) உட்பட்ட வருவாய்க்கு, வருமான வரி தாக்கல் செய்ய உள்ளவர்களின் காலக்கெடுவும் செப்டம்பர் 30ம் தேதியிலிருந்து, அடுத்த மாதம் அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஆண்டு வருமானம் ரூ. 2.50 லட்சத்தை தாண்டும் பட்சத்தில், வரிப்பிடித்தம் இல்லையெனினும், வருமான வரி தாக்கல் செய்வது அவசியம்.

நடப்பு 2019-20ம் நிதியாண்டின் வருமானத்தை வரி தாக்கல் செய்யும் போது, ரூ. 5 லட்சம் வரையிலான வருவாய்க்கு வரி தள்ளுபடி உண்டு(Only Tax Rebate). அதே வேளையில் வரி தாக்கல் செய்தால் மட்டுமே, வரி தள்ளுபடி என்பதை மறக்க வேண்டாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

தனியார் வங்கிகளில் பணப்புழக்க நெருக்கடி இல்லை – நிதி அமைச்சர்

தனியார் வங்கிகளில் பணப்புழக்க நெருக்கடி இல்லை – நிதி அமைச்சர் 

No Liquidity Crisis in Private Banks – FM Nirmala Sitharaman

நேற்று (26-09-2019) நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தனியார் வங்கிகளுடான சந்திப்பில் கலந்துரையாடினார். தனியார் வங்கிகள் போக வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள்(NBFC) மற்றும் வீட்டு வசதி நிதி நிறுவனங்களும் கலந்து கொண்டன. 

 

இந்த சந்திப்பு முடிவுக்கு பின் பேசிய நிதி அமைச்சர், தனியார் வங்கிகளில் பணப்புழக்க நெருக்கடி இல்லை எனவும், வரும் பண்டிகை காலங்களில் வங்கிகளின் கடன் வழங்கும் தன்மை அதிகரித்து நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஊக்குவிக்கப்படும் எனவும் கூறினார்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தனியார் வங்கிகளை சந்தித்த பின் சந்தையில் வாங்கும் தன்மை(Demand) இருப்பதை தாம் அறிவதாகவும், சமீபத்திய நிறுவனங்களுக்கான வரி குறைப்பு நடவடிக்கை(Corporate Tax) சந்தையில் அடுத்த சில காலாண்டுகளில் வளர்ச்சியை கொடுக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.

 

வரக்கூடிய பண்டிகை காலங்களில் வீட்டு வசதி நிறுவனங்கள், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் நுண் நிதி நிறுவனங்கள்(Micro Finance) சார்பில் 400 மாவட்டங்களில் கடன் வழங்குதலை மேம்படுத்தும் நோக்கில் திட்டங்கள் போடப்பட்டுள்ளதாக கூறினார். இத்திட்டத்தில் அனைத்து வங்கிகளும் சேர முடிவு செய்துள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

 

கடந்த காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி(GDP) 5 சதவீதம் என்ற குறைந்த அளவை எட்டியிருப்பினும், அடுத்த இரண்டு காலாண்டுகளில் வளர்ச்சியை பெறும் என நம்பிக்கையை அளித்தார். 

 

நுண் நிதி நிறுவனங்களின் சேவை சுமூகமாக இருப்பதாகவும், சேவைத்துறைக்கான கடன் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வழிவகை செய்யப்படும் எனவும், வாகனத்துறையில் காணப்படும் விற்பனை சரிவு ஒரு சுழற்சி முறை சரிவு(Cycle) எனவும் கூறினார். இந்த சுழற்சியானது அடுத்த இரு காலாண்டுகளில் சரிசெய்யப்பட வாய்ப்பிருக்கிறது என கூறியுள்ளார்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com