Tag Archives: repo rate

மீண்டுமொருமுறை வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – பாரத ரிசர்வ் வங்கி

மீண்டுமொருமுறை வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – பாரத ரிசர்வ் வங்கி 

No change in Repo Rate for the Eleventh Time – RBI Monetary Policy 

நடப்பு நிதியாண்டின் முதல் கூட்டமாக நடைபெற்ற மத்திய நிதி கொள்கை குழு கூட்டத்தில் வங்கி ரெப்போ வட்டி விகிதம் மற்றும் நாட்டின் பொருளாதாரம் சார்ந்த அறிக்கை இன்று பாரத ரிசர்வ் வங்கியால்(RBI) வெளியிடப்பட்டது. 

ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என மீண்டும் இம்முறை ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம்(REPO Rate) என்பது மத்திய ரிசர்வ் வங்கி, நாட்டில் உள்ள வங்கிகளுக்கு கடன் அளிக்கும் போது வசூலிக்கப்படும் வட்டி விகிதமாகும். இதுவே வங்கிகளிடம் இருந்து மத்திய ரிசர்வ் வங்கி கடன் பெற்றால், அதற்கான வட்டி விகிதம் தான் ரிவர்ஸ் ரெப்போ விகிதம்(Reverse Repo Rate).

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதத்தில் தொடரும் எனவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம், எந்த மாற்றமுமின்றி 3.35 சதவீதத்தில் இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையை கருத்தில் கொண்டு கடந்த 2020ம்  ஆண்டு முதல் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில் பெரியளவில் மாற்றமில்லை.

தற்போது சொல்லப்பட்ட அறிவிப்புடன் சேர்த்து, பதினொன்றாவது முறையாக வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், வரக்கூடிய மாதங்களில் பணவீக்க விகிதத்தை கருத்தில் கொண்டு வங்கி வட்டி விகிதங்கள் உயர்த்தப்படலாம். 

நடப்பு 2022-23ம் நிதியாண்டில் நாட்டின் பணவீக்கம் 5.7 சதவீதமாக இருக்கும் எனவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி(GDP) 7.2 சதவீதமாக இருக்கும் எனவும் பாரத ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. இதுவே கடந்த முறை, பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதமாகவும், பணவீக்கம் 5.3 சதவீதமாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது கவனிக்கப்பட வேண்டியவை.

பணவீக்க மதிப்பீட்டில் அதிகபட்சமாக 2022-23ம் நிதியாண்டின் முதல் காலாண்டில்(April – June 2022) 6.3 சதவீதமாக பணவீக்கம் இருக்கலாம் என ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை காட்டிலும் விலைவாசி உயர்வை(Inflation) கட்டுப்படுத்துவதே தற்போதைய நோக்கம் என பாரத ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.  

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Advertisement

நடப்பாண்டில் உயர்ந்து வரும் நுகர்வோர் விலை பணவீக்கம் – 2022

நடப்பாண்டில் உயர்ந்து வரும் நுகர்வோர் விலை பணவீக்கம் – 2022

India’s rising Retail inflation – Consumer Price Index 2022

கொரோனா பெருந்தொற்றின் ஊரடங்கு காரணமாக கடந்த 2020ம் ஆண்டு முதல் உலகளவில் பொருட்கள் மற்றும் சேவை விநியோக சங்கிலியில்(Supply Chain Disruption) இடையூறு ஏற்பட்டிருந்தது. வளர்ந்த மற்றும் வேகமாக வளரும் நாடுகளின் பொருளாதாரம் ஓரளவு மீட்கப்பட்டிருந்தாலும், சரக்கு போக்குவரத்து சேவையில் இன்றளவும் சுணக்கம் காணப்பட்டு வருகிறது. 

கடந்த இரண்டு வருடங்களாக அரசின் பொருளாதார ஊக்குவிப்பு இருந்திருந்தாலும், தேவை மற்றும் உற்பத்தியில் அதிகமாக இடைவெளி ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பணவீக்க விகிதத்திலும் மாற்றம் நிகழந்து வருவது கவனிக்கத்தக்கது.

நடப்பாண்டின் பிப்ரவரி மாதத்தில் நாட்டின் சில்லரை விலை என்ற நுகர்வோர் விலை(Consumer Price Index) பணவீக்கம் 6.07 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. இது கடந்த எட்டு மாதங்களில் காணப்பட்ட அதிகபட்ச அளவாகும். இதற்கு முன்பு 2021ம் வருடத்தின் மே மாதத்தில் 6.30 சதவீதமாக இருந்த பணவீக்க விகிதம் அன்றைய ஆண்டின் அதிகபட்ச அளவாக சொல்லப்பட்டிருந்தது. 

கடந்த ஐந்து வருட காலத்தில் சில்லறை விலை பணவீக்க விகிதம் குறைந்தபட்ச அளவாக 2019ம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் 1.97 சதவீதமாகவும், அதிகபட்ச அளவாக 2020ம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் 7.61 சதவீதமாகவும் இருந்துள்ளது. 

நடப்பு பிப்ரவரி மாத பணவீக்கம் அதிகரித்ததற்கான காரணமாக காய்கறி, உணவுப்பொருட்கள் மற்றும் எண்ணெய் வகைகளின் விலை இருந்துள்ளது. எண்ணெய் மற்றும் கொழுப்பு வகைகள் 16.5 சதவீதமும், இறைச்சி மற்றும் மீன் வகைகள் 7.5 சதவீதமும், காய்கறிகள் 6 சதவீதமும் சொல்லப்பட்ட மாதத்தில் அதிகரித்துள்ளது. 

இது போல ஒளி மற்றும் எரிபொருட்களின்(Light & Fuel) விலை 8 சதவீதமும், துணிமணிகள் மற்றும் காலணிகள் 8.86 சதவீதமும், வீட்டுமனை 4 சதவீதமாகவும் அதிகரித்து காணப்பட்டுள்ளது. இந்நிலையில் பாரத ரிசர்வ் வங்கியின் சில்லறை விலை பணவீக்கத்திற்கான குறுகிய கால இலக்கு 2 சதவீதம் முதல் ஆறு சதவீதம் வரை உள்ளது குறிப்பிடத்தக்கது.

2022ம் ஆண்டின் பிப்ரவரி மாதத்திற்கான மொத்த விலை பணவீக்கம்(WPI) 13.11 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக எரிபொருட்களின் விலை உயர்த்தப்படாமல் இருப்பதும், 2020ம் ஆண்டின் மே மாதம் முதல் வங்கியின் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படாமல் இருப்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

வரக்கூடிய வாரங்களில் உயர்ந்து வரும் பணவீக்க விகிதத்தை கட்டுப்படுத்த வட்டி விகிதங்கள் அதிகரிக்க கூடும். நடப்பு போர் பதற்ற சூழ்நிலையும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவையின் விலையை பெருமளவில் மாற்றக்கூடும். 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – பாரத ரிசர்வ் வங்கி

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – பாரத ரிசர்வ் வங்கி 

REPO rate unchanged – RBI – Monetary Policy Committee(MPC)

பாரத ரிசர்வ் வங்கி சார்பாக மத்திய நிதி கொள்கை குழு கூட்டம் கடந்த டிசம்பர் 6 முதல் 8ம் தேதி வரை நடைபெற்றது. ஆண்டுக்கு ஆறு முறை நடக்கும் இக்கூட்டத்தில் நாட்டின் வட்டி விகித மாற்றம் சார்ந்த அறிக்கைகள் வெளியிடப்படும். கூட்டத்தில் ரிசர்வ் வங்கி சார்பாக மூன்று அதிகாரிகளும், அரசு சார்பில் மூன்று உறுப்பினர்களும் கலந்து கொள்வர்.

வங்கிகளுக்கான வட்டி விகிதம், பணவீக்க நிலவரம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நிதி சந்தை மற்றும் பொது நிதி போன்றவற்றை ஆலோசித்து பின்பு வாக்களிக்கும் முறையில் முடிவுகள் அறிவிக்கப்படும். இம்முறை கூட்டத்தில் எடுக்க முடிவின் படி, வங்கிகளுக்கான ரெப்போ வட்டி(REPO) விகிதத்தில் மாற்றமில்லை எனவும், இதற்கு முன்னர் இருந்த நிலையே தொடரும் எனவும் ரிசர்வ் வங்கி சார்பில் சொல்லப்பட்டுள்ளது.

ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ(Reverse REPO) வட்டி விகிதம் 3.35 சதவீதம் என்ற அளவிலும் இருக்கும் என இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ரெப்போ வட்டி விகிதம்(Repo Rate) என்பது மத்திய ரிசர்வ் வங்கி, நாட்டில் உள்ள வங்கிகளுக்கு கடன் அளிக்கும் போது வசூலிக்கப்படும் வட்டி விகிதமாகும். இதுவே வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி கடன் பெற்றால், அதற்கான வட்டி விகிதம் தான் ரிவர்ஸ் ரெப்போ விகிதம்.

நடப்பு நிதியாண்டில் நாட்டின் பணவீக்க விகிதம் 5.3 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆண்டு முழுவதுமான மதிப்பீட்டில் 9.5 சதவீதமாக இருக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது. அதாவது அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாம் காலாண்டில் 6.6 சதவீதமும், ஜனவரி – மார்ச் நான்காம் காலாண்டில் 6 சதவீதமுமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

நாட்டின் வட்டி விகிதம் கடந்த இரண்டு வருடங்களாக 6 சதவீதத்திற்கும் கீழ் இருந்து வருகிறது. இது பாரத ரிசர்வ் வங்கியின் பணவீக்க இலக்குகளை சார்ந்து இருப்பது கவனிக்கத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

மீண்டும் குறைக்கப்பட்ட வங்கி வட்டி விகிதங்கள் – பாரத ரிசர்வ் வங்கி

மீண்டும் குறைக்கப்பட்ட வங்கி வட்டி விகிதங்கள் – பாரத ரிசர்வ் வங்கி 

Repo rate cut 40 basis points to 4 Percent – RBI

கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற மத்திய நிதி கொள்கை குழு கூட்டம் இன்றுடன் முடிவடைந்தது. கடைசி நாளான இன்று பாரத ரிசர்வ் வங்கி கவர்னர் கூறிய அறிவிப்பில், வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம்(Repo Rate) 40 புள்ளிகள் குறைக்கப்படுவதாக சொல்லப்பட்டது. முன்னர் 4.40 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் இப்போது 4 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது.

இது போல ரிவர்ஸ் ரெப்போ விகிதமும்(Reverse Repo) 3.75 சதவீதத்திலிருந்து 3.35 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. வங்கி வட்டி விகிதமும்(Bank Rate) 4.65 சதவீதத்திலிருந்து 4.25 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. வட்டி விகிதத்தை குறைப்பது சம்மந்தமாக இம்முறை நிதி கொள்கை குழுவில் உள்ள ஆறு உறுப்பினர்களும் குறைக்க வேண்டுமென தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

மார்ச் 2020 முதல் நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவால் பெரும்பாலான தொழில்கள்  சுணக்கம் அடைந்துள்ளதாகவும் பாரத ரிசர்வ் வங்கி சார்பில் கூறப்பட்டுள்ளது. பணவீக்க விகிதத்தை அறிய முறையான தகவல்களை தற்போது சேகரிக்க முடியவில்லை எனவும், வரும் மாதங்களில் பணவீக்க விகிதங்களில் எதிர்பாராத மாற்றங்கள் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், மத்திய வங்கியின் இலக்கான 4 சதவீத பணவீக்கம் என்ற அளவை ஒட்டி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 4 சதவீதத்திலிருந்து 2 சதவீதம் கூடுதலாக அல்லது குறைவாக இருக்கக்கூடும். ஜனவரி – மார்ச் காலாண்டில் வளர்ந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாக சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வேகமாக வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் சீனாவின் வளர்ச்சி பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் உலக முதலீட்டாளர்கள் பாதுகாப்பான மற்றும் தங்கம் போன்ற முதலீடுகளில் தங்கள் முதலீட்டை பரவலாக்கி உள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

வீழ்ச்சியடைந்த பங்குச்சந்தைகள் ஓரளவு ஏற்றம் பெற்றிருந்தாலும், நடப்பாண்டில் முதல் இரு காலாண்டுகளில் வளர்ச்சி எதுவும் பெரும்பாலும் இருக்காது என சொல்லப்பட்டுள்ளது. 2020-21ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாக(Negative GDP) இருக்கும் என பாரத ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ஆனால், எந்த மதிப்பை கொண்டிருக்கும் என சொல்லப்படவில்லை.

வங்கிகளில் கடன் பெறுபவர்களை ஊக்குவிக்கவும், நிதி சந்தைகளை வலுப்படுத்தவும் வங்கி வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. வட்டி செலுத்தும் தொழில் நிறுவனங்களுக்கு இது சாதகமாக இருக்கும். அதே வேளையில், இது வங்கிகளின் வருவாய்க்கு நன்மையாக அமையாது. கடனுக்கான மாத தவணையை செலுத்துவதில் மீண்டும் மூன்று மாத கால அவகாசம்(Moratorium) வழங்கப்பட்டுள்ளது.

இது அடுத்த மாதம் ஜூன் முதல் ஆகஸ்ட் 2020 வரையிலான காலத்திற்கு பொருந்தும். இருப்பினும், இது வட்டிக்கு வட்டி என்ற விகிதத்தின் அடிப்படையிலும், மூன்று மாதங்களுக்கான தவணையை அதிக தொகையுடன் செலுத்த வேண்டிய நிலையும் ஏற்படும். வங்கி வட்டி தள்ளுபடி அல்லது கடன்களை மறுசீராய்வு செய்வதால் மட்டுமே அது வங்கிகளுக்கும், அதன் வாடிக்கையாளர்களுக்கும் பலன் அளிக்கும்.

இன்று வங்கி துறையில் உள்ள பங்குகள் அதிக சரிவையும், நிப்டி வங்கி குறியீடு 2.57 சதவீதம் என்ற அளவிலும் வீழ்ச்சி கண்டது. நடப்பில் வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் கடன் மற்றும் பணப்புழக்கம் சார்ந்த நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன.

வங்கிகளின் வட்டி விகிதம் குறையும் சூழ்நிலையில், முதலீட்டாளர்களின் பார்வையில் கடன் பத்திரங்கள்(Bonds) மீதான ஆர்வம் ஏற்படும். வட்டி விகிதம் குறையும் போது, கடன் பண்டுகளின் வருவாய் அதிகரிக்கும். எனவே இது போன்ற நிலையில், முதலீடு செய்வோர் சற்று ரிஸ்க் குறைந்த கடன் பத்திர பரஸ்பர நிதிகளில்(Debt Mutual Funds) முதலீடு செய்யலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – பாரத ரிசர்வ் வங்கி

வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – பாரத ரிசர்வ் வங்கி 

RBI keeps REPO Rate Unchanged – Monetary Policy Committee(MPC)

பாரத ரிசர்வ் வங்கியின் சார்பில் நடப்பு நிதியாண்டின் ஆறாவது நிதிக்கொள்கை குழு கூட்டம் நடைபெற்றது. நேற்று(06-02-2020) வெளியிடப்பட்ட இந்த கூட்டத்தின் முடிவில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதுமில்லை என கூறப்பட்டுள்ளது. இதனால் கடந்த முறை இருந்த 5.15 சதவீதமே இம்முறையும் தொடரும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ரிவர்ஸ் ரெப்போ விகிதம்(Reverse Repo) 4.90 சதவீதமாகவும், வங்கி விகிதம் 5.40 சதவீதமாகவும் உள்ளது. இந்த முடிவு குறுகிய கால பணவீக்க இலக்கை சார்ந்து தான் நிர்ணயிக்கப்பட்டதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. குறுகிய கால சில்லரை பணவீக்க அடிப்படை இலக்கு 4 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. இந்த அடிப்படை இலக்கிலிருந்து 2 சதவீதம் கூடுதலாகவோ அல்லது 2 % குறைவாகவோ இருக்கலாம்.

சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதம் 3.25 % – 3.50 % என்ற அளவில் உள்ளது. ஒரு வருடத்திற்கான வங்கி டெபாசிட் வட்டி விகிதம் 6.10 % – 6.40 % என சொல்லப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் பணவீக்க விகிதத்தை கட்டுப்படுத்த மற்றும் வளர்ச்சியை ஆதரிப்பதற்காக இடவசதி நிலைப்பாட்டை பாரத ரிசர்வ் வங்கி கையாண்டு வருகிறது. இதன் காரணமாகவே தற்போதைய ரெப்போ விகிதத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

நடப்பு நிதியாண்டின் நான்காம் காலாண்டில் பணவீக்க விகிதம்(CPI Inflation) 6.5 சதவீதமாக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 5.1 – 4.7சதவீதமாக இருக்கலாம் என சொல்லப்பட்டிருந்தது. 2020-21ம் நிதியாண்டுக்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி(GDP Growth) 6 சதவீதமாக இருக்கலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாத சில்லரை விலை பணவீக்கம் 7.35 சதவீதமாக இருந்தது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியும் கடந்த செப்டம்பர் 2019 காலாண்டில் 4.5 சதவீதமாக இருந்தது. இது போன்ற சூழ்நிலையில், ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தினால் அது பொருளாதார மந்தநிலையை மேலும் அதிகப்படுத்தும்.

ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டிருந்தால், அது வங்கி வட்டி விகிதத்தில் எதிர்மறையான நிலையை கொண்டிருக்கலாம். இருப்பினும், வருங்காலத்தில் வங்கி ரெப்போ விகிதத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளதாக பாரத ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தற்போதைய வங்கி வட்டி விகித நிலை கடன் பெறும் நிறுவனங்களுக்கும், தனிநபர்களுக்கும் பயன்பட கூடும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthamadurai.com

வங்கி வட்டி விகிதம் – கடந்த ஒரு வருட பார்வை 2019

வங்கி வட்டி விகிதம் – கடந்த ஒரு வருட பார்வை 2019

India Interest Rate – REPO Rate – A look at the past one year 

நாட்டின் பொருளாதாரம் கடந்த ஒன்றரை வருடங்களாக மந்தநிலையில் உள்ளது. 2018ம் ஆண்டு ஜூலை காலாண்டில் 8 சதவீதமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம்(GDP Growth), அக்டோபர் 2019 முடிவில் 4.5 சதவீதம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பணவீக்கம் குறைந்திருந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது.

2018ம் ஆண்டு ஜூலை காலத்தில் 4.17 சதவீதமாக இருந்த சில்லரை விலை பணவீக்கம்(Inflation), பின்னர் நடப்பு 2019ம் ஆண்டின் ஜனவரி காலத்தில் 1.97 சதவீதம் என்ற நிலையிலிருந்து, தற்போது 4.62 சதவீதம் என்ற விகிதத்தில் உள்ளது. இது வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கலாம் என சொல்லப்படுகிறது.

நாட்டின் வங்கி வட்டி விகிதத்தை (ரெப்போ) பொறுத்தவரை, கடந்த ஒரு வருட காலமாக குறைந்த வண்ணம் உள்ளது. இது கடன் பெறுபவர்களுக்கு சாதகமாகவும், அதே வேளையில் வங்கியில் டெபாசிட் செய்பவர்களுக்கு பாதகமாகவும் அமைந்துள்ளது.

கடந்த வருடத்தின் இரண்டாம் அரையாண்டில் 6.5 சதவீதமாக இருந்த வங்கி ரெப்போ வட்டி விகிதம்(REPO Rate), தற்போது 5.15 சதவீதமாக உள்ளது. ஆக, ஒரு வருட காலத்தில் மத்திய ரிசர்வ் வங்கியால் குறைக்கப்பட்ட ரெப்போ விகிதம் 135 புள்ளிகளாகும்.

2019ம் ஆண்டின் பிப்ரவரி காலத்தில் 6.5 சதவீதமாக இருந்த ரெப்போ விகிதம் 6.25 சதவீதமாக குறைக்கப்பட்டிருந்தது. பின்னர் ஏப்ரல் மாதத்தில் 6.25 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக சொல்லப்பட்டது. நடப்பு ஜூன் காலத்தில் மேலும் 25 புள்ளிகள் குறைக்கப்பட்டு, 5.75 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 2019 காலாண்டில் வங்கி ரெப்போ விகிதம் அதிகபட்சமாக 35 புள்ளிகள் குறைக்கப்பட்டு, 5.75 சதவீதத்திலிருந்து 5.40 சதவீதமாக அறிவிக்கப்பட்டது. அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற மத்திய நிதி கொள்கை குழு கூட்டத்தில்(Monetary Policy Committe), வங்கிக்கான வட்டி விகிதத்தை 5.15 சதவீதமாக குறைத்தது.

நடப்பு டிசம்பர் காலத்திற்கான மத்திய நிதி கொள்கை குழு கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என பாரத ரிசர்வ் வங்கி தெரிவித்தது. இந்த ஆண்டில் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாதது, இதுவே முதன்முறை.

2019-20ம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டில் காய்கறிகள், பால் பொருட்கள், பருப்பு வகைகள் மற்றும் சர்க்கரை ஆகியவற்றின் விலை அதிகரிக்க கூடும் எனவும், இதன் காரணமாக பணவீக்கம் 4.7 – 5.1 சதவீதம் என்ற அளவில் இருக்கலாம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 20 வருடங்களில் நாட்டின் வங்கி வட்டி விகிதம் சராசரியாக 6.65 சதவீதத்தில் உள்ளது. அதிகபட்சமாக கடந்த 2000ம் வருடத்தின் ஆகஸ்ட் காலத்தில் இது 14.50 சதவீதமாக இருந்துள்ளது கவனிக்கத்தக்கது. குறைந்தபட்சமாக 2009ம் வருடத்தின் ஏப்ரல் மாதத்தில் 4.25 சதவீதமாக வங்கி ரெப்போ விகிதம் இருந்துள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.15 சதவீதமாக குறைப்பு, வங்கிக்கடன் உண்மையில் குறையுமா ?

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.15 சதவீதமாக குறைப்பு, வங்கிக்கடன் உண்மையில் குறையுமா ?

Repo Rate cut to 5.15 Percent – RBI Policy – Does the bank cut the rates for its Customers ?

2019-20ம் நிதியாண்டின் மத்திய நிதிக்கொள்கை குழு(Monetary Policy Committee) சார்பிலான நான்காவது கூட்டம் நேற்று நிறைவுபெற்றது. மூன்று நாட்களாக நடந்த கூட்டத்தில், வங்கிகளின் ரெப்போ வட்டி விகிதத்தை 25 புள்ளிகள் வரை குறைக்க முடிவெடுக்கப்பட்டது. இதனையடுத்து 5.40 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம்(REPO Rate) நேற்று 5.15 சதவீதமாக சொல்லப்பட்டது.

மத்திய நிதிக்கொள்கை குழுவில் பங்கேற்ற ஆறு உறுப்பினர்களும் வட்டி விகித குறைப்புக்கு ஆதரித்து வாக்களித்தனர். நாட்டின் பணவீக்கம் மத்திய ரிசர்வ் வங்கியின் குறுகிய கால இலக்கான 4 சதவீதம் என்ற அளவிற்குள் உள்ளதால், பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் பொருட்டு வட்டி விகிதம் குறைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

ரெப்போ விகிதம் 5.15 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ(Reverse REPO) விகிதம் 4.90 சதவீதமாகவும் அறிவிக்கப்பட்டது. வங்கி வட்டி விகிதம்(Bank Rate) 5.40 சதவீதமாகவும், ரொக்க கையிருப்பு விகிதம் 4 சதவீதமாகவும் மற்றும் எஸ்.எல்.ஆர்.(SLR) விகிதம் 18.75 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது.

வங்கி கடன் மற்றும் வைப்புக்கான அடிப்படை விகிதம் 8.95 சதவீதத்திலிருந்து 9.40 சதவீதமாக சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு வருடத்திற்கு மேலான டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் 6.25 % – 7.00 % என்ற அளவில் உள்ளது. சேமிப்புக்கணக்குக்கான வட்டி 3.25 % – 3.50 % இருக்கிறது.

பாரத ரிசர்வ் வங்கியால்(RBI) முன்னர் சொல்லப்பட்ட 2019-20ம் நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாகும். ஆனால் தற்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான மதிப்பீட்டை 6.1 சதவீதமாக குறைத்துள்ளது. 2019-20ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 5.3 சதவீதமாகவும், இரண்டாம் அரையாண்டில் இது 6.6 சதவீதத்திலிருந்து 7.2 சதவீதத்திற்குள் இருக்கலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

ரெப்போ வட்டி விகிதம் குறைந்திருப்பினும், இதனை வங்கிகள் முழுமையாக வாடிக்கையாளர்களுக்கு அளித்தால் மட்டுமே, அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு துணைபுரியும். நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி பெரிய வளர்ச்சியை பெறாவிட்டாலும், மூன்றாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அக்டோபர் – டிசம்பர் வரையிலான காலம் பண்டிகை காலம் என்பதால், நிறுவனத்தின் விற்பனை அதிகரிக்க கூடும். நிறுவனங்களுக்கான வருமான வரியும் குறைக்கப்பட்டுள்ளதால் அவற்றின் லாபம் மற்றும் தொழில் விரிவாக்கமும் நடைபெறும். தற்போது சொல்லப்பட்ட ரெப்போ வட்டி விகித குறைப்பு, வாடிக்கையாளர்களிடம் சரியாக செல்லும் போது நுகர்வு தன்மையும்(Consumption) அதிகரிக்கும். நிறுவனம் கடனுக்காக செலுத்தக்கூடிய வட்டி விகிதமும் குறையும் என்பது நாட்டின் வளர்ச்சிக்கு சாதகமானது.

டெக் மஹிந்திரா(Tech Mahindra) நிறுவன தலைவர் குர்னானி கூறும் போது, ‘ பல நாடுகளில் மிகக்குறைந்த வட்டி விகிதம் அல்லது வட்டியில்லா கடன் எனும் இலக்கை நோக்கி செல்லும் நிலையில், தற்போது சொல்லப்பட்ட ரெப்போ விகித குறைப்பு போதுமானதாக தெரியவில்லை ‘ என கூறியுள்ளார்.

கடந்த காலத்தில் பாரத ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்தாலும், வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகித பலனை அளிப்பதில்லை. சமீபத்தில் ரெப்போ விகித இணைப்பிலான வங்கி வட்டி(Repo Rate Linked Loans) விகிதத்தை அளிக்கும் படி, பாரத ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதனை அனைத்து வங்கிகளும் நடைமுறையில் கொண்டு வரும் பட்சத்தில், அது வாடிக்கையாளர்களின் நலனை பாதுகாக்கும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.40 சதவீதமாக குறைப்பு

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.40 சதவீதமாக குறைப்பு 

REPO rate cut to 5.40 Percent – RBI

 

நேற்று (07-08-2019) நடைபெற்ற மத்திய நிதி கொள்கை குழு கூட்டத்தின்(Monetary Policy Committee) முடிவில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 35 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய ரெப்போ வட்டி விகிதம் 5.75 சதவீதத்திலிருந்து 5.40 சதவீதமாக குறைந்துள்ளது.

 

ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 5.15 சதவீதமாகவும், வங்கி விகிதம் மற்றும் விளிம்பு நிலை(MCLR) விகிதம் 5.65 சதவீதமாகவும் மாற்றப்பட்டுள்ளது. ரொக்க கையிருப்பு 4 சதவீதம் என்ற நிலையிலும், எஸ்.எல்.ஆர்.(SLR) விகிதம் 18.75 சதவீதமாகவும் உள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பொருளாதார மந்த நிலை காரணமாகவும், அதே சூழ்நிலையில் பணவீக்க விகிதத்தை கவனத்தில் கொண்டும், இந்த வட்டி விகித குறைப்பு அறிவிக்கப்பட்டதாக பாரத ரிசர்வ் வங்கி(Reserve Bank of India) சார்பில் கூறப்பட்டுள்ளது. இரு நாடுகளிடையே ஏற்பட்டுள்ள வர்த்தக போர், அமெரிக்காவில் தொழில் முதலீடு பலவீனமாக இருப்பது, பிரிட்டனின் பிரெக்ஸிட்(Brexit) நிகழ்வால் உற்பத்தி துறைக்கு சாதகம் இல்லாமை போன்றவை உலகளாவிய பாதிக்கும் காரணிகளாக சொல்லப்பட்டுள்ளன.

 

ஜப்பானின் தொழில்துறை புள்ளி விவரங்கள், வரும் இரண்டாம் காலாண்டிலும் பொருளாதாரம் மந்தமடைய கூடும் என்ற செய்தியை தெரிவிக்கிறது. வேகமாக வளரும் நாடுகளில் பொருளாதார புள்ளி விவரங்கள் சாதகமாக இல்லை என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

 

சீனா, ரஷ்யா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் உற்பத்தி துறை மற்றும் விற்பனை வளர்ச்சி வெகுவாக குறைந்துள்ளது. இந்த நிலை அடுத்த காலாண்டிலும் நீடிக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது. வாகன துறையில்(Automotive Sector) ஏற்பட்டுள்ள சுணக்கம் சரி செய்யப்பட்டால் தான் அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்குவிக்கும்.

 

பணப்புழக்கத்துக்கான உபரி தொகை(Liquidity Surplus) போதுமான அளவு இருப்பதாக மத்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ஜூன் மாத முடிவில் இது 51,710 கோடி ரூபாயாகவும், ஜூலையில் ரூ. 1,30,931 கோடியாகவும் இருந்துள்ளது. நடப்பு ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி வரை உள்ள உபரி தொகை, ரூ. 2,04,921 கோடி.

 

உள்நாட்டில் மழைப்பொழிவு, உற்பத்தி துறை மற்றும் வீட்டு மனை துறை தொய்வு நிலையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தனியார் முதலீடும் தேவையான அளவு வரவில்லை.  நடப்பு நிதி வருடத்தில் நாட்டின் பணவீக்க விகிதம்(Inflation) 4 சதவீதத்திற்குள் இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இது போல நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்திற்கு கீழ் இருக்கும் எனவும், தற்போது குறைக்கப்பட்ட வட்டி விகிதம் கடந்த ஒன்பது வருடங்களில் இல்லாத அளவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

ரெப்போ வட்டி விகிதம் 6 சதவீதமாக குறைப்பு – பாரத ரிசர்வ் வங்கி

ரெப்போ வட்டி விகிதம் 6 சதவீதமாக குறைப்பு – பாரத ரிசர்வ் வங்கி

REPO Rate reduced to 6 percent by 0.25 bps cut – RBI

 

மத்திய நிதி கொள்கை குழு கூட்டம் மூன்று நாட்களாக நடந்திருந்த நிலையில் நேற்றுடன் முடிவடைந்தது. கடைசி நாளான நேற்று(04-04-2019) நிதி கொள்கை குழு சார்பில் அறிவிக்கப்பட்ட வட்டி விகித மாற்றத்தில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி(Repo Rate) விகிதம் 0.25 புள்ளிகள் குறைக்கப்பட்டு 6 சதவீதமானது. நடப்பு 2019ம் வருடத்தில் இரண்டாவது முறையாக பாரத ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ஆறு நபர்கள் கொண்ட நிதி கொள்கை குழுவில்(Monetary Policy Committee) நான்கு பேர் மட்டுமே வட்டி விகித குறைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது. தற்போதைய ரெப்போ வட்டி விகித குறைப்பு, வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் வட்டி விகிதத்திலும் குறைக்கப்பட வேண்டும்.

 

ரிவெர்ஸ் ரெப்போ(Reverse Repo) விகிதம் 5.75 சதவீதமாகவும், வங்கி விகிதம்(Bank Rate) 6.25 சதவீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சி.ஆர்.ஆர்.(CRR) விகிதம் 4 சதவீதத்திலும், எஸ்.எல்.ஆர்.(SLR) விகிதம் 19.25 சதவீதத்தில் இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. கடந்த ஐந்து வருட காலத்தில் வங்கிகளின் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் பத்து சதவீதத்திலிருந்து 8.7 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் வங்கி வைப்பு நிதிக்கான(Fixed Deposit) வட்டி விகிதம் 9 சதவீதத்திலிருந்து 6.7 சதவீதம் வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

What is Bank Repo Rate ?

 

நடப்பு நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் எனவும், இது முதல் அரையாண்டில் 6.8 – 7.1 சதவீதம் என்ற அளவிலும், இரண்டாம் அரையாண்டில் 7.3 – 7.4 என்ற சதவீதத்திற்குள் இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. 2019-20ம் நிதி வருடத்தின் முதல் அரையாண்டில் நாட்டின் பணவீக்கம்(Inflation Rate) 3 சதவீதத்திற்குள் இருக்கும் எனவும், இரண்டாம் அரையாண்டில் 3.5 சதவீதத்திலிருந்து 3.8 சதவீதம் வரை இருக்கலாம் என பாரத ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

 

சொல்லப்பட்ட பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்க மதிப்பீடு, முன்னர் சொல்லியிருந்த மதிப்பீட்டை விட குறைவாகும். நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் முதலீட்டு நடவடிக்கைகளில் மந்த நிலை காணப்படுவதால் கடந்த 2018-19ம் நிதியாண்டில் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறைவாக இருந்திருக்கும் என பாரத ரிசர்வ் வங்கி(Reserve Bank of India) தெரிவித்துள்ளது.

 

பொதுவாக வங்கிகளின் வட்டி விகிதம் குறையும் போது, 10 வருட கால அரசு  பத்திரங்களின்(Bond yield) வட்டி அதிகரிக்கும். அதே போல வங்கிகளில் வட்டி விகிதம்(Interest Rate) அதிகரிக்கப்படும் நிலையில், பத்திரங்களின் வட்டி விகிதம்  குறைவாகவே காணப்படும். இதனை சார்ந்து முதலீட்டாளர்களின் முதலீட்டு சாதனமும் மாறுபடும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

வட்டி விகித குறைப்பு, மழுங்கும் வங்கி முதலீடுகள் – இனி எங்கு முதலீடு செய்ய போகிறீர்கள் ?

வட்டி விகித குறைப்பு, மழுங்கும் வங்கி முதலீடுகள் – இனி எங்கு முதலீடு செய்ய போகிறீர்கள் ?

Interest rate falling and Diminishing Bank Deposits – Where are you going to invest ?

 

இன்று (07-02-2019) நடைபெற்ற மத்திய நிதி கொள்கை குழு கூட்டத்தில்(Monetary Policy Committee -MPC) வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 6.50 சதவீதத்திலிருந்து 6.25 சதவீதமாக குறைத்து பாரத ரிசர்வ் வங்கி(RBI). ரெப்போ விகிதம்(REPO Rate) என்பது நாட்டில் உள்ள வங்கிகளுக்கு பாரத ரிசர்வ் வங்கி அளிக்கும் வட்டி விகிதமாகும். பொதுவாக ரெப்போ விகிதம் குறையும் போது, வங்கியில் வாடிக்கையாளர்கள் வாங்கும் கடனுக்கும் வட்டி விகிதம் குறைக்கப்படும்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

அறிவிக்கப்பட்டுள்ள வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் இனி 6.25 சதவீதத்தில் இருக்கும். இதனால் ரிவெர்ஸ் ரெப்போ விகிதம்(Reverse REPO) 6 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது. வங்கிகளின் வட்டி விகிதம் 6.75 சதவீதத்திலிருந்து 6.50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ரொக்க இருப்பு விகிதத்தில்(CRR) மாற்றமில்லாமல் அதே 4 சதவீதத்தில் தொடரும் என கூறப்பட்டுள்ளது. நடப்பு காலாண்டில் பணவீக்கம்(Inflation) 2.8 சதவீதமாக இருக்கும் எனவும், 2019-20ம் நிதியாண்டில் முதல் பாதியில் இது 3.4 சதவீதமாகவும், அடுத்த வருடத்தின் மூன்றாம் காலாண்டில் 3.9 சதவீதமாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 

அடுத்த நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி(GDP) 7.4 சதவீதத்தில் இருக்கும் என பாரத ரிசர்வ் வங்கி(Reserve Bank of India) கணித்துள்ளது. சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த வரம்பற்ற விவசாய கடன் தொகையை ரூ. 1 லட்சத்திலிருந்து 1.6 லட்ச ரூபாயாக உயர்த்தியுள்ளது. அடுத்த நிதி கொள்கை குழு கூட்டம் வரும் ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் நடைபெறும்.

 

ரெப்போ வட்டி விகிதம் குறையும் போது, வங்கி வாடிக்கையாளர்களும் தங்கள் கடனுக்கான வட்டி விகிதத்தில்(Interest rate) சலுகை பெறுவர். அப்படியிருக்கும் போது, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வட்டி விகித குறைப்பு வீட்டுக்கடன் பெறுவோருக்கும், தொழிலுக்கான கடன் பெறும் வாடிக்கையாளருக்கும் நலன் பயக்கும். அதே வேளையில், கடந்த சில வருடங்களாக வங்கி வட்டி விகிதங்கள் குறைந்து வருவது, வங்கியில் சேமிக்கும் மற்றும் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு போதுமான வட்டி வருமானத்தை தருவதில்லை.

 

பொதுவாக வங்கி வட்டி விகிதங்கள் குறையும் போது, அது கடன் சந்தைக்கு(Debt Market) சாதகமாக அமையும். வங்கிகளில் வட்டி குறையும் காலத்தில், கடன் சந்தையில் வட்டி விகிதம் அதிகமாக காணப்படும். இதன் காரணமாக முதலீட்டாளர்கள் கடன் சந்தையை நோக்கி செல்வதுண்டு. அதே நேரத்தில், வங்கி வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கும் காலத்தில், கடன் சந்தையில் மதிப்பு குறைவாக அமையும். அப்போது முதலீட்டாளர்கள் வங்கிகளுக்கோ அல்லது வேறு ஏதேனும் முதலீட்டு சாதனத்தையோ தேடுவதுண்டு.

 

தற்போது குறைக்கப்பட்ட வங்கிகளின் வட்டி விகிதம் கடன் பெறுவோருக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாகவும், தொடர் வைப்பு(Recurring) மற்றும் வைப்பு நிதிகளில்(Fixed Deposits) முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு குறைவான வட்டி வருமானமும் கிடைக்க கூடியதாக இருக்கும். இது போன்ற காலங்களில் கடன் சந்தையில் முதலீடு செய்வதும், கடன் சந்தை சார்ந்த பரஸ்பர நிதித்திட்டங்களிலும்(Debt Mutual Funds) முதலீடு செய்வதே சிறந்ததாக இருக்கும். இன்று பரஸ்பர நிதிகள் வங்கிகளை காட்டிலும் நல்ல வட்டி வருமானத்தையே கொடுத்து வருகிறது. நடப்பு காலத்தில் அரசாங்கத்தின் பத்து வருட பத்திர வருவாய்(10 Year Bond Yield) 7.3 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இதுவே பரஸ்பர நிதித்திட்டங்களில் பத்திர வருவாயாக ஆண்டுக்கு 8.5 % லிருந்து 10 சதவீதம் வரை கிடைக்க பெறுகிறது. கடன் சார்ந்த மற்ற பரஸ்பர நிதி திட்டங்களிலும் சராசரி வருமானமாக 9 சதவீதம் வரை உள்ளது.

Best Ultra Short Duration Funds

 

வங்கி வைப்பு நிதி வட்டி விகிதங்கள் குறைவாக இருக்கும் இக்காலத்தில் பரஸ்பர நிதி திட்டங்களில் ஒருவர் முதலீடு செய்து நல்ல வருமானத்தை எதிர்பார்க்கலாம். குறுகிய கால திட்டங்களில்(Ultra Short Duration Funds) பிராங்க்ளின் பண்டு(Franklin India) ஒரு வருட காலத்தில் 9 சதவீதமும், 2 வருட காலத்தில் 8.5 சதவீதமும், 5 வருட காலத்தில் 9.3 சதவீத வருமானத்தை தந்துள்ளது. இதே போன்று ரிலையன்ஸ் அல்ட்ரா ஷார்ட் கால பண்டு(Reliance Ultra Short Duration) 7.5 சதவீதத்திலிருந்து 8.5 சதவீதம் வரை வருமானத்தை தந்து கொண்டிருக்கிறது. ஆதித்யா பிர்லா(ABSL), ஐ.சி.ஐ.சி.ஐ.(ICICI) மற்றும் எஸ்.பி.ஐ. பண்டுகளும்(SBI Mutual Funds) வங்கிகளை காட்டிலும் நல்ல வட்டி வருமானத்தை கொடுத்துள்ளது.

 

மிகவும் குறுகிய கால பண்டுகளான லிக்விட் பண்டுகளும்(Liquid Funds) 7 சதவீதத்திலிருந்து 8 சதவீதம் வரை வருமானத்தை தருகிறது. லிக்விட் பண்டுகள் பொதுவாக கருவூல மசோதா மற்றும் அரசாங்க பத்திரங்களில் முதலீடு செய்யும். இதன் முதிர்வடையும் காலம் 91 நாட்கள். தற்போதைய காலத்தில் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வது எளிமையாக்கப்பட்டுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com