சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் – அக்டோபர் 2019
Small Savings Scheme Interest rates for the Period – October to December 2019
அஞ்சலக மற்றும் வங்கிகளின் அக்டோபர் முதல் டிசம்பர் வரை காலத்திற்கான சிறு சேமிப்பு வட்டி விகிதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பில் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைந்திருப்பினும், குறைந்த பணவீக்கம் காணப்படும் நிலையில், பி.எப்.(Provident Fund) போன்ற சேமிப்புக்கு வட்டி விகிதம் நன்றாக உள்ளன.
கடந்த ஜூலை மாதம் முதல் செப்டம்பர் வரையிலான காலத்திற்கு சொல்லப்பட்ட வட்டி விகிதம் தான் தற்போதும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் அக்டோபர் – டிசம்பர் காலாண்டிற்கு மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இருப்பினும், தற்போதைய பொருளாதார மந்த நிலையில் இது ஒரு நல்ல வட்டி விகிதமே.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பொதுவாக வங்கிகளின் வட்டி விகிதம் குறையும் போது, கடன் பத்திரங்களின்(Bond Yield) வட்டி விகிதம் அதிகரிக்கும். இதே போல, வங்கிகளின் வட்டி விகிதம் அதிகமாகும் போது கடன் பத்திரங்களில் வட்டி விகிதம் குறைவாக இருக்கும். இப்போதைய சூழ்நிலையில், வங்கி வட்டி விகிதம் குறைவாக இருப்பதால், பரஸ்பர நிதி திட்டங்களின்(Mutual Funds – Debt Funds) மூலம் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யலாம். இதன் வாயிலாக பணவீக்கத்தை தாண்டிய வட்டி வருவாயை பெறலாம்.
வங்கிகள் வட்டி விகிதம் குறைந்து வந்தாலும், சிறு சேமிப்புக்கான வட்டி விகிதம் சற்று சாதகமாக உள்ளன. அஞ்சலக மற்றும் வங்கி சேமிப்பு 5 வருட டேர்ம் டெபாசிட் திட்டத்திற்கு 7.70 சதவீதமும், 5 வருட மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு 8.60 சதவீதமும் வட்டி வழங்கப்படுகிறது.
தேசிய சேமிப்பு பத்திரம்(National Savings Certificate) ஐந்து வருட கால அளவிற்கு 7.90 சதவீதம் என சொல்லப்பட்டுள்ளது. பி.பி.எப்.(PPF) என சொல்லப்படும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்திற்கு 7.90 சதவீத வட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு பி.எப். பிடித்தம் உள்ளது. இதனை போன்ற சேமிப்பு வாய்ப்பு இல்லாதவர்கள், பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.
பி.பி.எப்.(Public Provident Fund) திட்டத்தில் முதலீடு செய்யும் போது, வருமான வரி சட்டம் 80சி பிரிவின் கீழ் வருமான வரி சலுகையும் உண்டு. அதே போல், இதன் மூலம் கிடைக்கக்கூடிய வட்டி வருவாய் மற்றும் முதிர்வு தொகைக்கும் வரி இல்லை என்பது சாதகமான விஷயம்.
செல்வமகள் சேமிப்பு(Sukanya Samriddhi) திட்டத்தில் 8.40 சதவீதமும், கிசான் விகாஸ் பத்திரத்திற்கு 7.60 சதவீத வட்டியும் கூறப்பட்டுள்ளது. குறுகிய காலத்திற்கு தேவையான ஒரு வருட டெபாசிட் செய்யும் பட்சத்தில், அதற்கான வட்டி விகிதம் 6.90 சதவீதமாகும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை