தனியார் வங்கிகளில் பணப்புழக்க நெருக்கடி இல்லை – நிதி அமைச்சர்
No Liquidity Crisis in Private Banks – FM Nirmala Sitharaman
நேற்று (26-09-2019) நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தனியார் வங்கிகளுடான சந்திப்பில் கலந்துரையாடினார். தனியார் வங்கிகள் போக வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள்(NBFC) மற்றும் வீட்டு வசதி நிதி நிறுவனங்களும் கலந்து கொண்டன.
இந்த சந்திப்பு முடிவுக்கு பின் பேசிய நிதி அமைச்சர், தனியார் வங்கிகளில் பணப்புழக்க நெருக்கடி இல்லை எனவும், வரும் பண்டிகை காலங்களில் வங்கிகளின் கடன் வழங்கும் தன்மை அதிகரித்து நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஊக்குவிக்கப்படும் எனவும் கூறினார்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தனியார் வங்கிகளை சந்தித்த பின் சந்தையில் வாங்கும் தன்மை(Demand) இருப்பதை தாம் அறிவதாகவும், சமீபத்திய நிறுவனங்களுக்கான வரி குறைப்பு நடவடிக்கை(Corporate Tax) சந்தையில் அடுத்த சில காலாண்டுகளில் வளர்ச்சியை கொடுக்கும் எனவும் தெரிவித்திருந்தார்.
வரக்கூடிய பண்டிகை காலங்களில் வீட்டு வசதி நிறுவனங்கள், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் நுண் நிதி நிறுவனங்கள்(Micro Finance) சார்பில் 400 மாவட்டங்களில் கடன் வழங்குதலை மேம்படுத்தும் நோக்கில் திட்டங்கள் போடப்பட்டுள்ளதாக கூறினார். இத்திட்டத்தில் அனைத்து வங்கிகளும் சேர முடிவு செய்துள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
கடந்த காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி(GDP) 5 சதவீதம் என்ற குறைந்த அளவை எட்டியிருப்பினும், அடுத்த இரண்டு காலாண்டுகளில் வளர்ச்சியை பெறும் என நம்பிக்கையை அளித்தார்.
நுண் நிதி நிறுவனங்களின் சேவை சுமூகமாக இருப்பதாகவும், சேவைத்துறைக்கான கடன் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வழிவகை செய்யப்படும் எனவும், வாகனத்துறையில் காணப்படும் விற்பனை சரிவு ஒரு சுழற்சி முறை சரிவு(Cycle) எனவும் கூறினார். இந்த சுழற்சியானது அடுத்த இரு காலாண்டுகளில் சரிசெய்யப்பட வாய்ப்பிருக்கிறது என கூறியுள்ளார்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை