Category Archives: Investopedia

தேவைகளும், விருப்பங்களும் – Need vs Want Behaviour

தேவைகளும், விருப்பங்களும்…

Need vs Want Behaviour

 

உங்களது லட்சியங்கள் (அ) விருப்பங்கள்(Desire / Want) என்ன ?

 

  • பிடித்த படிப்பு / துறையில் பணிபுரிவது (அ) தொழில் முனைவது
  • அழகான வீடு
  • நான்கு சக்கர வாகனம் (Car)
  • வெளிநாட்டு சுற்றுலா
  • ஆடம்பர திருமணம்
  • நண்பர்களுக்கு விருந்து வைப்பது (Treat)
  • கை நிறைய சம்பாதிப்பது
  • அப்படி ஒன்றுமில்லைங்க  🙂

 

உங்களது தேவைகள்(Need ) என்ன ?

 

  • சத்தான உணவு, தட்பவெப்ப நிலைக்கேற்ற உடை, பாதுகாப்பு மற்றும் குறைந்தபட்ச இருப்பிடம்
  • மருத்துவம் மற்றும் சுகாதாரம்
  • சுவாசிக்க சுத்தமான காற்று
  • அறிவு மேம்பட தேவைப்படும் கல்வி
  • எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நிதி / வருமானம் (குழந்தை பராமரிப்பு, கல்வி, திருமணம், ஓய்வு காலம் )

 

நீங்கள் எப்படி முடிவு செய்கிறீர்கள்(How you decide) ?

 

  • ஆரோக்கியமான உணவு / அழகு மெருகூட்டப்பட்ட துரித உணவு  ?
  • மனதுக்கு பிடித்தவாறு துணைவருடன் வாழ்வது / ஆடம்பர திருமணம் செய்வது  ?
  • உங்கள் குழந்தைகளுடன் விளையாடி நேரத்தை செலவழிப்பது / அவர்கள் விரும்பும் பொருட்களை வாங்கி கொடுத்து விட்டு, உங்களுக்கு நேரமில்லாமல் போல் இருப்பது  ?
  • உங்கள் அறிவு மேம்பட, வாழ்வில் முன்னேற கல்வி / மற்றவர்களுக்காக விளம்பர நோக்கில் கல்வி பயில்வது ?
  • ஓய்வு காலத்திற்கான சேமிப்பு / ஓய்வு காலத்தில் வேலை பார்த்து கொள்ளலாம், அப்போது பார்க்கலாம் என்பது  ?
  • பொது போக்குவரத்து சேவை மற்றும் இரு சக்கர வாகனத்தை பயன்படுத்துதல் / மற்றவர்களின் பார்வைக்காக நான்கு (Car) சக்கர வாகனம் வாங்கி, பயணம் செய்வது ?
  • திட்டமிட்ட சுற்றுலா பயணம் / அவசியமில்லாமல், நினைத்த மாத்திரத்தில் கடன் வாங்கியாவது சுற்றுலா செல்வது  ?

தேவைகளும், விருப்பங்களும் (Need vs Want) :

 

மூச்சுக்காற்றை (Breathing) அப்புறம் வாங்கி கொள்கிறேன், நான் இப்போது சினிமா பார்க்க(See Movie) போகிறேன் என்றால்…. ! ! !

 

தேவையான மூச்சுக்காற்றை வாங்கினால் (சுவாசித்தல்) தானே உங்களுக்கு விருப்பமான சினிமா பார்க்க முடியும். ஆகையால் தேவைக்கு எப்போதும் முன்னுரிமை (Priority) கொடுங்கள். அது உங்களுக்கு தேவையான மற்றும் அவசியமான விருப்பங்களை நிறைவேற்றும்.

 

தேவைகளிடம் விட்டு விடுங்கள் 🙂

 

விருப்பங்களும் விலையேற்றத்துக்கு காரணம்:

(Rising Price due to Wants)

 

ஊரின் ஒரு பகுதியில் தினசரி சராசரியாக தேவைப்படும் 100 கிலோ வெங்காயம், திடீரென்று 10,000 கிலோ என  அதிகரித்தாலும், உற்பத்திக்கும் தேவைக்கும் இடையே வெங்காயத்தின் விலையும்  அதிகரிக்கலாம்;  இது வெங்காயத்துக்கு மட்டுமல்ல…

 

வாகன விற்பனைக்கு, எரிபொருளுக்கு, கல்வி கட்டணங்களுக்கும் தான் 🙂

 

அதனால் நமக்கு அவசியமான, தேவையான விருப்பங்களை தேர்ந்தெடுத்து பூர்த்தி செய்தால் நம்மை சுற்றியுள்ளவர்களும் பயன்பெறுவார்கள்; பொருளாதாரமும் நிலை பெறும்.

 

இன்று நமது தெருவிலே பல வாகனங்கள் இடமில்லாமல் நிற்கின்றன; எந்த தேவையும் இல்லாமல் வாங்கப்பட்டன – நமது அவசியமற்ற விருப்பங்களால்  !

 

அதற்கு, நாம் ஒரு பார்க்கிங் (Car Parking Station) தொழிலை ஆரம்பித்து இருந்தால் கூட, காசு நிறைய பார்த்து இருக்கலாம் போல 🙂  

 

Impulsive Buying:

 

எந்த தேவையும் இல்லாமல், திட்டமிடப்படாத முடிவால் ஒரு பொருளை (அ) சேவையை விலை கொடுத்து வாங்குவது, ‘Impulsive Buying’ or ‘Impulsive Purchase’.

 

நாம் ஒரு ஷாப்பிங் மால்(Shopping Mall) செல்கிறோம்; ஷாப்பிங் செல்லும் முன், நமது இலக்கு ஒரு குறிப்பிட்ட பொருளை வாங்குவதோ (அ) பொழுதுபோக்கிற்கோ இருக்கலாம்; ஆனால் திரும்பி வரும் போது, நமக்கு தேவையில்லாத பொருளும், சேவையும் நமது பையிலே(Bag) இருக்கும்; நமது பர்ஸும்(Cash), கார்டும்(Debit /Credit Card) பதம் பார்க்கப்படும் 🙂 இது தான் Impulsive Purchase ன் ஆயுதம் !

 

எப்படி Impulsive Purchase ஐ தடுப்பது (How to Avoid Impulsive Buying) ?

 

  • நீங்கள் கடையில் ஒரு பொருளை, சேவையை வாங்க செல்லும் முன்னர் அந்த பொருள் (அ) சேவை நமக்கு அத்தியாவசியமானதா, இன்றே அது நமக்கு தேவைப்படுகிறதா என அறிந்து முடிவு செய்யுங்கள்.
  • வாங்கக்கூடிய  பொருள் (அ) சேவையை எழுதுங்கள், பட்டியலிடுங்கள் – அதற்கு தேவையான பணத்தை மட்டுமே வைத்திருந்து உங்கள் கொள்முதலை(Purchase) தொடங்குங்கள்.
  • பொழுதுபோக்கிற்காக, விலை விசாரிப்பதற்காக கடைக்கு செல்கிறீர்கள் என்றால், மிகக்குறைந்த அளவு பணத்தை மட்டுமே(தேவைப்பட்டால்) கையில் எடுத்து செல்லுங்கள்; EMI வசதி கிடைத்தாலும் அந்த சமயத்தில் வாங்குவதை தவிருங்கள் – இன்று பெரும்பாலான பொருட்கள், சேவைகள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் பொழுதுபோக்கிற்காக செல்லும் போதே வாங்கப்படுகின்றன – எந்த அவசியமும் இல்லாமல் – முடிவில் நமது வீட்டு அலமாரியில் (அ)  குப்பைத்தொட்டியில் 🙂
  • விலை குறைவாக கிடைக்கிறதே, சந்தையில் புதிதாக வந்த பொருள் என்று பார்த்து வாங்க வேண்டுமென்று அவசியமில்லை; விலை மலிவு, பொருள் புதிது என்ற சொற்கள் எல்லாம் வியாபாரிகளுக்கு உண்டானது – நீங்கள் உங்களுக்கு தேவையானதை மட்டும் பெறுங்கள்.
  • முடிந்தவரை நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை சேமிக்க முயலுங்கள்; உங்களுக்கு தேவையான விருப்பங்களை இலக்குகள் நிர்ணயித்து அடையுங்கள் – இலக்குகள் திட்டமிடப்படும் போது, பொருட்களை வாங்க உங்களுக்கு எந்த அவசரமும் இருக்காது 🙂

If you buy things you do not need, you will soon sell things you need – Warren Buffet

 

 

வாழ்த்துக்கள், தேவைகளுடன்…

வாழ்க வளமுடன் 🙂

(Feature image courtesy: theatrefolk.com )

ரிஸ்க் எடு தலைவா – Risk and Margin of Safety

 

ரிஸ்க் எடு தலைவா !  (Risk and Margin of Safety)

 

‘ரிஸ்க்’ (Risk) எடுப்பது எனக்கு ‘ரஸ்க்’ (Rusk) சாப்பிடுற மாதிரி !  எத்தனை பேருக்கு, ‘Rusk’ சாப்பிட  பிடிக்கும். இது சாப்பாடு விஷயம் இல்லைங்க, அதாவது நம்மில் எத்தனை பேருக்கு ‘Risk’ எடுப்பது பிடிக்கும் ?

 

‘Risk’ – Exposure to Danger or Hazard

 

நிதி சார்ந்த விஷயத்தில், ‘Risk’ என்பது நமது உண்மையான வருமானத்திற்கும், நாம் எதிர்பார்க்கும் வருமானத்திற்கும் உள்ள வித்தியாசம் தான்.

 

A Deviation between Actual and Expected Returns is the Risk.

 

  • ரிஸ்குக்கு இரண்டு முகங்கள் உண்டு. ஒன்று ‘Positive’, மற்றொன்று ‘Negative’.

 

  • நாம் முதலீடு செய்யும் பணத்திற்கு எந்த பங்கமும் ஏற்படாமல், முதல் பாதுகாப்பாக இருந்தாலே அது வெற்று அல்லது நேர்மறையாக(Positive) இருக்கும். துணிந்து செயல்பட்டால் முதலுக்கு நல்ல லாபமும் பெறலாம், நஷ்டமும் தான் பல சமயங்களில் ! இதனாலயே நாம் பெரும்பாலும், ‘ரிஸ்க்’ எடுக்க தயங்குகிறோம்; இல்லையெனில் ரிஸ்க் தன்மை மற்றும் விளைவு அறியாமல் அதள பாதாளத்தில் விழுகிறோம் (நஷ்டமடைகிறோம்); சரி, ரிஸ்க் எடுத்தால் நஷ்டமடைய வாய்ப்புள்ளது, ரிஸ்க் எடுக்கா விட்டால் சிறிதளவாது லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது (அ) முதலுக்கு பாதுகாப்பு.

 

உண்மையிலேயே ரிஸ்க் எடுக்காமல் இருப்பது ஆரோக்கியமானதா, ரிஸ்க் எடுக்காத முதலீடு உண்மையிலேயே நமது முதலை (முதல்)  பாதுகாக்கிறதா ?

 

இல்லை என்றே சொல்லலாம்…

 

நமது ரிஸ்க் எவ்வாறு உள்ளது ?

 

  • நீச்சல் தெரியாமல் ஆற்றில் இறங்குவது, நீச்சல் தெரிந்தும் ஆழம் அறியாமல் இருப்பது.
  • சாலையில் விபத்துக்கான வாய்ப்பு இருந்தும் அதி வேகமாக செல்வது, விதிகளை மதித்தும் எதிர் வருபவரை சரியாக அணுகாமல் போவது.
  • விளையாட்டு மைதானத்தில், பள்ளி-கல்லூரிகளில், காதலில், அலுவலகங்களில், புகை மற்றும் மது பழக்கங்களில் என எல்லாவற்றிலும் நாம் தினமும் ஓரளவு ரிஸ்க் எடுக்க தான் செய்கிறோம். ஆனால் பண முதலீடு விஷயத்தில் ? ? ?

 

அதனை மறந்து விடுகிறோம், செயல்படுகிறோம்.

 

முதலீடு ரிஸ்க் என்னென்ன ?

 

நீங்கள் பாதுகாப்பான முதலீடை (Bank Deposits, Postal Savings,Low Return Investments) தேர்ந்தெடுத்தால் ரிஸ்க் இல்லை என்று நினைக்கிறீர்களா ? அது தான் தவறு; நீங்கள் போட்ட பணம் பாதுகாப்பாக உள்ளது என்று உங்களுக்கு நினைவில் இருக்கலாம்; ஆனாலும் இங்கே சில ரிஸ்குகள் தான் உள்ளன, உங்கள் பண முதலீடை பதம் பார்க்க… உங்கள் எதிர்கால இலக்கினை கேள்விக்குறியாக்க !

 

ரிஸ்க் வகைகள் (Risk Types):

 

  • Inflation Risk
  • Liquidity Risk
  • Business Risk
  • Interest Rate Risk
  • Market Risk

 

Inflation Risk (பணவீக்க அபாயம்) – இது ஒரு  தவிர்க்க முடியாத ரிஸ்க். தேவைக்கும், உற்பத்திக்கும்(Demand vs Supply) இடையே உள்ள தன்மையை பொறுத்து மாறுபடும். பொருட்களை வாங்கும் திறனை(Purchasing Power) பெரிதும் பாதிக்கிறது. நீங்கள் இன்று வாங்க போகும் ரூ. 100 விலையுள்ள பொருள், நாளை (அ) அடுத்த மாதம்,அடுத்த  வருடம் அதே விலையில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. அதனால் நீங்கள் உங்கள் எதிர்கால இலக்கிற்காக வங்கியில் சேமித்து வைத்திருக்கும் பணம், முதிர்வில் பணவீக்கத்தை சரிக்கட்டுமா என்பது தான் ஐயம். எனவே தான் உங்கள் கனவுகள் பெரும்பாலும் நிறைவேறுவதில்லை – பணவீக்க ரிஸ்க்கினால் !

 

Liquidity Risk (நீர்மை நிறை அபாயம்) – உங்கள் முதலீடு வங்கி சேமிப்பாகவோ, நிலத்திலோ, அல்லது தங்கத்திலோ அல்லது அரசாங்க பத்திரத்திலோ, பங்கு சந்தையில் இருக்கலாம். ஆனால் உங்கள் அவசர தேவைக்கு அல்லது நீங்கள் உங்கள் இலக்கினை பூர்த்தி செய்யும் போது எளிதாக மற்றும் விரைவாக அதனை பணமாக (ரொக்கம்) மாற்றுவது மிகவும் அவசியம். சில முதலீடுகள் முதிர்வு முடியும் வரை பணமாக மாற்ற முடியாததும், நிலம் போன்ற முதலீடுகளுக்கு சில  கட்டுப்பாடுகளை பூர்த்தி செய்ய வேண்டுமென்பதும் நீர்மை நிறை ரிஸ்க்கினால் !

 

Business Risk (வணிக/ தொழில் அபாயம்) – ஒரு நிறுவனம் (அ) தொழிலை பாதிக்க கூடிய காரணிகள்  என்று ஆராய்ந்தால் உற்பத்தி மூலப்பொருட்கள், கூலி செலவு, விற்பனை மற்றும் விநியோகம், போட்டி நிறுவனங்களின் சந்தையிடல் இருக்கும். இதனால் அந்த நிறுவனத்தின் / தொழிலின் இயக்க செலவுகள்(Operating Cost) அதிகரித்து விற்பனை மற்றும் லாபம் பாதிக்க கூடும்; வாடிக்கையாளர்களையும் இழக்கலாம் – நாம் அந்த தொழிலில் முதலீடு செய்திருக்கும் பட்சத்தில் – நமக்கும் Business Risk உள்ளது.

 

Interest Rate Risk (வட்டி விகிதம்) – நாம் ஒரு வங்கியில் (அ) அரசாங்க பத்திரத்தில் முதலீடு செய்திருக்கிறோம்.  நாம் முதலீடு செய்யும் போது, வட்டி விகிதம் 9 % கிடைக்கும்  என்கிறார்கள்; ஆனால் ஒரு வருடத்திற்கு பிறகு பாரத ரிசர்வ் வங்கி(RBI) வட்டி விகிதத்தை 8 % ஆக குறைக்கும் முடிவில் உள்ளது. இந்த வட்டி குறைப்பு நமது முதிர்வு கால பணத்தையும் பாதிக்கும். நாம் எதிர்பார்த்த தொகை கிடைக்காது.

 

பொதுவாக வங்கி வட்டி விகிதம்(Interest Rate) குறையும் போது பத்திரங்களின் மதிப்பு(Bond Rate) கூடுவதும், வட்டி விகிதம் அதிகரிக்கும் போது பத்திரங்களின் மதிப்பு குறைவதும் வழக்கம்.

 

Market Risk (சந்தை அபாயம்) – சந்தை விலை ஏற்ற-இறக்கத்தினால் முதலீட்டினை இழக்கும் அபாயம்; பங்கு சந்தை, பத்திரங்கள், நிலங்கள் மற்றும் தங்கம் போன்றவை சந்தையின் அபாயத்துக்கு உட்பட்டது. உலகளாவிய காரணிகள் ஏதேனும் பாதிக்கப்பட்டாலும், இவைகள் பாதிப்படைய கூடும். முதலீட்டாளர் தனது பணத்தையும் இழக்க கூடும்.

 

ரிஸ்க் எவ்வாறெல்லாம் நமது முதலீட்டிற்கு வருகிறது என்பதை பார்த்து விட்டோம்; சரி விடுங்கள், அதனை எவ்வாறு நாம் கையாள்வது ?

 

சாலையில் சாமர்த்தியமாக வாகனம் ஓட்டுவதை போல (முடிந்தவரையில்) !

 

Risk Tolerance:

 

நாம் ஒரு ரிஸ்க்கை எடுக்கும் முன், அதனை எவ்வாறு சகித்து கொள்வது என்பது ‘Risk Tolerance’. இது இரு வகையாக  கையாளப்படும்.

 

  1. Risk Capacity – அபாயத்தை எதிர்கொள்ளும் திறன்
  2. Risk Attitude – அபாயத்தை நாம் அணுகும் முறை

 

அதாவது, நீங்கள் ஒரு ரிஸ்க்கை (முதலீடு) எடுக்க போகிறீர்கள், அதன் விளைவை உங்களால் எவ்வளவு தூரம் தாங்கி கொள்ள முடியும் – உங்களின் எதிர்கொள்ளும் திறன் / வலிமை (Ability to take Risk) எப்படி உள்ளது. இரண்டாவது நீங்கள் அதனை எவ்வாறு அணுகுகிறீர்கள் – இது உங்கள் மனம் சம்மந்தப்பட்ட விஷயம் (Willingness to take Risk), நீங்கள் எந்த அளவு ரிஸ்க் எடுக்க விரும்புகிறீர்கள்.

 

Margin of Safety:

 

நீங்கள்  ஒரு முதலீட்டை மேற்கொள்ளும் முன் (அ) ரிஸ்க் எடுக்கும் முன், உங்கள் பாதுகாப்பு விளிம்பை(Margin of Safety) உருவாக்கி விட்டீர்களா என பார்க்க வேண்டும்.

 

ரிஸ்க்கினால் வரும் இழப்பினை சரி செய்ய,

 

  • காப்பீடு(Insurance against any loss)  செய்ததுண்டா ?

 

  • போதிய பணம்(Extra / Enough Cash to Survive)  கைவசம் உண்டா ?

 

  • வருமுன் காக்கும் பழக்கம்(Prevention) உங்களுக்கு உண்டா ?

 

இது தாங்க, பாதுகாப்பு விளிம்பு (Margin of Safety).  

 

நீங்கள் உங்கள் தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்களை சந்தையில் வாங்க போகிறீர்கள். ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு விலை உள்ளது; ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை உள்ளது – நீங்கள் என்ன செய்யலாம் ?

 

நமக்கு தேவைப்படும் போது, நமக்கு தேவையான விலையில் வாங்கினால் தான் லாபமடைய முடியும். நஷ்டத்தையும் தவிர்க்கலாம்.

 

தலைவா, ரிஸ்க் எடுக்கலாம் வாங்க 🙂

 

வாழ்த்துக்கள்,  வாழ்க வளமுடன்  !

 

பங்கு வாங்கலியா பங்கு (பங்காளி)-Share Market Extravaganza

பங்கு வாங்கலியா பங்கு (பங்காளி)

Share Market Extravaganza

 

பங்குச்சந்தை ஒரு சூதாட்டம் !

 

பங்குச்சந்தை ஒரு தொழில் வாய்ப்பு மற்றும் பணம் பண்ணுவதற்கான கடல் !

 

மேலே உள்ள வாக்கியத்தில், எவை ‘உங்களை அதிகமாக அச்சுறுத்தும்; எவை உங்களை புத்துணர்வூட்டும் ? ‘

 

நான் சொல்கிறேன், கல்வி நிலையங்கள் ஒரு ஏமாற்று வேலையாளி என்று ! (உதாரணத்திற்கு மட்டுமே) 🙂

 

  • கல்வி நிலையங்கள் அதிகமான கட்டணங்களை வசூல் செய்கிறது;

 

  • கல்வி நிலையங்களில் அடிப்படை வசதியை கூட செய்து தருவதில்லை;

 

  • கல்வி நிலையங்களில் தகவல் தொழில்நுட்பம் மேம்படுத்தப்படவில்லை;

 

  • கல்வி கொள்கைகள் சரியாக வரையறுக்கப்படவில்லை;

 

  • எல்லா மாணவர்களும் அதிக மதிப்பெண்கள் பெறுவதில்லை;

 

இன்னும் பல…

 

மேலே உள்ள எல்லா வாக்கியங்களுக்கும் ஒரு கல்வி நிலையத்தை சுட்டிக்காட்டி ‘ஆம்’ என்று நீங்கள் பதில் சொல்ல முடியுமா ?

 

ஏதேனும் ஒன்றுக்கொன்று நிறை, குறைகள் இருக்கலாம்; பரவாயில்லை நாம் நமது பிள்ளைகளை கல்வி நிலையங்களில் படிக்கத்தான் வைக்கிறோம்; நாமும் அங்கே தான் படித்தோம் !

 

தேர்ந்தெடுப்பது நாம் தான்; தேவைகளும் நமக்கு தான் !

 

வாருங்கள், மற்றொரு உதாரணம் பார்ப்போம்…

 

வங்கிகள் எப்படி செயல்படுகின்றன(How the bank works) என்பதை நான் முன்பே சொல்லியிருக்கிறேன்;

வங்கிகளில்  நீங்கள் செய்யும் டெபாசிட் (வைப்பு தொகை) பணத்தை அவர்கள் யாருக்கு கடனாக கொடுக்கிறார்கள் என்று உங்களிடம் சொல்லப்படுவதில்லை; நீங்கள் கடனாக பெற்ற தொகை யாரிடமிருந்து பெறப்பட்டது என்பதும் சொல்லப்படுவதில்லை !

 

அது வங்கிகளின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் !

 

ஆனால், பங்குச்சந்தையில்…      அது தான் நமக்கு பிரச்சனையே 🙂

 

நீங்கள் ஒரு வங்கியில் ரூ. 1,00,000 /- தொகையை டெபாசிட் செய்கிறீர்கள்;  5 வருட வைப்புத்தொகையாக உங்களுக்கு 8 % வட்டி வருமானம் தரப்படுகிறது.  இந்த 5 வருட காலத்தில் உங்கள் எத்தனை வங்கி வாடிக்கையாளருக்கு பிரித்து கொடுக்கப்பட்டது, எத்தனை கடனை சரியாக கட்டினார்கள், அதாவது உங்கள் ரூ. 1,00,000/- தொகையின் ஏற்ற, இறக்கத்தை நீங்கள் ஒவ்வொரு நாளும் பார்த்திருக்க வாய்ப்புமில்லை; ஆனால் வங்கிகளுக்கு தெரிந்திருக்கலாம், எத்தனை பேர் கடனை கட்டி முடித்தார்கள் மற்றும் எவ்வளவு பேர் திவாலானார்கள் என்று 🙂

பங்குச்சந்தையில் பங்கின் விலை ஏறுவதும், இறங்குவதும் அதன் இயல்பே; அவ்வாறு நடைபெறுவதால் தான் நாம் வருமானம் ஈட்ட முடியும்; தற்போதெல்லாம் நாம் தக்காளி விலையேற்ற – இறக்கத்தை பற்றி கவலைப்படுவதில்லை; பங்குச்சந்தையை பற்றியது தான் நமது கவலை எல்லாம் !

 

உங்கள் வீட்டில் உள்ள பெண்களிடம் கேட்டு பாருங்கள் (காய்கறி சந்தைக்கு போகும் பெண்களிடம் ), அன்றைக்கு சமையலுக்கு எந்த காய்கறி விலை மலிவாக கிடைக்கிறதோ அதை தான் அவர்கள் சமைப்பார்கள்; போட்டி போட்டு கொண்டு அதிக விலைக்கு வாங்கமாட்டார்கள்; காய்கறி சந்தையில் பேரம் பேசுவதற்கும் தயங்கமாட்டார்கள்; ஆனால் இங்கு பங்குச்சந்தையில் அதுவே தலைகீழ் – பெறுவதோ பெரும் நஷ்டம், பிறகு அது சூதாட்டம் 🙂

 

பங்குச்சந்தை எப்படி இயங்குகிறது என்பதை பற்றி நான் இந்த கட்டுரையில் சொல்ல வரவில்லை; மாறாக, பங்குச்சந்தை பற்றிய அறியாமையையும், பணம் பண்ணுவதற்கான வாய்ப்புகளையே நான் சொல்ல வருகிறேன்.

 

கல்வி நிலையங்களும், வங்கிகளும்  எப்படி உங்களுக்கு நம்பகத்தன்மை வாய்ந்ததாக உள்ளதோ, அது போன்று தான் பங்குச்சந்தையும் !

 

பங்குச்சந்தைக்கும் கட்டுப்பாட்டாளர் (Regulators) உள்ளனர் என்பதை நாம் மறந்து விடக்கூடாது; விதிமுறைகளும், தண்டனைகளும் கடுமையாக தான் உள்ளன.

 

நாம் ஏன் பங்குச்சந்தையில் ஈடுபட (முதலீடு செய்ய) வேண்டும் ?

 

  • செயலற்ற வருமான வாய்ப்பு (Passive Income – Financial Asset)
  • அதிக லாபம் / வருமானம் -நீண்ட காலத்தில் (Higher Returns in Longterm)
  • பணவீக்கத்தை சரிக்கட்டும் வாய்ப்பு (Beat Inflation)
  • வரிச்சலுகைகள் (Tax Benefits – Longterm Capital Gains)
  • உரிமை / பங்குதாரராக வாய்ப்பு / தொழிலில் ஒரு சிறு பகுதியாக இருக்க (Ownership Rights / Be a part of a business)
  • நிதி மற்றும் பொருளாதாரம் பற்றிய அறிவு கிடைக்க (Knowledge about Finance and Economics)

இவையனைத்தும் இலவசமாக கிடைக்க வேண்டுமா….

 

பங்குச்சந்தையில் ஈடுபடுங்கள்…

 

Investing vs Trading:

 

பங்குச்சந்தையில்  ஈடுபடுவதற்கு முன்னர், பங்குச்சந்தைக்கு நீங்கள் யார் என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம்.

 

நீங்கள் ஒரு தொழிலை தேர்ந்தெடுத்து, முதல் போட்டு செய்ய ஆரம்பிக்கிறீர்கள் என வைத்து கொள்வோம்; உங்களுடைய நோக்கம் தொழிலில் நீண்ட கால வளர்ச்சியும், அதனை சார்ந்த வருமானம் பெருக வேண்டும் என்பதே. நீங்கள் உங்கள் தொழிலில் மிகவும் கவனமுடன் செயல்படுவீர்கள்; உங்களுக்கு, ‘தொழில்முனைவோர்’, ‘முதலீட்டாளர்’ (Entrepreneur /Investor)  என பெயர் சூட்டலாம். உங்களது உற்பத்தி, பொருட்கள், விற்பனை, வாடிக்கையாளர்கள், அரசாங்க தொழில் கொள்கைகள், காலநிலை ஆகியவை கவனிக்கப்பட வேண்டியவை.

 

எனக்கு நீண்ட கால நோக்கம் என்று எதுவும் கிடையாது; எனக்கு தினமும் நான் செய்யும் வேலை / தொழிலில் இருந்து எதாவது ஒரு சிறு தொகை கிடைத்தால் போதும்; ஆனால் தினமும் வருமானம் வேண்டும், நான் ரிஸ்க் எடுக்கவும் தயார் – முதலுக்கு லாபம் வரலாம்; நஷ்டமும் கூட ! உங்களுக்கு தின ‘வர்த்தகர் / வணிகர்’ (Day Trader) என பெயர் சூட்டலாம்; உங்களுக்கென்று எந்த பொருளும் சொந்தமில்லை, உங்களுக்கு எதை பற்றிய கவலையுமில்லை – பெரும்பாலான சமயங்களில் 🙂

 

Speculating / Speculator (ஊக வணிகம்) என்ற ஒருவரும் உண்டு; இவர் சந்தையில் எந்த காரணத்திற்காக வந்தார், என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று அவருக்கே தெரியாது; அனைத்தும் ஊக வணிகத்தில் தான் – மிக்க அபாயத்துடன்  !

கவனத்தில் கொள்ளுங்கள்:  நீங்கள் பங்குச்சந்தையில் ஒரு பங்கினை வாங்கி, அதனை ஒரு வருடத்திற்குள் விற்றால் கிடைக்கும் லாபத்திற்கு குறுகிய கால ஆதாய வரி; ஒரு வருடத்திற்கு மேல் விற்றால் எந்த வரியும் கிடையாது !   

 

Fundamentals(Business)  vs Technicals (Charts):

 

Fundamental Analysis:

 

உங்கள் தொழிலை நீங்கள் மாதத்திற்கு ஒரு முறையோ (அ) மூன்று மாதத்திற்கு ஒரு முறையோ கணக்கு சரிபார்த்தால் நன்றாக இருக்குமா, இல்லையா ?  அதை தான் இங்கு பார்க்கிறீர்கள். உங்கள் தொழிலின் வரவு-செலவு கடந்த காலத்தில் எவ்வாறு உள்ளது, அதன் அடிப்படையில் இனி என்னவாறு திருத்தம் மற்றும் மேம்படலாம் . உங்களுக்கு உதவும் காரணிகள் Balance Sheet, Income Statement, Industrial and Economy, Price to Earning, Intrinsic value, etc.

 

Technical Analysis:

 

கடந்த கால விலை மற்றும் அளவுகளை கொண்டு மதிப்பிடுவது; விலை இயக்கம் சார்ந்த சந்தை நடவடிக்கைகளை கண்காணிப்பது – A Mathematical Calculation based on Price Movements.

 

பங்குச்சந்தை ஒரு ரிஸ்க் ?

 

ஆம், பங்குச்சந்தை ஒரு ரிஸ்க்கான தளம் தான். வருமானம் பார்க்கலாம், நீங்கள் கற்று கொள்வதற்கு தயாரானால் !

 

நஷ்டமும் அடையலாம், புரியாமல் செய்தால் ; மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்றால் 🙂

 

  • வங்கி தொகையிலும் ரிஸ்க் உண்டு, பாரத ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்தால் – நீங்கள் எதிர்பார்த்த தொகை வராமல் போகலாம்.

 

  • தங்கத்திலும் ஏற்ற இறக்கங்கள் இயல்பு; உங்கள் அவசர தேவைக்கு அதன் சந்தை மதிப்பை விட குறைவாகவே பணம் பெற முடியும்.

 

  • நிலத்திலும் சிக்கல்கள் உண்டு, நீங்கள் நினைத்த மாத்திரத்தில் விற்று பணம் பெற முடியாது; சட்டங்கள் அப்படி சொல்லுகிறது 🙂

 

Risk Tolerance’ என்று சொல்லப்படும் இடர் சகிப்பு தன்மை என்பது அவசியம்; அதாவது உங்களுடைய ரிஸ்க் எடுக்கும் திறன்(Risk Capacity) மற்றும் விருப்பம்(Risk Attitude) பற்றி சொல்லுவது; எந்த முதலீடானாலும் இது பொருந்தும்.

 

இதனை புரிந்து நீங்கள் பங்குச்சந்தையில் நீங்கள் செயல்பட்டால், உங்களுக்கு கிடைப்பது…  Capital Appreciation, Beat Inflation, Dividend Yield, Higher Returns, Liquidity, Ownership Style இன்னும் பல !

 

இறுதியாக…

 

இன்று நம்மில் எண்ணற்றவர்களுக்கு இருக்கும் வேலையை / தொழிலை நிறுத்தி விட்டு புதிய தொழிலை ஆரம்பிக்கலாம் என எண்ணங்கள் இருக்கலாம்; அப்படிப்பட்டவர்களுக்கு பங்குச்சந்தை ஒரு வரப்பிரசாதம் !

 

பணத்தின் மூலம் பணம் பண்ணும் கலையை கற்க விரும்புபவர்கள் பங்குச்சந்தையை கற்கலாம்; கலக்கவும் செய்யலாம் 🙂

 

நீண்ட கால இலக்குகள் உள்ளவர்கள் பங்குச்சந்தையின் வாயிலாக வெற்றி பெறலாம்.

 

கடலில் நீந்தினாலும் சரி, படகோட்டினாலும் சரி நீங்கள் கடலில் இருக்கிறீர்கள் என்பதை மறந்து விட வேண்டாம்;

 

கரையில் இருந்தாலும் பரவாயில்லை, கடலில் கால்களை வைக்க மறுக்க வேண்டாம்;

 

பங்குச்சந்தை ஒரு கடல் !

 

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !

 

ஒரு கோடி, ஓகோன்னு வாழ்க்கை:How long will your money last ?

ஒரு கோடி, ஓகோன்னு வாழ்க்கை !

How long will your money last ?

 

‘ உங்களிடம் ஒரு கோடி ரூபாய் இருந்தால் நீங்கள் அதை கொண்டு என்ன செய்வீர்கள் ’ என்று உங்களிடம் யாராவது கேட்டால் ?

 

  • முழுவதையும் செலவழித்து வாழ்க்கையை சந்தோசமாக அனுபவிப்பேன்.
  • தொழில் செய்வேன் / எனது குறிக்கோள்களை நிறைவேற்றுவேன்.
  • பிறருக்கு உதவுவேன்.
  • சொத்துக்களை வாங்குவேன்.
  • நான் இன்னும் அதை பற்றி யோசிக்கவில்லை ???

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இவ்வாறாக நமது பதில்கள் அமையும்; அருணாச்சலம் (Rajnikanth’s Arunchalam Movie) படத்தை போலவும் நமக்கு யோசிக்க தோணுமே 🙂

 

அருணாச்சலம் படத்தில் சொல்வதை போல, 30 கோடி ரூபாயை 30 நாட்களில் எப்படி செலவு செய்வீர்கள் என்று நான் கேட்க வரவில்லை; ஆனால் இந்த ஒரு கோடி ரூபாய் நம்மை எத்தனை நாட்கள் (அ) மாதங்கள் வாழ வைக்கும் என்பதை தான் நான் சொல்ல வருகிறேன்; அது தான் இந்த கட்டுரையின் தலைப்பும் !

 

How Long will your Money Last ?

 

உங்களிடம் இப்போது ஒரு கோடி ரூபாய் உள்ளது என வைத்து கொள்ளுங்கள்; நீங்கள் எந்த வேலையும் / தொழிலும் செய்யவில்லை; இந்த ஒரு கோடி ரூபாயை கொண்டு நீங்கள் எத்தனை நாட்கள் (அ) மாதங்கள் உங்களது வாழ்க்கையை / குடும்பத்தை நிதி சார்ந்து பாதுகாக்க முடியும் ?

 

உங்களது செலவுகளை, தேவைகளை அறியுங்கள்:

(Know your Needs and Expenses)

 

  • உங்களுக்கு தேவைப்படும் இன்றைய மாத செலவுகள்:  ரூ.  XXXXX  /-

 

  • எதிர்பார்க்கும்  பணவீக்கம் / விலைவாசி:     XYZ % (வருட கணக்கில்)

அட்டவணையை கவனியுங்கள்:

(See the Below table)

 

நீங்கள் ஒரு கோடி ரூபாயை எதிலும் முதலீடு செய்யாமல், அப்படியே உங்கள் மாதாந்திர செலவுக்கு பயன்படுத்தினால்,

மாதாந்திர தேவைப்படும் தொகை:  ரூ. 50,000 /-

வருட பணவீக்கம் / தேவைப்படும் கூடுதல் வீதம்:  6 %

வருமான வரி விகிதம் :  30 % அளவில்

உங்கள் ஒரு கோடி ரூபாய் 8 % வட்டி தரும் முதலீட்டில் இருந்தால்,

(மாதாந்திர கூட்டு வட்டியில் – Monthly Compounded)

ஏன்…  எதற்கு ?

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

  • நீங்கள் தற்போது பார்க்கும் வேலையையோ / தொழிலையோ மாற்றி கொள்ள நினைக்கும் போது, உங்களது தற்போதைய மற்றும் எதிர்கால பொருளாதார வாழ்க்கை எந்த வகையிலும் பாதிப்படையாமல் இருக்க உதவும்.

 

  • இள வயதில் ஓய்வு பெற விரும்புவோருக்கு உதவும்(Early Retirement).

 

  • அவசர கால நிதியை(Creating Emergency Fund) சேமிப்பதற்கான அளவினை சொல்லும்.

 

இதனை போன்றே உங்களுக்கு எவ்வளவு தொகை வேண்டும் (அ) உங்களிடம் தற்போது எவ்வளவு தொகை உள்ளது என்பதை அறிந்து, நீங்களும் உங்கள் பணம் / சொத்து எவ்வளவு நாட்களுக்கு உங்களை பாதுகாக்கும் என கணக்கிட்டு கொள்ளலாம்.

 

ஒரு கோடி வாழ்த்துக்கள் 🙂

வாழ்க வளமுடன் !

நீங்கள் உண்மையிலேயே பாதுகாக்கப்படுகிறீர்களா? Term Insurance Vs Endowment Insurance

நீங்கள் உண்மையிலேயே  பாதுகாக்கப்படுகிறீர்களா ?

Is Insurance really protect you ?

பாதுகாப்பு நம் பயணத்தின் காப்பு !

 

Protection – “A person or thing that protects somone or something”

 

இந்த பிரபஞ்சத்தில் இயற்கையாகவே எல்லா உயிர்களுக்கும் தற்காப்பு என்ற தன்மை இறைநிலையில் உள்ளது; புல் தாவரம் முதல் மனிதன் வரை இயற்கை சீற்றங்கள் மற்றும் பிற உயிர்களினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தன்னை காக்க எப்போதும் தயாராக உள்ளது; இது இயற்கையின் நியதி !

 

மனிதனும் தனது வாழ்க்கை பயணத்தில், இலக்குகளில் சறுக்காமல் இருக்க ஒவ்வொரு காலகட்டத்திலும் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி கொண்டு தான் இருக்கிறான்; குறிப்பாக தனது பொருள் சேதம், உற்றுயிர்கள் பாதிப்படையும் போது, மனம் மற்றும் உடல் அளவில் தயாராகிறான்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

முன்னொரு காலத்தில், ஒரு வீட்டில் உள்ள ஒருவர் மட்டுமே பொருளீட்டி தனது உறவுகளை பேணுவார், பாதுகாக்கவும் செய்வார்; பெரும்பாலும் அவர் குடும்ப தலைவராக இருப்பார்; அந்த தலைவர் ஏதேனும் காரணத்தால் உடல் மற்றும் மன ரீதியாக பாதிக்கப்பட்டால், அவரின் இடத்தை நிரப்ப மற்றொருவர் எப்போதும் ஆயத்தமாக  இருப்பார்; அப்போது குடும்ப உறவுகளின் எண்ணிக்கை பல;

 

தியாகம் மற்றும் சகிப்புத்தன்மையும் நிறைவு !

 

ஆனால் இப்போது அவ்வாறு இல்லை; சிலர் மனம் விரும்பாமல் உறவுகளிலிருந்து வெளியேறுகின்றனர். பொறுப்பெடுத்து கொள்ள தயாராகவும் இல்லை. இன்னும் சிலரோ பொறுப்பெடுத்து கொள்ள தயாராக இருந்தாலும் அவர்களது உடல் மற்றும் நிதி உழைப்பு ஒத்துழைப்பதில்லை; இன்று காலம் கடந்தும் விட்டோம். இருந்தும் பாதுகாப்பு விஷயத்தில் அக்கறையாக தான் இருக்கிறோம்; தகவல் சேமிப்பில் Big Data, Cloud Computing, Hadoop  என்று வளர்ந்து கொண்டே செல்கிறது;

நிதி சார்ந்த விஷயத்திலும் Insurance, Investing, Invention, Assets… இன்னும் பல !

 

நாம் சொன்னோமே ஒரு குடும்ப தலைவர், அவருக்கு அடுத்து ஆயத்தமாக இருந்த மற்றொருவரை சொன்னோமே, அந்த மற்றொருவர் தான் நமது பாதுகாப்பு தன்மைக்கு மிகவும் அவசியமானவர்; அவர் வலிமையாக, விவேகமாக இருப்பது முக்கியம்; அவரை நம்பி தான் மாத வருமானம் பெறும் / தொழில் புரியும் நாம் இருக்கிறோம்.

 

அவர் உண்மையிலேயே நம்மையும், நமது உறவுகளையும் இக்கட்டான சூழ்நிலையில் பாதுகாப்பாரா ?

 

பாதுகாப்பை  பாப்போம் !

 

Insurance  –  Protection against future loss / Protection from financial loss

 

நீங்கள் எடுத்தது உண்மையிலேயே மேலே சொன்ன இன்சூரன்ஸ் தானா ?
எதிர்க்குரல்கள்: (Conflict thoughts about Insurance)

 

பொதுவாக நாம் பார்க்கும் இன்சூரன்ஸ் திட்டங்களில் ஏறக்குறைய பெரும்பாலானோர் ‘Endowment Plan’ என்று சொல்லப்படும் காப்பீட்டு திட்டத்தையே வாங்குகிறோம்; ‘Term Plan’ என்று சொல்லக்கூடிய முழுமையான காப்பீட்டை கொடுக்கும் திட்டத்தை நம்மில் பலர் அறிவதில்லை, சிலருக்கு தெரிந்தாலும் எடுக்க மறுப்பது.

 

ஏன் பலரும் Term Insurance  ஐ ஆதரிக்காமல் குறைந்த பயனை  தரும் மற்ற காப்பீட்டை தேர்ந்தெடுக்கின்றனர் ?

 

காரணங்கள் பெரும்பாலோரிடம், Term Insurance ல் கட்டிய பணம் தருவதில்லை; இழப்பு ஏற்பட்டால் மட்டுமே கிடைக்குமாம் என்பது. யாரவது நாம் சிந்தித்து உண்டா ?

 

உங்கள் வாகனம், வீடு மற்றும் தொழிலுக்கு செய்யும் காப்பீடு என்றாவது உங்களுக்கு முதிர்வு தொகை என கொடுத்ததுண்டா ? இல்லை ! ஏனென்றால், காப்பீடு என்பது நாம் சொன்னது போல உங்களுடைய எதிர்கால வாழ்க்கையோ, பொருளாதார இழப்பையோ சரிக்கட்டுவது என்பதே.

 

உங்கள் வாகனம் தொலைந்து விட்டால் (அ) சேதம் அடைந்து விட்டால், நீங்கள் காப்பீட்டு தொகை பெற முயற்சிக்கலாம்; மாறாக நான் எனது வாகனத்திற்கு ஒவ்வொரு வருடமும் இவ்வளவு தொகை கட்டினேன், எனக்கு தாருங்கள் என்று காப்பீடு நிறுவனத்திடம் நாம் முறையிட முடியாது.

நீங்கள் உங்கள் வாகனத்தை கொண்டு ஒருவரை சேதப்படுத்தி விட்டீர்கள் என கொள்வோம்; இழப்பு ஏற்பட்ட அவருக்கு யார் இலவசமாக பணம் தருவார்கள் ?   நீங்கள் செய்த காப்பீட்டு தொகையே அவருக்கான இழப்பையும், உங்களை அந்த பிரச்சனையிலிருந்து விடுவித்து கொள்ளவும் உதவும் 🙂

 

Term Insurance vs Endowment Insurance:

Term Insurance:

  • Term Insurance என்பது நீங்கள் உங்கள் வாகனம், வீடு மற்றும் தொழிலுக்கு காப்பீடு எடுப்பது போல தான்.
  • Term Insurance ஒரு முழுமையான காப்பீடு திட்டம்.
  • Term Insurance ல் ஏதேனும் அசம்பாவிதம் / உயிரிழப்பு ஏற்பட்டால் முழு காப்பீட்டு தொகையும் கிடைக்கும்; முதிர்வு தொகை என்று ஏதும் கிடையாது, எனவே இழப்பு ஏற்பட்டால் மட்டுமே தொகை கிடைக்கும்.
  • காப்பீடு காலத்தை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.
  • இளம் வயதில் காப்பீடு எடுக்கும் போது ப்ரீமிய தொகை மிக குறைவாக இருக்கும்; முதிர்வு காலம் வரை ப்ரீமிய தொகையில் மாற்றம் இருக்காது.
  • Term Insurance உங்களது தற்போதைய செல்வ வாழ்க்கையை எதிர்காலத்தில் பாதுகாக்கும். (Protect your Wealth)

 

Endowment Insurance:

  • Endowment Insurance என்பது காப்பீடு மற்றும் சேமிப்பு/முதலீட்டை கொண்ட ஒரு திட்டம்.
  • Endowment Insurance ல் நீங்கள் செலுத்திய ப்ரீமியத்தில் ஒரு பகுதி காப்பீடுக்கும், மற்றொரு பகுதி சேமிப்பு / முதலீட்டிற்கு பயன்படுத்தபடும்.
  • Endowment Plan ல் முதிர்வு தொகை உண்டு; ஏதேனும் அசம்பாவிதம் / உயிரிழப்பு ஏற்பட்டால் முழு காப்பீடு தொகை கிடைக்கும்.
  • காப்பீட்டிற்கான ப்ரீமிய தொகை அதிகம்; Term Insurance ஐ ஒப்பிடும் போது Endowment ல் காப்பீடு தொகைக்கேற்ற ப்ரீமிய தொகை மிக அதிகமே. (Low Coverage at High Cost)
  • பணவீக்கத்தை மற்றும் உங்கள் வாழ்க்கை தரம், எதிர்கால செல்வ வாழ்க்கையை சரி கட்டாது.

 

(Image Courtesy: Nanayam Vikatan)
இரண்டையும் ஒப்பிட்டு நீங்கள் முடிவு செய்வது, உங்கள் சிந்தனையில்…

 

ஏன் உங்கள் குழந்தையை 5 ம் வகுப்பு படிப்போடு நிறுத்தவில்லை, கல்லூரி படிப்பு வரை தொடர செய்கிறோம் என்று ?

 

நீங்கள் ஏன் ஒரு தரமான வீடு மற்றும்  கல்வியை விரும்புகிறீர்கள் ?

 

காப்பீடு ஒரு முதலீட்டு திட்டம் அல்ல ! (Insurance is not a Investing)

 

  • காப்பீடையும், முதலீட்டையும் எப்போதும் குழப்பி கொள்ள வேண்டாம்; காப்பீடும், முதலீடும் செய்கிறோம் என்று ஒரு தவறான மற்றும் நமக்கு பொருந்தாத திட்டத்தையும் தேர்ந்தெடுக்க வேண்டாம்.

 

  • நமக்கு என்ன தேவை, நம்மிடம் இப்போது என்ன இருக்கிறது என்று ஆராய்ந்த பின்னரே நிதி விஷயத்தில் முடிவு எடுக்கவும்.

 

  • காப்பீடு Term and Conditions ஐ எப்போதும் கவனமாக படியுங்கள்

 

  • வரிச்சலுகை பெறுகிறேன் என்று அதிகமான பணத்தை காப்பீடு எடுக்க பயன்படுத்துவதும் புத்திசாலித்தனமல்ல !

 

நமக்கான காப்பீடு தொகையை எவ்வாறு கணக்கிடுவது ?

(Calculating Insurance Coverage Required )

 

  • உங்களுடைய மாத வருமானத்தை ஆண்டு கணக்கில் எடுத்து கொள்ளுங்கள் (A).
  • உங்கள் தற்போதைய கடன்கள் மற்றும் உங்களின் எதிர்கால குழந்தைகளின் கல்வி செலவுகள், திருமணம் கணக்கில் கொள்ளுங்கள். (B)
  • உங்களுடைய தற்போதைய சேமிப்பு / முதலீட்டை குறித்து கொள்ளவும்.(C)

 

Insurance Coverage = A + B – C   X   15

 

உங்களுக்கு கணக்கிடுவது பிடிக்கவில்லை (அ) புரியவில்லையா ?

 

எளிது, உங்கள் ஆண்டு வருமானத்தை 15 ஆல் பெருக்கி கொள்ளுங்கள்; கிடைக்கும் தொகை தான் உங்களுக்கான காப்பீடு செய்ய வேண்டிய தொகை !

 

காப்பீடு தொகை சராசரியாக ஆண்டு வருமானத்தை போல, 15 – 20 மடங்குகள் இருப்பது சிறந்தது.

 

காப்பீட்டு திட்டத்தை யார் தவிர்க்கலாம் ? (Who can avoid Insurance ?)

 

  • நீங்கள் ஒரு செல்வந்தர், உங்களுக்கு கோடிக்கணக்கான சொத்துக்கள் மற்றும் வருமானங்கள்; கடன்களும் இல்லை;  நீங்கள் இல்லையென்றாலும் உங்கள் எதிர்கால சந்ததியினரை உங்கள் சொத்துக்கள் அவர்களை பாதுகாக்கும் என்றால் – உங்களுக்கு காப்பீடு வேண்டியதில்லை; நீங்கள் மற்றவர்களுக்கு உதவலாம் !

 

  • எனக்கு யாருமில்லை, என்னை நம்பி யாருமில்லை. நான் ஒரு இளங்கலை / துறவி (Bachelor / Monk). நான் யாருக்கும் தொண்டு செய்யப்போவதில்லை என்றால் – நீங்கள் தனித்து இருக்கலாம்.

 

நம் உடல் ஆரோக்கியத்தை நாம் நோய் வருமுன் காப்பது போல, ஒரு சிறந்த நிதி பாதுகாப்பையும் (Insure) செய்வோம் !
வாழ்த்துக்கள்;

வாழ்க வளமுடன் !

 

வரிகள் ஜாக்கிரதை : Tax Planning

 

வரிகள் ஜாக்கிரதை : Taxes / Tax Planning

 

“ வரிகள் ” என்று சொன்னாலே நமக்கு திகிலூட்டும் விஷயமாகத்தான் நாம் பார்த்திருக்கிறோம்; ஏனென்றால் நமது பொருளாதார (வருமான) வாழ்க்கையோடு எப்போதும் தொடர்பு கொண்டிருப்பது இந்த ‘வரிகள்’ தான். நாம் நுகரும் ஒவ்வொரு பொருளிலும், பயன்படுத்தும் எந்த சேவையிலும் வரிகள் என்பது இன்று தவிர்க்க முடியாததாகி விட்டது; வரிகள் பற்றிய அறியாமை மற்றும் அலட்சியத்தாலேயே பெரும்பாலானோர் அவற்றை தவிர்ப்பதும், முடிவில் அபாரதத்திலும், ஊழலிலும் சென்றடைகிறது.

 

வரிகள் ஏன் :  Why Taxes  ?

 

TAX – A Fee or Charge against a Citizen’s Person, Property or Activity for the support of Government

 

  • போர்க்காலங்களில் நிதி உதவி திரட்டுவதற்கு மற்றும் நிலங்களுக்கும் வரி விதிப்புகள் தோற்றுவிக்கப்பட்டன.

 

  • அமெரிக்காவாலும், இங்கிலாந்தாலும் ஆரம்பகாலத்தில் வரிகள் ஏற்படுத்தப்பட்டாலும் இன்று உலகளவில் பெரும்பாலான நாடுகள் வரி விதிப்பு கொள்கையை ஏற்படுத்தியுள்ளன.

 

  • இன்று வரி விதிப்பின் மூலமான வருமானத்தை கொண்டே ஏறக்குறைய எல்லா நாடுகளும் தங்களது நாட்டின் நிதி அறிக்கையை தயார் செய்கின்றன. வரி வருமானத்தை கொண்டே மக்களுக்கும் செலவிடுகின்றன.

 

வரிகள் எத்தனை : Types of Taxes ?

 

  • நேரடி வரிகள் (Direct Taxes)
  • மறைமுக வரிகள் (Indirect Taxes)
  • வருமான வரி (Income Tax)
  • சேவை வரி  (Service Tax)
  • சுங்க வரி (Customs Duty)
  • கலால் வரி (Excise Duty)
  • மதிப்பு கூட்டு வரி (Value Added Tax)
  • விற்பனை வரி (Sales Tax)
  • சொத்து வரி (Property Tax)
  • செல்வ வரி  (Wealth Tax)
  • நிறுவன வரி (Corporate Tax)

 

இன்னும் பல….(Goods and Service Tax -GST)  🙂

 

வரிகளை அலட்சியப்படுத்துவதா  (அ) திறமையாக கையாள்வதா  ?

 

வரி விதிப்புகள் தனி நபர் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு என தனித்தனியாக வரிச்சட்டம் உண்டு.

 

வரிகளை அலட்சியப்படுத்தவது  என்பதை விட, அவற்றை ஓரளவு கற்று கொள்வதன் மூலம் நாம் பயனடையலாம்; தவிர்க்கிறோம் என்று வரிகளை கட்டாமல் விடுவதோ (அ) வரி சலுகை பெறுகிறேன் என்று தவறாக முதலீட்டை மேற்கொள்வதோ, நிதி ஆரோகியமாகாது. வரிகளை சரியாக கையாண்டால் அது நமக்கு பல வழிகளில் பயன் தரும்; அதனால் தான்,

 

வரிகளும், பணவீக்கமும் அறியாமை ஏழைகள் ஏழைகளாகவும், கற்று தெரிந்த பணக்காரர்கள் பணக்காரர்களாகவும் வைத்திருக்கிறது.

 

நம்மில் சிலர் உண்மையிலே விவசாயம் செய்யாமல், விவசாய வருமானத்திற்கு வரியில்லை என்று கணக்கு காட்டி வருகிறார்கள்; இப்போது நிதி அமைச்சகமும், சில விவசாய வருமானத்திற்கு வரி விதிக்கலாமா என்று ஆலோசித்து வருகிறது 🙂

 

வரிகளால் நாம் படும் பாடு, திண்டாட்டம் தான் 🙂   எனவே, அவற்றை திறமையாக கையாள்வதே சிறந்தது !

 

எவ்வாறு திறமையாக கையாள்வது ? (How to avoid Taxes Legally)

 

  • வரிகள் சம்மந்தமான புத்தகங்களை வாசிப்பதன் மூலம் (அ) ஒரு வரி ஆலோசகரை தேர்ந்தெடுப்பதன் மூலம் (Hire a Tax Professional)

 

  • நீண்ட கால சேமிப்பு / முதலீடு மூலம், வரி விலக்கு பெறுவது (Long term Savings / Investment )

 

  • திறமையான வணிக தேர்வு (Tax Efficient Business)

 

  • மூலதன இழப்பை சமர்பிப்பதன் மூலம் (Capital Loss)

 

  • செயலில்லாத வருமானம் மூலம் (Create Passive Income)

 

  • குறைந்த வரி செலுத்துவதன் மூலம் வாங்கும் நிலம் (அ) சொத்து (Buying a Property / Asset in a Low Tax Region )

 

  • சொத்துக்களை விற்று லாபத்தை மறுபடியும்  சொத்துக்களாக மாற்றுவது (Reinvest on Profits)

 

  • பிறருக்கு உதவி செய்வதன் மூலம் (Charity / Donation)

 

  • வாடகை வருமானத்தில் தேய்மானம் மற்றும் பராமரிப்பு செலவுகளை கையாள்வதன் மூலம் (Depreciation and Maintenance Cost)

 

  • தொழிலில் அதிகம் செலவு செய்வது;  வேலையில் குறைந்த ஊதியம் மற்றும் குறைவாக செலவு செய்வதன் மூலம். (Spend more on Business, Earn and Spend less in a Job).

 

மேலே நான் சொன்ன ‘வரிகளை திறமையாக கையாள்வது’ (Tax Planning) என்பது அனைத்தும் அரசாங்க விதிமுறைகள் மற்றும் நிபந்தனைக்கு உட்பட்டதே. சிறந்த தகவல் மற்றும் உதவிகளுக்கு ஒரு வரி ஆலோசகர் (அ) தணிக்கையாளரை ஆலோசிப்பது நன்று.

 

வாழ்த்துக்கள் வரிகளுடன் 🙂

 

வாழ்க வளமுடன் !

 

பழுத்த இலை விழக்கண்டு பச்சையிலை சிரித்தாற் போல – Secret of Young Investing

 

பழுத்த இலை விழக்கண்டு பச்சையிலை சிரித்தாற் போல…

SECRET OF YOUNG (EARLY) INVESTING

 

 

உங்களுக்கான மூன்று கேள்விகள் :

 

  • நீங்கள் எந்த பகுதியை அதிகமாக நேசிக்கிறீர்கள் மற்றும் எப்போதும் அனுபவிக்க விரும்புகிறீர்கள்… இளமையில் / முதுமையில்  ?
  • நீங்கள் எப்போது அதிகமாக கற்று கொள்ள மற்றும் உற்சாகமாக வேலை செய்ய விரும்புகிறீர்கள்… இளமையில் / முதுமையில்  ?
  • உங்களுக்கு நீச்சல் பயிற்சி பயில ஆசை… அதன் தொடக்க பயிற்சியை எப்போதும் ஆரம்பிக்க விரும்புகிறீர்கள்… 10-20 வயது / 50-60 வயது ?

 

 

எல்லாமே உங்கள் விருப்ப தேர்வு தான்; இந்த மூன்று கேள்விகளுக்கு உங்களுடைய விருப்பங்கள் (விடைகள்) 1. இளமையில்  2. இளமையில் 3.  10-20 வயது என்றால், நீங்கள் மேற்கொண்டு இந்த கட்டுரையை படிக்க அவசியமில்லை; தலைப்பை மட்டும் ஞாபகத்தில் கொள்ளுங்கள்… எனக்காக 🙂

 

இனி மற்றவர்களுக்கான கட்டுரை இதோ…

 

என் அலுவலக நண்பருடன் நான் ஒரு முறை பரஸ்பர நிதி நிறுவனம் நடத்தும் முதலீட்டாளர் விழிப்புணர்வு  நிகழ்ச்சி ஒன்றிற்கு புதுச்சேரி சென்றிருந்தேன்; நிகழ்ச்சியின் முடிவில் நான் என் நண்பரிடம் சொன்னேன், “ 25 வயதிலே நாம் மாதா மாதம் ரூ. 5000 /- (SIP) முதலீடு செய்தால் 50 வயதிலே நமக்கு ரூ. 93, 00,000 /- (93 லட்சம்) [12 % வட்டியில் ] கிடைக்குமென்று” நண்பரும், ஆமோதித்தார். மேலும் அவர் சொன்னார், “ 25 வருடத்திற்கு மாதாமாதம் ரூ. 5000 /- முதலீடு செய்தால் 12 % வட்டியில் முதிர்வில் ரூ. 93 லட்சம் கிடைக்கும்; அது தான் கணக்கு. ஆனால் இந்த பரஸ்பர நிதி நிறுவனங்கள் சும்மா 25 வயதிலே முதலீடு செய்தால் என்று படம் காண்பிக்கின்றன; நாம் வேண்டுமானாலும் முதலீடு செய்தால், முடிவில் இந்த கணக்கு தானே”  என்று தனது புத்திசாலித்தனத்தை சொன்னார்.  

 

அவர் சொல்லும் கணக்கு சரி தான்;

 

நான் சொன்னேன், “ 25 வயதிலே முதலீடு செய்வது நல்லதா (அல்லது) 50 வயதிலே நல்லதா ?” என்று கேட்டேன்; அதற்கு அவர் அதை அப்புறம் பார்த்து கொள்ளலாம்; காபி சாப்பிட போவோம் என்கிறார் 🙂

 

வேண்டுமானால் அவர் வீட்டில் போய் யோசித்திருக்கலாம் 🙂

இதை தான் நம்மில் பெரும்பாலோர் செய்கிறோம், “அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் !”

 

முதலீட்டு மற்றும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லி விட்டு போகட்டும்; ஆனால் அவை சொல்லும், ‘எண்களும், பாதுகாப்புத்தன்மையும்’ நமக்கு அவசியம். அதை நாம் அலட்சியப்படுத்த தேவையில்லை; இன்று நாம் இளமையில் முதலீடு / சேமிக்கும் வாய்ப்பு முதுமை காலத்தில் உறுதியாக மற்றும் நம்பகமாக கிடைக்க போவதில்லை. இளமையில் இருக்கும் நமது உழைப்பு மற்றும் நம்பிக்கை, முதுமையில் எதிர்பார்க்க முடியாது; அது தான் இயற்கை…

 

அதனால் இளமையில் கல் !

இளமையில் நாம் முதலீடு செய்யாமல் இருப்பதற்கான மனத்தடைகள்:

 

  • இளமை காலத்தை அனுபவித்து கொள்ளலாம் மற்றும் பிற்பகுதியில் சேமித்து / முதலீட்டை மேற்கொள்ளலாம் என்ற எண்ணம். [ உங்கள் இளமை காலத்தை அனுபவிப்பதற்கும், சேமிப்பதற்கான காலத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை; இளமை நமக்கு தேவையானது போல, சேமிப்பதற்கும் இளமை வேண்டுமல்லவா ! ]

 

  • எப்போதும் நம் கையில் நிரந்தர தொழில் / வேலை இருக்கும் போது, இளமையில் சேமிப்பு / முதலீடு எதற்கு என எண்ணுவது.        [ தாராளமயமாக்கல் மற்றும் உலக பொருளாதார சந்தை போட்டியில் நீங்கள் இப்போது பார்க்கும் வேலையும், தொழிலும் நிரந்தரமல்ல ! ]

 

  • சேமிப்பு / முதலீடு பற்றிய கல்வி இல்லாமை மற்றும் மண்ணும்,பொன்னும் தான் சொத்து என்று நம்புவது. [ விவசாயத்தை திறம்பட செய்பவர்களுக்கு தான் மண்ணும், நகை வியாபாரத்தில் ஈடுபடுவோருக்கு தான் பொன்னும் சொத்து ! ]

 

  • முதலீடு பற்றிய அறிவு இருந்தும் காலத்தே முதலீடு செய்யாமல் இருப்பது. [ வெறும் கல்வியினால் பயனொன்றும் இருப்பதில்லை; செயல்பட்டு பயனை அடைவது தான் அவசியம். ]

 

இளமை கால முதலீட்டின் வாய்ப்புகள் மற்றும் நன்மைகள்:

 

  • காலம் / நேரம் உங்கள் கையில்… உங்களுக்கு நீண்ட காலம் முதலீடு செய்ய வாய்ப்பு இருப்பதால், நீங்கள் செய்யும் முதலீட்டு தவறுகளையும், பாதுகாப்பு தன்மையினையும் மாற்றுவதற்கு நேரமுண்டு.

 

  • இளமை கால கற்றல்… உங்களுக்கு ஒரு நிதி சார்ந்த அனுபவத்தை நீண்ட காலத்திற்கு கொடுக்கும்; உங்களுக்கான தரமான பிற்கால வாழ்க்கையை திட்டமிட உதவும்; தேவையறிந்து செலவு செய்யும் பழக்க வழக்கத்தை தரும்.

 

  • எட்டாம் அதிசயமான ‘கூட்டு வட்டி’ – Power of Compounding பலனை பெறலாம்;  உங்களுக்கு தேவையான இலக்கினில் வெற்றியும் பெறலாம்.

 

  • பரபரப்பான வாழ்க்கை நிலையிலிருந்து சற்று தள்ளி நிற்கலாம்; நிம்மதியான வாழ்க்கையை அனுபவிக்கலாம்; ஓய்வு காலமும் சுகமாகும்.

 

நீங்கள் தினமும் டீ, காபி அருந்தினாலும் சரி, புகைபிடிப்பவராக இருந்தாலும் சரி உங்கள் பழக்க வழக்கத்திலிருந்து தினசரி ஒரு சிறிய தொகையை இளமையிலே சேமிக்க / முதலீடை தொடங்குங்கள்; முதுமையில்  டீ / காபி / புகை உங்களோடு இல்லாவிட்டாலும் , உங்கள் இளமை கால சேமிப்பு நிச்சயம் உங்களுடைய நண்பனாக இருக்கும்.

 

இளமையில் கற்றவரும், செல்வம் சேர்த்தவருமே முதுமையிலும் இளமை காலத்தை அனுபவிக்கின்றனர் என்பதே நிதர்சன உண்மை; நீங்கள் 25 வயதில் தோற்றால் பரவாயில்லை, கற்று கொள்ளலாம், முயற்சிக்கலாம், முன்னேறலாம் !

 

60 வயதில்  ????

 

வெல்வதற்கான வாய்ப்புகள் குறைவு;  நம்மை பொருளாதாரத்தில் பலவீனப்படுத்தும் !

 

25 வயதில் முயற்சிக்கவில்லையா ? கடந்து விட்டீர்களா ?

 

கவலையை விடுங்கள்; உங்கள் வயதுக்கேற்ற முதலீட்டினை செய்யுங்கள்.

 

வாழ்த்துக்கள்; வாழ்க வளமுடன்

நான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் ? Financial Goal Planning

 

நான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் ?

Financial Goal Planning – நிதித்திட்டமிடல்

 

“A GOAL WITHOUT A PLAN IS JUST A DREAM”

 

“ நான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் ? “ – இந்த வாக்கியம் எனக்கானது மட்டுமல்ல…

 

உங்களுக்கானதும் தான் !

 

சிறுவயதிலிருந்தே நாம் இலக்குகளின் பழமொழிகளை வாசிப்பதும், சில சமயங்களில் ஞாபகப்படுத்தி கொள்வதும் நமக்கு பழக்கமாக மட்டுமே உள்ளது; பிறப்பிலிருந்து இறப்பு வரை நமக்கான இலக்குகள் பெரும்பாலும் மற்றவர்களாலே தோற்றுவிக்கப்படுகிறது; ஆனால் நாம் தோற்றுவிடுகிறோம் ! எதேச்சையாக சமயங்களில் நிறைவேற்றப்படுகின்றன 🙂

[ நான் வாசித்த, யாரோ ஒருவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த வரிகள்… நமது பிறப்பும், பெயரும், கல்வியும், வருமானமும், புகழும் மற்றும் இறுதி சடங்கும் மற்றவர்களாலே கொடுக்கப்படுகிறது என்று 🙂 ]

ஆனால் நிதி வாழ்க்கையில் நாம் தான் நமது இலக்குகளை நிர்ணயித்து வெற்றி பெற வேண்டும்; யாரும் நமக்காக வெல்வதற்கான வாய்ப்புமில்லை…

எனது உறவினருள் ஒருவர் தனது திருமண விழாவில், தன் நண்பர்களுக்கு விருந்து வைப்பதற்காக மட்டுமே வங்கியிலிருந்து ரூ. 3,00,000 /- தனி நபர் கடன் பெற்றுள்ளார்;  அந்த திருமண விருந்துக்கான கடன் அவரது குடும்ப வாழ்க்கையிலும் பொருளாதாரரீதியாக சுமார் 5 வருடங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன 😦

அதற்குள், அவருக்கு ஒரு குழந்தை செல்வமும் பிறந்தன 😦

குழந்தை செல்வமா (அ) செலவா என்பது வேறு விஷயம் 🙂

சில சமயங்களில் அவர் என்னை சந்திக்கும் போது, நண்பர்களுக்கு விருந்து வைத்து பட்டுக்கொண்டதையும், இன்று தன் எல்லா நண்பர்களும் நல்ல நிலையில் இருப்பதாகவும் குறைப்பட்டு கொள்வார்; இது நண்பர்களுடைய தவறு அல்ல…

அவருடைய தவறும் அல்ல… அவரிடம் நிதித்திட்டமிடல் சம்மந்தமான விழிப்புணர்வு இல்லாததே  !

உங்களுக்கான நிதித்திட்டமிடல் / இலக்குகளை இப்போதே எழுதுங்கள்; ஆராயுங்கள் மற்றும் செயல்படுத்துங்கள்.

SMART (Specific, Measurable, Attainable, Realistic and Timely) வும் உங்கள் இலக்குகளை சிந்தியுங்கள்.

 

உங்கள் இலக்குகளுக்கான உறுதிமொழி படிவம் / ஒப்பந்தம்:

Goal-Planner's-Oath2

 

 

 

நிதித்திட்டமிடல் குறிப்பு ( Financial Goal Planning Sheet ):

financial-goal-planning-table

 

SMART:

  • SPECIFIC
Your Goal(s)
  • MEASURABLE
Total Amount / Value
  • ATTAINABLE
Where to Invest / Investment Product
  • REALISTIC
Monthly SIP
  • TIMELY
Term (No. of Years)

மேலே உள்ள இரண்டு படத்தையும் உங்களுக்கானதாக மாற்றி கொள்ளுங்கள்; உங்கள் இலக்குகளை பிரிண்ட் செய்து கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

நீங்கள் ஏன் தொடுதிரை கைபேசியை பயன்படுத்த வேண்டும் ? FD vs Debt Fund

Fixed Deposit(FD) vs Debt Funds…

நீங்கள் ஏன் தொடுதிரை கைபேசியை பயன்படுத்த வேண்டும் ?

 

காலத்திற்கேற்றாற் போல் செயல்படு; காலத்திற்கேற்றாற் பயன் பெறு!

 

என் நண்பர் ஒருவர் அடிக்கடி என்னிடம் சொல்வார், “ அந்த காலத்தில் உள்ளவர்கள் போல இன்று யாருமில்லை;  OLD IS GOLD என்பார். அப்போதைக்கு இருந்தது போல, இன்று எதுவும் அப்படி இல்லையென்று…

உண்மை தான், சில சமயங்களில் அந்த கால வாழ்க்கை முறை, உறவுகளை பேணுதல், உணவு முறைகள்; இன்றும் நாம் அதை பின்பற்றலாம்; ஆனால் நாம், தொழில்நுட்ப விஷயங்களில் அவ்வாறு இருந்து விட முடியாது; அவ்வாறு பின்தங்கி விடுவதும் நல்லதல்ல.

ஒரு முறை நான் அந்த நண்பரிடம் பேசிக்கொண்டிருக்கையில், தொடுதிரை கைபேசியின் (Touch / Smartphone) வசதிகளையும், அதன் சாதகங்களையும் பற்றி விவாதிக்கும் போது ( 2006 ம் ஆண்டுவாக்கில் ),

அவரின் பதில், “ தொடுதிரை கைபேசியெல்லாம் விலை போகாதப்பா; பட்டன் போன் போன்ற வசதி வராதப்பா, தொடுதிரை போனும் அடிக்கடி இயங்காமல் போவதுண்டு” என்று சொன்னார். இத்தனைக்கும், அவர் அப்போது, அந்த கைபேசியை பார்த்தது கூட இல்லை 🙂

எனக்கும் தான் பட்டன் போனில் பயன்படுத்திய கால்குலேட்டரும், பாம்பு விளையாட்டும் (Calculator and Snake Game) மறக்க முடியாதவை !  

ஆனால் இன்றோ, தொடுதிரை தொழில்நுட்ப வளர்ச்சி (Gestures Technology) வேறு ஒரு பரிணாமத்தை எடுத்து கொண்டு செல்கிறது; நமது நேரமும்,வேலையும் சுலபமாக்கப்பட்டன.

(அந்த என் நண்பர் இன்று SAMSUNG J7  உடன் 🙂 )

பழசை நாம் மறக்க தேவையில்லை; அது நமது கடந்த கால பதிவு, ஆனால் நாம் இன்று தொழில்நுட்பத்திலும், பொருளாதாரத்திலும் வளர்ந்ததாக வேண்டும்;

 

பொருளாதாரத்திலும் கூட !

 

இந்த வளர்ச்சி மாற்றத்தினை தான் நான் அடிக்கடி என்னிடம் கேட்பதுண்டு; என் நண்பர்களையும் கேட்டதுண்டு…

நம் வருமானத்தில் நாம் சேமிக்க பழகும் போது, ஏன் நாம் இன்னும் பழைய விஷயங்களையே ஏற்று கொள்ள வேண்டும் ?

நம்பிக்கை கொள்ள வேண்டும் ?

நாம் ஏன் இன்னும் காலங்காலமாக, நமது வங்கி வைப்பு திட்டத்தின் (Bank Fixed Deposit)மீது அவ்வளவு நம்பிக்கை வைக்க வேண்டும் ? (நமது வருமானமும், வரிகளும் மற்றும் விலைவாசியும்  ஏறிக்கொண்டிருக்கும் போது )

அந்த நம்பிக்கைக்கு, பாதுகாப்பு தான் காரணம் என்றால், நாம் அந்த பாதுகாப்பை எத்தனை தடவை முயற்சி செய்து பார்த்திருப்போம்; பயன் பெற்றிருப்போம் ???

நாம் ஏன், Fixed Deposit தவிர, மற்ற வளர்ச்சியை முயற்சித்து பார்க்கக்கூடாது, பாதுகாப்புடன் !

நம் வருமானம் அதிகரிக்கும் போது, நமது Fixed Deposit பெரும்பாலும், நம்மை முதிர்வில் அதிகபடியான வரிகளையும் (அ) TDS என்று சொல்லப்படுகிற Tax Deducted at Source ஐ செலுத்தவே முற்படுகிறது. வரிக்கழிவிற்கு பின், நாம் பெறும் தொகையோ பணவீக்கத்தை கூட சரிகட்ட முடிவதில்லை; என்ன பண்ணலாம் ?

Fixed Deposit ஐ முயற்சித்து பார்க்காதவர்கள் ஒரு தடவை முயற்சி செய்து பார்க்கலாம்; ஏற்கனவே பார்த்தவர்கள் கணக்கு போட்டு பார்த்து கொள்ளலாம்; முடிவில் நாம் ஒரு மாற்றத்தை தேடலாம்  🙂

Fixed Deposit உங்களுக்கு பலனளிக்கவில்லை என்றால், நமக்கு ஒரு மாற்றம் வேண்டுமே….  தொடுதிரை கைபேசியை போல !

 

தொடுதிரை கைபேசி…  Debt  Funds:

 

Debt Fund எவ்வாறு செயல்படுகிறது ?

 

Debt Fund (கடன் நிதித்திட்டம்) என்பது ஒரு பரஸ்பர நிதி திட்டமாகும்; நாம் முதலீடு செய்யும் பணம் கடன் திட்டத்தின் வாயிலாக, அரசு மற்றும் நிறுவன கடன் பத்திரங்கள், பணச்சந்தை, அரசு கருவூலம், மற்றும் வணிக ஆவணங்கள் ஆகியவற்றில் பரவலாக முதலீடு செய்யப்படும்; இவை யாவும், நிலையான வருமானம் தரும் கருவிகளாகும்.

 

Risk and Return எப்படி ?

 

  • ரிஸ்க் என்று பார்க்கும் போது, கடன் நிதித்திட்டத்தில்  மிகவும் குறைவே; முதிர்வு வருமானம் வேண்டுமானால், சிறிது ஏற்ற – இறக்கத்துடன் இருக்கலாம்; முதலும் பாதுகாப்பாக இருக்கும்.
  • வங்கி FD ஐ விட, வட்டி விகிதம் சற்று அதிகமாகவே கிடைக்கும்.
  • பாதுகாப்பு என்று நாம் வங்கியை அணுகும் போது, வங்கியும் நமக்கு ரூ.1,00,000 /- தொகை  வரை மட்டுமே உறுதியளிக்கும்; ஏதேனும் காரணத்தால், நாம் பணம் வைத்திருக்கும் வங்கி மூடப்பட்டால் நமக்கு அதிகபட்சமாக ரூ.1,00,000 /- வரை (1,00,000 /- க்கு அதிகமாக இருந்தாலும்)  மட்டுமே கிடைக்கும். (More than 1 Lakh of deposit @bank(s) is not a safety)

வங்கியில் நாம் சேமிக்கும் / முதலீடு செய்யும் பணத்துக்கான பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் காப்பீடு பற்றி அறிய…

https://www.rbi.org.in/Scripts/FAQView.aspx?Id=64

[ Deposit Insurance and Credit Guarantee Corporation – DICGC ]

 

பணவீக்க சரிக்கட்டல் சலுகை (Indexation Benefit):

 

  • கடன் நிதித்திட்டத்தில் நாம் செய்யும் முதலீட்டின் முதிர்வில், நமக்கு பணவீக்க சரிக்கட்டலுக்கான சலுகையும் உண்டு.
  • அதாவது, நாம் வைத்திருக்கும் Fund units  ஐ விற்கும் போது,

3 வருடத்திற்குள்ளாக விற்றால் – நமது வருமான வரம்பிற்கான வரி (குறுகிய கால மூலதன  ஆதாயம் ) – (As Per Tax Slab – 10 / 20 / 30 %)

3 வருடத்திற்கு மேற்பட்டு விற்றால் – பணவீக்க சரிக்கட்டலுக்கு பிறகு, 20 % வரி (நீண்ட கால மூலதன ஆதாயம்)

 

  • மற்றொரு கூடுதல் விஷயம், கடன் நிதித்திட்டத்தில் அவசரத்திற்கு உங்களுக்கு ஒரு சிறு தொகை வேண்டுமென்றால் நீங்கள் சில Unit ஐ விற்று  எடுத்துக்கொள்ளலாம்; ஆனால் FD ல் அவ்வாறு செய்திட முடியாது; நீங்கள் உங்கள் வைப்பு திட்டத்தை முழுமையாக முடித்து, முழு பணத்தையும் எடுக்க வேண்டும்.

 

புரிந்துணர்வுக்கு, அட்டவணையை பார்க்கவும்.

 

பட்டன் கைபேசி (FD)  vs தொடுதிரை கைபேசி (Debt Funds):

 

fd-vs-debt

 

முடிவு செய்யுங்கள்,

உங்கள் கடந்த கால நம்பிக்கையா (FD) (அ) வளர்ச்சியா (Debt Funds)  !!!!

 

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்…

நீங்கள் ஹீரோவா, ஜீரோவா ? EMI VS SIP

நீங்கள் ஹீரோவா, ஜீரோவா ? EMI VS SIP

 

EMI – EQUATED MONTHLY INSTALLMENT

SIP – SYSTEMATIC INVESTMENT PLAN

 

 

உங்களுக்கு ஒரு ஆசை… ஒரு அழகான மற்றும் நல்ல சிறப்பம்சங்கள் கொண்ட செல்போன் (Mobile) வாங்க வேண்டுமென்று; சந்தையில் அதன் விலை ரூ. 15,000 /- மட்டுமே என வைத்து கொள்வோம். நல்ல Features உள்ள செல்போன் தான்; ஆனால் கையில் தான் பணம் சற்று குறைவாக உள்ளது. வங்கி கணக்கில் இருக்கும் இருப்போ மிகவும் குறைவு. Minimum Balance ஐ பராமரிப்பது கூட, சில சமயம் சிரமமாக உள்ளது; யாரிடமாவது கைமாத்து வாங்கலாமா ? அவர்களுக்கு திரும்ப கொடுக்க வேண்டுமென்றாலும், அடுத்த மாத சம்பளம் தானே இருக்கு ! என்ன பண்ணலாம் ???

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நினைத்து கொண்டிருந்த அந்த நேரத்தில், உங்களுக்காக ஒரு அதிர்ஷ்ட விளம்பரம் அழைக்கிறது; ஆம், அதிர்ஷ்ட விளம்பரமே தான் !!!  நீங்கள் வாங்க நினைக்கும் மொபைல் போனின் விளம்பரத்துடன்…

என்ன ஒரு ஆச்சர்யம் ! நீங்கள் வாங்க நினைக்கும் மொபைல் போனுக்கு, நீங்கள் எந்த முன்பணமும் செலுத்தாமல் வீட்டிற்கு எடுத்து செல்லலாம்; நீங்கள் பதிவு செய்த அன்றைய தினமே ரூ.15,000 /- மதிப்புள்ள பொருள் உங்களுக்கு சொந்தம் 🙂

ஆமாங்க, அந்த அதிர்ஷ்ட  EMI (EQUATED MONTHLY INSTALLMENT)  🙂

பிளான் இது தான்; செலக்ட் பண்ணுங்க என்று அந்த விளம்பரம் சொல்கிறது. முன்பணம் எதுவும் இல்லை !

 

EMI(Equated Monthly Installment):

 

நீங்கள் வாங்க நினைக்கும் ஒரு பொருளுக்கு, எந்த முன்பணமும் செலுத்தாமல் (அ) சிறு தொகை ஏதேனும் செலுத்தி விட்டு, மீதத்தொகையை மாத தவணைகளில் வட்டியுடன்  செலுத்த ஒப்பந்தம் மேற்கொள்வது.

Loan  EMI:  For Rs. 15,000 /-                     Rate of Interest:   12 %
6 Months 12 Months 24 Months
2588/- Monthly 1333/- Monthly 706/- Monthly

 

சாதகங்கள்:

  • நாம் விருப்பப்பட்ட பொருளை உடனடியாக, நாம் நினைத்த நேரத்தில் வாங்கலாம்; முழுத்தொகையையும் செலுத்தாமல் !
  • குறுகிய கால (அ) அவசர கால தேவைகளுக்கு ஏற்றது(Short term/Immediate Needs)

 

பாதகங்கள்:

  • பொருளின் அசல் சந்தை (Actual Price) மதிப்பை விட நீங்கள் அதிக விலை கொடுத்து வாங்குகிறீர்கள்; அதாவது நீங்கள் செலுத்தும் வட்டி % (Paying more than the Actual market price )
  • ஒரு பொருளை நீங்கள் உடனடியாக பெற்றாலும், அதற்கு நீங்கள் முழு உரிமை பெற முடியாது (உங்கள் தவணை காலம் முடியும் வரை)
  • செலவழிக்கும் பழக்கம் அதிகரிக்கும்; எதையும் உடனே வாங்க வேண்டுமென்ற எண்ணம் (Impulsive Buying) ஏற்படலாம்; நீங்கள் எதிர்காலத்தில் கடன்காரராக மாறலாம்.

 

SIP(Systematic Investment Plan / Recurring):

 

இலக்குகளுக்காக (அ) எதிர்கால தேவைகளுக்காக, ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் (Monthly, Quarterly, Yearly – Frequency) உங்கள் பணத்தினை முதலீடு செய்வது / சேமிப்பது; முதலீட்டின் முதிர்வில், உங்கள் இலக்குகளில் (அ) தேவைகளை நிறைவேற்றுவது.

 

SIP என்றாலே, பரஸ்பர நிதி திட்டம்(Mutual Funds) தான் என்று நாம் முடிவு செய்து விட கூடாது. நீங்கள் சேமிக்கும் அஞ்சலக சேமிப்பு(Postal Savings), வங்கி RD, PF ம் SIP ஆகும்.

 

உங்கள் இலக்கு, ரூ. 15,000 /- மொபைல் போன் என்றால்,

SIP Goal:     Rs. 15,000 /-  (Mobile Phone)    Expected Return:   10 %
6 Months 12 Months 24 Months
2430 /- Monthly 1200 /- Monthly 565 /- Monthly

 

சாதகங்கள்:

  • சேமித்து வாங்கும் பழக்கம் ஏற்படுவதினால், நீங்கள் அவ்வளவு சீக்கிரமாக எந்த பொருளையும், பணத்தையும் விரயம் செய்யமாட்டீர்கள்.
  • நீங்கள் வாங்க நினைக்கும் பொருளுக்கு, முழு தொகையை செலுத்தி சொந்தம் கொண்டாடலாம்.
  • வாங்க நினைக்கும் பொருளின் மதிப்பை விட,  உங்கள் முதலீடு கொஞ்சம் வட்டி வருமானம் அதிகமாகவும் கொடுத்திருக்கலாம்.
  • நீண்ட கால இலக்குகளுக்கு நல்லது (Education, Marriage, Retirement).

 

பாதகங்கள்:

  • அவசர தேவைகளுக்கு(Medical Emergency, Unusal Happenings)  நீங்கள் இலக்குகளை நிர்ணயிக்க முடியாது (அ) காத்திருக்க முடியாது; எனவே முன் கூட்டிய இலக்குகள்/ சேமிப்பு வேண்டும்.

 

 

Climax:  தீர்வு

 

உணர்ச்சிவயப்பட்டு செலவழிக்க வேண்டுமா (அ) இலக்குகளை அடைய சேமிக்க / முதலீடு செய்ய வேண்டுமா என நீங்கள் உங்கள் சூழ்நிலை அறிந்து செயல்படுங்கள்;

அவசரத்திற்கு தவணை உதவலாம்;

வருமுன் காப்பது நல்லதா ?

வந்தபின் வருந்துவதா ?       மூளையை யோசிக்க விடுங்கள் 🙂

 

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !

www.varthagamadurai.com

(Image Courtesy:  fpindia.in )