வரிகள் ஜாக்கிரதை : Taxes / Tax Planning
“ வரிகள் ” என்று சொன்னாலே நமக்கு திகிலூட்டும் விஷயமாகத்தான் நாம் பார்த்திருக்கிறோம்; ஏனென்றால் நமது பொருளாதார (வருமான) வாழ்க்கையோடு எப்போதும் தொடர்பு கொண்டிருப்பது இந்த ‘வரிகள்’ தான். நாம் நுகரும் ஒவ்வொரு பொருளிலும், பயன்படுத்தும் எந்த சேவையிலும் வரிகள் என்பது இன்று தவிர்க்க முடியாததாகி விட்டது; வரிகள் பற்றிய அறியாமை மற்றும் அலட்சியத்தாலேயே பெரும்பாலானோர் அவற்றை தவிர்ப்பதும், முடிவில் அபாரதத்திலும், ஊழலிலும் சென்றடைகிறது.
வரிகள் ஏன் : Why Taxes ?
TAX – A Fee or Charge against a Citizen’s Person, Property or Activity for the support of Government
- போர்க்காலங்களில் நிதி உதவி திரட்டுவதற்கு மற்றும் நிலங்களுக்கும் வரி விதிப்புகள் தோற்றுவிக்கப்பட்டன.
- அமெரிக்காவாலும், இங்கிலாந்தாலும் ஆரம்பகாலத்தில் வரிகள் ஏற்படுத்தப்பட்டாலும் இன்று உலகளவில் பெரும்பாலான நாடுகள் வரி விதிப்பு கொள்கையை ஏற்படுத்தியுள்ளன.
- இன்று வரி விதிப்பின் மூலமான வருமானத்தை கொண்டே ஏறக்குறைய எல்லா நாடுகளும் தங்களது நாட்டின் நிதி அறிக்கையை தயார் செய்கின்றன. வரி வருமானத்தை கொண்டே மக்களுக்கும் செலவிடுகின்றன.
வரிகள் எத்தனை : Types of Taxes ?
- நேரடி வரிகள் (Direct Taxes)
- மறைமுக வரிகள் (Indirect Taxes)
- வருமான வரி (Income Tax)
- சேவை வரி (Service Tax)
- சுங்க வரி (Customs Duty)
- கலால் வரி (Excise Duty)
- மதிப்பு கூட்டு வரி (Value Added Tax)
- விற்பனை வரி (Sales Tax)
- சொத்து வரி (Property Tax)
- செல்வ வரி (Wealth Tax)
- நிறுவன வரி (Corporate Tax)
இன்னும் பல….(Goods and Service Tax -GST) 🙂
வரிகளை அலட்சியப்படுத்துவதா (அ) திறமையாக கையாள்வதா ?
வரி விதிப்புகள் தனி நபர் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு என தனித்தனியாக வரிச்சட்டம் உண்டு.
வரிகளை அலட்சியப்படுத்தவது என்பதை விட, அவற்றை ஓரளவு கற்று கொள்வதன் மூலம் நாம் பயனடையலாம்; தவிர்க்கிறோம் என்று வரிகளை கட்டாமல் விடுவதோ (அ) வரி சலுகை பெறுகிறேன் என்று தவறாக முதலீட்டை மேற்கொள்வதோ, நிதி ஆரோகியமாகாது. வரிகளை சரியாக கையாண்டால் அது நமக்கு பல வழிகளில் பயன் தரும்; அதனால் தான்,
வரிகளும், பணவீக்கமும் அறியாமை ஏழைகள் ஏழைகளாகவும், கற்று தெரிந்த பணக்காரர்கள் பணக்காரர்களாகவும் வைத்திருக்கிறது.
நம்மில் சிலர் உண்மையிலே விவசாயம் செய்யாமல், விவசாய வருமானத்திற்கு வரியில்லை என்று கணக்கு காட்டி வருகிறார்கள்; இப்போது நிதி அமைச்சகமும், சில விவசாய வருமானத்திற்கு வரி விதிக்கலாமா என்று ஆலோசித்து வருகிறது 🙂
வரிகளால் நாம் படும் பாடு, திண்டாட்டம் தான் 🙂 எனவே, அவற்றை திறமையாக கையாள்வதே சிறந்தது !
எவ்வாறு திறமையாக கையாள்வது ? (How to avoid Taxes Legally)
- வரிகள் சம்மந்தமான புத்தகங்களை வாசிப்பதன் மூலம் (அ) ஒரு வரி ஆலோசகரை தேர்ந்தெடுப்பதன் மூலம் (Hire a Tax Professional)
- நீண்ட கால சேமிப்பு / முதலீடு மூலம், வரி விலக்கு பெறுவது (Long term Savings / Investment )
- திறமையான வணிக தேர்வு (Tax Efficient Business)
- மூலதன இழப்பை சமர்பிப்பதன் மூலம் (Capital Loss)
- செயலில்லாத வருமானம் மூலம் (Create Passive Income)
- குறைந்த வரி செலுத்துவதன் மூலம் வாங்கும் நிலம் (அ) சொத்து (Buying a Property / Asset in a Low Tax Region )
- சொத்துக்களை விற்று லாபத்தை மறுபடியும் சொத்துக்களாக மாற்றுவது (Reinvest on Profits)
- பிறருக்கு உதவி செய்வதன் மூலம் (Charity / Donation)
- வாடகை வருமானத்தில் தேய்மானம் மற்றும் பராமரிப்பு செலவுகளை கையாள்வதன் மூலம் (Depreciation and Maintenance Cost)
- தொழிலில் அதிகம் செலவு செய்வது; வேலையில் குறைந்த ஊதியம் மற்றும் குறைவாக செலவு செய்வதன் மூலம். (Spend more on Business, Earn and Spend less in a Job).
மேலே நான் சொன்ன ‘வரிகளை திறமையாக கையாள்வது’ (Tax Planning) என்பது அனைத்தும் அரசாங்க விதிமுறைகள் மற்றும் நிபந்தனைக்கு உட்பட்டதே. சிறந்த தகவல் மற்றும் உதவிகளுக்கு ஒரு வரி ஆலோசகர் (அ) தணிக்கையாளரை ஆலோசிப்பது நன்று.
வாழ்த்துக்கள் வரிகளுடன் 🙂
வாழ்க வளமுடன் !