Fixed Deposit(FD) vs Debt Funds…
நீங்கள் ஏன் தொடுதிரை கைபேசியை பயன்படுத்த வேண்டும் ?
காலத்திற்கேற்றாற் போல் செயல்படு; காலத்திற்கேற்றாற் பயன் பெறு!
என் நண்பர் ஒருவர் அடிக்கடி என்னிடம் சொல்வார், “ அந்த காலத்தில் உள்ளவர்கள் போல இன்று யாருமில்லை; OLD IS GOLD என்பார். அப்போதைக்கு இருந்தது போல, இன்று எதுவும் அப்படி இல்லையென்று…
உண்மை தான், சில சமயங்களில் அந்த கால வாழ்க்கை முறை, உறவுகளை பேணுதல், உணவு முறைகள்; இன்றும் நாம் அதை பின்பற்றலாம்; ஆனால் நாம், தொழில்நுட்ப விஷயங்களில் அவ்வாறு இருந்து விட முடியாது; அவ்வாறு பின்தங்கி விடுவதும் நல்லதல்ல.
ஒரு முறை நான் அந்த நண்பரிடம் பேசிக்கொண்டிருக்கையில், தொடுதிரை கைபேசியின் (Touch / Smartphone) வசதிகளையும், அதன் சாதகங்களையும் பற்றி விவாதிக்கும் போது ( 2006 ம் ஆண்டுவாக்கில் ),
அவரின் பதில், “ தொடுதிரை கைபேசியெல்லாம் விலை போகாதப்பா; பட்டன் போன் போன்ற வசதி வராதப்பா, தொடுதிரை போனும் அடிக்கடி இயங்காமல் போவதுண்டு” என்று சொன்னார். இத்தனைக்கும், அவர் அப்போது, அந்த கைபேசியை பார்த்தது கூட இல்லை 🙂
எனக்கும் தான் பட்டன் போனில் பயன்படுத்திய கால்குலேட்டரும், பாம்பு விளையாட்டும் (Calculator and Snake Game) மறக்க முடியாதவை !
ஆனால் இன்றோ, தொடுதிரை தொழில்நுட்ப வளர்ச்சி (Gestures Technology) வேறு ஒரு பரிணாமத்தை எடுத்து கொண்டு செல்கிறது; நமது நேரமும்,வேலையும் சுலபமாக்கப்பட்டன.
(அந்த என் நண்பர் இன்று SAMSUNG J7 உடன் 🙂 )
பழசை நாம் மறக்க தேவையில்லை; அது நமது கடந்த கால பதிவு, ஆனால் நாம் இன்று தொழில்நுட்பத்திலும், பொருளாதாரத்திலும் வளர்ந்ததாக வேண்டும்;
பொருளாதாரத்திலும் கூட !
இந்த வளர்ச்சி மாற்றத்தினை தான் நான் அடிக்கடி என்னிடம் கேட்பதுண்டு; என் நண்பர்களையும் கேட்டதுண்டு…
நம் வருமானத்தில் நாம் சேமிக்க பழகும் போது, ஏன் நாம் இன்னும் பழைய விஷயங்களையே ஏற்று கொள்ள வேண்டும் ?
நம்பிக்கை கொள்ள வேண்டும் ?
நாம் ஏன் இன்னும் காலங்காலமாக, நமது வங்கி வைப்பு திட்டத்தின் (Bank Fixed Deposit)மீது அவ்வளவு நம்பிக்கை வைக்க வேண்டும் ? (நமது வருமானமும், வரிகளும் மற்றும் விலைவாசியும் ஏறிக்கொண்டிருக்கும் போது )
அந்த நம்பிக்கைக்கு, பாதுகாப்பு தான் காரணம் என்றால், நாம் அந்த பாதுகாப்பை எத்தனை தடவை முயற்சி செய்து பார்த்திருப்போம்; பயன் பெற்றிருப்போம் ???
நாம் ஏன், Fixed Deposit தவிர, மற்ற வளர்ச்சியை முயற்சித்து பார்க்கக்கூடாது, பாதுகாப்புடன் !
நம் வருமானம் அதிகரிக்கும் போது, நமது Fixed Deposit பெரும்பாலும், நம்மை முதிர்வில் அதிகபடியான வரிகளையும் (அ) TDS என்று சொல்லப்படுகிற Tax Deducted at Source ஐ செலுத்தவே முற்படுகிறது. வரிக்கழிவிற்கு பின், நாம் பெறும் தொகையோ பணவீக்கத்தை கூட சரிகட்ட முடிவதில்லை; என்ன பண்ணலாம் ?
Fixed Deposit ஐ முயற்சித்து பார்க்காதவர்கள் ஒரு தடவை முயற்சி செய்து பார்க்கலாம்; ஏற்கனவே பார்த்தவர்கள் கணக்கு போட்டு பார்த்து கொள்ளலாம்; முடிவில் நாம் ஒரு மாற்றத்தை தேடலாம் 🙂
Fixed Deposit உங்களுக்கு பலனளிக்கவில்லை என்றால், நமக்கு ஒரு மாற்றம் வேண்டுமே…. தொடுதிரை கைபேசியை போல !
தொடுதிரை கைபேசி… Debt Funds:
Debt Fund எவ்வாறு செயல்படுகிறது ?
Debt Fund (கடன் நிதித்திட்டம்) என்பது ஒரு பரஸ்பர நிதி திட்டமாகும்; நாம் முதலீடு செய்யும் பணம் கடன் திட்டத்தின் வாயிலாக, அரசு மற்றும் நிறுவன கடன் பத்திரங்கள், பணச்சந்தை, அரசு கருவூலம், மற்றும் வணிக ஆவணங்கள் ஆகியவற்றில் பரவலாக முதலீடு செய்யப்படும்; இவை யாவும், நிலையான வருமானம் தரும் கருவிகளாகும்.
Risk and Return எப்படி ?
- ரிஸ்க் என்று பார்க்கும் போது, கடன் நிதித்திட்டத்தில் மிகவும் குறைவே; முதிர்வு வருமானம் வேண்டுமானால், சிறிது ஏற்ற – இறக்கத்துடன் இருக்கலாம்; முதலும் பாதுகாப்பாக இருக்கும்.
- வங்கி FD ஐ விட, வட்டி விகிதம் சற்று அதிகமாகவே கிடைக்கும்.
- பாதுகாப்பு என்று நாம் வங்கியை அணுகும் போது, வங்கியும் நமக்கு ரூ.1,00,000 /- தொகை வரை மட்டுமே உறுதியளிக்கும்; ஏதேனும் காரணத்தால், நாம் பணம் வைத்திருக்கும் வங்கி மூடப்பட்டால் நமக்கு அதிகபட்சமாக ரூ.1,00,000 /- வரை (1,00,000 /- க்கு அதிகமாக இருந்தாலும்) மட்டுமே கிடைக்கும். (More than 1 Lakh of deposit @bank(s) is not a safety)
வங்கியில் நாம் சேமிக்கும் / முதலீடு செய்யும் பணத்துக்கான பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் காப்பீடு பற்றி அறிய…
https://www.rbi.org.in/Scripts/FAQView.aspx?Id=64
[ Deposit Insurance and Credit Guarantee Corporation – DICGC ]
பணவீக்க சரிக்கட்டல் சலுகை (Indexation Benefit):
- கடன் நிதித்திட்டத்தில் நாம் செய்யும் முதலீட்டின் முதிர்வில், நமக்கு பணவீக்க சரிக்கட்டலுக்கான சலுகையும் உண்டு.
- அதாவது, நாம் வைத்திருக்கும் Fund units ஐ விற்கும் போது,
3 வருடத்திற்குள்ளாக விற்றால் – நமது வருமான வரம்பிற்கான வரி (குறுகிய கால மூலதன ஆதாயம் ) – (As Per Tax Slab – 10 / 20 / 30 %)
3 வருடத்திற்கு மேற்பட்டு விற்றால் – பணவீக்க சரிக்கட்டலுக்கு பிறகு, 20 % வரி (நீண்ட கால மூலதன ஆதாயம்)
- மற்றொரு கூடுதல் விஷயம், கடன் நிதித்திட்டத்தில் அவசரத்திற்கு உங்களுக்கு ஒரு சிறு தொகை வேண்டுமென்றால் நீங்கள் சில Unit ஐ விற்று எடுத்துக்கொள்ளலாம்; ஆனால் FD ல் அவ்வாறு செய்திட முடியாது; நீங்கள் உங்கள் வைப்பு திட்டத்தை முழுமையாக முடித்து, முழு பணத்தையும் எடுக்க வேண்டும்.
புரிந்துணர்வுக்கு, அட்டவணையை பார்க்கவும்.
பட்டன் கைபேசி (FD) vs தொடுதிரை கைபேசி (Debt Funds):
முடிவு செய்யுங்கள்,
உங்கள் கடந்த கால நம்பிக்கையா (FD) (அ) வளர்ச்சியா (Debt Funds) !!!!
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்…