ஒரு கோடி, ஓகோன்னு வாழ்க்கை !
How long will your money last ?
‘ உங்களிடம் ஒரு கோடி ரூபாய் இருந்தால் நீங்கள் அதை கொண்டு என்ன செய்வீர்கள் ’ என்று உங்களிடம் யாராவது கேட்டால் ?
- முழுவதையும் செலவழித்து வாழ்க்கையை சந்தோசமாக அனுபவிப்பேன்.
- தொழில் செய்வேன் / எனது குறிக்கோள்களை நிறைவேற்றுவேன்.
- பிறருக்கு உதவுவேன்.
- சொத்துக்களை வாங்குவேன்.
- நான் இன்னும் அதை பற்றி யோசிக்கவில்லை ???
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இவ்வாறாக நமது பதில்கள் அமையும்; அருணாச்சலம் (Rajnikanth’s Arunchalam Movie) படத்தை போலவும் நமக்கு யோசிக்க தோணுமே 🙂
அருணாச்சலம் படத்தில் சொல்வதை போல, 30 கோடி ரூபாயை 30 நாட்களில் எப்படி செலவு செய்வீர்கள் என்று நான் கேட்க வரவில்லை; ஆனால் இந்த ஒரு கோடி ரூபாய் நம்மை எத்தனை நாட்கள் (அ) மாதங்கள் வாழ வைக்கும் என்பதை தான் நான் சொல்ல வருகிறேன்; அது தான் இந்த கட்டுரையின் தலைப்பும் !
How Long will your Money Last ?
உங்களிடம் இப்போது ஒரு கோடி ரூபாய் உள்ளது என வைத்து கொள்ளுங்கள்; நீங்கள் எந்த வேலையும் / தொழிலும் செய்யவில்லை; இந்த ஒரு கோடி ரூபாயை கொண்டு நீங்கள் எத்தனை நாட்கள் (அ) மாதங்கள் உங்களது வாழ்க்கையை / குடும்பத்தை நிதி சார்ந்து பாதுகாக்க முடியும் ?
உங்களது செலவுகளை, தேவைகளை அறியுங்கள்:
(Know your Needs and Expenses)
- உங்களுக்கு தேவைப்படும் இன்றைய மாத செலவுகள்: ரூ. XXXXX /-
- எதிர்பார்க்கும் பணவீக்கம் / விலைவாசி: XYZ % (வருட கணக்கில்)
அட்டவணையை கவனியுங்கள்:
(See the Below table)
நீங்கள் ஒரு கோடி ரூபாயை எதிலும் முதலீடு செய்யாமல், அப்படியே உங்கள் மாதாந்திர செலவுக்கு பயன்படுத்தினால்,
மாதாந்திர தேவைப்படும் தொகை: ரூ. 50,000 /-
வருட பணவீக்கம் / தேவைப்படும் கூடுதல் வீதம்: 6 %
வருமான வரி விகிதம் : 30 % அளவில்
உங்கள் ஒரு கோடி ரூபாய் 8 % வட்டி தரும் முதலீட்டில் இருந்தால்,
(மாதாந்திர கூட்டு வட்டியில் – Monthly Compounded)
ஏன்… எதற்கு ?
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
- நீங்கள் தற்போது பார்க்கும் வேலையையோ / தொழிலையோ மாற்றி கொள்ள நினைக்கும் போது, உங்களது தற்போதைய மற்றும் எதிர்கால பொருளாதார வாழ்க்கை எந்த வகையிலும் பாதிப்படையாமல் இருக்க உதவும்.
- இள வயதில் ஓய்வு பெற விரும்புவோருக்கு உதவும்(Early Retirement).
- அவசர கால நிதியை(Creating Emergency Fund) சேமிப்பதற்கான அளவினை சொல்லும்.
இதனை போன்றே உங்களுக்கு எவ்வளவு தொகை வேண்டும் (அ) உங்களிடம் தற்போது எவ்வளவு தொகை உள்ளது என்பதை அறிந்து, நீங்களும் உங்கள் பணம் / சொத்து எவ்வளவு நாட்களுக்கு உங்களை பாதுகாக்கும் என கணக்கிட்டு கொள்ளலாம்.
ஒரு கோடி வாழ்த்துக்கள் 🙂
வாழ்க வளமுடன் !