Tag Archives: dicgc

உங்கள் வங்கி திவாலானால், உங்களுக்கு கிடைக்கக்கூடிய தொகை ?

உங்கள் வங்கி திவாலானால், உங்களுக்கு கிடைக்கக்கூடிய தொகை ?

How much amount you can get, if your Bank goes Bankrupt or Default ?

வங்கிகளின் நிதி நிலைமை மோசமடைந்து வருவதும், அதனை சரி செய்ய பொதுத்துறை வங்கிகள் இணைப்பு மூலம் எண்ணிக்கை குறைந்து வருவதும் சமீபத்திய செய்திகளாக உள்ளன. கடந்த வாரம் பி.எம்.சி. வங்கி(PMC Bank) சார்ந்த செய்திகள் அதன் வாடிக்கையாளர்களை கலக்கமடைய செய்தது.

நம் நாட்டில் உள்ள தனியார் வங்கிகளின் மேல் நமக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். அதே வேளையில் பொதுத்துறை வங்கிகள் மீது நமது நம்பிக்கை தளர்வதில்லை. இதற்கு காரணமாக சொல்லப்படுவது, அது போன்ற திவால் நிலையை நாம் கடந்த பல வருடங்களாக கண்டதில்லை. இருப்பினும், நாம் கணக்கு வைத்திருக்கும் ஒரு வங்கி திவால் நிலைக்கு சென்றால், நம்முடைய பணம் அல்லது சேமிப்பு நமக்கு முழுவதும் கிடைக்குமா என்பதே கேள்வி.

 //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பாரத ரிசர்வ் வங்கி(RBI) அறிவுறுத்தலின் படி, நாட்டில் உள்ள ஒவ்வொரு வங்கியும் அதன் வாடிக்கையாளர்கள் சார்பில், வைப்பு காப்பீடு மற்றும் கடன் உத்தரவாத நிறுவனத்தில்(DICGC) காப்பீடு செய்ய வேண்டியது அவசியம். டி.ஐ.சி.ஜி.சி.(Deposit Insurance & Credit Guarantee Corporation) காப்பீட்டின் மூலம் வாடிக்கையாளர்களின் வங்கி சேமிப்பு மற்றும் நடப்பு கணக்கு, வைப்பு மற்றும் தொடர் சேமிப்பு கணக்கு ஆகியவை அடங்கும்.

இவற்றில் வெளிநாட்டு அரசாங்கங்களின் வைப்பு தொகை, மத்திய மற்றும் மாநில அரசுகளின் வைப்பு நிதி, நில மேம்பாட்டு வங்கிகள், வெளிநாட்டிலிருந்து பெறப்பட்ட வைப்பு தொகை மற்றும் பாரத ரிசர்வ் வங்கியின் ஒப்புதலுடன் நிறுவனத்தால் விலக்கு அளிக்கப்பட்ட தொகை ஆகியவை காப்பீட்டு தொகைக்கு எடுத்து கொள்ளப்படும்.

ஒரு வங்கியில் உள்ள ஒவ்வொரு வாடிக்கையாளரின் கணக்கிற்கும்  அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வரை வங்கிகளால் காப்பீடு செய்யப்படும். இவற்றில் ஒருவருடைய அசல் தொகை மற்றும் வட்டி பணம் அனைத்தும் சேர்த்து தான் ரூ. 1 லட்சம் வரம்பு தொகை நிர்ணயிக்கப்படும்.

உதாரணமாக உங்களுடைய வங்கி கணக்கில் அசல் தொகை 95,000 ரூபாயும், அதற்கான வட்டி தொகை ரூ. 8000 என இருக்கும் நிலையில், வங்கி திவால் நிலைக்கு சென்றால், காப்பீடு உரிமையின் படி உங்களுக்கு கிடைக்கக்கூடிய தொகை ரூ. 1 லட்சம் மட்டுமே. அவ்வாறான சமயங்களில் நீங்கள் உங்கள் முழுத்தொகையை வட்டியுடன் கோர முடியாது.

உங்களுக்கு ஒரு வங்கியில் சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு(Current Account), வைப்பு நிதி கணக்கு(Fixed Deposit) மற்றும் தொடர் சேமிப்பு(RD) கணக்கு ஆகியவை இருந்தாலும், அனைத்து கணக்குகளின் கூட்டுத்தொகை ரூ. 1 லட்சத்தை தாண்டினால், உங்களுக்கு காப்பீடு செய்யப்பட்ட தொகை என்னவோ, ஒரு லட்ச ரூபாய் தான். வங்கி திவால் நிலைக்கு சென்றால் அல்லது மூடப்பட்டால், நீங்கள் உங்களது முழுத்தொகையையும் பெற முடியாது. இது தான் வங்கிகளின் சட்டம்.

வங்கிக்கணக்குக்கான காப்பீட்டு தொகை, நீங்கள் வங்கியின் பல கிளைகளில் கணக்கு வைத்திருந்தாலும், அனைத்து கிளை கணக்குகளையும் சேர்த்து, ரூ. 1 லட்சம் என்ற காப்பீடு தொகை மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ளப்படும். அதே வேளையில், வெவ்வேறு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் நிலையில், ஒவ்வொரு வங்கிக்கும் ரூ. 1 லட்சம் காப்பீடு தொகை பதிவு செய்யப்படும்.

ஆக, நீங்கள் ஒரே வங்கியின் கீழ் பல கிளைகளில் டெபாசிட் செய்திருந்தால், காப்பீடு தொகை அதிகபட்சம் ரூ. 1 லட்சம் மட்டுமே. பல வங்கிகளில் கணக்கு தொடங்கி டெபாசிட் செய்திருக்கும் பட்சத்தில், ஒவ்வொரு வங்கிக்கும் ரூ. 1 லட்சம் காப்பீடு தொகை கோரப்படும்.

நீங்கள் வங்கிக்கு செலுத்த வேண்டிய தொகை ஏதுமிருந்தாலும், வங்கி திவால் நிலைக்கு செல்லும் போது அவை காப்பீட்டு தொகையில் கழித்து கொள்ளப்படும். வங்கி வாடிக்கையாளர்களுக்கான காப்பீடு தொகையை அந்தந்த வங்கியே செலுத்த வேண்டும். பொதுவாக அனைத்து வங்கிகளும் காப்பீட்டு வரம்புக்குள் இருந்தாலும், சில தனியார் கூட்டுறவு வங்கிகள் காப்பீடு செய்வதில்லை என்பது கவனிக்கத்தக்கது.

ரூ.1 லட்சம் காப்பீடு என்பது கடந்த 1993ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டமாகும். அதற்கு முன்பு காப்பீடு தொகை ரூ. 30,000 /- ஆக இருந்தது. வங்கி வாடிக்கையாளர்களுக்கான காப்பீட்டு தொகை வரம்பில் கடந்த 26 வருடங்களாக எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை. இது மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, நமது வங்கிகளின் காப்பீடு தொகை மிகக்குறைவே.

இருப்பினும், நமது பொதுத்துறை வங்கிகளின் மீதான நம்பிக்கையும், அதனை சார்ந்த சேமிப்பும் தான் அவற்றை பாதுகாக்கிறது. இன்று டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் என சொல்லப்பட்டாலும், இணையவழி திருட்டு நடைபெற தான் செய்கிறது. இதனை வங்கிகள் முழுமையாக தடுத்து வாடிக்கையாளர்களின் சேமிப்புக்கு பாதுகாப்பு தருகிறதா என்பது சந்தேகமே.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Advertisement

நீங்கள் ஏன் தொடுதிரை கைபேசியை பயன்படுத்த வேண்டும் ? FD vs Debt Fund

Fixed Deposit(FD) vs Debt Funds…

நீங்கள் ஏன் தொடுதிரை கைபேசியை பயன்படுத்த வேண்டும் ?

 

காலத்திற்கேற்றாற் போல் செயல்படு; காலத்திற்கேற்றாற் பயன் பெறு!

 

என் நண்பர் ஒருவர் அடிக்கடி என்னிடம் சொல்வார், “ அந்த காலத்தில் உள்ளவர்கள் போல இன்று யாருமில்லை;  OLD IS GOLD என்பார். அப்போதைக்கு இருந்தது போல, இன்று எதுவும் அப்படி இல்லையென்று…

உண்மை தான், சில சமயங்களில் அந்த கால வாழ்க்கை முறை, உறவுகளை பேணுதல், உணவு முறைகள்; இன்றும் நாம் அதை பின்பற்றலாம்; ஆனால் நாம், தொழில்நுட்ப விஷயங்களில் அவ்வாறு இருந்து விட முடியாது; அவ்வாறு பின்தங்கி விடுவதும் நல்லதல்ல.

ஒரு முறை நான் அந்த நண்பரிடம் பேசிக்கொண்டிருக்கையில், தொடுதிரை கைபேசியின் (Touch / Smartphone) வசதிகளையும், அதன் சாதகங்களையும் பற்றி விவாதிக்கும் போது ( 2006 ம் ஆண்டுவாக்கில் ),

அவரின் பதில், “ தொடுதிரை கைபேசியெல்லாம் விலை போகாதப்பா; பட்டன் போன் போன்ற வசதி வராதப்பா, தொடுதிரை போனும் அடிக்கடி இயங்காமல் போவதுண்டு” என்று சொன்னார். இத்தனைக்கும், அவர் அப்போது, அந்த கைபேசியை பார்த்தது கூட இல்லை 🙂

எனக்கும் தான் பட்டன் போனில் பயன்படுத்திய கால்குலேட்டரும், பாம்பு விளையாட்டும் (Calculator and Snake Game) மறக்க முடியாதவை !  

ஆனால் இன்றோ, தொடுதிரை தொழில்நுட்ப வளர்ச்சி (Gestures Technology) வேறு ஒரு பரிணாமத்தை எடுத்து கொண்டு செல்கிறது; நமது நேரமும்,வேலையும் சுலபமாக்கப்பட்டன.

(அந்த என் நண்பர் இன்று SAMSUNG J7  உடன் 🙂 )

பழசை நாம் மறக்க தேவையில்லை; அது நமது கடந்த கால பதிவு, ஆனால் நாம் இன்று தொழில்நுட்பத்திலும், பொருளாதாரத்திலும் வளர்ந்ததாக வேண்டும்;

 

பொருளாதாரத்திலும் கூட !

 

இந்த வளர்ச்சி மாற்றத்தினை தான் நான் அடிக்கடி என்னிடம் கேட்பதுண்டு; என் நண்பர்களையும் கேட்டதுண்டு…

நம் வருமானத்தில் நாம் சேமிக்க பழகும் போது, ஏன் நாம் இன்னும் பழைய விஷயங்களையே ஏற்று கொள்ள வேண்டும் ?

நம்பிக்கை கொள்ள வேண்டும் ?

நாம் ஏன் இன்னும் காலங்காலமாக, நமது வங்கி வைப்பு திட்டத்தின் (Bank Fixed Deposit)மீது அவ்வளவு நம்பிக்கை வைக்க வேண்டும் ? (நமது வருமானமும், வரிகளும் மற்றும் விலைவாசியும்  ஏறிக்கொண்டிருக்கும் போது )

அந்த நம்பிக்கைக்கு, பாதுகாப்பு தான் காரணம் என்றால், நாம் அந்த பாதுகாப்பை எத்தனை தடவை முயற்சி செய்து பார்த்திருப்போம்; பயன் பெற்றிருப்போம் ???

நாம் ஏன், Fixed Deposit தவிர, மற்ற வளர்ச்சியை முயற்சித்து பார்க்கக்கூடாது, பாதுகாப்புடன் !

நம் வருமானம் அதிகரிக்கும் போது, நமது Fixed Deposit பெரும்பாலும், நம்மை முதிர்வில் அதிகபடியான வரிகளையும் (அ) TDS என்று சொல்லப்படுகிற Tax Deducted at Source ஐ செலுத்தவே முற்படுகிறது. வரிக்கழிவிற்கு பின், நாம் பெறும் தொகையோ பணவீக்கத்தை கூட சரிகட்ட முடிவதில்லை; என்ன பண்ணலாம் ?

Fixed Deposit ஐ முயற்சித்து பார்க்காதவர்கள் ஒரு தடவை முயற்சி செய்து பார்க்கலாம்; ஏற்கனவே பார்த்தவர்கள் கணக்கு போட்டு பார்த்து கொள்ளலாம்; முடிவில் நாம் ஒரு மாற்றத்தை தேடலாம்  🙂

Fixed Deposit உங்களுக்கு பலனளிக்கவில்லை என்றால், நமக்கு ஒரு மாற்றம் வேண்டுமே….  தொடுதிரை கைபேசியை போல !

 

தொடுதிரை கைபேசி…  Debt  Funds:

 

Debt Fund எவ்வாறு செயல்படுகிறது ?

 

Debt Fund (கடன் நிதித்திட்டம்) என்பது ஒரு பரஸ்பர நிதி திட்டமாகும்; நாம் முதலீடு செய்யும் பணம் கடன் திட்டத்தின் வாயிலாக, அரசு மற்றும் நிறுவன கடன் பத்திரங்கள், பணச்சந்தை, அரசு கருவூலம், மற்றும் வணிக ஆவணங்கள் ஆகியவற்றில் பரவலாக முதலீடு செய்யப்படும்; இவை யாவும், நிலையான வருமானம் தரும் கருவிகளாகும்.

 

Risk and Return எப்படி ?

 

  • ரிஸ்க் என்று பார்க்கும் போது, கடன் நிதித்திட்டத்தில்  மிகவும் குறைவே; முதிர்வு வருமானம் வேண்டுமானால், சிறிது ஏற்ற – இறக்கத்துடன் இருக்கலாம்; முதலும் பாதுகாப்பாக இருக்கும்.
  • வங்கி FD ஐ விட, வட்டி விகிதம் சற்று அதிகமாகவே கிடைக்கும்.
  • பாதுகாப்பு என்று நாம் வங்கியை அணுகும் போது, வங்கியும் நமக்கு ரூ.1,00,000 /- தொகை  வரை மட்டுமே உறுதியளிக்கும்; ஏதேனும் காரணத்தால், நாம் பணம் வைத்திருக்கும் வங்கி மூடப்பட்டால் நமக்கு அதிகபட்சமாக ரூ.1,00,000 /- வரை (1,00,000 /- க்கு அதிகமாக இருந்தாலும்)  மட்டுமே கிடைக்கும். (More than 1 Lakh of deposit @bank(s) is not a safety)

வங்கியில் நாம் சேமிக்கும் / முதலீடு செய்யும் பணத்துக்கான பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் காப்பீடு பற்றி அறிய…

https://www.rbi.org.in/Scripts/FAQView.aspx?Id=64

[ Deposit Insurance and Credit Guarantee Corporation – DICGC ]

 

பணவீக்க சரிக்கட்டல் சலுகை (Indexation Benefit):

 

  • கடன் நிதித்திட்டத்தில் நாம் செய்யும் முதலீட்டின் முதிர்வில், நமக்கு பணவீக்க சரிக்கட்டலுக்கான சலுகையும் உண்டு.
  • அதாவது, நாம் வைத்திருக்கும் Fund units  ஐ விற்கும் போது,

3 வருடத்திற்குள்ளாக விற்றால் – நமது வருமான வரம்பிற்கான வரி (குறுகிய கால மூலதன  ஆதாயம் ) – (As Per Tax Slab – 10 / 20 / 30 %)

3 வருடத்திற்கு மேற்பட்டு விற்றால் – பணவீக்க சரிக்கட்டலுக்கு பிறகு, 20 % வரி (நீண்ட கால மூலதன ஆதாயம்)

 

  • மற்றொரு கூடுதல் விஷயம், கடன் நிதித்திட்டத்தில் அவசரத்திற்கு உங்களுக்கு ஒரு சிறு தொகை வேண்டுமென்றால் நீங்கள் சில Unit ஐ விற்று  எடுத்துக்கொள்ளலாம்; ஆனால் FD ல் அவ்வாறு செய்திட முடியாது; நீங்கள் உங்கள் வைப்பு திட்டத்தை முழுமையாக முடித்து, முழு பணத்தையும் எடுக்க வேண்டும்.

 

புரிந்துணர்வுக்கு, அட்டவணையை பார்க்கவும்.

 

பட்டன் கைபேசி (FD)  vs தொடுதிரை கைபேசி (Debt Funds):

 

fd-vs-debt

 

முடிவு செய்யுங்கள்,

உங்கள் கடந்த கால நம்பிக்கையா (FD) (அ) வளர்ச்சியா (Debt Funds)  !!!!

 

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்…