Tag Archives: Warren Buffet

நான் வெளியேறுவதற்கான நேரம் வந்து விட்டது – முதலீட்டு ஜாம்பவான் வாரன் பப்பெட்

நான் வெளியேறுவதற்கான நேரம் வந்து விட்டது – முதலீட்டு ஜாம்பவான் வாரன் பப்பெட் 

Berkshire is 100 Percent prepared for our Departure – Warren Buffett

உலகின் மிகப்பெரிய முதலீட்டு ஜாம்பவான் என்றால் அது திரு. வாரன் பப்பெட் என்று சொல்வதில் மிகையல்ல. உலகின் நான்காவது கோடீஸ்வரர் ஒருவர் தனது மொத்த சொத்தில் 99 சதவீத தொகையை தானமாக கொடுத்துள்ளார் என்றால் அது வாரன் பப்பெட் அவர்களை தான் சாரும். 90 வயதாகும் வாரன் பப்பெட்டின் தற்போதைய சொத்து மதிப்பு 89.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 6.35 லட்சம் கோடி) !

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பள்ளிக்காலத்தில் துவங்கிய இவரது முதலீட்டு திறன் இன்று வரை பல முதலீட்டாளர்களுக்கு கற்றலை தந்து கொண்டிருக்கிறது. ஒரு முறை வாரன் பப்பெட், ‘ நான் என் வாழ்வில் 11 வருடங்களை வீணடித்து விட்டேன். எனது 11வது வயதில் தான் நான் பங்குச்சந்தைக்கு சென்று பங்குகளை வாங்க நேரிட்டது ‘ என வேடிக்கையாக சொன்னார். மதிப்புமிக்க முதலீட்டின் தந்தை(Father of Value Investing – The Intelligent Investor) என அழைக்கப்படும் திரு. பெஞ்சமின் கிரகாம் அவர்கள் தான் வாரனின் ஆசிரியர்.

‘ பங்கு முதலீட்டை ஒரு தொழிலாக பாருங்கள். சந்தையின் ஏற்ற-இறக்கத்தை கண்டு கொள்ளாமல், அதனை உங்களது வாய்ப்பாக மாற்றுங்கள். தொழிலின் தன்மையை அறிந்து பங்குகளை அதன் உண்மையான விலையில் வாங்குங்கள். இது தான் எனது ஆசிரியர் கற்று கொடுத்தது ‘ என வாரன் கூறியுள்ளார். கடந்த 55 வருடங்களில் அமெரிக்காவின் பங்குச்சந்தையில் எஸ் & பி 500 குறியீடு 10 சதவீத வருமானத்தை (ஆண்டு கூட்டு வட்டி) தந்துள்ளது. அதே வேளையில், வாரன் பப்பெட்டின் பெர்க்சயர் ஹாத்வே நிறுவனம் 20.30 சதவீத வருவாயை அளித்துள்ளது.

மொத்த லாப அடிப்படையில் கடந்த 55 வருடங்களில் எஸ் & பி500 குறியீடு 19,784 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது. ஆனால், பெர்க்சயர் நிறுவனமோ 27,44,062 சதவீத வருவாயை ஈட்டியுள்ளது. 1839ம் ஆண்டு துவங்கப்பட்ட வேலி பால்ஸ்(Valley Falls) நிறுவனம் தான் பின்னாளில் பெர்க்சயர் ஹாத்வே(Berkshire Hathaway) நிறுவனமாக மாறியது. வாரன் பப்பெட்டும் அந்த நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரானார். பெர்க்சயர் ஹாத்வே ஒரு அமெரிக்க பன்னாட்டு குழும நிறுவனமாகும். இந்நிறுவனம் உலகின் மிக முக்கியமான நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது.

இந்த நிறுவனத்தில் வாரன் பப்பெட் அவர்களுக்கு 30 சதவீத வாக்களிக்கும் உரிமை உள்ளது கவனிக்கத்தக்கது. இவரது தொழில் கூட்டாளியான சார்லி முங்கரும்(Charlie Munger) முதலீட்டு திறனில் சகலகலா வித்தைகளை அறிந்தவர். திரு. சார்லி முங்கர் அவர்களின் வயது தற்போது 96. பெர்க்சயர் நிறுவனத்தின் 2018-19ம் ஆண்டின் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையில் வாரன் குறிப்பிட்டதாவது, ‘ நானும், முங்கரும் வெகு காலத்திற்கு முன்பே வயது சார்ந்த அவசர நிலைக்கு வந்து விட்டோம். இது எங்களுக்கு ஒரு நல்ல செய்தியாக இருக்காது. அதே வேளையில், பெர்க்சயர் பங்குதாரர்கள் அதனை பற்றி கவலைப்பட தேவையில்லை. நாங்கள் புறப்படுவதற்கு உங்கள் நிறுவனம் நூறு சதவீதம் தயாராக உள்ளது.’ என்றார்.

அடுத்த தலைமை யார் என்பதை பற்றி குறிப்பிடப்படவில்லை. வாரனின் பெர்க்சயர் நிறுவனர் தனது முதலீட்டாளர்களுக்கு சில காலத்தில் நல்ல வருவாயை கொடுக்காமல் இருந்தாலும், நீண்ட காலத்தில் அந்த நிறுவனம் பல முதலீட்டாளர்களை கோடீஸ்வரர்களாக மாற்றியுள்ளது. இந்த நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்திற்கு(Annual General Meeting) செல்ல இந்தியாவிலிருந்து பலர் கனவாக கொண்டு சென்று வருகின்றனர்.

கடந்தாண்டு நடைபெற்ற கூட்டத்தில் வாரன் மற்றும் சார்லி இருவரும், முதலீட்டாளர்களின் கேள்விகளுக்கு சுமார் ஆறு மணிநேரம் பதிலளித்துள்ளனர். பங்குகளை வாங்கியிருக்கும் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்திற்கு சென்று வருவது அவசியமாகும் – ஏன் ?

“ நீங்கள் தூங்கும் போதும் பணம் சம்பாதிப்பதற்கான ஒரு வழியை கண்டுபிடிக்கவில்லை எனில், நீங்கள் இறக்கும் வரை வேலை செய்தாக வேண்டும் ‘ – வாரன் பப்பெட்

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

Advertisement

யெஸ் வங்கியில் முதலீடு செய்த ஆர்.ஜே

யெஸ் வங்கியில் முதலீடு செய்த ஆர்.ஜே 

India’s Warren Buffet bought 1.29 Crore of Yes Bank Shares

இந்தியாவின் வாரன் பப்பெட் என்றழைக்கப்படும் திரு. ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இந்திய சந்தையில் மிகவும் பிரபலமானவர். ஆப்டெக்(Aptech) கணினி மையத்தின் நிறுவனராகவும், பல பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் இயக்குனர் குழுவிலும் பங்கு வகிப்பவர் ஜுன்ஜுன்வாலா(Rakesh Jhunjhunwala).

கடந்த 2018ம் ஆண்டு போர்ப்ஸ் பத்திரிகை புள்ளிவிவரங்களின் படி, நாட்டின் 54வது பணக்காரராக ராகேஷ் ஜுன்ஜுன்வாலா உள்ளார். பங்குச்சந்தையில் இவருடைய முதலீட்டின் மதிப்பு சுமார் 18,000 கோடி ரூபாய். தனது ஆப்டெக் நிறுவனத்தில் 24 சதவீத பங்குகளை வைத்துள்ள ஜுன்ஜுன்வாலா பெரிய நிறுவனங்களிலும் முதலீட்டை பரவலாக்கி உள்ளார்.

டைட்டன்(Titan), லூபின்(Lupin), ஸ்பைஸ் ஜெட், ராலிஸ் இந்தியா, பெடரல் வங்கி, கரூர் வைசியா, டெல்டா கார்ப்(Delta Corp) என இருபதுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். அமெரிக்க முதலீட்டாளர் மற்றும் பணக்காரர் திரு. வாரன் பப்பெட்டை போன்று ஜுன்ஜுன்வாலா முதலீட்டு உத்திகளை பயன்படுத்தி செல்வம் சேர்த்துள்ளார் என்றும், அதனால் இவர் இந்தியாவின் வாரன் பப்பெட் எனவும் சொல்லப்படுகிறார்.

வங்கி செயல்பாடுகளுக்கு தேவையான முதலீட்டை எதிர்பார்த்து காத்திருக்கும் யெஸ் வங்கி கடந்த வாரம் 8500 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தத்தை பெற்றிருந்தது. இந்நிலையில் நேற்று (04-11-2019) யெஸ் வங்கியின் பங்குகளை ராகேஷ் ஜுன்ஜுன்வாலா வாங்கியுள்ளார். நேற்றைய சந்தை வர்த்தகத்தில் சுமார் 87 கோடி ரூபாய் மதிப்பிலான 1.29 கோடி யெஸ் வங்கி(YES Bank) பங்குகளை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அவர் பங்குச்சந்தையில் வாங்கிய விலை பங்கு ஒன்றுக்கு ரூ. 67.10 எனவும், யெஸ் வங்கியின் மொத்த சந்தை மதிப்பில், ஜுன்ஜுன்வாலா வாங்கிய பங்குகளின் பங்களிப்பு 0.5 சதவீதம் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

பொதுவாக பங்குச்சந்தையிலும், மற்ற செயல்பாடுகளிலும் வெற்றி பெற்றவர்களை நகல் எடுப்பது இயல்பு தான். இருப்பினும் முதலீடு சார்ந்த உத்தியில் இது பெரும்பாலும் வெற்றியடையாது.

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இந்தந்த பங்குகளில் முதலீடு செய்துள்ளார். நாமும் அவ்வாறு முதலீடு செய்தால் அவரை போன்று பணக்காரர் ஆகலாம் என பங்குகளை ஆராயாமல் முதலீடு செய்ய கூடாது. அவருடைய பங்கு அணுகுமுறை மற்றும் பங்குகளை வைத்திருக்கும் காலம் மாறுபடலாம்.

உதாரணத்திற்கு ராகேஷ் ஜுன்ஜுன்வாலா அடுத்த 10-20 வருடங்களுக்கு யெஸ் வங்கி பங்குகளை வைத்திருந்து காத்திருக்க தயாராகலாம். பங்கு விலை பெரும்  வீழ்ச்சியடைந்தாலோ அல்லது நிறுவனமே காணாமல் போனாலோ, அவருக்கு முதலீட்டு இழப்பை தாங்கக்கூடிய பலம் உள்ளது. ஆனால் நம்மால் அவ்வாறு செய்ய முடியுமா என்பதே முதலீட்டு கேள்வி.

பொதுவாக எந்தவொரு முதலீட்டை பொறுத்தவரை, முதலீட்டு உத்திகள்(Investment Strategy) மற்றும் ரிஸ்க் தன்மை(Risk) அறிந்து முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும். மற்றவர்கள் செய்கிறார்கள், ஊடகங்களில் பங்கு பரிந்துரை வருகிறது என்பதற்காக வெறுமென நமது பணத்தை வீணடிக்க கூடாது.

நாம் வாங்கப்போகும் பங்குகளின் தொழில் என்ன, அந்த தொழில் நமக்கு எளிய வகையில் புரிகிறதா, நிறுவனத்தின் லாப-நட்ட மற்றும் இருப்பு நிலை நிதி அறிக்கைகள் என்ன சொல்கிறது, நிர்வாக திறன், விற்பனை மற்றும் லாப வளர்ச்சி, எதிர்காலத்தில் நிறுவனத்திற்கான வாய்ப்புகள்(SWOT analysis) போன்றவற்றை தெரிந்து வைத்திருப்பது நல்லது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இந்திய காப்பீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்ய தயாராகும் வாரன் பப்பெட்

இந்திய காப்பீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்ய தயாராகும் வாரன் பப்பெட்

Warren Buffet’s Next Investment for the Public listed Company in India – Berkshire Hathaway

 

2001ம் நிதியாண்டில் துவங்கப்பட்ட நிறுவனம் தான் ஐ.சி.ஐ.சி.ஐ. புரூ காப்பீட்டு நிறுவனம்(ICICI Prudential Life Insurance). சந்தையில் பட்டியலிடப்பட்ட பொது நிறுவனமான ஐ.சி.ஐ.சி.ஐ. புரூ, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி(ICICI Bank) மற்றும் புரூ கார்ப்பரேஷன் ஹோல்டிங்க்ஸ்(Prudential Corporation Holdings) ஆகிய இரு நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தனிநபர் மற்றும் கூட்டாக பொது காப்பீடு, மருத்துவ காப்பீடு மற்றும் ஓய்வூதிய திட்டம் போன்ற சேவைகளை அளித்து வருகிறது. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 55,600 கோடி ரூபாய். இதன் ஒரு பங்கின் மீதான வருமானம் 10 ரூபாயாக உள்ளது.

 

பங்கின் மீதான வருவாய்(ROE) 24 சதவீதமாகவும், மொத்த மூலதனத்தின் வருவாய்(ROCE) 28 சதவீதமாகவும் உள்ளது. நிறுவனத்திற்கு கடன்கள் எதுவுமில்லை என்பது முதலீட்டாளர்களுக்கு சாதகமான விஷயம்.

 

மார்ச் 2019ம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 15,900 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் ரூ.261 கோடியாகவும் உள்ளது. இதர வருமானமாக 398 கோடி ரூபாய் சொல்லப்பட்டுள்ளது. கடந்த ஐந்து வருட விற்பனை வளர்ச்சி 14 சதவீதமாகவும், ஐந்து வருட லாப வளர்ச்சி ஒரு சதவீதமாகவும் உள்ளது.

 

ஐ.சி.ஐ.சி.ஐ. புரூ காப்பீடு நிறுவனத்தின் சொத்து மதிப்பு(Assets) ரூ.1,63,080 கோடியாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான ஜீ வணிக தொலைக்காட்சி(Zee Business Television) தகவலின் படி, இந்நிறுவனத்தில் பெர்க்சயர் ஹாத்தவே நிறுவனத்தின் தலைவரும், உலக பெரும் பணக்காரருமான வாரன் பப்பெட் முதலீடு செய்ய உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

வாரன் பப்பெட் ஐ.சி.ஐ.சி.ஐ. புரூ நிறுவனத்தின் 14 சதவீத பங்குகளை வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மதிப்பு சுமார் 9000 கோடி ரூபாயாக இருக்கலாம். கடந்த வருடம் பெர்க்சயர் ஹாத்தவே(Bershire Hathaway) நிறுவனம் பே.டி.எம்.(Paytm) நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

உலக பணக்காரர்கள் வரிசையில் ஐந்தில் ஒரு பங்கு 80 வயதை கடந்தவர்கள்

உலக பணக்காரர்கள் வரிசையில் ஐந்தில் ஒரு பங்கு 80 வயதை கடந்தவர்கள்

A Fifth of the World’s Richest people are over 80 years old

 

ப்ளூம்பெர்க்(Bloomberg) பத்திரிகை வெளியீட்டின் படி, உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் உள்ள முதல் 500 நபர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் 80 வயதை கடந்தவர்கள். முதலிடத்தில் அமேசான் நிறுவனத்தின் ஜெப் பேஜோஸ்(Jeff Bezos) உள்ளார். இரண்டாம் இடத்தில் பில்கேட்ஸ் மற்றும் மூன்றாம் இடத்தில் பழுத்த முதலீட்டாளர் வாரன் பப்பெட் உள்ளனர்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

அமேசான் நிறுவனர் ஜெப் பேஜோஸ் 132 பில்லியன் அமெரிக்க டாலர்களை கொண்டுள்ளார்.  இந்தியாவின் முகேஷ் அம்பானி(Mukesh Ambani) உலகத்தர வரிசையில் 12ம் இடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து 47 பில்லியன் அமெரிக்க டாலர்கள். முதல் 500 இடங்களில் பெரும்பாலானோர் அமெரிக்க நாட்டை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். இந்த பட்டியலில் 19 இந்தியர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

உலக பணக்காரர்கள்(Billionaire) வரிசையில் ஐந்தில் ஒரு பங்கு 80 வயதை கடந்தவர்களாக உள்ளனர். இவற்றில் 21 பணக்காரர்கள் 90 வயதிலிருந்து 100 வயதுக்கு உட்பட்டவர்கள், இதில் 8 நபர்கள் ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர். மலேசிய நாட்டை சேர்ந்த ராபர்ட் கோக் அவரின் வயது 90. இவருடைய சொத்துக்களின் மதிப்பு 17.27 பில்லியன் அமெரிக்க டாலர்கள். வாரன் பப்பெட்(Warren Buffet) தற்போது தன்னுடைய 88வது வயதில் உள்ளார்.

 

90 வயதை கடந்த எட்டு ஆசிய பணக்கார்களின் மொத்த சொத்து மதிப்பு 125 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டியுள்ளது. இந்தியாவின் 90 வயதான பலோன்ஜி மிஸ்ட்ரியின்(Palonji Mistry) சொத்து மதிப்பு 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இது நமது நாட்டின் மதிப்பில் சுமார் 1,42,710 கோடி ரூபாயாகும். 90 வயதுக்கு மேற்பட்டவர்களில் அதிக சொத்து மதிப்பை கொண்டுள்ளவர் ஹாங்காங் நாட்டை சேர்ந்த லை காசிங்(Li Ka-Ching), 30 பில்லியன் அமெரிக்க டாலர்களை நிர்வகித்து வருகிறார்.

 

உலகின் பணக்காரர்கள் வரிசையில் மூத்த வயதுடைய இருவர்(Oldest and Richest), நடப்பு வருடத்தின் துவக்கத்தில் காலமாகி உள்ளனர். இந்தோனேசிய நாட்டினை சேர்ந்த எக்கா(Eka) தனது 15 வயதில் தேங்காய் மற்றும் பாமாயில் எண்ணெய் வர்த்தகத்தை தொடங்கியவர் பின்னர் உலகின் மாபெரும் பணக்காரராக உருவெடுத்தார். இவர் தனது 98வது வயதில், இம்மாதத்தின் ஆரம்பத்தில் காலமானார்.

 

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஹென்றி தனது இளமை காலத்தில் காலணிகள்(Shoe) விற்பனையாளராக ஆரம்பித்த இவர், பின்னாளில் அந்நாட்டின் முக்கியமான நபர்களில் ஒருவரானார். ஹென்றி கடந்த வாரம் தனது 94 வயதில் காலமானார். மூத்த வயதுடைய இந்த இருவரின் சொத்துக்கள் மட்டும் 1700 கோடி அமெரிக்க டாலர்கள் – இந்திய ரூபாயில் 1,21,300 கோடி.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

இளமையில் முதலீட்டின் அவசியம் – வாரன் பப்பெட்

இளமையில் முதலீட்டின் அவசியம் – வாரன் பப்பெட்

The Neccessity of Investing at Young – Warren Buffet

 

வாரன் பப்பெட்(Warren Buffet) 1930 ம் ஆண்டு அமெரிக்காவின் ஒமாஹா நகரத்தில் பிறந்தவர். இவர் ஒரு முதலீட்டாளர் மற்றும் அமெரிக்க தொழிலதிபராக வலம் வருபவர். தொழிலின் மீதும், முதலீட்டின் மீதும் கொண்ட காதலால் தனது 11ம் வயதில் முதலீட்டை(Investing) தொடங்கினார். முதன்முதலில் ஒரு எண்ணெய் நிறுவனத்தில் முதலீடு செய்த இவர், ஒரு பங்கு 38 டாலர் வீதம் 6 பங்குகளை நியூயார்க் பங்குச்சந்தையில் வாங்கினார். அப்போதும் பகிர்ந்தளிப்பு முறையில், தனக்கு மூன்று பங்குகளையும், தனது சகோதரிக்கு 3 பங்குகள் என்றும் பிரித்து கொண்டார்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தனது 14ம் வயதில் செய்தித்தாள்களை விநியோகம் செய்ததன் மூலம் 200 அமெரிக்க டாலர்களை வருமானமாக பெற்றார் வாரன் பப்பெட். வருமான வரி செலுத்துவோர் பட்டியலில், உலகின் மூன்றாவது மிகப்பெரிய பணக்காரராக இடம் பெற்றார், அப்போது அவருக்கு வயது 14 மட்டுமே. உயர்நிலை கல்வியை முடித்த வாரன் தனது சிறு வயது சேமிப்பின் மூலமான பணத்தை கொண்டு ஒமாஹா (Omaha) நகரத்தில் 40 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கினார். நிலத்தின் மதிப்பு அப்போது அதிக பண மதிப்பை கொண்டிருக்காவிட்டாலும், 15 வயது சிறுவன் வாங்குவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

 

தொழிலின் மீது கொண்ட ஈர்ப்பால், தன்னுடைய கல்லூரி படிப்பை தான் விரும்பிய ஹார்வர்டு வணிக பள்ளியில் (Harvard) பயில முயன்றார். ஆனால் அங்கே அவருக்கான கதவு திறக்கப்படவில்லை, அவரது வரவேற்பை நிராகரித்தது ஹார்வர்டு. பின்னர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பயின்ற வாரன் பப்பெட், அங்கு தான் தனது குருவான பெஞ்சமின் கிரகாம் (Benjamin Graham) அவர்களை கண்டார். பின்னாளில் பெஞ்சமின் கிரகாம், ‘ முதலீட்டின் தந்தை (Father of Value Investing)‘ என்று வரலாற்றில் இடம் பிடித்தார்.

 

ஒரு சிறப்பான குருவிடம் கற்ற கல்வி வாரன் பப்பெட் அவர்களை மேலும் செதுக்கியது. தனது 31ம் வயதில் தான் விற்பனையாளராக பணிபுரிந்த நிறுவனத்தில் சிறுகச்சிறுக முதலீட்டை மேற்கொண்டார். பின்னர் அதனையே தனது சொந்த நிறுவனமாக்கி கொண்டார். அது தான் பெர்க்சயர் ஹாத்தவே (Berkshire Hathaway) என்ற நிறுவனம். முதலீட்டின் மூலம் வலம் வந்த வாரன் பல தொழில்களை துவங்கினார். 43ம் வயதில் வாரனின் சொத்து மதிப்பு 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டியது. தனது 52ம் வயதில் போர்ப்ஸ்(Forbes) பத்திரிகையில் உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்ற பப்பெட் அதே காலத்தில் தனது சொத்து மதிப்பை மூன்று மடங்கு உயர்த்தினார். அப்போது அவரது சொத்து மதிப்பு 1000 மில்லியன் அமெரிக்க டாலர்களை நெருங்கி இருந்தது.

 

பெர்க்சயர் நிறுவனத்தில் வாரன் தனக்கான சம்பளமாக பெற்ற தொகையை சுமார் 15 வருட காலம் உயர்த்தி கொள்ளவில்லை. எந்த ஊதிய உயர்வோ, போனஸ் தொகையோ பெற்று கொள்ளாத வாரன் பப்பெட்டின் மாத சம்பளம், அங்கு பணிபுரியும் கடைநிலை ஊழியரின் சம்பளத்தை விட குறைவானதாகும். பெரும்பாலும் தனது சேமிப்பு மற்றும் முதலீட்டினை கொண்டே வாரன் தனது குடும்பத்திற்கான தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார். Duracell, Brooks, Clayton Homes ஆகிய பிராண்டுகள் வாரனின் நிறுவனங்களே.

 

உலகின் மூன்றாவது மிகப்பெரிய பணக்காரராக மற்றும் முதலீட்டாளராக இருக்கும் வாரனின் சொத்து மதிப்பு கடந்த வருட முடிவில் 80 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ($80 USD Billion), இந்திய மதிப்பில் 5.63 லட்சம் கோடி ரூபாயாகும். பணத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் தராத வாரன் ஒரு புத்தக வாசிப்பாளர் ஆவார். தினமும் 5 மணிநேரம் புத்தகங்களை வாசிப்பதற்காக நேரம் ஒதுக்கும் இவர், தனது சொத்தில் 90 சதவீதத்திற்கும் மேலான பணத்தை நன்கொடையாக கொடுத்துள்ளார். பண விஷயத்தில் மிகவும் கறாராக இருக்கும் வாரனிடம் ஆப்பிள் ஸ்மார்ட் போன் (Apple Smartphone) இல்லை என்பது சிறப்பம்சம். அவர் ஆப்பிள் நிறுவனத்தில் முதலீடு செய்ய மட்டுமே உள்ளதாக ஒரு முறை கூறியுள்ளார்.

 

நாம் விரும்பும் துறையில் சாதிக்க இளமையிலே கற்க முயலும் போது, நமக்கான வெற்றி எளிமையாக அமையும். அதே போன்று, நமது குடும்பத்திற்கான நிதி தேவைகளை நாம் இளமை காலத்திலே முடிவெடுக்க ஆரம்பித்தால், பின்னாளில் பண தேவைக்கான சிக்கல் இருக்காது. கடனும் வாங்காமல் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழலாம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

பே.டி.எம் நிறுவனத்தில் முதலீடு செய்கிறார் வாரன் பப்பெட்

பே.டி.எம் நிறுவனத்தில் முதலீடு செய்கிறார் வாரன் பப்பெட்

Warren Buffet’s Berkshire Hathaway investing in Paytm

 

உலகின் பெரும் பணக்காரர் வாரன் பப்பெட் (Warren Buffet) முதலீடு செய்வதிலும், நிறுவனங்களை கையகப்படுத்துவதிலும் வல்லவர்.  தனது 11வது வயதிலிருந்து முதலீட்டை மேற்கொள்ளும் வாரன் பங்குச்சந்தையின் மூலம் நீண்ட காலத்தில் கோடிகளில் கோடிகளை சம்பாதித்தவர்.

 

வாரன் பப்பெட் முதலீட்டு கொள்கைகள் பொதுவாக நீண்ட கால அடிப்படையிலும், சந்தையில் மதிப்பு குறைந்த பங்குகளும் தான். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதில் அவர் பெரும்பாலும் ஆர்வம் காட்டுவதில்லை. அதே நேரத்தில் ஆப்பிள் நிறுவனத்தினை வாங்குவதில் வாரன் முனைப்பு காட்டியதையும் மறுக்க முடியாது.

 

ஆப்பிள் (Apple) நிறுவனத்தில் வாரனின் பெர்க்சயர் ஹாத்தவே (Berkshire Hathaway) நிறுவனம் 5 % பங்குகளை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது அவரின் நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக முதலீட்டை மேற்கொள்ள உள்ளது. பெர்க்சயர் ஹாத்தவே நிறுவனத்தின் அதிகார பூர்வ தகவலின் படி, அந்த நிறுவனம் பே.டி.எம். (Paytm) நிறுவனத்தில் சுமார் 4 சதவீத பங்குகளை வாங்க திட்டமிட்டுள்ளது.

 

Paytm தளத்தின் நிறுவனம் ஒன்97 (One97 Communications Ltd) ஆகும். இந்த நிறுவனத்தில் தான் வாரென் நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் முதன்முறையாக வாரன் பப்பெட் முதலீடு செய்ய உள்ளார், அதுவும் தகவல் தொழில்நுட்பத்தில் உள்ள நிறுவனத்தில் என்பது பெரும்பாலான முதலீட்டாளர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

 

இந்த முதலீட்டின் மதிப்பு சுமார் 2500 கோடி ரூபாய் என சொல்லப்பட்டுள்ளது. ஏற்கனவே Paytm நிறுவனத்தில் சீனாவின் அலிபாபா நிறுவனமும் முதலீடு செய்துள்ளது. அலிபாபா நிறுவனம் 25 சதவீத பங்குகளை Paytm நிறுவனத்தில் கொண்டுள்ளது. கடந்த நிதி ஆண்டில் Paytm நிறுவனம் 1200 கோடி ரூபாய் நஷ்டத்தை காட்டியுள்ளது. இருப்பினும் இந்த நிறுவனம் 84,000 கோடி ரூபாய் மதிப்புடையதாக கணிக்கப்பட்டுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

என்னிடம் ஆப்பிள் போன் இல்லை; ஆனால் நான் ஆப்பிள் நிறுவனத்தை வாங்க தயாராக உள்ளேன் – வாரன் பப்பெட்

என்னிடம் ஆப்பிள் போன் இல்லை; ஆனால் நான் ஆப்பிள் நிறுவனத்தை வாங்க தயாராக உள்ளேன் – வாரன் பப்பெட்

A Man who still using a Flip Mobile Phone, but wants to own APPLE Company

 

உலகின் மிகப்பெரும் பணக்காரராகவும், Berkshire Hathaway நிறுவனத்தின் தலைவராகவும் அங்கம் வகிப்பவர் வாரன் பப்பெட் (Warren Buffet) ஆவார். 87 வயதாகும் வாரன் பப்பெட் உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் தற்போது நான்காம் இடத்தில் உள்ளார். பணக்காரர்கள் பட்டியலில் அதிக வயதுடையவரும் இவரே, தற்சமயம் இவரது சொத்து மதிப்பு 8440 கோடி டாலராகும்.

 

முதலிடத்தில் உள்ள அமேசான் நிறுவனர் ஜெப் பேஜோஸின் சொத்து மதிப்பு 13,200 கோடி டாலராகும். சமீபத்தில் வாரன் பப்பெட் ஒரு பேட்டியில் கூறியதாவது, “ நாங்கள் இதுவரை ஆப்பிள் நிறுவனத்தில் 5 சதவீத பங்குகளை வைத்துள்ளோம். இது ஒரு நீண்ட கால அடிப்படையில் செய்யப்பட்ட முதலீடு. ஆப்பிள் நிறுவனத்தின் நிர்வாகம் நன்றாக உள்ளது. மேலும் முதலீடு செய்ய காத்திருக்கிறோம்; முடிந்தால் 100 சதவீத பங்குகளை வாங்க விரும்புகிறோம்.

 

ஒரு நண்பர் எனக்கு ஐபோன் 10 (iPhone 10)  ஐ பரிசாக அளித்தார். மேலும் அதனை பயன்படுத்தும் முறை பற்றியும் எனக்கு விளக்கியிருந்தார். ஒரு சிறு குழந்தைக்கு விளக்குவது போல அவர் ஐபோனை பற்றி என்னிடம் வர்ணித்தார்.

 

நான் இதுவரை அந்த மாதிரியான கைபேசியை பயன்படுத்தியது இல்லை. மேம்பட்டு வரும் தொழில்நுட்பத்தை நான் அவ்வளவாக புரிந்து கொள்ளவில்லை. இருப்பினும் தொழில்நுட்பத்தில் முன்னிலையில் இருக்கும் ஒரு நிறுவனத்தை வாங்குவதில் ஆவலாக உள்ளோம் “ என்றார்.

 
( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நடப்பு வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் வாரன் பப்பெட் நிறுவனம், ஆப்பிள் நிறுவனத்தின் 7.5 கோடி பங்குகளை வாங்கியுள்ளது. இதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குதாரர்களில் Berkshire Hathaway இரண்டாம் இடம் பிடித்தது.

 

பப்பெட் பெரும் பணக்காரராக இருந்தும், இன்னும் மடக்கு கைபேசியை(Flip Mobile phone) தான் பயன்படுத்தி கொண்டிருக்கிறார். தனது 11 வது வயதிலிருந்து பப்பெட் முதலீடுகளை மேற்கொண்டு வருகிறார். முதலில் நிறுவனத்தின் பங்குகளை கொஞ்சம் வாங்குவதும், பிற்காலத்தில் அந்த நிறுவனத்தையே கையகப்படுத்துவதும் இவரது முதலீட்டு மந்திரங்கள்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

 

தேவைகளும், விருப்பங்களும் – Need vs Want Behaviour

தேவைகளும், விருப்பங்களும்…

Need vs Want Behaviour

 

உங்களது லட்சியங்கள் (அ) விருப்பங்கள்(Desire / Want) என்ன ?

 

  • பிடித்த படிப்பு / துறையில் பணிபுரிவது (அ) தொழில் முனைவது
  • அழகான வீடு
  • நான்கு சக்கர வாகனம் (Car)
  • வெளிநாட்டு சுற்றுலா
  • ஆடம்பர திருமணம்
  • நண்பர்களுக்கு விருந்து வைப்பது (Treat)
  • கை நிறைய சம்பாதிப்பது
  • அப்படி ஒன்றுமில்லைங்க  🙂

 

உங்களது தேவைகள்(Need ) என்ன ?

 

  • சத்தான உணவு, தட்பவெப்ப நிலைக்கேற்ற உடை, பாதுகாப்பு மற்றும் குறைந்தபட்ச இருப்பிடம்
  • மருத்துவம் மற்றும் சுகாதாரம்
  • சுவாசிக்க சுத்தமான காற்று
  • அறிவு மேம்பட தேவைப்படும் கல்வி
  • எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நிதி / வருமானம் (குழந்தை பராமரிப்பு, கல்வி, திருமணம், ஓய்வு காலம் )

 

நீங்கள் எப்படி முடிவு செய்கிறீர்கள்(How you decide) ?

 

  • ஆரோக்கியமான உணவு / அழகு மெருகூட்டப்பட்ட துரித உணவு  ?
  • மனதுக்கு பிடித்தவாறு துணைவருடன் வாழ்வது / ஆடம்பர திருமணம் செய்வது  ?
  • உங்கள் குழந்தைகளுடன் விளையாடி நேரத்தை செலவழிப்பது / அவர்கள் விரும்பும் பொருட்களை வாங்கி கொடுத்து விட்டு, உங்களுக்கு நேரமில்லாமல் போல் இருப்பது  ?
  • உங்கள் அறிவு மேம்பட, வாழ்வில் முன்னேற கல்வி / மற்றவர்களுக்காக விளம்பர நோக்கில் கல்வி பயில்வது ?
  • ஓய்வு காலத்திற்கான சேமிப்பு / ஓய்வு காலத்தில் வேலை பார்த்து கொள்ளலாம், அப்போது பார்க்கலாம் என்பது  ?
  • பொது போக்குவரத்து சேவை மற்றும் இரு சக்கர வாகனத்தை பயன்படுத்துதல் / மற்றவர்களின் பார்வைக்காக நான்கு (Car) சக்கர வாகனம் வாங்கி, பயணம் செய்வது ?
  • திட்டமிட்ட சுற்றுலா பயணம் / அவசியமில்லாமல், நினைத்த மாத்திரத்தில் கடன் வாங்கியாவது சுற்றுலா செல்வது  ?

தேவைகளும், விருப்பங்களும் (Need vs Want) :

 

மூச்சுக்காற்றை (Breathing) அப்புறம் வாங்கி கொள்கிறேன், நான் இப்போது சினிமா பார்க்க(See Movie) போகிறேன் என்றால்…. ! ! !

 

தேவையான மூச்சுக்காற்றை வாங்கினால் (சுவாசித்தல்) தானே உங்களுக்கு விருப்பமான சினிமா பார்க்க முடியும். ஆகையால் தேவைக்கு எப்போதும் முன்னுரிமை (Priority) கொடுங்கள். அது உங்களுக்கு தேவையான மற்றும் அவசியமான விருப்பங்களை நிறைவேற்றும்.

 

தேவைகளிடம் விட்டு விடுங்கள் 🙂

 

விருப்பங்களும் விலையேற்றத்துக்கு காரணம்:

(Rising Price due to Wants)

 

ஊரின் ஒரு பகுதியில் தினசரி சராசரியாக தேவைப்படும் 100 கிலோ வெங்காயம், திடீரென்று 10,000 கிலோ என  அதிகரித்தாலும், உற்பத்திக்கும் தேவைக்கும் இடையே வெங்காயத்தின் விலையும்  அதிகரிக்கலாம்;  இது வெங்காயத்துக்கு மட்டுமல்ல…

 

வாகன விற்பனைக்கு, எரிபொருளுக்கு, கல்வி கட்டணங்களுக்கும் தான் 🙂

 

அதனால் நமக்கு அவசியமான, தேவையான விருப்பங்களை தேர்ந்தெடுத்து பூர்த்தி செய்தால் நம்மை சுற்றியுள்ளவர்களும் பயன்பெறுவார்கள்; பொருளாதாரமும் நிலை பெறும்.

 

இன்று நமது தெருவிலே பல வாகனங்கள் இடமில்லாமல் நிற்கின்றன; எந்த தேவையும் இல்லாமல் வாங்கப்பட்டன – நமது அவசியமற்ற விருப்பங்களால்  !

 

அதற்கு, நாம் ஒரு பார்க்கிங் (Car Parking Station) தொழிலை ஆரம்பித்து இருந்தால் கூட, காசு நிறைய பார்த்து இருக்கலாம் போல 🙂  

 

Impulsive Buying:

 

எந்த தேவையும் இல்லாமல், திட்டமிடப்படாத முடிவால் ஒரு பொருளை (அ) சேவையை விலை கொடுத்து வாங்குவது, ‘Impulsive Buying’ or ‘Impulsive Purchase’.

 

நாம் ஒரு ஷாப்பிங் மால்(Shopping Mall) செல்கிறோம்; ஷாப்பிங் செல்லும் முன், நமது இலக்கு ஒரு குறிப்பிட்ட பொருளை வாங்குவதோ (அ) பொழுதுபோக்கிற்கோ இருக்கலாம்; ஆனால் திரும்பி வரும் போது, நமக்கு தேவையில்லாத பொருளும், சேவையும் நமது பையிலே(Bag) இருக்கும்; நமது பர்ஸும்(Cash), கார்டும்(Debit /Credit Card) பதம் பார்க்கப்படும் 🙂 இது தான் Impulsive Purchase ன் ஆயுதம் !

 

எப்படி Impulsive Purchase ஐ தடுப்பது (How to Avoid Impulsive Buying) ?

 

  • நீங்கள் கடையில் ஒரு பொருளை, சேவையை வாங்க செல்லும் முன்னர் அந்த பொருள் (அ) சேவை நமக்கு அத்தியாவசியமானதா, இன்றே அது நமக்கு தேவைப்படுகிறதா என அறிந்து முடிவு செய்யுங்கள்.
  • வாங்கக்கூடிய  பொருள் (அ) சேவையை எழுதுங்கள், பட்டியலிடுங்கள் – அதற்கு தேவையான பணத்தை மட்டுமே வைத்திருந்து உங்கள் கொள்முதலை(Purchase) தொடங்குங்கள்.
  • பொழுதுபோக்கிற்காக, விலை விசாரிப்பதற்காக கடைக்கு செல்கிறீர்கள் என்றால், மிகக்குறைந்த அளவு பணத்தை மட்டுமே(தேவைப்பட்டால்) கையில் எடுத்து செல்லுங்கள்; EMI வசதி கிடைத்தாலும் அந்த சமயத்தில் வாங்குவதை தவிருங்கள் – இன்று பெரும்பாலான பொருட்கள், சேவைகள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் பொழுதுபோக்கிற்காக செல்லும் போதே வாங்கப்படுகின்றன – எந்த அவசியமும் இல்லாமல் – முடிவில் நமது வீட்டு அலமாரியில் (அ)  குப்பைத்தொட்டியில் 🙂
  • விலை குறைவாக கிடைக்கிறதே, சந்தையில் புதிதாக வந்த பொருள் என்று பார்த்து வாங்க வேண்டுமென்று அவசியமில்லை; விலை மலிவு, பொருள் புதிது என்ற சொற்கள் எல்லாம் வியாபாரிகளுக்கு உண்டானது – நீங்கள் உங்களுக்கு தேவையானதை மட்டும் பெறுங்கள்.
  • முடிந்தவரை நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை சேமிக்க முயலுங்கள்; உங்களுக்கு தேவையான விருப்பங்களை இலக்குகள் நிர்ணயித்து அடையுங்கள் – இலக்குகள் திட்டமிடப்படும் போது, பொருட்களை வாங்க உங்களுக்கு எந்த அவசரமும் இருக்காது 🙂

If you buy things you do not need, you will soon sell things you need – Warren Buffet

 

 

வாழ்த்துக்கள், தேவைகளுடன்…

வாழ்க வளமுடன் 🙂

(Feature image courtesy: theatrefolk.com )