தேவைகளும், விருப்பங்களும்…
Need vs Want Behaviour
உங்களது லட்சியங்கள் (அ) விருப்பங்கள்(Desire / Want) என்ன ?
- பிடித்த படிப்பு / துறையில் பணிபுரிவது (அ) தொழில் முனைவது
- அழகான வீடு
- நான்கு சக்கர வாகனம் (Car)
- வெளிநாட்டு சுற்றுலா
- ஆடம்பர திருமணம்
- நண்பர்களுக்கு விருந்து வைப்பது (Treat)
- கை நிறைய சம்பாதிப்பது
- அப்படி ஒன்றுமில்லைங்க 🙂
உங்களது தேவைகள்(Need ) என்ன ?
- சத்தான உணவு, தட்பவெப்ப நிலைக்கேற்ற உடை, பாதுகாப்பு மற்றும் குறைந்தபட்ச இருப்பிடம்
- மருத்துவம் மற்றும் சுகாதாரம்
- சுவாசிக்க சுத்தமான காற்று
- அறிவு மேம்பட தேவைப்படும் கல்வி
- எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நிதி / வருமானம் (குழந்தை பராமரிப்பு, கல்வி, திருமணம், ஓய்வு காலம் )
நீங்கள் எப்படி முடிவு செய்கிறீர்கள்(How you decide) ?
- ஆரோக்கியமான உணவு / அழகு மெருகூட்டப்பட்ட துரித உணவு ?
- மனதுக்கு பிடித்தவாறு துணைவருடன் வாழ்வது / ஆடம்பர திருமணம் செய்வது ?
- உங்கள் குழந்தைகளுடன் விளையாடி நேரத்தை செலவழிப்பது / அவர்கள் விரும்பும் பொருட்களை வாங்கி கொடுத்து விட்டு, உங்களுக்கு நேரமில்லாமல் போல் இருப்பது ?
- உங்கள் அறிவு மேம்பட, வாழ்வில் முன்னேற கல்வி / மற்றவர்களுக்காக விளம்பர நோக்கில் கல்வி பயில்வது ?
- ஓய்வு காலத்திற்கான சேமிப்பு / ஓய்வு காலத்தில் வேலை பார்த்து கொள்ளலாம், அப்போது பார்க்கலாம் என்பது ?
- பொது போக்குவரத்து சேவை மற்றும் இரு சக்கர வாகனத்தை பயன்படுத்துதல் / மற்றவர்களின் பார்வைக்காக நான்கு (Car) சக்கர வாகனம் வாங்கி, பயணம் செய்வது ?
- திட்டமிட்ட சுற்றுலா பயணம் / அவசியமில்லாமல், நினைத்த மாத்திரத்தில் கடன் வாங்கியாவது சுற்றுலா செல்வது ?
தேவைகளும், விருப்பங்களும் (Need vs Want) :
மூச்சுக்காற்றை (Breathing) அப்புறம் வாங்கி கொள்கிறேன், நான் இப்போது சினிமா பார்க்க(See Movie) போகிறேன் என்றால்…. ! ! !
தேவையான மூச்சுக்காற்றை வாங்கினால் (சுவாசித்தல்) தானே உங்களுக்கு விருப்பமான சினிமா பார்க்க முடியும். ஆகையால் தேவைக்கு எப்போதும் முன்னுரிமை (Priority) கொடுங்கள். அது உங்களுக்கு தேவையான மற்றும் அவசியமான விருப்பங்களை நிறைவேற்றும்.
தேவைகளிடம் விட்டு விடுங்கள் 🙂
விருப்பங்களும் விலையேற்றத்துக்கு காரணம்:
(Rising Price due to Wants)
ஊரின் ஒரு பகுதியில் தினசரி சராசரியாக தேவைப்படும் 100 கிலோ வெங்காயம், திடீரென்று 10,000 கிலோ என அதிகரித்தாலும், உற்பத்திக்கும் தேவைக்கும் இடையே வெங்காயத்தின் விலையும் அதிகரிக்கலாம்; இது வெங்காயத்துக்கு மட்டுமல்ல…
வாகன விற்பனைக்கு, எரிபொருளுக்கு, கல்வி கட்டணங்களுக்கும் தான் 🙂
அதனால் நமக்கு அவசியமான, தேவையான விருப்பங்களை தேர்ந்தெடுத்து பூர்த்தி செய்தால் நம்மை சுற்றியுள்ளவர்களும் பயன்பெறுவார்கள்; பொருளாதாரமும் நிலை பெறும்.
இன்று நமது தெருவிலே பல வாகனங்கள் இடமில்லாமல் நிற்கின்றன; எந்த தேவையும் இல்லாமல் வாங்கப்பட்டன – நமது அவசியமற்ற விருப்பங்களால் !
அதற்கு, நாம் ஒரு பார்க்கிங் (Car Parking Station) தொழிலை ஆரம்பித்து இருந்தால் கூட, காசு நிறைய பார்த்து இருக்கலாம் போல 🙂
Impulsive Buying:
எந்த தேவையும் இல்லாமல், திட்டமிடப்படாத முடிவால் ஒரு பொருளை (அ) சேவையை விலை கொடுத்து வாங்குவது, ‘Impulsive Buying’ or ‘Impulsive Purchase’.
நாம் ஒரு ஷாப்பிங் மால்(Shopping Mall) செல்கிறோம்; ஷாப்பிங் செல்லும் முன், நமது இலக்கு ஒரு குறிப்பிட்ட பொருளை வாங்குவதோ (அ) பொழுதுபோக்கிற்கோ இருக்கலாம்; ஆனால் திரும்பி வரும் போது, நமக்கு தேவையில்லாத பொருளும், சேவையும் நமது பையிலே(Bag) இருக்கும்; நமது பர்ஸும்(Cash), கார்டும்(Debit /Credit Card) பதம் பார்க்கப்படும் 🙂 இது தான் Impulsive Purchase ன் ஆயுதம் !
எப்படி Impulsive Purchase ஐ தடுப்பது (How to Avoid Impulsive Buying) ?
- நீங்கள் கடையில் ஒரு பொருளை, சேவையை வாங்க செல்லும் முன்னர் அந்த பொருள் (அ) சேவை நமக்கு அத்தியாவசியமானதா, இன்றே அது நமக்கு தேவைப்படுகிறதா என அறிந்து முடிவு செய்யுங்கள்.
- வாங்கக்கூடிய பொருள் (அ) சேவையை எழுதுங்கள், பட்டியலிடுங்கள் – அதற்கு தேவையான பணத்தை மட்டுமே வைத்திருந்து உங்கள் கொள்முதலை(Purchase) தொடங்குங்கள்.
- பொழுதுபோக்கிற்காக, விலை விசாரிப்பதற்காக கடைக்கு செல்கிறீர்கள் என்றால், மிகக்குறைந்த அளவு பணத்தை மட்டுமே(தேவைப்பட்டால்) கையில் எடுத்து செல்லுங்கள்; EMI வசதி கிடைத்தாலும் அந்த சமயத்தில் வாங்குவதை தவிருங்கள் – இன்று பெரும்பாலான பொருட்கள், சேவைகள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் பொழுதுபோக்கிற்காக செல்லும் போதே வாங்கப்படுகின்றன – எந்த அவசியமும் இல்லாமல் – முடிவில் நமது வீட்டு அலமாரியில் (அ) குப்பைத்தொட்டியில் 🙂
- விலை குறைவாக கிடைக்கிறதே, சந்தையில் புதிதாக வந்த பொருள் என்று பார்த்து வாங்க வேண்டுமென்று அவசியமில்லை; விலை மலிவு, பொருள் புதிது என்ற சொற்கள் எல்லாம் வியாபாரிகளுக்கு உண்டானது – நீங்கள் உங்களுக்கு தேவையானதை மட்டும் பெறுங்கள்.
- முடிந்தவரை நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை சேமிக்க முயலுங்கள்; உங்களுக்கு தேவையான விருப்பங்களை இலக்குகள் நிர்ணயித்து அடையுங்கள் – இலக்குகள் திட்டமிடப்படும் போது, பொருட்களை வாங்க உங்களுக்கு எந்த அவசரமும் இருக்காது 🙂
If you buy things you do not need, you will soon sell things you need – Warren Buffet
வாழ்த்துக்கள், தேவைகளுடன்…
வாழ்க வளமுடன் 🙂
(Feature image courtesy: theatrefolk.com )