நீங்கள் உண்மையிலேயே பாதுகாக்கப்படுகிறீர்களா? Term Insurance Vs Endowment Insurance

நீங்கள் உண்மையிலேயே  பாதுகாக்கப்படுகிறீர்களா ?

Is Insurance really protect you ?

பாதுகாப்பு நம் பயணத்தின் காப்பு !

 

Protection – “A person or thing that protects somone or something”

 

இந்த பிரபஞ்சத்தில் இயற்கையாகவே எல்லா உயிர்களுக்கும் தற்காப்பு என்ற தன்மை இறைநிலையில் உள்ளது; புல் தாவரம் முதல் மனிதன் வரை இயற்கை சீற்றங்கள் மற்றும் பிற உயிர்களினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து தன்னை காக்க எப்போதும் தயாராக உள்ளது; இது இயற்கையின் நியதி !

 

மனிதனும் தனது வாழ்க்கை பயணத்தில், இலக்குகளில் சறுக்காமல் இருக்க ஒவ்வொரு காலகட்டத்திலும் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி கொண்டு தான் இருக்கிறான்; குறிப்பாக தனது பொருள் சேதம், உற்றுயிர்கள் பாதிப்படையும் போது, மனம் மற்றும் உடல் அளவில் தயாராகிறான்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

முன்னொரு காலத்தில், ஒரு வீட்டில் உள்ள ஒருவர் மட்டுமே பொருளீட்டி தனது உறவுகளை பேணுவார், பாதுகாக்கவும் செய்வார்; பெரும்பாலும் அவர் குடும்ப தலைவராக இருப்பார்; அந்த தலைவர் ஏதேனும் காரணத்தால் உடல் மற்றும் மன ரீதியாக பாதிக்கப்பட்டால், அவரின் இடத்தை நிரப்ப மற்றொருவர் எப்போதும் ஆயத்தமாக  இருப்பார்; அப்போது குடும்ப உறவுகளின் எண்ணிக்கை பல;

 

தியாகம் மற்றும் சகிப்புத்தன்மையும் நிறைவு !

 

ஆனால் இப்போது அவ்வாறு இல்லை; சிலர் மனம் விரும்பாமல் உறவுகளிலிருந்து வெளியேறுகின்றனர். பொறுப்பெடுத்து கொள்ள தயாராகவும் இல்லை. இன்னும் சிலரோ பொறுப்பெடுத்து கொள்ள தயாராக இருந்தாலும் அவர்களது உடல் மற்றும் நிதி உழைப்பு ஒத்துழைப்பதில்லை; இன்று காலம் கடந்தும் விட்டோம். இருந்தும் பாதுகாப்பு விஷயத்தில் அக்கறையாக தான் இருக்கிறோம்; தகவல் சேமிப்பில் Big Data, Cloud Computing, Hadoop  என்று வளர்ந்து கொண்டே செல்கிறது;

நிதி சார்ந்த விஷயத்திலும் Insurance, Investing, Invention, Assets… இன்னும் பல !

 

நாம் சொன்னோமே ஒரு குடும்ப தலைவர், அவருக்கு அடுத்து ஆயத்தமாக இருந்த மற்றொருவரை சொன்னோமே, அந்த மற்றொருவர் தான் நமது பாதுகாப்பு தன்மைக்கு மிகவும் அவசியமானவர்; அவர் வலிமையாக, விவேகமாக இருப்பது முக்கியம்; அவரை நம்பி தான் மாத வருமானம் பெறும் / தொழில் புரியும் நாம் இருக்கிறோம்.

 

அவர் உண்மையிலேயே நம்மையும், நமது உறவுகளையும் இக்கட்டான சூழ்நிலையில் பாதுகாப்பாரா ?

 

பாதுகாப்பை  பாப்போம் !

 

Insurance  –  Protection against future loss / Protection from financial loss

 

நீங்கள் எடுத்தது உண்மையிலேயே மேலே சொன்ன இன்சூரன்ஸ் தானா ?
எதிர்க்குரல்கள்: (Conflict thoughts about Insurance)

 

பொதுவாக நாம் பார்க்கும் இன்சூரன்ஸ் திட்டங்களில் ஏறக்குறைய பெரும்பாலானோர் ‘Endowment Plan’ என்று சொல்லப்படும் காப்பீட்டு திட்டத்தையே வாங்குகிறோம்; ‘Term Plan’ என்று சொல்லக்கூடிய முழுமையான காப்பீட்டை கொடுக்கும் திட்டத்தை நம்மில் பலர் அறிவதில்லை, சிலருக்கு தெரிந்தாலும் எடுக்க மறுப்பது.

 

ஏன் பலரும் Term Insurance  ஐ ஆதரிக்காமல் குறைந்த பயனை  தரும் மற்ற காப்பீட்டை தேர்ந்தெடுக்கின்றனர் ?

 

காரணங்கள் பெரும்பாலோரிடம், Term Insurance ல் கட்டிய பணம் தருவதில்லை; இழப்பு ஏற்பட்டால் மட்டுமே கிடைக்குமாம் என்பது. யாரவது நாம் சிந்தித்து உண்டா ?

 

உங்கள் வாகனம், வீடு மற்றும் தொழிலுக்கு செய்யும் காப்பீடு என்றாவது உங்களுக்கு முதிர்வு தொகை என கொடுத்ததுண்டா ? இல்லை ! ஏனென்றால், காப்பீடு என்பது நாம் சொன்னது போல உங்களுடைய எதிர்கால வாழ்க்கையோ, பொருளாதார இழப்பையோ சரிக்கட்டுவது என்பதே.

 

உங்கள் வாகனம் தொலைந்து விட்டால் (அ) சேதம் அடைந்து விட்டால், நீங்கள் காப்பீட்டு தொகை பெற முயற்சிக்கலாம்; மாறாக நான் எனது வாகனத்திற்கு ஒவ்வொரு வருடமும் இவ்வளவு தொகை கட்டினேன், எனக்கு தாருங்கள் என்று காப்பீடு நிறுவனத்திடம் நாம் முறையிட முடியாது.

நீங்கள் உங்கள் வாகனத்தை கொண்டு ஒருவரை சேதப்படுத்தி விட்டீர்கள் என கொள்வோம்; இழப்பு ஏற்பட்ட அவருக்கு யார் இலவசமாக பணம் தருவார்கள் ?   நீங்கள் செய்த காப்பீட்டு தொகையே அவருக்கான இழப்பையும், உங்களை அந்த பிரச்சனையிலிருந்து விடுவித்து கொள்ளவும் உதவும் 🙂

 

Term Insurance vs Endowment Insurance:

Term Insurance:

 • Term Insurance என்பது நீங்கள் உங்கள் வாகனம், வீடு மற்றும் தொழிலுக்கு காப்பீடு எடுப்பது போல தான்.
 • Term Insurance ஒரு முழுமையான காப்பீடு திட்டம்.
 • Term Insurance ல் ஏதேனும் அசம்பாவிதம் / உயிரிழப்பு ஏற்பட்டால் முழு காப்பீட்டு தொகையும் கிடைக்கும்; முதிர்வு தொகை என்று ஏதும் கிடையாது, எனவே இழப்பு ஏற்பட்டால் மட்டுமே தொகை கிடைக்கும்.
 • காப்பீடு காலத்தை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.
 • இளம் வயதில் காப்பீடு எடுக்கும் போது ப்ரீமிய தொகை மிக குறைவாக இருக்கும்; முதிர்வு காலம் வரை ப்ரீமிய தொகையில் மாற்றம் இருக்காது.
 • Term Insurance உங்களது தற்போதைய செல்வ வாழ்க்கையை எதிர்காலத்தில் பாதுகாக்கும். (Protect your Wealth)

 

Endowment Insurance:

 • Endowment Insurance என்பது காப்பீடு மற்றும் சேமிப்பு/முதலீட்டை கொண்ட ஒரு திட்டம்.
 • Endowment Insurance ல் நீங்கள் செலுத்திய ப்ரீமியத்தில் ஒரு பகுதி காப்பீடுக்கும், மற்றொரு பகுதி சேமிப்பு / முதலீட்டிற்கு பயன்படுத்தபடும்.
 • Endowment Plan ல் முதிர்வு தொகை உண்டு; ஏதேனும் அசம்பாவிதம் / உயிரிழப்பு ஏற்பட்டால் முழு காப்பீடு தொகை கிடைக்கும்.
 • காப்பீட்டிற்கான ப்ரீமிய தொகை அதிகம்; Term Insurance ஐ ஒப்பிடும் போது Endowment ல் காப்பீடு தொகைக்கேற்ற ப்ரீமிய தொகை மிக அதிகமே. (Low Coverage at High Cost)
 • பணவீக்கத்தை மற்றும் உங்கள் வாழ்க்கை தரம், எதிர்கால செல்வ வாழ்க்கையை சரி கட்டாது.

 

(Image Courtesy: Nanayam Vikatan)
இரண்டையும் ஒப்பிட்டு நீங்கள் முடிவு செய்வது, உங்கள் சிந்தனையில்…

 

ஏன் உங்கள் குழந்தையை 5 ம் வகுப்பு படிப்போடு நிறுத்தவில்லை, கல்லூரி படிப்பு வரை தொடர செய்கிறோம் என்று ?

 

நீங்கள் ஏன் ஒரு தரமான வீடு மற்றும்  கல்வியை விரும்புகிறீர்கள் ?

 

காப்பீடு ஒரு முதலீட்டு திட்டம் அல்ல ! (Insurance is not a Investing)

 

 • காப்பீடையும், முதலீட்டையும் எப்போதும் குழப்பி கொள்ள வேண்டாம்; காப்பீடும், முதலீடும் செய்கிறோம் என்று ஒரு தவறான மற்றும் நமக்கு பொருந்தாத திட்டத்தையும் தேர்ந்தெடுக்க வேண்டாம்.

 

 • நமக்கு என்ன தேவை, நம்மிடம் இப்போது என்ன இருக்கிறது என்று ஆராய்ந்த பின்னரே நிதி விஷயத்தில் முடிவு எடுக்கவும்.

 

 • காப்பீடு Term and Conditions ஐ எப்போதும் கவனமாக படியுங்கள்

 

 • வரிச்சலுகை பெறுகிறேன் என்று அதிகமான பணத்தை காப்பீடு எடுக்க பயன்படுத்துவதும் புத்திசாலித்தனமல்ல !

 

நமக்கான காப்பீடு தொகையை எவ்வாறு கணக்கிடுவது ?

(Calculating Insurance Coverage Required )

 

 • உங்களுடைய மாத வருமானத்தை ஆண்டு கணக்கில் எடுத்து கொள்ளுங்கள் (A).
 • உங்கள் தற்போதைய கடன்கள் மற்றும் உங்களின் எதிர்கால குழந்தைகளின் கல்வி செலவுகள், திருமணம் கணக்கில் கொள்ளுங்கள். (B)
 • உங்களுடைய தற்போதைய சேமிப்பு / முதலீட்டை குறித்து கொள்ளவும்.(C)

 

Insurance Coverage = A + B – C   X   15

 

உங்களுக்கு கணக்கிடுவது பிடிக்கவில்லை (அ) புரியவில்லையா ?

 

எளிது, உங்கள் ஆண்டு வருமானத்தை 15 ஆல் பெருக்கி கொள்ளுங்கள்; கிடைக்கும் தொகை தான் உங்களுக்கான காப்பீடு செய்ய வேண்டிய தொகை !

 

காப்பீடு தொகை சராசரியாக ஆண்டு வருமானத்தை போல, 15 – 20 மடங்குகள் இருப்பது சிறந்தது.

 

காப்பீட்டு திட்டத்தை யார் தவிர்க்கலாம் ? (Who can avoid Insurance ?)

 

 • நீங்கள் ஒரு செல்வந்தர், உங்களுக்கு கோடிக்கணக்கான சொத்துக்கள் மற்றும் வருமானங்கள்; கடன்களும் இல்லை;  நீங்கள் இல்லையென்றாலும் உங்கள் எதிர்கால சந்ததியினரை உங்கள் சொத்துக்கள் அவர்களை பாதுகாக்கும் என்றால் – உங்களுக்கு காப்பீடு வேண்டியதில்லை; நீங்கள் மற்றவர்களுக்கு உதவலாம் !

 

 • எனக்கு யாருமில்லை, என்னை நம்பி யாருமில்லை. நான் ஒரு இளங்கலை / துறவி (Bachelor / Monk). நான் யாருக்கும் தொண்டு செய்யப்போவதில்லை என்றால் – நீங்கள் தனித்து இருக்கலாம்.

 

நம் உடல் ஆரோக்கியத்தை நாம் நோய் வருமுன் காப்பது போல, ஒரு சிறந்த நிதி பாதுகாப்பையும் (Insure) செய்வோம் !
வாழ்த்துக்கள்;

வாழ்க வளமுடன் !

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s