All posts by skatzsaravana

Value Investor, Entrepreneur and Founder of Varthaga Madurai, Rich Investing iDEAS

பொது வருங்கால வைப்பு நிதியில் (பி.எப்) ஏற்பட்டுள்ள சமீபத்திய மாற்றங்கள்

பொது வருங்கால வைப்பு நிதியில் (பி.எப்) ஏற்பட்டுள்ள சமீபத்திய மாற்றங்கள் 

Recent Changes in Public Provident Fund(PPF) – 2019

பி.பி.எப்.(PPF) என சொல்லப்படும் பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு, சிறு சேமிப்பு திட்டத்தின் அங்கமாகும். மிகவும் பாதுகாப்பான முதலீடாகவும், நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு இருக்கும் பி.எப். கணக்கிற்கு மாற்றாகவும் இந்த திட்டம் பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் சிறு சேமிப்பை ஊக்குவிக்கும் சட்டத்தில் பி.பி.எப். க்கான சில மாற்றங்கள் சொல்லப்பட்டுள்ளது.

பி.பி.எப்.(Public Provident Fund) கணக்கு என்பது 15 வருட கால சேமிப்பு திட்டமாகும். தேவைப்பட்டால், 15 வருட காலத்திற்கு பிறகு 5 வருட கால அளவில் திட்டத்தை நீட்டித்து கொள்ளலாம். நடப்பில் இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.9 சதவீதமாக உள்ளது.. ஆண்டுக்கு குறைந்தபட்ச முதலீட்டு தொகை ரூ. 500 மற்றும் அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் வரை. பி.பி.எப். முதலீட்டிற்கு வருமான வரி சலுகையும் உண்டு.

கணக்கில் உள்ள பணத்தை திரும்ப பெறுவதென்றால், இதற்கு முன்பு 7 வருடங்களுக்கு பிறகு மட்டுமே முடியும். ஆனால் தற்போது 5 வருடங்கள் (நிதியாண்டுகள்) முடிந்தவுடன் பணத்தை திரும்ப பெறுவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான சிறப்பு படிவம் 5 ஐ நிரப்பி, பணத்தை கோரலாம்.

முன்னர் 7 வருடங்களுக்கு பிறகு, 25 சதவீத தொகையை மட்டுமே எடுக்க கூடிய நிலை இருந்தது. தற்போது 5 நிதியாண்டுகளுக்கு பின்னர் வரவில் உள்ள 50 சதவீத தொகையை பெறலாம். பணத்தை பெறுவதற்கான காரணங்கள் கடுமையான நோய்கள் மற்றும் குடும்பத்தில் உள்ள ஒருவர் நோய்க்கான சிகிச்சை தேவைக்காக, உயர்கல்வி தேவை மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியராக செல்லும் பட்சத்தில் என சொல்லப்பட்டுள்ளது.

பி.பி.எப். கணக்கில் வெளிநாட்டு வாழ் இந்தியர்(NRI) முதலீடு செய்ய முடியாது என்ற சட்டத்தை சற்று மாற்றி, கணக்கை துவங்கும் போது இந்திய குடிமக்களாக இருந்து பின்னாளில் வெளிநாட்டு வாழ் இந்தியராக இருந்தாலும், முதிர்வு காலம் முடியும் வரை, முதலீடு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

தற்போது குழந்தைகளின் பெயரிலும்(Minor Child) பி.பி.எப். கணக்கை துவங்கலாம். கூட்டு கணக்கும்(Joint Account) தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சேமிக்கப்படும் தொகை, கணக்கு வைத்திருப்பவருக்கு எந்தவொரு கடன் அல்லது நிதி தொடர்பாக எந்தவொரு நீதிமன்றத்தின் உத்தரவு அல்லது ஆணையின் கீழ் இணைக்கப்படாது.

பி.பி.எப். கணக்கில் உள்ள தொகையை கொண்டு, கடன் வசதியும் பெறலாம். முன்னர், கடனுக்கான வட்டி விகிதம் பி.பி.எப். கணக்கிற்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை காட்டிலும் 2 சதவீதம் அதிகமாக இருந்தது. தற்போது இது ஒரு சதவீதமாக (பி.பி.எப். வட்டி மற்றும் கூடுதலாக 1 %) சொல்லப்பட்டுள்ளது.

பொது வருங்கால வைப்பு நிதி என்பது ஓய்வு காலத்திற்கான(Retirment Savings) திட்டமாகும். இதனை சரியாக திட்டமிட்டு, நீண்ட காலத்தில் சேமித்து வரும் பட்சத்தில் நமக்கான ஓய்வு கால கார்பஸ் தொகை பலனளிக்கும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

2019ம் வருடத்தில் உலக பங்குச்சந்தை குறியீடுகள் எப்படி இருந்தது ?

2019ம் வருடத்தில் உலக பங்குச்சந்தை குறியீடுகள் எப்படி இருந்தது ?

How was the Global Stock Indices in the year 2019 ?

நடப்பு 2019ம் வருடம் முடிய இன்னும் இரண்டு வாரங்களே உள்ளன. கடந்த இரண்டு வருடங்களாக உலகளவில் பல பொருளாதார நிகழ்வுகள் நடந்துள்ளன. இவற்றில் முக்கியமாக சீன-அமெரிக்க வர்த்தக போர், ஐரோப்பில் காணப்பட்ட பிரெக்ஸிட்(Brexit) ஒப்பந்தம், கச்சா எண்ணெய் விலை மற்றும் பருவநிலை மாற்றங்கள்(Climate Change) ஆகியவை பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக உலக பொருளாதாரமும் கடந்த ஒன்றரை வருடங்களாக மந்தநிலையில் சென்று கொண்டிருக்கிறது. பொருளாதார வீழ்ச்சி எதுவும் ஏற்பட வாய்ப்புள்ளதா என கேள்வி எழுப்பினால், அது 2020ம் ஆண்டின் பிற்பாதியில் தெரிய வரலாம். சீன-அமெரிக்க வர்த்தக போர் முடிவுக்கு வரலாம் என அனைவரும் எதிர்பார்க்கும் நிலையில், அமெரிக்காவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள தேர்தல் காலமே மற்றவற்றை தீர்மானிக்கும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

வளர்ந்து வரும் நாடுகளில் பலவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) குறைந்து வருகிறது. இதனால் அதன் வளர்ச்சி வேகத்திலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இது போன்ற சூழ்நிலையில் உலகளவில் காணப்படும் பங்குச்சந்தைகளும், மற்ற முதலீட்டு சாதனங்களும் எவ்வாறு இந்த வருடம் வருவாயை தந்துள்ளது என காணலாம்.

கடந்த ஒரு வருடத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் 20 சதவீத ஏற்றத்தை பெற்றுள்ளது. இது போல வெள்ளியும் சுமார் 16 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. ரெப்போ வட்டி விகித குறைவால், வங்கிகளின் வட்டி விகிதம் 7 சதவீதத்திற்கு கீழ் தான் உள்ளது. பங்குச்சந்தையை பொறுத்தவரை அமெரிக்காவின் நாஷ்டாக் 100(NASDAQ 100) குறியீடு 32 சதவீத வருவாயை தந்துள்ளது.

Stock Global Indices 2019

டவ் ஜோன்ஸ்(Dow Jones) குறியீடு 19 சதவீதமும், எஸ் & பி 500 25 சதவீதமும் ஏற்றம் பெற்றுள்ளன. பிரேசில் நாட்டின் முக்கிய குறியீடான iBovespa 29 சதவீதமும், அர்ஜென்டினா மற்றும் கொலம்பியா முறையே 26 சதவீதம் மற்றும் 22 சதவீத வருவாயை நடப்பு வருடத்தில் அளித்துள்ளது.

ஐரோப்பாவை காணும் போது, புட்சி 100(FTSE 100) 12 சதவீத வருவாயும், ஜெர்மனி டாக்ஸ்(DAX) 24 சதவீதமும் மற்றும் பிரான்ஸின் சி.ஏ.சி. 40 (CAC 40) குறியீடு 25 சதவீத வருவாயும் அளித்துள்ளது. இந்திய பங்குச்சந்தை குறியீடுகளாக நிப்டி50(Nifty50) 11 சதவீதமும், சென்செக்ஸ் 13 சதவீத ஏற்றத்தையும் கண்டுள்ளது

சீனா, ஜப்பான், தைவான், தென் கொரியா மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளின் குறியீடுகளும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து குறியீடுகள் 20 சதவீதத்திற்கு அதிகமான வருவாயை நடப்பு 2019ம் வருடத்தில் கொடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்காவின் குறியீடுகளும் வளர்ச்சியை கண்டுள்ளது.

இந்திய பங்குச்சந்தையில் நிப்டி50 மற்றும் சென்செக்ஸ்(Sensex) குறியீடுகளில் உள்ள சில லார்ஜ் கேப் பங்குகளின் ஏற்றமே, சந்தையின் புதிய உச்சத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. பொருளாதாரத்தில் தேக்க நிலை காணப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரும்பாலான முதலீட்டாளர்கள் லார்ஜ் கேப் பங்குகளை தேர்ந்தெடுத்துள்ளனர். இதன் காரணமாக தற்போது உச்சத்தில் காணப்படுகிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

அதே வேளையில் ஸ்மால் கேப்(Small Cap) மற்றும் மிட் கேப்(Mid Cap) பிரிவில் பெரும்பாலான பங்குகளின் விலை 40-50 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளன. பரஸ்பர நிதி முதலீட்டிலும் பங்கு சார்ந்த பண்டுகள்(Equity Oriented Mutual Funds) பிரிவில் 40 சதவீத பண்டுகள் முதலீட்டு இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இவற்றில் முதலீட்டு இழப்பை ஏற்படுத்திய பெரும்பாலான பண்டுகள் ஸ்மால் கேப் மற்றும் துறை சார்ந்த(Sector Funds) பிரிவுகளாகும். முக்கியமாக உள்கட்டமைப்பு துறை சார்ந்த பண்டுகள் நடப்பு வருடத்தில் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. இது போல பொதுத்துறை நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் பண்டுகளும் முதலீட்டு இழப்பை ஏற்படுத்தியுள்ளன.

வரும் நாட்களில் சந்தையை பாதிக்கும் காரணிகள் சற்று தென்படுவதால், பங்குகளின் அடிப்படை பகுப்பாய்வை ஆராய்ந்த பின்னரே, முதலீடு செய்வது சிறந்தது. விலையை மட்டும் கருத்தில் கொண்டு பங்குகளை வாங்குவதை தவிர்ப்பது நன்று.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

2020ம் ஆண்டில் இந்திய வாகனத்துறை மீண்டு எழுமா ?

2020ம் ஆண்டில் இந்திய வாகனத்துறை மீண்டு எழுமா ?  

Will the Indian Automotive Industry recover in 2020 ?

கடந்த ஒரு ஒன்றரை வருடமாக இந்திய வாகனத்துறை மட்டுமில்லாமல் உலகளவிலும் வாகனத்துறையின் வளர்ச்சி குறைந்துள்ளது. சீன-அமெரிக்க வர்த்தக போர், கச்சா எண்ணெய் உற்பத்தியில் நிலவும் மாற்றம், பிரிட்டனின் பிரெக்ஸிட் ஒப்பந்தம் மற்றும் உள்நாட்டில் நிலவும் பலவீனமான தேவை நுகர்வு என பொருளாதாரம் மந்தநிலையில் இருப்பதற்கான காரணிகள் சொல்லப்படுகிறது.

உள்நாட்டில் வாகனத்துறையின் வளர்ச்சி சில காலாண்டுகளாக இறங்குமுகத்தை சந்தித்து வருகிறது. மத்திய அரசு சார்பில் சில கொள்கைகள் பொருளாதாரத்தை ஊக்குவிக்க பயன்பட்டாலும், வரும் 2020ம் ஆண்டு இந்திய வாகனத்துறை மீண்டு எழுமா என்பதே பெரும்பாலானோரின் கேள்வி.

சமீப காலமாக வாகனத்துறையில் ஏற்பட்ட பலவீனமான நுகர்வு தன்மை(Weak Demand Consumption) மற்றும் அதனை சார்ந்த தேக்க நிலை ஆகியவை இந்த துறை மாற்றமடைந்து வருவதையும் சுட்டி காட்டுகிறது. கடந்த சில ஆண்டுகளாக வாகனத்துறை எதிர்பாராத அபரிதமான வளர்ச்சியை கொண்டிருந்தது. இதுவே தற்போது சந்தைக்கு மந்தநிலையை ஏற்படுத்தியுள்ளது.

இனி வரும் காலத்தில், ஒவ்வொரு துறையிலும் ஏற்படக்கூடிய மாற்றம், மிகப்பெரிய அளவில் பொருளாதார ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தலாம். அதே சமயத்தில், அவை அதிக வேலை வாய்ப்புகளை கொண்டிருக்கும் என்பதிலும் ஐயமில்லை. மாற்றம் நடைபெற்று வருகிறது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளா  விட்டாலும், உலகளவில் அனைத்து துறைகளிலும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன.

2020ம் ஆண்டில் உலகளவிலான வாகனத்துறையில் பல மாற்றங்கள் ஏற்படலாம். வாகனத்துறை உற்பத்தியாளர்கள் மற்றும் உபகரணங்களை வழங்கி வரும் நிறுவனங்கள் பல சவாலான நிகழ்வுகளை சந்திக்க நேரிடலாம் என மூடிஸ்(Moodys) நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்த வருடத்தில் கார் வாகன விற்பனை(Car Sales) மற்றும் வணிக ரீதியிலான வாகன விற்பனை வளர்ச்சி  குறையக்கூடும் எனவும், இதன் காரணமாக பெரும்பாலான வளர்ந்து வரும் நாடுகளில் பொருளாதார வளர்ச்சி குறைவாக இருக்கக்கூடும் எனவும் கூறியுள்ளது.

பருவநிலை மாற்றங்களும், அதன் சார்ந்து எடுக்கப்படும் புதிய கொள்கைகளும்  தற்போதைய வாகன சந்தையை பாதிக்கலாம் என சொல்லப்படுகிறது. விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம். இதன் காரணமாக அவற்றின் வருவாயில் துண்டு விழலாம்.

நாட்டின் உற்பத்தி துறையில்(Manufacturing in GDP) வாகனத்துறையின் பங்கு 50 சதவீதமாக உள்ளது. கடந்த 2018ம் ஆண்டு வணிக வாகன உற்பத்தியில் உலகளவில் 7வது மிகப்பெரிய நாடாக இந்தியா இருந்தது கவனிக்கத்தக்கது. வாகனத்துறை விரைவாக மீண்டு எழுந்தால் மட்டுமே, நாட்டின் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி சாத்தியப்படும். இருப்பினும், இலக்கின் மீது நம்பிக்கை கொண்டிருப்போம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

கொப்பளித்த விலைவாசி உயர்வு – நவம்பர் மாத சில்லரை விலை பணவீக்கம்

கொப்பளித்த விலைவாசி உயர்வு – நவம்பர் மாத சில்லரை விலை பணவீக்கம் 

Rising Prices on Essential Needs – CPI Retail Inflation to 5.54 Percent in November 2019

நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்கம் அக்டோபர் மாதத்தில் 4.62 சதவீதமாக இருந்த நிலையில், கடந்த நவம்பர் மாத பணவீக்கம் 5.54 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டில் சொல்லப்பட்ட இதே காலத்தில் பணவீக்கம்(Inflation) 2.33 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை உயர்வால் கடந்த மாத சில்லரை விலை பணவீக்கம் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக காய்கறிகளின் விலை நவம்பர் மாதத்தில் 36 சதவீதமாக இருந்துள்ளது. இது அக்டோபர் மாத இறுதியில் 26 சதவீதமாக இருந்துள்ளது.

பருப்பு வகைகளின் விலை 14 சதவீதமும், மாமிசம் மற்றும் மீன் ஆகியவற்றின் விலை 9.38 சதவீதமும் உயர்ந்து காணப்பட்டுள்ளது. இது போல முட்டையின் விலையும் 6 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆக, அக்டோபர் மாதத்தில் 7.89 சதவீதமாக காணப்பட்ட உணவுப்பொருட்களின் சில்லரை விலை பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 10 சதவீதமாக இருக்கிறது.

வீட்டுமனை விலையும் 4.5 சதவீதம் உயர்ந்துள்ளது. புகையிலை பொருட்களின் விலை 3.26 சதவீதமும், துணிமணிகள் மற்றும் காலணிகள் 1.30 சதவீதமும் அதிகரித்துள்ளது. அதே வேளையில் எரிபொருட்களின் விலை இரண்டு சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

நவம்பர் மாதத்தில் நகர்ப்புற சில்லரை விலை பணவீக்கம்(Urban Retail Inflation) 5.76 சதவீதமாகவும், கிராமப்புறங்களில்(Rural) 5.27 சதவீதம் என்ற அளவிலும் சில்லரை விலை பணவீக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அக்டோபர் மாதத்தை ஒப்பிடுகையில் இரு சார்பிலும் விலை உயர்ந்துள்ளது.

மத்திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்திருந்த குறுகிய கால இலக்கான 4 சதவீத பணவீக்கம் என்ற நிலையை கடந்த அக்டோபர் மாத பணவீக்கம் மீறியது. தற்போது அதனை விட சில்லரை விலை பணவீக்கம் அதிகரித்து காணப்பட்டுள்ளது. கடந்த நிதி கொள்கை குழு கூட்டத்தில் பாரத ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை(REPO Rate) குறைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

என் முதலீட்டு கொள்கை, என் செல்வத்திறன் – பங்கு முதலீட்டு சூத்திரம்

என் முதலீட்டு கொள்கை, என் செல்வத்திறன் – பங்கு முதலீட்டு சூத்திரம்

My Investment Strategy and its my Wealth Potential – Equity Investing Secrets

முதலீடு என்பது ஒரு கலை. அவற்றில் பங்கு முதலீடு என்பதே செல்வ சூத்திர கலை. பங்குகளில் விளையாட்டு பல்வேறாக இருந்தாலும், இறுதியில் பங்கு ஜெயிக்க வைப்பதோ தன் நீண்டகால நண்பனை தான். அதனால் தான் என்னவோ நான் நீண்டகால முதலீட்டாளராக இருப்பதில் மகிழ்வடைகிறேன்.

 

நம்மில் எண்ணற்றோருக்கு உடனடியாக பணம் பண்ண வேண்டிய ஆசை, விரைவாக பணக்காரராக வேண்டுமென்ற பேராசை. ஆனால் அப்படியொன்று இதுவரையும் கண்டுபிடிக்கப்படவில்லை. நான் எப்போதும் சொல்லிக்கொள்வது இது தான், ‘ போன்சி(Ponzi Schemes) திட்டத்தின் மூலம் ஒருவர் விரைவாக பணக்காரராக முடியும் என எண்ணினால், ஏன் அதனை அம்பானியும், அதானியும் முயற்சிக்க கூடாது ‘. ஏனென்றால் அப்படி ஒரு ரகசியம் எதுவும் தொழிலுலகில் இல்லை.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தொழில் முதலீட்டில் மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது. அதனை சார்ந்து தொழில்கள் நகரக்கூடும். ஆனால் வளர்ச்சி என்பது நீண்டகாலத்திற்கு உரியது. நான் ஐந்து வருடத்தில் கோடீஸ்வரனாக மாறி விட்டு, தொழிலை தூக்கி போட்டு விட்டு செல்வதல்ல தொழில் வளர்ச்சி. அது தான் பங்கு முதலீடும். 

 

நம் முதலீடு வளர்வதற்கான காலம் தேவை. நான் படித்தவுடன் மேதையாகவில்லை; கை நிறைய சம்பளம் வாங்கவில்லை. எனக்கு அனுபவம் தேவைப்படுகிறது. கற்க முயற்சிக்கிறேன். ஏற்ற-இறக்கங்களுக்கு உட்படுகிறேன். சில வருடங்களுக்கு பின்பு, எனது துறையில் நான் வலுவடைகிறேன். இப்போது நான் விரைவாக முன்னேறுவதற்கான பாதை எனக்கு தெரிகிறது. இது தான் பங்கு முதலீட்டிலும்.

 

ஒரு மருத்துவராக, ஒரு பொறியாளராக அல்லது எந்த துறையிலும் மேதையாக நாம் சில நாட்களில் உருவாகி விட முடியாது. அப்படியிருக்கும் போது, பங்குச்சந்தையில் மட்டும் நாம் அவ்வாறாக நடந்து கொள்வதில்லை. பங்குகளை வாங்கிய உடனே விற்று லாபம் சம்பாதிக்க வேண்டும். முதலீடு செய்த ஆறு மாதங்களில் அது கோடிகளாக மாற வேண்டும் – எவ்வாறு சாத்தியம் ? அப்படி ஒரு வேளை கோடிகளாக மாறி விட்டாலும், அதனை கொண்டு நீங்கள் என்ன திட்டத்தை கொண்டுள்ளீர்கள் ?

 

பங்குச்சந்தைக்கும் கற்றல் அவசியம். முறையாக படிக்கும் வாய்ப்பு கிட்டவில்லை என்றாலும், புத்தகங்கள் வாயிலாகவோ, இணையம் வாயிலாகவோ கற்க முயலுங்கள். நாளிதழ்களில் உள்ள வணிக பக்கம் என்ன சொல்கிறது என கேளுங்கள். பங்குச்சந்தையில் உள்ள நிறுவனங்களின் தரத்தை பிரித்து பாருங்கள். வங்கிக்கும், பங்குச்சந்தைக்கும், தங்கத்திற்கும் என்ன சம்பந்தம் என ஆராயுங்கள். நீங்கள் பங்குகளில் முதலீடு செய்யாவிட்டாலும் பரவாயில்லை, பங்குச்சந்தையை பற்றிய கற்றலை ஐந்து வருடங்களுக்கு தொடருங்கள். 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நீங்களாகவே ஒரு நிறுவன பங்கை Fundamental Analysis அடிப்படையில் ஆராய்ந்து தேர்ந்தெடுங்கள். கடினமாக உள்ளது என முடிவெடுத்தால், தகுந்த முதலீட்டு ஆலோசகரை உங்கள் இடத்தில் வைத்து கொண்டு, பங்குகளை அலசுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பங்குகளில் பின்வருமாறு முதலீடு செய்து பாருங்கள். யாரும் இதற்கு முன்பு இவ்வாறு உங்களுக்கு சொல்லி இருப்பார்களா என தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக உங்கள் பங்கு தரகர் சொல்லியிருக்க மாட்டார். 

 

என் பங்கு முதலீட்டு கொள்கை – முதலீட்டு சூத்திரம்:

 

  • ஆரம்ப  நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கின் மீது சிறிய அளவில் முதலீடு செய்யுங்கள். அதாவது உங்கள் மொத்த முதலீட்டு தொகையில் 5-10 சதவீத தொகைக்கு மட்டும்(Investing in a Small Quantity or Little Money). பங்குகளின் எண்ணிக்கை முக்கியமல்ல. மற்றவர் 1000 பங்குகள் வாங்கியுள்ளார்; நானும் வாங்கி விரைவாக லாபம் சம்பாதிக்கிறேன் என மாட்டிக்கொள்ள வேண்டாம்.

 

  • எந்தவொரு பங்குகளில் முதலீடு செய்யும் போது, முதற்கட்டமாக சிறிய அளவில் முதலீடு செய்யும் காலத்தை சோதனை செய்யும் காலமாக எடுத்து கொள்ளலாம். அந்த பங்கு அதிக ஏற்ற-இறக்கங்களுக்கு உட்படுகிறதா என்பதனை நம்மால் அறிய முடியும். நன்றாக பங்கு வீழ்ச்சியடையும் பட்சத்தில், மலிவான விலையில் நாம் சராசரி(Average on Share Price) செய்து கொள்ளலாம். ஏற்றமடைந்தால் கவலை கொள்ள வேண்டியதில்லை.

 

  • வாங்கிய பங்கின் ஒவ்வொரு காலாண்டு விற்பனை மற்றும் லாப வளர்ச்சியை(Track Financial Results) குறித்து கொள்ளுங்கள். வளர்ச்சியில் ஏதேனும் குறை இருந்தால் காரணத்தை கண்டுபிடியுங்கள். டிவிடெண்ட், போனஸ் அறிவிப்பு ஏதும் இருந்தால் தெரிந்து கொள்ளுங்கள்.

 

  • நீங்கள் வாங்கிய பங்கின் விலை, நீங்கள் வாங்கிய விலையிலிருந்து இரு மடங்காக சென்றால், உங்களிடம் உள்ள பங்குகளின் எண்ணிக்கையில் பாதியை விற்று விடுங்கள்(Sell half after doubled the price). இவற்றில் எந்த சமரசமும் செய்யாதீர்கள். பாதி பங்குகளை விற்ற நிலையில், உங்களது முதலீடு உங்களிடமே திரும்ப வந்து விட்டது. வந்த முதலீட்டை கொண்டு மற்றொரு நல்ல பங்குகளில் முதலீடு செய்வது உங்கள் திறமை. இல்லையென்றால், உங்களுக்கான மற்ற முதலீட்டு தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்ளுங்கள்.

 

  • மீதம் இருக்கும் பங்குகளை நிறுவனம் நன்றாக செயல்படும் காலம் வரை வைத்திருங்கள்(Keep the half for a long to Wealth). இங்கே இரு மடங்கு விலை அவசியமில்லை. உங்களிடம் உள்ள இந்த மீத பங்குகள் தான் செல்வத்தை குவிப்பதற்கான வாய்ப்புகள். அவை பல காலங்களை கடக்க கூடியது. 

 

  • மேலே சொன்னவற்றை ஒவ்வொரு நிறுவன பங்கை தேர்ந்தெடுக்கும் போதும் கடைபிடிக்க வேண்டும். கையிருப்பில் வைத்திருக்கும் பங்குகளை கொண்டு டிவிடெண்ட் வருவாய் பெறுவதற்கான சாத்தியங்களையும் உருவாக்கி கொள்ளுங்கள்(Create Cash Flow from Stocks). இதனை தான், ‘பணக்கார தந்தை ஏழை தந்தை’ புத்தக ஆசிரியர் ராபர்ட் கியோசகி எப்போதும் சொல்லி வருகிறார். பங்குகளை கொண்டு தொடர் வருமானத்தை ஏற்படுத்துவது அவசியமென்று.

 

  • தொடர் நஷ்டத்தில் இயங்கி கொண்டிருக்கும், அதிக கடனை சுமக்கும் சரியில்லாத பங்குகளை வைத்திருக்காதீர்கள். நிறுவனம் திவால் நிலைக்கு செல்லும் வரை காத்திருக்காமல், பங்குகளை விற்க தயாராகுங்கள்.

 

  • தெளிவான நோக்கத்தை கொண்ட நிறுவனர், நல்ல நிர்வாகம், குழப்பமில்லா நிதி அறிக்கைகள் ஆகியவற்றை கொண்ட நிறுவன பங்குகளை தேடுங்கள். (Promoter, Corporate Governance and Financial Statements) 

 

இது தான் நான் கற்ற பங்கு முதலீட்டு சூத்திரம். பிடித்தால் பழகுங்கள். இல்லையெனில் நீங்கள் ஒரு முதலீட்டு சூத்திரத்தை கண்டறியுங்கள். செல்வத்திறன் செவிமடுக்கட்டும்.

 

Let us listen to Wealth !

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

பரஸ்பர நிதிகளில் ஏன் டிவிடெண்ட் திட்டத்தை தேர்ந்தெடுக்க கூடாது ?

பரஸ்பர நிதிகளில் ஏன் டிவிடெண்ட் திட்டத்தை தேர்ந்தெடுக்க கூடாது ?

Why you should not choose a Dividend Plan in Mutual Funds ?

பரஸ்பர நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் பண்டுகளில் இரு வகையான பிரிவுகள் உள்ளன. ஒன்று வளர்ச்சி(Growth Plan) சார்ந்த பிரிவு, மற்றொன்று டிவிடெண்ட் என சொல்லப்படும் ஈவுத்தொகை(Dividend Plan) சார்ந்த பிரிவாகும். இவற்றில் நான் எதனை தேர்ந்தெடுக்க வேண்டுமென கேட்டால், பொதுவாக வளர்ச்சி சார்ந்த பிரிவு தான். இது ஒரு சிறந்த முதலீட்டு உத்தியும் கூட.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

என் கையில் இப்போது ஒரு லட்சம் ரூபாய் உள்ளது. நான் அதனை உங்களுக்கு தர விரும்புகிறேன். நீங்கள் அதனை இப்போது வாங்கி கொள்வீர்களா அல்லது ஒரு மாதத்திற்கு பிறகு அல்லது ஒரு வருடத்திற்கு பிறகு வாங்கி கொள்வீர்களா ?

 

இது தான் பணத்தின் கால மதிப்பு (Time Value of Money). உங்களுக்கு மற்றொரு வாய்ப்பை நான் வழங்க விரும்புகிறேன். அதாவது நீங்கள் என்னிடமிருந்து பெறக்கூடிய ஒரு லட்சம் ரூபாயை, ஒரு வருடத்தின் முடிவில் பெற்றால் நான் 12 சதவீத வட்டியுடன் (ஆண்டுக்கு) தர தயாராக உள்ளேன். இப்போது உங்கள் முடிவு என்ன ?

 

இல்லையெனில், நீங்கள் இன்றே அந்த ஒரு லட்சம் ரூபாயை பெற்று கொண்டு, நாளை உங்களால் ஒரு நல்ல முதலீட்டு வாய்ப்பை கண்டறிய முடியுமா ? நான் சொன்ன 12 சதவீத வட்டி வருவாயை காட்டிலும் அற்புதமான திட்டத்தை ஏதும் நீங்கள் கண்டறிந்து உள்ளீர்களா ? இது தான் முதலீட்டு வாய்ப்பிற்கான தேடல். 

 

பொதுவாக பணக்காரர்கள் (ஊகத்தில் இருப்பவர்கள் அல்ல) பங்குகள், பரஸ்பர நிதிகள், வங்கி சேமிப்புகள் மற்றும் வீட்டு மனையை காட்டிலும் தங்கள் தொழில் மீது தான் ஆர்வம் காட்டுவர். உண்மையில் அவர்கள் வணிகத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். காரணம் என்னவென்றால், அவர்கள் தங்கள் தொழிலின் ரிஸ்க் தன்மையை உணர்ந்து நீண்டகாலத்தில் நல்ல வருவாயை பெற தயாராக உள்ளனர்.

 

பணக்காரர்கள் அதிக வளர்ச்சி இல்லாத எந்தவொரு திட்டத்திலும் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவதில்லை. அவர்கள் தொழிலில் தோல்வி அடைந்தாலும் கூட, நல்ல முதலீட்டு வாய்ப்பை தேடுகின்றனர். எனவே அவர்கள் பங்குகள் மற்றும் பரஸ்பர நிதிகளில் சிறிய அளவில் முதலீடு செய்வர். அவர்களின் முக்கிய பங்கு, தொழில் முதலீட்டில் தான். பணக்காரர்கள் தங்கள் முதலீட்டின் மூலம் தொடர்ச்சியான பணப்புழக்கத்தை உருவாக்க முற்படுகிறார்கள். அதனால் தான் அவர்களால் வேலைவாய்ப்புகளும், தொழில் விருத்தியும் ஏற்படுகிறது. இது தான் பணத்தின் கால மதிப்பு.

 

பொதுவாக வளர்ச்சி பங்குகளும்(Growth Stocks), பரஸ்பர நிதிகள் வழங்கும் வளர்ச்சி திட்டங்களும்(Growth Plan – Mutual Funds) உங்கள் மூலதனத்தை  பெருக்க கூடியவை. அதே நேரத்தில், டிவிடெண்ட் அளிக்கும் நிறுவனங்களும், டிவிடெண்ட் திட்டங்களும் நல்ல ஈவுத்தொகையை கொடுக்கும். ஆனால், பெருவாரியான வளர்ச்சியை பெறாது. சந்தையில் நல்ல நிறுவன பங்குகளின் விலை எப்போதும் அதிகமாக தான் இருக்கும். டிவிடெண்ட் அளிக்கும் நிறுவனங்களின் பங்கு விலை நீண்டகாலத்தில் முதலீட்டு பெருக்கத்தை ஏற்படுத்தாது. காரணம் என்னவென்றால், அளிக்கப்பட்ட டிவிடெண்ட் தொகை எந்த வளர்ச்சியையும் பெறுவதில்லை.

 

உங்கள் வீடு குறிப்பிடத்தக்க வாடகை வருமானத்தை தராமல் போகலாம், ஆனால் அவற்றின் முதலீடு அருமையான விலையை கொண்டிருக்கலாம். அதனால் தான் நகர்ப்புறங்களில் நெரிசலான இடங்களில் வீட்டு மனையின் விலை அதிகமாக உள்ளது. காரணம், அவை நல்ல தொடர் வருவாயை அளிக்கும் என்ற எதிர்பார்ப்பால்.

 

நீங்கள் ஏன் டிவிடெண்ட் திட்டத்தை தேர்ந்தெடுப்பது சிறந்ததாகாது எனில், அவை கூட்டு வட்டியின் மதிப்பை இழக்கின்றன. நீங்கள் வீட்டில் வைத்திருக்கும் ஒரு லட்சம் ரூபாய் (தேவையில்லாத நிலையில்) எந்தவொரு வளர்ச்சியையும் பெறுவதில்லை. ஆனால் அதனை அருகிலுள்ள வங்கியிலோ அல்லது அஞ்சலகத்திலோ டெபாசிட் செய்திருந்தால், அது மற்றொருவருக்கு வங்கியின் மூலம் கடனாக கொடுக்கப்படும். உங்களுக்கான வருவாய் வளர்ச்சியும் கிடைக்கும். 

 

டிவிடெண்ட் பங்குகளும், பரஸ்பர நிதிகளின் டிவிடெண்ட் திட்டங்களும் பொதுவாக ஓய்வு பெறும் நபர்களுக்கு பயன்படும். ஏனென்றால் அவர்களுக்கு வளர்ச்சியை விட, தொடர் வருவாய் அவசியமாகும். இது போல தொடர் வருவாய் பெற விரும்புபவர்கள் வேண்டுமானால், இது போன்ற திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். அதே வேளையில் எந்த பங்கும், டிவிடெண்ட் திட்டமும் ஒரே  அளவிலான டிவிடெண்ட் தொகையை தொடர்ச்சியாக அளிக்கும் என சொல்ல முடியாது. 

 

இளைய தலைமுறையினரும், ரிஸ்க் எடுக்கும் முதலீட்டாளர்களும் வளர்ச்சி பெறக்கூடிய நிறுவனங்களையும், வளர்ச்சி பிரிவு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களையும் தேர்ந்தெடுக்கும் போது, அபரிதமான முதலீட்டு பெருக்கத்தை ஏற்படுத்தலாம். பொதுவாக, முதலீடு என்பது வளர வேண்டும். இது போன்ற டிவிடெண்ட் திட்டங்களால் அவை கட்டுப்படுத்தப்பட கூடாது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

 

 

வங்கி வட்டி விகிதம் – கடந்த ஒரு வருட பார்வை 2019

வங்கி வட்டி விகிதம் – கடந்த ஒரு வருட பார்வை 2019

India Interest Rate – REPO Rate – A look at the past one year 

நாட்டின் பொருளாதாரம் கடந்த ஒன்றரை வருடங்களாக மந்தநிலையில் உள்ளது. 2018ம் ஆண்டு ஜூலை காலாண்டில் 8 சதவீதமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம்(GDP Growth), அக்டோபர் 2019 முடிவில் 4.5 சதவீதம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பணவீக்கம் குறைந்திருந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது.

2018ம் ஆண்டு ஜூலை காலத்தில் 4.17 சதவீதமாக இருந்த சில்லரை விலை பணவீக்கம்(Inflation), பின்னர் நடப்பு 2019ம் ஆண்டின் ஜனவரி காலத்தில் 1.97 சதவீதம் என்ற நிலையிலிருந்து, தற்போது 4.62 சதவீதம் என்ற விகிதத்தில் உள்ளது. இது வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கலாம் என சொல்லப்படுகிறது.

நாட்டின் வங்கி வட்டி விகிதத்தை (ரெப்போ) பொறுத்தவரை, கடந்த ஒரு வருட காலமாக குறைந்த வண்ணம் உள்ளது. இது கடன் பெறுபவர்களுக்கு சாதகமாகவும், அதே வேளையில் வங்கியில் டெபாசிட் செய்பவர்களுக்கு பாதகமாகவும் அமைந்துள்ளது.

கடந்த வருடத்தின் இரண்டாம் அரையாண்டில் 6.5 சதவீதமாக இருந்த வங்கி ரெப்போ வட்டி விகிதம்(REPO Rate), தற்போது 5.15 சதவீதமாக உள்ளது. ஆக, ஒரு வருட காலத்தில் மத்திய ரிசர்வ் வங்கியால் குறைக்கப்பட்ட ரெப்போ விகிதம் 135 புள்ளிகளாகும்.

2019ம் ஆண்டின் பிப்ரவரி காலத்தில் 6.5 சதவீதமாக இருந்த ரெப்போ விகிதம் 6.25 சதவீதமாக குறைக்கப்பட்டிருந்தது. பின்னர் ஏப்ரல் மாதத்தில் 6.25 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக சொல்லப்பட்டது. நடப்பு ஜூன் காலத்தில் மேலும் 25 புள்ளிகள் குறைக்கப்பட்டு, 5.75 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 2019 காலாண்டில் வங்கி ரெப்போ விகிதம் அதிகபட்சமாக 35 புள்ளிகள் குறைக்கப்பட்டு, 5.75 சதவீதத்திலிருந்து 5.40 சதவீதமாக அறிவிக்கப்பட்டது. அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற மத்திய நிதி கொள்கை குழு கூட்டத்தில்(Monetary Policy Committe), வங்கிக்கான வட்டி விகிதத்தை 5.15 சதவீதமாக குறைத்தது.

நடப்பு டிசம்பர் காலத்திற்கான மத்திய நிதி கொள்கை குழு கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என பாரத ரிசர்வ் வங்கி தெரிவித்தது. இந்த ஆண்டில் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாதது, இதுவே முதன்முறை.

2019-20ம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டில் காய்கறிகள், பால் பொருட்கள், பருப்பு வகைகள் மற்றும் சர்க்கரை ஆகியவற்றின் விலை அதிகரிக்க கூடும் எனவும், இதன் காரணமாக பணவீக்கம் 4.7 – 5.1 சதவீதம் என்ற அளவில் இருக்கலாம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 20 வருடங்களில் நாட்டின் வங்கி வட்டி விகிதம் சராசரியாக 6.65 சதவீதத்தில் உள்ளது. அதிகபட்சமாக கடந்த 2000ம் வருடத்தின் ஆகஸ்ட் காலத்தில் இது 14.50 சதவீதமாக இருந்துள்ளது கவனிக்கத்தக்கது. குறைந்தபட்சமாக 2009ம் வருடத்தின் ஏப்ரல் மாதத்தில் 4.25 சதவீதமாக வங்கி ரெப்போ விகிதம் இருந்துள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

தனிநபர் வருமான வரி குறைப்பு எப்போது ? நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

தனிநபர் வருமான வரி குறைப்பு எப்போது ? நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 

Cut in Personal Income Tax – Expected to be soon

 

நாட்டின் பொருளாதார மந்தநிலையை சரி செய்யவும், நிறுவனங்களின் வருவாயை தக்க வைக்கவும், மத்திய நிதி அமைச்சகம் சில மாதங்களுக்கு முன்பு நிறுவனங்களுக்கான வரி குறைப்பு சலுகையை அறிவித்தது. இதன் காரணமாக பெரும்பாலான நிறுவனங்கள் தங்களை நஷ்டத்தில் செல்லாமல், லாபத்தில் தக்க வைத்து கொண்டன.

 

வரி குறைப்பு நடவடிக்கை இல்லாத நிலையில், அவை நஷ்டத்தில் இயங்க கூடும். விற்பனையும் குறைவாக இருப்பதால், நஷ்டத்தில் செல்லக்கூடிய நிறுவனங்கள் தாங்கள் பெற்ற வங்கி கடனை செலுத்த முடியாமல் போகலாம் அல்லது தொழில் செய்ய மேலும் கடனை வாங்க நேரிடலாம். இது வங்கிகளின் நிதிநிலையிலும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இதனை தவிர்க்கும் பொருட்டு, அரசு வரி குறைப்பை ஏற்படுத்தியிருந்தது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இதனிடையே ஜி.எஸ்.டி.(GST) என சொல்லப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்கள் அதிகரிக்கப்படலாம் என கூறப்படுகிறது. வரி குறைப்பும், ஜி.எஸ்.டி. வருவாயும் குறைந்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் என தெரிகிறது. ஒரு புறம் ஜி.எஸ்.டி. மூலம் பெறப்பட வேண்டிய தொகை(GST Refund) இன்னும் கிடைக்கவில்லை என நிறுவனங்கள் சார்பிலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில், ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள் உயர்த்தப்படும் பட்சத்தில், அவை வரும் நிதியாண்டில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். கடந்த செப்டம்பர் மாதத்தில் குறைக்கப்பட்ட நிறுவனங்களுக்கான வரி காரணமாக, அரசுக்கு 1.50 லட்சம் கோடி ரூபாய் சுமையாக சொல்லப்பட்டிருந்தது. இது நாட்டின் நிதி பற்றாக்குறையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

 

ஏற்கனவே நாட்டின் பட்ஜெட் வருவாய்க்கு அதிகமான செலவினங்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது போன்ற சூழ்நிலையில், தனிநபர் சார்ந்த வருமான வரி வரம்பில் மாற்றம் ஏற்படுத்தப்படுமா என நிதி அமைச்சகத்திடம் கேட்கப்பட்டிருந்தது. இதற்கு பதிலளித்த நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், ‘ நாட்டில் வரிகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் விலக்கு இல்லாத வரி திட்டங்களை அமல்படுத்தவும் அரசு தயாராக உள்ளது ‘ என்றார். 

 

தனிநபர் வருமான வரி குறைப்பு வரவிருக்கும் நிதியாண்டில் இருக்கலாம் என்பதையும் நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் தனிநபர் வருவாய் அதிகரிக்கலாம். மேலும் சந்தையில் வாங்கும் தன்மை மற்றும் பொருளாதாரத்தை ஊக்குவிக்க இது துணைபுரியும் என சொல்லப்படுகிறது. தனிநபர் வருமான வரி விகிதங்கள் தற்போது 5,20 மற்றும் 30 சதவீதம் என்ற முறைகளை கொண்டுள்ளது. எப்படியிருந்தாலும், இதனால் ஏற்படப்போகும் நிதி சுமையை அரசு எவ்வாறு கையாள போகிறது என்பதே அனைவருடைய கேள்வி.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமே : பாரத ரிசர்வ் வங்கி – பொருளாதார மந்தநிலை

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமே : பாரத ரிசர்வ் வங்கி – பொருளாதார மந்தநிலை 

Unchanged in REPO rate, Cut in GDP growth  – RBI Policy – Economy Slowdown 

வியாழக்கிழமை (05-12-2019) அன்று நடைபெற்ற மத்திய நிதி கொள்கை குழு கூட்டத்தின்(Monetary Policy Committee) முடிவில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என பாரத ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஐந்து காலாண்டுகளாக குறைக்கப்பட்டு வந்த ரெப்போ வட்டி விகிதம் இம்முறை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

நடப்பில் இதுவரை 135 அடிப்படை புள்ளிகள் வரை ரெப்போ விகிதம்(REPO Rate) குறைக்கப்பட்டுள்ளது. கடந்த காலாண்டில் நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், பாரத ரிசர்வ் வங்கியின் குறுகிய கால இலக்கான 4 சதவீதத்தை தாண்டி 4.62 சதவீதமாக இருந்தது.

தற்போது காணப்படும் விலை உயர்வு மேலும் அதிகரிக்கும் சூழ்நிலையில், டிசம்பர் காலத்திற்கு 5 சதவீத பணவீக்கத்தை கடக்கலாம். இவ்வாறான நிலையில், பாரத ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை குறைத்திருந்தால் பணவீக்கத்திற்கு குறைவான வட்டி விகிதம் காணப்படலாம்.

ஆனால் ரெப்போ வட்டி விகிதத்தில் சந்தை எதிர்பார்த்த 25 புள்ளிகள் குறைப்பு இம்முறை நடக்கவில்லை. மாறாக ஏற்கனவே இருந்த 5.15 சதவீத ரெப்போ விகிதம் தொடரும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. வருங்காலங்களில் ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு இருக்கலாம் எனவும் பாரத ரிசர்வ் வங்கி சுட்டி காட்டியுள்ளது.

நிதி கொள்கை குழு கூட்டத்தில் சொல்லப்பட்ட தகவல் : ரெப்போ விகிதம் 5.15 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 4.90 சதவீதமாகவும் தொடரும். 2019-20ம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டில் நாட்டின் பணவீக்கம்(Inflation) 4.70 % – 5.10 % என்ற நிலையில் இருக்கலாம். நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது முன்னர் 6.10 சதவீதமாக சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த சில காலாண்டுகளாக குறைந்து வருவதும், அதே வேளையில் சமீப கால விலைவாசி உயர்வும், வேலைவாய்ப்பின்மை விகிதமும் பொருளாதார மந்தநிலையை அதிகப்படுத்துகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

குழந்தைகளுக்கான நிதி திட்டமிடல் – சிறந்த ஐந்து பண்டுகள்

குழந்தைகளுக்கான நிதி திட்டமிடல் – சிறந்த ஐந்து பண்டுகள் 

Best 5 Funds to invest in 2020 – Children’s Gift Mutual Funds

எந்தவொரு முதலீட்டுக்கும் நிதி இலக்குகளை நிர்ணயிப்பது அவசியம். நமக்கான இலக்குகள்  குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால இலக்குகளாக இருக்கலாம். இருப்பினும், அவற்றுக்கான பெயரை கொண்டிருக்கும் போது, அதன் முதலீட்டு தன்மை நமக்கு நினைவூட்டுவதாக இருக்கும்.

உதாரணமாக ஓய்வு கால நிதி(Retirement Plan), குழந்தைக்கான கல்வி(Child Education), வீடு வாங்குதல், அவசர கால நிதி(Emergency Fund) என பல நிதி இலக்குகளுக்கு நாம் பெயரிடுவது சிறந்தது. இன்றைய காலத்தில் கல்வி மற்றும் மருத்துவ செலவிற்கான மதிப்பை நம்மால் சரியான நிலையில் கணிக்க முடியாது. எனவே தான் மருத்துவ செலவுகளை சமாளிக்க, குடும்பத்திற்கான மருத்துவ காப்பீட்டை(Health Insurance) பெறும் போது, அது குடும்பத்தில்  உள்ள அனைவருக்கும் பயன் தரும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

குழந்தைக்கான கல்வி எனும் போது, நம்மில் பெரும்பாலானவர்கள் அதனை திட்டமிட தவறுகிறோம். குழந்தைகளின் பள்ளிக்கால படிப்பிற்கு அதிக செலவு செய்யும் நாம் மேற்படிப்பிற்காக செலவுகளை முன்னரே திட்டமிட வேண்டும். அப்போது தான் எதிர்காலத்தில் நமது வருவாய்க்கான பட்ஜெட்டில் சிரமம் இருக்காது. குழந்தைகளின் மேற்படிப்புக்காக திட்டமிடும் போது, அது ஒரு நீண்ட கால இலக்கு என்பதை நம் மனதில் நிலை நிறுத்த வேண்டும். உதாரணமாக குழந்தையின் வயது ஒன்று என்றால், 16 வருடங்களுக்கு பின்பு தான் குழந்தைக்கான மேற்படிப்பு செலவு தேவைப்படுகிறது. எனவே அதனை மனதில் கொண்டு, பணவீக்கத்தை தாண்டிய வருவாயை பெறுவது நல்லது.

வங்கி மற்றும் அஞ்சலக சேமிப்பு பாதுகாப்பானது என நாம் சொன்னாலும், நீண்ட கால அடிப்படையில் பணவீக்கத்தை தாண்டிய வருவாயை நம்மால் பெற முடியாது. கல்வி செலவை பொறுத்தவரை பணவீக்கம் ஒவ்வொரு வருடமும் ஏறிக்கொண்டு தான் செல்கிறது. எனவே அதற்கேற்றாற் போல், பரஸ்பர நிதிகள் வழங்கும் திட்டங்களை குழந்தைகளின் கல்வி சேமிப்புக்காக முயற்சிக்கலாம்.

இன்று நம் நாட்டில் 40க்கும் மேற்பட்ட பரஸ்பர நிதி நிறுவனங்களும், அவற்றில் காலத்திற்கு தகுந்தாற் போல பல திட்டங்களும் உள்ளது. பொதுவாக 5 வருடங்களுக்கு மேற்பட்ட நிதி இலக்குகளுக்கு பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில்(Equity Mutual Funds) முதலீடு செய்யலாம். ஓய்வு பெற்றவர்கள் தங்களின் ரிஸ்க் தன்மையை கொண்டு, கடன் பண்டுகள்(Debt Funds) மற்றும் கலப்பின பண்டுகளை(Hybrid Funds) தேர்ந்தெடுக்கலாம். குழந்தைகளின் மேற்படிப்பு செலவுக்கான திட்டத்தை அவர்களின் 5 வயதுக்குள் முதலீடு செய்ய துவங்குவது சிறப்பு. அதற்கு மேலான வயதுள்ள குழந்தைகளை கொண்டிருப்பவர்களும், காலத்திற்கு ஏற்றாற் போல் முதலீடு செய்யலாம்.

குழந்தைகளுக்கான மேற்படிப்பு திட்டமிடலுக்கு சிறந்த 5 பண்டுகளை நாம் இங்கே கொடுத்துள்ளோம். அவை,

  • HDFC Children’s Gift Fund
  • ICICI Prudential Child Care Fund
  • UTI Children’s Career Fund
  • Axis Children’s Gift Fund
  • Aditya Birla Sun Life Bal Bhavisya Yojna 

மேலே சொன்ன திட்டங்கள் பரஸ்பர நிதி நிறுவனங்கள் வழங்கும் குழந்தைகளுக்கான சிறப்பு பண்டுகளாகும். இது ஒரு கலப்பின பரஸ்பர நிதி திட்டமாகும்(Hyrbrid Funds). பங்கு மற்றும் கடன் சார்ந்த இரு வகை தன்மையிலும் முதலீடு செய்யப்படுகிறது. இது போன்ற திட்டங்களில் பொதுவாக பங்கு முதலீட்டின் பங்களிப்பு 60 – 70 சதவீதமாக இருக்கும். மீதமிருக்கும் தொகை கடன் பண்டுகளில் முதலீடு செய்யப்படும்.

childrens gift fund

குழந்தைகளுக்கான பண்டுகள் 5 வருட லாக்-இன்(Lock-in Period) வசதியை கொண்டது. அதாவது இந்த பண்டுகளில் முதலீடு செய்பவர்கள், முதலீடு செய்த நாளிலிருந்து 5 வருடம் முடியும் வரை பணத்தை திரும்ப பெற முடியாது. இது தான் திட்டத்தின் சிறப்பம்சமாகவும் பார்க்கப்படுகிறது. இருப்பினும், குழந்தை 18 வயது அடைந்தவுடன் பணத்தை பெறும் வசதியும் உண்டு. பொதுவாக செல்வ மகள் திட்டத்தில் 21 வருட முடிவில் தான் பணத்தை பெற முடியும். அப்படியிருக்கையில், இதன் லாக்-இன் காலம் குறைவே. ஐந்து வருட காலத்திற்குள் திட்டத்தை முடித்து கொள்ள வேண்டுமானால், வெளியேறும் கட்டணம் வசூலிக்கப்படும். இது போன்ற வசதியால் குழந்தைக்கான இலக்குகளில் தவறாமல் முதலீடு செய்வதும், பெற்றோருக்கு முதலீட்டு ஒழுக்கத்தையும் ஏற்படுத்தும்.

திட்டத்தின் மற்றொரு சிறப்பம்சமாக, குழந்தையின் பெயரில் மட்டுமே(Name of Minor Child) முதலீடு செய்யப்படும். முதலீடு செய்யும் நபர் கொடையாளி(Donor), பாதுகாவலர் அல்லது பெற்றோராக இருக்கலாம். இந்த திட்டத்தில் மட்டுமே குழந்தையின் பெயரில் யார் வேண்டுமானாலும் முதலீட்டை மேற்கொள்ளலாம். குழந்தையின் தாத்தா, பாட்டி, மாமா, பெற்றோரின் நண்பர்கள், மற்ற உறவினர்கள் என முதலீடு செய்யும் நபர்கள் இருக்கலாம்.

திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக மாதாமாதம் 500 ரூபாயை முதலீடு செய்யலாம். எனினும், குழந்தையின் மேற்படிப்பு செலவுகளை(எதிர்கால செலவுகள்) கணக்கிட்டு அதற்கேற்றாற் போல் முதலீட்டு தொகையை அதிகரித்து முதலீடு செய்வது நல்லது. இது ஒரு நீண்ட கால திட்டம் என்பதால், பணவீக்கத்தை தாண்டிய வருவாயை பெறலாம். இந்த திட்டத்தை குழந்தைகளின் கல்விக்காக மட்டுமில்லாமல், அவர்களின் எதிர்கால திருமண திட்டமிடலுக்கும், தொழில் செய்ய தேவையான முதலீட்டிற்கும் பயன்படுத்தலாம்.

பரஸ்பர நிதி நிறுவனங்களில் காணப்படும் மற்ற பண்டுகளை தேர்ந்தெடுப்பதில் சிரமம் இருப்பவர்கள், இந்த பண்டுகளை தங்கள் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக தேர்ந்தெடுக்கலாம். நீண்ட காலத்தில் நல்ல வருவாயை பெறுவது மட்டுமில்லாமல், பெற்றோருக்கான மகிழ்ச்சியும் கிட்டும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com