Investing secrets key

என் முதலீட்டு கொள்கை, என் செல்வத்திறன் – பங்கு முதலீட்டு சூத்திரம்

என் முதலீட்டு கொள்கை, என் செல்வத்திறன் – பங்கு முதலீட்டு சூத்திரம்

My Investment Strategy and its my Wealth Potential – Equity Investing Secrets

முதலீடு என்பது ஒரு கலை. அவற்றில் பங்கு முதலீடு என்பதே செல்வ சூத்திர கலை. பங்குகளில் விளையாட்டு பல்வேறாக இருந்தாலும், இறுதியில் பங்கு ஜெயிக்க வைப்பதோ தன் நீண்டகால நண்பனை தான். அதனால் தான் என்னவோ நான் நீண்டகால முதலீட்டாளராக இருப்பதில் மகிழ்வடைகிறேன்.

 

நம்மில் எண்ணற்றோருக்கு உடனடியாக பணம் பண்ண வேண்டிய ஆசை, விரைவாக பணக்காரராக வேண்டுமென்ற பேராசை. ஆனால் அப்படியொன்று இதுவரையும் கண்டுபிடிக்கப்படவில்லை. நான் எப்போதும் சொல்லிக்கொள்வது இது தான், ‘ போன்சி(Ponzi Schemes) திட்டத்தின் மூலம் ஒருவர் விரைவாக பணக்காரராக முடியும் என எண்ணினால், ஏன் அதனை அம்பானியும், அதானியும் முயற்சிக்க கூடாது ‘. ஏனென்றால் அப்படி ஒரு ரகசியம் எதுவும் தொழிலுலகில் இல்லை.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தொழில் முதலீட்டில் மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது. அதனை சார்ந்து தொழில்கள் நகரக்கூடும். ஆனால் வளர்ச்சி என்பது நீண்டகாலத்திற்கு உரியது. நான் ஐந்து வருடத்தில் கோடீஸ்வரனாக மாறி விட்டு, தொழிலை தூக்கி போட்டு விட்டு செல்வதல்ல தொழில் வளர்ச்சி. அது தான் பங்கு முதலீடும். 

 

நம் முதலீடு வளர்வதற்கான காலம் தேவை. நான் படித்தவுடன் மேதையாகவில்லை; கை நிறைய சம்பளம் வாங்கவில்லை. எனக்கு அனுபவம் தேவைப்படுகிறது. கற்க முயற்சிக்கிறேன். ஏற்ற-இறக்கங்களுக்கு உட்படுகிறேன். சில வருடங்களுக்கு பின்பு, எனது துறையில் நான் வலுவடைகிறேன். இப்போது நான் விரைவாக முன்னேறுவதற்கான பாதை எனக்கு தெரிகிறது. இது தான் பங்கு முதலீட்டிலும்.

 

ஒரு மருத்துவராக, ஒரு பொறியாளராக அல்லது எந்த துறையிலும் மேதையாக நாம் சில நாட்களில் உருவாகி விட முடியாது. அப்படியிருக்கும் போது, பங்குச்சந்தையில் மட்டும் நாம் அவ்வாறாக நடந்து கொள்வதில்லை. பங்குகளை வாங்கிய உடனே விற்று லாபம் சம்பாதிக்க வேண்டும். முதலீடு செய்த ஆறு மாதங்களில் அது கோடிகளாக மாற வேண்டும் – எவ்வாறு சாத்தியம் ? அப்படி ஒரு வேளை கோடிகளாக மாறி விட்டாலும், அதனை கொண்டு நீங்கள் என்ன திட்டத்தை கொண்டுள்ளீர்கள் ?

 

பங்குச்சந்தைக்கும் கற்றல் அவசியம். முறையாக படிக்கும் வாய்ப்பு கிட்டவில்லை என்றாலும், புத்தகங்கள் வாயிலாகவோ, இணையம் வாயிலாகவோ கற்க முயலுங்கள். நாளிதழ்களில் உள்ள வணிக பக்கம் என்ன சொல்கிறது என கேளுங்கள். பங்குச்சந்தையில் உள்ள நிறுவனங்களின் தரத்தை பிரித்து பாருங்கள். வங்கிக்கும், பங்குச்சந்தைக்கும், தங்கத்திற்கும் என்ன சம்பந்தம் என ஆராயுங்கள். நீங்கள் பங்குகளில் முதலீடு செய்யாவிட்டாலும் பரவாயில்லை, பங்குச்சந்தையை பற்றிய கற்றலை ஐந்து வருடங்களுக்கு தொடருங்கள். 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நீங்களாகவே ஒரு நிறுவன பங்கை Fundamental Analysis அடிப்படையில் ஆராய்ந்து தேர்ந்தெடுங்கள். கடினமாக உள்ளது என முடிவெடுத்தால், தகுந்த முதலீட்டு ஆலோசகரை உங்கள் இடத்தில் வைத்து கொண்டு, பங்குகளை அலசுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பங்குகளில் பின்வருமாறு முதலீடு செய்து பாருங்கள். யாரும் இதற்கு முன்பு இவ்வாறு உங்களுக்கு சொல்லி இருப்பார்களா என தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக உங்கள் பங்கு தரகர் சொல்லியிருக்க மாட்டார். 

 

என் பங்கு முதலீட்டு கொள்கை – முதலீட்டு சூத்திரம்:

 

  • ஆரம்ப  நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கின் மீது சிறிய அளவில் முதலீடு செய்யுங்கள். அதாவது உங்கள் மொத்த முதலீட்டு தொகையில் 5-10 சதவீத தொகைக்கு மட்டும்(Investing in a Small Quantity or Little Money). பங்குகளின் எண்ணிக்கை முக்கியமல்ல. மற்றவர் 1000 பங்குகள் வாங்கியுள்ளார்; நானும் வாங்கி விரைவாக லாபம் சம்பாதிக்கிறேன் என மாட்டிக்கொள்ள வேண்டாம்.

 

  • எந்தவொரு பங்குகளில் முதலீடு செய்யும் போது, முதற்கட்டமாக சிறிய அளவில் முதலீடு செய்யும் காலத்தை சோதனை செய்யும் காலமாக எடுத்து கொள்ளலாம். அந்த பங்கு அதிக ஏற்ற-இறக்கங்களுக்கு உட்படுகிறதா என்பதனை நம்மால் அறிய முடியும். நன்றாக பங்கு வீழ்ச்சியடையும் பட்சத்தில், மலிவான விலையில் நாம் சராசரி(Average on Share Price) செய்து கொள்ளலாம். ஏற்றமடைந்தால் கவலை கொள்ள வேண்டியதில்லை.

 

  • வாங்கிய பங்கின் ஒவ்வொரு காலாண்டு விற்பனை மற்றும் லாப வளர்ச்சியை(Track Financial Results) குறித்து கொள்ளுங்கள். வளர்ச்சியில் ஏதேனும் குறை இருந்தால் காரணத்தை கண்டுபிடியுங்கள். டிவிடெண்ட், போனஸ் அறிவிப்பு ஏதும் இருந்தால் தெரிந்து கொள்ளுங்கள்.

 

  • நீங்கள் வாங்கிய பங்கின் விலை, நீங்கள் வாங்கிய விலையிலிருந்து இரு மடங்காக சென்றால், உங்களிடம் உள்ள பங்குகளின் எண்ணிக்கையில் பாதியை விற்று விடுங்கள்(Sell half after doubled the price). இவற்றில் எந்த சமரசமும் செய்யாதீர்கள். பாதி பங்குகளை விற்ற நிலையில், உங்களது முதலீடு உங்களிடமே திரும்ப வந்து விட்டது. வந்த முதலீட்டை கொண்டு மற்றொரு நல்ல பங்குகளில் முதலீடு செய்வது உங்கள் திறமை. இல்லையென்றால், உங்களுக்கான மற்ற முதலீட்டு தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்ளுங்கள்.

 

  • மீதம் இருக்கும் பங்குகளை நிறுவனம் நன்றாக செயல்படும் காலம் வரை வைத்திருங்கள்(Keep the half for a long to Wealth). இங்கே இரு மடங்கு விலை அவசியமில்லை. உங்களிடம் உள்ள இந்த மீத பங்குகள் தான் செல்வத்தை குவிப்பதற்கான வாய்ப்புகள். அவை பல காலங்களை கடக்க கூடியது. 

 

  • மேலே சொன்னவற்றை ஒவ்வொரு நிறுவன பங்கை தேர்ந்தெடுக்கும் போதும் கடைபிடிக்க வேண்டும். கையிருப்பில் வைத்திருக்கும் பங்குகளை கொண்டு டிவிடெண்ட் வருவாய் பெறுவதற்கான சாத்தியங்களையும் உருவாக்கி கொள்ளுங்கள்(Create Cash Flow from Stocks). இதனை தான், ‘பணக்கார தந்தை ஏழை தந்தை’ புத்தக ஆசிரியர் ராபர்ட் கியோசகி எப்போதும் சொல்லி வருகிறார். பங்குகளை கொண்டு தொடர் வருமானத்தை ஏற்படுத்துவது அவசியமென்று.

 

  • தொடர் நஷ்டத்தில் இயங்கி கொண்டிருக்கும், அதிக கடனை சுமக்கும் சரியில்லாத பங்குகளை வைத்திருக்காதீர்கள். நிறுவனம் திவால் நிலைக்கு செல்லும் வரை காத்திருக்காமல், பங்குகளை விற்க தயாராகுங்கள்.

 

  • தெளிவான நோக்கத்தை கொண்ட நிறுவனர், நல்ல நிர்வாகம், குழப்பமில்லா நிதி அறிக்கைகள் ஆகியவற்றை கொண்ட நிறுவன பங்குகளை தேடுங்கள். (Promoter, Corporate Governance and Financial Statements) 

 

இது தான் நான் கற்ற பங்கு முதலீட்டு சூத்திரம். பிடித்தால் பழகுங்கள். இல்லையெனில் நீங்கள் ஒரு முதலீட்டு சூத்திரத்தை கண்டறியுங்கள். செல்வத்திறன் செவிமடுக்கட்டும்.

 

Let us listen to Wealth !

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s