India interest rate

வங்கி வட்டி விகிதம் – கடந்த ஒரு வருட பார்வை 2019

வங்கி வட்டி விகிதம் – கடந்த ஒரு வருட பார்வை 2019

India Interest Rate – REPO Rate – A look at the past one year 

நாட்டின் பொருளாதாரம் கடந்த ஒன்றரை வருடங்களாக மந்தநிலையில் உள்ளது. 2018ம் ஆண்டு ஜூலை காலாண்டில் 8 சதவீதமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம்(GDP Growth), அக்டோபர் 2019 முடிவில் 4.5 சதவீதம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பணவீக்கம் குறைந்திருந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது.

2018ம் ஆண்டு ஜூலை காலத்தில் 4.17 சதவீதமாக இருந்த சில்லரை விலை பணவீக்கம்(Inflation), பின்னர் நடப்பு 2019ம் ஆண்டின் ஜனவரி காலத்தில் 1.97 சதவீதம் என்ற நிலையிலிருந்து, தற்போது 4.62 சதவீதம் என்ற விகிதத்தில் உள்ளது. இது வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கலாம் என சொல்லப்படுகிறது.

நாட்டின் வங்கி வட்டி விகிதத்தை (ரெப்போ) பொறுத்தவரை, கடந்த ஒரு வருட காலமாக குறைந்த வண்ணம் உள்ளது. இது கடன் பெறுபவர்களுக்கு சாதகமாகவும், அதே வேளையில் வங்கியில் டெபாசிட் செய்பவர்களுக்கு பாதகமாகவும் அமைந்துள்ளது.

கடந்த வருடத்தின் இரண்டாம் அரையாண்டில் 6.5 சதவீதமாக இருந்த வங்கி ரெப்போ வட்டி விகிதம்(REPO Rate), தற்போது 5.15 சதவீதமாக உள்ளது. ஆக, ஒரு வருட காலத்தில் மத்திய ரிசர்வ் வங்கியால் குறைக்கப்பட்ட ரெப்போ விகிதம் 135 புள்ளிகளாகும்.

2019ம் ஆண்டின் பிப்ரவரி காலத்தில் 6.5 சதவீதமாக இருந்த ரெப்போ விகிதம் 6.25 சதவீதமாக குறைக்கப்பட்டிருந்தது. பின்னர் ஏப்ரல் மாதத்தில் 6.25 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக சொல்லப்பட்டது. நடப்பு ஜூன் காலத்தில் மேலும் 25 புள்ளிகள் குறைக்கப்பட்டு, 5.75 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 2019 காலாண்டில் வங்கி ரெப்போ விகிதம் அதிகபட்சமாக 35 புள்ளிகள் குறைக்கப்பட்டு, 5.75 சதவீதத்திலிருந்து 5.40 சதவீதமாக அறிவிக்கப்பட்டது. அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற மத்திய நிதி கொள்கை குழு கூட்டத்தில்(Monetary Policy Committe), வங்கிக்கான வட்டி விகிதத்தை 5.15 சதவீதமாக குறைத்தது.

நடப்பு டிசம்பர் காலத்திற்கான மத்திய நிதி கொள்கை குழு கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என பாரத ரிசர்வ் வங்கி தெரிவித்தது. இந்த ஆண்டில் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாதது, இதுவே முதன்முறை.

2019-20ம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டில் காய்கறிகள், பால் பொருட்கள், பருப்பு வகைகள் மற்றும் சர்க்கரை ஆகியவற்றின் விலை அதிகரிக்க கூடும் எனவும், இதன் காரணமாக பணவீக்கம் 4.7 – 5.1 சதவீதம் என்ற அளவில் இருக்கலாம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 20 வருடங்களில் நாட்டின் வங்கி வட்டி விகிதம் சராசரியாக 6.65 சதவீதத்தில் உள்ளது. அதிகபட்சமாக கடந்த 2000ம் வருடத்தின் ஆகஸ்ட் காலத்தில் இது 14.50 சதவீதமாக இருந்துள்ளது கவனிக்கத்தக்கது. குறைந்தபட்சமாக 2009ம் வருடத்தின் ஏப்ரல் மாதத்தில் 4.25 சதவீதமாக வங்கி ரெப்போ விகிதம் இருந்துள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s