தனிநபர் வருமான வரி குறைப்பு எப்போது ? நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
Cut in Personal Income Tax – Expected to be soon
நாட்டின் பொருளாதார மந்தநிலையை சரி செய்யவும், நிறுவனங்களின் வருவாயை தக்க வைக்கவும், மத்திய நிதி அமைச்சகம் சில மாதங்களுக்கு முன்பு நிறுவனங்களுக்கான வரி குறைப்பு சலுகையை அறிவித்தது. இதன் காரணமாக பெரும்பாலான நிறுவனங்கள் தங்களை நஷ்டத்தில் செல்லாமல், லாபத்தில் தக்க வைத்து கொண்டன.
வரி குறைப்பு நடவடிக்கை இல்லாத நிலையில், அவை நஷ்டத்தில் இயங்க கூடும். விற்பனையும் குறைவாக இருப்பதால், நஷ்டத்தில் செல்லக்கூடிய நிறுவனங்கள் தாங்கள் பெற்ற வங்கி கடனை செலுத்த முடியாமல் போகலாம் அல்லது தொழில் செய்ய மேலும் கடனை வாங்க நேரிடலாம். இது வங்கிகளின் நிதிநிலையிலும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இதனை தவிர்க்கும் பொருட்டு, அரசு வரி குறைப்பை ஏற்படுத்தியிருந்தது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இதனிடையே ஜி.எஸ்.டி.(GST) என சொல்லப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்கள் அதிகரிக்கப்படலாம் என கூறப்படுகிறது. வரி குறைப்பும், ஜி.எஸ்.டி. வருவாயும் குறைந்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் என தெரிகிறது. ஒரு புறம் ஜி.எஸ்.டி. மூலம் பெறப்பட வேண்டிய தொகை(GST Refund) இன்னும் கிடைக்கவில்லை என நிறுவனங்கள் சார்பிலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள் உயர்த்தப்படும் பட்சத்தில், அவை வரும் நிதியாண்டில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். கடந்த செப்டம்பர் மாதத்தில் குறைக்கப்பட்ட நிறுவனங்களுக்கான வரி காரணமாக, அரசுக்கு 1.50 லட்சம் கோடி ரூபாய் சுமையாக சொல்லப்பட்டிருந்தது. இது நாட்டின் நிதி பற்றாக்குறையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஏற்கனவே நாட்டின் பட்ஜெட் வருவாய்க்கு அதிகமான செலவினங்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது போன்ற சூழ்நிலையில், தனிநபர் சார்ந்த வருமான வரி வரம்பில் மாற்றம் ஏற்படுத்தப்படுமா என நிதி அமைச்சகத்திடம் கேட்கப்பட்டிருந்தது. இதற்கு பதிலளித்த நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், ‘ நாட்டில் வரிகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் விலக்கு இல்லாத வரி திட்டங்களை அமல்படுத்தவும் அரசு தயாராக உள்ளது ‘ என்றார்.
தனிநபர் வருமான வரி குறைப்பு வரவிருக்கும் நிதியாண்டில் இருக்கலாம் என்பதையும் நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் தனிநபர் வருவாய் அதிகரிக்கலாம். மேலும் சந்தையில் வாங்கும் தன்மை மற்றும் பொருளாதாரத்தை ஊக்குவிக்க இது துணைபுரியும் என சொல்லப்படுகிறது. தனிநபர் வருமான வரி விகிதங்கள் தற்போது 5,20 மற்றும் 30 சதவீதம் என்ற முறைகளை கொண்டுள்ளது. எப்படியிருந்தாலும், இதனால் ஏற்படப்போகும் நிதி சுமையை அரசு எவ்வாறு கையாள போகிறது என்பதே அனைவருடைய கேள்வி.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை