Tag Archives: interest rate

முதலீட்டாளர்கள் கவனம் ஈர்க்கும் ப்ளோட்டிங் ரேட் திட்டங்கள்

முதலீட்டாளர்கள் கவனம் ஈர்க்கும் ப்ளோட்டிங் ரேட் திட்டங்கள்

Floating Rate Bonds and Funds – Inflation Insights

உலகளவில் பணவீக்க விகிதம் அதிகரித்து வருவது அனைவரும் அறிந்த விஷயம். விண்ணைத் தொடும் விலைவாசி ஒருபுறம் இருக்க, வங்கிகளுக்கான வட்டி விகிதங்களை தொடர்ச்சியாக உயர்த்தும் நிலையில் மத்திய வங்கிகள் உள்ளன.

பொதுவாக பொருளாதாரத்தில் பணவீக்கம் அதிகரித்தால், அதனை கட்டுப்படுத்த வங்கி வட்டி விகிதங்கள் உயர்த்தப்படுவதும், இதுவே பணவீக்கம் குறையும் போது அல்லது பணவாட்டம்(Deflation) ஏற்படும் நிலையில் நுகர்வு தன்மையை ஊக்கப்படுத்துவதும் இயல்பான ஒன்று.

வங்கி வட்டி விகிதங்கள் உயர்த்தப்படுவது வங்கிக்கடன் பெறுவோருக்கு சாதகமானதல்ல. வட்டி விகித அதிகரிப்பு  தனிநபருக்கு மட்டுமல்ல, தங்களது தொழிலுக்காக கடன் பெறும் நிறுவனங்களுக்கும் நல்ல செய்தியல்ல. இதன் காரணமாக நிறுவனங்களின் வருவாயில் கடனுக்கான வட்டியை செலுத்திய பிறகு, லாபங்கள் குறையலாம். அதிக கடனை கொண்டிருக்கும் பல நிறுவனங்கள் நட்டத்தையும் சந்திக்கலாம்.

இது பங்குச்சந்தைக்கும் பாதகமான நிலை தான். அதே வேளையில் வங்கிகளில் டெபாசிட் செய்பவர்களுக்கு சற்று ஆறுதலான விஷயமாக இது அமையும். பொதுவாக வங்கி வட்டி விகிதங்கள் அதிகரித்தால், நடுத்தர மற்றும் நீண்டகால கடன் பத்திரங்களுக்கான தேவை குறைந்து, அவற்றின் மீதான முதலீட்டு வருவாய் குறையும். இதற்கு மாறாக வங்கி வட்டி விகிதங்கள் குறையும் போது, கடன் பத்திரங்களுக்கான தேவை அதிகரித்து முதலீட்டு வருவாய் கூடும்.

அடுத்து வரும் சில காலாண்டுகளில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த வங்கி வட்டி விகிதங்கள் உயர்த்தப்படும். இது பங்குச்சந்தைக்கும், நீண்டகால கடன் பத்திரங்களுக்கும் குறுகிய காலத்தில் பாதகத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் ஓரளவு வருமானம் தரக்கூடிய மற்றும் பாதுகாப்பான(அதிக ஏற்ற-இறக்கம் இல்லாத) முதலீடாக வங்கி டெபாசிட், அஞ்சலக சிறு சேமிப்பு திட்டங்கள், பரஸ்பர நிதிகளில் கிடைக்கப்பெறும் லிக்விட் பண்டுகள் ஆகியவை உள்ளன. 

மேலே சொன்ன திட்டங்கள் பணவீக்கத்தை தாண்டிய வருவாயை அளிக்காவிட்டாலும், குறுகிய மற்றும் நடுத்தர கால தேவைக்கு பயன்படும் ஒரு வாய்ப்பாக உள்ளது. இந்நிலையில் தான் தொடரப்போகும் வங்கி வட்டி விகித அதிகரிப்பை, ஒரு முதலீட்டாளராக சாதகமாக பயன்படுத்தும் திட்டம் உள்ளது.

இவை தற்போது முதலீட்டாளர்களை கவனம் ஈர்க்கும் ப்ளோட்டிங் ரேட்(Floating Rate) திட்டங்களாக அமைந்துள்ளது எனலாம். வட்டி விகித அதிகரிப்பை நாம் சாதகமாக பயன்படுத்த இந்த ப்ளோட்டிங் ரேட் திட்டங்கள் பயன்படுகிறது. எப்போதெல்லாம் வங்கி வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்படுகிறதோ, அப்போது ப்ளோட்டிங் ரேட் திட்டங்களின் வருவாயிலும் மாற்றம் செய்யப்படும்.

உதாரணமாக வட்டி விகிதம் அதிகரித்தால், ப்ளோட்டிங் ரேட் திட்டங்களின் வருவாயும் அதிகரிக்கும். மாறாக வட்டி விகிதம் குறைந்தால், இத்திட்டத்தின் வருவாய் குறையும். மற்ற கடன் பத்திரங்களின் நிலையான வட்டி விகித ரிஸ்க் தன்மையை குறைக்க, ப்ளோட்டிங் ரேட் திட்டங்களின் வட்டி விகித வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

ப்ளோட்டிங் ரேட் திட்டங்கள் வங்கி டெபாசிட் மூலமும், பரஸ்பர நிதிகளில் பண்டு வாயிலாகவும் கிடைக்கப்பெறுகிறது. 

RBI Floating Rate Savings Bond:

  • அரசு பத்திரங்களாக கிடைக்கப்பெறுவதால், ரிஸ்க் என்பது பெரும்பாலும் இல்லை. அதே வேளையில், பணவீக்கத்தை தாண்டிய வருவாயை அளிக்காது.

 

  • பணவீக்கம் அதிகரிக்கும் காலங்களில், வட்டி விகித அதிகரிப்பை ஒரு முதலீட்டு வாய்ப்பாக பயன்படுத்தி, நடுத்தர காலத்திற்கு உதவும் ஒரு திட்டமாகும்.
  • குறைந்தபட்ச முதலீடு – ரூ.1000 & அதிகபட்ச முதலீட்டுக்கு வரம்பு எதுவுமில்லை.
  •  ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வட்டி விகிதங்கள் மாற்றி அமைக்கப்படும். தேசிய சேமிப்பு பத்திரங்களை(NSC) காட்டிலும் வட்டி வருவாய் சற்று கூடுதலாக இருக்கும்.
  • ஏழு வருடங்களில் முதிர்வு அடைக்கக்கூடிய திட்டமாக இருப்பதால், முன்னரே முதலீட்டை திரும்ப பெற முடியாது (மூத்த குடிமக்கள் தவிர்த்து).
  • கிடைக்கப்பெறும் வட்டி வருவாய்க்கு, வரி விதிப்பு உண்டு. 

   

  • பணப்புழக்கம்(Liquidity) குறைவு மற்றும் சந்தையில் பட்டியலிடப்படாதது இதன் பாதகமான அம்சம்.

 

  • வருமான வரி வரம்பில் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு இத்திட்டம் ஓரளவு பயன்படும்.

Floating Rate Fund (Mutual Fund): 

  • இது ஒரு திறந்தநிலை(Open-ended) கடன் சார்ந்த பண்டாகும். வட்டி விகித மாறுபாட்டை கொண்டிருக்கும் சொத்துக்களில் குறைந்தபட்சம் 65 சதவீத முதலீட்டை இந்த பண்டு கொண்டிருக்கும்.

 

  • அஸெட் அலோகேஷன் முறையில், வட்டி விகித அதிகரிப்பை சாதகமாக பயன்படுத்த இந்த பண்டுகளை தேர்ந்தெடுக்கலாம். மற்ற நிரந்தர வருவாயை(Fixed income) அளிக்கும் திட்டங்களை காட்டிலும், சொல்லப்பட்ட வட்டி விகித காலங்களில் ப்ளோட்டிங் ரேட் பண்டுகள் சற்று கூடுதல் வருவாயை கொடுக்கும்.
  • ப்ளோட்டிங் ரேட் பண்டுகளில் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம் மற்றும் வெளியேறலாம். பெரும்பாலும் வெளியேறும் கட்டணம் இது போன்ற திட்டங்களுக்கு பெறப்படுவதில்லை.
  • குறைந்தபட்ச முதலீடு ரூ.500 (எஸ்.ஐ.பி. முறையில் 100 ரூபாய் முதல் துவக்கலாம்).
  •  பொதுவாக கடன் சார்ந்த பண்டு திட்டங்களில், வங்கி வட்டி விகிதம் அதிகரிக்கும் போது, என்.ஏ.வி.(NAV) குறைந்து வர்த்தகமாகும். ஆனால், ப்ளோட்டிங் ரேட் பண்டுகளில் வட்டி விகித வாய்ப்பை பயன்படுத்தி முதலீடு செய்யப்படும்.

 

  • கடன் சார்ந்த பண்டுகளில் காணப்படும் வரி விகிதமே, இந்த திட்டத்திற்கும் பொருந்தும்.

கவனிக்க:

குறுகிய காலத்தில் ப்ளோட்டிங் ரேட் திட்டங்கள் பயன்பட்டாலும், நீண்ட காலத்தில் பணவீக்கத்தை தாண்டிய வருமானத்தை அளிக்க பங்கு சார்ந்த திட்டங்களை போல வேறு எதுவுமில்லை.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Advertisement

வங்கி வட்டி விகிதம் – கடந்த ஒரு வருட பார்வை 2019

வங்கி வட்டி விகிதம் – கடந்த ஒரு வருட பார்வை 2019

India Interest Rate – REPO Rate – A look at the past one year 

நாட்டின் பொருளாதாரம் கடந்த ஒன்றரை வருடங்களாக மந்தநிலையில் உள்ளது. 2018ம் ஆண்டு ஜூலை காலாண்டில் 8 சதவீதமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம்(GDP Growth), அக்டோபர் 2019 முடிவில் 4.5 சதவீதம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பணவீக்கம் குறைந்திருந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது.

2018ம் ஆண்டு ஜூலை காலத்தில் 4.17 சதவீதமாக இருந்த சில்லரை விலை பணவீக்கம்(Inflation), பின்னர் நடப்பு 2019ம் ஆண்டின் ஜனவரி காலத்தில் 1.97 சதவீதம் என்ற நிலையிலிருந்து, தற்போது 4.62 சதவீதம் என்ற விகிதத்தில் உள்ளது. இது வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கலாம் என சொல்லப்படுகிறது.

நாட்டின் வங்கி வட்டி விகிதத்தை (ரெப்போ) பொறுத்தவரை, கடந்த ஒரு வருட காலமாக குறைந்த வண்ணம் உள்ளது. இது கடன் பெறுபவர்களுக்கு சாதகமாகவும், அதே வேளையில் வங்கியில் டெபாசிட் செய்பவர்களுக்கு பாதகமாகவும் அமைந்துள்ளது.

கடந்த வருடத்தின் இரண்டாம் அரையாண்டில் 6.5 சதவீதமாக இருந்த வங்கி ரெப்போ வட்டி விகிதம்(REPO Rate), தற்போது 5.15 சதவீதமாக உள்ளது. ஆக, ஒரு வருட காலத்தில் மத்திய ரிசர்வ் வங்கியால் குறைக்கப்பட்ட ரெப்போ விகிதம் 135 புள்ளிகளாகும்.

2019ம் ஆண்டின் பிப்ரவரி காலத்தில் 6.5 சதவீதமாக இருந்த ரெப்போ விகிதம் 6.25 சதவீதமாக குறைக்கப்பட்டிருந்தது. பின்னர் ஏப்ரல் மாதத்தில் 6.25 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக சொல்லப்பட்டது. நடப்பு ஜூன் காலத்தில் மேலும் 25 புள்ளிகள் குறைக்கப்பட்டு, 5.75 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 2019 காலாண்டில் வங்கி ரெப்போ விகிதம் அதிகபட்சமாக 35 புள்ளிகள் குறைக்கப்பட்டு, 5.75 சதவீதத்திலிருந்து 5.40 சதவீதமாக அறிவிக்கப்பட்டது. அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற மத்திய நிதி கொள்கை குழு கூட்டத்தில்(Monetary Policy Committe), வங்கிக்கான வட்டி விகிதத்தை 5.15 சதவீதமாக குறைத்தது.

நடப்பு டிசம்பர் காலத்திற்கான மத்திய நிதி கொள்கை குழு கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என பாரத ரிசர்வ் வங்கி தெரிவித்தது. இந்த ஆண்டில் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாதது, இதுவே முதன்முறை.

2019-20ம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டில் காய்கறிகள், பால் பொருட்கள், பருப்பு வகைகள் மற்றும் சர்க்கரை ஆகியவற்றின் விலை அதிகரிக்க கூடும் எனவும், இதன் காரணமாக பணவீக்கம் 4.7 – 5.1 சதவீதம் என்ற அளவில் இருக்கலாம் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 20 வருடங்களில் நாட்டின் வங்கி வட்டி விகிதம் சராசரியாக 6.65 சதவீதத்தில் உள்ளது. அதிகபட்சமாக கடந்த 2000ம் வருடத்தின் ஆகஸ்ட் காலத்தில் இது 14.50 சதவீதமாக இருந்துள்ளது கவனிக்கத்தக்கது. குறைந்தபட்சமாக 2009ம் வருடத்தின் ஏப்ரல் மாதத்தில் 4.25 சதவீதமாக வங்கி ரெப்போ விகிதம் இருந்துள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான ஏப்ரல் மாத வட்டி விகிதங்கள் – 2019

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான ஏப்ரல் மாத வட்டி விகிதங்கள் – 2019

Small Savings Scheme Interest rates for the Period – April to June 2019

 

அஞ்சலக மற்றும் வங்கிகளுக்கான சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை மத்திய நிதி அமைச்சகத்தால்(Ministry of Finance)  அறிவிக்கப்படும். சமீபத்தில் நிதி அமைச்சகம் வெளியிட்ட ஒரு தகவலில் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலத்திற்கு வட்டி விகிதங்கள் உயர்த்தப்படவில்லை எனவும், ஏற்கனவே இருந்த (ஜனவரி-மார்ச் 2019) வட்டி விகிதங்களே இம்முறையும் தொடரும் எனவும் கூறியுள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

எனவே நடப்பு மாதத்தில், அதாவது ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரையிலான நாட்களுக்கு வட்டி விகிதத்தில் மாற்றமில்லை. கடந்த முறை வெளியிட்ட வட்டி விகிதங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது நினைவிருக்கலாம். ஒரு வருட வைப்பு தொகையில் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் 2018 வரை 6.9 சதவீத வட்டியும், இதுவே நடப்பு ஜனவரி முதல் மார்ச் மாத காலத்தில் 7 சதவீதமாகவும் இருந்தது.

 

கடந்த நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில், மூன்று வருடத்திற்கான வைப்பு தொகை(3 Years Term Deposit) வட்டி விகிதம் 7.20 சதவீதமாக இருந்தது. பின்னர் இவற்றில் மாற்றம் செய்யப்பட்டு நான்காம் காலாண்டில் 7 சதவீதமாக குறைக்கப்பட்டது. சிறு சேமிப்பு திட்டங்களில் கடந்த சில வருடங்களாக குறைவான வட்டி விகிதங்கள்(Interest Rate Cut) இருப்பது கவனிக்கத்தக்கது. இதற்கு காரணமாக செயல்படுவது பணவீக்க காரணியாகும்(Inflation Rates).

Small Savings scheme interest 2019

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வட்டி விகிதத்தில் அதிகபட்ச வட்டியாக மூத்த குடிமக்கள் திட்டத்திற்கு(Senior Citizen Savings Scheme) 8.70 சதவீதம் வழங்கப்படுகிறது. செல்வமகள் திட்டம்(Sukanya Samriddhi) 8.5 சதவீதமும், கிசான் விகாஸ் பத்திரம் 7.70 சதவீதமும் மற்றும் தேசிய சேமிப்பு பத்திரம்(NSC) 8 சதவீத வட்டியும் அளிக்கப்படும்.

 

கடந்த 20 வருடங்களில் பி.பி.எப்.(Public Provident Fund) வட்டி விகிதம் எவ்வாறு இருந்தது ?

 

பொது வருங்கால வைப்பு நிதிக்கான(PPF) வட்டி விகிதங்கள், சில வருடங்களாக குறைந்த விகிதத்தில் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 20 வருட கால பி.பி.எப். வட்டி விகிதங்களில் அதிகபட்சமாக 1986ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை 12 சதவீதமும், குறைந்தபட்ச விகிதமாக கடந்த 2018ம் வருடத்தில் 7.60 சதவீத வட்டி விகிதமும் உள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

கடந்த 20 வருடங்களில் பி.பி.எப்.(Public Provident Fund) வட்டி விகிதம் எவ்வாறு இருந்தது ?

கடந்த 20 வருடங்களில் பி.பி.எப்.(Public Provident Fund) வட்டி விகிதம் எவ்வாறு இருந்தது ?

PPF(Public Provident Fund) Interest rate over the past 20 years

 

நமது நாட்டின் பலம் மிகுந்த தன்மையே பண்பாடும், அதனை சார்ந்த ஒருமைப்பாடும் தான். கூட்டு குடும்பத்தின் இலக்கணமாக திகழ்ந்த நம் நாட்டில் இன்று தனிக்குடும்பம் என்ற நிலை இருந்தாலும், விழா காலங்களிலும், ஒவ்வொரு குடும்பத்தில் நிகழும் சுக-துக்க நிகழ்ச்சிகளில் நமது ஒற்றுமை எப்போதும் வெளிப்படும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பண்பாடும், ஒருமையும் மட்டுமே நமது வலிமை என்று கூறினால் அது மட்டுமே இல்லை. நமது மற்றொரு பலம் ஒவ்வொருவரின் சேமிப்பிலும் உள்ளது. மற்ற நாடுகளை போல் இல்லாமல், நம்மிடம் சேமிப்பு மற்றும் முதலீட்டின் சதவீதம் சற்று அதிகமாகவே உள்ளது. நமது பாரம்பரியத்தில் ரிஸ்க்(Risk reward) எடுக்கும் திறன் வேண்டுமானால் குறைவாக இருக்கலாம். அதனால் தான் நம்மில் பெரும்பாலோர் பாதுகாப்பாக இருக்கும் முதலீட்டு சாதனத்தில் நம்முடைய பணத்தை அதிகளவில் கொண்டிருக்கிறோம்.

 

பாதுகாப்பான சேமிப்பு(Safe Investments) என்று சொல்லும் போது, வங்கி மற்றும் அஞ்சலகத்தின் மீது நம்முடைய பற்று அதிகமாகவே .காணப்படுகிறது. அரசு மற்றும் தனியார் நிறுவன வேலையில் இன்று ஓய்வூதியம் என்ற விஷயம் இல்லையென்றாலும், வருங்கால வைப்பு நிதி(PPF) என்ற சாதனம் இன்றும் கவர்ச்சிகரமாகவே உள்ளது. பணவீக்க விகிதம் குறைவாக இருக்கும் இக்காலத்தில், வருங்கால வைப்பு முதலீட்டில் சேமிக்கப்படும் தொகை அதிகமாக தான் இருந்துள்ளது. கடந்த சில வருடங்களாக பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம்(Interest rate) 7-8 சதவீதம் என்ற நிலையிலே உள்ளது. இது கடந்த 20 வருட காலத்தில்(PPF Interest rate History) எவ்வாறு இருந்துள்ளது என பார்ப்போம்.

 

கடந்த 2001ம் வருடத்திற்கு முன்பு, பி.பி.எப். வட்டி விகிதம் 10 சதவீதத்திற்கு மேல் இருந்துள்ளது. அப்போதைய பணவீக்கமும்(Inflation) சற்று அதிகம் தான். 1986ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை, பொது வருங்கால வைப்பு நிதியில் வழங்கப்பட்ட வட்டி விகிதம் 12 சதவீதமாக உள்ளது. இன்று பரஸ்பர நிதித்திட்டங்கள்(Mutual Funds) சராசரியாக கொடுக்கும் வட்டி இதுவாகும். பின்னர் 2001 மற்றும் 2002ம் வருடங்களில் இதன் வட்டி விகிதம் 9 சதவீதத்திலிருந்து 10 சதவீதம் வரைக்குள்ளாக அமைந்துள்ளது.

PPF Interest Rates History

2003ம் ஆண்டுக்கு பிறகு பி.பி.எப். சாதனத்திற்கான வட்டி விகிதம் 9 சதவீதத்திலிருந்து படிப்படியாக குறைந்துள்ளது எனலாம். சொல்லப்பட்ட இந்த காலத்தில் தொடர் வைப்பு நிதியில்(Recurring Deposit -RD) வட்டி விகிதம் 10-14 சதவீதம் வரை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2003ம் ஆண்டில் 9 சதவீதமாக இருந்த பி.பி.எப். வட்டி விகிதம் 2016-17ம் நிதியாண்டில் 8 சதவீதமாக முடிவடைந்துள்ளது. 2018ம் ஆண்டின் துவக்கத்தில் 20 வருட கால குறைவாக 7.60 சதவீதம் என்ற வட்டி விகிதத்தில் இருந்தது.

 

கடந்த ஆண்டின் இறுதியில், அதாவது சென்ற காலாண்டில் 7.60 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக அதிகரித்துள்ளது. நடப்பு வருடத்தின் ஜனவரி-மார்ச் காலத்திற்கு பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லாமல் அதே 8 சதவீத வட்டியில் தொடரும் நிதி அமைச்சகம்(Ministry of Finance) கூறியுள்ளது. சிறு சேமிப்புக்கான வட்டி(Small Savings Scheme) விகித மாற்றத்தை அரசு மூன்று மாதத்திற்கு ஒரு முறை வெளியிடும். இன்று பங்குச்சந்தை மற்றும் பரஸ்பர நிதித்திட்டங்கள் நீண்ட காலத்தில் நல்ல வருமானத்தை தருகிற போதிலும், ஓய்வு காலத்திற்கான(Retirement Fund) பாதுகாப்பான முதலீடாக பி.பி.எப். கருதப்படுகிறது.

 

தற்போது கொடுக்கப்படும் வட்டி விகிதம் குறைவு தான் எனினும், அனைவருக்குமான ஓய்வூதிய முதலீட்டு சாதனம் இதுவே. பொது வருங்கால வைப்பு நிதியில் குறைந்தபட்ச முதலீட்டு தொகையாக ரூ. 500/- உள்ளது. இத்திட்டத்தில் கூட்டு வட்டியின் பலன் வருட காலத்தில்(Annually Compounding) செயல்படும். பிரிவு 80C (Income Tax act) ன் கீழ் வருமான வரிச்சலுகையும் பி.பி.எப். முதலீட்டுக்கு உண்டு. பி.பி.எப். கணக்கை ஒருவர் வங்கியிலோ அல்லது அருகில் இருக்கும் அஞ்சலகத்திலோ தொடங்கலாம். புதிய பி.பி.எப். கணக்கை ஆன்லைன்(PPF Online) மூலமும் ஆரம்பித்து முதலீடு செய்யலாம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு

Interest Rate hikes for Small Savings Schemes – 2018

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்த வட்டி விகித உயர்வு வரும் அக்டோபர் – டிசம்பர் காலத்திற்கு உரியதாகும். இதன் மூலம் வங்கி டெபாசிட்களுக்கான  வட்டிவிகிதமும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மத்திய நிதிக்கொள்கை குழு கூட்டம் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், ஏற்கனவே சில வங்கிகள் டெபாசிட்களுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன. மத்திய நிதி அமைச்சகம் வியாழக்கிழமை (20-09-18) வெளியிட்ட அறிக்கையின் படி, பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund -PPF) மற்றும் தேசிய சேமிப்பு பத்திர (National Savings Certificate -NSC) திட்டத்திற்கு 8 சதவீத வட்டியும், செல்வமகள் (Sukanya Samriddhhi Account) திட்டத்திற்கு 8.5 சதவீதமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

PPF ல் முதலீடு செய்வது சரியா ?

 

இதற்கு முன்னர் PPF மற்றும் NSC திட்டங்களுக்கு 7.6 சதவீத வட்டியும், செல்வமகள் திட்டத்திற்கு 8.1 சதவீதமும் இருந்தன. அதே போல கிசான் விகாஸ் பத்திரத்திற்கு 7.3 சதவீதத்திலிருந்து 7.7 % ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னர் 118 மாத முதிர்வை கொண்ட இந்த பத்திரம் தற்போது 112 மாத கால அளவில் முதிர்வடையும்.

 

Small Savings Schemes Interest Rate

 

ஒரு வருடத்திற்கான டெபாசிட் தொகைக்கான வட்டி விகிதம் 6.6 சதவீதத்திலிருந்து 6.9 % ஆகவும், இரண்டு வருடத்திற்கு 6.7 % இலிருந்து 7 சதவீதமாகவும், ஐந்து வருடத்திற்கு 7.4 % லிருந்து 7.8 சதவீதமாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கான (Senior Citizen Savings Scheme)  5 வருட திட்டத்திற்கு 8.3 சதவீதத்திலிருந்து 8.7 % ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

5 வருட ஆர்.டி. (Recurring Deposit -RD) கணக்குக்கு வட்டி விகிதம் 6.9 சதவீதத்திலிருந்து 7.3 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சிறு சேமிப்பு திட்டத்தின் கீழ் வரும் மாதாந்திர வருமானம் தரும் (Monthly Income) கணக்கிற்கு 7.7 சதவீத வட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 7.3 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நிதி அமைச்சகத்தின் இந்த வட்டி விகித மாற்றம் வரும் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com