Tag Archives: ppf

பொது வருங்கால வைப்பு நிதியில் (பி.எப்) ஏற்பட்டுள்ள சமீபத்திய மாற்றங்கள்

பொது வருங்கால வைப்பு நிதியில் (பி.எப்) ஏற்பட்டுள்ள சமீபத்திய மாற்றங்கள் 

Recent Changes in Public Provident Fund(PPF) – 2019

பி.பி.எப்.(PPF) என சொல்லப்படும் பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு, சிறு சேமிப்பு திட்டத்தின் அங்கமாகும். மிகவும் பாதுகாப்பான முதலீடாகவும், நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு இருக்கும் பி.எப். கணக்கிற்கு மாற்றாகவும் இந்த திட்டம் பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் சிறு சேமிப்பை ஊக்குவிக்கும் சட்டத்தில் பி.பி.எப். க்கான சில மாற்றங்கள் சொல்லப்பட்டுள்ளது.

பி.பி.எப்.(Public Provident Fund) கணக்கு என்பது 15 வருட கால சேமிப்பு திட்டமாகும். தேவைப்பட்டால், 15 வருட காலத்திற்கு பிறகு 5 வருட கால அளவில் திட்டத்தை நீட்டித்து கொள்ளலாம். நடப்பில் இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.9 சதவீதமாக உள்ளது.. ஆண்டுக்கு குறைந்தபட்ச முதலீட்டு தொகை ரூ. 500 மற்றும் அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் வரை. பி.பி.எப். முதலீட்டிற்கு வருமான வரி சலுகையும் உண்டு.

கணக்கில் உள்ள பணத்தை திரும்ப பெறுவதென்றால், இதற்கு முன்பு 7 வருடங்களுக்கு பிறகு மட்டுமே முடியும். ஆனால் தற்போது 5 வருடங்கள் (நிதியாண்டுகள்) முடிந்தவுடன் பணத்தை திரும்ப பெறுவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான சிறப்பு படிவம் 5 ஐ நிரப்பி, பணத்தை கோரலாம்.

முன்னர் 7 வருடங்களுக்கு பிறகு, 25 சதவீத தொகையை மட்டுமே எடுக்க கூடிய நிலை இருந்தது. தற்போது 5 நிதியாண்டுகளுக்கு பின்னர் வரவில் உள்ள 50 சதவீத தொகையை பெறலாம். பணத்தை பெறுவதற்கான காரணங்கள் கடுமையான நோய்கள் மற்றும் குடும்பத்தில் உள்ள ஒருவர் நோய்க்கான சிகிச்சை தேவைக்காக, உயர்கல்வி தேவை மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியராக செல்லும் பட்சத்தில் என சொல்லப்பட்டுள்ளது.

பி.பி.எப். கணக்கில் வெளிநாட்டு வாழ் இந்தியர்(NRI) முதலீடு செய்ய முடியாது என்ற சட்டத்தை சற்று மாற்றி, கணக்கை துவங்கும் போது இந்திய குடிமக்களாக இருந்து பின்னாளில் வெளிநாட்டு வாழ் இந்தியராக இருந்தாலும், முதிர்வு காலம் முடியும் வரை, முதலீடு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

தற்போது குழந்தைகளின் பெயரிலும்(Minor Child) பி.பி.எப். கணக்கை துவங்கலாம். கூட்டு கணக்கும்(Joint Account) தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சேமிக்கப்படும் தொகை, கணக்கு வைத்திருப்பவருக்கு எந்தவொரு கடன் அல்லது நிதி தொடர்பாக எந்தவொரு நீதிமன்றத்தின் உத்தரவு அல்லது ஆணையின் கீழ் இணைக்கப்படாது.

பி.பி.எப். கணக்கில் உள்ள தொகையை கொண்டு, கடன் வசதியும் பெறலாம். முன்னர், கடனுக்கான வட்டி விகிதம் பி.பி.எப். கணக்கிற்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை காட்டிலும் 2 சதவீதம் அதிகமாக இருந்தது. தற்போது இது ஒரு சதவீதமாக (பி.பி.எப். வட்டி மற்றும் கூடுதலாக 1 %) சொல்லப்பட்டுள்ளது.

பொது வருங்கால வைப்பு நிதி என்பது ஓய்வு காலத்திற்கான(Retirment Savings) திட்டமாகும். இதனை சரியாக திட்டமிட்டு, நீண்ட காலத்தில் சேமித்து வரும் பட்சத்தில் நமக்கான ஓய்வு கால கார்பஸ் தொகை பலனளிக்கும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

Advertisement

கடந்த 20 வருடங்களில் பி.பி.எப்.(Public Provident Fund) வட்டி விகிதம் எவ்வாறு இருந்தது ?

கடந்த 20 வருடங்களில் பி.பி.எப்.(Public Provident Fund) வட்டி விகிதம் எவ்வாறு இருந்தது ?

PPF(Public Provident Fund) Interest rate over the past 20 years

 

நமது நாட்டின் பலம் மிகுந்த தன்மையே பண்பாடும், அதனை சார்ந்த ஒருமைப்பாடும் தான். கூட்டு குடும்பத்தின் இலக்கணமாக திகழ்ந்த நம் நாட்டில் இன்று தனிக்குடும்பம் என்ற நிலை இருந்தாலும், விழா காலங்களிலும், ஒவ்வொரு குடும்பத்தில் நிகழும் சுக-துக்க நிகழ்ச்சிகளில் நமது ஒற்றுமை எப்போதும் வெளிப்படும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பண்பாடும், ஒருமையும் மட்டுமே நமது வலிமை என்று கூறினால் அது மட்டுமே இல்லை. நமது மற்றொரு பலம் ஒவ்வொருவரின் சேமிப்பிலும் உள்ளது. மற்ற நாடுகளை போல் இல்லாமல், நம்மிடம் சேமிப்பு மற்றும் முதலீட்டின் சதவீதம் சற்று அதிகமாகவே உள்ளது. நமது பாரம்பரியத்தில் ரிஸ்க்(Risk reward) எடுக்கும் திறன் வேண்டுமானால் குறைவாக இருக்கலாம். அதனால் தான் நம்மில் பெரும்பாலோர் பாதுகாப்பாக இருக்கும் முதலீட்டு சாதனத்தில் நம்முடைய பணத்தை அதிகளவில் கொண்டிருக்கிறோம்.

 

பாதுகாப்பான சேமிப்பு(Safe Investments) என்று சொல்லும் போது, வங்கி மற்றும் அஞ்சலகத்தின் மீது நம்முடைய பற்று அதிகமாகவே .காணப்படுகிறது. அரசு மற்றும் தனியார் நிறுவன வேலையில் இன்று ஓய்வூதியம் என்ற விஷயம் இல்லையென்றாலும், வருங்கால வைப்பு நிதி(PPF) என்ற சாதனம் இன்றும் கவர்ச்சிகரமாகவே உள்ளது. பணவீக்க விகிதம் குறைவாக இருக்கும் இக்காலத்தில், வருங்கால வைப்பு முதலீட்டில் சேமிக்கப்படும் தொகை அதிகமாக தான் இருந்துள்ளது. கடந்த சில வருடங்களாக பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம்(Interest rate) 7-8 சதவீதம் என்ற நிலையிலே உள்ளது. இது கடந்த 20 வருட காலத்தில்(PPF Interest rate History) எவ்வாறு இருந்துள்ளது என பார்ப்போம்.

 

கடந்த 2001ம் வருடத்திற்கு முன்பு, பி.பி.எப். வட்டி விகிதம் 10 சதவீதத்திற்கு மேல் இருந்துள்ளது. அப்போதைய பணவீக்கமும்(Inflation) சற்று அதிகம் தான். 1986ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை, பொது வருங்கால வைப்பு நிதியில் வழங்கப்பட்ட வட்டி விகிதம் 12 சதவீதமாக உள்ளது. இன்று பரஸ்பர நிதித்திட்டங்கள்(Mutual Funds) சராசரியாக கொடுக்கும் வட்டி இதுவாகும். பின்னர் 2001 மற்றும் 2002ம் வருடங்களில் இதன் வட்டி விகிதம் 9 சதவீதத்திலிருந்து 10 சதவீதம் வரைக்குள்ளாக அமைந்துள்ளது.

PPF Interest Rates History

2003ம் ஆண்டுக்கு பிறகு பி.பி.எப். சாதனத்திற்கான வட்டி விகிதம் 9 சதவீதத்திலிருந்து படிப்படியாக குறைந்துள்ளது எனலாம். சொல்லப்பட்ட இந்த காலத்தில் தொடர் வைப்பு நிதியில்(Recurring Deposit -RD) வட்டி விகிதம் 10-14 சதவீதம் வரை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2003ம் ஆண்டில் 9 சதவீதமாக இருந்த பி.பி.எப். வட்டி விகிதம் 2016-17ம் நிதியாண்டில் 8 சதவீதமாக முடிவடைந்துள்ளது. 2018ம் ஆண்டின் துவக்கத்தில் 20 வருட கால குறைவாக 7.60 சதவீதம் என்ற வட்டி விகிதத்தில் இருந்தது.

 

கடந்த ஆண்டின் இறுதியில், அதாவது சென்ற காலாண்டில் 7.60 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக அதிகரித்துள்ளது. நடப்பு வருடத்தின் ஜனவரி-மார்ச் காலத்திற்கு பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லாமல் அதே 8 சதவீத வட்டியில் தொடரும் நிதி அமைச்சகம்(Ministry of Finance) கூறியுள்ளது. சிறு சேமிப்புக்கான வட்டி(Small Savings Scheme) விகித மாற்றத்தை அரசு மூன்று மாதத்திற்கு ஒரு முறை வெளியிடும். இன்று பங்குச்சந்தை மற்றும் பரஸ்பர நிதித்திட்டங்கள் நீண்ட காலத்தில் நல்ல வருமானத்தை தருகிற போதிலும், ஓய்வு காலத்திற்கான(Retirement Fund) பாதுகாப்பான முதலீடாக பி.பி.எப். கருதப்படுகிறது.

 

தற்போது கொடுக்கப்படும் வட்டி விகிதம் குறைவு தான் எனினும், அனைவருக்குமான ஓய்வூதிய முதலீட்டு சாதனம் இதுவே. பொது வருங்கால வைப்பு நிதியில் குறைந்தபட்ச முதலீட்டு தொகையாக ரூ. 500/- உள்ளது. இத்திட்டத்தில் கூட்டு வட்டியின் பலன் வருட காலத்தில்(Annually Compounding) செயல்படும். பிரிவு 80C (Income Tax act) ன் கீழ் வருமான வரிச்சலுகையும் பி.பி.எப். முதலீட்டுக்கு உண்டு. பி.பி.எப். கணக்கை ஒருவர் வங்கியிலோ அல்லது அருகில் இருக்கும் அஞ்சலகத்திலோ தொடங்கலாம். புதிய பி.பி.எப். கணக்கை ஆன்லைன்(PPF Online) மூலமும் ஆரம்பித்து முதலீடு செய்யலாம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி- 8.55 % ஆக குறைப்பு

தொழிலாளர்  வருங்கால  வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் – 8.55 % ஆக குறைப்பு

 

EPF Interest rate cuts to 8.55 % for 2017-18

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees’ provident fund organisation) தனது 220 வது மத்திய குழு கூட்டத்தை கடந்த புதன் கிழமை (21.02.2018) நடத்தியது. இந்த கூட்டத்தில் தொழிலாளருக்கான அமைச்சர் திரு. சந்தோஷ் குமார் கங்கவார் கலந்து கொண்டார். கூட்டத்தில் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யும் விஷயங்கள் அறிவிக்கப்பட்டது.

 

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 2017-2018 நிதியாண்டுக்கு 8.55 % ஆக நிர்ணயித்தது. இந்த நிதியாண்டு அடுத்த மாதம் மார்ச்சில் முடிவடைகிறது. கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் தற்போது அறிவிக்கப்பட்ட வட்டி விகித மாற்றம் 0.10 % (10 basis points) குறைவு.

 

கடந்த 2016-17 நிதியாண்டின் வட்டி விகிதம் 8.65 % ஆகவும், 2015-16 ல் இது 8.8 % வட்டியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வட்டி விகித குறைப்பு சுமார் 6 கோடி பி.எப். சந்தாதாரர்களை பாதிக்கும் எனவும், கடந்த 8.65 % (2016-17) வட்டி மூலம் 695 கோடி ரூபாய் உபரியாகவும்(Surplus) இருந்ததாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிதியாண்டின் 8.55 % வட்டி தாக்கத்தால் 586 கோடி ரூபாய்  எதிர்பார்க்கப்படும் உபரியாக இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

 

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

 

 

மேலும் அமைச்சர் சந்தோஷ் குமார் கங்கவார் கூறும் போது, “ இந்த அமைப்பு (EPFO) கடந்த இரு மாதங்களில் (January and February) பங்குச்சந்தையில் ரூ. 3700 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றதாகவும், அதன் மூலம் ரூ.1010 கோடி வருவாய் கிடைத்திருப்பதாகவும் “ கூறினார்.

 

பொது வருங்கால வைப்பு நிதி (Public Providend Fund -PPF)  வட்டியை காட்டிலும் தொழிலாளருக்கான வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் அதிகம் இருப்பதையும் மேற்கோள் காட்டியுள்ளது. தற்போதைய PPF வட்டி விகிதம் –  7.6 %  ஆகும்.

 

நிறுவனங்கள்  செலுத்தும் நிர்வாக செலவினங்களை (Administrative Expenses by Employers)  0.65 % லிருந்து 0.5 % ஆக குறைக்க முடிவு செய்துள்ளது. EPFO அமைப்பு ஏற்கனவே பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படும் நிதி வரம்பையும் அதிகரித்துள்ளது. முன்பு 20 பேர் கொண்ட நிறுவனங்கள் மட்டுமே வருங்கால வைப்பு நிதிக்கு விண்ணப்பிக்கும் நிலை மாறி, தற்போது 10 பேர் கொண்ட நிறுவனமாக இருந்தால் போதும் என்ற விலக்கும் EPFO ல் உள்ளது.

 

பட்ஜெட் 2018 லும் வருங்கால வைப்பு நிதியில் பெண்கள் (Women’s Contribution) தாங்கள் வேலைக்கு சேர்ந்த முதல் 3 வருடங்கள், தங்களது வருமானத்தில் 8 சதவிகிதம் மட்டும் செலுத்தினால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அனைத்து தரப்பினருக்கும் இருந்த 12 % பங்களிப்பு (PF Contribution) பெண்களுக்கும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதம் குறைப்பு (Updated on 27-12-2017)

 

சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதம் குறைப்பு (Updated on 27-12-2017)

 

  • சிறு சேமிப்பிற்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு இன்று (27/12/2017) குறைத்துள்ளது. வட்டி விகிதம் 0.2 % அளவிற்கு குறைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. இந்த வட்டி விகித குறைப்பு தேசிய சேமிப்பு பத்திரம் (NSC)  மற்றும் பொது வருங்கால வைப்பு (PPF) நிதிக்கும் பொருந்தும்.

 

  • கிசான் விகாஸ் பத்திரம் (KVP), செல்வ மகள்(Sukanya Samriddhi) திட்டத்திற்கும் வட்டி விகித குறைப்பு பொருந்தும். மூத்த குடிமக்களுக்கான திட்டத்தில் மாற்றம் எதுவும் இல்லை; ஏற்கனவே உள்ள 8.3 % ஆக தொடரும்.

 

  • சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகித மாற்றம் ஒவ்வொரு காலாண்டிற்கு ஒரு முறை நடைமுறைப்படுத்தப்படும். தற்போதைய குறைப்பு Jan – Mar 2018 க்கானது.

 

Read more on:  வங்கிகளின் வட்டி விகிதங்களை அறிவோம்

 

சிறு சேமிப்பு திட்டங்கள்

    (Small Savings Scheme )

வட்டி விகிதங்கள்  

    (Interest Rates – Jan to Mar’ 2018)

5 Years RD / Term Deposit

6.9 % | 7.4 %

Savings Deposit

4.0 %

PPF, NSC (5 Years)

7.6 %

Sukanya Samriddhi

8.1 %

Senior Citizen Savings(SCSS)

8.3 %

Kisan Vikas (KVP)

7.3 %

வர்த்தக மதுரை  | www.varthagamadurai.com

 

உங்களுடைய பகிர்வுகளுக்கு:

 

https://www.facebook.com/varthagamadurai/

 

https://www.twitter.com/varthagamadurai/

contact@varthagamadurai.com