வீழ்கிறதா எல்.ஐ.சி ? – வளர்ச்சியில் முந்தும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள்

வீழ்கிறதா எல்.ஐ.சி ? – வளர்ச்சியில் முந்தும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள்

Is LIC India declining on growth over private insurance companies ?

 

2017-18 ம் நிதியாண்டில் எல்.ஐ.சி. (Life Insurance Corporation of India) இந்தியாவின் பங்குச்சந்தை வர்த்தகம் மூலமான லாபம் மட்டும் ரூ. 25,000 கோடி. கடந்த டிசம்பர் மாத இறுதியில் இதன் பங்கு மூலமான சொத்து மதிப்பு 5 லட்சம் கோடி ரூபாயாகும்.

 

பங்குச்சந்தையில் எல்.ஐ.சி. நிறுவனத்தின் ஆதிக்கம் மற்ற பொதுத்துறை நிறுவனங்களை காட்டிலும் மிக அதிகம். இதனை சார்ந்த விமர்சனங்களும் அவ்வப்போது எழும். பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி. யில் காப்பீடு பெறும் வாடிக்கையாளர்களின் பணம் பங்குச்சந்தையிலும் முதலீடு செய்யப்படுவது கவனிக்க வேண்டியது. முன்னர் புகையிலையை தொழிலாக கொண்ட ஐ.டி.சி. (ITC) நிறுவனத்தில் எல்.ஐ.சி. முதலீடு செய்த போது சர்ச்சைக்குள்ளானது.

 

சமீப காலங்களில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் இதன் முதலீட்டு விகிதம் (Holding) சற்று அதிகமாயிருந்தது. ஐ.டி.பி.ஐ. (IDBI Bank) மற்றும் ஐ.எல்.எப்.எஸ். (IL & FS) நிதிச்சிக்கலில் மாட்டிய போது, எல்.ஐ.சி. நிறுவனம் மீட்க முன்வந்தது. மத்திய அரசே இந்த பிரச்சனையில் தலையிட்டு வங்கியை  மீட்க எல்.ஐ.சி. நிறுவனத்தை கேட்டு கொண்டது. இதற்கு சொல்லப்பட்ட முதற்காரணம் எல்.ஐ.சி. நிறுவனத்தின் பிரமாண்டமான சொத்து மதிப்பு மற்றும் நம்பிக்கைக்குரிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை.

 

ஆனால் நடந்தது என்னவோ இதன் எதிர்கால வளர்ச்சியை பாதித்துள்ளது. வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களில் எல்.ஐ.சி. வைத்திருக்கும் பங்குகள் மீது காப்பீட்டு வாடிக்கையாளர்களின் நம்பிக்கை வெகுவாக குறைந்துள்ளது. வாராக்கடன் பிரச்னையில் சிக்கும் நிறுவனங்களை ஏன் எல்.ஐ.சி. மீட்க வேண்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பங்குச்சந்தை வர்த்தகத்தின் மூலமான லாபம் ரூ. 25,000 கோடி – LIC India

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கடந்த அக்டோபர் மாதத்தில் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் வளர்ச்சி 32 சதவீதமாக உள்ளது. இதே காலத்தில் எல்.ஐ.சி. 0.5 சதவீதம் சரிவடைந்துள்ளது. தனியார் காப்பீடு நிறுவனங்களின் காப்பீடு எண்ணிக்கை குறைந்திருந்தாலும், அதன் வருமான வளர்ச்சி பொதுத்துறை காப்பீடு நிறுவனத்தை காட்டிலும் அதிகமாக உள்ளது.

 

எச்.டி.எப்.சி. லைப்  (HDFC Life) நிறுவனத்தின் வளர்ச்சி 37 சதவீதத்திலும், எஸ்.பி.ஐ. லைப் (SBI Life) 17 சதவீத வளர்ச்சி அளவிலும் உள்ளது. பொதுத்துறையில் உள்ள ஒரே காப்பீட்டு நிறுவனம் எல்.ஐ.சி. இந்தியாவாகும். வங்கிகளில் செய்யப்பட்ட மூலதனம், எல்.ஐ.சி. யில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது வரும் காலாண்டு முடிவுகளில் தெரிய வரும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

விமான நிறுவனங்களின் காலாண்டு நஷ்டமும், கையகப்படுத்தலும்

விமான நிறுவனங்களின் காலாண்டு நஷ்டமும், கையகப்படுத்தலும்

Net loss quarters and acquisition action on Airlines Industry

 

செப்டம்பர் மாத காலாண்டில் 1297 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் (Jet Airways) தெரிவித்துள்ளது. இதே காலாண்டு அறிக்கையில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் 389 கோடி ரூபாய் நட்டத்தையும், இன்டர் குளோப் (Indigo) ரூ. 652 கோடி நட்டத்தையும் கொண்டுள்ளது.

 

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த பத்து வருடங்களில் 21 காலாண்டு முடிவுகள் லாபத்தையும், 20 காலாண்டு முடிவுகளில் நஷ்டமும் (Quarterly net loss) அடைந்துள்ளன. 21 காலாண்டுகளின் மொத்த லாபமாக 4,120 கோடி ரூபாயையும், அதே வேளையில் 20 காலாண்டுகளின் நஷ்டம் ரூ. 12,450 கோடியாகும்.

 

ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் (SpiceJet) கடந்த பத்து ஆண்டுகளில் 7 ஆண்டுகள் நஷ்டத்தை பெற்றுள்ளன. அதிகபட்சமாக கடந்த 2014 ம் நிதியாண்டில் 1000 கோடி ரூபாய் நஷ்டத்தை அடைந்துள்ளன. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் கடன் 8000 கோடி ரூபாயாகவும், ஸ்பைஸ் ஜெட்டின் கடன் ரூ. 1300 கோடியாகவும் உள்ளது கவனிக்கத்தக்கது.

 

முன்னர் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் (Kingfisher Airlines) தனது கடனை அடைக்க முடியாமலும், ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாமல் விமான சேவையை நிறுத்தி கொண்டது. பின்பு அந்த நிறுவனம் திவாலானதும், நிறுவனர் வெளிநாட்டிற்கு தப்பி சென்றதும் மற்றுமொரு விஷயம். வளர்ந்து வரும் நாட்டில் விமான சேவைகளில் மக்களின் போக்குவரத்து அதிகரித்து இருந்தாலும், நிறுவனங்களின் தொடர் நஷ்டம், சேவையை தொடர விடுமா என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நடப்பு வாரத்தில் மத்திய அரசின் சூசகமான விஷயமும், ஜெட் ஏர்வேஸை டாடா நிறுவனம் கையகப்படுத்தும் முயற்சியும் சந்தையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மட்டும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்குகள் 25 சதவீத அளவிற்கு உயர்ந்தது. டாடா நிறுவனம் தனது விஸ்தாரா சேவையுடன் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை இணைக்க உள்ளதாக வெளியான தகவல் அடிப்படையில் பங்குகள் வேகமாக அதிகரிக்க ஆரம்பித்தன.

 

டாடா நிறுவனத்தின் கையகப்படுத்தும் (TATA  Vistara – Jet airways Merger) விஷயத்தை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மறுத்துள்ளது. இது சம்மந்தமான ஒரு அறிக்கையில், ஆங்கில பத்திரிகையில் (Economic Times) வெளியிடப்பட்ட செய்தி ஊகமாக சொல்லப்பட்டது எனவும், இவற்றில் உண்மை எதுவும் இல்லை எனவும் நிறுவனத்தின் துணைத்தலைவர் தெரிவித்துள்ளார்.

 

பத்திரிகையில் வெளியிடப்பட்ட இந்த கையகப்படுத்தும் செய்தியில் மத்திய அரசு  செயலாற்ற முயற்சித்து வருவதாக கூறியுள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் கடனை குறைப்பதற்கான நடவடிக்கை எனவும் தெரிவித்துள்ளது. இண்டிகோ நிறுவனத்தின் (Interglobe Aviation -INDIGO)  கடன் 2400 கோடி ரூபாயாகவும், இந்த நிறுவனம் கடந்த 8 ஆண்டுகளில் முதன்முறையாக நஷ்டத்தை நோக்கி சென்றுள்ளது. கடந்த 2017-18 ம் நிதியாண்டில் நிறுவனத்தின் லாபம் 2200 கோடியாக இருந்தது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

கச்சா எண்ணெய் விலை 70 டாலருக்கும் குறைவாக வர்த்தகம்

கச்சா எண்ணெய் விலை 70 டாலருக்கும் குறைவாக வர்த்தகம்

Crude oil prices fell below $70 a barrel

 

ப்ரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் விலை நான்கு வருடங்களுக்கு (2014) முன், பேரல் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலருக்கு மேல் வர்த்தகமானது நினைவிருக்கலாம். அதே காலத்தில் அமெரிக்காவின் டெக்சாஸ் (West Texas Intermediate -WTI) கச்சா எண்ணெய்யின் விலை பேரலுக்கு அதிகபட்சமாக 90 அமெரிக்க டாலர் என்ற அளவில் வர்த்தகமானது. தற்போது ப்ரெண்ட் எண்ணெய் 70 டாலருக்கு குறைவாகவும், WTI கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 60 டாலர் அளவிலும் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது.

 

இந்தியாவின் கச்சா எண்ணெய் (Crude oil) தேவை அதிகரிப்பால், நடப்பு மாதம் முதல் ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்ய முன்னரே ஒப்பந்தம் இருந்தது. அமெரிக்கா – ஈரான் இடையே வர்த்தக போர் இருப்பினும் இந்தியாவுக்காக, அமெரிக்கா தனது பிடியை தளர்த்தியது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்திருந்தாலும், நமது நாட்டிற்கு அதனால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

 

ஓமன் வளைகுடாவில் அமையப்போகும் சபார் (Chabahar Port) துறைமுகத்தில் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானதாகும். இதனால் பயன்பெற போகும் நாடாக ஆப்கானிஸ்தான் உள்ளது. அமெரிக்கா ஆப்கானிஸ்தான்  நாட்டுக்கு உதவும் நோக்கில் இந்தியாவின் சபார் கட்டமைப்பை இணக்கம் காட்டி, ஈரானுடன் வர்த்தகம் புரிய அனுமதி அளித்துள்ளது.

 

உலகளாவிய எண்ணெய் தேவை மற்றும் பொருளாதார மந்த நிலையால் கச்சா எண்ணெய் விலை கடந்த சில வாரங்களாக வீழ்ச்சியடைந்து வருகிறது. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் கடந்த மாதம் 10 ம் தேதி முடிவில் 83 டாலர் என்ற அளவில் வர்த்தகமானது. கடந்த ஒரு வார அதிகபட்ச விலையாக பேரலுக்கு 73 டாலராக இருந்தது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ஈரான் நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி (Iran Crude oil import) செய்யும் இரண்டாவது மிகப்பெரிய நாடு இந்தியா. நடப்பு வருடத்தில் மட்டும் இந்தியா, ஈரானிலிருந்து சராசரியாக தினமும் 5,77,000 பேரல்களை இறக்குமதி செய்து வருகிறது. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியால் எண்ணெய் நிறுவனங்களுக்கு பேரல் ஒன்றுக்கு 2-3 டாலர் வரை விலை குறைவாக கிடைக்கலாம் என கூறப்படுகிறது. இதன் காரணமாக வரும் நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

 

அதே நேரம் ஈரானில் மற்ற நாடுகளின் தேவையால் இந்தியாவில் தட்டுப்பாடு நிலவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சமையல் கேஸ் சிலண்டரின் விலையும், மாதத்தின் துவக்கத்தில் 1000 ரூபாயை நெருங்கியுள்ளது. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை, இரவு 10:30 மணியளவில் (இந்திய நேரம் – 11-09-2018) 69.80 டாலர் ($69.80 / barrel) அளவில் வர்த்தகமாகி கொண்டிருந்தது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

144 வங்கி கணக்குகள், 19 கோடி ரூபாய் – ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்

144 வங்கி கணக்குகள், 19 கோடி ரூபாய் – ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்

Only 19 Crores in combined 144 Bank accounts – Reliance Communication’s Tragedy

 

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் (Reliance Communication -Rcom) நிறுவனம் கடன் பிரச்னையால் கடந்த வருடம் தனது சேவையை நிறுத்தி கொள்வதாக அறிவித்தது. இதனை தொடர்ந்து அதன் மொபைல் வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல்லுக்கு மாறினர்.

 

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் சொல்லப்பட்ட கடன் மட்டும் ரூ. 46,000 கோடியாகும். தற்போது ரிலையன்ஸ் கம்யூனிகேஷனின் நிறுத்தப்பட்ட சேவைகள் முகேஷ் அம்பானியின் ஜியோவில் (Reliance Jio) மாற்றம் பெற்று வருகின்றன. கடன் பிரச்சினையை தொடர்ந்து முதலீடு செய்த நிறுவனங்கள் மற்றும் கடன் கொடுத்தவர்கள்  ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் மீது அடுத்தடுத்து வழக்குகளை தொடுக்க ஆரம்பித்தனர்.

 

பாஸ்டன் நகரத்தை சேர்ந்த அமெரிக்க டவர் நிறுவனம் (American Tower Corp), ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்திடம் இருந்து வசூலிப்பதற்கான ரூ. 230 கோடி தொகைக்காக வழக்கு தொடுத்துள்ளது. அதே போன்று, எரிக்சன் (Ericsson) நிறுவனமும் ரூ. 550 கோடி தொகையை பெற வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. இது சம்மந்தமாக அனில் அம்பானி நிறுவனம் தனது ஸ்பெக்ட்ரம் சேவையை ஜியோவிற்கு விற்பதன் மூலம் கடனை அடைத்து விடும் என தெரிவித்தது.

 

2018 செப்டம்பர் மாத இறுதிக்குள் எரிக்சன் கடனை அடைத்து விடும்படி நீதிமன்றம் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. இதனிடையே சொத்துக்களை விற்பதற்கான குறுக்கீடுகள், எரிக்சனின் திவால் வழக்குகள் மேலும் கால தாமதத்தை ஏற்படுத்தின. இதனை அடுத்து ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் தனக்கு 60 நாள் கூடுதல் அவகாசம் தருமாறு உச்ச நீதிமன்றம் மற்றும் தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு ஆணையத்தில் (NCLT) கேட்டு கொண்டது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

உச்ச நீதிமன்றமும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கூடுதல் அவகாசத்தை அனுமதித்து, வரும் டிசம்பர் 15 ம் தேதிக்குள் கடனை முழுமையாக அடைக்க வழிவகை செய்துள்ளது. செப்டம்பர் மாதத்திலிருந்து டிசம்பர் 15 ம் தேதி வரையிலான காலத்திற்கு தினசரி 12 சதவீத தனி வட்டியில் கடனை அடைக்க வேண்டும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன். இந்நிலையில் நிறுவனம் சார்பில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் வெளியிடப்பட்ட ஒரு தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

அதாவது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் (RCom) மற்றும் அதனை சார்ந்த ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்தின் மொத்த வங்கி கணக்குகள் 144 எனவும், அவற்றிலிருக்கும் மொத்த தொகை (Bank Balance) 19.34 கோடி ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தில்  உள்ள 119 வங்கி கணக்குகளில் உள்ள தொகை ரூ. 17.86 கோடி மட்டுமே. மீதம் உள்ள 1.48 கோடி ரூபாய் ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனத்தின் 25 கணக்குகளில் இருந்தது. வெளியேறும் கட்டணம் மற்றும் சேவை கட்டணமாக மட்டும் ரூ. 230 கோடியை அமெரிக்க டவர் நிறுவனம் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் அடுத்த விசாரணை வரும் டிசம்பர் 13 ல் நடைபெறும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

வரும் திங்கள் முதல் இந்த 9 நிறுவன பங்குகள் மும்பை பங்குச்சந்தையிலிருந்து நீக்கப்படுகின்றன

வரும் திங்கள் முதல் இந்த 9 நிறுவன பங்குகள் மும்பை பங்குச்சந்தையிலிருந்து  நீக்கப்படுகின்றன

These 9 Stocks are to be delisted from Monday – BSE India

 

சில மாதங்களுக்கு முன்பு மும்பை பங்குச்சந்தை பட்டியலில் இருந்து, விதிமீறல் காரணமாக பல்வேறு நிறுவன பங்குகள் நீக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக இப்போது பின்வரும் ஒன்பது நிறுவன பங்குகளும் வரும் திங்கள் கிழமை (05-11-2018) முதல் மும்பை பங்குச்சந்தையிலிருந்து (Bombay Stock Exchange – BSE) நீக்கப்படவுள்ளன.

 

அணில் லிமிடெட் (Anil Ltd), பிரேக்ஸ் ஆட்டோ (Brakes Auto India), இண்டஸ் பிளா (Indus Fila), ஐ.கியூ.இன்போடெக் (IQ Infotech), லோக் ஹவுசிங் (Lok Housing), மெட்ரோபோலி ஓவர்சீஸ் (Metropoli Overseas), பிதாம்பூர் ஸ்டீல் (Pithampur Steels), பிரகாஷ் சால்வெண்ட் (Prakash Solvent Extractions) மற்றும் சிபார் மென்பொருள் சேவை (Sibar Software Services) நிறுவனம் ஆகிய 9 நிறுவன பங்குகள் வரும் திங்கள் முதல் சந்தை பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாகவும், மேலும் அடுத்த ஆறு மாதங்களுக்கு அந்த நிறுவனங்களின் சந்தை செயல்பாடு இடைநீக்கம் செய்யப்படுவதாகவும் மும்பை பங்குச்சந்தை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த பங்குகள் ஏற்கனவே கடந்த 6 மாத காலமாக மும்பை சந்தையில் இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒன்பது நிறுவனங்களின் இயக்குனர்கள், நிறுவனர்கள், மற்றும் அதனை சார்ந்த குழு நிறுவனங்கள் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு சந்தையில் செயல்பட தடை செய்யப்பட்டுள்ளது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ஒன்பது நிறுவனங்களின் நிறுவனர்கள் சந்தையில் உள்ள பொது பங்குதாரர்களிடம் இருந்து பங்குகளை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கையை எடுக்குமாறும், அதற்கான பங்கு விலை மதிப்பை வெளியிடுமாறும் மும்பை பங்குச்சந்தை அறிவுறுத்தியுள்ளது.

 

தடை செய்யப்பட்ட நிறுவனங்களின் பங்குகள் இனி சந்தையில் வர்த்தகமாகாது எனவும், பங்குகளை கொண்ட பங்குதாரர்கள் நிறுவனர்களிடம் ஒப்படைப்பதற்கான செயல்பாட்டை செய்யுமாறும் செபி சார்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் மட்டும் பங்குச்சந்தையிலிருந்து 400 க்கும் மேற்பட்ட நிறுவனத்தின் பங்குகள் நீக்கப்பட்டுள்ளன.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

அக்டோபர் மாதத்தில் அன்னிய முதலீட்டாளர்களின் வெளியேற்றமும், உள்நாட்டு முதலீடு ஏற்றமும்

அக்டோபர் மாதத்தில் அன்னிய முதலீட்டாளர்களின் வெளியேற்றமும், உள்நாட்டு முதலீடு ஏற்றமும்

Mostly outflows of FII and the rise in Domestic Investments – Trading Activity for October 2018

கடந்த மாதம் (October 2018) முதலீட்டாளர்களை கலக்கத்தில் ஏற்படுத்தியது இந்திய பங்குச்சந்தை. நமது நாட்டின் பங்குச்சந்தை மட்டுமல்லாமல் மற்ற நாடுகளிலும் ஏற்ற-இறக்கம் அதிகமாக காணப்பட்டது. நாடுகளுக்கிடையே உள்ள வர்த்தக போர், கச்சா எண்ணெய் விலை மாற்றம், வங்கிகளின் செயல்பாடு போன்ற்வற்றால் பங்குச்சந்தை முதலீடு வெகுவாக பாதிக்கப்பட்டது.

 

அக்டோபர் மாதத்தில் மட்டும் நடந்த 21 வர்த்தக நாட்களில் அன்னிய முதலீட்டாளர்கள் (Foreign Institutional Investors) பெரும்பாலும் விற்பனையை மட்டும் கையாண்டிருந்தனர். அந்த மாதத்தின் மொத்த விற்பனையாக ரூ. 1,40,238 கோடியும், நிகர விற்பனையாக ரூ. 29,200 கோடியும் அன்னிய நாட்டு முதலீட்டாளர்களின் வர்த்தகமாக அமைந்தது. வெளிநாட்டு முதலீட்டாளர்களின் அக்டோபர் மாத மொத்த கொள்முதல் ரூ.111,037 கோடியாகவும், மொத்த விற்பனை ரூ.1,40,238 கோடியாகவும் இருந்தது கவனிக்கத்தக்கது.

 

இருப்பினும், உள்நாட்டு முதலீடு நல்ல ஏற்றம் பெற்றது. கடந்த மாதத்தில், உள்நாட்டு முதலீட்டாளர்கள் (Domestic Institutional Investors -DII) மொத்த கொள்முதலாக ரூ. 1,00,992 கோடியையும், மொத்த விற்பனையாக ரூ. 74, 958 கோடியையும் கொண்டிருந்தனர். அவர்களின் அக்டோபர் மாத நிகர கொள்முதல் ரூ. 26,033 கோடியாக முடிவடைந்தது.

 

அன்னிய நாட்டு முதலீட்டாளர்களை பொறுத்தவரை அக்டோபர் 15 மற்றும் 17 ம் தேதிகளில் மட்டும் நிகர கொள்முதலை பெற்றிருந்தனர். மற்ற நாட்கள் அனைத்தும் விற்பனையை மட்டுமே மேற்கொண்டிருந்தனர். அதே சமயத்தில், உள்நாட்டு முதலீட்டாளர்கள் அக்டோபர் 17 மற்றும் 19 தேதிகளில் விற்பனையையும், மற்ற வர்த்தக நாட்களில் நிகர கொள்முதலையும் வர்த்தகமாக்கினர்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கடந்த செப்டம்பர் மாதத்தினை பார்க்கும் பொழுது, வெளிநாட்டு முதலீடு நிகர விற்பனையாக ரூ.9,468 கோடியாகவும், உள்நாட்டு முதலீடு நிகர கொள்முதலாக ரூ. 12,500 கோடியாகவும் இருந்துள்ளது. இதனை கடந்த மாதத்துடன் ஒப்பிடும் போது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அக்டோபர் மாதத்தில் 200 சதவீத விற்பனையையும், உள்நாட்டு முதலீட்டாளர்கள் 108 சதவீத கொள்முதலையும் கொண்டிருந்தனர்.

 

உள்நாட்டு முதலீட்டாளர்களின் அக்டோபர் நிகர கொள்முதல் கடந்த பத்து வருடத்தில் இல்லாத அளவாகும். இதற்கு முன்னர் செப்டம்பர் 2017 மாதத்தில் இருந்த ரூ. 21,025 கோடி நிகர கொள்முதல்  தான் அதிக அளவாக சொல்லப்பட்டது.  கடந்த ஒரு மாதத்தில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ்(Sensex) குறியீடு 2000 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தை நிப்டி (Nifty50) 600 புள்ளிகளும் நிகரமாக இறங்கியுள்ளன.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

பாரத ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்குமான முரண்பாடு அதிகரிக்கிறதா ?

பாரத ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்குமான முரண்பாடு அதிகரிக்கிறதா ?

Contradiction between the RBI and Central Government

 

மத்திய ரிசர்வ் வங்கிக்கும் (Reserve Bank of India), மத்திய அரசுக்குமான கொள்கைகள் எப்போதும் வேறுபட்டு கொண்டே உள்ளன. நாட்டின் சுதந்திரத்திற்கு முன்னரும், அதற்கு பின்னரும் ரிசர்வ் வங்கியின் கவர்னர் மற்றும் அரசின் நிதி அமைச்சருக்கு இடையான இடைவெளி எப்போதும் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது.

 

இந்நிலையில் இதன் தாக்கம் தற்போது சற்று அதிகமாக தான் உள்ளது. பாரத ரிசர்வ் வங்கி நாட்டின் பணவீக்கம், அன்னிய செலவாணி மற்றும் அதனை சார்ந்த நிதி முடிவுகளில் எப்போதும் கண்டிப்பான நடவடிக்கையை பின்பற்றும். அதே சமயத்தில் ஆட்சியில் அமரும் மத்திய அரசு, தனது சூழ்நிலைக்கேற்ற முடிவுகள் மற்றும் கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும். இதனால் இருவருக்குமான இடைவெளி முரண்பாட்டில் தான் முடிவடைகிறது.

 

முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் திரு. ரகுராம் ராஜன் (Ex. Governor Raguram Rajan) இருக்கும் போதும், இது போன்ற முரண்பாடுகள் ஏற்பட்டதுண்டு. பண மதிப்பிழப்பு (Demonetisation) நடவடிக்கையை மத்திய அரசு ஆதரித்து கொண்டிருந்த போது, பாரத ரிசர்வ் வங்கி அதன் மேல் அவ்வளவு நம்பிக்கையை கொண்டிருக்கவில்லை. அதே போன்று, மத்திய அரசு வட்டி விகிதத்தை குறைக்க (Reducing Interest Rates) முயலும் போது, ரிசர்வ் வங்கி தன்னிச்சையாக செயல்பட்டு கொண்டிருப்பதையும் ஆட்சியில் உள்ளவர்கள் கண்டித்தனர்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தற்போது டாலருக்கு நிகரான ரூபாய் சரிவிலும் மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. வங்கிகள் மீதான வாராக்கடன் பிரச்சனையில் (Bad Debt) பாரத ரிசர்வ் வங்கி எடுக்கும் கண்டிப்பான நடவடிக்கையின் மீது, மத்திய அரசுக்கும் பிணைப்பு ஏற்படவில்லை. வங்கிகளை காப்பாற்றும் முயற்சியில் மத்திய அரசு செயல்பட்டு கொண்டிருக்கும் நிலையில், ரிசர்வ் வங்கி அது போன்ற வங்கிகளுக்கு கடும் கட்டுப்பாட்டை விதித்து வருகின்றன.

 

ரிசர்வ் வங்கி தன்னிச்சையாக செயல்படும் அதிகாரம் இருந்தும் வங்கிகளின் வாராக்கடனை (Non performing asset – NPA) கட்டுப்படுத்தவில்லை என மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. அதே வேளையில், தங்களுக்கான அதிகாரத்தை முழுமையாக மத்திய அரசு வழங்கவில்லை என பாரத ரிசர்வ் வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ரிசர்வ் வங்கி துணைபுரிவதில்லை என மத்திய அரசு நேரிடையாகவே கூறியுள்ளது.

 

எண்ணெய் நிறுவனங்களுக்கென தனி டாலர் பரிமாற்ற வசதியை (Foreign Exchange) அரசு ஏற்படுத்த முயற்சிக்கையில், அதற்கான ஒதுக்கீட்டை ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், நிதி அமைச்சர் அருண் ஜெட்லீக்கும் இடையே வெடிப்பு ஏற்பட்டது போல், இப்போது உர்ஜித் பட்டேல் – அருண் ஜெட்லீ இடையே முரண்பாடு உள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

நடுத்தர பட்ஜெட் திட்டமிடல் – பகுதி 4

நடுத்தர பட்ஜெட் திட்டமிடல் – பகுதி 4

Budget Planning for Middle Class Family – Part 4

 

இது நமது நடுத்தர பட்ஜெட் திட்டமிடலின் நான்காம் பகுதி…

 

மதுரை திருமங்கலத்தில் வசித்து வருபவர் திரு. பன்னீர் செல்வம், சொந்த தொழில் செய்துவரும் இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இவரது மனைவி திருமதி. பாண்டியம்மாள் அருகில் உள்ள கிராமத்தில் விவசாயத்தை பார்த்து வருகிறார். மூன்று மகள்களையும் மேற்படிப்பு வரை படிக்க வைத்து, அவர்களுக்கான வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தி தருவதையே லட்சியமாக கொண்டுள்ள பன்னீர் செல்வம் அதற்கான நிதி சார்ந்த நடவடிக்கைகளை எப்போதும் கவனத்துடன் கையாண்டு வருகிறார்.

 

இனி இவருடைய பட்ஜெட் திட்டமிடலை பார்ப்போம்…

Budget Financial Planning Part 4

 

தனது தொழில் மூலம் மாத வருவாயாக ரூ. 30,000 ஐ பெறும் பன்னீர் செல்வம், தனது மகள்களின் கல்விச்செலவுக்காக மாதம் 15000 ரூபாயை செலவிடுகிறார். முதல் மகள் பொறியியல் பட்டப்படிப்பில் நான்காம் ஆண்டிலும், இரண்டாவது மகள் பி.எஸ்.சி. கணிதம் முதல் ஆண்டிலும், மற்றும் கடைக்குட்டி தற்போது பனிரெண்டாம் வகுப்பிலும் படித்து வருகின்றனர். முதல் மகளின் பொறியியல் படிப்பிற்கு கல்விக்கடன் வாங்கியிருந்தாலும், கல்விச்செலவுகளில் அதற்கான மற்ற செலவுகளுக்கு தேவையான பணத்தை ஒதுக்கி வைத்துள்ளார்.

 

 

தனது குடும்பத்தில் உள்ள ஐந்து நபர்களுக்கு சேர்த்து மருத்துவம் மற்றும் காப்பீட்டு செலவுகளுக்காக மாதம் ரூ. 3500 ஐ செலவழித்து வருகிறார். இது போக தனது மகள்களின் வரப்போகும் திருமணச்செலவுகளுக்கு என 8000 ரூபாயை மாதாமாதம் சேமித்து வருகிறார். அதனை கொண்டு மூன்று மகள்களின் திருமண நிதி இலக்குகளை அணுகி வந்துள்ளார். திருமதி. பாண்டியம்மாள் அவர்களின் விவசாய வருமானமாக ரூ. 10,000 குடும்ப நிதிச்சுமையை சற்று குறைகிறது. மொத்தத்தில் மாத வருவாயாக ரூ. 40,000 /- யையும், அவற்றில் மாதச்செலவுகளாக ரூ. 37,000 செலவிடப்படுகிறது.

 

நாம் ஏற்கனவே பார்த்தது போல, சேமிப்பு மற்றும் முதலீடுகளும் ஒரு வகையான செலவே. பன்னீர் செல்வம் குடும்பத்தின் வரவு-செலவு போக, உபரித்தொகையாக ரூ. 3000 இருப்பதும் நிதி சார்ந்த விஷயத்தில் ஆரோக்கியமான விஷயமே.

நினைவில் கொள்க:

 

  • பன்னீர் செல்வத்தின் முதல் மகள் இறுதி ஆண்டு கல்வியை முடித்து விட்டு, வேலைக்கு செல்லும் முனைப்பில் உள்ளார். இதன் மூலம் தனது குடும்பத்தின் நிதி ஆதாரத்தை அதிகப்படுத்தலாம். அதே நேரத்தில், இரண்டாவது மகள் பட்ட மேற்படிப்பையும் (Post Graduation) படிக்க விரும்புகிறார். மூன்றாவது மகளின் வரப்போகும் பட்டப்படிப்பையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

  • முதல் மகளின் புதிய வேலைவாய்ப்பால், நாம் மேலே சொன்ன எதிர்கால கல்விச்செலவுகளை கையாளலாம் அல்லது மூத்த மகளின் பொறியியல் படிப்பு முடிந்து விடும் நிலையில் இருப்பதால், அந்த தொகையை இனி மற்ற மகள்களின் கல்விச்செலவுகளுக்கு பயன்படுத்தலாம்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

  • பன்னீர் செல்வம் மற்றும் அவரது துணைவி, இருவருக்குமான ஓய்வு கால நிதியை (Retirement Planning) அவர்கள் இதுவரை ஏற்படுத்தாதது ஒரு குறையாக உள்ளது. அவர்கள் மகள்களின் எதிர்கால வேலைவாய்ப்பை சார்ந்தே உள்ளனர். மகள்கள் உதவும் பட்சத்தில், மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை இவர்களின் ஓய்வு காலத்திற்கு முதலீடு செய்யலாம்.

 

  • தொழில் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் வருமானம் பெரும்பாலும் ஏற்ற-இறக்கமாக இருக்கும். அதனால் நாம் வருமானம் பெறும் வேளையிலே சேமிக்கும் தன்மையை கொண்டிருக்க வேண்டும்.

 

 

போதுமான சேமிப்பும், தேவையில்லாத செலவுகளை தவிர்ப்பதும் ஒரு குடும்பத்தின் நிதி நலனை பாதுகாக்கும்; குடும்பத்தில் அனைவருக்கும் அமைதியை பேணும்.

 

பட்ஜெட் திட்டமிடல் சம்மந்தமான உங்கள் கேள்விகள் மற்றும் கருத்துக்களை இங்கே பகிரலாம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

திவால் நிலையிலிருந்து நீக்க எஸ்ஸார் ஸ்டீல் கோரிக்கை

திவால் நிலையிலிருந்து நீக்க எஸ்ஸார் ஸ்டீல் கோரிக்கை

ESSAR Steel seeking to withdraw from IBC

உலகின் முன்னணி ஸ்டீல் நிறுவனமான எஸ்ஸார் ஸ்டீல் (ESSAR Steel) பல  ஆண்டுகளாகவே இந்திய பிராந்தியத்தில் கடனில் தத்தளித்து கொண்டிருக்கிறது. சுமார் 50,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான கடனை எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனம் கொண்டுள்ளது. ஏற்கனவே இந்த நிறுவனம் மத்திய அரசின் திவால் சட்டத்தின் கீழ் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் தான் எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்தின் ருயா (Ruias) குழுமத்தினர் கடனை திரும்பி செலுத்துவதற்கான முறையை, தங்களது பங்குதாரர்களிடம் முன்மொழிந்துள்ளனர். இதனால் நிறுவனத்தை திவால் சட்டத்திலிருந்து (Insolvency and Bankruptcy Code -IBC) காப்பாற்றலாம். ருயா குழுமத்தினர் எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்தின் நிறுவனரும் ஆவர். இந்த நிறுவனம் கடந்த 2017 ம் நிதியாண்டில் நிகர நஷ்டமாக ரூ.5,620 கோடியை வெளியிட்டுள்ளது.

 

பங்குச்சந்தையிலும் வர்த்தகமாகாமல் இருக்கும் இந்த ஸ்டீல் நிறுவனம், தற்போது தனது நிறுவனத்தின் கடனை அடைக்க முன்வந்துள்ளது. ஒரு முறை செலுத்தும் வாயிலாக 54,389 கோடி ரூபாயை கொடுக்க ருயா குழுமத்தினர் (Ruias Group) தயாராகி வருகின்றனர். இதன் மூலம் அதன் கடன்தாரர்களுக்கு 100 சதவீத கடனை அடைக்கும் நடவடிக்கையை நிறுவனம் எடுத்து வருகிறது. இதற்கான நடவடிக்கைக்கு பங்குதாரர்கள் பச்சை கோடி காட்டியுள்ளனர்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ஏற்கனவே நிறுவனத்தின் கமிட்டி ஒன்று (Committee of Creditors -COC) அர்செல்லர் மிட்டல் நிறுவனம் வாங்குவதற்கான முயற்சியை கையாண்டு வந்தது. அர்செல்லர் நிறுவனம் 42,200 கோடி ரூபாய் அளவிலான கடனை அடைக்க முன்வந்தது கவனிக்கத்தக்கது. இந்நிலையில் தான் ருயா குழுமத்தினர் தங்களது நிறுவனத்தின் கடனை தாமே அடைக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

 

அர்செல்லர் மிட்டல் (ArcelorMittal), லட்சுமி மிட்டல் அவர்களின் நிறுவனமாகும். அர்செல்லர் மிட்டல் நிறுவனம் லக்சம்பர்க் நகரத்தை (Luxembourg City) தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஸ்டீல் தயாரிப்பு நிறுவனமாகும் (Steel Producing). எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்தின் தொழிலாளிகளுக்கு மட்டும் கொடுக்க வேண்டிய தொகை ரூ. 18 கோடியாகவும், வங்கி மற்றும் நிதி சார்ந்த நிறுவனங்கள் வழங்கிய கடன் 49,390 கோடியாகவும், மற்றவை நிறுவன செயல்பாட்டிற்கு கடன் வழங்கியவர்கள் (Operational Creditors) ஆவர்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

ஏசியன் பெயிண்ட் இரண்டாம் காலாண்டு லாபம் ரூ. 506 கோடி

ஏசியன் பெயிண்ட் இரண்டாம் காலாண்டு லாபம் ரூ. 506 கோடி

Asian Paints net profit of Rs. 506 Crore in Q2FY19

 

முன்னணி பெயிண்ட் நிறுவனமான ஏசியன் பெயிண்ட்ஸ் தனது இரண்டாம் காலாண்டில் (Q2FY19) நிகர லாபமாக 506 கோடி ரூபாயை பதிவு செய்துள்ளது. மொத்த வருமானம்  4639 கோடி ரூபாயாகவும், வரி மற்றும் தேய்மானத்துக்கு முந்தைய (EBITDA) வருமானமாக 784 கோடி ரூபாயாகவும் உள்ளது.

 

இடைக்கால ஈவுத்தொகையாக (Dividend) ரூ. 2.85 /- ஐ ஒரு பங்குக்கு அறிவித்துள்ளது. கடந்த வருடத்தின் இதே காலத்தில் (2017-2018 ன் இரண்டாம் காலாண்டு) நிறுவனத்தின் நிகர லாபமாக ரூ. 593 கோடியையும், மொத்த வருமானமாக ரூ. 4265 கோடியையும் பெற்றுள்ளது. தற்போது வெளியான காலாண்டின்  நிகர லாபம் முந்தைய வருட காலத்துடன் ஒப்பிடுகையில் 14.7 சதவீதம் சரிவடைந்துள்ளது.

 

அதே நேரத்தில் காலாண்டுக்கான மொத்த வருமானம் 8.7 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இயக்க அளவும் (Operating margin) இரண்டு சதவீதம் சரிந்துள்ளது. முந்தைய வருடத்தில் இது 18.8 சதவீதமாகவும், தற்போது 16.9 சதவீதம் என்ற அளவிலும் உள்ளது.

 

மூலப்பொருட்களின் விலை உயர்வு, பணவீக்கம், டாலருக்கு நிகரான மாற்றம்  ஆகியவை இரண்டாம் காலாண்டு லாபத்தை குறைத்துள்ளதாக நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் வீடு சம்மந்தமான பெயிண்ட் பிரிவில் 20 சதவீத வருமான வளர்ச்சியை எட்டியுள்ளது.

 

கச்சா எண்ணெய் விலை மாற்றமும் பெயிண்ட் துறையில் (Paint Industry) சிறிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தை வல்லுநர்கள் எதிர்பார்த்த இலக்கை ஏசியன் பெயிண்ட் நிறுவனம் எட்டவில்லை என சொல்லப்படுகிறது. திங்கள் அன்று (22-10-2018) வர்த்தக முடிவில் ஏசியன் பெயிண்ட் 2.83 சதவீதம் சரிவடைந்து ரூ. 1200.40  (தேசிய பங்குச்சந்தை) என்ற விலையில் முடிவடைந்தது. கடந்த ஜூலை 25ம் தேதி ஏசியன் பெயிண்ட் நிறுவனம் ரூ. 1488 என்ற விலையில் வர்த்தகமானது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

Financial Blog in Tamil