Tag Archives: jet airways

வங்கிகள் இன்னும் இரண்டு மாதங்களில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திலிருந்து வெளியேற வேண்டும் – ஸ்டேட் வங்கி சேர்மன்

வங்கிகள் இன்னும் இரண்டு மாதங்களில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திலிருந்து வெளியேற வேண்டும் – ஸ்டேட் வங்கி சேர்மன்

Banks have to exit Jet Airways in the next two months – SBI Chairman

 

1949ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவர் திரு.நரேஷ் கோயல். தனது சிறு வயதிலே தந்தையை இழந்ததும், குடும்பத்தில் நிலவிய பொருளாதார சிக்கல்களால் தனது தாயாரின் மாமா வீட்டில் கல்வியை தொடங்கினார் நரேஷ். அரசு பள்ளி மற்றும் கல்லூரியில் படிப்பை முடித்த இவர் 1967ம் ஆண்டு தனது உறவினர் ஒருவரின் பயண நிறுவனத்தில்(Travel Agency) காசாளராக பணிபுரிந்தார்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பின்னர் விமானத்துறை சார்ந்த தனியார் நிறுவனங்களில் பணி வாழ்க்கையை தொடங்கிய அவர் பல பொறுப்புகளை வகித்தார். 1975ம் வருடம் பிலிப்பைன்ஸ் ஏர்லைன்ஸ்(Philippines Airline) நிறுவனத்தில் பிராந்திய மேலாளராக பதவி வகித்த நரேஷ் கோயல் 1993ம் ஆண்டு ஜெட் ஏர்வேஸ் என்ற நிறுவனத்தையும், அதன் விமான சேவையையும் துவங்கினார். தனது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பத்து வருட காலம் பணிபுரிந்த அனிதா என்ற பெண்மணியை மணந்தார்.

 

விமான துறை சார்ந்த சேவைகளுக்கு பல விருதுகளை வாங்கிய இவர், 1990ம் காலகட்டங்களில் தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பில் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டார். 25 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக நிதி சிக்கலில் மாட்டி கொண்டது. வங்கிகளில் வாங்கிய கடனை(Debt) திரும்ப செலுத்த முடியாமலும், விமான சேவையை தொடர முடியாமலும் திணறியது.

 

ஜெட் ஏர்வேஸ்(Jet Airways) விமான நிறுவனத்தில் 22,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். சமீபத்தில் இயக்குனர் குழுவில் இருந்தும், சேர்மன் பதவியிலிருந்தும் நரேஷ் கோயல் விலக வேண்டும் என முதலீட்டாளர்கள் மற்றும் கடன் அளித்த வங்கிகள் அழுத்தம் கொடுத்தது. இதனையடுத்து நேற்று(25-03-2019) நரேஷ் கோயல்(Naresh Goyal) மற்றும் அவரது மனைவி அனிதா கோயல்(Anita) தங்களது பதவியிலிருந்து விலகினர். ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் ஏற்கனவே அபுதாபி நாட்டின் எதிஹாட் விமான நிறுவனம்(Etihad Airways) 24 சதவீத பங்குகளை கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது.

 

ஜெட் ஏர்வேஸ் நிறுவனரின் பதவி விலகலை அடுத்து, வங்கிகளும் தங்களது கடன் தொகையை மீட்டெடுக்கும் முயற்சியில் முழுவதுமாக இறங்கியுள்ளன. வங்கிகளும் இந்த நிறுவனத்தின் பங்குகளில் குறிப்பிடத்தக்க சதவீதத்தை வைத்துள்ளன. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு 10,000 கோடி ரூபாய்க்கு மேலான வங்கி கடன்கள் நிலுவையில் உள்ளன.

 

வங்கிகள் இன்னும் இரண்டு மாதங்களில் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்திலிருந்து வெளியேற வேண்டும் என எஸ்.பி.ஐ. சேர்மன் திரு. ரஜனீஷ் குமார்(Rajnish Kumar) தெரிவித்துள்ளார். தற்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வங்கிகளின் பொறுப்பில் உள்ளன என்றே சொல்லலாம். நிறுவனத்தில் உள்ள கடனை வசூலிப்பதும், பின்னர் அதனிலிருந்து வெளியேறுவதும் தான் வங்கிகளின் நடவடிக்கையாக  சொல்லப்படுகின்றன. ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் விலகியது இந்திய விமானத்துறையில் ஒரு சோகமான நாள் என ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagmadurai.com

Advertisement

மீட்கப்படுமா ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் ?

மீட்கப்படுமா ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் ?

Will the Jet Airways be recover ?

நமது வர்த்தக மதுரை இணைய தளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன், நாட்டில் உள்ள விமான சேவை நிறுவனங்களின் நிதி நிலைமை மோசமாகியிருப்பதை விஜய் மல்லையாவின் தலைப்பில் ஒரு கட்டுரையின் மூலம் சொல்லியிருந்தோம். அவற்றில் ஜெட் ஏர்வேஸ் (Jet Airways) விமான சேவை நிறுவனமும் திவாலாகும் நிலையில் உள்ளதாக குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

 

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த பத்து ஆண்டுகளில் மூன்று நிதியாண்டுகளில் மட்டுமே லாபத்தை கண்டுள்ளது. நிகர லாபத்தில் அதிகபட்சமாக கடந்த 2017ம் நிதி ஆண்டில் ரூ.1,483 கோடியையும், நஷ்ட காலத்தில், அதிகபட்ச நிகர நஷ்டமாக 2014ம் நிதி வருடத்தில் ரூ.3,668 கோடியை இழந்துள்ளது. நடப்பு 2018-19ம் வருடத்தில் முதல் இரண்டு காலாண்டுகளிலும் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் நஷ்டத்தை (Net Loss on Quarterly) மட்டும் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

மூன்றாம் (அக்டோபர்-டிசம்பர் 2018 Q3 Results) காலாண்டு முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில், சேவையை தொடர்வதற்கான போதுமான நிதி ஆதாரம் இல்லை என ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சார்பில் சொல்லப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் கடன்(Debt) மட்டும் ரூ. 8,400 கோடி. ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தில் ஐக்கிய அரபு நாட்டை சேர்ந்த எதிஹாட் நிறுவனம் 24 சதவீத பங்குகளை கொண்டுள்ளது. எதிஹாட் நிறுவனம்(Etihad Airways) முதலீடு செய்திருந்தாலும், நமது நாட்டின் சட்ட விதிமுறைப்படி இந்த நிறுவனம் இயக்குனர் குழுவையோ அல்லது ஜெட் ஏர்வேஸின் நிர்வாகத்தையோ கட்டுப்படுத்த முடியாது.

 

தொடர்ச்சியாக கடந்த மூன்று காலாண்டுகளில் நஷ்டத்தை சந்தித்து வரும் ஜெட் ஏர்வேஸ், ஒரு வாரத்திற்கு பிறகான விமான சேவையை தொடர போதுமான பணமில்லை என கூறியுள்ளது. ஏற்கனவே வங்கிகளில் பெற்ற கடனை திரும்ப செலுத்த முடியாமல் தத்தளித்து கொண்டிருக்கும் இந்நிறுவனம், விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் சந்தித்த நிலையில் தற்போது உள்ளது.

 

நிறுவனர் பங்குகளை அடுத்து அதிகபட்ச பங்குகளை கொண்டிருக்கும் எதிஹாட் விமான நிறுவனம் தனது பங்குகளை கொண்டு கூடுதல் கடன் தொகையை பெறாது என தெரிகிறது. இதனால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அவசர கால நிதியை முயற்சித்து கொண்டிருக்கிறது.

 

இந்நிலையில் விமான நிறுவனங்களை மறுசீரமைப்பது சார்ந்த நிகழ்வில், எதிஹாட் நிறுவனத்தின் சேர்மன் டோனி டக்ளஸ், பாரத ஸ்டேட் வங்கி (SBI) தலைவருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்ட விளக்கமானது, ‘ ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தில் 24 சதவீத பங்குகளை வைத்திருக்கும் தங்கள் நிறுவனம், அவசர கால நிதியாக  ஜெட் ஏர்வேஸுக்கு உதவ விரும்புகிறது. அதனால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் தங்கள் நிறுவனம் மேலும் சில பங்குகளை வாங்க முயற்சிக்கும். ஆனால் அதற்கான விலையாக சந்தை விலையில் பாதியான ரூ. 150 க்கு பங்கு ஒன்றுக்கு தரப்போவதாக அறிவித்துள்ளது.

 

கடந்த 2012 ம் ஆண்டு மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட விதிமுறைகளின் படி, இந்திய விமான நிறுவனங்களில் அந்நிய நாட்டு விமான நிறுவனங்கள் அதிகபட்சமாக 49 சதவீத பங்குகள் வரை முதலீடு செய்து கொள்ளலாம் என அறிவித்திருந்தது. இதனை சார்ந்தே தற்போது எதிஹாட் நிறுவனம்(Etihad Airways) பங்குகளை வாங்குவது பற்றி கூறியிருந்தது. அதே வேளையில், நிறுவனத்தின் பங்குகளை விற்பது என்பது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் முடிவை பொறுத்தே அமையும். ஆனால் எதிஹாட் நிறுவனம் வாங்கப்போகும் விலை பங்கு ஒன்றுக்கு ரூ.150 என்பது தான் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் முதலீட்டாளர்களிடையே அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

 

தற்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவன பங்கு விலை ரூ. 270 ஆக சந்தையில் வர்த்தகமாகியுள்ளது. புதன் கிழமை (16-01-2019) அன்று இந்த நிறுவனத்தின் பங்கு விலை 8 சதவீத இறக்கத்தை கண்டுள்ளது. எதிஹாட் நிறுவனத்தின் குறைந்த விலையிலான மதிப்பீடு தான் ஜெட் ஏர்வேஸ் பங்கு விலை சரிவிற்கு காரணம் என சொல்லப்படுகிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

விமான நிறுவனங்களின் காலாண்டு நஷ்டமும், கையகப்படுத்தலும்

விமான நிறுவனங்களின் காலாண்டு நஷ்டமும், கையகப்படுத்தலும்

Net loss quarters and acquisition action on Airlines Industry

 

செப்டம்பர் மாத காலாண்டில் 1297 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் (Jet Airways) தெரிவித்துள்ளது. இதே காலாண்டு அறிக்கையில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் 389 கோடி ரூபாய் நட்டத்தையும், இன்டர் குளோப் (Indigo) ரூ. 652 கோடி நட்டத்தையும் கொண்டுள்ளது.

 

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த பத்து வருடங்களில் 21 காலாண்டு முடிவுகள் லாபத்தையும், 20 காலாண்டு முடிவுகளில் நஷ்டமும் (Quarterly net loss) அடைந்துள்ளன. 21 காலாண்டுகளின் மொத்த லாபமாக 4,120 கோடி ரூபாயையும், அதே வேளையில் 20 காலாண்டுகளின் நஷ்டம் ரூ. 12,450 கோடியாகும்.

 

ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் (SpiceJet) கடந்த பத்து ஆண்டுகளில் 7 ஆண்டுகள் நஷ்டத்தை பெற்றுள்ளன. அதிகபட்சமாக கடந்த 2014 ம் நிதியாண்டில் 1000 கோடி ரூபாய் நஷ்டத்தை அடைந்துள்ளன. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் கடன் 8000 கோடி ரூபாயாகவும், ஸ்பைஸ் ஜெட்டின் கடன் ரூ. 1300 கோடியாகவும் உள்ளது கவனிக்கத்தக்கது.

 

முன்னர் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் (Kingfisher Airlines) தனது கடனை அடைக்க முடியாமலும், ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாமல் விமான சேவையை நிறுத்தி கொண்டது. பின்பு அந்த நிறுவனம் திவாலானதும், நிறுவனர் வெளிநாட்டிற்கு தப்பி சென்றதும் மற்றுமொரு விஷயம். வளர்ந்து வரும் நாட்டில் விமான சேவைகளில் மக்களின் போக்குவரத்து அதிகரித்து இருந்தாலும், நிறுவனங்களின் தொடர் நஷ்டம், சேவையை தொடர விடுமா என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நடப்பு வாரத்தில் மத்திய அரசின் சூசகமான விஷயமும், ஜெட் ஏர்வேஸை டாடா நிறுவனம் கையகப்படுத்தும் முயற்சியும் சந்தையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மட்டும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்குகள் 25 சதவீத அளவிற்கு உயர்ந்தது. டாடா நிறுவனம் தனது விஸ்தாரா சேவையுடன் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை இணைக்க உள்ளதாக வெளியான தகவல் அடிப்படையில் பங்குகள் வேகமாக அதிகரிக்க ஆரம்பித்தன.

 

டாடா நிறுவனத்தின் கையகப்படுத்தும் (TATA  Vistara – Jet airways Merger) விஷயத்தை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மறுத்துள்ளது. இது சம்மந்தமான ஒரு அறிக்கையில், ஆங்கில பத்திரிகையில் (Economic Times) வெளியிடப்பட்ட செய்தி ஊகமாக சொல்லப்பட்டது எனவும், இவற்றில் உண்மை எதுவும் இல்லை எனவும் நிறுவனத்தின் துணைத்தலைவர் தெரிவித்துள்ளார்.

 

பத்திரிகையில் வெளியிடப்பட்ட இந்த கையகப்படுத்தும் செய்தியில் மத்திய அரசு  செயலாற்ற முயற்சித்து வருவதாக கூறியுள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் கடனை குறைப்பதற்கான நடவடிக்கை எனவும் தெரிவித்துள்ளது. இண்டிகோ நிறுவனத்தின் (Interglobe Aviation -INDIGO)  கடன் 2400 கோடி ரூபாயாகவும், இந்த நிறுவனம் கடந்த 8 ஆண்டுகளில் முதன்முறையாக நஷ்டத்தை நோக்கி சென்றுள்ளது. கடந்த 2017-18 ம் நிதியாண்டில் நிறுவனத்தின் லாபம் 2200 கோடியாக இருந்தது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com