வீழ்கிறதா எல்.ஐ.சி ? – வளர்ச்சியில் முந்தும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள்
Is LIC India declining on growth over private insurance companies ?
2017-18 ம் நிதியாண்டில் எல்.ஐ.சி. (Life Insurance Corporation of India) இந்தியாவின் பங்குச்சந்தை வர்த்தகம் மூலமான லாபம் மட்டும் ரூ. 25,000 கோடி. கடந்த டிசம்பர் மாத இறுதியில் இதன் பங்கு மூலமான சொத்து மதிப்பு 5 லட்சம் கோடி ரூபாயாகும்.
பங்குச்சந்தையில் எல்.ஐ.சி. நிறுவனத்தின் ஆதிக்கம் மற்ற பொதுத்துறை நிறுவனங்களை காட்டிலும் மிக அதிகம். இதனை சார்ந்த விமர்சனங்களும் அவ்வப்போது எழும். பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி. யில் காப்பீடு பெறும் வாடிக்கையாளர்களின் பணம் பங்குச்சந்தையிலும் முதலீடு செய்யப்படுவது கவனிக்க வேண்டியது. முன்னர் புகையிலையை தொழிலாக கொண்ட ஐ.டி.சி. (ITC) நிறுவனத்தில் எல்.ஐ.சி. முதலீடு செய்த போது சர்ச்சைக்குள்ளானது.
சமீப காலங்களில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் இதன் முதலீட்டு விகிதம் (Holding) சற்று அதிகமாயிருந்தது. ஐ.டி.பி.ஐ. (IDBI Bank) மற்றும் ஐ.எல்.எப்.எஸ். (IL & FS) நிதிச்சிக்கலில் மாட்டிய போது, எல்.ஐ.சி. நிறுவனம் மீட்க முன்வந்தது. மத்திய அரசே இந்த பிரச்சனையில் தலையிட்டு வங்கியை மீட்க எல்.ஐ.சி. நிறுவனத்தை கேட்டு கொண்டது. இதற்கு சொல்லப்பட்ட முதற்காரணம் எல்.ஐ.சி. நிறுவனத்தின் பிரமாண்டமான சொத்து மதிப்பு மற்றும் நம்பிக்கைக்குரிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை.
ஆனால் நடந்தது என்னவோ இதன் எதிர்கால வளர்ச்சியை பாதித்துள்ளது. வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களில் எல்.ஐ.சி. வைத்திருக்கும் பங்குகள் மீது காப்பீட்டு வாடிக்கையாளர்களின் நம்பிக்கை வெகுவாக குறைந்துள்ளது. வாராக்கடன் பிரச்னையில் சிக்கும் நிறுவனங்களை ஏன் எல்.ஐ.சி. மீட்க வேண்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பங்குச்சந்தை வர்த்தகத்தின் மூலமான லாபம் ரூ. 25,000 கோடி – LIC India
( Read this post after the advertisement… )
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கடந்த அக்டோபர் மாதத்தில் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் வளர்ச்சி 32 சதவீதமாக உள்ளது. இதே காலத்தில் எல்.ஐ.சி. 0.5 சதவீதம் சரிவடைந்துள்ளது. தனியார் காப்பீடு நிறுவனங்களின் காப்பீடு எண்ணிக்கை குறைந்திருந்தாலும், அதன் வருமான வளர்ச்சி பொதுத்துறை காப்பீடு நிறுவனத்தை காட்டிலும் அதிகமாக உள்ளது.
எச்.டி.எப்.சி. லைப் (HDFC Life) நிறுவனத்தின் வளர்ச்சி 37 சதவீதத்திலும், எஸ்.பி.ஐ. லைப் (SBI Life) 17 சதவீத வளர்ச்சி அளவிலும் உள்ளது. பொதுத்துறையில் உள்ள ஒரே காப்பீட்டு நிறுவனம் எல்.ஐ.சி. இந்தியாவாகும். வங்கிகளில் செய்யப்பட்ட மூலதனம், எல்.ஐ.சி. யில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது வரும் காலாண்டு முடிவுகளில் தெரிய வரும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை