விமான நிறுவனங்களின் காலாண்டு நஷ்டமும், கையகப்படுத்தலும்
Net loss quarters and acquisition action on Airlines Industry
செப்டம்பர் மாத காலாண்டில் 1297 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் (Jet Airways) தெரிவித்துள்ளது. இதே காலாண்டு அறிக்கையில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் 389 கோடி ரூபாய் நட்டத்தையும், இன்டர் குளோப் (Indigo) ரூ. 652 கோடி நட்டத்தையும் கொண்டுள்ளது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த பத்து வருடங்களில் 21 காலாண்டு முடிவுகள் லாபத்தையும், 20 காலாண்டு முடிவுகளில் நஷ்டமும் (Quarterly net loss) அடைந்துள்ளன. 21 காலாண்டுகளின் மொத்த லாபமாக 4,120 கோடி ரூபாயையும், அதே வேளையில் 20 காலாண்டுகளின் நஷ்டம் ரூ. 12,450 கோடியாகும்.
ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் (SpiceJet) கடந்த பத்து ஆண்டுகளில் 7 ஆண்டுகள் நஷ்டத்தை பெற்றுள்ளன. அதிகபட்சமாக கடந்த 2014 ம் நிதியாண்டில் 1000 கோடி ரூபாய் நஷ்டத்தை அடைந்துள்ளன. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் கடன் 8000 கோடி ரூபாயாகவும், ஸ்பைஸ் ஜெட்டின் கடன் ரூ. 1300 கோடியாகவும் உள்ளது கவனிக்கத்தக்கது.
முன்னர் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் (Kingfisher Airlines) தனது கடனை அடைக்க முடியாமலும், ஊழியர்களுக்கு சம்பளம் தர முடியாமல் விமான சேவையை நிறுத்தி கொண்டது. பின்பு அந்த நிறுவனம் திவாலானதும், நிறுவனர் வெளிநாட்டிற்கு தப்பி சென்றதும் மற்றுமொரு விஷயம். வளர்ந்து வரும் நாட்டில் விமான சேவைகளில் மக்களின் போக்குவரத்து அதிகரித்து இருந்தாலும், நிறுவனங்களின் தொடர் நஷ்டம், சேவையை தொடர விடுமா என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.
( Read this post after the advertisement… )
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
நடப்பு வாரத்தில் மத்திய அரசின் சூசகமான விஷயமும், ஜெட் ஏர்வேஸை டாடா நிறுவனம் கையகப்படுத்தும் முயற்சியும் சந்தையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மட்டும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்குகள் 25 சதவீத அளவிற்கு உயர்ந்தது. டாடா நிறுவனம் தனது விஸ்தாரா சேவையுடன் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை இணைக்க உள்ளதாக வெளியான தகவல் அடிப்படையில் பங்குகள் வேகமாக அதிகரிக்க ஆரம்பித்தன.
டாடா நிறுவனத்தின் கையகப்படுத்தும் (TATA Vistara – Jet airways Merger) விஷயத்தை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மறுத்துள்ளது. இது சம்மந்தமான ஒரு அறிக்கையில், ஆங்கில பத்திரிகையில் (Economic Times) வெளியிடப்பட்ட செய்தி ஊகமாக சொல்லப்பட்டது எனவும், இவற்றில் உண்மை எதுவும் இல்லை எனவும் நிறுவனத்தின் துணைத்தலைவர் தெரிவித்துள்ளார்.
பத்திரிகையில் வெளியிடப்பட்ட இந்த கையகப்படுத்தும் செய்தியில் மத்திய அரசு செயலாற்ற முயற்சித்து வருவதாக கூறியுள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் கடனை குறைப்பதற்கான நடவடிக்கை எனவும் தெரிவித்துள்ளது. இண்டிகோ நிறுவனத்தின் (Interglobe Aviation -INDIGO) கடன் 2400 கோடி ரூபாயாகவும், இந்த நிறுவனம் கடந்த 8 ஆண்டுகளில் முதன்முறையாக நஷ்டத்தை நோக்கி சென்றுள்ளது. கடந்த 2017-18 ம் நிதியாண்டில் நிறுவனத்தின் லாபம் 2200 கோடியாக இருந்தது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை