Tag Archives: asian paints

ஏசியன் பெயிண்ட்ஸ் காலாண்டு நிகர லாபம் – ரூ. 830 கோடி

ஏசியன் பெயிண்ட்ஸ் காலாண்டு நிகர லாபம் – ரூ. 830 கோடி 

Asian Paints reported a Net Profit of Rs. 830 Crore in Q2FY21

இந்திய பன்னாட்டு நிறுவனமான ஏசியன் பெயிண்ட்ஸ் கடந்த 1942ம் வருடம் துவங்கப்பட்டது. பெயிண்ட் துறையில் உள்ள இந்நிறுவனம் பெயிண்ட் தயாரிப்பு, விற்பனை மற்றும் விநியோகம், பூச்சு, வீட்டு அலங்காரம் போன்ற சேவைகளை அளித்து வருகிறது. நாட்டின் பெயிண்ட் சந்தையில் 50 சதவீதத்திற்கு மேல் தனது பங்காக வைத்திருக்கும் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம், பிரபல பெர்கர் இன்டர்நேஷனல் நிறுவனத்திலும் கணிசமான பங்குகளை வைத்துள்ளது.

நிறுவனர்கள் சார்பில் அதிக பங்குதாரர்களை வைத்திருக்கும் நிறுவனமாகவும் ஏசியன் பெயிண்ட்ஸ் காணப்படுகிறது. சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டு பில்லியன் டாலர் வருவாயை ஏற்படுத்தும் நிறுவனமாக ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளது.

நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 2.03 லட்சம் கோடி. நிறுவனர்களின் பங்களிப்பு 53 சதவீதமாக உள்ளது. நிறுவனர்கள் சார்பில் 12 சதவீத பங்குகள் அடமானம் வைக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் கடன்-பங்கு விகிதம்(Debt to Equity) 0.10 ஆகவும், வட்டி பாதுகாப்பு விகிதம்(Interest Coverage Ratio) 30 மடங்குகளிலும் இருக்கிறது. 2019-20ம் நிதியாண்டு முடிவில் நிறுவனத்தின் வருவாய் 20,211 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் 2,705 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.

நடப்பு வாரத்தில் 2020-21ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. இரண்டாம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.5,350 கோடியாகவும், செலவினம் ரூ.4,085 கோடியாகவும் இருந்துள்ளது. இதர வருமானமாக 94 கோடி ரூபாய் சொல்லப்பட்டுள்ளது. சொல்லப்பட்ட காலாண்டு முடிவில் நிகர லாபம் 830 கோடி ரூபாயாக இருந்துள்ளது.

இரண்டாம் காலாண்டு முடிவுக்கு பிறகு, இடைக்கால ஈவுத்தொகையாக(Interim Dividend), பங்கு ஒன்றுக்கு ரூ. 3.35 ஐ அறிவித்துள்ளது. செப்டம்பர் காலாண்டு முடிவின் படி, இருப்புநிலை கையிருப்பு 10,934 கோடி ரூபாயாக இருந்துள்ளது. நிறுவனத்தின் பணவரத்து(Cash Flow) சொல்லக்கூடிய நேர்மறை மதிப்பில் உள்ளது.

நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி கடந்த 5 வருடங்களில் 8 சதவீதமாகவும், 10 வருட காலத்தில் 12 சதவீதமாகவும் உள்ளது. இது போல லாபம் கடந்த ஐந்து வருடங்களில் 14 சதவீதமும், 10 வருட கால அளவில் 13 சதவீதமாகவும் வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த பங்கின் விலை கடந்த ஒரு வருடத்தில் 18 சதவீதம் ஏற்றமடைந்துள்ளது. பங்கு முதலீட்டின் மீதான வருவாய்(ROE) கடந்த ஐந்து வருடங்களில் 28 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

Advertisement

வீட்டுக்கே லேமினேஷன் – ஏசியன் பெயிண்ட்ஸ் காலாண்டு நிகர லாபம் ரூ. 764 கோடி

வீட்டுக்கே லேமினேஷன் – ஏசியன் பெயிண்ட்ஸ் காலாண்டு நிகர லாபம் ரூ. 764 கோடி

Asian Paints reported Net Profit of Rs. 764 Crore in Q3FY20 – Quarterly Results

இந்திய பன்னாட்டு நிறுவனமான ஏசியன் பெயிண்ட்ஸ், பெயிண்ட் துறையில் பூச்சுகள், வண்ணப்பூச்சுகள், அலங்காரத்துடன் தொடர்புடைய பொருட்கள், தயாரிப்பு மற்றும் விற்பனை ஆகிய சேவைகளை செய்து வருகிறது. நாட்டின் பெயிண்ட் துறையில் 54 பங்களிப்பை ஏசியன் பெயிண்ட்ஸ்(Asian Paints) நிறுவனம் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நாட்டின் முதன்மை பெயிண்ட் நிறுவனமாகவும், ஆசியாவின் மூன்றாவது மிகப்பெரிய நிறுவனமாகவும் வலம் வருவது ஏசியன் பெயிண்ட்ஸ். 1942ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 1.71 லட்சம் கோடி. கடன்-பங்கு விகிதம்(Debt to Equity) 0.03 ஆக உள்ளது. வட்டி பாதுகாப்பு விகிதம் 36 மடங்கில் உள்ளது.

நிறுவனர்களின் பங்களிப்பு 53 சதவீதமும், நிறுவனர்கள் தங்களின் பங்குகளில் 13 சதவீத பங்குகளை அடமானம்(Pledged Shares) வைத்துள்ளனர். தற்போதைய பங்கு விலை இதன் புத்தக மதிப்பை காட்டிலும் 17 மடங்கு உள்ளது. டிசம்பர் 2019 காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 5,420 கோடியாகவும், செலவினம் ரூ. 4,231 கோடியாகவும் இருந்துள்ளது.

வரிக்கு முந்தைய லாபம் ரூ. 1,057 கோடி மற்றும் நிகர லாபம் ரூ. 764 கோடி. இரண்டாம் காலாண்டில் ஒரு சதவீத வரியை செலுத்தியிருந்த நிலையில், இம்முறை மூன்றாம் காலாண்டில் 26 சதவீத வரியை நிறுவனம் செலுத்தியுள்ளது. அதன் காரணமாக மூன்றாம் காலாண்டில் நிகர லாபத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், கடந்த 2018ம் வருடத்தின் டிசம்பர் காலாண்டை காட்டிலும் தற்போது லாபத்தில் 20 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. கடந்த 2018ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 5,263 கோடி மற்றும் நிகர லாபம் ரூ. 636 கோடியாகும்.

2018-19ம் நிதியாண்டில் நிறுவனம் வருவாயாக ரூ. 19,342 கோடியை ஈட்டியுள்ளது. சொல்லப்பட்ட நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 2,159 கோடி. கடந்த ஒரு வருடத்தில் இந்த பங்கின் விலை 30 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது. கடந்த பத்து வருட கால அளவில், பங்கின் விலை சுமார் 26 சதவீதம் ஏற்றம் அடைந்துள்ளது. போனஸ் பங்குகள் மற்றும் டிவிடெண்ட் தொகைகள் கணக்கில் எடுத்து கொள்ளப்படவில்லை.

நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி(Sales Growth) கடந்த ஐந்து வருடத்தில் 10 சதவீதமும், பத்து வருடங்களில் 14 சதவீதமும் வளர்ந்துள்ளது. இது போல கூட்டு லாப வளர்ச்சி கடந்த ஐந்து வருட காலத்தில் 12 சதவீதமும், பத்து வருட கால அளவில் 18.50 சதவீதமும் ஏற்றம் பெற்றுள்ளது. நிறுவனத்தின் இருப்புநிலை கையிருப்பாக(Reserves) ரூ. 9,975 கோடி உள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

வண்ணமயமாக்கும் ஏசியன் பெயிண்ட்ஸ் காலாண்டு நிகர லாபம் – ரூ. 823 கோடி

வண்ணமயமாக்கும் ஏசியன் பெயிண்ட்ஸ் காலாண்டு நிகர லாபம் – ரூ. 823 கோடி

Asian Paints Colourizing Net Profit to Rs. 823 Crore – Q2FY20

பெயிண்ட் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் இந்திய பன்னாட்டு நிறுவனம் ஏசியன் பெயிண்ட்ஸ்(Asian Paints). இந்த நிறுவனத்தின் 2019-20ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு முடிவுகள் வெளிவந்துள்ளது. இரண்டாம் காலண்டான ஜூலை-செப்டம்பர் காலத்தில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் ரூ. 5,050 கோடியாக இருந்துள்ளது.

சொல்லப்பட்ட காலத்தில் இதர வருமானமாக 105 கோடி ரூபாயும், செலவினங்கள் ரூ. 4,319 கோடியாகவும் உள்ளது. வரிக்கு முந்தைய லாபம் 852 கோடி ரூபாய் எனவும், இரண்டாம் காலாண்டின் ஒட்டுமொத்த நிகர லாபம்(Net Profit) ரூ. 823 கோடி எனவும் சொல்லப்பட்டுள்ளது.

கடந்த 2018-19ம் நிதியாண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில், தற்போதைய வருவாய் 9 சதவீத வளர்ச்சியையும், நிறுவனத்தின் நிகர லாபம் 67 சதவீத வளர்ச்சியையும் கண்டுள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் 2018ம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 4,615 கோடியாகவும், இதர வருமானம் ரூ. 65 கோடியாகவும் இருந்தது. அப்போதைய நிகர லாபம் ரூ. 491 கோடியாக இருந்துள்ளது.

ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு(Market Cap) ரூ. 1.70 லட்சம் கோடியாக இருக்கிறது. விற்பனை வளர்ச்சி கடந்த மூன்று ஆண்டுகளில் 10.66 சதவீதமும், பத்து வருட காலத்தில் 14 சதவீதமாக உள்ளது. அதே போல லாப வளர்ச்சி, கடந்த மூன்று வருடங்களில் 7 சதவீதமும், பத்து வருட காலத்தில் 18 சதவீதமாக உள்ளது.

இந்த நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஐந்து வருடங்களில் 22 சதவீதம் வருமானத்தை முதலீட்டாளர்களுக்கு தந்துள்ளது. ஏசியன் பெயிண்ட்ஸ் பங்கில் பத்து வருடத்திற்கு முன்பு முதலீடு செய்திருக்கும் பட்சத்தில், 27 சதவீத வருமானத்தை பெற்றிருக்கலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

வண்ணங்களின் நாயகன், ‘ஏசியன் பெயின்டஸ்’ காலாண்டு லாபம் ரூ. 655 கோடி

வண்ணங்களின் நாயகன், ‘ஏசியன் பெயின்டஸ்’ காலாண்டு லாபம் ரூ. 655 கோடி 

Asian Paints Q1Fy20 – Quarterly Net profit to Rs. 655 Crore

 

சந்தையில் சுமார் ரூ. 1 லட்சம் கோடிக்கும் மேல் மதிப்பை கொண்டுள்ள ஏசியன் பெயின்டஸ் நிறுவனத்தின் முதலாம் காலாண்டு முடிவுகள் நேற்று வெளிவந்தது. 2019-20ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 655 கோடியாக உள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ஜூன் மாத காலாண்டில் நிறுவன வருவாய் ரூ. 5,131 கோடியாகவும், செலவினங்கள் 3,974 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இயக்க லாபம்(Operating profit) ரூ. 1,156 கோடியாகவும், சொல்லப்பட்ட ரூ. 655 கோடி நிகர லாபம், கடந்த வருட காலாண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 18 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.

 

கடந்த 2018ம் ஆண்டு ஜூன் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ. 4,390 கோடியாகவும், நிகர லாபம் 557 கோடி ரூபாயாகவும் இருந்தது கவனிக்கத்தக்கது. கடந்த பத்து வருட காலங்களில் ஏசியன் பெயின்டஸ்(Asian Paints) நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 14 சதவீதமாகவும், லாப வளர்ச்சி 18.50 சதவீதமாகவும் இருக்கிறது.

 

அலங்கார(Decorative) பிரிவில் பெற்ற இரட்டை இலக்க வளர்ச்சி, ஜூன் மாத காலாண்டின் நிகர லாபத்திற்கு துணை புரிந்துள்ளது. இருப்பினும் வாகன(Automotive) பிரிவில் நிறுவனத்தின் வருவாய் இம்முறை குறைந்துள்ளது. உலகளவில் வாகனத்துறையில் காணப்படும் மந்த நிலையே இதற்கு காரணமாக அமைந்துள்ளது.

 

மூலப்பொருட்களின் விலைகளும் பெயிண்ட் துறைக்கான வளர்ச்சிக்கு சாதகமாக இருந்துள்ளன. பங்கின் மீதான வருவாய்(ROE) கடந்த ஐந்து வருடங்களில் 27 சதவீதமும், பத்து வருட காலத்தில் 30 சதவீதமும் கொடுத்துள்ளன. மார்ச் 2019ம் நிதியாண்டின் முடிவில் நிறுவனத்தின் கையிருப்பு(Reserves) ரூ. 9,424 கோடியாகும்.

 

நிறுவனர்களில் பங்களிப்பில் சுமார் 12 சதவீத பங்குகள் அடமானம்(Promoters Pledging) செய்யப்பட்டுள்ளது. கடன்-பங்கு விகிதம் 0.07 புள்ளிகளாகவும், கடந்த மூன்று வருட விற்பனை வளர்ச்சி 11 சதவீதமாகவும் உள்ளது. தற்போதைய பங்கின் விலை, நிறுவனத்தின் புத்தக மதிப்பில்(Price to Book value) 15 மடங்காகும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

ஏசியன் பெயிண்ட் இரண்டாம் காலாண்டு லாபம் ரூ. 506 கோடி

ஏசியன் பெயிண்ட் இரண்டாம் காலாண்டு லாபம் ரூ. 506 கோடி

Asian Paints net profit of Rs. 506 Crore in Q2FY19

 

முன்னணி பெயிண்ட் நிறுவனமான ஏசியன் பெயிண்ட்ஸ் தனது இரண்டாம் காலாண்டில் (Q2FY19) நிகர லாபமாக 506 கோடி ரூபாயை பதிவு செய்துள்ளது. மொத்த வருமானம்  4639 கோடி ரூபாயாகவும், வரி மற்றும் தேய்மானத்துக்கு முந்தைய (EBITDA) வருமானமாக 784 கோடி ரூபாயாகவும் உள்ளது.

 

இடைக்கால ஈவுத்தொகையாக (Dividend) ரூ. 2.85 /- ஐ ஒரு பங்குக்கு அறிவித்துள்ளது. கடந்த வருடத்தின் இதே காலத்தில் (2017-2018 ன் இரண்டாம் காலாண்டு) நிறுவனத்தின் நிகர லாபமாக ரூ. 593 கோடியையும், மொத்த வருமானமாக ரூ. 4265 கோடியையும் பெற்றுள்ளது. தற்போது வெளியான காலாண்டின்  நிகர லாபம் முந்தைய வருட காலத்துடன் ஒப்பிடுகையில் 14.7 சதவீதம் சரிவடைந்துள்ளது.

 

அதே நேரத்தில் காலாண்டுக்கான மொத்த வருமானம் 8.7 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இயக்க அளவும் (Operating margin) இரண்டு சதவீதம் சரிந்துள்ளது. முந்தைய வருடத்தில் இது 18.8 சதவீதமாகவும், தற்போது 16.9 சதவீதம் என்ற அளவிலும் உள்ளது.

 

மூலப்பொருட்களின் விலை உயர்வு, பணவீக்கம், டாலருக்கு நிகரான மாற்றம்  ஆகியவை இரண்டாம் காலாண்டு லாபத்தை குறைத்துள்ளதாக நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் வீடு சம்மந்தமான பெயிண்ட் பிரிவில் 20 சதவீத வருமான வளர்ச்சியை எட்டியுள்ளது.

 

கச்சா எண்ணெய் விலை மாற்றமும் பெயிண்ட் துறையில் (Paint Industry) சிறிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தை வல்லுநர்கள் எதிர்பார்த்த இலக்கை ஏசியன் பெயிண்ட் நிறுவனம் எட்டவில்லை என சொல்லப்படுகிறது. திங்கள் அன்று (22-10-2018) வர்த்தக முடிவில் ஏசியன் பெயிண்ட் 2.83 சதவீதம் சரிவடைந்து ரூ. 1200.40  (தேசிய பங்குச்சந்தை) என்ற விலையில் முடிவடைந்தது. கடந்த ஜூலை 25ம் தேதி ஏசியன் பெயிண்ட் நிறுவனம் ரூ. 1488 என்ற விலையில் வர்த்தகமானது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com