பே.டி.எம் நிறுவனத்தில் முதலீடு செய்கிறார் வாரன் பப்பெட்

பே.டி.எம் நிறுவனத்தில் முதலீடு செய்கிறார் வாரன் பப்பெட்

Warren Buffet’s Berkshire Hathaway investing in Paytm

 

உலகின் பெரும் பணக்காரர் வாரன் பப்பெட் (Warren Buffet) முதலீடு செய்வதிலும், நிறுவனங்களை கையகப்படுத்துவதிலும் வல்லவர்.  தனது 11வது வயதிலிருந்து முதலீட்டை மேற்கொள்ளும் வாரன் பங்குச்சந்தையின் மூலம் நீண்ட காலத்தில் கோடிகளில் கோடிகளை சம்பாதித்தவர்.

 

வாரன் பப்பெட் முதலீட்டு கொள்கைகள் பொதுவாக நீண்ட கால அடிப்படையிலும், சந்தையில் மதிப்பு குறைந்த பங்குகளும் தான். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதில் அவர் பெரும்பாலும் ஆர்வம் காட்டுவதில்லை. அதே நேரத்தில் ஆப்பிள் நிறுவனத்தினை வாங்குவதில் வாரன் முனைப்பு காட்டியதையும் மறுக்க முடியாது.

 

ஆப்பிள் (Apple) நிறுவனத்தில் வாரனின் பெர்க்சயர் ஹாத்தவே (Berkshire Hathaway) நிறுவனம் 5 % பங்குகளை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது அவரின் நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக முதலீட்டை மேற்கொள்ள உள்ளது. பெர்க்சயர் ஹாத்தவே நிறுவனத்தின் அதிகார பூர்வ தகவலின் படி, அந்த நிறுவனம் பே.டி.எம். (Paytm) நிறுவனத்தில் சுமார் 4 சதவீத பங்குகளை வாங்க திட்டமிட்டுள்ளது.

 

Paytm தளத்தின் நிறுவனம் ஒன்97 (One97 Communications Ltd) ஆகும். இந்த நிறுவனத்தில் தான் வாரென் நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் முதன்முறையாக வாரன் பப்பெட் முதலீடு செய்ய உள்ளார், அதுவும் தகவல் தொழில்நுட்பத்தில் உள்ள நிறுவனத்தில் என்பது பெரும்பாலான முதலீட்டாளர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

 

இந்த முதலீட்டின் மதிப்பு சுமார் 2500 கோடி ரூபாய் என சொல்லப்பட்டுள்ளது. ஏற்கனவே Paytm நிறுவனத்தில் சீனாவின் அலிபாபா நிறுவனமும் முதலீடு செய்துள்ளது. அலிபாபா நிறுவனம் 25 சதவீத பங்குகளை Paytm நிறுவனத்தில் கொண்டுள்ளது. கடந்த நிதி ஆண்டில் Paytm நிறுவனம் 1200 கோடி ரூபாய் நஷ்டத்தை காட்டியுள்ளது. இருப்பினும் இந்த நிறுவனம் 84,000 கோடி ரூபாய் மதிப்புடையதாக கணிக்கப்பட்டுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

நடுத்தர பட்ஜெட் திட்டமிடல் – பகுதி 1

நடுத்தர பட்ஜெட் திட்டமிடல் – பகுதி 1

Budget Planning for Middle Class Family – Part 1

 

வர்த்தக மதுரை தளத்தில் நாம் பொருளாதாரம் மற்றும் நிதி சார்ந்த பல விஷயங்களை பதிவிட்டு வந்தாலும், நமது வாசகர்கள் சிலர், நிகழ்கால அடிப்படையில் வாழ்க்கைக்கு தேவையான ஒரு பட்ஜெட் திட்டமிடலை (Budget Planning) கேட்டிருந்தனர். இதன் காரணமாக நமது நகரின் தற்போதைய விலைவாசியை அடிப்படையாக கொண்டு, பட்ஜெட் திட்டமிடல்  என்ற குறுந்தொடரை (Miniseries) ஆரம்பித்துள்ளோம்.

 

திரு. ராம்குமார்  மதுரையில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். 29 வயதாகும் ராம்குமார் தனது தாய்  மற்றும் மனைவியுடன் மதுரை மாநகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அவரது வீட்டிற்கும், அலுவலகத்திற்குமான தூரம் சுமார் 10 கி.மீ. ஒரு நபர் வருமானம் மட்டுமே கொண்டுள்ள ராம்குமார் தனது மனைவி மற்றும் இன்னும் ஆறு மாதத்தில் பிறக்கக்கூடிய குழந்தை நலனையும், தனது தாயின் முதுமை காலத்தையும் பாதுகாக்க வேண்டும். இனி அவருக்கான, மாதாந்திர பட்ஜெட் திட்டமிடலை பார்ப்போம்.

 

Budget Planning

 

மாதம் ரூ. 25,000 /- ஐ சம்பளமாக (பிடித்தம் போக) பெறும் ராம்குமாரின் மாத செலவுகளை நாம் மேலே உள்ள அட்டவணையில் காணலாம். மாத வீட்டு வாடகை ரூ. 5000 /- என்பது மதுரை நகருக்குள் நடுத்தர மக்களுக்கு எளிமையாக (1 BHK) கிடைப்பதாகும். நகருக்கு சற்று தொலைவில் (10 கி.மீ.) வசிக்கும் பட்சத்தில் 5000 ரூபாய்க்கு வசதியான வாடகை வீடு அமையலாம்.

 

பெரியவர்கள் மூன்று பேர் மற்றும் ஒரு மழலை இருக்கும் குடும்பத்திற்கான சராசரி உணவுச்செலவு மாதம் ரூ. 7250 /- ஆக கணக்கிடப்பட்டுள்ளது. இது ஒரு நடுத்தர குடும்பத்திற்கான திட்டமிடல் என்பதை நினைவில் கொள்ளவும்.

 

 

மருத்துவம் மற்றும் காப்பீடு செலவுகள் மாதத்திற்கு ரூ. 4500 /- என  ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றில் தான் நம்மில் பெரும்பாலோர் அலட்சியம் காட்டி வருகிறோம். ஒரு சரியான பட்ஜெட் திட்டமிடல் என்பது வருவாய்க்குள் செலவு மட்டுமல்ல; உங்கள் எதிர்பாராத செலவுகளையும் குறைப்பதாக இருக்க வேண்டும். இன்றையளவில் மருத்துவம் மற்றும் எதிர்பாராத மருத்துவ செலவுகள் என்பது யாராலும் எளிதாக கணக்கிட முடியாத நிலையாக உள்ளது. இருப்பினும் நாம் காப்பீடு எடுப்பதன் மூலம், நமது எதிர்பாராத மருத்துவ செலவுகளை குறைக்கலாம்.

 

ராம்குமாருடைய தாய் மற்றும் பிறக்க போகும் குழந்தைக்கான மருத்துவ செலவுகள் பெரும்பான்மையாக அமையும். அதனால் இவருடைய தாய்க்கு மருத்துவ காப்பீடு (Health Insurance) ரூ. 3 லட்சத்திற்கும், ராம்குமார், மனைவி மற்றும் பிறக்கும் குழந்தை மூவருக்கும் சேர்த்து ரூ. 5 லட்சத்திற்கும் கவரேஜ் எடுக்கப்பட்டுள்ளது. ராம் குமார் தனக்கான தனிநபர் விபத்து காப்பீடு ரூ. 10 லட்சத்திற்கு பதிவு செய்துள்ளார். மேலும் ராம் குமார் மட்டுமே தனது குடும்பத்தில் சம்பாதிக்கும் நபராக இருப்பதால், அவருக்கான டேர்ம் இன்சூரன்ஸ் ரூ. 50 லட்சத்திற்கு (Term Insurance) பாலிசி கவரேஜ் எடுத்துள்ளார்.

 

10 கி.மீ தூரமுள்ள தனது அலுவலகத்திற்கு ராம்குமார் இரு சக்கர வாகனத்தில் செல்கிறார். மாத போக்குவரத்து செலவிற்காக ரூ. 1000 /- ஒதுக்கப்பட்டுள்ளது. உடை மற்றும் பொழுதுபோக்கிற்கு மாதம் ரூ. 1250 ம், இதர செலவுகளுக்கு ரூ. 1500 ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதர செலவுகளில் கைபேசி – இணைய கட்டணம், கேபிள் டிவி, மின்சாரம் போன்றவையும் உள்ளடக்கம்.

 

ராம்குமாருக்கு பிற வருமானம் எதுவுமில்லை. அவருடைய மாத செலவுகள் மொத்தம் ரூ. 20,500 /- ஆக உள்ளது. இப்போது அவரிடம் உபரியாக ரூ. 4,500 /- உள்ளது. இந்த தொகையை கொண்டு அவரது குடும்பத்தின் எதிர்கால நிதி இலக்குகளை பூர்த்தி செய்யலாம். நிதி இலக்குகள் பொதுவாக குழந்தைக்கான மேற்படிப்பு, திருமணம், ஓய்வு கால நிதி, சுற்றுலா, வீடு வாங்குவது  போன்றவையாக இருக்கலாம்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

நினைவில் கொள்க:

 

  • ராம்குமார்  தனது மொத்த சம்பளத்தில், பி.எப். காக (Provident Fund) 12 % பங்களிப்பு அளித்து வருகிறார். நிறுவன காப்பீடு மற்றும் பி.எப். பிடித்தம் போக தான் மாதம் ரூ. 25,000 /- ஐ சம்பளமாக பெறுகிறார்.

 

  • ராம்குமாருக்கு தற்சமயம் எந்த கடனும் இல்லை. அதனால் அவர் கடனில்லா நபராக (Debt free) உள்ளார். இதுவரை அவருக்கு சொந்தமாக வீடு இல்லை, ஆனால் தனது பூர்வீகத்தில் சொந்தமான நிலம் உள்ளது.

 

  • தனது குடும்ப உணவிற்கான மளிகை பொருட்களை மாதத்திற்கு ஒரு முறை தேர்முட்டி, கீழ மாரட் வீதிகளில் வாங்குவார். காய்கறி மற்றும் பழ வகைகளை அருகில் இருக்கும் சந்தையில் வாரத்திற்கு ஒரு முறை தனது மனைவி வாங்கி வருகிறார்.
  • அலுவலகத்திற்கு இரு சக்கர வாகனத்தில் மட்டுமில்லாமல், சில சமயங்களில் பொது போக்குவரத்தையும் (Bus, Share Auto) ராம்குமார் பயன்படுத்தி கொள்வார்.
  • தனக்கும், தனது குடும்பத்திற்கு தேவையான துணிமணிகளை பண்டிகை மற்றும் சலுகை காலங்களில் மொத்தமாக வாங்கும் பழக்கமுண்டு.
  • ராம்குமாரின் மனைவி எம்.எஸ்சி (M.Sc) வரை  படித்திருந்தாலும் தனது மாமியார் மற்றும் வருங்கால மழலைச்செல்வத்திற்காக வேலைக்கு செல்லவில்லை. அதே நேரத்தில் தனது படிப்பை கொண்டு, குடும்பத்திற்கான  கூடுதல் வருமானத்தை ஈட்டுவதற்கு (Additional / Secondary Income) திட்டமிட்டு வருகிறார்.
  • ராம்குமாரும் தனது  மாத உபரி தொகையை கொண்டு நிதி இலக்குகளை நிர்ணயித்துள்ளார். இரண்டாம் வருமானத்திற்கும் (Passive Income) வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறார்.
  • அட்டவணையில் சொல்லப்பட்ட எண்கள் (Expenses) அனைத்தும் தற்போதைய விலைவாசியை கொண்டு கணக்கிடப்பட்டவை.

 

கடனில்லாமல் இருப்பதும் சுகமே…

கடனிருந்து அதனை குறைப்பதும், பெருஞ்சுகமே…

 

வாழ்க  வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

நான்கு புதிய அம்சங்களுடன் பீம் செயலி (BHIM UPI 2.0)

நான்கு புதிய அம்சங்களுடன் பீம் செயலி (BHIM UPI 2.0)

Four Attractive Features in  UPI 2.0 launch

கடந்த வியாழக்கிழமை (16-08-2018) தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India -NPCI) தனது UPI செயலி 2.0 பதிப்பை வெளியிட்டது. இந்த இடைமுக செயலி (Interface) பாரத ரிசர்வ் வங்கியினால் (RBI) ஒழுங்குமுறைப்படுத்தப்படுகிறது. UPI இடைமுகத்தை BHIM, PAYTM, Phonepe, Airtel, Mobikwik, Uber, Google Tez மற்றும் Chillr போன்ற பிரபல பிராண்டுகள் பயன்படுத்துகின்றன.

 

மொபைல் பரிமாற்றத்தில் மிகவும் பாதுகாப்பான இடைமுக செயலியாக கருதப்படும் UPI 2.0 வது பதிப்பில் பல புதிய அம்சங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. UPI (Unified Payment Interface) செயலியில் வங்கிகளின் நடப்பு கணக்கு மற்றும் சேமிப்பு கணக்கு மட்டுமே இணைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வங்கி ஓவர் டிராப்ட் வசதியையும் (Overdraft facility) இணைத்து கொள்ளலாம். இதன் வாயிலாக மொபைல் மூலம் பண பரிமாற்றம் செய்யும் வாடிக்கையாளர்கள் விரைவாக ஓவர் டிராப்ட் பரிவர்த்தனையை செயல்படுத்தலாம்.

 

வாடிக்கையாளர்கள் தாங்கள் மேற்கொண்ட பரிவர்தனைகளுக்கான விவரங்களை வணிகர்கள் மூலம் தங்களது இன்பாக்ஸில் (Bills in Inbox) பெறலாம். இதனால் வாடிக்கையாளர்- வணிகர்களின் நம்பிக்கை மேம்படும்.

 

மேலும் வாடிக்கையாளர் தாங்கள் அணுகும் வணிகர் UPI பதிவு செய்யப்பட்டவரா என்பதை அறிய, QR Code மூலம் சரிபார்த்து கொள்ளலாம். இதன் மூலம் நம்பிக்கையான மற்றும் பாதுகாப்பான பரிமாற்றத்தை உறுதி செய்யலாம் (UPI Verified by QR Code).

Get up to Rs.1000 cashback! Link your bank account and do your first money transfer on #PhonePe. (Scan & Pay)

Phonepe

 

UPI 2.0 மூலம் பின்வரும் தேதியில் (Schedule Payments) பண பரிமாற்ற நடவடிக்கையை திட்டமிடலாம். இதற்கு பரிவர்த்தனைக்கு முன் ஒரு முறை மட்டும் அங்கீகாரம் அளிக்கும் (Pre-authorisation) அனுமதியை மேற்கொள்ளலாம்.

 

கடந்த ஜூலை மாதத்தில் மட்டும், பீம் செயலி மூலம் ரூ. 45,850 கோடி பண பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. ( Cashless India )தற்போது UPI 2.0 இடைமுக உறுப்பினராக Axis Bank, SBI, ICICI, Yes Bank, HDFC, Kotak Mahindra , Federal, Indusind, HSBC மற்றும் RBL போன்ற வங்கிகள் உள்ளன.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

ஜூலை மாத பணவீக்கம் – 4.17 சதவீதம்

ஜூலை மாத பணவீக்கம் – 4.17 சதவீதம்

Inflation declines to 4.17 percent in July 2018

 

ஜூலை மாத சில்லரை பணவீக்கம்(Retail Inflation)  4.17 சதவீதமாக சரிந்தது. கடந்த ஜூன் மாதத்தில் சில்லரை பணவீக்கம் 4.92 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த மாத பணவீக்க குறைவு சந்தையில் யாரும் எதிர்பார்க்காத அளவாகவும், ஒன்பது மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைவாகவும் உள்ளது.

 

உணவு மற்றும் குளிர்பானங்களின் பணவீக்க அளவு ஜூலையில் 1.73 சதவீதமாக இருந்தது. இதுவே கடந்த ஜூன் மாதத்தில் 3.11 % ஆக இருந்தது. பழங்களின் பணவீக்கம் 10.06 சதவீதத்திலிருந்து 6.98 சதவீதமாக ஜூலை மாதத்தில் முடிவடைந்தது.

 

ஜூலை மாதத்தில் பால் பொருட்களின் சில்லரை பணவீக்கம் 2.96 சதவீதமாக இருந்தது. காய்கறிகளின் பணவீக்க அளவு 7.80 சதவீதத்திலிருந்து ( – 2.19) % ஆக உள்ளது. பருப்பு வகைகளின் விலைவாசி ( – 10.87) சதவீதத்திலிருந்து, ( – 8.91)  சதவீதம் இருந்தது.

 

எண்ணெய் மற்றும் கொழுப்பு வகைகள் 2.79 % ஆகவும், மசாலா 2.66 சதவீதமாகவும், மாமிசம் மற்றும் மீன் வகைகள் 2.26 சதவீதமாக உள்ளது. சில்லரை பணவீக்கம் கடந்த ஜூன் மாதத்தில் மறுமதீப்பீடு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com     

 

முதலீடு செய்யும் முன் கவனிக்க வேண்டிய நான்கு விஷயங்கள்

முதலீடு செய்யும் முன் கவனிக்க வேண்டிய நான்கு விஷயங்கள்

4 things to know before Investing

 

கடந்த சனிக்கிழமை (11-08-2018) திண்டுக்கல்லில், நாணயம் விகடன் சார்பாக முதலீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் சிறப்புரையாளராக திரு வ. நாகப்பன் (முதலீட்டு ஆலோசகர்) மற்றும் திரு சுவாமிநாதன் (தமிழக மண்டல தலைவர், ஆதித்யா பிர்லா பரஸ்பர நிதி –ABSL) அவர்களும் கலந்து கொண்டனர்.

 

பரஸ்பர நிதிக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி என்ற போதிலும், தனிநபரின் தேவைகள் மற்றும் விருப்பங்கள் சார்ந்த பல விஷயங்கள் சொல்லப்பட்டது. ஒரு குடும்பத்திற்கு நிதி திட்டமிடல் என்பது அவசியமான ஒன்று என்றும், முதலீட்டு சாதனங்களை (Investment and Insurance Products) தேர்ந்தெடுக்கும் போது, அது நமது தேவையை பூர்த்தி செய்கிறதா என்பதை அறிந்து முதலீட்டை மேற்கொள்ள வேண்டுமென திரு. சுவாமிநாதன் (Swaminathan -Aditya Birla Sun life) கூறினார்.

 

ஒரு குடும்பத்திற்கு தேவையான நிதி திட்டமிடலில் குடும்பத்திலுள்ள அனைவரும் பங்கேற்பது அவசியம். நமது குழந்தைகளுக்கும் பண சேமிப்பு மற்றும் முதலீடு சார்ந்த கல்வியை அளிப்பது ஆரோக்கியமான ஒன்று; செல்வம் சேர்ப்பதில் நேரமும், பணமும் முக்கியமான இலக்கு எனவும் சுவாமிநாதன் எடுத்துரைத்தார்.

 

ஒரு தனிமனிதனின் நிதி சார்ந்த வாழ்க்கையில் எடுக்கப்படும் மிகப்பெரிய ரிஸ்க், முதலீட்டை மேற்கொள்ளாததே; அதனை விட பெரிய ஆபத்து, முதலீட்டை பற்றி அறிந்தும் கால தாமதமாக முதலீடு செய்வதே என ஆதித்யா பிர்லா மண்டல தலைவர் தெரிவித்தார்.

 

ஒரு முதலீட்டை மேற்கொள்ளும் போது, கீழ்காணும் நான்கு விஷயங்களும் நமக்கு கிடைக்கின்றனவா என அறிந்து கொள்வது அவசியம்,

 

  • பாதுகாப்பு  (Safety)
  • பணப்புழக்கம் (Liquidity)
  • நல்ல வருமானம் (Better Returns)
  • வரி திறன் (Tax Efficient)

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

இதற்கடுத்தாற் போல், பேசிய  திரு வ. நாகப்பன் (V. Nagappan) அவர்கள், ‘ ஒருவர் தனது முதலீட்டை மேற்கொள்ளுகையில் கூட்ட மனப்பான்மையை (Crowd Mindset) விட்டு விட வேண்டும். மற்றவர்கள் (நண்பர்கள், உறவினர்கள், சக ஊழியர்கள்) சொன்னார்கள் என்பதற்காக, எந்த முதலீட்டிலும் உங்கள் பணத்தை போட வேண்டாம். பணத்தை பெருக்க உங்கள் பணத்தையே கொண்டு செய்யுங்கள். நீங்கள்  அதற்காக உங்கள் நலனை கெடுத்து கொள்ள வேண்டாம். தனக்கு ஒரு வருமானம் இருந்த போதிலும், இரண்டாம் வருமானத்திற்கு (Passive Income) முற்பட வேண்டும். நாம் வேலை செய்யா விட்டாலும், நமது பணம் நமக்காக உழைக்கும் ‘ என கூறினார்.

 

ஓய்வு காலத்திற்கான நிதியை திட்டமிடும் ஒருவர், தனது வயதான காலத்தில் மருத்துவ செலவுகள் மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரிக்கும் என்பதனையும் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும்; முதலீடு செய்யும் போது, அதனில் இருக்கும் ரிஸ்க்கை குறைக்க ஒரு நபர் டேர்ம் பாலிசியும், குடும்பத்திற்கு மருத்துவ காப்பீடும் எடுத்து கொள்வது இன்றியமையாதது என திரு நாகப்பன் விளக்கினார்.

 

காப்பீடு திட்டங்களை எப்போதும் முதலீட்டு திட்டமாக கருத வேண்டாம் எனவும், ஒருவர் தன்னால் இயன்றவரை குறிப்பிட்ட தொகையை, மாதாமாதம் முதலீடு (SIP – Systematic Investment Planning)  செய்யும்படியும், மேலும் அதன் பலனை பிற்காலத்தில் அறியலாம் எனவும் அவர் கூறினார்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

5 சிறந்த பெருமூலதன பரஸ்பர நிதித்திட்டங்கள் – 2018

5 சிறந்த பெருமூலதன பரஸ்பர நிதித்திட்டங்கள் – 2018

5 Large Cap Funds to Invest in 2018

 

இன்றையளவில் பணவீக்கத்தை தாண்டிய  வருமானம் ஈட்டுதலும், பணத்தை பெருக்குவதிலும் பங்குச்சந்தை முக்கிய பங்காற்றுகிறது. தங்கம், நிலம், வங்கி முதலீடுகளை  காட்டிலும் நல்லதொரு வருமானத்தை நீண்ட கால நோக்கில் பங்குச்சந்தையே தந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் நம்மில் பலருக்கு பங்குச்சந்தை பற்றிய அச்சம் (Risk) பொதுவாக இருப்பதுண்டு.

 

பங்குச்சந்தை இலவச பயிற்சி வகுப்புக்கு பதிவு செய்ய…

 

https://varthagamadurai.com/share-market-course-registration/

 

 

பங்குச்சந்தையில் நேரிடையாக முதலீடு செய்யாமல், அதே நேரத்தில் பங்குச்சந்தையின் பலனை அடைய விளைந்தது தான் பரஸ்பர நிதி (Mutual Funds) திட்டங்கள். இன்று பெரும்பாலானோர் மியூச்சுவல் பண்டில் எதற்காக முதலீடு செய்கிறோம் என்று அறியாமல் பல பரஸ்பர நிதி திட்டங்களை தேர்ந்தெடுக்கும் நிலை உள்ளது.

 

ஒருவரின் நிதி இலக்கை (Financial Goal) சார்ந்து பரஸ்பர நிதி முதலீடுகள் இருக்கும் பட்சத்தில் அவர் தனது இலக்கினை எளிமையாக அடையலாம். பரஸ்பர நிதி முதலீட்டு திட்டங்கள் பல வகைகள் உள்ளன. முதலீட்டாளர் தனது ரிஸ்க் தன்மை பொருத்து பரஸ்பர நிதி திட்டங்களை தேர்ந்தெடுக்கலாம்.

 

இங்கே நாம் அதனை போன்று, பெருமூலதன பரஸ்பர நிதி திட்டங்கள் (Large Cap Funds) சிலவற்றை தேர்ந்தெடுத்து உங்களுக்காக கொடுத்துள்ளோம். இந்த திட்டங்கள் கடந்த 5-10 வருட காலங்களில் பணவீக்கத்தை தாண்டிய வருமானத்தை கொடுத்துள்ளன.

 

அவைகளில் சில (5 Best Large Cap Funds),

 

  • Axis Blue Chip Fund
  • ICICI Pru Blue Chip Fund
  • Reliance Large Cap Fund – Retail Plan
  • Aditya Birla Sun life Frontline Equity Fund (ABSL)
  • HDFC Top 100 Fund

 

 

5 Best Large Cap Funds 2018

 

 

அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள மதிப்பீடுகள் CRISIL நிறுவனத்தினுடையது (Crisil Rating). கொடுக்கப்பட்டுள்ள ஐந்து திட்டங்களுக்கும் நுழைவு கட்டணம் (No Entry Load) எதுவுமில்லை. வெளியேறும் கட்டணம் (Exit Load) திட்டங்களுக்கு ஏற்றவாறு மாறுபடும், ஆனால் பொதுவாக ஒரு சதவீதத்தில் இருக்கும்.

 

ஒவ்வொரு பரஸ்பர நிதி திட்டத்திற்கும் செலவு விகிதம் (Expense Ratio) மாறுபடும். அதே நேரத்தில் மொத்த செலவு விகிதம் (TER – Total Expense Ratio) செபி விதிமுறை படி, 2.5 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

 

இந்த 5 பெருமூலதன பரஸ்பர நிதி திட்டங்களும் 500 கோடி ரூபாய்க்கும் மேலான சொத்துக்களை (AUM) நிர்வகிப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திட்டங்கள் கடந்த 8-10 வருட காலமாக செயல்பட்டு வருகின்றன.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

குறைந்த பட்ச முதலீடு:

 

ICICI Pru Blue Chip Fund ல் குறைந்த பட்ச முதலீட்டு தொகை ரூ. 100/- ஆகவும், ஆதித்யா பிர்லா (Aditya Birla Sun life Frontline Equity) திட்டத்தில் ரூ. 1000/- ஆகவும் உள்ளது. Reliance Large Cap, HDFC Top 100 மற்றும் Axis Blue Chip திட்டங்களில் குறைந்த முதலீடாக ரூ. 5000/- ஐ மேற்கொள்ளலாம்.  இந்த திட்டங்கள் பெரும்பாலும் வங்கிகள், நிதி சேவைகள், தொழில்நுட்பம் மற்றும் வாகன துறையில் முதலீடு செய்கின்றன.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 % உயர்த்தியது ரிசர்வ் வங்கி

ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 % உயர்த்தியது ரிசர்வ் வங்கி

RBI hikes repo rate by 0.25 percent – July 2018

 

புதன் கிழமை (01-08-2018) நடைபெற்ற மத்திய நிதி கொள்கை குழு கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தியது (25 basis points) பாரத ரிசர்வ் வங்கி. பாரத ரிசர்வ் வங்கி, இந்த வருடத்தில் இரண்டாவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ரெப்போ விகிதம் அதிகரிப்பால், தற்போது 6.25 சதவீதம் என்ற அளவிலிருந்து 6.50 சதவீதம்(Repo Rate) என்ற நிலையை கொண்டுள்ளது. இதே நேரத்தில் ரிவெர்ஸ் ரெப்போ விகிதமும்(Reverse Repo Rate) 0.25 சதவீதம் அதிகரித்து 6.25 % ஆக உள்ளது. Reverse Repo விகிதம் என்பது வணிக வங்கிகளிடம் இருந்து பாரத ரிசர்வ் வங்கி பெறும் தொகைக்கான விகிதம் ஆகும்.

 

ரிசர்வ் வங்கியின் இந்த முடிவால், வங்கிகளில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் உயரும். பொதுவாக வங்கிகளுக்கு பண வரவு நன்றாக இருக்கும் போது, வாடிக்கையாளர்களுக்கு கடன்கள் சலுகை விகிதத்தில் தரப்படலாம். ஆனால் தற்போதைய நிலையில், கடந்த சில காலங்களாக வங்கி டெபாசிட் வட்டி விகிதம் குறைவாக இருந்ததால், முதலீட்டாளர்கள் பரஸ்பர நிதி முதலீடுகளை தேர்ந்தெடுத்துள்ளனர். அதனால் வங்கியின் வட்டி விகித உயர்வை எதிர்பார்க்கலாம்.

 

இந்த உயர்வால்(RBI Monetary Policy), வீட்டுக்கடன், வாகன கடன், மற்றும் தொழில் புரிய கடன் வாங்குவோர் பாதிக்கப்படலாம். வங்கி டெபாசிட்தாரர்களும் தங்கள் சேமிப்புக்கான வட்டி விகிதம் உயர்த்தப்படுமா என்ற கோணத்திலும் எதிர்பார்க்கின்றனர்.

 

2018-19 நிதியாண்டுக்கான (2வது அரையாண்டு) பணவீக்க மதிப்பீடையும்  ரிசர்வ் வங்கி 4.7 சதவீதத்திலிருந்து 4.8 சதவீதமாக -Inflation இருக்கும் என கூறியுள்ளது. பணவீக்கம் உயரும் என்ற நிலைப்பாட்டை கொண்டே இந்த ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 2019-20 ம் நிதியாண்டில் (முதல் அரையாண்டு) பணவீக்கம் 5 % ஆக இருக்கும் எனவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி(GDP) 2018-19 ல் 7.4 சதவீதமாக நீடிக்கும் எனவும் ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது.

 

உலகளவில் நடைபெறும் வர்த்தக போரும், கச்சா எண்ணெய் விலை மாற்றமும் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதகமாக உள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், சரக்கு மற்றும் சேவை வரி (GST) வருமானம் ஜூலை மாத முடிவில் ரூ. 96,483 கோடியாக உள்ளது. இது கடந்த ஜூன் மாதத்தில் ரூ.95,610 கோடியாக இருந்தது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

2017-18 ம் நிதியாண்டில் 6.84 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர்

2017-18 ம் நிதியாண்டில் 6.84 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர்

6.84 Crore Income Tax Returns filed during Financial year 2017-18

 

2018-19 மதிப்பீடு ஆண்டுக்கான (Assessment Year 2018-19) வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய கடைசி தேதி ஜூலை 31ம் தேதியிலிருந்து நீட்டிக்கப்பட்டு ஆகஸ்ட் 31 ம் தேதியாக அறிவித்துள்ளது நேரடி வரிகளின் மத்திய வாரியம்(Central Board of Direct Taxes).

 

2017-18 ம் நிதியாண்டில் (Financial year) பெற்ற வருமானத்திற்காகவே 2018-19 (Jan-Dec 2018) மதிப்பீடு காலத்தில் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். வருமான வரி தாக்கலுக்கான கடைசி தேதி அறிவித்த பின்பும், பொது மக்களிடையே ஒரு குழப்பம் இருந்தது. அதாவது CBDT அறிவித்த தகவலில், குறிப்பிட்ட பிரிவுகளில் வரும் வரிதாரர்களுக்கு மட்டுமே ஆகஸ்ட் 31, கடைசி தேதியாகும் என எடுத்து கொள்ளப்பட்டது. தற்போது இதனை சரியாக விளக்கமளிக்கும் விதத்தில் வருமான வரி தாக்கல் இணையத்தளத்திலே, ‘ உங்களின் வருமானம் (Income Tax Return) எந்த வரி தணிக்கைக்கு உட்பட்டதாக இல்லாத போது ‘ கடைசி தேதியாக ஆகஸ்ட் 31 இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

 

இதனால் சம்பளம் பெறும் வரிதாரர்கள் அனைவருக்குமான கடைசி தேதி ஆகஸ்ட் 31 ஐ எடுத்து கொள்ளலாம். பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி தேதியையும் மார்ச் 31, 2019 ஆக CBDT அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் ஜூன் 30, 2018 காலக்கெடுவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது சம்மந்தமான வழக்கும் நிலுவையில் உள்ளது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ஆதார் மூலம் வருமான வரி தாக்கல் செய்யும் முறையை கட்டாயமாக்க கூடாது எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது. தற்போது வருமான வரி தாக்கலை பூர்த்தி செய்ய ஆதார் மூலமான ஆய்வு, வங்கி கணக்கு, இன்டர்நெட் பேங்கிங், டீமேட் கணக்கு, தபால் மூலம் என ஐந்து வகைகளில் செய்யலாம்.

 

2017-18 ம் நிதியாண்டில் மட்டும் 6.84 கோடி கணக்குகள் மூலம் வருமான வரி தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது 2016-17 ம் நிதி வருடத்தில் 5.43 கோடியாகும். நடப்பு நிதியாண்டில் (Apr-Jun 2018 -Updated as on 30-06-18) சுமார் 77,24,900 கணக்குகள் மூலம் வருமான வரி தாக்கல் செய்யப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

 

Filing Category and Income wise

( Range1 =>  Up to ₹5,00,000, Range2 =>  ₹5,00,001 – ₹10,00,000, Range3 =>  ₹10,00,001 – ₹20,00,000, Range4 =>  ₹20,00,001 – ₹50,00,000, Range5 =>  ₹50,00,001 – ₹1,00,00,000, Range6 =>  Above ₹1,00,00,000 )

 

வருமான வரி தாக்கல் இணையதளத்தின் புள்ளிவிவரங்களின் படி, 5 லட்சத்துக்கு குறைவான வருமானம் உள்ளவர்கள் வரி தாக்கல் செய்த தனி நபர் எண்ணிக்கை சுமார் 56,20,300 ஆகவும், 5 லட்சத்திலிருந்து 10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களில் வரி தாக்கல் செய்த தனி நபர் எண்ணிக்கை 12,74,470 ஆகவும் உள்ளது. அனைத்து பிரிவுகள் உட்பட 5 லட்சத்துக்கு குறைவான வருமானம் உள்ளவர்களின் தாக்கல் எண்ணிக்கை 58,55,770 ஆகும். அதே நேரத்தில் 1 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களின் வரி தாக்கல் எண்ணிக்கை 10,058 ஆக கொண்டுள்ளது.

 

நடப்பு நிதியாண்டில் வரி தாக்கல் செய்யப்பட்ட மாநில அளவில் தமிழகம் மூன்றாம் இடத்தில் (6,31,400) உள்ளது. முதலிடத்தில் மகாராஷ்டிரா மாநிலமும் (12,12,780), இரண்டாம் இடத்தில குஜராத் மாநிலமும் (9,59,887) உள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

 

டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க போறீங்களா ? – புதிய ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள்

டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க போறீங்களா ? – புதிய ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள்

New GST Rates with effect from July 27, 2018

 

நேற்றைய (22-07-18) ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் (GST Council Meeting) ஏராளமான பொருட்களுக்கு வரி விகிதங்கள் குறைக்கப்பட்டன. நிதி அமைச்சர் பியூஸ் கோயல் அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில முடிவுகள்:

 

நூறுக்கும் மேற்பட்ட நுகர்வோர் சாதன பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள் குறைக்கப்பட்டன. டிவி, வாஷிங் மெஷின், குளிர்சாதன பொருட்கள், வாக்கும் கிளீனர் (TV, Washing Machine, Refrigerator, Vacuum Cleaner) போன்ற பொருட்களின் ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள் 28 சதவீதலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.

 

பெயிண்டுகள் மற்றும் வார்னிஷ், ரெசின் சிமெண்ட், லித்தியம் பேட்டரி (Paint, Varnish, Resin Cement, Lithium-ion Battery) போன்ற பொருட்களுக்கும் 28 % லிருந்து 18 % சதவீதமாக வரி விதிக்கப்பட்டன. கைத்தறி துணிகள், பின்னப்பட்ட தொப்பிகள் (Knitted Cap)போன்ற கைவினை பொருட்களுக்கு 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக மாற்றப்பட்டன.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கூட்டத்தில், முக்கியமாக சானிட்டரி நாப்கின்களுக்கு(Sanitary Napkin Tax free) வரி விலக்களிக்கப்பட்டன. கான்க்ரீட் கலவை லாரிகள், தீயணைப்பு வாகனங்கள், கிரேன் லாரிகள் போன்ற சிறப்பு வாகனங்களுக்கு 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.

 

5 கோடி ரூபாய்க்கு குறைவான ஆண்டு வருவாய் ஈட்டும் நிறுவனங்கள் இனி மேல் மாதாமாதம் வரி தாக்கல் செய்ய வேண்டியதில்லை, அதற்கு பதிலாக காலாண்டிற்கு ஒரு முறை வரி தாக்கல் செய்தால் போதும்.

 

இந்த கூட்டத்தில் சொல்லப்பட்ட வரி விகித குறைப்பு மூலம் அரசாங்கத்திற்கு சுமார் 7000 கோடி ரூபாய் செலவினங்களாக கருதப்படும் எனவும், புதிய வரி விகித குறைப்பு வரும் ஜூலை 27, 2018 முதல் அமலுக்கு வரும் எனவும் ஜி.எஸ்.டி. கவுன்சில் தெரிவித்துள்ளது.

 

New GST rates

 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

Financial Blog in Tamil