நான்கு புதிய அம்சங்களுடன் பீம் செயலி (BHIM UPI 2.0)
Four Attractive Features in UPI 2.0 launch
கடந்த வியாழக்கிழமை (16-08-2018) தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India -NPCI) தனது UPI செயலி 2.0 பதிப்பை வெளியிட்டது. இந்த இடைமுக செயலி (Interface) பாரத ரிசர்வ் வங்கியினால் (RBI) ஒழுங்குமுறைப்படுத்தப்படுகிறது. UPI இடைமுகத்தை BHIM, PAYTM, Phonepe, Airtel, Mobikwik, Uber, Google Tez மற்றும் Chillr போன்ற பிரபல பிராண்டுகள் பயன்படுத்துகின்றன.
மொபைல் பரிமாற்றத்தில் மிகவும் பாதுகாப்பான இடைமுக செயலியாக கருதப்படும் UPI 2.0 வது பதிப்பில் பல புதிய அம்சங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. UPI (Unified Payment Interface) செயலியில் வங்கிகளின் நடப்பு கணக்கு மற்றும் சேமிப்பு கணக்கு மட்டுமே இணைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வங்கி ஓவர் டிராப்ட் வசதியையும் (Overdraft facility) இணைத்து கொள்ளலாம். இதன் வாயிலாக மொபைல் மூலம் பண பரிமாற்றம் செய்யும் வாடிக்கையாளர்கள் விரைவாக ஓவர் டிராப்ட் பரிவர்த்தனையை செயல்படுத்தலாம்.
வாடிக்கையாளர்கள் தாங்கள் மேற்கொண்ட பரிவர்தனைகளுக்கான விவரங்களை வணிகர்கள் மூலம் தங்களது இன்பாக்ஸில் (Bills in Inbox) பெறலாம். இதனால் வாடிக்கையாளர்- வணிகர்களின் நம்பிக்கை மேம்படும்.
மேலும் வாடிக்கையாளர் தாங்கள் அணுகும் வணிகர் UPI பதிவு செய்யப்பட்டவரா என்பதை அறிய, QR Code மூலம் சரிபார்த்து கொள்ளலாம். இதன் மூலம் நம்பிக்கையான மற்றும் பாதுகாப்பான பரிமாற்றத்தை உறுதி செய்யலாம் (UPI Verified by QR Code).
Get up to Rs.1000 cashback! Link your bank account and do your first money transfer on #PhonePe. (Scan & Pay)
UPI 2.0 மூலம் பின்வரும் தேதியில் (Schedule Payments) பண பரிமாற்ற நடவடிக்கையை திட்டமிடலாம். இதற்கு பரிவர்த்தனைக்கு முன் ஒரு முறை மட்டும் அங்கீகாரம் அளிக்கும் (Pre-authorisation) அனுமதியை மேற்கொள்ளலாம்.
கடந்த ஜூலை மாதத்தில் மட்டும், பீம் செயலி மூலம் ரூ. 45,850 கோடி பண பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. ( Cashless India )தற்போது UPI 2.0 இடைமுக உறுப்பினராக Axis Bank, SBI, ICICI, Yes Bank, HDFC, Kotak Mahindra , Federal, Indusind, HSBC மற்றும் RBL போன்ற வங்கிகள் உள்ளன.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை