Inflation India

ஜூலை மாத பணவீக்கம் – 4.17 சதவீதம்

ஜூலை மாத பணவீக்கம் – 4.17 சதவீதம்

Inflation declines to 4.17 percent in July 2018

 

ஜூலை மாத சில்லரை பணவீக்கம்(Retail Inflation)  4.17 சதவீதமாக சரிந்தது. கடந்த ஜூன் மாதத்தில் சில்லரை பணவீக்கம் 4.92 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த மாத பணவீக்க குறைவு சந்தையில் யாரும் எதிர்பார்க்காத அளவாகவும், ஒன்பது மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைவாகவும் உள்ளது.

 

உணவு மற்றும் குளிர்பானங்களின் பணவீக்க அளவு ஜூலையில் 1.73 சதவீதமாக இருந்தது. இதுவே கடந்த ஜூன் மாதத்தில் 3.11 % ஆக இருந்தது. பழங்களின் பணவீக்கம் 10.06 சதவீதத்திலிருந்து 6.98 சதவீதமாக ஜூலை மாதத்தில் முடிவடைந்தது.

 

ஜூலை மாதத்தில் பால் பொருட்களின் சில்லரை பணவீக்கம் 2.96 சதவீதமாக இருந்தது. காய்கறிகளின் பணவீக்க அளவு 7.80 சதவீதத்திலிருந்து ( – 2.19) % ஆக உள்ளது. பருப்பு வகைகளின் விலைவாசி ( – 10.87) சதவீதத்திலிருந்து, ( – 8.91)  சதவீதம் இருந்தது.

 

எண்ணெய் மற்றும் கொழுப்பு வகைகள் 2.79 % ஆகவும், மசாலா 2.66 சதவீதமாகவும், மாமிசம் மற்றும் மீன் வகைகள் 2.26 சதவீதமாக உள்ளது. சில்லரை பணவீக்கம் கடந்த ஜூன் மாதத்தில் மறுமதீப்பீடு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com     

 

Advertisement