Before Investing

முதலீடு செய்யும் முன் கவனிக்க வேண்டிய நான்கு விஷயங்கள்

முதலீடு செய்யும் முன் கவனிக்க வேண்டிய நான்கு விஷயங்கள்

4 things to know before Investing

 

கடந்த சனிக்கிழமை (11-08-2018) திண்டுக்கல்லில், நாணயம் விகடன் சார்பாக முதலீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் சிறப்புரையாளராக திரு வ. நாகப்பன் (முதலீட்டு ஆலோசகர்) மற்றும் திரு சுவாமிநாதன் (தமிழக மண்டல தலைவர், ஆதித்யா பிர்லா பரஸ்பர நிதி –ABSL) அவர்களும் கலந்து கொண்டனர்.

 

பரஸ்பர நிதிக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி என்ற போதிலும், தனிநபரின் தேவைகள் மற்றும் விருப்பங்கள் சார்ந்த பல விஷயங்கள் சொல்லப்பட்டது. ஒரு குடும்பத்திற்கு நிதி திட்டமிடல் என்பது அவசியமான ஒன்று என்றும், முதலீட்டு சாதனங்களை (Investment and Insurance Products) தேர்ந்தெடுக்கும் போது, அது நமது தேவையை பூர்த்தி செய்கிறதா என்பதை அறிந்து முதலீட்டை மேற்கொள்ள வேண்டுமென திரு. சுவாமிநாதன் (Swaminathan -Aditya Birla Sun life) கூறினார்.

 

ஒரு குடும்பத்திற்கு தேவையான நிதி திட்டமிடலில் குடும்பத்திலுள்ள அனைவரும் பங்கேற்பது அவசியம். நமது குழந்தைகளுக்கும் பண சேமிப்பு மற்றும் முதலீடு சார்ந்த கல்வியை அளிப்பது ஆரோக்கியமான ஒன்று; செல்வம் சேர்ப்பதில் நேரமும், பணமும் முக்கியமான இலக்கு எனவும் சுவாமிநாதன் எடுத்துரைத்தார்.

 

ஒரு தனிமனிதனின் நிதி சார்ந்த வாழ்க்கையில் எடுக்கப்படும் மிகப்பெரிய ரிஸ்க், முதலீட்டை மேற்கொள்ளாததே; அதனை விட பெரிய ஆபத்து, முதலீட்டை பற்றி அறிந்தும் கால தாமதமாக முதலீடு செய்வதே என ஆதித்யா பிர்லா மண்டல தலைவர் தெரிவித்தார்.

 

ஒரு முதலீட்டை மேற்கொள்ளும் போது, கீழ்காணும் நான்கு விஷயங்களும் நமக்கு கிடைக்கின்றனவா என அறிந்து கொள்வது அவசியம்,

 

  • பாதுகாப்பு  (Safety)
  • பணப்புழக்கம் (Liquidity)
  • நல்ல வருமானம் (Better Returns)
  • வரி திறன் (Tax Efficient)

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

இதற்கடுத்தாற் போல், பேசிய  திரு வ. நாகப்பன் (V. Nagappan) அவர்கள், ‘ ஒருவர் தனது முதலீட்டை மேற்கொள்ளுகையில் கூட்ட மனப்பான்மையை (Crowd Mindset) விட்டு விட வேண்டும். மற்றவர்கள் (நண்பர்கள், உறவினர்கள், சக ஊழியர்கள்) சொன்னார்கள் என்பதற்காக, எந்த முதலீட்டிலும் உங்கள் பணத்தை போட வேண்டாம். பணத்தை பெருக்க உங்கள் பணத்தையே கொண்டு செய்யுங்கள். நீங்கள்  அதற்காக உங்கள் நலனை கெடுத்து கொள்ள வேண்டாம். தனக்கு ஒரு வருமானம் இருந்த போதிலும், இரண்டாம் வருமானத்திற்கு (Passive Income) முற்பட வேண்டும். நாம் வேலை செய்யா விட்டாலும், நமது பணம் நமக்காக உழைக்கும் ‘ என கூறினார்.

 

ஓய்வு காலத்திற்கான நிதியை திட்டமிடும் ஒருவர், தனது வயதான காலத்தில் மருத்துவ செலவுகள் மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரிக்கும் என்பதனையும் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும்; முதலீடு செய்யும் போது, அதனில் இருக்கும் ரிஸ்க்கை குறைக்க ஒரு நபர் டேர்ம் பாலிசியும், குடும்பத்திற்கு மருத்துவ காப்பீடும் எடுத்து கொள்வது இன்றியமையாதது என திரு நாகப்பன் விளக்கினார்.

 

காப்பீடு திட்டங்களை எப்போதும் முதலீட்டு திட்டமாக கருத வேண்டாம் எனவும், ஒருவர் தன்னால் இயன்றவரை குறிப்பிட்ட தொகையை, மாதாமாதம் முதலீடு (SIP – Systematic Investment Planning)  செய்யும்படியும், மேலும் அதன் பலனை பிற்காலத்தில் அறியலாம் எனவும் அவர் கூறினார்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s