Tag Archives: berkshire hathaway

நான் வெளியேறுவதற்கான நேரம் வந்து விட்டது – முதலீட்டு ஜாம்பவான் வாரன் பப்பெட்

நான் வெளியேறுவதற்கான நேரம் வந்து விட்டது – முதலீட்டு ஜாம்பவான் வாரன் பப்பெட் 

Berkshire is 100 Percent prepared for our Departure – Warren Buffett

உலகின் மிகப்பெரிய முதலீட்டு ஜாம்பவான் என்றால் அது திரு. வாரன் பப்பெட் என்று சொல்வதில் மிகையல்ல. உலகின் நான்காவது கோடீஸ்வரர் ஒருவர் தனது மொத்த சொத்தில் 99 சதவீத தொகையை தானமாக கொடுத்துள்ளார் என்றால் அது வாரன் பப்பெட் அவர்களை தான் சாரும். 90 வயதாகும் வாரன் பப்பெட்டின் தற்போதைய சொத்து மதிப்பு 89.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 6.35 லட்சம் கோடி) !

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பள்ளிக்காலத்தில் துவங்கிய இவரது முதலீட்டு திறன் இன்று வரை பல முதலீட்டாளர்களுக்கு கற்றலை தந்து கொண்டிருக்கிறது. ஒரு முறை வாரன் பப்பெட், ‘ நான் என் வாழ்வில் 11 வருடங்களை வீணடித்து விட்டேன். எனது 11வது வயதில் தான் நான் பங்குச்சந்தைக்கு சென்று பங்குகளை வாங்க நேரிட்டது ‘ என வேடிக்கையாக சொன்னார். மதிப்புமிக்க முதலீட்டின் தந்தை(Father of Value Investing – The Intelligent Investor) என அழைக்கப்படும் திரு. பெஞ்சமின் கிரகாம் அவர்கள் தான் வாரனின் ஆசிரியர்.

‘ பங்கு முதலீட்டை ஒரு தொழிலாக பாருங்கள். சந்தையின் ஏற்ற-இறக்கத்தை கண்டு கொள்ளாமல், அதனை உங்களது வாய்ப்பாக மாற்றுங்கள். தொழிலின் தன்மையை அறிந்து பங்குகளை அதன் உண்மையான விலையில் வாங்குங்கள். இது தான் எனது ஆசிரியர் கற்று கொடுத்தது ‘ என வாரன் கூறியுள்ளார். கடந்த 55 வருடங்களில் அமெரிக்காவின் பங்குச்சந்தையில் எஸ் & பி 500 குறியீடு 10 சதவீத வருமானத்தை (ஆண்டு கூட்டு வட்டி) தந்துள்ளது. அதே வேளையில், வாரன் பப்பெட்டின் பெர்க்சயர் ஹாத்வே நிறுவனம் 20.30 சதவீத வருவாயை அளித்துள்ளது.

மொத்த லாப அடிப்படையில் கடந்த 55 வருடங்களில் எஸ் & பி500 குறியீடு 19,784 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது. ஆனால், பெர்க்சயர் நிறுவனமோ 27,44,062 சதவீத வருவாயை ஈட்டியுள்ளது. 1839ம் ஆண்டு துவங்கப்பட்ட வேலி பால்ஸ்(Valley Falls) நிறுவனம் தான் பின்னாளில் பெர்க்சயர் ஹாத்வே(Berkshire Hathaway) நிறுவனமாக மாறியது. வாரன் பப்பெட்டும் அந்த நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரானார். பெர்க்சயர் ஹாத்வே ஒரு அமெரிக்க பன்னாட்டு குழும நிறுவனமாகும். இந்நிறுவனம் உலகின் மிக முக்கியமான நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது.

இந்த நிறுவனத்தில் வாரன் பப்பெட் அவர்களுக்கு 30 சதவீத வாக்களிக்கும் உரிமை உள்ளது கவனிக்கத்தக்கது. இவரது தொழில் கூட்டாளியான சார்லி முங்கரும்(Charlie Munger) முதலீட்டு திறனில் சகலகலா வித்தைகளை அறிந்தவர். திரு. சார்லி முங்கர் அவர்களின் வயது தற்போது 96. பெர்க்சயர் நிறுவனத்தின் 2018-19ம் ஆண்டின் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையில் வாரன் குறிப்பிட்டதாவது, ‘ நானும், முங்கரும் வெகு காலத்திற்கு முன்பே வயது சார்ந்த அவசர நிலைக்கு வந்து விட்டோம். இது எங்களுக்கு ஒரு நல்ல செய்தியாக இருக்காது. அதே வேளையில், பெர்க்சயர் பங்குதாரர்கள் அதனை பற்றி கவலைப்பட தேவையில்லை. நாங்கள் புறப்படுவதற்கு உங்கள் நிறுவனம் நூறு சதவீதம் தயாராக உள்ளது.’ என்றார்.

அடுத்த தலைமை யார் என்பதை பற்றி குறிப்பிடப்படவில்லை. வாரனின் பெர்க்சயர் நிறுவனர் தனது முதலீட்டாளர்களுக்கு சில காலத்தில் நல்ல வருவாயை கொடுக்காமல் இருந்தாலும், நீண்ட காலத்தில் அந்த நிறுவனம் பல முதலீட்டாளர்களை கோடீஸ்வரர்களாக மாற்றியுள்ளது. இந்த நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்திற்கு(Annual General Meeting) செல்ல இந்தியாவிலிருந்து பலர் கனவாக கொண்டு சென்று வருகின்றனர்.

கடந்தாண்டு நடைபெற்ற கூட்டத்தில் வாரன் மற்றும் சார்லி இருவரும், முதலீட்டாளர்களின் கேள்விகளுக்கு சுமார் ஆறு மணிநேரம் பதிலளித்துள்ளனர். பங்குகளை வாங்கியிருக்கும் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்திற்கு சென்று வருவது அவசியமாகும் – ஏன் ?

“ நீங்கள் தூங்கும் போதும் பணம் சம்பாதிப்பதற்கான ஒரு வழியை கண்டுபிடிக்கவில்லை எனில், நீங்கள் இறக்கும் வரை வேலை செய்தாக வேண்டும் ‘ – வாரன் பப்பெட்

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

Advertisement

விமான முன்பதிவு சேவையில் கால்பதிக்கும் அமேசான் நிறுவனம்

விமான முன்பதிவு சேவையில் கால்பதிக்கும் அமேசான் நிறுவனம்

Amazon starts Flight ticket Services in India

 

சமீப வருடங்களாக நுகர்வோர் சந்தையில் நம் நாடு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. புதுவிதமான தொழில்களும், பொருட்களும் இங்கு வந்த வண்ணம் உள்ள நிலையில், பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் தோல்வியை தழுவினாலும் அவற்றின் பொருட்கள், பிராண்டுகளாக(Branding) மக்களிடையே சென்றடைந்து உள்ளன.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இணைய வர்த்தகத்தில் கொடிகட்டி பறக்கும் அமேசான் நிறுவனம் தற்போது நம் நாட்டில் விமான டிக்கெட் சேவையை அளிக்கும் முனைப்பில் களம் இறங்கியுள்ளது. விமான முன்பதிவு சேவையிலிருக்கும் கிளீயர் ட்ரிப்(Cleartrip) தளத்துடன் இணைந்து அமேசான் நிறுவனம் இந்த புதிய சேவையை அளிக்க உள்ளது.

 

அமேசான் செயலி(Amazon app) மூலம் ஒருவர் தனது விமான பயணத்திற்கான முன்பதிவு டிக்கெட்டை பெறலாம். அமேசான் தளத்தில் பயணிகள் விமான டிக்கெட்டை ரத்து செய்யும் போது, கூடுதல் கட்டணம் எதுவும் இல்லை எனவும் அமேசான் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அமேசான் தளத்தில் ஏற்கனவே ஆன்லைன் ஷாப்பிங், பண பரிமாற்றம்(Amazon Pay), பல சேவைகளுக்கு கட்டணம் செலுத்துதல் போன்றவற்றை அளித்து வரும் நிலையில், விமான முன்பதிவு சேவை சாதகமான அம்சத்தை வாடிக்கையாளர்களிடம் ஏற்படுத்தும்.

 

சமீபத்தில் உலக பெரும் பணக்காரர் மற்றும் முதலீட்டாளர் திரு. வாரன் பப்பெட்டின் பெர்க்சையர் ஹாத்தவே நிறுவனம்(Berkshire Hathaway), அமேசான் நிறுவனத்தில் 4.83 லட்சம் பங்குகளை வாங்கியது. இதன் மதிப்பு சுமார் 900 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

இளமையில் முதலீட்டின் அவசியம் – வாரன் பப்பெட்

இளமையில் முதலீட்டின் அவசியம் – வாரன் பப்பெட்

The Neccessity of Investing at Young – Warren Buffet

 

வாரன் பப்பெட்(Warren Buffet) 1930 ம் ஆண்டு அமெரிக்காவின் ஒமாஹா நகரத்தில் பிறந்தவர். இவர் ஒரு முதலீட்டாளர் மற்றும் அமெரிக்க தொழிலதிபராக வலம் வருபவர். தொழிலின் மீதும், முதலீட்டின் மீதும் கொண்ட காதலால் தனது 11ம் வயதில் முதலீட்டை(Investing) தொடங்கினார். முதன்முதலில் ஒரு எண்ணெய் நிறுவனத்தில் முதலீடு செய்த இவர், ஒரு பங்கு 38 டாலர் வீதம் 6 பங்குகளை நியூயார்க் பங்குச்சந்தையில் வாங்கினார். அப்போதும் பகிர்ந்தளிப்பு முறையில், தனக்கு மூன்று பங்குகளையும், தனது சகோதரிக்கு 3 பங்குகள் என்றும் பிரித்து கொண்டார்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தனது 14ம் வயதில் செய்தித்தாள்களை விநியோகம் செய்ததன் மூலம் 200 அமெரிக்க டாலர்களை வருமானமாக பெற்றார் வாரன் பப்பெட். வருமான வரி செலுத்துவோர் பட்டியலில், உலகின் மூன்றாவது மிகப்பெரிய பணக்காரராக இடம் பெற்றார், அப்போது அவருக்கு வயது 14 மட்டுமே. உயர்நிலை கல்வியை முடித்த வாரன் தனது சிறு வயது சேமிப்பின் மூலமான பணத்தை கொண்டு ஒமாஹா (Omaha) நகரத்தில் 40 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கினார். நிலத்தின் மதிப்பு அப்போது அதிக பண மதிப்பை கொண்டிருக்காவிட்டாலும், 15 வயது சிறுவன் வாங்குவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

 

தொழிலின் மீது கொண்ட ஈர்ப்பால், தன்னுடைய கல்லூரி படிப்பை தான் விரும்பிய ஹார்வர்டு வணிக பள்ளியில் (Harvard) பயில முயன்றார். ஆனால் அங்கே அவருக்கான கதவு திறக்கப்படவில்லை, அவரது வரவேற்பை நிராகரித்தது ஹார்வர்டு. பின்னர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பயின்ற வாரன் பப்பெட், அங்கு தான் தனது குருவான பெஞ்சமின் கிரகாம் (Benjamin Graham) அவர்களை கண்டார். பின்னாளில் பெஞ்சமின் கிரகாம், ‘ முதலீட்டின் தந்தை (Father of Value Investing)‘ என்று வரலாற்றில் இடம் பிடித்தார்.

 

ஒரு சிறப்பான குருவிடம் கற்ற கல்வி வாரன் பப்பெட் அவர்களை மேலும் செதுக்கியது. தனது 31ம் வயதில் தான் விற்பனையாளராக பணிபுரிந்த நிறுவனத்தில் சிறுகச்சிறுக முதலீட்டை மேற்கொண்டார். பின்னர் அதனையே தனது சொந்த நிறுவனமாக்கி கொண்டார். அது தான் பெர்க்சயர் ஹாத்தவே (Berkshire Hathaway) என்ற நிறுவனம். முதலீட்டின் மூலம் வலம் வந்த வாரன் பல தொழில்களை துவங்கினார். 43ம் வயதில் வாரனின் சொத்து மதிப்பு 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டியது. தனது 52ம் வயதில் போர்ப்ஸ்(Forbes) பத்திரிகையில் உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்ற பப்பெட் அதே காலத்தில் தனது சொத்து மதிப்பை மூன்று மடங்கு உயர்த்தினார். அப்போது அவரது சொத்து மதிப்பு 1000 மில்லியன் அமெரிக்க டாலர்களை நெருங்கி இருந்தது.

 

பெர்க்சயர் நிறுவனத்தில் வாரன் தனக்கான சம்பளமாக பெற்ற தொகையை சுமார் 15 வருட காலம் உயர்த்தி கொள்ளவில்லை. எந்த ஊதிய உயர்வோ, போனஸ் தொகையோ பெற்று கொள்ளாத வாரன் பப்பெட்டின் மாத சம்பளம், அங்கு பணிபுரியும் கடைநிலை ஊழியரின் சம்பளத்தை விட குறைவானதாகும். பெரும்பாலும் தனது சேமிப்பு மற்றும் முதலீட்டினை கொண்டே வாரன் தனது குடும்பத்திற்கான தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார். Duracell, Brooks, Clayton Homes ஆகிய பிராண்டுகள் வாரனின் நிறுவனங்களே.

 

உலகின் மூன்றாவது மிகப்பெரிய பணக்காரராக மற்றும் முதலீட்டாளராக இருக்கும் வாரனின் சொத்து மதிப்பு கடந்த வருட முடிவில் 80 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ($80 USD Billion), இந்திய மதிப்பில் 5.63 லட்சம் கோடி ரூபாயாகும். பணத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் தராத வாரன் ஒரு புத்தக வாசிப்பாளர் ஆவார். தினமும் 5 மணிநேரம் புத்தகங்களை வாசிப்பதற்காக நேரம் ஒதுக்கும் இவர், தனது சொத்தில் 90 சதவீதத்திற்கும் மேலான பணத்தை நன்கொடையாக கொடுத்துள்ளார். பண விஷயத்தில் மிகவும் கறாராக இருக்கும் வாரனிடம் ஆப்பிள் ஸ்மார்ட் போன் (Apple Smartphone) இல்லை என்பது சிறப்பம்சம். அவர் ஆப்பிள் நிறுவனத்தில் முதலீடு செய்ய மட்டுமே உள்ளதாக ஒரு முறை கூறியுள்ளார்.

 

நாம் விரும்பும் துறையில் சாதிக்க இளமையிலே கற்க முயலும் போது, நமக்கான வெற்றி எளிமையாக அமையும். அதே போன்று, நமது குடும்பத்திற்கான நிதி தேவைகளை நாம் இளமை காலத்திலே முடிவெடுக்க ஆரம்பித்தால், பின்னாளில் பண தேவைக்கான சிக்கல் இருக்காது. கடனும் வாங்காமல் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழலாம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

பே.டி.எம் நிறுவனத்தில் முதலீடு செய்கிறார் வாரன் பப்பெட்

பே.டி.எம் நிறுவனத்தில் முதலீடு செய்கிறார் வாரன் பப்பெட்

Warren Buffet’s Berkshire Hathaway investing in Paytm

 

உலகின் பெரும் பணக்காரர் வாரன் பப்பெட் (Warren Buffet) முதலீடு செய்வதிலும், நிறுவனங்களை கையகப்படுத்துவதிலும் வல்லவர்.  தனது 11வது வயதிலிருந்து முதலீட்டை மேற்கொள்ளும் வாரன் பங்குச்சந்தையின் மூலம் நீண்ட காலத்தில் கோடிகளில் கோடிகளை சம்பாதித்தவர்.

 

வாரன் பப்பெட் முதலீட்டு கொள்கைகள் பொதுவாக நீண்ட கால அடிப்படையிலும், சந்தையில் மதிப்பு குறைந்த பங்குகளும் தான். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதில் அவர் பெரும்பாலும் ஆர்வம் காட்டுவதில்லை. அதே நேரத்தில் ஆப்பிள் நிறுவனத்தினை வாங்குவதில் வாரன் முனைப்பு காட்டியதையும் மறுக்க முடியாது.

 

ஆப்பிள் (Apple) நிறுவனத்தில் வாரனின் பெர்க்சயர் ஹாத்தவே (Berkshire Hathaway) நிறுவனம் 5 % பங்குகளை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது அவரின் நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக முதலீட்டை மேற்கொள்ள உள்ளது. பெர்க்சயர் ஹாத்தவே நிறுவனத்தின் அதிகார பூர்வ தகவலின் படி, அந்த நிறுவனம் பே.டி.எம். (Paytm) நிறுவனத்தில் சுமார் 4 சதவீத பங்குகளை வாங்க திட்டமிட்டுள்ளது.

 

Paytm தளத்தின் நிறுவனம் ஒன்97 (One97 Communications Ltd) ஆகும். இந்த நிறுவனத்தில் தான் வாரென் நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் முதன்முறையாக வாரன் பப்பெட் முதலீடு செய்ய உள்ளார், அதுவும் தகவல் தொழில்நுட்பத்தில் உள்ள நிறுவனத்தில் என்பது பெரும்பாலான முதலீட்டாளர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

 

இந்த முதலீட்டின் மதிப்பு சுமார் 2500 கோடி ரூபாய் என சொல்லப்பட்டுள்ளது. ஏற்கனவே Paytm நிறுவனத்தில் சீனாவின் அலிபாபா நிறுவனமும் முதலீடு செய்துள்ளது. அலிபாபா நிறுவனம் 25 சதவீத பங்குகளை Paytm நிறுவனத்தில் கொண்டுள்ளது. கடந்த நிதி ஆண்டில் Paytm நிறுவனம் 1200 கோடி ரூபாய் நஷ்டத்தை காட்டியுள்ளது. இருப்பினும் இந்த நிறுவனம் 84,000 கோடி ரூபாய் மதிப்புடையதாக கணிக்கப்பட்டுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

என்னிடம் ஆப்பிள் போன் இல்லை; ஆனால் நான் ஆப்பிள் நிறுவனத்தை வாங்க தயாராக உள்ளேன் – வாரன் பப்பெட்

என்னிடம் ஆப்பிள் போன் இல்லை; ஆனால் நான் ஆப்பிள் நிறுவனத்தை வாங்க தயாராக உள்ளேன் – வாரன் பப்பெட்

A Man who still using a Flip Mobile Phone, but wants to own APPLE Company

 

உலகின் மிகப்பெரும் பணக்காரராகவும், Berkshire Hathaway நிறுவனத்தின் தலைவராகவும் அங்கம் வகிப்பவர் வாரன் பப்பெட் (Warren Buffet) ஆவார். 87 வயதாகும் வாரன் பப்பெட் உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் தற்போது நான்காம் இடத்தில் உள்ளார். பணக்காரர்கள் பட்டியலில் அதிக வயதுடையவரும் இவரே, தற்சமயம் இவரது சொத்து மதிப்பு 8440 கோடி டாலராகும்.

 

முதலிடத்தில் உள்ள அமேசான் நிறுவனர் ஜெப் பேஜோஸின் சொத்து மதிப்பு 13,200 கோடி டாலராகும். சமீபத்தில் வாரன் பப்பெட் ஒரு பேட்டியில் கூறியதாவது, “ நாங்கள் இதுவரை ஆப்பிள் நிறுவனத்தில் 5 சதவீத பங்குகளை வைத்துள்ளோம். இது ஒரு நீண்ட கால அடிப்படையில் செய்யப்பட்ட முதலீடு. ஆப்பிள் நிறுவனத்தின் நிர்வாகம் நன்றாக உள்ளது. மேலும் முதலீடு செய்ய காத்திருக்கிறோம்; முடிந்தால் 100 சதவீத பங்குகளை வாங்க விரும்புகிறோம்.

 

ஒரு நண்பர் எனக்கு ஐபோன் 10 (iPhone 10)  ஐ பரிசாக அளித்தார். மேலும் அதனை பயன்படுத்தும் முறை பற்றியும் எனக்கு விளக்கியிருந்தார். ஒரு சிறு குழந்தைக்கு விளக்குவது போல அவர் ஐபோனை பற்றி என்னிடம் வர்ணித்தார்.

 

நான் இதுவரை அந்த மாதிரியான கைபேசியை பயன்படுத்தியது இல்லை. மேம்பட்டு வரும் தொழில்நுட்பத்தை நான் அவ்வளவாக புரிந்து கொள்ளவில்லை. இருப்பினும் தொழில்நுட்பத்தில் முன்னிலையில் இருக்கும் ஒரு நிறுவனத்தை வாங்குவதில் ஆவலாக உள்ளோம் “ என்றார்.

 
( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நடப்பு வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் வாரன் பப்பெட் நிறுவனம், ஆப்பிள் நிறுவனத்தின் 7.5 கோடி பங்குகளை வாங்கியுள்ளது. இதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் பங்குதாரர்களில் Berkshire Hathaway இரண்டாம் இடம் பிடித்தது.

 

பப்பெட் பெரும் பணக்காரராக இருந்தும், இன்னும் மடக்கு கைபேசியை(Flip Mobile phone) தான் பயன்படுத்தி கொண்டிருக்கிறார். தனது 11 வது வயதிலிருந்து பப்பெட் முதலீடுகளை மேற்கொண்டு வருகிறார். முதலில் நிறுவனத்தின் பங்குகளை கொஞ்சம் வாங்குவதும், பிற்காலத்தில் அந்த நிறுவனத்தையே கையகப்படுத்துவதும் இவரது முதலீட்டு மந்திரங்கள்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com