வெனிசுலா நாட்டின் பணவீக்கம் 4,88,865 சதவீதம் – நம்புவீர்களா ?

வெனிசுலா நாட்டின் பணவீக்கம் 4,88,865 சதவீதம் – நம்புவீர்களா ?

Venezuela’s Current inflation is 4.88 Million percent – Do you believe ?

 

நமது நாட்டின் தற்போதைய பணவீக்கம் 3.69 சதவீதம் என்ற அளவில் உள்ளது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் பணவீக்கம் இன்னும் உயரும் என்ற ஐயப்பாட்டில் அதற்கான நடவடிக்கைகளை பாரத ரிசர்வ் வங்கி  கடந்த சில காலங்களாக எடுத்து வருகிறது.

 

இங்கே தான் பணவீக்கம் (Inflation) இப்படி என்றால், வெனிசுலா நாட்டின் பணவீக்கம் எல்லோரையும் அதிர்ச்சியடைய வைக்கிறது. அந்த நாட்டின் தற்போதைய பணவீக்கம் 4,88,865  சதவீதமாக உள்ளது. 2014 ம் வருடத்தில் கச்சா எண்ணெய் விலையின் வீழ்ச்சியால் இந்த நாட்டின் பொருளாதாரமும் சீர்குலைந்தது. அதிலிருந்து இன்னும் மீள முடியாமல், நாட்டில் விலைவாசி ஒவ்வொரு நாளும் வெகுவேகமாக உயர்ந்து வருகிறது.

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்வதேச நாணய நிதியம் கணித்த தகவலின் படி, வெனிசுலா நாட்டின் பணவீக்கம் 2019 ம் வருட முடிவில் 10 லட்சம் சதவீதமாக இருக்கும் என அதிர்ச்சியூட்டும் விஷயத்தை கூறியுள்ளது. பண விநியோகம் மற்றும் நாணய கட்டுப்பாடுகளின் விரிவாக்கம் போன்றவற்றால் தான் இந்த அளவு பணவீக்கம் உயர்ந்துள்ளது என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

 

வெனிசுலா நாட்டின் தற்போதைய பொருளாதாரத்தை போன்றே, 1923 ம் ஆண்டில் ஜெர்மனி நாட்டிலும், 2000 ம் ஆண்டின் பிற்பகுதியில் ஜிம்பாப்வே நாட்டிலும் ஏற்பட்டது. இருப்பினும், வெனிசுலா நாட்டிற்கான பொருளாதார தரவுகள் சரியாக வெளிப்படவில்லை என ஏற்கனவே சர்வதேச நாணய நிதியம் எச்சரித்து இருந்தது. 1973 ம் ஆண்டு வாக்கில் இந்த நாட்டின் பணவீக்கம் 3.22 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

வெனிசுலா நாட்டின் நுகர்வோர் விலை குறியீட்டில் (consumer price index -CPI) உணவு மற்றும் குளிர்பானங்களின் (Non-alcholic beverages) கூட்டு அளவு மட்டும் 32 சதவீதமாக உள்ளது. போக்குவரத்து 10 சதவீதமும், உணவகம் மற்றும் விடுதி கணக்கு 9 சதவீதமும், வீடு வாடகை 10 சதவீதமாக உள்ளன. கல்வி 2.7 சதவீதத்தையும், சுகாதாரம் மற்றும் மருத்துவம் 4.3 சதவீதத்தையும் கொண்டுள்ளன. தொலைத்தொடர்பு 3.8 சதவீதமாக மொத்த குறியீட்டில் இருக்கிறது.

 

ஒவ்வொரு நாளும் பணவீக்கம் 4 % என்ற அளவில் உயர்ந்து வரும் வெனிசுலா நாட்டில், ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான பொலிவர் பியூர்ட் (வெனிசுலா நாணயம் – Bolivar Fuerte) 61,74,900 ஆக உள்ளது. பணவீக்கத்தை கட்டுக்குள் வைக்க அந்த நாட்டின் ஜனாதிபதி நிக்கோலஸ் மடுரோ, கடந்த 2017 ம் ஆண்டில் 1,00,000 பொலிவர் மதிப்பிலான நாணயத்தை (1 Lakh bolivar note) அறிமுகப்படுத்தினார். இதன் காரணமாகவும் அதன் மதிப்பு சரிந்தது. கடந்த ஜூன் மாத முடிவில் 1 லட்சம் மதிப்பிலான பொலிவர் நோட்டு, ஒரு டாலருக்கு சமமாக இருந்தது. தற்போது அதன் மதிப்பு  0.016 (1 Cent) டாலராக உள்ளது கவனிக்கத்தக்கது. இதே போல ஜிம்பாப்வே நாட்டிலும் பணமதிப்பிழக்க நடவடிக்கையாக 100 டிரில்லியன் டாலர் (100 லட்சம் கோடி) மதிப்பிலான நோட்டு வெளியிடப்பட்டது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

நடப்பு வருடத்தில் நாட்டின் வளர்ச்சி 7.3 சதவீதத்திலே இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

நடப்பு வருடத்தில் நாட்டின் வளர்ச்சி 7.3 சதவீதத்திலே இருக்கும் – சர்வதேச  நாணய நிதியம்

Growth Rate will be at 7.3 percent for India – International Monetary Fund

 

நடப்பாண்டில் நாட்டின் வளர்ச்சி விகிதம் 7.3 % என்ற அளவிலே இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) கணித்துள்ளது. முதலீடு மற்றும் தனியார் நுகர்வு ஆகியவை நாட்டின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகித்து வருகிறது. ஜி.எஸ்.டி. (GST) நடைமுறையும் துரிதமான வளர்ச்சிக்கு உதவுவதாக நாணய நிதியம் கூறியுள்ளது.

 

கடந்த வருடத்தில் நாட்டின் வளர்ச்சி (GDP) 6.7 சதவீதத்தை எட்டியது. உலக அளவில் பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ந்து நாடுகளில்  சீனாவை இந்தியா பின்னுக்கு தள்ளி வருகிறது. 2019 ம் ஆண்டு முடிவில் இந்தியா, சீனாவை காட்டிலும் 1.2 சதவீத வளர்ச்சியை கொண்டிருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

இது சார்ந்து, மற்றொரு நிகழ்வில் பேசிய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், ‘ 2030 ம் ஆண்டில் பொருளாதாரத்தில் உலகின் முதல் மூன்று இடங்களில் நமது நாடும் ஒன்றாக இருக்கும். தற்போது இந்தியா 6 வது இடத்தில் இருக்கிறது. ‘ என்றார்.

 

சீனாவில் 2017 ம் ஆண்டுக்கான வளர்ச்சி விகிதம் 6.9 சதவீதம் என்ற அளவில் இருந்தது. இது 2018 ம் வருடத்தில் 6.6 சதவீதமாகவும், அதனை தொடர்ந்து 2019 ல் 6.2 சதவீதமாக குறைத்து மதிப்பீடப்பட்டுள்ளது. இதற்கான காரணமாக வெளிநாட்டு தேவைகள் மற்றும் அதனை சார்ந்த வளர்ச்சி குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

 

நமது நாட்டின் நடுத்தர கால வளர்ச்சி சற்று சவால் அளிக்கக்கூடியதாகவும், உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் உள்நாட்டில் தற்காலிகமாக பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

 

அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 2018 ம் ஆண்டில் 2.9 சதவீதமாகவும், இது 2019 ல் 2.5 சதவீதமாக குறைத்து கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கு சரக்கு மற்றும் சேவை வரி விகிதங்கள், பாரத ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகள், புதிய திவால் சட்டம் (IBC) போன்றவை உதவக்கூடும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

மீண்டும் ஒரு குழப்பத்தில் ஆதார் எண் இணைப்பு

மீண்டும் ஒரு குழப்பத்தில் ஆதார் எண் இணைப்பு

The Chaos on Aadhaar linking has been resumed

கடந்த செப்டம்பர்  26, 2018 அன்று உச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒன்று, ஆதார் எண் சம்மந்தமான தீர்ப்பை வெளியிட்டது. எல்லாவற்றிற்கும் ஆதார் எண் இணைப்பை கட்டாயப்படுத்தக்கூடாது எனவும், அரசு சார்பில் அளிக்கப்படும் சேவைகளுக்கு வேண்டுமானால் ஆதார் இணைப்பை கட்டாயப்படுத்தலாம் எனவும் தீர்ப்பை வழங்கியது.

 

அந்த தீர்ப்பின் படி, அரசு சார்பில் அளிக்கப்படும் நலத்திட்டங்கள் மற்றும் மானியங்கள் பெறுவதற்கு ஆதார் எண் இணைப்பை கட்டாயப்படுத்தலாம். அது போக, பான் எண் (Permanent Account Number -PAN) பெறுவதற்கும், வருமான வரி தாக்கல் செய்வதற்கும் (Income Tax Return -ITR) கட்டாயமாகும்.

 

அதே நேரத்தில், மொபைல் எண்ணுடன் (Mobile Number), வங்கி கணக்கு ஆரம்பிப்பதற்கு, புதிய வாகனங்கள் பதிவு செய்வதற்கு ஆதார் எண் இணைப்பு கட்டாயமில்லை என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. குழுந்தைகளுக்கான சலுகைகளை பெறுவதற்கு ஆதார் இணைப்பை கட்டாயப்படுத்தக்கூடாது என்றும், பள்ளி சேர்க்கை மற்றும் கல்வி பொது தேர்வுகளுக்கு ஆதார் எண் அவசியமில்லை எனவும் கூறியுள்ளது.

 

மேலும் தனியார் நிறுவனங்கள் தங்கள் சேவைகளை வாடிக்கையாளருக்கு அளிப்பதற்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க கூடாது. இதன் மூலம் இனி வங்கிகள், இன்சூரன்ஸ் மற்றும் மியூச்சுவல் பண்ட ஆகிய சேவைகளை பெறுவதற்கு ஆதார் எண் அவசியமில்லை.

 

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை (06-10-2018) அன்று நிதி அமைச்சர் திரு. அருண் ஜெட்லீ தெரிவித்த கருத்தொன்று மீண்டும் ஆதார் சம்மந்தமான குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசுகையில், ‘ உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. அதே வேளையில், மொபைல் எண் மற்றும் வங்கி கணக்குகளுக்கு ஆதார் எண் இணைப்பை ஏற்படுத்தினால் அதன் மூலம் பெறும் தகவல்கள் பயனுள்ளதாக அமையும். உச்ச நீதிமன்றம் ஆதார் சட்டம் – பிரிவு 57 ன் (Aadhaar act – Section 57)  கீழ் உள்ள அறிவுறுத்தல்களை தான் நீக்கியுள்ளது ‘ என்றார்.

 

ஆதார் சட்டம் – பிரிவு 57 ல் தனியார் நிறுவனங்களுடன் தரவுகளை பகிர்ந்து கொள்ள சட்டம் அனுமதிக்கிறது. இந்த பிரிவை தான் உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளதாக கூறும் நிதி அமைச்சர் தொலைதொடர்பு நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் ஆதார் எண் இணைப்பை பயன்படுத்துவது பலனளிக்கும் என்பது மீண்டும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது சம்மந்தமான அடுத்த நடவடிக்கைகளை பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – பாரத ரிசர்வ் வங்கி

வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – பாரத ரிசர்வ் வங்கி

No change on Repo rate – Reserve Bank of India

 

நேற்று நடைபெற்ற (05-10-2018) நிதி கொள்கை குழு கூட்டத்தில் (Monetary Policy Committee), ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவும் இல்லை எனவும், முன்னர் இருந்த 6.5 சதவீத வட்டி தொடரும் எனவும் பாரத ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது ரியல் எஸ்டேட் சார்ந்த நிறுவனங்களுக்கு நன்மையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

உலக பொருளாதாரத்தில் காணப்படும் மந்தமான நிலை, கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு, அமெரிக்க – மற்ற நாடுகளுக்கிடையேயான வர்த்தக போர், நாட்டில் உள்ள வங்கிகளின் நிதி நிலை ஆகியவை சந்தையை வெகுவாக பாதித்துள்ளன. இந்த வாரத்தில் (திங்கள் – வெள்ளி) மட்டும் இந்திய பங்குச்சந்தை 5 சதவீதத்திற்கும் மேலாக சரிந்துள்ளது. இந்த சரிவு கடந்த இரண்டு வருடங்களில் முதன்முறையாக நிகழ்வதாகும்.

 

கடந்த இரு கூட்டத்திலும் ரெப்போ வட்டி விகிதத்தை (Repo Rate) உயர்த்திய ரிசர்வ் வங்கி இந்த முறை மாற்றம் எதுவுமில்லை என அறிவித்தது, பங்குச்சந்தையில் பாதகமான சூழ்நிலையில் அமைந்தது. ஏற்கனவே டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிந்திருப்பதால் அதனை சரிகட்ட வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என பொருளாதார வல்லுநர்கள் கணித்திருந்தனர்.

 

நடப்பு நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் எனவும், இரண்டாம் அரையாண்டில் (அக்டோபர்-மார்ச்) சில்லரை பணவீக்கம் 3.8 சதவீத்திலிருந்து 4.5 சதவீதத்திற்குள் இருக்கலாம் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என குழுவில் உள்ள 6 பேரில் 5 பேர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ரெப்போ விகிதம் 6.5 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ 6.25 % ஆகவும், பண இருப்பு விகிதம் (CRR) 4 சதவீதத்திலும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கி வட்டி விகிதத்திலும் மாற்றம் இல்லாமல் அதே  6.75 சதவீதத்தில் இருக்கும்.

 

வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களில் (NBFC) சொத்துக்கள் மற்றும் கடன்கள் பொருத்தமற்றவையாக உள்ளதாக பாரத ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ஐ.எல்.எப்.எஸ். (IL & FS) நிறுவனத்தின்  கடன் பிரச்னையால், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களின் வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

நடுத்தர பட்ஜெட் திட்டமிடல் – பகுதி 3

நடுத்தர பட்ஜெட் திட்டமிடல் – பகுதி 3

Budget Planning for Middle Class Family – Part 3

 

பட்ஜெட் திட்டமிடலின் மூன்றாவது பகுதிக்கு வரவேற்கிறோம்…

 

கடந்த பகுதிகளின் மூலம் நடுத்தர பட்ஜெட் குடும்பத்திற்கு தேவையான சில யோசனைகள் மற்றும் திட்டங்கள் உங்கள் எண்ணத்தில் வந்திருக்கலாம். அதனை நீங்கள் உடனே செயல்படுத்துவதற்கான ஆயுத்தங்களை செய்தால் போதும். அப்போது தான் பட்ஜெட் திட்டமிடலின் முக்கியத்துவத்தை நாம் அறிய முடியும். சரி வாருங்கள், இந்த பகுதிக்கான திட்டமிடலை பார்ப்போம்.

 

திரு. பாண்டி மத்திய அரசுத்துறையில் வேலை பார்த்து வரும் 28 வயது இளைஞர். சாத்தூரை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் தனது வேலை நிமித்தமாக மதுரை மாநகரில் வசித்து வருகிறார். இன்ஜினியரிங் படிப்பை முடித்தவர் தனது இலக்கான அரசு பணியினை கைப்பற்றிய பாண்டி, தனக்கான மணப்பெண்ணையும் தேடி வருகிறார் 🙂

 

பட்ஜெட் திட்டமிடல்:

 

சம்பளத்தில் பிடித்தம் போக தனது கையில் (வங்கியில்) மாதம் ரூ. 35,000 ஐ வருமானமாக பெறுகிறார். அதாவது ஆண்டுக்கு ரூ. 4.20 லட்சத்தை சம்பளமாக பெறுகிறார். தற்போதைய அடிப்படை செலவாக (Fixed Expenses)  அவர் மாதம் ரூ. 12,000 மும், இன்சூரன்ஸ் செலவாக மாதம் 2000 ரூபாயும் ஒதுக்குகிறார். முதலீட்டு செலவாக (Investing Expenses) மாதம் ரூ. 17,000 ஐ கொண்டுள்ளார். மீதம் அவரிடம் 4000 ரூபாய் உள்ளது, இதனை தனது எதிர்பாராத செலவுகளுக்கு பயன்படுத்தி வருகிறார்.

 

Budget Financial Planning 3

 

அடிப்படை செலவு என்பது பொதுவாக அத்தியாவசிய செலவுகளாக கருதப்படும். இருப்பிடம், உணவு, உடை, போக்குவரத்து, மின்சாரம், இணைய கட்டணம், காப்பீடு போன்றவை அடிப்படை செலவுகளாகும். முதலீட்டு செலவு எனும் போது, நமது எதிர்கால தேவைக்காக நாம் இன்று சேமிக்கும், முதலீடு மேற்கொள்ளும் தொகையாகும். முதலீட்டை நாம் ஒரு செலவாக தான் பார்க்க வேண்டும். ஏனெனில், நாம் பின்னாளில் கிடைக்கும் முதிர்வு தொகையை செலவழிக்க தான் போகிறோம்.

 

உடன்பிறந்தோர் தனது பெற்றோரை பார்த்து கொண்டிருந்தாலும், பாண்டி தனது பெற்றோருக்காக ஒரு கார்பஸ் (Corpus) தொகையை பெற முதலீட்டை மேற்கொண்டு வருகிறார். அவரது முதலீட்டு செலவில் இதுவும் (மாதம் ரூ. 5000/-) அடங்கும். இன்னும் 5 வருடத்தில் முதிர்வு பெறும் நிலையில் கிடைக்கும் ரூ. 8,70,000 /- தொகையை தனது பெற்றோருக்கு கொடுக்க உள்ளார்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

மேலே உள்ள அட்டவணையின் மூலம் நாம் பாண்டி அவர்களின் வரவு மற்றும் செலவை அறியலாம். சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட (NPS) தொகையை அவர் தனது ஓய்வு காலத்திற்கு பயன்படுத்தி கொள்வார். தனி நபராக இருக்கும் போது அவருக்கு செலவுகள் ஏதும் பெரிதாக இல்லையென்றாலும், தனது எதிர்காலத்தை (திருமணம் மற்றும் அதனை அடுத்த பொறுப்புகள்) கவனத்தில் கொண்டு சேமிப்பு மற்றும் முதலீட்டை முன்னரே செய்துள்ளார். பணிபுரியும் மணப்பெண்ணை அவர் எதிர்பார்ப்பதால், வரக்கூடிய எதிர்கால செலவுகளை இருவரும் பகிர்ந்து கொள்ளலாம்.

 

நினைவில் கொள்க:

 

  • பாண்டி தனது நிதி இலக்குகளாக (Financial Goals) 5 வருடத்திற்கு பிறகு புதிய வீட்டு மனை ஒன்றை வாங்க விரும்புவதாகவும், 3 வருடத்தின் முடிவில் ஒரு காரை வாங்க வேண்டுமென முடிவு செய்துள்ளார்.

 

  • இவரின் திருமண செலவு மற்றும் பிற நிதி இலக்குகளுக்கு தேவைப்படும் தொகையை, தான் ஏற்கனவே மேற்கொண்ட முதலீட்டில் பயன்படுத்தி கொள்ளலாம். மீதத்தொகைக்கு வங்கியில் கடன் பெறலாம். நான்கு சக்கர வாகனம் தற்போது அவசியமா என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும் அல்லது அதற்கான காலத்தை தள்ளி போடலாம்.
  • தனது நிதி இலக்குகளுக்கு தேவையான தொகையை முன்னரே கணக்கிட்டு அதற்கான முதலீட்டை நாம் மேற்கொள்ளும் போது, எந்த நிதி சிக்கலும் இல்லை.

 

  • பொதுவான எண்டோவ்மென்ட் பாலிசியை எடுத்திருக்கும் இவர் டேர்ம் இன்சூரன்ஸ் எடுத்து கொள்வது நலம். ஏற்கனவே தான் எடுத்திருக்கும் மெடிக்ளைம் (Mediclaim) பாலிசியில் திருமணத்திற்கு பிறகு, தனது மனைவியை சேர்த்து கொள்ளலாம். இது போக பாலிசிக்கான கவரேஜ் தொகையையும் அதிகரித்து கொள்வது நிதி செலவை பாதுகாக்கும்.

 

  • நிறுவனம் அல்லது அரசாங்கத்தால் பிடிக்கப்படும் NPS ஐ மட்டும் சாராமல், பிற முதலீட்டு சாதனங்களையும் நாம் பரிசீலனை செய்ய வேண்டும். நிறுவனம் உங்கள் சம்பளத்தில் தான் குறிப்பிட்ட சதவிகிதத்தை பிடித்தம் செய்ய முடியும். ஓய்வு காலத்திற்கு தேவையான சரியான தொகையை நாம் மட்டுமே கணக்கிட முடியும்.

 

பட்ஜெட் திட்டமிடல் சம்மந்தமான உங்கள் கேள்விகள் மற்றும் கருத்துக்களை இங்கே பகிரலாம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் கீழ் ஐ.எல்.எப்.எஸ். ஸை கையகப்படுத்தும் அரசு

தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் கீழ் ஐ.எல்.எப்.எஸ். ஸை கையகப்படுத்தும் அரசு

Government will take over IL & FS under National Company Law Tribunal

 

கடன் சிக்கலில் தவிக்கும் ஐ.எல்.எப்.எஸ். நிறுவனத்தை (Infrastructure Leasing and Financial Services – IL & FS) தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் கீழ் கையகப்படுத்தும் நிகழ்வை மத்திய அரசு முனைந்துள்ளது. ஐ.எல்.எப்.எஸ். நிறுவனத்திற்கு கடனாக 91,000 கோடி ரூபாய் உள்ளது.

 

நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் (AGM) எடுக்கப்பட்ட முடிவுகளின் படி, நிறுவன துணை தலைவர் திரு. ஹரி சங்கரன் கூறுகையில், ‘ நிறுவனம் முதல் கட்டமாக 65,000 கோடி ரூபாயை திரும்ப செலுத்தும். இதற்கான ஒரு பகுதியாக 4500 கோடி ரூபாய் மதிப்பிலான உரிமை பங்குகள் வெளியிடப்படும் ‘ என்றார்.

 

இதனிடையே மத்திய அரசு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் (National Company Law Tribunal -NCLT) கீழ் இந்த நிறுவனத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர உள்ளது. ஆரம்ப நடவடிக்கையாக நிறுவனத்தின் இயக்குனர் குழுவை இடை நீக்கம் செய்து விட்டு,  அரசே ஆறு புதிய இயக்குனர்களை நியமித்தது. கோடக் மஹிந்திரா வங்கியின் நிறுவனர் திரு. உதய் கோடக் (Uday Kotak) நியமிக்கப்பட்ட இயக்குனர்களில் ஒருவரும் ஆவார்.

 

இயக்குனர் குழுவிற்கு மட்டுமில்லாமல் நிறுவனத்தின் தற்போதைய பொறுப்பாளராகவும் உதய் கோடக் மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2009 ல் சத்யம் நிறுவனத்தை அரசு கையகப்படுத்தி பின்பு மஹிந்திரா குழுமத்தால் (Tech Mahindra) நிறுவனம் வாங்கப்பட்டது போல, ஐ.எல்.எப்.எஸ். ல் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

புதிய இயக்குனர்களின் கூட்டம் வரும் 8ம் தேதிக்கு முன்பு நடக்கலாம் எனவும், அதற்கடுத்த நடவடிக்கை இந்த மாதத்தின்  இறுதியில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நிறுவனத்தை விற்கும் எண்ணத்தை பற்றி ஐ.எல்.எப்.எஸ். குழுமம் சார்பில் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. அதன் துணை  நிறுவனங்கள் விற்கப்படலாம் என தெரிகிறது.

 

மத்திய அரசின் இந்த கையகப்படுத்தும் திட்டம், கம்பெனிகள் சட்டம் பிரிவு 241 மற்றும் 242 (Company Act) ன் கீழ் அனுமதிக்கப்படுகிறது. ஐ.எல்.எப்.எஸ். நிறுவனத்தில் எல்.ஐ.சி. (LIC) முதன்மை பங்குதாரராக உள்ளது. எல்.ஐ.சி. இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பங்கு 25.34 சதவீதமாக உள்ளது.

 

கடந்த 2014-18 ஆண்டுகளுக்கிடையே மட்டும் ஐ.எல்.எப்.எஸ். குழுமத்தின்(IL & FS Group)  கடன் 40,000 கோடி ரூபாயை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மற்றொரு நடவடிக்கையாக சந்தையில் பணப்புழக்கத்தை (Liquidity) அதிகரிப்பதற்காக பாரத ரிசர்வ் வங்கி (RBI) நடப்பு மாதத்தில் அரசாங்க பத்திரங்களை வாங்க முடிவு செய்துள்ளது.

 

ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் ரூ. 36,000 கோடி மதிப்பிலான அரசு பத்திரங்களை திறந்த சந்தை நடவடிக்கையின் (Open Market Operations) கீழ், இந்த மாதத்தில் வாங்க முனைந்துள்ளது. இதற்கான ஏலம் மாதத்தின் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது வாரத்தில் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டின் 10 ஆண்டுக்கான பத்திர வருவாய் ( 10 year Bond yield) 8 சதவீதத்திற்கும் கீழ் வீழ்ச்சியடைந்தது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

பெட்ரோல் நிலையங்களின் விசித்திரமான சோதனை

பெட்ரோல் நிலையங்களின் விசித்திரமான சோதனை

Indian Petrol Bunks’ Weird fact

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவடைந்து வருவதும், கச்சா எண்ணெய்யின் விலை அதிகரிப்பும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை வெகுவாக பாதித்துள்ளது. தற்போது (01-10-2018) டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ. 72.82 என்ற அளவிலும், கச்சா எண்ணெய்(Crude Oil) WTI ரகம் 73.47 டாலராகவும் மற்றும் Brent ரகம் 83.22 டாலர் என்ற அளவிலும் வர்த்தகமாகி வருகிறது.

 

தமிழகத்தில் இன்று பெட்ரோல் விலை(Petrol price) ரூ. 87.13 (லிட்டருக்கு) ஆகவும், டீசல் (Diesel) விலை லிட்டருக்கு ரூ. 79.40 ஆகவும் உள்ளது. அதே நேரத்தில் புதுச்சேரியில் டீசல் விலை 77.68 ரூபாயாகவும், பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 82.49 என்ற விலையிலும் விற்பனையில் உள்ளது. மும்பையின் பெட்ரோல் விலை லிட்டருக்கு 91.08 ரூபாயாக உள்ளது.

 

இந்நிலையில் எரிபொருள் நிரப்பும் மையங்களில் (Petrol Bunk / Pump) இருக்கும் விநியோகிக்கும் அளவுகளில் ஒரு விசித்திரமான சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது நமது நாட்டில் இதுவரை பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை 100 ரூபாயை தொட்டதில்லை. ஆனால் வரும் நாட்களில் இந்த அளவை கடந்து விடும் வாய்ப்பும் அதிகமாகும்.

 

இதற்கு முன்னர் வரை, பெட்ரோல் பங்குகளில் விநியோகிக்கும் அளவுகள் 0.00 முதல் 99.99 என்ற இரட்டை இலக்க முறைகளை மட்டுமே கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. தற்போது இதனை மூன்று இலக்குகளுக்காக (ரூ. 100 ) மாற்றியமைக்க  வேண்டியுள்ளது. நாட்டின் பெரும்பாலான எரிபொருள் நிலையங்களில் இதுவரை மூன்று இலக்க அளவுகள் மாற்றி அமைக்கவில்லை என்றாலும், நவீன தொழில்நுட்ப காலத்தில் இது ஒரு பெரும் சிக்கலாக இருக்க போவதில்லை என சந்தையாளர்கள் கூறுகின்றனர்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

எண்ணெய் நிறுவனங்களும் தங்களின் டீலர்களுக்கு இது சம்மந்தமான சிக்கலை எடுத்துரைத்தும், அதற்கான மென்பொருளை மேம்படுத்துவது (Software Upgrade) சம்மந்தமாகவும் விவாதித்து வருகிறது. தசம புள்ளிகளில் (Decimal Point) சில மாற்றங்களை மட்டும் செய்தால் சரியாகி விடும் எனவும் சில சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

 

எப்படி இருப்பினும், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் 100 ரூபாயை நோக்கி நடைபோட்டு கொண்டிருக்கிறது. இதற்கு முன் டாலருக்கு எதிரான ரூபாய் ரூ. 100 ஐ தொட்டு விடுமா என்ற ஐயமும் ஏற்பட்டு உள்ளது. வளரும் நாடான நமக்கு உலக பொருளாதார அளவில் போட்டியும், அதனை சார்ந்த விலை மாற்றமும் வந்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

ஐ.எல்.எப்.எஸ். (IL & FS) நிறுவனத்தை மீட்குமா எல்.ஐ.சி (LIC) ?

ஐ.எல்.எப்.எஸ். (IL & FS) நிறுவனத்தை மீட்குமா எல்.ஐ.சி (LIC) ?

Will LIC save IL & FS Group on Debt Crisis ?

 

கடந்த வாரம் பங்குச்சந்தையை உலுக்கிய ஐ.எல்.எப்.எஸ். குழுமத்தின்(Infrastructure Leasing and Financial Services)  விவகாரம் இந்த வாரத்திலும் சந்தையில் தொடர்கிறது. பங்குச்சந்தை கரடியை நோக்கி போகிறதா என்ற அனுமானத்தின் போக்கில் சந்தை சரிந்து கொண்டு வருகிறது. கடந்த ஒரு வாரகாலத்தில் மட்டும் தேசிய பங்குச்சந்தை. நிப்டி மற்றும் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 2 சதவீத அளவு சரிவை கொண்டுள்ளது.

 

செப்டம்பர் மாதத்தை கணக்கில் கொண்டால் சந்தை 6.90 சதவீத இறக்கத்தில் உள்ளது. ரூபாய் மதிப்பு சரிவு, பெட்ரோல் – டீசல் உயர்வு, அமெரிக்க – சீன வர்த்தக போர் என உலகளாவிய தன்மைகள் பங்குச்சந்தையை பாதித்தாலும், கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட ஐ.எல்.எப்.எஸ். குழுமத்தின் கடன் பிரச்சனை தான் சந்தையின் நகர்வை முடிவு செய்கிறது.

 

இந்த பிரச்சனையில் பாரத ரிசர்வ் வங்கி தாமதமாக களம் இறங்கினாலும், ஒரு துரிதமான ஒழுங்கு நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கிறது. கடந்த மாதம் சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் (SIDBI) தான் வாங்கிய கடனை (Inter-corporate deposits ) ஐ.எல்.எப்.எஸ். (IL & FS) குழுமம் திரும்ப செலுத்தாத நிலையில் தான் பிரச்னை ஆரம்பமானது. ஐ.எல்.எப்.எஸ். வங்கிக்கு செலுத்த வேண்டிய தொகை 500 கோடி ரூபாயாகும். இதன் காரணமாக ICRA  ரேட்டிங் நிறுவனம் ஐ.எல்.எப்.எஸ். (IL & FS) நிறுவனத்தின் டெபாசிட்களுக்கான தரத்தினை குறைத்தது.

 

இதனுடைய வெளிப்பாடு கடந்த வாரம் திவான் ஹவுசிங் வங்கியின் (DHFL) பங்கில் சரிவை ஏற்படுத்தியது. கடன் பிரச்னையை (Debt Loan) தீர்க்கும் வகையில் பாரத ரிசர்வ் வங்கி (Reserve Bank of India -RBI) ஐ.எல்.எப்.எஸ். நிறுவனத்தின் முதலீட்டாளர்களுடன் (பெரிய) இன்று (28-09-18) சந்திப்பை ஏற்படுத்தியது. இந்த நிறுவனத்தின் பெரிய முதலீட்டாளராக LIC நிறுவனம் (25.34 % பங்கு) உள்ளது. அதற்கடுத்தாற் போல் ஜப்பானின் ஓரிக்ஸ் (Orix) நிறுவனம் 23.54 சதவீத பங்கை கொண்டுள்ளது. அபுதாபி முதலீட்டு நிறுவனம் 12.56 % பங்குகளையும், HDFC –  9 சதவீதத்தையும் மற்றும் ஸ்டேட் வங்கி (State Bank of India -SBI) 6.42 சதவீதத்தையும் வைத்துள்ளது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பேச்சுவார்த்தையில் எல்.ஐ.சி. நிறுவனமும் (Life Insurance Corporation of India) ஐ.எல்.எப்.எஸ். நிறுவனத்தை கடனிலிருந்து மீட்கும் வகையில் முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தனது மூலதன உட்செலுத்துதலுக்காக (Capital Infusion) ஐ.எல்.எப்.எஸ் நிறுவனம் 4500 கோடி ரூபாய் மதிப்பிலான உரிமை பங்குகளை வெளியிடவும் தயாராகி கொண்டிருக்கிறது.

 

ஐ.எல்.எப்.எஸ் குழுமத்தை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும், மேலும் கடனை அடைக்க தேவைப்படும் நிதி திரட்டல் சம்மந்தமாக ஆலோசிக்கப்படும் என எல்.ஐ.சி. (LIC) நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஐ.டி.பி.ஐ. (IDBI) வங்கி கடன் பிரச்சனையில் எல்.ஐ.சி. தலையிட்டது கவனிக்கத்தக்கது. ஐ.எல்.எப்.எஸ் குழுமத்தின் மொத்த கடன் ரூ. 91,000 கோடியாகும். இந்த குழுமத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் நாளை (29-09-18) நடைபெற உள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

ஏசி, வாஷிங் மெஷின் மற்றும் காலணிகள் மீதான இறக்குமதி வரி உயர்வு

ஏசி, வாஷிங் மெஷின் மற்றும் காலணிகள் மீதான இறக்குமதி வரி உயர்வு

Import Duty hike on AC, Refrigerator and Footwear – 19 Items

ஏசி, வாஷிங் மெஷின், காலணிகள், வைரம் போன்ற 19 வகையான பொருட்களுக்கு இறக்குமதி வரியை உயர்த்தியுள்ளது மத்திய அரசு. நடப்பு கணக்கு பற்றாக்குறை இடைவெளியை குறைப்பதற்கான நடவடிக்கை என அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.

 

19 பொருட்களின் மீதான இறக்குமதி வரி உயர்வு இன்று (27-09-18) முதல் அமலாகிறது. ஏசி மீதான அடிப்படை சுங்க வரி (Basic Customs Duty) 10 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 10 கிலோவுக்கு குறைவான வாஷிங் மெஷின்களுக்கு 10 % லிருந்து 20 சதவீதமாக இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது.

 

ராடிக்கல் டியர்களுக்கு (Radical Tyres) 10 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகவும், பிளாஸ்டிக்கிலான சமையலறை மற்றும் டேபிள் பொருட்களுக்கு 10 % லிருந்து 20 சதவீதமாகவும் சுங்க வரி உயர்த்தப்பட்டுள்ளது. காலணிகளுக்கான வரி 20 சதவீதத்திலிருந்து 25 % ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சூட்கேஸ், ப்ரீப் கேஸ், மற்றும் பயண பைகளுக்கு (Suitcase, Brief Case, Trunks, Travel Bag) 15 சதவீத வரி  விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இது போன்ற பொருட்களுக்கு 10 % சுங்க வரி இருந்தது. விமானங்களில் பயன்படுத்தப்படும் விசை எரிபொருளுக்கு (Turbine Fuel) 5 சதவீத வரி விதித்துள்ளது. இதற்கு முன் வரி ஏதும் விதிக்கப்படவில்லை. இதன் மூலம் இனி ஒரு கிலோ லிட்டருக்கு ரூ. 2000 கூடுதல் தொகை செலவிடப்படும்.

 

குளியலறையில் உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு 10 % இலிருந்து 15 % ஆக வரியும், தொழில் சாராத வைரங்களுக்கு 5 லிருந்து 7.5 சதவீதமாகவும் வரி உயர்த்தப்பட்டுள்ளது. அணிகலன்களில் 15 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகவும் உள்ளது.

 

ஏசி மற்றும் குளிர்சாதன பெட்டிகளில் பயன்படுத்தப்படும் கம்ப்ரஸர்களுக்கும் 7.5 லிருந்து 10 % ஆகவும், ஸ்பீக்கர்களுக்கு 10 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக வரி விதிக்கிப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் (2017-18) மேலேயுள்ள 19 பொருட்களின் மொத்த இறக்குமதி மதிப்பு மட்டும் ரூ. 86,000 கோடியாகும். ரூபாய் மதிப்பு சரிவடைவதை தடுக்கவும் இந்த உயர்வு உதவும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

நாட்டின் நிதி பற்றாக்குறை 95 சதவீதமாக உயர்வு

நாட்டின் நிதி பற்றாக்குறை 95 சதவீதமாக உயர்வு

Country’s Fiscal Deficit at 95 percent of Financial Year 2019 Mark

 

நாட்டின் நிதி பற்றாக்குறை (Fiscal Deficit of India) கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகரித்து 94.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த மாத இறுதியில் அரசாங்கத்தின் வரவு-செலவுக்கான இடைவெளி 5.90 லட்சம் கோடியாக உள்ளது.

 

இது சம்மந்தமாக பொது கணக்கு கட்டுப்பாடு (CGA – Controller General of Accounts) வெளியிட்டுள்ள தகவலில் நடப்பு நிதியாண்டுக்கான மதிப்பீட்டில் 95 சதவீதம் இடைவெளியை கொண்டுள்ளது. 2018-19 நிதியாண்டுக்கான  மதிப்பீட்டு அளவு 6.24 லட்சம் கோடி ரூபாயாகும். இவற்றில் கடந்த ஆகஸ்ட் மாத முடிவில் 5.90 லட்சம் கோடி வந்தடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

கடந்த வருடம் இதே ஆகஸ்ட் மாதத்தில் நிதி பற்றாக்குறை (2017-18) 96 சதவீதமாக இருந்துள்ளது. நடப்பு நிதி வருடத்தில் இதுவரையிலான மொத்த செலவுகள் ரூ. 10.70 லட்சம் கோடியாகவும், வருமானம் ரூ. 4.64 லட்சம் கோடியாகவும் உள்ளது.

 

வரி வருவாயாக ஆகஸ்ட் மாதம் வரை ரூ. 3.66 லட்சம் கோடி மற்றும் நிகர வரி வருவாய் ரூ. 98,330 கோடியாக உள்ளது. கடந்த பட்ஜெட்டில் வரி வருவாய் 22 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது.

 

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மொத்த வரி வருவாயின் அளவு 12 சதவீதமாக இருக்கும் எனவும், நடப்பு நிதி ஆண்டுக்கான மூலதன செலவில் ரூ. 3 லட்சம் கோடியாக அதிகரிக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

Financial Blog in Tamil