தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் கீழ் ஐ.எல்.எப்.எஸ். ஸை கையகப்படுத்தும் அரசு
Government will take over IL & FS under National Company Law Tribunal
கடன் சிக்கலில் தவிக்கும் ஐ.எல்.எப்.எஸ். நிறுவனத்தை (Infrastructure Leasing and Financial Services – IL & FS) தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் கீழ் கையகப்படுத்தும் நிகழ்வை மத்திய அரசு முனைந்துள்ளது. ஐ.எல்.எப்.எஸ். நிறுவனத்திற்கு கடனாக 91,000 கோடி ரூபாய் உள்ளது.
நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் (AGM) எடுக்கப்பட்ட முடிவுகளின் படி, நிறுவன துணை தலைவர் திரு. ஹரி சங்கரன் கூறுகையில், ‘ நிறுவனம் முதல் கட்டமாக 65,000 கோடி ரூபாயை திரும்ப செலுத்தும். இதற்கான ஒரு பகுதியாக 4500 கோடி ரூபாய் மதிப்பிலான உரிமை பங்குகள் வெளியிடப்படும் ‘ என்றார்.
இதனிடையே மத்திய அரசு தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் (National Company Law Tribunal -NCLT) கீழ் இந்த நிறுவனத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர உள்ளது. ஆரம்ப நடவடிக்கையாக நிறுவனத்தின் இயக்குனர் குழுவை இடை நீக்கம் செய்து விட்டு, அரசே ஆறு புதிய இயக்குனர்களை நியமித்தது. கோடக் மஹிந்திரா வங்கியின் நிறுவனர் திரு. உதய் கோடக் (Uday Kotak) நியமிக்கப்பட்ட இயக்குனர்களில் ஒருவரும் ஆவார்.
இயக்குனர் குழுவிற்கு மட்டுமில்லாமல் நிறுவனத்தின் தற்போதைய பொறுப்பாளராகவும் உதய் கோடக் மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2009 ல் சத்யம் நிறுவனத்தை அரசு கையகப்படுத்தி பின்பு மஹிந்திரா குழுமத்தால் (Tech Mahindra) நிறுவனம் வாங்கப்பட்டது போல, ஐ.எல்.எப்.எஸ். ல் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
( Read this post after the advertisement… )
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
புதிய இயக்குனர்களின் கூட்டம் வரும் 8ம் தேதிக்கு முன்பு நடக்கலாம் எனவும், அதற்கடுத்த நடவடிக்கை இந்த மாதத்தின் இறுதியில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நிறுவனத்தை விற்கும் எண்ணத்தை பற்றி ஐ.எல்.எப்.எஸ். குழுமம் சார்பில் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. அதன் துணை நிறுவனங்கள் விற்கப்படலாம் என தெரிகிறது.
மத்திய அரசின் இந்த கையகப்படுத்தும் திட்டம், கம்பெனிகள் சட்டம் பிரிவு 241 மற்றும் 242 (Company Act) ன் கீழ் அனுமதிக்கப்படுகிறது. ஐ.எல்.எப்.எஸ். நிறுவனத்தில் எல்.ஐ.சி. (LIC) முதன்மை பங்குதாரராக உள்ளது. எல்.ஐ.சி. இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பங்கு 25.34 சதவீதமாக உள்ளது.
கடந்த 2014-18 ஆண்டுகளுக்கிடையே மட்டும் ஐ.எல்.எப்.எஸ். குழுமத்தின்(IL & FS Group) கடன் 40,000 கோடி ரூபாயை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மற்றொரு நடவடிக்கையாக சந்தையில் பணப்புழக்கத்தை (Liquidity) அதிகரிப்பதற்காக பாரத ரிசர்வ் வங்கி (RBI) நடப்பு மாதத்தில் அரசாங்க பத்திரங்களை வாங்க முடிவு செய்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் ரூ. 36,000 கோடி மதிப்பிலான அரசு பத்திரங்களை திறந்த சந்தை நடவடிக்கையின் (Open Market Operations) கீழ், இந்த மாதத்தில் வாங்க முனைந்துள்ளது. இதற்கான ஏலம் மாதத்தின் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது வாரத்தில் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டின் 10 ஆண்டுக்கான பத்திர வருவாய் ( 10 year Bond yield) 8 சதவீதத்திற்கும் கீழ் வீழ்ச்சியடைந்தது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை