ஐ.எல்.எப்.எஸ். (IL & FS) நிறுவனத்தை மீட்குமா எல்.ஐ.சி (LIC) ?
Will LIC save IL & FS Group on Debt Crisis ?
கடந்த வாரம் பங்குச்சந்தையை உலுக்கிய ஐ.எல்.எப்.எஸ். குழுமத்தின்(Infrastructure Leasing and Financial Services) விவகாரம் இந்த வாரத்திலும் சந்தையில் தொடர்கிறது. பங்குச்சந்தை கரடியை நோக்கி போகிறதா என்ற அனுமானத்தின் போக்கில் சந்தை சரிந்து கொண்டு வருகிறது. கடந்த ஒரு வாரகாலத்தில் மட்டும் தேசிய பங்குச்சந்தை. நிப்டி மற்றும் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 2 சதவீத அளவு சரிவை கொண்டுள்ளது.
செப்டம்பர் மாதத்தை கணக்கில் கொண்டால் சந்தை 6.90 சதவீத இறக்கத்தில் உள்ளது. ரூபாய் மதிப்பு சரிவு, பெட்ரோல் – டீசல் உயர்வு, அமெரிக்க – சீன வர்த்தக போர் என உலகளாவிய தன்மைகள் பங்குச்சந்தையை பாதித்தாலும், கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட ஐ.எல்.எப்.எஸ். குழுமத்தின் கடன் பிரச்சனை தான் சந்தையின் நகர்வை முடிவு செய்கிறது.
இந்த பிரச்சனையில் பாரத ரிசர்வ் வங்கி தாமதமாக களம் இறங்கினாலும், ஒரு துரிதமான ஒழுங்கு நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கிறது. கடந்த மாதம் சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் (SIDBI) தான் வாங்கிய கடனை (Inter-corporate deposits ) ஐ.எல்.எப்.எஸ். (IL & FS) குழுமம் திரும்ப செலுத்தாத நிலையில் தான் பிரச்னை ஆரம்பமானது. ஐ.எல்.எப்.எஸ். வங்கிக்கு செலுத்த வேண்டிய தொகை 500 கோடி ரூபாயாகும். இதன் காரணமாக ICRA ரேட்டிங் நிறுவனம் ஐ.எல்.எப்.எஸ். (IL & FS) நிறுவனத்தின் டெபாசிட்களுக்கான தரத்தினை குறைத்தது.
இதனுடைய வெளிப்பாடு கடந்த வாரம் திவான் ஹவுசிங் வங்கியின் (DHFL) பங்கில் சரிவை ஏற்படுத்தியது. கடன் பிரச்னையை (Debt Loan) தீர்க்கும் வகையில் பாரத ரிசர்வ் வங்கி (Reserve Bank of India -RBI) ஐ.எல்.எப்.எஸ். நிறுவனத்தின் முதலீட்டாளர்களுடன் (பெரிய) இன்று (28-09-18) சந்திப்பை ஏற்படுத்தியது. இந்த நிறுவனத்தின் பெரிய முதலீட்டாளராக LIC நிறுவனம் (25.34 % பங்கு) உள்ளது. அதற்கடுத்தாற் போல் ஜப்பானின் ஓரிக்ஸ் (Orix) நிறுவனம் 23.54 சதவீத பங்கை கொண்டுள்ளது. அபுதாபி முதலீட்டு நிறுவனம் 12.56 % பங்குகளையும், HDFC – 9 சதவீதத்தையும் மற்றும் ஸ்டேட் வங்கி (State Bank of India -SBI) 6.42 சதவீதத்தையும் வைத்துள்ளது.
( Read this post after the advertisement… )
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பேச்சுவார்த்தையில் எல்.ஐ.சி. நிறுவனமும் (Life Insurance Corporation of India) ஐ.எல்.எப்.எஸ். நிறுவனத்தை கடனிலிருந்து மீட்கும் வகையில் முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தனது மூலதன உட்செலுத்துதலுக்காக (Capital Infusion) ஐ.எல்.எப்.எஸ் நிறுவனம் 4500 கோடி ரூபாய் மதிப்பிலான உரிமை பங்குகளை வெளியிடவும் தயாராகி கொண்டிருக்கிறது.
ஐ.எல்.எப்.எஸ் குழுமத்தை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும், மேலும் கடனை அடைக்க தேவைப்படும் நிதி திரட்டல் சம்மந்தமாக ஆலோசிக்கப்படும் என எல்.ஐ.சி. (LIC) நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஐ.டி.பி.ஐ. (IDBI) வங்கி கடன் பிரச்சனையில் எல்.ஐ.சி. தலையிட்டது கவனிக்கத்தக்கது. ஐ.எல்.எப்.எஸ் குழுமத்தின் மொத்த கடன் ரூ. 91,000 கோடியாகும். இந்த குழுமத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் நாளை (29-09-18) நடைபெற உள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை