நடுத்தர பட்ஜெட் திட்டமிடல் – பகுதி 3
Budget Planning for Middle Class Family – Part 3
பட்ஜெட் திட்டமிடலின் மூன்றாவது பகுதிக்கு வரவேற்கிறோம்…
கடந்த பகுதிகளின் மூலம் நடுத்தர பட்ஜெட் குடும்பத்திற்கு தேவையான சில யோசனைகள் மற்றும் திட்டங்கள் உங்கள் எண்ணத்தில் வந்திருக்கலாம். அதனை நீங்கள் உடனே செயல்படுத்துவதற்கான ஆயுத்தங்களை செய்தால் போதும். அப்போது தான் பட்ஜெட் திட்டமிடலின் முக்கியத்துவத்தை நாம் அறிய முடியும். சரி வாருங்கள், இந்த பகுதிக்கான திட்டமிடலை பார்ப்போம்.
திரு. பாண்டி மத்திய அரசுத்துறையில் வேலை பார்த்து வரும் 28 வயது இளைஞர். சாத்தூரை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் தனது வேலை நிமித்தமாக மதுரை மாநகரில் வசித்து வருகிறார். இன்ஜினியரிங் படிப்பை முடித்தவர் தனது இலக்கான அரசு பணியினை கைப்பற்றிய பாண்டி, தனக்கான மணப்பெண்ணையும் தேடி வருகிறார் 🙂
பட்ஜெட் திட்டமிடல்:
சம்பளத்தில் பிடித்தம் போக தனது கையில் (வங்கியில்) மாதம் ரூ. 35,000 ஐ வருமானமாக பெறுகிறார். அதாவது ஆண்டுக்கு ரூ. 4.20 லட்சத்தை சம்பளமாக பெறுகிறார். தற்போதைய அடிப்படை செலவாக (Fixed Expenses) அவர் மாதம் ரூ. 12,000 மும், இன்சூரன்ஸ் செலவாக மாதம் 2000 ரூபாயும் ஒதுக்குகிறார். முதலீட்டு செலவாக (Investing Expenses) மாதம் ரூ. 17,000 ஐ கொண்டுள்ளார். மீதம் அவரிடம் 4000 ரூபாய் உள்ளது, இதனை தனது எதிர்பாராத செலவுகளுக்கு பயன்படுத்தி வருகிறார்.
அடிப்படை செலவு என்பது பொதுவாக அத்தியாவசிய செலவுகளாக கருதப்படும். இருப்பிடம், உணவு, உடை, போக்குவரத்து, மின்சாரம், இணைய கட்டணம், காப்பீடு போன்றவை அடிப்படை செலவுகளாகும். முதலீட்டு செலவு எனும் போது, நமது எதிர்கால தேவைக்காக நாம் இன்று சேமிக்கும், முதலீடு மேற்கொள்ளும் தொகையாகும். முதலீட்டை நாம் ஒரு செலவாக தான் பார்க்க வேண்டும். ஏனெனில், நாம் பின்னாளில் கிடைக்கும் முதிர்வு தொகையை செலவழிக்க தான் போகிறோம்.
உடன்பிறந்தோர் தனது பெற்றோரை பார்த்து கொண்டிருந்தாலும், பாண்டி தனது பெற்றோருக்காக ஒரு கார்பஸ் (Corpus) தொகையை பெற முதலீட்டை மேற்கொண்டு வருகிறார். அவரது முதலீட்டு செலவில் இதுவும் (மாதம் ரூ. 5000/-) அடங்கும். இன்னும் 5 வருடத்தில் முதிர்வு பெறும் நிலையில் கிடைக்கும் ரூ. 8,70,000 /- தொகையை தனது பெற்றோருக்கு கொடுக்க உள்ளார்.
( Read this post after the advertisement… )
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
மேலே உள்ள அட்டவணையின் மூலம் நாம் பாண்டி அவர்களின் வரவு மற்றும் செலவை அறியலாம். சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட (NPS) தொகையை அவர் தனது ஓய்வு காலத்திற்கு பயன்படுத்தி கொள்வார். தனி நபராக இருக்கும் போது அவருக்கு செலவுகள் ஏதும் பெரிதாக இல்லையென்றாலும், தனது எதிர்காலத்தை (திருமணம் மற்றும் அதனை அடுத்த பொறுப்புகள்) கவனத்தில் கொண்டு சேமிப்பு மற்றும் முதலீட்டை முன்னரே செய்துள்ளார். பணிபுரியும் மணப்பெண்ணை அவர் எதிர்பார்ப்பதால், வரக்கூடிய எதிர்கால செலவுகளை இருவரும் பகிர்ந்து கொள்ளலாம்.
நினைவில் கொள்க:
- பாண்டி தனது நிதி இலக்குகளாக (Financial Goals) 5 வருடத்திற்கு பிறகு புதிய வீட்டு மனை ஒன்றை வாங்க விரும்புவதாகவும், 3 வருடத்தின் முடிவில் ஒரு காரை வாங்க வேண்டுமென முடிவு செய்துள்ளார்.
- இவரின் திருமண செலவு மற்றும் பிற நிதி இலக்குகளுக்கு தேவைப்படும் தொகையை, தான் ஏற்கனவே மேற்கொண்ட முதலீட்டில் பயன்படுத்தி கொள்ளலாம். மீதத்தொகைக்கு வங்கியில் கடன் பெறலாம். நான்கு சக்கர வாகனம் தற்போது அவசியமா என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும் அல்லது அதற்கான காலத்தை தள்ளி போடலாம்.
- தனது நிதி இலக்குகளுக்கு தேவையான தொகையை முன்னரே கணக்கிட்டு அதற்கான முதலீட்டை நாம் மேற்கொள்ளும் போது, எந்த நிதி சிக்கலும் இல்லை.
- பொதுவான எண்டோவ்மென்ட் பாலிசியை எடுத்திருக்கும் இவர் டேர்ம் இன்சூரன்ஸ் எடுத்து கொள்வது நலம். ஏற்கனவே தான் எடுத்திருக்கும் மெடிக்ளைம் (Mediclaim) பாலிசியில் திருமணத்திற்கு பிறகு, தனது மனைவியை சேர்த்து கொள்ளலாம். இது போக பாலிசிக்கான கவரேஜ் தொகையையும் அதிகரித்து கொள்வது நிதி செலவை பாதுகாக்கும்.
- நிறுவனம் அல்லது அரசாங்கத்தால் பிடிக்கப்படும் NPS ஐ மட்டும் சாராமல், பிற முதலீட்டு சாதனங்களையும் நாம் பரிசீலனை செய்ய வேண்டும். நிறுவனம் உங்கள் சம்பளத்தில் தான் குறிப்பிட்ட சதவிகிதத்தை பிடித்தம் செய்ய முடியும். ஓய்வு காலத்திற்கு தேவையான சரியான தொகையை நாம் மட்டுமே கணக்கிட முடியும்.
பட்ஜெட் திட்டமிடல் சம்மந்தமான உங்கள் கேள்விகள் மற்றும் கருத்துக்களை இங்கே பகிரலாம்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை