Category Archives: Paisa News

Paisa News – News about Business and Finance

மொத்த விலை பணவீக்கம் 2.48 சதவீதம் – பிப்ரவரி 2018

மொத்த விலை பணவீக்கம் 2.48 சதவீதம் – பிப்ரவரி 2018

 

Wholesale Price Index (WPI) Inflation eases to 2.48 percent in February 2018

நாட்டின் பிப்ரவரி மாதத்திற்கான  மொத்த விலை பணவீக்கம்(Wholesale Price Index -WPI Inflation)  2.48 % ஆக குறைந்தது. இந்த சதவீதம் கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவாகவும் உள்ளது. 2017 ல் இதே மாதத்திற்கான மொத்த விலை பணவீக்கம் 5.51 % ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

உணவு பொருட்களின் விலை குறைவால் மொத்த விலை பணவீக்கம் 2.48 சதவீதமாக உள்ளது. காய்கறிகளின் பணவீக்கம் 15.26 % ஆக உள்ளது. இதுவே கடந்த ஜனவரி மாதத்தில் 40.77 % ஆக இருந்தது. முட்டை, மீன் மற்றும் மாமிசம் போன்றவற்றின் பணவீக்கம் 0.37 சதவீதத்திலிருந்து 0.22 % ஆக குறைந்துள்ளது.

 

எரிபொருள் மற்றும் மின்சாரத்தின் பணவீக்கம் 3.81 % ஆக அதிகரித்தும், பருப்பு வகைகளின் பணவீக்கம் 24.51 % ஆக குறைந்தும் இருந்தது. உற்பத்தி பொருட்களுக்கான பணவீக்கம் 3.04 சதவீதமாக உள்ளது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

 

ஏற்கனவே இந்த வாரம் வெளியிடப்பட்ட சில்லறை பணவீக்கம்(Retail Inflation) 4.44 % ஆக உள்ளது. இது கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவிற்கு குறைவாகும். பணவீக்க சரிவுக்கு காய்கறிகள் மற்றும் உணவு பொருட்களின் விலை குறைவே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் உலக வங்கி(World Bank), நாட்டின் 2019 நிதியாண்டுக்கான(FY19) மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை(GDP)  7.3 % ஆக இருக்கும் என மதிப்பிட்டுள்ளது. அதுவே 2019-20 ல் 7.5 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ளது. இந்த கணிப்பு பணமதிப்பிழப்பு(Demonetisation) மற்றும் ஜி.எஸ்.டி (GST) தாக்கத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

 

பணவீக்கம் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி சம்மந்தமான தகவல்களை மத்திய புள்ளியியல் அலுவலகம் (Central Statistical Office –CSO) அறிவித்து வருகிறது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த புள்ளி விவரங்களையும் இந்த அலுவலகம் வெளியிட்டு வருகிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

ஆதார் இணைப்புக்கு காலவரையற்ற காலக்கெடு – உச்ச நீதிமன்றம் நீட்டிப்பு

ஆதார் இணைப்புக்கு காலவரையற்ற காலக்கெடு – உச்ச நீதிமன்றம் நீட்டிப்பு

Aadhaar Linking with indefinite deadline – Supreme Court Extends

 

நாட்டில் உள்ள பல்வேறு சேவைகளுக்கு ஆதார் இணைப்பு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதற்கான காலக்கெடுவாக வரும் மார்ச் 31 ம் தேதியாக (March 31,2018)  நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று உச்ச நீதிமன்றம் ஆதார் இணைப்பு தொடர்பாக ஒரு தீர்ப்பை வெளியிட்டது. வங்கிக்கணக்குகள் மற்றும் கைபேசி எண்களுக்கான(Bank accounts and Mobile numbers) ஆதார் இணைப்பு காலவரையற்ற காலக்கெடுவாக (Indefinite Deadline) அறிவிக்கப்பட்டது.

 

இதற்கு முன், சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தில் உச்ச நீதிமன்றம் ஆதார் இணைப்புக்கான கடைசி தேதி மார்ச் 31 (March 31, 2018) என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. நேற்று இது சம்மந்தமான வழக்கை விசாரிக்கும் போது, வங்கிக்கணக்குகள் மற்றும் கைபேசி எண்களுக்கான ஆதார் இணைப்பில் மக்களுக்கு சிரமம் ஏற்படுவதாகவும், அதனால் அதன் இணைப்புக்கான கடைசி தேதியை காலவரையற்றதாகவும் அறிவித்தது.

 

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தொடருவதாகவும், இது சம்மந்தமான அடுத்த கட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தை சார்ந்து உள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும் ஆதார் இணைப்புக்காக அரசு, மக்களை கட்டாயப்படுத்த கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

 

அதே நேரத்தில் அரசு மூலம் பெறும் சலுகைகள் மற்றும் நலத்திட்டங்களுக்கு (LPG, MNREGA, PDS -Subsidy & Welfare)  ஆதார் எண் கட்டாயம் என்ற நடைமுறையில் எந்த மாற்றமுமில்லை எனவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

 

மேலும், பாஸ்போர்ட் மற்றும் பான் கார்டுகளுக்கும்(Passport and PAN) ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமென அரசு கட்டாயப்படுத்த கூடாது என தீர்ப்பில் அறிவித்துள்ளது. கடந்த வருடம் நவம்பர் மாதத்தில், மத்திய அரசு பான் கார்டுகளுக்கான ஆதார் எண் இணைப்பு காலக்கெடு – மார்ச் 31, 2018 என அறிவித்திருந்தது.

 

நேற்று அறிவித்த இந்த தீர்ப்பின் காரணமாக, மற்ற சேவைகளுக்கும் (PPF, Mutual Funds, PAN, Insurance, Wallet) ஆதார் இணைப்புக்கான கடைசி தேதி மாற்றியமைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

பரஸ்பர நிதியுடன் (Mutual Funds) ஆதார் எண்ணை இணைப்பது எப்படி ?

பரஸ்பர நிதியுடன் (Mutual Funds) ஆதார் எண்ணை இணைப்பது எப்படி ?

How to update Aadhaar online for Mutual Funds ? (Aadhaar Linking)

 

பயோமெட்ரிக் (Biometric) மற்றும் மக்கள் தொகை தரவை அடிப்படையாக கொண்டு 12 இலக்க தனியுரிமை அடையாள எண்ணாக(12 Digit) உருவாக்கப்பட்டுள்ள ஆதார் (Aadhaar) இன்று ஒவ்வொரு தகவல் நடைமுறைக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அனைத்து இந்திய குடியுரிமை உள்ளவர்களுக்கும் வழங்கப்படும் உரிமை எண்ணாகவும் உள்ளது. நீங்கள் வங்கி கணக்கு, பான் அட்டை, பங்குச்சந்தை, பரஸ்பர நிதி என ஒவ்வொரு செயல்முறைக்கும் கணக்கு துவங்கும் போது ஆதார் என்பது கட்டாயம்.

 

வங்கிக்கணக்கு, கைபேசி எண்களுக்கான ஆதார் இணைப்பை நாம் பெரும்பாலும் நேரிடையாகவே பதிவு செய்திருப்போம். ஆனால் பெரும்பாலும் நாம் தவற விடுவது மற்றும் மறப்பது நமது பரஸ்பர நிதிக்கான இணைப்பை தான். நாம் பரஸ்பர நிதியில்(Mutual Funds) பொதுவாக மாதாந்திர முதலீடு என்று சொல்லப்படும் SIP (Systematic Investment plan) திட்டத்தை தான் தேர்ந்தெடுத்திருப்போம். இதன் மூலம் நமது வங்கிக்கணக்கில் இருந்து பரஸ்பர நிதிக்கு தானியங்கி சேவையாக பண பரிமாற்றம் நடைபெறும். இதன் காரணமாக நாம் பெரும்பாலும் பரஸ்பர நிதி சார்ந்த குறுஞ்செய்தி, மின்னஞ்சலை பார்க்க தவறி விடுவோம்.

 

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

 

ஏற்கனவே பணமோசடி தடுப்பு சட்டம் (Prevention of Money Laundering Act -PMLA) Rules 2017 ன் படி பரஸ்பர நிதி கணக்குடன் ஆதாரை இணைப்பது அவசியம் என கூறப்பட்டுள்ளது. உங்களுக்கு அருகில் உள்ள பரஸ்பர நிதி நிறுவனத்தை (முதலீடு செய்த நிறுவனம்) அணுகலாம் அல்லது இணையத்தில் ஆதார் எண்ணை பதிவு செய்யலாம்(Communicate with Nearest branch or update online). இங்கே நாம் ஆன்லைனில் பதிவு செய்வது பற்றி பார்ப்போம்.

 

நினைவில் இருக்கட்டும், பரஸ்பர நிதியுடன் ஆதார் இணைப்புக்கான கடைசி தேதி –  வரும் மார்ச் மாதம் 31,2018 (31st march, 2018).

 

பொதுவாக பரஸ்பர நிதி சார்ந்த உங்களின் தகவல்கள் பரஸ்பர நிதி வசம் பராமரிக்கப்படாது. அதனை RTA (Registrar and Transfer Agent) போன்ற அமைப்புகள் தான் பராமரித்து தகவல்களை சேமித்து வைக்கும். இணையத்திலும் அது போன்ற அமைப்புகள் தான் உங்களுடைய ஆதார் தகவல்களை பெறுகிறது. RTA ஆக தற்போது CAMS, UTI, Karvy, Franklin பரஸ்பர நிதிக்கு உள்ளன. அவற்றின் இணைய தளத்தில் நாம் நமக்கான ஆதார் தகவலை பதிவு செய்யலாம்.

 

CAMS Online

 

கீழே  கொடுக்கப்பட்ட இணைய  தளத்தில் நீங்கள் உங்களுக்கான  பரஸ்பர நிதி கணக்குடன் ஆதாரை இணைக்கலாம். CAMS அமைப்பு பெரும்பாலான பரஸ்பர நிதி நிறுவனத்துக்கான தகவல்களை பராமரிக்கிறது. ( SBI Mutual Fund, ICICI Prudential, Birla Sunlife, HDFC, DSP blackrock, IDFC, IIFL, PPFAS, Tata mutual fund, Kotak, HSBC, L and T, Shriram, Mahindra)

 

CAMS – Aadhaar Linking

CAMS Aadhaar linking

 

 

CAMS இணைய தளத்தில் நீங்கள் செய்ய வேண்டியது – உங்கள் பான் எண் (PAN), பரஸ்பர நிதி கணக்கு (Folio Account number), மற்றும் ஆதார் எண்ணை (Aadhaar) உள்ளீடு செய்யவும். உங்களுக்கான சந்தேகங்களையும் நீங்கள் அதே பக்கத்தில் அறியலாம்.

 

FAQ on Aadhaar Linking process – CAMS

 

Karvy Computershare:

 

கார்வி நிறுவனமும் பரஸ்பர நிதிக்கான தகவல்களை பராமரிக்கிறது. கார்வி நிறுவனம் கையாளும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் – Axis mutual fund, UTI, Canara robeco, Mirae asset, Motilal oswal, Reliance, Quantum, BOI Axa, Invesco, DHFL மற்றும் இன்னும் பிற நிறுவனங்கள். அதற்கான பதிவை செய்ய கீழ்கண்ட இணைய தளத்தை பாருங்கள்.

 

Karvy – Link your Aadhaar with mutual fund

 

Karvy Aadhaar linking

 

மேலே நாம் சொன்ன இரு தளத்திலும் உங்கள் பரஸ்பர நிதிக்கான ஆதாரை பதிவு செய்வதுடன், உங்கள் நடப்பு நிலையையும் (Aadhaar linking status for mutual fund) அதே தளத்தில் அறிந்து கொள்ளும் வசதி உண்டு. நாம் சொன்ன இரு தளத்தில் பதிவு செய்ய இயலாதவர்கள் அல்லது உங்கள் பரஸ்பர நிதிக்கான நிறுவன பெயர் இல்லையென்றால் நீங்கள் அந்த நிறுவனத்திற்கான அதிகாரபூர்வ வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். பதிவின் போது உங்களுக்கான OTP கைபேசியில் வரலாம். அதனால், பரஸ்பர நிதியில் இணைக்கப்பட்ட கைபேசி எண்ணை வைத்திருப்பது அவசியம்.

 

ஆதார் இணைப்பு – பரஸ்பர நிதி சம்மந்தமான உங்கள் சந்தேகங்களுக்கு, வர்த்தக மதுரைக்கு நீங்கள் மின்னஞ்சல் (contact at varthagamadurai.com) அனுப்பலாம்.

 

வாழ்க  வளமுடன்,

 

நன்றி,  வர்த்தக மதுரை.

 

www.varthagamadurai.com

 

  

 

இ – வாலட் பயன்பாடு – கே. ஒய். சி. கட்டாயம்

இ – வாலட் பயன்பாடு  – கே. ஒய். சி. கட்டாயம்

KYC Mandatory for Digital Wallet accounts

பண மதிப்பிழப்புக்கு (Demonetisation) பிறகு, இ – வாலட் (E-Wallet) என்ற  மின்னணு சாதனம் சார்ந்த பணப்பை கணக்குகள் இந்தியாவில் அதிகமானது. அதனை தொடர்ந்து வாலட் மூலம் பண பரிவர்த்தனைகள்  எளிமையாக்கப்பட்டது. ஒருவர் தனது ஸ்மார்ட் போனை கொண்டு இணைய உதவியுடன் எந்தவொரு பொருட்களையும் வாங்குவது எளிதானது.

 

இ – வாலட் முறையால் கணினி வழியான பரிவர்த்தனைகளை விட ஸ்மார்ட் போன் மூலமான வர்த்தகம் அதிகமானது. டிஜிட்டல் வாலட் கணக்குகளுக்கு என  இதுவரை எந்த விதிமுறையும் இல்லாமல் இருந்து வந்தது. வாலட் கணக்கை தொடங்குவதற்கு உங்களுடைய கைபேசி எண் மட்டும் போதுமானதாக இருந்தது. இந்நிலையில் பரிவர்த்தனைகளின் விகிதம்  அதிகரித்ததனால், பாரத ரிசர்வ் வங்கி (Reserve Bank of India -RBI) ‘ இ – வாலட்’‘ களுக்கு KYC (Know your customer / client) என்னும் வாடிக்கையாளரை அறியும் ஒப்பந்தத்தை கட்டாயமாக்க முடிவு செய்தது. இதற்கான கால கெடு பிப்ரவரி 28 ம் தேதியுடன் முடிந்து விட்டதாகவும் அறிவித்துள்ளது.

 

Get up to Rs.1000 cashback! Link your bank account and do your first money transfer on #PhonePe.

 

பிப்ரவரி 28, 2018 க்கு பிறகு இ – வாலட் களை பயன்படுத்துபவர்கள் கட்டாயம் KYC நடைமுறைகளை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், சமர்பிக்காதவர்களுக்காக, அவர்கள் வாலட் கணக்கில் உள்ள தொகைக்கு இணைய ஷாப்பிங் (E-commerce) செய்து கொள்ளலாம் அல்லது ஒரே பரிவர்த்தனையில் தங்கள் வங்கிக்கு பணத்தை மாற்றி கொள்ளலாம்(Transfer money to bank account) என கூறியுள்ளது.

 

எனவே இனி மேல், வாலட் கணக்குகள் மற்றும் அதன் பண பரிவர்த்தனைகளுக்கு KYC ஒப்பந்தம் அவசியமாகும். இந்த நடைமுறையை பின்பற்றாதவர்கள் இனி தங்கள்  வங்கி கணக்கிலிருந்து வாலட் கணக்குக்கு பணத்தை மாற்ற முடியாது. நாளுக்கு நாள் பெருகி வரும் இணைய வணிகத்தால், இணைய வழி பரிவர்த்தனைகளின் மதிப்பு வரும் 2023 ல் 1 லட்சம் கோடி ( 1 Trillion) அமெரிக்க டாலராக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த டிசம்பர் 2017 ல் வாலட் மூலமான பரிவர்த்தனைகளின் மதிப்பு ரூ. 12,500 கோடி என ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. இதுவே பண மதிப்பிழப்புக்கு முன்னர் ரூ. 3385 கோடியாக இருந்தது. வாலட் சந்தையில் முதலிடத்தை Paytm தக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. Mobikwik, PhonePe, Tez, Amazon pay, Oxigen என பல வாலட் சேவைகள் உள்ளன. தற்போது வாட்ஸ் அப் நிறுவனமும் தனது சேவைகளை ஆரம்பித்துள்ளது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

 

இருப்பினும் இந்தியாவை பொறுத்தவரை வாலட் சேவை நிறுவனங்கள் இன்னும் லாபம் ஈட்டியதாக தெரியவில்லை. சிறு தொழில்முனைவோர்களிடமும் இன்னும் இந்த சேவை முழுவதுமாக பரவலாக்கப்படவில்லை. எனவே KYC என்னும் நடைமுறை வங்கி கணக்கை போலவே, டிஜிட்டல் வாலட் களுக்கும் பொருந்தும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

சென்செக்ஸ் பங்குகளுக்கு பரிவர்த்தனை கட்டணம் இனி இல்லை – மும்பை பங்குச்சந்தை

சென்செக்ஸ் பங்குகளுக்கு பரிவர்த்தனை கட்டணம் இனி இல்லை – மும்பை பங்குச்சந்தை

No Transaction charges for BSE SENSEX 30 Stocks

இந்தியாவில்  பிரபலமான பங்குச்சந்தையாக தேசிய பங்குச்சந்தையும், மும்பை பங்குச்சந்தையும் திகழ்கின்றன. தேசிய பங்குச்சந்தை ‘Nifty 50’ என்ற குறியீட்டாலும், மும்பை பங்குச்சந்தை ‘Sensex 30’ என்ற குறியீடு மூலமும் சந்தையில் வர்த்தகமாகின்றன. சந்தை மதிப்பு அதிகமாக உள்ள  நிறுவனங்களே இந்த Nifty 50 நிறுவனங்களாகவும், மும்பை BSE Sensex 30 நிறுவனங்களாகவும் அமைகின்றன.

 

பங்குச்சந்தையில் பங்கு வாங்குவதும், விற்பதும் பங்குத்தரகர் வாயிலாகவே நடைபெறுகிறது. இதற்கு தரகு நிறுவனங்கள் தங்களின் தரகு கட்டணம் போக, பங்குச்சந்தை பரிவர்த்தனை கட்டணத்தையும் வசூலிக்கிறது. இந்த பரிவர்த்தனை கட்டணம் (Transaction Charges) அந்தந்த பங்குச்சந்தை அமைப்பால் நிர்ணயிக்கப்படுகிறது. இது போக பங்கு பரிவர்த்தனை வரி (Securities Transaction Tax -STT), முத்திரை வரி(Stamp Duty), வருவாய் கட்டணங்கள் (SEBI Turnover charges) என பங்கு வர்த்தகத்திற்கு கட்டணங்கள் வசூல் செய்யப்படுகிறது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

 

தேசிய பங்குச்சந்தைக்கும், மும்பை பங்குச்சந்தைக்குமான பரிவர்த்தனை கட்டணங்கள் வெவ்வேறாக அமையும். பொதுவாக மும்பை பங்குச்சந்தையை விட தேசிய பங்குச்சந்தையில் பரிவர்த்தனை கட்டணங்கள் சற்று அதிகமாகும். அதே நேரத்தில் மும்பை சந்தையிலும், தேசிய பங்குச்சந்தையை காட்டிலும் பங்கு நிறுவனங்கள் அதிகமாக இருக்கும். இந்நிலையில் மும்பை பங்குச்சந்தை தனது பங்குகளுக்கான பரிவர்த்தனை கட்டணத்தில் சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

 

அதாவது, மும்பை சென்செக்ஸ் (BSE Sensex 30 stocks) குறியீட்டில் உள்ள 30 நிறுவனங்களுக்கான பரிவர்த்தனை கட்டணம் ரத்து செய்யப்படுவதாகவும், வரும் மார்ச் 12 முதல் (March 12, 2018) சென்செக்ஸ் 30 நிறுவனங்களுக்கு பரிவர்த்தனை கட்டணம் இல்லை என்றும் அறிவித்துள்ளது.

 

இந்த சலுகை சில்லரை முதலீட்டாளரை கவரும் வகையிலும், சந்தை மதிப்பு அதிகமுள்ள நிறுவனங்களில் வர்த்தகம் அதிகம் நடைபெறும் எனவும் மும்பை சந்தை கூறியுள்ளது.  மும்பை பங்குச்சந்தையில் தற்போதுள்ள பரிவர்த்தனை கட்டணம் – 50 பைசாவிலிருந்து ரூ. 1.50 வரை (0.5 –  1.50) உள்ளது. 1 லட்சத்திற்கும் குறைவான பங்கு வர்த்தகத்திற்கு ரூ. 1.50 ம், 20 லட்சத்திற்கு மேற்பட்ட பங்கு வர்த்தகத்திற்கு 50 பைசாவாகவும் பரிவர்த்தனை கட்டணம் உள்ளது.

 

BSE Sensex Transaction charges

 

 

இந்த சலுகையால், மும்பை பங்குச்சந்தைக்கு எவ்வளவு இழப்பு ஏற்படலாம் என்ற தகவல் சொல்லப்படவில்லை. இருப்பினும்  குறைந்த அளவிலான பங்குகளை வாங்கி முதலீடு செய்வோருக்கு இந்த அறிவிப்பினால் பலன் ஏதுமில்லை. அதே சமயத்தில், தினசரி பங்கு வர்த்தகத்தில் (Day Trading) ஈடுபடுவோருக்கு சாதகமாக இருக்கும்.

 

BSE – மும்பை பங்குச்சந்தையின் மற்ற கட்டணங்கள் பற்றி அறிய…

 

Equity Segment Transaction Fees – List

 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி- 8.55 % ஆக குறைப்பு

தொழிலாளர்  வருங்கால  வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் – 8.55 % ஆக குறைப்பு

 

EPF Interest rate cuts to 8.55 % for 2017-18

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees’ provident fund organisation) தனது 220 வது மத்திய குழு கூட்டத்தை கடந்த புதன் கிழமை (21.02.2018) நடத்தியது. இந்த கூட்டத்தில் தொழிலாளருக்கான அமைச்சர் திரு. சந்தோஷ் குமார் கங்கவார் கலந்து கொண்டார். கூட்டத்தில் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யும் விஷயங்கள் அறிவிக்கப்பட்டது.

 

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 2017-2018 நிதியாண்டுக்கு 8.55 % ஆக நிர்ணயித்தது. இந்த நிதியாண்டு அடுத்த மாதம் மார்ச்சில் முடிவடைகிறது. கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் தற்போது அறிவிக்கப்பட்ட வட்டி விகித மாற்றம் 0.10 % (10 basis points) குறைவு.

 

கடந்த 2016-17 நிதியாண்டின் வட்டி விகிதம் 8.65 % ஆகவும், 2015-16 ல் இது 8.8 % வட்டியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வட்டி விகித குறைப்பு சுமார் 6 கோடி பி.எப். சந்தாதாரர்களை பாதிக்கும் எனவும், கடந்த 8.65 % (2016-17) வட்டி மூலம் 695 கோடி ரூபாய் உபரியாகவும்(Surplus) இருந்ததாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிதியாண்டின் 8.55 % வட்டி தாக்கத்தால் 586 கோடி ரூபாய்  எதிர்பார்க்கப்படும் உபரியாக இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

 

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

 

 

மேலும் அமைச்சர் சந்தோஷ் குமார் கங்கவார் கூறும் போது, “ இந்த அமைப்பு (EPFO) கடந்த இரு மாதங்களில் (January and February) பங்குச்சந்தையில் ரூ. 3700 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றதாகவும், அதன் மூலம் ரூ.1010 கோடி வருவாய் கிடைத்திருப்பதாகவும் “ கூறினார்.

 

பொது வருங்கால வைப்பு நிதி (Public Providend Fund -PPF)  வட்டியை காட்டிலும் தொழிலாளருக்கான வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் அதிகம் இருப்பதையும் மேற்கோள் காட்டியுள்ளது. தற்போதைய PPF வட்டி விகிதம் –  7.6 %  ஆகும்.

 

நிறுவனங்கள்  செலுத்தும் நிர்வாக செலவினங்களை (Administrative Expenses by Employers)  0.65 % லிருந்து 0.5 % ஆக குறைக்க முடிவு செய்துள்ளது. EPFO அமைப்பு ஏற்கனவே பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படும் நிதி வரம்பையும் அதிகரித்துள்ளது. முன்பு 20 பேர் கொண்ட நிறுவனங்கள் மட்டுமே வருங்கால வைப்பு நிதிக்கு விண்ணப்பிக்கும் நிலை மாறி, தற்போது 10 பேர் கொண்ட நிறுவனமாக இருந்தால் போதும் என்ற விலக்கும் EPFO ல் உள்ளது.

 

பட்ஜெட் 2018 லும் வருங்கால வைப்பு நிதியில் பெண்கள் (Women’s Contribution) தாங்கள் வேலைக்கு சேர்ந்த முதல் 3 வருடங்கள், தங்களது வருமானத்தில் 8 சதவிகிதம் மட்டும் செலுத்தினால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அனைத்து தரப்பினருக்கும் இருந்த 12 % பங்களிப்பு (PF Contribution) பெண்களுக்கும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

மொத்த விலை பணவீக்கம் (WPI) – 2.84 % – ஜனவரி 2018

மொத்த விலை  பணவீக்கம் (WPI) – 2.84 % – ஜனவரி 2018

Wholesale Price Index (WPI) Inflation eases at 2.84 % – January 2018

 

  • நாட்டின் மொத்த விலை  பணவீக்கம் ஜனவரி (Jan, 2018) மாதத்தில் 2.84 % ஆக குறைந்துள்ளது.

 

  • இந்த  குறைவு  கடந்த  ஆறு மாதங்களில்  இல்லாத  சரிவாகும். உணவு பொருட்கள் மற்றும் எரிபொருள் ஆகியவற்றின் விலை குறைவால் இந்த 2.84 % அளவு ஏற்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 2017 ல் நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 3.58 %  ஆக  இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

  • சமீபத்திய குறைவாக, கடந்த ஜூலை 2017 ல் 1.88 % ஆக இருந்தது. கடந்த டிசம்பர் 2017 –  ஜனவரி 2018 ஒப்பிடுகையில், ஜனவரி மாதத்தில் காய்கறிகளின் விலை குறைந்தும், வெங்காயத்தின் விலை சற்று அதிகரித்தும் காணப்பட்டது. கோதுமை, முட்டை, மீன் மற்றும் மாமிசத்தின் விலை குறைவாகவும், பழங்களின் விலை அதிகமாகவும் இருந்திருக்கிறது.

 

  • ஜனவரி 2018 மாதத்துக்கான சில்லரை பணவீக்கம் (Consumer Price Index – CPI) – 5.07 % ஆகும். இதன் அடிப்படையில் தான் பாரத ரிசர்வ் வங்கி (RBI) வங்கிகளுக்கான  ரெப்போ (REPO) விகிதத்தை அறிவிக்கிறது. நமது நாட்டில் பணவீக்க அளவீடை கண்டறிய, WPI மற்றும் CPI என இரு வகையான முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

 

  • இதனிடையே நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), தொழில்துறை உற்பத்தி குறியீடு (IIP), மற்றும் சில்லரை பணவீக்கம் (CPI) ஆகியவற்றின் அடிப்படை காலத்தை மாற்றியமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 

  • இதன் படி, மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் தொழில்துறை உற்பத்தி குறியீடு இந்த நிதி ஆண்டு ( 2017-18) அடிப்படையிலும், சில்லரை பணவீக்கம் முன்னிருந்த 2012 லிருந்து இந்த ஆண்டு 2018 முதல் அடிப்படை ஆண்டு என கணக்கிடவும் திட்டமிட்டுள்ளது.

 

  • தக்காளி, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு (TOP) ஆகியவற்றின் விலை ஏற்ற – இறக்கத்தை சரி செய்ய, ஒரு நிலையான மாதிரியை உருவாக்க திட்டமிட்டுள்ளது என கடந்த பட்ஜெட் 2018 ல் தெரிவிக்கப்பட்டது.

WPI India Jan 2018

(Data courtesy: Trading Economics)

 

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

பட்ஜெட் 2018 க்கு பிறகு பங்குச்சந்தை முதலீடு எப்படி ?

பட்ஜெட் 2018 க்கு பிறகு  பங்குச்சந்தை  முதலீடு  எப்படி ?

 

Share Market after impact of Budget 2018 ?

 

சமீபத்தில் (09.02.2018)  மதுரை பார்ச்சூன் பாண்டியன் ஹோட்டலில்(Fortune Pandiyan Hotel)  நடைபெற்ற முதலீட்டாளர்களுக்கான கூட்டம் – தேசிய பங்குச்சந்தையின் கூட்டுடன் கோயம்புத்தூர் கேப்பிடல் நிறுவனம் (Coimbatore Capital) சார்பில் நடைபெற்றது.

 

 

முதலீட்டாளர் கூட்டத்தில் பட்ஜெட் 2018 க்கு பிறகான பங்குச்சந்தை தாக்கம் குறித்து  அலசப்பட்ட சில விஷயங்கள்:

 

 

நிறுவனர்  திரு. D. பாலசுந்தரம் (Coimbatore Capital, Founder and Director of Coimbatore Stock Exchange Limited ) பேசுகையில்…

 

  • பொதுவாக  பட்ஜெட்டின்  தாக்கம் 10 வருடங்களுக்கு  பிறகு தான்  ஏற்படும், உடனடியாக  அதன்  தாக்கம்  நடைபெறாது. உதாரணத்திற்கு மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டமும் பல வருடங்களுக்கு பிறகு தான் வெற்றியடைந்துள்ளது. அது போல, பட்ஜெட்டில் அரசு அறிவிக்கும் விஷயங்கள் மெதுவாக வளரலாம் என்றார்.

 

  • நடப்பு கணக்கு பற்றாக்குறை (Fiscal Deficit) – வங்கி வட்டி விகிதத்திலும், பணவீக்கத்திலும் தாக்கம் ஏற்படுத்தலாம்.

 

  • வட்டி விகிதம் உயர்ந்தால், முதலீட்டாளர்கள் பத்திர சந்தை (Bond Market) நோக்கி செல்வார்கள். அதே நேரத்தில் வட்டி விகித உயர்ந்தால், நிறுவனத்தின் லாபம் குறையலாம்; அதன் பாதிப்பு பங்குச்சந்தையில் வெளிப்படும். எனவே குறைந்த வட்டி விகிதம் கடன் பெறுபவர்களுக்கு வளர்ச்சியை கொடுக்கும்.

 

  • கொள்முதல் மேலாளர் குறியீடு (Purchasing Manager’ Index – PMI) என்பது ஒரு உற்பத்தி துறையின் பொருளாதாரத்திற்கு ஆரோக்கியம் மற்றும் அவசியமான அடையாளம். இந்த குறியீடு தற்போது நன்றாக உள்ளது. இது சந்தைக்கும் நல்ல விஷயம்.

 

  • பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தாத துறைகள் – பாதுகாப்பு (Defence), அரசு ஊழியர்களின் சம்பள விகிதம்.

 

  • வங்கிகளில் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைந்து வரும் நிலையில், வங்கி முதலீட்டை கடன் சந்தையில் (Bond / Debt Market) செய்யலாம்.

 

  • பொருள் சந்தையும் (Commodity Market), பங்குச்சந்தையும் இணைக்கப்படலாம். இதன் நிகழ்வு இந்த வருடத்தின் கடைசியில் நடைபெறலாம்.

 

  • வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, வரி விகிதங்கள் குறைக்கப்படலாம் என கூறினார் (If Tax Payers will increase, tax rate may decrease).

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

 

 

 

தேசிய பங்குச்சந்தை சார்பில் துணை மேலாளர் திரு. சங்கமேஸ்வரன் பேசுகையில்,

 

  • கடன்  வாங்கி, பங்குச்சந்தையில்  ஈடுபட  வேண்டாம் (Don’t borrow and invest).

 

  • பங்குச்சந்தையை பற்றி  புரியாதவர்கள் பங்குச்சந்தையில்  முதலீடு  செய்ய  வேண்டாம். அவர்களுக்காக  வங்கி  மற்றும் அஞ்சலக  திட்டங்கள்  உள்ளன. பரஸ்பர  நிதியிலும் (Mutual Funds) முதலீடு  செய்யலாம் (Don’t invest, if you are not aware of Share market).

 

  • உங்களுக்கான  தேவைகள்  மற்றும்  நிதி  இலக்குகளை  சார்ந்து  சந்தையில்  முதலீடு  செய்யுங்கள் (Stick to Financial goals).

 

  • Asset Allocation  ஐ புரிந்து சரியாக முதலீடு செய்யுங்கள்.

 

  • பங்குச்சந்தையில் உங்கள் பரிவர்த்தனையை சரி பாருங்கள் மற்றும் உங்களுக்கான ஒப்பந்த சீட்டு (Digital Contract Note) தகவல்களை முழுவதுமாய் படித்து பாருங்கள்.

 

  • பங்குச்சந்தை தரகரிடம் நீங்கள் செலுத்திய பணம் மற்றும் பண பாக்கி சரியாக உள்ளதா என பார்த்து கொள்ளுங்கள் என்றார்(Verify settlement of funds and securities).

 

இறுதியாக, SEBI பதிவு பெற்ற ஆராய்ச்சி ஆய்வாளர் டாக்டர்  கார்த்திகேயன் ( SEBI Regd. Research Analyst) அவர்கள் பேசும் போது,

 

  • ஒரு  முதலீட்டாளரின்  ரிஸ்க்  என்பது  பணம்  மற்றும்  வாய்ப்பில் (Money and Opportunity)  தான்  உள்ளது. அதனால்  பணத்தை  கொண்டு  சரியான  வாய்ப்பை  நோக்குங்கள். இரண்டையும்  இழந்து  விட  கூடாது.

 

  • ஒரு  நீண்ட  கால  முதலீட்டாளர் மூன்று  நிலைகளை (Low Return, Zero Return, Negative Return)  கடந்து  தான்  செல்வத்தை  பெருக்க  முடியும். அதனால் சந்தையில்  பொறுமை  அவசியம்.

 

  • LTCG Tax  இருந்தாலும், சந்தையில்  கிடைக்கும்  வருமானம்  பணவீக்கத்தை விட  அதிகம்  தான்.

 

  • பட்ஜெட்  2018 க்கு  பின், சந்தை  இறக்கம் ஒரு  தற்காலிகமே; தொழில்துறை  முன்னேறுவதற்கான  காலங்கள்  அடுத்த  5 – 10 வருடங்கள். அதனால்  சந்தை நன்றாக  தான்  இருக்கும்.

 

  • வெளிநாட்டு  முதலீட்டாளர்கள்  தங்கள்  முதலீட்டை சந்தையிலிருந்து  முதன்மை சந்தைக்கு எடுத்து போயுள்ளனர். அதே போல அவர்கள் கடன் சந்தையிலும் முதலீடு செய்கின்றனர். அதன் தாக்கமே கடந்த சில நாட்களாக உள்ளதாக தெரிவித்தார். அமெரிக்க வட்டி விகித மாற்றம் வரலாம் என்ற எதிர்பார்ப்பும் சந்தையை இறக்கின.

 

  • மொத்தத்தில், சந்தை நீண்ட காலத்தில் நன்றாக இருக்கும் எனவும், பட்ஜெட் 2018 ல் கூறியுள்ள அம்சங்கள் அமலாகும் போது சந்தை மற்றும் தொழில் முன்னேறும் எனவும் அவர் கூறினார்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

ரிசர்வ் வங்கி நிதி கொள்கை -RBI- Feb 2018

ரிசர்வ் வங்கி நிதி கொள்கை -RBI- Feb 2018

  • மத்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India – RBI) தனது 2018 க்கான  நிதி கொள்கை குழுவில், வங்கிகளுக்கான வட்டி விகித தகவலை இன்று (07.02.2018) வெளியிட்டது.

 

  • சென்ற நிதி கொள்கையில் வெளியிட்ட  குறுகிய கால கடனுக்கான ரெப்போ (Repo Rate) விகிதத்தையே, இம்முறையும் அறிவித்தது. வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ விகிதத்தை 6 % ஆக தொடரும் எனவும், அதில் மாற்றமில்லை என வெளியிட்டுள்ளது.

 

            What is a Repo Rate ? ( வங்கிகளின் வட்டி விகிதங்களை அறிவோம் )

 

  • பணவீக்க மதிப்பீட்டையும் ஜனவரி – மார்ச் (Jan – Mar, 2018) காலத்திற்கு 5.1 % ஆக இருக்கும் என திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னர், 2018 ம் நிதியாண்டின் இரண்டாம் பாதியில் பணவீக்க மதிப்பு 4.2 – 4.6 % இருக்கலாம் என மதிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

  • ரிவர்ஸ் ரெப்போ (Repo Rate) விகிதத்திலும் மாற்றமில்லை. ஏற்கனவே  உள்ள 5.75 % தொடரும்.

 

  • ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் அவர்கள் கூறும் போது, ‘ கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் பட்ஜெட் 2018 ல் விவசாயிகளுக்கான குறைந்த பட்ச ஆதார விலை (Minimum Selling Price – MSP) போன்ற தகவலை அடுத்து குறுகிய காலத்தில் பணவீக்கம் உயரும் ‘ என்றார்.

 

  • 2018 ம் நிதி ஆண்டுக்கான  பொருளாதார வளர்ச்சியையும் குறைத்து 6.6 % ஆக மதிப்பிட்டுள்ளது. அடுத்த நிதி ஆண்டில் 7.2 % ஆக இருக்கும் என மதிப்பீட்டு முறையில் கூறியுள்ளது.

 

  • உலகளாவிய நிதிச்சந்தையில் ஏற்பட்டிருக்கும் ஏற்ற தாழ்வும், அமெரிக்க மத்திய வங்கி (US Federal)  நாணய கொள்கையின் இயல்பு நிச்சயமற்றதாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

 

நீண்ட கால மூலதன ஆதாய வரி – ஏப்ரல் 1, 2018 முதல் கணக்கீடு

நீண்ட கால மூலதன ஆதாய வரி – ஏப்ரல் 1, 2018 முதல் கணக்கீடு

Long Term Capital Gains Tax(LTCG) – Effect from April 1, 2018

 

  • நீண்ட கால மூலதன ஆதாய வரி(LTCG) கணக்கீடு ஜனவரி 31, 2018 க்கு பிறகான பங்கு விற்பனைக்கு என பொது பட்ஜெட் 2018 ல் அறிவிக்கப்பட்டது. தற்போது இவற்றில் மத்திய அரசின் நிதி அமைச்சகம் மாற்றத்தை ஏற்படுத்தி, விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதாவது, வரும் ஏப்ரல் 1, 2018 (Effect from April 1, 2018) பிறகான பங்கு விற்பனைக்கு தான் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

  • நீண்ட கால மூலதன ஆதாய வரி (10 % Tax) ஏப்ரல் 1, 2018 முதல் பங்கு மற்றும் பங்கு சார்ந்த பரஸ்பர நிதிகளுக்கான பரிவர்த்தனைகளுக்கு பொருந்தும்.

 

  • ஜனவரி 31, 2018 க்கு முன்பு வாங்கியிருந்த பங்குகளுக்கு, அன்றைய தேதியில் (January 31 ) இருந்த பங்கின் அதிகபட்ச விலையை கொண்டு நீண்ட கால மூலதன ஆதாய வரி கணக்கிடப்படும் எனவும், பிப்ரவரி 1 முதல் மார்ச் 31 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு மற்றும் அதன் லாபத்திற்கு வருமான வரிச்சட்டம் – Exemption on Section 10 (38) of Income Tax Act  கீழ் விலக்கு அளிக்கப்படும் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

 

  • பரஸ்பர நிதிக்கும் ஜனவரி 31, 2018 ல் அதன் நிகர சொத்து மதிப்பு (Net asset value -NAV) அடிப்படையில் கணக்கிடப்படும்.

 

  • ஜனவரி 31, 2018 வரையிலான பங்கு மற்றும் பங்கு சார்ந்த பரஸ்பர நிதிகளுக்கு நீண்ட கால மூலதன ஆதாய வரி இல்லை. மார்ச் 1, 2018 பிறகான பங்கு லாபத்திலும் ரூ. 1 லட்சம் வரை விலக்கு உள்ளது.

 

  • பிப்ரவரி 1 முதல் மார்ச் 31 வரையிலான நீண்ட கால  மூலதன  நஷ்டத்திற்கு  விலக்கு பெற  முடியாது. ஆனால் ஏப்ரல் 1 முதலான  பரிவர்த்தனைகளுக்கு விலக்கு அனுமதிக்கப்படும்.

 

வாழ்க  வளமுடன்,

 

நன்றி, வர்த்தக  மதுரை

 

www.varthagamadurai.com