தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் – 8.55 % ஆக குறைப்பு
EPF Interest rate cuts to 8.55 % for 2017-18
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees’ provident fund organisation) தனது 220 வது மத்திய குழு கூட்டத்தை கடந்த புதன் கிழமை (21.02.2018) நடத்தியது. இந்த கூட்டத்தில் தொழிலாளருக்கான அமைச்சர் திரு. சந்தோஷ் குமார் கங்கவார் கலந்து கொண்டார். கூட்டத்தில் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யும் விஷயங்கள் அறிவிக்கப்பட்டது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 2017-2018 நிதியாண்டுக்கு 8.55 % ஆக நிர்ணயித்தது. இந்த நிதியாண்டு அடுத்த மாதம் மார்ச்சில் முடிவடைகிறது. கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் தற்போது அறிவிக்கப்பட்ட வட்டி விகித மாற்றம் 0.10 % (10 basis points) குறைவு.
கடந்த 2016-17 நிதியாண்டின் வட்டி விகிதம் 8.65 % ஆகவும், 2015-16 ல் இது 8.8 % வட்டியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வட்டி விகித குறைப்பு சுமார் 6 கோடி பி.எப். சந்தாதாரர்களை பாதிக்கும் எனவும், கடந்த 8.65 % (2016-17) வட்டி மூலம் 695 கோடி ரூபாய் உபரியாகவும்(Surplus) இருந்ததாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிதியாண்டின் 8.55 % வட்டி தாக்கத்தால் 586 கோடி ரூபாய் எதிர்பார்க்கப்படும் உபரியாக இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.
( Read this post after the advertisement… )
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
மேலும் அமைச்சர் சந்தோஷ் குமார் கங்கவார் கூறும் போது, “ இந்த அமைப்பு (EPFO) கடந்த இரு மாதங்களில் (January and February) பங்குச்சந்தையில் ரூ. 3700 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றதாகவும், அதன் மூலம் ரூ.1010 கோடி வருவாய் கிடைத்திருப்பதாகவும் “ கூறினார்.
பொது வருங்கால வைப்பு நிதி (Public Providend Fund -PPF) வட்டியை காட்டிலும் தொழிலாளருக்கான வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் அதிகம் இருப்பதையும் மேற்கோள் காட்டியுள்ளது. தற்போதைய PPF வட்டி விகிதம் – 7.6 % ஆகும்.
நிறுவனங்கள் செலுத்தும் நிர்வாக செலவினங்களை (Administrative Expenses by Employers) 0.65 % லிருந்து 0.5 % ஆக குறைக்க முடிவு செய்துள்ளது. EPFO அமைப்பு ஏற்கனவே பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படும் நிதி வரம்பையும் அதிகரித்துள்ளது. முன்பு 20 பேர் கொண்ட நிறுவனங்கள் மட்டுமே வருங்கால வைப்பு நிதிக்கு விண்ணப்பிக்கும் நிலை மாறி, தற்போது 10 பேர் கொண்ட நிறுவனமாக இருந்தால் போதும் என்ற விலக்கும் EPFO ல் உள்ளது.
பட்ஜெட் 2018 லும் வருங்கால வைப்பு நிதியில் பெண்கள் (Women’s Contribution) தாங்கள் வேலைக்கு சேர்ந்த முதல் 3 வருடங்கள், தங்களது வருமானத்தில் 8 சதவிகிதம் மட்டும் செலுத்தினால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அனைத்து தரப்பினருக்கும் இருந்த 12 % பங்களிப்பு (PF Contribution) பெண்களுக்கும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை