ரிசர்வ் வங்கி நிதி கொள்கை -RBI- Feb 2018
- மத்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India – RBI) தனது 2018 க்கான நிதி கொள்கை குழுவில், வங்கிகளுக்கான வட்டி விகித தகவலை இன்று (07.02.2018) வெளியிட்டது.
- சென்ற நிதி கொள்கையில் வெளியிட்ட குறுகிய கால கடனுக்கான ரெப்போ (Repo Rate) விகிதத்தையே, இம்முறையும் அறிவித்தது. வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ விகிதத்தை 6 % ஆக தொடரும் எனவும், அதில் மாற்றமில்லை என வெளியிட்டுள்ளது.
What is a Repo Rate ? ( வங்கிகளின் வட்டி விகிதங்களை அறிவோம் )
- பணவீக்க மதிப்பீட்டையும் ஜனவரி – மார்ச் (Jan – Mar, 2018) காலத்திற்கு 5.1 % ஆக இருக்கும் என திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னர், 2018 ம் நிதியாண்டின் இரண்டாம் பாதியில் பணவீக்க மதிப்பு 4.2 – 4.6 % இருக்கலாம் என மதிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ரிவர்ஸ் ரெப்போ (Repo Rate) விகிதத்திலும் மாற்றமில்லை. ஏற்கனவே உள்ள 5.75 % தொடரும்.
- ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் அவர்கள் கூறும் போது, ‘ கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் பட்ஜெட் 2018 ல் விவசாயிகளுக்கான குறைந்த பட்ச ஆதார விலை (Minimum Selling Price – MSP) போன்ற தகவலை அடுத்து குறுகிய காலத்தில் பணவீக்கம் உயரும் ‘ என்றார்.
- 2018 ம் நிதி ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சியையும் குறைத்து 6.6 % ஆக மதிப்பிட்டுள்ளது. அடுத்த நிதி ஆண்டில் 7.2 % ஆக இருக்கும் என மதிப்பீட்டு முறையில் கூறியுள்ளது.
- உலகளாவிய நிதிச்சந்தையில் ஏற்பட்டிருக்கும் ஏற்ற தாழ்வும், அமெரிக்க மத்திய வங்கி (US Federal) நாணய கொள்கையின் இயல்பு நிச்சயமற்றதாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை