Tag Archives: sbi

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை, எஸ்.பி.ஐ. வங்கி வட்டி விகிதங்கள் எப்படி ?

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை, எஸ்.பி.ஐ. வங்கி வட்டி விகிதங்கள்  எப்படி ?

No Change in REPO Rate, Deposit Interest Rates in State Bank of India

கடந்த வாரம் நடைபெற்ற மத்திய நிதிக்கொள்கை குழு கூட்டத்தில்(MPC)  வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை எனவும், முந்தைய 4 சதவீத ரெப்போ வட்டி விகிதமே தொடரும் எனவும் மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவீதமாகவும், விளிம்பு நிலை விகிதம் (Marginal Standing Facility Rate) 4.25 சதவீதமாகவும் சொல்லப்பட்டுள்ளது.

எதிர்பாராத நிலையில் செல்லும் சில்லரை விலை பணவீக்கம், 2020-21ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்மறையாக (-9.5) இருக்கும் எனவும் மத்திய வங்கி சுட்டி காட்டியுள்ளது. அதே நேரத்தில் 2021-22ம் நிதியாண்டில் நல்லதொரு வளர்ச்சியை எதிர்பார்ப்பதாக சொல்லியுள்ளது.

ரெப்போ விகிதத்தில்(REPO rate) மாற்றம் எதுவுமில்லை என சொல்லப்பட்ட நிலையில், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் நிலவும் வட்டி விகிதங்களை பார்ப்போம். ஏற்கனவே சேமிப்பு கணக்குக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. சேமிப்பு கணக்கில் உள்ள தொகைக்கான வட்டி விகிதம் 2.70 சதவீதமாக (ஆண்டுக்கு) உள்ளது.

சிறு சேமிப்பு கணக்கின் கீழ் 4 வழங்கப்படும் வட்டி 4 சதவீதமாகவும், பரஸ்பர நிதிகளில் கிடைக்கப்பெறும் லிக்விட் பண்டுகளின் வட்டி விகிதம் 4 சதவீதத்திற்கு மேலாக இருக்கும் நிலையில், வங்கி சேமிப்பு கணக்கில் சொல்லப்பட்ட விகிதம் மிக குறைவே. இருப்பினும், பண பரிமாற்றத்திற்கு பெரும்பாலும் வங்கி சேமிப்பு கணக்கை சார்ந்து தான் இருக்க வேண்டியுள்ளது.

டெபாசிட் முறையில் 45 நாட்களுக்கு (7 Days to 45 Days) குறைவான காலத்திற்கு வழங்கப்படும் வட்டி விகிதம் 2.90 சதவீதமாக உள்ளது. மூத்த குடிமக்களாக இருப்பின், 3.40 சதவீதமாக இருக்கிறது. 46 நாட்கள் முதல் 180 நாட்களுக்கு குறைவான காலத்திற்கு 3.90 சதவீதமும், மூத்த குடிமக்கள் எனில் 4.40 சதவீதமாகவும் சொல்லப்பட்டுள்ளது.

ஆறு மாதம் முதல் ஒரு வருடத்திற்கு குறைவான டெபாசிட் காலத்திற்கு 4.40 சதவீதமாக உள்ளது. இது மூத்த குடிமக்களுக்கு 4.90 சதவீதமாக கூறப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு மேலான, அதே வேளையில் இரண்டு வருடத்திற்கு குறைவான காலத்திற்கு 4.90 சதவீதமும், 2-3 வருடங்களுக்கு 5.10 சதவீதமும் மற்றும் 3 முதல் 5 வருடங்களுக்கான வட்டி விகிதம் 5.30 சதவீதமாகவும் உள்ளது.

ஸ்டேட் வங்கியில்(SBI) ஐந்து வருடம் முதல் 10 வருடங்கள்  வரையிலான காலத்திற்கு 5.40 சதவீதம் டெபாசிட் வட்டி விகிதமாக உள்ளது. மூத்த குடிமக்களுக்கு இது 6.20 சதவீதமாக உள்ளது. கடனுக்கான வட்டி விகிதம் குறைந்து வரும் நிலையில், டெபாசிட் தாரர்களுக்கு கிடைக்கப்பெறும் வட்டி போதுமானதாக இருப்பதில்லை. நடப்பில் நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் சராசரியாக 6 சதவீதமாக இருந்து வருகிறது. இந்நிலையில் வங்கி டெபாசிட் வட்டி விகிதம் சாதகமான அம்சமாக இல்லை. ஒரு வருடத்திற்கு மேலான டெபாசிட்களுக்கு, ரிஸ்க் தன்மையை புரிந்து கொண்டு மியூச்சுவல் பண்டுகளில் காணப்படும் கடன் சார்ந்து பண்டுகளில் முதலீடு செய்யும் போது, கணிசமான வட்டி வருவாயை பெறலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

Advertisement

பொதுத்துறை வங்கிகளில் சுமார் 20,000 கோடி ரூபாய் மோசடி

பொதுத்துறை வங்கிகளில் சுமார் 20,000 கோடி ரூபாய் மோசடி 

About 20K Crore rupees Fraud in Public Sector Banks – RTI query

வங்கிகள் மற்றும் நிதி சார்ந்த நிறுவனங்களில் அவ்வப்போது மோசடிகள் நடைபெற்று வருவது கவனிக்கத்தக்கது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 19,964 கோடி ரூபாய் அளவில் மோசடி நடைபெற்றுள்ளதாக தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் சொல்லப்பட்டுள்ளது.

சொல்லப்பட்ட 19,964 கோடி ரூபாய் முழுவதும் பொதுத்துறை வங்கிகளில் காணப்பட்ட மோசடி எனவும், இது தனிநபர் வாயிலாக வங்கிகளில் கொடுக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் வங்கிகளில் ஏற்பட்ட அனைத்து மோசடி சார்ந்த தகவலை இது தெரிவிக்கவில்லை.

2020-21ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்திய பொதுத்துறை வங்கிகளில் பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்குகளின் எண்ணிக்கை 2,867 மற்றும் அதன் மூலம் 19,964 கோடி ரூபாய் அளவில்  மோசடி நடந்துள்ளது. எஸ்.பி.ஐ.(SBI) வங்கியில் அதிகபட்சமாக பதிவு செய்யப்பட்ட மோசடிகளின் எண்ணிக்கை 2,050. அதன் மதிப்பு சுமார் 2,300 கோடி ரூபாய்.

மோசடி மதிப்பளவில், பேங்க் ஆப் இந்தியாவில் 5,124 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. ஆனால் இந்த மதிப்பு வெறும் 47 வழக்குகளில் வந்துள்ளது. மோசடியில் சிக்கி தவித்த பஞ்சாப் தேசிய வங்கியில்(PNB) இம்முறை 240 வழக்குகளும், 270 கோடி ரூபாய் அளவில் மோசடியும் நடந்துள்ளது. இது கடந்த காலத்தை விட குறைவான மதிப்பாக சொல்லப்படுகிறது.

முதல் காலாண்டில் நடைபெற்றிருந்த மோசடியில்(Fraud in Banks) 12 பொதுத்துறை வங்கிகளின் தகவல்கள், ஆர்.டி.ஐ.(RTI act) சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த தகவல் வங்கிகளில் ஏற்பட்ட மொத்த மோசடிகள் பற்றியோ அல்லது கடன் பெற்றவர்களின் நிலை பற்றியோ சொல்லவில்லை.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

இனி ஏ.டி.எம். மூலம் பணம் எடுக்க OTP அவசியம், நாளை முதல் அமல் – பாரத ஸ்டேட் வங்கி

இனி ஏ.டி.எம். மூலம் பணம் எடுக்க OTP அவசியம், நாளை முதல் அமல் – பாரத ஸ்டேட் வங்கி 

OTP based cash withdrawal to all SBI ATMs from 18th September, 2020

நாடு முழுவதும் நாளை முதல் OTP முறையிலான பண பரிவர்த்தனை(Withdrawal) அமலுக்கு வருவதாக பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை ஏ.டி.எம். வாயிலாக எடுக்கும் போது, பாதுகாப்பு சார்ந்த சில சிக்கல்களை சந்திக்க வேண்டியுள்ளது. வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம். கடவுச்சொல்(ATM PIN) கசிந்து விட்டால், அவரின் கணக்கில் உள்ள பணத்தை திருடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இதனை தடுக்கும் வகையில் வாடிக்கையாளர்களின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பும் கூடுதல் பாதுகாப்பு அம்சத்தை பாரத ஸ்டேட் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. OTP முறையிலான இந்த நடைமுறை ஏற்கனவே பெரும்பாலான வங்கிகளில் இருந்து வந்தாலும், தற்போது 24 மணிநேர சேவையாக இதனை எஸ்.பி.ஐ. மாற்றியுள்ளது.

இந்த சேவை நாடு முழுவதும் உள்ள அனைத்து பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையங்களுக்கும் பொருந்தும். எஸ்.பி.ஐ.(State Bank of India) வங்கி வாடிக்கையாளர்கள் ஏதேனும் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையத்தில் ஒரு முறை பரிமாற்றமாக ரூ.10,000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகையை எடுக்கும் நிலையில், கூடுதலாக அவருடைய கைபேசி எண்ணுக்கு வரும் OTP எண்களையும் பதிவிட(Debit Card PIN போக) வேண்டும்.

சொல்லப்பட்ட சேவையின் மூலம் ஏ.டி.எம். மோசடி மற்றும் பண பரிவர்த்தனை அட்டையை தவறாக பயன்படுத்துதல் தடுக்கப்படும் என பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. முன்னர் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே இருந்த பாதுகாப்பு சேவை, நாளை (18-09-2020) முதல் 24 மணிநேர சேவையாக அனைத்து எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையங்களுக்கு வர உள்ளது.

அதே வேளையில் எஸ்.பி.ஐ. அல்லாத மற்ற வங்கி ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கும் போது, இந்த OTP முறை வேலை செய்யாது. புதிய சேவை, வங்கி வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாக வங்கி நிர்வாகம் கூறியுள்ளது. எனவே இனி பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். பரிவர்த்தனையின் போது, வங்கி கணக்கில் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணை வைத்திருப்பது அவசியமாகிறது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

பங்கு விலக்கல் கொள்கை – அடுத்து விற்பனைக்கு வரும் பொதுத்துறை நிறுவனங்கள் என்ன ?

பங்கு விலக்கல் கொள்கை – அடுத்து விற்பனைக்கு வரும் பொதுத்துறை  நிறுவனங்கள் என்ன ?

Govt’s Disinvestment Policy – What are the next PSUs ?

கடந்த 2018-19ம் நிதியாண்டின் முடிவில் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவின்(Air India) கடன் ரூ. 58,351 கோடி. சமீப வருடங்களாக நஷ்டத்தை மட்டுமே சந்தித்து வரும் ஏர் இந்தியா நிறுவனம் பங்கு விலக்கல் அடிப்படையில் விற்பனைக்கு தயாராக உள்ளன. தற்போது நிறுவன பங்கை வாங்க வரும் முதலீட்டாளர்களுக்காக அரசு காத்திருக்கிறது.

1932ம் ஆண்டில் டாட்டா குழுமத்தின் ஜே.ஆர்.டி. டாட்டா(JRD Tata) அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட நாட்டின் முதல் விமான சேவையாக, ‘டாட்டா ஏர்லைன்ஸ்’ இருந்தது. இரண்டாம் உலக போருக்கு பின், இந்த நிறுவனம் பட்டியலிடப்பட்ட பொது நிறுவனமாக(Tata Airlines) மாற்றப்பட்டது. பின்னர் அதன் பெயரும், ‘ஏர் இந்தியா’ என மாற்றம் பெற்றது.

சுதந்திரத்திற்கு பின், ஆரம்ப நிலையில் மத்திய அரசு 49 சதவீத பங்குகளை மட்டுமே கொண்டிருந்த நிலையில், பின்னர் ஏர் இந்தியா பொதுத்துறை நிறுவனமாகியது. நடப்பு நிதியாண்டில் மத்திய அரசின் பங்கு விலக்கல் தொகைக்கான இலக்கு 1.05 லட்சம் கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் படி, பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் (BPCL) நிறுவனத்தின் 53 சதவீத பங்கு விற்பனைக்கு வர உள்ளது. இது போல ஜெனரல் இன்சூரன்ஸ்(GIC) நிறுவனத்தின் 35 சதவீத பங்குகள் மற்றும் கோல் இந்தியாவின்(Coal India) 18 சதவீத பங்குகளும் விற்பனைக்கு வர உள்ளன.

இது போல ஓ.என்.ஜி.சி.(ONGC) மற்றும் பாரத ஸ்டேட் வங்கி ஆகியவற்றின் குறிப்பிட்ட பங்குகளும், பங்கு விலக்கல் அடிப்படையில் விற்பனைக்கு தயாராக உள்ளன. இதன் வாயிலாக அரசு தனக்கு தேவையான நிதியை திரட்டுவதுடன், இலக்கை அடைய முற்படலாம்.

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை பொறுத்தவரை, அரசின் அனைத்து பங்குகளையும் விற்க உள்ளன. அரசின் 53 சதவீத பங்குகளை விற்கும் நிலையில், கிடைக்கக்கூடிய தொகை சுமார் 32,000 கோடி ரூபாய். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன.

கடந்த சில வருடங்களாக அதிக கடன் மற்றும் நஷ்டத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் திவால் நிலைக்கு தள்ளப்படுகின்றன. இதற்கு தீர்வு காணும் வகையில் அரசும் பங்கு விலக்கல் கொள்கையின் அடிப்படையில் நிறுவனத்தினை விற்க முடிவு செய்துள்ளன.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

ஸ்டேட் வங்கியின் ( இணை வங்கிகளுக்கான ) காசோலை மார்ச் 31 வரை மட்டுமே செல்லுபடியாகும்

ஸ்டேட் வங்கியின் ( இணை வங்கிகளுக்கான ) காசோலை(Cheque Books) மார்ச் 31 வரை மட்டுமே செல்லுபடியாகும்

Cheque Books of SBI associated banks(Merged) valid till march 31,2018

 

பாரத ஸ்டேட் வங்கியுடன் (State Bank of India – SBI) பாரதீய மகிளா வங்கி(BMB) மற்றும் ஸ்டேட் வங்கியின் இணை வங்கிகள்(Associated Banks) கடந்த ஆண்டு ஒன்றாக இணைக்கப்பட்டது. அதன் படி, அனைத்து இணை வங்கிகளும் SBI வங்கியின் கீழ் செயல்பட்டு கொண்டிருக்கிறது. SBI நாட்டின் மிகப்பெரிய கடனளிக்கும் வங்கியாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ஏற்கனவே SBI ன் இணை வங்கிகளாக இருந்த State bank of Travancore, State bank of Mysore, State bank of Bikaner and Jaipur, State bank of Hyderabad மற்றும் State bank of Patiala வங்கிகள் ஒன்றாக கடந்த 2017 ஏப்ரல் மாதத்தில் இணைக்கப்பட்டது. தற்போது வரை இந்த இணை வங்கிகள் வழங்கும் காசோலைகளையே அதன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

 

SBI ன் கீழ் இணை வங்கிகள் செயல்படுவதால், இணை வங்கிகளில் பயன்படுத்தப்படும் காசோலை புத்தகங்கள் (Cheque Books) வரும் மார்ச் 31, 2018   உடன் முடிவடைவதாகவும், அதன் பிறகு SBI ன் புதிய காசோலையை மட்டுமே பயன்படுத்த முடியும் எனவும் SBI நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் இணை வங்கிகளில் இதுவரை இருந்து வந்த காசோலை வரும் 31, மார்ச் மாதத்துடன் ரத்து செய்யப்படுகிறது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

 

SBI சார்பாக தனது இணை வங்கி வாடிக்கையாளர்களுக்கு புதிய காசோலையை ஏற்கனவே வழங்கி வருகிறது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் தங்களது பழைய பயன்படுத்தாத காசோலைகளை வங்கியிடம் கொடுத்து விட்டு, புதிய முறைக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. பழைய காசோலை ரத்துக்கான காலக்கெடுவை ஏற்கனவே SBI இரு முறை (September and December 2017) நீட்டித்துள்ளது கவனிக்கத்தக்கது.

 

இணை வங்கிகள் இணைப்புக்கு பிறகு, SBI வங்கி தனது 1300 கிளைகளுக்கு IFSC (Indian Financial System Code) என்று சொல்லப்படும் இந்திய நிதியமைப்பு குறியீட்டையும், கிளைகளின் பெயரையும் மாற்றியமைத்தது. இணை வங்கிகளின் வாடிக்கையாளர்கள் SBI இணையதளத்தில் புதிய காசோலைக்காக விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.

 

மேலும் மற்ற முறைகளாக SBI மொபைல் பேங்கிங் (Mobile Banking), அருகிலுள்ள ATM மற்றும் வங்கி கிளைகளையும் அணுகி புதிய காசோலை புத்தகத்தை பெற்று கொள்ளும்படி கூறியுள்ளது.

 

புதிய காசோலை பெறும் வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய வங்கிக்கிளையின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணை பயன்படுத்தலாம் எனவும், அதே நேரத்தில் ஆன்லைன் பேங்கிங் (Internet Banking) முறைக்கு புதிய மின்னஞ்சல் முகவரியை கொடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

கடனுக்கான வட்டி குறைப்பு – 8.65 % – SBI

 

SBI Loan Interest rate at 8.65 % – Cut rate by 30 basis points ( Jan 1, 2018) – State Bank of India

 

கடனுக்கான வட்டி குறைப்பு – 8.65 % – State Bank of India

 

  • பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India) வாடிக்கையாளர்களுக்கான கடன் வட்டி விகிதத்தை 0.30 % குறைத்து 8.65 % ஆக அறிவித்துள்ளது.

 

  • புத்தாண்டு தின பரிசாக வங்கி வாடிக்கையாளருக்கு இந்த செய்தி அமைந்துள்ளது.

 

  • ஏற்கனவே பணவீக்க விகிதம் கட்டுக்குள் உள்ளதால் மத்திய ரிசர்வ் வங்கி (RBI), வங்கிகளுக்கான கடன் வழங்கும் வட்டி விகிதத்தை கடந்த சில காலாண்டுகளில் குறைத்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதனை சார்ந்து ரிசர்வ் வங்கியும், வங்கிகள் வாடிக்கையாளர் பலனை முழுமையாக தரும்படி கூறியுள்ளது.

 

  • ஸ்டேட் வங்கியின் இந்த 8.65 % கடனுக்கான வட்டி விகிதம் Jan 1, 2018 முதல் அமல்படுத்தப்படும். இந்த வட்டி குறைப்பு மூலம் கடன் பெற்ற  சுமார் 80 லட்சம் பேர்  பலனை அனுபவிப்பர் எனவும், கடன் பெறுகின்ற புதிய வாடிக்கையாளர்களுக்கு பரிசீலனை கட்டணத்திலும் சலுகை தர போவதாக அறிவித்துள்ளது.

 

  • இந்த வட்டி விகித தாக்கம், வங்கியில் வைப்பு தொகை வைத்திருப்போருக்கு சாதகமாக அமையாமல் போகலாம். பொதுவாக வங்கிகள் கடனுக்கான வட்டியை குறைக்கும் போது, வைப்பு தொகை மற்றும் இதர சேமிப்புக்கான வட்டியினை குறைக்கலாம்.

வங்கிகளின் வட்டி விகிதங்களை அறிவோம்

 

நன்றி, வர்த்தக மதுரை

உங்களுடைய பகிர்வுகளுக்கு:

 

https://www.facebook.com/varthagamadurai/

https://www.twitter.com/varthagamadurai/

contact@varthagamadurai.com