பரஸ்பர நிதியுடன் (Mutual Funds) ஆதார் எண்ணை இணைப்பது எப்படி ?
How to update Aadhaar online for Mutual Funds ? (Aadhaar Linking)
பயோமெட்ரிக் (Biometric) மற்றும் மக்கள் தொகை தரவை அடிப்படையாக கொண்டு 12 இலக்க தனியுரிமை அடையாள எண்ணாக(12 Digit) உருவாக்கப்பட்டுள்ள ஆதார் (Aadhaar) இன்று ஒவ்வொரு தகவல் நடைமுறைக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அனைத்து இந்திய குடியுரிமை உள்ளவர்களுக்கும் வழங்கப்படும் உரிமை எண்ணாகவும் உள்ளது. நீங்கள் வங்கி கணக்கு, பான் அட்டை, பங்குச்சந்தை, பரஸ்பர நிதி என ஒவ்வொரு செயல்முறைக்கும் கணக்கு துவங்கும் போது ஆதார் என்பது கட்டாயம்.
வங்கிக்கணக்கு, கைபேசி எண்களுக்கான ஆதார் இணைப்பை நாம் பெரும்பாலும் நேரிடையாகவே பதிவு செய்திருப்போம். ஆனால் பெரும்பாலும் நாம் தவற விடுவது மற்றும் மறப்பது நமது பரஸ்பர நிதிக்கான இணைப்பை தான். நாம் பரஸ்பர நிதியில்(Mutual Funds) பொதுவாக மாதாந்திர முதலீடு என்று சொல்லப்படும் SIP (Systematic Investment plan) திட்டத்தை தான் தேர்ந்தெடுத்திருப்போம். இதன் மூலம் நமது வங்கிக்கணக்கில் இருந்து பரஸ்பர நிதிக்கு தானியங்கி சேவையாக பண பரிமாற்றம் நடைபெறும். இதன் காரணமாக நாம் பெரும்பாலும் பரஸ்பர நிதி சார்ந்த குறுஞ்செய்தி, மின்னஞ்சலை பார்க்க தவறி விடுவோம்.
( Read this post after the advertisement… )
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ஏற்கனவே பணமோசடி தடுப்பு சட்டம் (Prevention of Money Laundering Act -PMLA) Rules 2017 ன் படி பரஸ்பர நிதி கணக்குடன் ஆதாரை இணைப்பது அவசியம் என கூறப்பட்டுள்ளது. உங்களுக்கு அருகில் உள்ள பரஸ்பர நிதி நிறுவனத்தை (முதலீடு செய்த நிறுவனம்) அணுகலாம் அல்லது இணையத்தில் ஆதார் எண்ணை பதிவு செய்யலாம்(Communicate with Nearest branch or update online). இங்கே நாம் ஆன்லைனில் பதிவு செய்வது பற்றி பார்ப்போம்.
நினைவில் இருக்கட்டும், பரஸ்பர நிதியுடன் ஆதார் இணைப்புக்கான கடைசி தேதி – வரும் மார்ச் மாதம் 31,2018 (31st march, 2018).
பொதுவாக பரஸ்பர நிதி சார்ந்த உங்களின் தகவல்கள் பரஸ்பர நிதி வசம் பராமரிக்கப்படாது. அதனை RTA (Registrar and Transfer Agent) போன்ற அமைப்புகள் தான் பராமரித்து தகவல்களை சேமித்து வைக்கும். இணையத்திலும் அது போன்ற அமைப்புகள் தான் உங்களுடைய ஆதார் தகவல்களை பெறுகிறது. RTA ஆக தற்போது CAMS, UTI, Karvy, Franklin பரஸ்பர நிதிக்கு உள்ளன. அவற்றின் இணைய தளத்தில் நாம் நமக்கான ஆதார் தகவலை பதிவு செய்யலாம்.
CAMS Online
கீழே கொடுக்கப்பட்ட இணைய தளத்தில் நீங்கள் உங்களுக்கான பரஸ்பர நிதி கணக்குடன் ஆதாரை இணைக்கலாம். CAMS அமைப்பு பெரும்பாலான பரஸ்பர நிதி நிறுவனத்துக்கான தகவல்களை பராமரிக்கிறது. ( SBI Mutual Fund, ICICI Prudential, Birla Sunlife, HDFC, DSP blackrock, IDFC, IIFL, PPFAS, Tata mutual fund, Kotak, HSBC, L and T, Shriram, Mahindra)
CAMS இணைய தளத்தில் நீங்கள் செய்ய வேண்டியது – உங்கள் பான் எண் (PAN), பரஸ்பர நிதி கணக்கு (Folio Account number), மற்றும் ஆதார் எண்ணை (Aadhaar) உள்ளீடு செய்யவும். உங்களுக்கான சந்தேகங்களையும் நீங்கள் அதே பக்கத்தில் அறியலாம்.
FAQ on Aadhaar Linking process – CAMS
Karvy Computershare:
கார்வி நிறுவனமும் பரஸ்பர நிதிக்கான தகவல்களை பராமரிக்கிறது. கார்வி நிறுவனம் கையாளும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் – Axis mutual fund, UTI, Canara robeco, Mirae asset, Motilal oswal, Reliance, Quantum, BOI Axa, Invesco, DHFL மற்றும் இன்னும் பிற நிறுவனங்கள். அதற்கான பதிவை செய்ய கீழ்கண்ட இணைய தளத்தை பாருங்கள்.
Karvy – Link your Aadhaar with mutual fund
மேலே நாம் சொன்ன இரு தளத்திலும் உங்கள் பரஸ்பர நிதிக்கான ஆதாரை பதிவு செய்வதுடன், உங்கள் நடப்பு நிலையையும் (Aadhaar linking status for mutual fund) அதே தளத்தில் அறிந்து கொள்ளும் வசதி உண்டு. நாம் சொன்ன இரு தளத்தில் பதிவு செய்ய இயலாதவர்கள் அல்லது உங்கள் பரஸ்பர நிதிக்கான நிறுவன பெயர் இல்லையென்றால் நீங்கள் அந்த நிறுவனத்திற்கான அதிகாரபூர்வ வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். பதிவின் போது உங்களுக்கான OTP கைபேசியில் வரலாம். அதனால், பரஸ்பர நிதியில் இணைக்கப்பட்ட கைபேசி எண்ணை வைத்திருப்பது அவசியம்.
ஆதார் இணைப்பு – பரஸ்பர நிதி சம்மந்தமான உங்கள் சந்தேகங்களுக்கு, வர்த்தக மதுரைக்கு நீங்கள் மின்னஞ்சல் (contact at varthagamadurai.com) அனுப்பலாம்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை.