இ – வாலட் பயன்பாடு – கே. ஒய். சி. கட்டாயம்
KYC Mandatory for Digital Wallet accounts
பண மதிப்பிழப்புக்கு (Demonetisation) பிறகு, இ – வாலட் (E-Wallet) என்ற மின்னணு சாதனம் சார்ந்த பணப்பை கணக்குகள் இந்தியாவில் அதிகமானது. அதனை தொடர்ந்து வாலட் மூலம் பண பரிவர்த்தனைகள் எளிமையாக்கப்பட்டது. ஒருவர் தனது ஸ்மார்ட் போனை கொண்டு இணைய உதவியுடன் எந்தவொரு பொருட்களையும் வாங்குவது எளிதானது.
இ – வாலட் முறையால் கணினி வழியான பரிவர்த்தனைகளை விட ஸ்மார்ட் போன் மூலமான வர்த்தகம் அதிகமானது. டிஜிட்டல் வாலட் கணக்குகளுக்கு என இதுவரை எந்த விதிமுறையும் இல்லாமல் இருந்து வந்தது. வாலட் கணக்கை தொடங்குவதற்கு உங்களுடைய கைபேசி எண் மட்டும் போதுமானதாக இருந்தது. இந்நிலையில் பரிவர்த்தனைகளின் விகிதம் அதிகரித்ததனால், பாரத ரிசர்வ் வங்கி (Reserve Bank of India -RBI) ‘ இ – வாலட்’‘ களுக்கு KYC (Know your customer / client) என்னும் வாடிக்கையாளரை அறியும் ஒப்பந்தத்தை கட்டாயமாக்க முடிவு செய்தது. இதற்கான கால கெடு பிப்ரவரி 28 ம் தேதியுடன் முடிந்து விட்டதாகவும் அறிவித்துள்ளது.
Get up to Rs.1000 cashback! Link your bank account and do your first money transfer on #PhonePe.
பிப்ரவரி 28, 2018 க்கு பிறகு இ – வாலட் களை பயன்படுத்துபவர்கள் கட்டாயம் KYC நடைமுறைகளை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், சமர்பிக்காதவர்களுக்காக, அவர்கள் வாலட் கணக்கில் உள்ள தொகைக்கு இணைய ஷாப்பிங் (E-commerce) செய்து கொள்ளலாம் அல்லது ஒரே பரிவர்த்தனையில் தங்கள் வங்கிக்கு பணத்தை மாற்றி கொள்ளலாம்(Transfer money to bank account) என கூறியுள்ளது.
எனவே இனி மேல், வாலட் கணக்குகள் மற்றும் அதன் பண பரிவர்த்தனைகளுக்கு KYC ஒப்பந்தம் அவசியமாகும். இந்த நடைமுறையை பின்பற்றாதவர்கள் இனி தங்கள் வங்கி கணக்கிலிருந்து வாலட் கணக்குக்கு பணத்தை மாற்ற முடியாது. நாளுக்கு நாள் பெருகி வரும் இணைய வணிகத்தால், இணைய வழி பரிவர்த்தனைகளின் மதிப்பு வரும் 2023 ல் 1 லட்சம் கோடி ( 1 Trillion) அமெரிக்க டாலராக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 2017 ல் வாலட் மூலமான பரிவர்த்தனைகளின் மதிப்பு ரூ. 12,500 கோடி என ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது. இதுவே பண மதிப்பிழப்புக்கு முன்னர் ரூ. 3385 கோடியாக இருந்தது. வாலட் சந்தையில் முதலிடத்தை Paytm தக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. Mobikwik, PhonePe, Tez, Amazon pay, Oxigen என பல வாலட் சேவைகள் உள்ளன. தற்போது வாட்ஸ் அப் நிறுவனமும் தனது சேவைகளை ஆரம்பித்துள்ளது.
( Read this post after the advertisement… )
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இருப்பினும் இந்தியாவை பொறுத்தவரை வாலட் சேவை நிறுவனங்கள் இன்னும் லாபம் ஈட்டியதாக தெரியவில்லை. சிறு தொழில்முனைவோர்களிடமும் இன்னும் இந்த சேவை முழுவதுமாக பரவலாக்கப்படவில்லை. எனவே KYC என்னும் நடைமுறை வங்கி கணக்கை போலவே, டிஜிட்டல் வாலட் களுக்கும் பொருந்தும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை