சென்செக்ஸ் பங்குகளுக்கு பரிவர்த்தனை கட்டணம் இனி இல்லை – மும்பை பங்குச்சந்தை
No Transaction charges for BSE SENSEX 30 Stocks
இந்தியாவில் பிரபலமான பங்குச்சந்தையாக தேசிய பங்குச்சந்தையும், மும்பை பங்குச்சந்தையும் திகழ்கின்றன. தேசிய பங்குச்சந்தை ‘Nifty 50’ என்ற குறியீட்டாலும், மும்பை பங்குச்சந்தை ‘Sensex 30’ என்ற குறியீடு மூலமும் சந்தையில் வர்த்தகமாகின்றன. சந்தை மதிப்பு அதிகமாக உள்ள நிறுவனங்களே இந்த Nifty 50 நிறுவனங்களாகவும், மும்பை BSE Sensex 30 நிறுவனங்களாகவும் அமைகின்றன.
பங்குச்சந்தையில் பங்கு வாங்குவதும், விற்பதும் பங்குத்தரகர் வாயிலாகவே நடைபெறுகிறது. இதற்கு தரகு நிறுவனங்கள் தங்களின் தரகு கட்டணம் போக, பங்குச்சந்தை பரிவர்த்தனை கட்டணத்தையும் வசூலிக்கிறது. இந்த பரிவர்த்தனை கட்டணம் (Transaction Charges) அந்தந்த பங்குச்சந்தை அமைப்பால் நிர்ணயிக்கப்படுகிறது. இது போக பங்கு பரிவர்த்தனை வரி (Securities Transaction Tax -STT), முத்திரை வரி(Stamp Duty), வருவாய் கட்டணங்கள் (SEBI Turnover charges) என பங்கு வர்த்தகத்திற்கு கட்டணங்கள் வசூல் செய்யப்படுகிறது.
( Read this post after the advertisement… )
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தேசிய பங்குச்சந்தைக்கும், மும்பை பங்குச்சந்தைக்குமான பரிவர்த்தனை கட்டணங்கள் வெவ்வேறாக அமையும். பொதுவாக மும்பை பங்குச்சந்தையை விட தேசிய பங்குச்சந்தையில் பரிவர்த்தனை கட்டணங்கள் சற்று அதிகமாகும். அதே நேரத்தில் மும்பை சந்தையிலும், தேசிய பங்குச்சந்தையை காட்டிலும் பங்கு நிறுவனங்கள் அதிகமாக இருக்கும். இந்நிலையில் மும்பை பங்குச்சந்தை தனது பங்குகளுக்கான பரிவர்த்தனை கட்டணத்தில் சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.
அதாவது, மும்பை சென்செக்ஸ் (BSE Sensex 30 stocks) குறியீட்டில் உள்ள 30 நிறுவனங்களுக்கான பரிவர்த்தனை கட்டணம் ரத்து செய்யப்படுவதாகவும், வரும் மார்ச் 12 முதல் (March 12, 2018) சென்செக்ஸ் 30 நிறுவனங்களுக்கு பரிவர்த்தனை கட்டணம் இல்லை என்றும் அறிவித்துள்ளது.
இந்த சலுகை சில்லரை முதலீட்டாளரை கவரும் வகையிலும், சந்தை மதிப்பு அதிகமுள்ள நிறுவனங்களில் வர்த்தகம் அதிகம் நடைபெறும் எனவும் மும்பை சந்தை கூறியுள்ளது. மும்பை பங்குச்சந்தையில் தற்போதுள்ள பரிவர்த்தனை கட்டணம் – 50 பைசாவிலிருந்து ரூ. 1.50 வரை (0.5 – 1.50) உள்ளது. 1 லட்சத்திற்கும் குறைவான பங்கு வர்த்தகத்திற்கு ரூ. 1.50 ம், 20 லட்சத்திற்கு மேற்பட்ட பங்கு வர்த்தகத்திற்கு 50 பைசாவாகவும் பரிவர்த்தனை கட்டணம் உள்ளது.
இந்த சலுகையால், மும்பை பங்குச்சந்தைக்கு எவ்வளவு இழப்பு ஏற்படலாம் என்ற தகவல் சொல்லப்படவில்லை. இருப்பினும் குறைந்த அளவிலான பங்குகளை வாங்கி முதலீடு செய்வோருக்கு இந்த அறிவிப்பினால் பலன் ஏதுமில்லை. அதே சமயத்தில், தினசரி பங்கு வர்த்தகத்தில் (Day Trading) ஈடுபடுவோருக்கு சாதகமாக இருக்கும்.
BSE – மும்பை பங்குச்சந்தையின் மற்ற கட்டணங்கள் பற்றி அறிய…
Equity Segment Transaction Fees – List
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை