ரியல் எஸ்டேட் முதலீட்டை போல பங்குகளை நீண்ட கால சொத்துக்களாக மாற்றுவது எப்படி ?

ரியல் எஸ்டேட் முதலீட்டை போல பங்குகளை நீண்ட கால சொத்துக்களாக மாற்றுவது எப்படி ?

How to convert Shares into Long term Assets like Real Estate Property Investing ?

 

பங்குச்சந்தையில் வெறுமனே அவ்வப்போது பங்குகளை வாங்கி விற்காமல், அதனை நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யும் போது, நாம் சிறப்பான செல்வத்தை சேர்க்க முடியும். பொதுவாக வங்கி டெபாசிட், அஞ்சலக சேமிப்பு ஆகியவை சிறு சேமிப்பு திட்டங்களாக சொல்லப்படுகின்றன. இதனால் இவற்றின் மூலம் கிடைக்கக்கூடிய வருவாயும் குறைவாக தான் இருக்கும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

சிறு சேமிப்பை மட்டுமே ஒருவர் நீண்ட காலத்திற்கு நம்பியிருந்தால், எதிர்பார்த்த செல்வத்தை உருவாக்க முடியாது. சிறு சேமிப்பு திட்டம் என்பது குறைந்த வருவாய் உள்ளவர்களும் சேமிக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டவையே. மேலும், வருங்காலத்தில் விலைவாசி உயர்வையும் சமாளிக்க முடியாது. சேமிப்பு என்பவை குறைந்த அளவு ரிஸ்க் தன்மை கொண்டவை. அதனால் தான், அவற்றின் வட்டி விகிதமும் குறைவாக அமையும்.

 

முதலீடு என்பது எப்போதும் ரிஸ்க் தன்மை அதிகம் கொண்டது. எனினும், முதலீட்டை பரவலாக்குவதன் மூலம், நாம் ரிஸ்க் தன்மையை பரிமாற்றி நீண்ட காலத்தில் நல்ல வருவாயை ஈட்டலாம். முதலீடு என்பதற்கு சிறந்த உதாரணமாக தங்கம், வெள்ளி, ரியல் எஸ்டேட் (வீட்டு மனை), பரஸ்பர நிதிகள், பங்குகள் மற்றும் தொழிலை சொல்லலாம். முதலீட்டில் ஏற்ற – இறக்கம் என்பது எப்போதும் இருக்கும். அவ்வாறு இருக்கும் காரணத்தால் தான், நாம் நீண்ட காலத்தில் பணத்தை பெருக்க முடியும். இல்லையெனில், அவையும் சேமிப்பு திட்டத்தை போலவே குறைந்த வருவாயை கொண்டிருக்கும்.

 

உதாரணமாக நாம் தங்கத்தை எடுத்து கொள்வோம். தங்கத்தின் விலை தினமும் ஏற்ற-இறக்கங்களுக்கு உட்பட்டது. தங்கத்தில் முதலீடு செய்யும் போது, நமது முதலீட்டு குணநலன்கள் எவ்வாறு அமையும் என்பது நமக்கு தெரியும். விலை குறையும் போது, தங்கத்தை(Gold) வாங்கி வைத்து கொள்வோம். விலை அதிகரிக்கும் போது, நாம் உடனடியாக அதனை விற்க போவதில்லை. ஏனெனில், நம்மை பொறுத்தவரை தங்கம் ஒரு நீண்ட கால முதலீடு. அவசர தேவைக்கு மட்டுமே அதனை அடகு வைக்கவோ, சிறிய அளவில் விற்காகவோ செய்வோம்.

 

இதனை போலவே, ரியல் எஸ்டேட் முதலீடும். இன்று ஒரு வீட்டு மனையை குறைந்த விலையில் வாங்கி, நாளை அதனை விற்க நாம் முடிவெடுக்க மாட்டோம். ரியல் எஸ்டேட் துறையை சார்ந்த தொழிலதிபர்கள், ஏஜெண்டுகள் வேண்டுமானால் அதனை செய்யலாம். அவர்களும் ஆவணங்களை பதிவு செய்வதற்கு சிறிது காலம் எடுத்து கொள்ள வேண்டும். நாம் வாங்கிய வீட்டு மனையை, பின்னொரு காலத்தில் நமக்கு தேவையான சொத்தாக நாம் கருதலாம். இல்லையெனில், பிற்காலத்தில் அதனை விற்று பணம் பண்ணலாம், அதனை நமது தேவைக்கும் பயன்படுத்தலாம்.

 

ஆனால் பங்குகளில் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம். பங்குகளும், பங்குச்சந்தையும் வேற்று கிரக வாசிகள் அல்ல. அவையும் ஒரு தொழில் தான். தங்கத்தின் விலை நம் கையில் இல்லை. அமெரிக்காவின் டாலர் மதிப்புக்கு ஏற்ப, அவற்றின் விலையும் மாறுபடும். ரியல் எஸ்டேட்(Real Estate Property Value) விலையும் நம் நம்பிக்கையில் அல்ல. அவை அரசின் கொள்கைகளிலும், சந்தையில் உள்ள வளர்ச்சி தேவையை பொறுத்தே அமையும். பங்குகளின் விலை தொழில் செய்யும் நிறுவனத்தின் திறனை பொறுத்து மாறுபடும். 

 

பொதுவாக முதலீடு என்பது மூன்று வகையான விஷயங்களை கொண்டிருக்கும் – ரிஸ்க் தன்மை(Risk), பணவீக்கத்தை தாண்டிய வருமானம்(Beat Inflation), வரி சலுகைகள்(Tax Concession). நீண்ட கால முதலீடு மற்றும் சொத்துக்களுக்கு மட்டுமே அரசு வரி சலுகைகளை அறிவிக்கும். ரிஸ்க் தன்மையை உணர்ந்து, நீண்ட காலத்தில் அதனை பரவலாக்கும் போது வருவாயும் அதிகமாக இருக்கும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பொருளாதாரத்தின் இரு கண்கள்:

 

தேவை – உற்பத்தி(Demand & Supply) மற்றும் கடன் வழங்குதல் – பெறுதல் (Lending & Borrowing) இவ்விரண்டும் பொருளாதாரத்தின் இரு கண்கள் எனலாம். இந்த இரு காரணிகளை நாம் எந்தவொரு காலத்திலும் தவிர்க்க இயலாது. தேவையில்லாத உற்பத்தியும், உற்பத்தியில்லாத தேவையும் எந்த பயனும் இல்லை. இதனை போலவே ஒருவர் கடன் கொடுக்க முன்வந்தால் மட்டுமே, மற்றொருவர் அதனை கடனாக பெற்று தொழில் புரிய முடியும். அதன் மூலம் வேலைவாய்ப்புகளும், பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும். இதன் காரணமாக தனிமனித வாழ்வில் நிதி மேம்படும்.

 

பங்குகளில் நீண்ட கால முதலீட்டிற்கு தயாராகும் போது, சரியான நிறுவனத்தை சரியான விலையில்(Choose the Right Stock at Fair Price) அடையாளம் காண்பது முக்கியம். நாம் அதனை பற்றிய விளக்கத்தை நமது தளத்தில் கொடுத்துள்ளோம். நாம் முதலீடு செய்யப்போகும் பங்குகளின் தொழில் நமக்கு புரிகிறதா என்பதை கவனிக்க வேண்டும். புரியவில்லை என்றால், அதனை தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பு நமக்கு எங்கேனும் கிடைக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும்.

 

பங்குச்சந்தை  முதலீடு – 14 நாட்கள்  இலவச பயிற்சி 

 

உங்களால் புரிந்து கொள்ள முடியாத பங்குகளில் முதலீடு செய்ய வேண்டாம். நல்ல இடம், இன்னும் 5 வருடங்களில் மதிப்பு இரண்டு மடங்காகும் என தரகர் சொன்னார். ஆனால், ஸ்மார்ட் சிட்டி வரப்போகிறது என, அரசாங்கம் குறைந்த விலையை நிர்ணயித்து விட்டதே என மனை வாங்கிய பின் யோசிக்க கூடாது. வீட்டுமனை வாங்கும் போது, நமது எச்சரிக்கை உணர்வு எவ்வாறு உள்ளதோ, அதனை போலவே பங்குகளிலும், பிற முதலீட்டிலும்.

 

நாம் வாங்கிய பங்கு நிறுவனத்தின் தொழில் எதிர்கால சவால்களை சமாளிக்க கூடிய வகையில் இருக்குமா, தொழில்நுட்ப மாற்றத்திற்கு ஏற்ப நிறுவனம் மாற தயாரானால், அதற்கான முதலீடு நிறுவனத்திடம் கைவசம் உள்ளதா என்பதனை ஆராய வேண்டும். நிறுவனத்தின் தொழில் தொடர் வளர்ச்சியை பெறுமா, அடுத்த 20 ஆண்டுகளுக்கு அதனுடைய இலக்கு மற்றும் திறன் என்ன என்பதும் அவசியம்.

 

அதிவேக வளர்ச்சி உள்ள நிறுவனங்களை தேர்ந்தெடுக்க வேண்டாம். அடுத்த 20 வருடங்களில் ஆண்டுக்கு 10-15 சதவீத தொடர் வளர்ச்சியை கொண்டிருக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்தால் போதும். இதனை கண்டறிய கடந்த 10-20 வருட கால நிதி அறிக்கையை உற்று நோக்குங்கள். 

 

நிறுவனத்தை பற்றிய செய்தி அடிக்கடி ஊடகங்களில் வராமல் இருக்க வேண்டும். செய்தியினால் உற்சாகமடையும் பங்குகளின் விலை, பின்பு அதே செய்தியால் வீழ்ச்சி அடையவும் செய்யலாம். நம்பகமான தொழில் மற்றும் நிறுவனமாக இருக்கும் போது, அவை ஊழியர்களை மட்டுமல்ல முதலீட்டாளர்களின் நலனையும் பாதுகாக்கும்.

 

நிறுவனம் தனக்கு கிடைத்த லாபத்தை வெறும் டிவிடெண்ட் தொகையாக(Dividend) மட்டும் கொடுக்காமல், தொழிலுக்கான அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்க முதலீடு செய்கிறதா என பார்க்க வேண்டும். பெரும் செல்வத்தை உருவாக்க நல்லதொரு தொழிலை (பங்குகள்) தேர்ந்தெடுப்பது அவசியம். பங்குகளில் கண்ட லாபத்தை மறுமுதலீடு செய்ய தயாராகுங்கள். இல்லையெனில், அதனை சரியான வழியில் பயன்படுத்துங்கள். 

 

ரிஸ்க் நிர்வாகம்(Risk Management), தொடர் முதலீடு மற்றும் பொறுமையே(Patience) நீண்ட கால செல்வத்தை உருவாக்கும் சாதனமாகும். இவை பங்கு முதலீட்டிலும் நீண்ட கால சொத்தாக மாற்றும் போது கிட்டும். மேலே சொன்னவற்றை உங்களால் கடைபிடிப்பது கடினம் என யோசித்தால், உங்களுக்கான சிறந்த நிதி ஆலோசகரை வைத்து கொண்டு முதலீடு செய்யுங்கள். அதுவும் சிரமம் எனில், பரஸ்பர நிதி நிறுவனங்கள் வழங்கும், பங்கு சார்ந்த திட்டத்தினை சரியாக தேர்ந்தெடுங்கள்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

  

தொல்லையில்லா வாழ்வுக்கு தொடர் முதலீடு !

தொல்லையில்லா வாழ்வுக்கு தொடர் முதலீடு !

SIP Investing for Hassle free Living

எஸ்.ஐ.பி.(Systematic Investment Plan) எனப்படும் தொடர் முதலீட்டு முறையில் பெரும்பாலானவர்கள் செய்யும் தவறு, தங்கள் நிதி இலக்குகளை அடையும் வரை தொடர்ச்சியாக முதலீடு செய்வதில்லை. இதனால் நாம் நிர்ணயித்த இலக்கினை அடைய முடியாமல் போகலாம் அல்லது அடைவதில் தாமதம் ஏற்படலாம்.

 

இந்த நிதி தவறு, பின்னாளில் குடும்பத்தின் நிதி நிலைமையையும் பாதிக்கலாம். நாம் ஒரு இலக்கை(Goal) நிர்ணயித்து விட்டு, அதற்கான தொடர் வேலைகளை செய்யாமல் இருக்கும் போது அதனால் ஏற்படும் விளைவுகளை நாம் குறுகிய காலத்தில் உணர வாய்ப்பில்லை. அதனால் தான் இலக்குகள் இளமை காலத்தில் நிர்ணயிக்கப்படுகிறது. இளமை காலத்தில் நாம் சேமிக்கும் தொகை சிறிய அளவில் இருந்தாலும், நமது இலக்கை நோக்கி பயணிக்கையில் அந்த தொகை வளத்தை உருவாக்கும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நாம் கடன் வாங்கும் போது, எவ்வாறு தவணை தொகையை சரியாக ஒவ்வொரு மாதமும் செலுத்துகிறோமோ, அதே போல முதலீட்டையும் தவறாது செய்வது, நமக்கு நாமே செய்யும் கடமை. தொடர் முதலீட்டால் பயன் பெறப்போவது நாமும், நமது குடும்பமும் மட்டுமே. நம்மை நாமே மகிழ்வித்து கொள்வது தான் தொடர் முதலீட்டின் ரகசியமே.

 

இதனை ஒரு உதாரணத்தின் மூலம் நாம் காண்போம். உங்களுக்கு 15 வருடங்களுக்கு பிறகு ஒரு கோடி ரூபாய் கார்பஸ்(Corpus) தொகை தேவைப்படுகிறது என வைத்து கொள்வோம். நீங்கள் செய்ய வேண்டிய மாதாந்திர முதலீடு (SIP) ரூ. 14,800 /- இதற்கு நீங்கள் 15 சதவீதம் வருவாய் தரக்கூடிய முதலீட்டை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படியெனில், அது பரஸ்பர நிதி முதலீட்டில் மட்டுமே தற்போதைய நிலையில் சாத்தியமாகும். 

 

11 சதவீத வட்டி வருவாய் எனில், நீங்கள் அடுத்த 15 வருடங்களுக்கு மாதாமாதம் 21,800 ரூபாயை முதலீடு செய்ய வேண்டும். இதுவே 7 சதவீதம் மட்டுமே தரக்கூடிய முதலீட்டு சாதனமாக இருக்கும் போது, உங்கள் மாதாந்திர எஸ்.ஐ.பி. தொகை 31, 400 ரூபாய். என்ன சற்று மலைப்பாக இருக்கிறதா ? மாதம் ரூ. 50,000 மற்றும் ஒரு லட்சம் என முதலீடு செய்பவர்களும் நம் ஊரில் உண்டு. 

 

பொதுவாக எஸ்.ஐ.பி. முறையில் மாதாந்திர முதலீட்டை மேற்கொள்ளும் போது, நமக்கான முதலீட்டு காலத்தை நினைவில் கொண்டிருப்பது அவசியம். இலக்கிற்கான காலம் குறுகிய காலமாக இருக்கும் போது, செய்ய வேண்டிய மாத முதலீட்டு தொகை அதிகமாக இருக்கும். அதே வேளையில், இலக்கிற்கான காலம் நீண்ட காலமாக இருக்கும் நிலையில், நமது மாதாந்திர முதலீடும் குறைவாக அமையும். இது நமது இலக்கிற்கான தொகையை பொறுத்து மாறுபடும்.

 

உதாரணமாக எனக்கு 20 வருடங்களில் ஒரு கோடி ரூபாய் கார்பஸ் கிடைத்தால் பரவாயில்லை என்றால், உங்களது மாதாந்திர முதலீடு 6,600 ரூபாய் மட்டுமே. இதுவே 15 வருடங்கள் எனும் போது தான் அது 14,800 ரூபாயாக (15 சதவீத வருவாயில்) உள்ளது. அதனால் முதலீடு செய்யும் தொகையை காட்டிலும், இடைவிடாமல் தொடர்ச்சியாக முதலீடு செய்வதே அவசியம். இவை அனைத்தும் கூட்டு வட்டியின் மகிமையே !

 

எந்தவொரு முதலீட்டையும் மேற்கொள்ளும் போது நான்கு விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். இலக்கிற்கான காரணம் அல்லது பெயர்(Goal Name), இலக்கிற்கான தொகை(Goal Amount), இலக்கிற்கான காலம்(Period) மற்றும் எதிர்பார்க்கும் வருமான விகிதம்(Expected Returns). இங்கே வருமான விகிதம் என்பது நமக்கு கிடைக்கப்பெறும் வட்டி வருவாய். பெரும்பாலான நிதி இலக்குகளில் தாக்கத்தை ஏற்படுத்துவது இந்த வட்டி வருவாய் தான். எனவே சரியான முதலீட்டு சாதனத்தை தேர்ந்தெடுப்பது நல்லது.

 

உதாரணமாக நீங்கள் மாதாமாதம் 700 ரூபாயை, அடுத்த 20 வருடங்களுக்கு முதலீடு செய்கையில் உங்களுக்கு கிடைக்கும் தொகை ரூ. 10 லட்சம். இதுவே 30 வருடங்களாக இருப்பின், உங்களுக்கு கிடைக்கப்பெறும் தொகை ரூ. 49 லட்சம். கூடுதலாக பத்து வருடங்களுக்கு மட்டுமே தொடர்ச்சியாக முதலீடு செய்யும் போது, நமக்கு கிடைக்கும் தொகையும் அதிகமாக உள்ளது. 

 

மற்றுமொரு உதாரணம் – நீங்கள் மாதாமாதம் ரூ. 10,000 /- ஐ எஸ்.ஐ.பி. முறையில் அடுத்த 20 வருடங்களுக்கு முதலீடு செய்ய முடிவு செய்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ச்சியாக 20 வருடங்களுக்கு முதலீடு செய்கையில், 15 சதவீத வருவாய் எனும் போது, முடிவில் உங்களுக்கு 1.51 கோடி ரூபாய் கிடைக்கும். ஆனால் தொடர் முதலீடு செய்வது முக்கியம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

உங்கள் நண்பர் ஒருவருக்கும் இதே போன்று ஒரு இலக்கு உள்ளது. காலம் மற்றும் முதலீடு செய்யும் தொகையில் எந்த மாற்றமும் இல்லை. அவர் முதல் 5 ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக மாதாமாதம் 10,000 ரூபாயை முதலீடு செய்து வருகிறார். சில காரணங்களால் 6வது வருடம் முழுவதும் அவர் முதலீடு செய்யவில்லை. அதாவது 12 மாதங்கள் அவர் முதலீட்டை தொடரவில்லை. பின்னர் 7வது வருடம் முதல் இலக்கு காலமான 20 வருடங்கள் வரை அவர் முதலீட்டை தொடர்கிறார். 20 ஆண்டுகளுக்கு பிறகு, உங்கள் நண்பருக்கு கிடைக்கும் முதிர்வு தொகை எவ்வளவு ?

 

ஆம், உங்களை விட குறைவே… எவ்வளவு தொகை குறைவு ?

 

உங்களுக்கும், நண்பருக்குமான இடைவெளி 10 லட்சம் ரூபாய் !!!

 

நண்பருக்கு, 20 வருட முடிவில் கிடைக்கப்பெறும் தொகை ரூ. 1.41 கோடி. அவர் உங்கள் தொகையை அடைய இன்னும் சிறிது காலம் முதலீடு செய்ய வேண்டும் அல்லது அவருக்கான இலக்கு நாட்கள் வந்திருக்கலாம். இப்போது இது ஒரு தொல்லையே. 

 

நண்பர் முதலீடு செய்யாமல் விட்ட தொகை ரூ. 1.20 லட்சம் மட்டுமே (12 மாதங்கள் X 10,000/- மாத முதலீடு). ஆனால் அதற்கான இடைவெளி 10 லட்ச ரூபாய் மதிப்பில். இதனால் தான் நாம் தொடர் முதலீட்டின்  அவசியத்தை வலியுறுத்துவது. 

 

முதலீட்டில் நாம் காலத்தை தாமதப்படுத்த முடியாது. நமது குழந்தைகளின் மேற்படிப்பு(Child Education), திருமணம்(Marriage), நமக்கான ஓய்வு காலம்(Retirement) என்பவை குறிப்பிட்ட காலத்தில் நிறைவேற வேண்டியவை. அவற்றில் கால தாமதத்தை ஏற்படுத்தும் போது, அது நமக்கு தான் தொல்லை. எனவே இலக்கினை சரியாக திட்டமிடுங்கள். அதற்கான முதலீட்டை தொடர்ச்சியாக செய்யுங்கள். இலக்கிற்கான கார்பஸ் தொகையை, இடையில் எக்காரணத்திற்காகவும் எடுத்து விடாமல் இருப்பதும் அவசியம்.

தொல்லையில்லா வாழ்வுக்கு மட்டுமல்ல, தொடர் முதலீடு….

 

தொலைநோக்கு பார்வைக்கும் !

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

 

 

 

பான் – ஆதார் எண் இணைப்பிற்கான காலக்கெடு – டிசம்பர் 31, 2019 – இணைப்பது எப்படி ?

பான் – ஆதார் எண் இணைப்பிற்கான காலக்கெடு – டிசம்பர் 31, 2019 – இணைப்பது எப்படி ?

Deadline for PAN – Aadhaar Linking – 31, December, 2019

பான் கார்டு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி தேதி வரும் டிசம்பர் 31ம் தேதி, 2019 என வருமான வரி அலுவலகம் கூறியுள்ளது. வருமான வரி செலுத்தும் வரம்பில் இல்லாதவர்களும் பான் – ஆதார் எண் இணைப்பை ஏற்படுத்துவது அவசியம் என கூறப்பட்டுள்ளது.

சொல்லப்பட்ட தேதிக்குள், இணைக்காத பட்சத்தில் வரும் நாட்களில் வருமான வரி தாக்கல் செய்ய முடியாது. மேலும் நாம் வாங்கிய பான் கார்டு(PAN) எண்ணும் செயலிழக்கப்படும். இந்த இணைப்பை இந்திய குடிமக்கள் (பான் இருப்பு) அனைவரும் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த முறை, பட்ஜெட் தாக்கலில் பான் எண் இல்லையென்றாலும், ஆதார் எண்ணை(Aadhaar) கொண்டு வருமான வரி தாக்கல் செய்யலாம் என சொல்லப்பட்டிருந்தது. பின்பு பான் – ஆதார் இணைப்பிற்கான காலக்கெடு 30, செப்டம்பர், 2019 என சொல்லப்பட்டது. இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டு தற்போது வரும் 31, டிசம்பர், 2019 என நிர்ணயிக்கப்பட்டது.

ஆதார் – பான் எண் இணைப்பை இரண்டு வகைகளில் கையாளலாம். முதல் முறை, வருமான வரி தாக்கல் இணைய தளத்திற்கு சென்று பதிவிடுவது. மற்றொன்று குறுஞ்செய்தி (SMS) வாயிலாக இந்த இணைப்பை ஏற்படுத்தலாம். இதனை எவ்வாறு செய்வது என பார்ப்போம்.

பான் – ஆதார் எண் இணைப்பு – இரு முறைகள்(PAN – Aadhaar Linking) 

மேலே உள்ள இணைப்பை கிளிக் செய்து பான் – ஆதார் எண் இணைப்பு வழிமுறையை பின்பற்றுங்கள்.

பான் – ஆதார் எண் இணைப்பதில் சில நபர்களுக்கு விதிவிலக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. ஆதார் மற்றும் பான் எண்ணில், உங்கள் பெயர், பிறந்த காலம் மாறுபட்டிருந்தால் உடனடியாக தேவையான மாற்றத்தை ஏற்படுத்துங்கள். அதன் பின்பு, மறு இணைப்பை ஏற்படுத்த முயற்சியுங்கள். 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பொது வருங்கால வைப்பு நிதியில் (பி.எப்) ஏற்பட்டுள்ள சமீபத்திய மாற்றங்கள்

பொது வருங்கால வைப்பு நிதியில் (பி.எப்) ஏற்பட்டுள்ள சமீபத்திய மாற்றங்கள் 

Recent Changes in Public Provident Fund(PPF) – 2019

பி.பி.எப்.(PPF) என சொல்லப்படும் பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு, சிறு சேமிப்பு திட்டத்தின் அங்கமாகும். மிகவும் பாதுகாப்பான முதலீடாகவும், நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு இருக்கும் பி.எப். கணக்கிற்கு மாற்றாகவும் இந்த திட்டம் பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் சிறு சேமிப்பை ஊக்குவிக்கும் சட்டத்தில் பி.பி.எப். க்கான சில மாற்றங்கள் சொல்லப்பட்டுள்ளது.

பி.பி.எப்.(Public Provident Fund) கணக்கு என்பது 15 வருட கால சேமிப்பு திட்டமாகும். தேவைப்பட்டால், 15 வருட காலத்திற்கு பிறகு 5 வருட கால அளவில் திட்டத்தை நீட்டித்து கொள்ளலாம். நடப்பில் இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.9 சதவீதமாக உள்ளது.. ஆண்டுக்கு குறைந்தபட்ச முதலீட்டு தொகை ரூ. 500 மற்றும் அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சம் வரை. பி.பி.எப். முதலீட்டிற்கு வருமான வரி சலுகையும் உண்டு.

கணக்கில் உள்ள பணத்தை திரும்ப பெறுவதென்றால், இதற்கு முன்பு 7 வருடங்களுக்கு பிறகு மட்டுமே முடியும். ஆனால் தற்போது 5 வருடங்கள் (நிதியாண்டுகள்) முடிந்தவுடன் பணத்தை திரும்ப பெறுவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான சிறப்பு படிவம் 5 ஐ நிரப்பி, பணத்தை கோரலாம்.

முன்னர் 7 வருடங்களுக்கு பிறகு, 25 சதவீத தொகையை மட்டுமே எடுக்க கூடிய நிலை இருந்தது. தற்போது 5 நிதியாண்டுகளுக்கு பின்னர் வரவில் உள்ள 50 சதவீத தொகையை பெறலாம். பணத்தை பெறுவதற்கான காரணங்கள் கடுமையான நோய்கள் மற்றும் குடும்பத்தில் உள்ள ஒருவர் நோய்க்கான சிகிச்சை தேவைக்காக, உயர்கல்வி தேவை மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியராக செல்லும் பட்சத்தில் என சொல்லப்பட்டுள்ளது.

பி.பி.எப். கணக்கில் வெளிநாட்டு வாழ் இந்தியர்(NRI) முதலீடு செய்ய முடியாது என்ற சட்டத்தை சற்று மாற்றி, கணக்கை துவங்கும் போது இந்திய குடிமக்களாக இருந்து பின்னாளில் வெளிநாட்டு வாழ் இந்தியராக இருந்தாலும், முதிர்வு காலம் முடியும் வரை, முதலீடு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

தற்போது குழந்தைகளின் பெயரிலும்(Minor Child) பி.பி.எப். கணக்கை துவங்கலாம். கூட்டு கணக்கும்(Joint Account) தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சேமிக்கப்படும் தொகை, கணக்கு வைத்திருப்பவருக்கு எந்தவொரு கடன் அல்லது நிதி தொடர்பாக எந்தவொரு நீதிமன்றத்தின் உத்தரவு அல்லது ஆணையின் கீழ் இணைக்கப்படாது.

பி.பி.எப். கணக்கில் உள்ள தொகையை கொண்டு, கடன் வசதியும் பெறலாம். முன்னர், கடனுக்கான வட்டி விகிதம் பி.பி.எப். கணக்கிற்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை காட்டிலும் 2 சதவீதம் அதிகமாக இருந்தது. தற்போது இது ஒரு சதவீதமாக (பி.பி.எப். வட்டி மற்றும் கூடுதலாக 1 %) சொல்லப்பட்டுள்ளது.

பொது வருங்கால வைப்பு நிதி என்பது ஓய்வு காலத்திற்கான(Retirment Savings) திட்டமாகும். இதனை சரியாக திட்டமிட்டு, நீண்ட காலத்தில் சேமித்து வரும் பட்சத்தில் நமக்கான ஓய்வு கால கார்பஸ் தொகை பலனளிக்கும்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

2019ம் வருடத்தில் உலக பங்குச்சந்தை குறியீடுகள் எப்படி இருந்தது ?

2019ம் வருடத்தில் உலக பங்குச்சந்தை குறியீடுகள் எப்படி இருந்தது ?

How was the Global Stock Indices in the year 2019 ?

நடப்பு 2019ம் வருடம் முடிய இன்னும் இரண்டு வாரங்களே உள்ளன. கடந்த இரண்டு வருடங்களாக உலகளவில் பல பொருளாதார நிகழ்வுகள் நடந்துள்ளன. இவற்றில் முக்கியமாக சீன-அமெரிக்க வர்த்தக போர், ஐரோப்பில் காணப்பட்ட பிரெக்ஸிட்(Brexit) ஒப்பந்தம், கச்சா எண்ணெய் விலை மற்றும் பருவநிலை மாற்றங்கள்(Climate Change) ஆகியவை பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக உலக பொருளாதாரமும் கடந்த ஒன்றரை வருடங்களாக மந்தநிலையில் சென்று கொண்டிருக்கிறது. பொருளாதார வீழ்ச்சி எதுவும் ஏற்பட வாய்ப்புள்ளதா என கேள்வி எழுப்பினால், அது 2020ம் ஆண்டின் பிற்பாதியில் தெரிய வரலாம். சீன-அமெரிக்க வர்த்தக போர் முடிவுக்கு வரலாம் என அனைவரும் எதிர்பார்க்கும் நிலையில், அமெரிக்காவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள தேர்தல் காலமே மற்றவற்றை தீர்மானிக்கும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

வளர்ந்து வரும் நாடுகளில் பலவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) குறைந்து வருகிறது. இதனால் அதன் வளர்ச்சி வேகத்திலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இது போன்ற சூழ்நிலையில் உலகளவில் காணப்படும் பங்குச்சந்தைகளும், மற்ற முதலீட்டு சாதனங்களும் எவ்வாறு இந்த வருடம் வருவாயை தந்துள்ளது என காணலாம்.

கடந்த ஒரு வருடத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் 20 சதவீத ஏற்றத்தை பெற்றுள்ளது. இது போல வெள்ளியும் சுமார் 16 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. ரெப்போ வட்டி விகித குறைவால், வங்கிகளின் வட்டி விகிதம் 7 சதவீதத்திற்கு கீழ் தான் உள்ளது. பங்குச்சந்தையை பொறுத்தவரை அமெரிக்காவின் நாஷ்டாக் 100(NASDAQ 100) குறியீடு 32 சதவீத வருவாயை தந்துள்ளது.

Stock Global Indices 2019

டவ் ஜோன்ஸ்(Dow Jones) குறியீடு 19 சதவீதமும், எஸ் & பி 500 25 சதவீதமும் ஏற்றம் பெற்றுள்ளன. பிரேசில் நாட்டின் முக்கிய குறியீடான iBovespa 29 சதவீதமும், அர்ஜென்டினா மற்றும் கொலம்பியா முறையே 26 சதவீதம் மற்றும் 22 சதவீத வருவாயை நடப்பு வருடத்தில் அளித்துள்ளது.

ஐரோப்பாவை காணும் போது, புட்சி 100(FTSE 100) 12 சதவீத வருவாயும், ஜெர்மனி டாக்ஸ்(DAX) 24 சதவீதமும் மற்றும் பிரான்ஸின் சி.ஏ.சி. 40 (CAC 40) குறியீடு 25 சதவீத வருவாயும் அளித்துள்ளது. இந்திய பங்குச்சந்தை குறியீடுகளாக நிப்டி50(Nifty50) 11 சதவீதமும், சென்செக்ஸ் 13 சதவீத ஏற்றத்தையும் கண்டுள்ளது

சீனா, ஜப்பான், தைவான், தென் கொரியா மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளின் குறியீடுகளும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து குறியீடுகள் 20 சதவீதத்திற்கு அதிகமான வருவாயை நடப்பு 2019ம் வருடத்தில் கொடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்காவின் குறியீடுகளும் வளர்ச்சியை கண்டுள்ளது.

இந்திய பங்குச்சந்தையில் நிப்டி50 மற்றும் சென்செக்ஸ்(Sensex) குறியீடுகளில் உள்ள சில லார்ஜ் கேப் பங்குகளின் ஏற்றமே, சந்தையின் புதிய உச்சத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. பொருளாதாரத்தில் தேக்க நிலை காணப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரும்பாலான முதலீட்டாளர்கள் லார்ஜ் கேப் பங்குகளை தேர்ந்தெடுத்துள்ளனர். இதன் காரணமாக தற்போது உச்சத்தில் காணப்படுகிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

அதே வேளையில் ஸ்மால் கேப்(Small Cap) மற்றும் மிட் கேப்(Mid Cap) பிரிவில் பெரும்பாலான பங்குகளின் விலை 40-50 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளன. பரஸ்பர நிதி முதலீட்டிலும் பங்கு சார்ந்த பண்டுகள்(Equity Oriented Mutual Funds) பிரிவில் 40 சதவீத பண்டுகள் முதலீட்டு இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இவற்றில் முதலீட்டு இழப்பை ஏற்படுத்திய பெரும்பாலான பண்டுகள் ஸ்மால் கேப் மற்றும் துறை சார்ந்த(Sector Funds) பிரிவுகளாகும். முக்கியமாக உள்கட்டமைப்பு துறை சார்ந்த பண்டுகள் நடப்பு வருடத்தில் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. இது போல பொதுத்துறை நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் பண்டுகளும் முதலீட்டு இழப்பை ஏற்படுத்தியுள்ளன.

வரும் நாட்களில் சந்தையை பாதிக்கும் காரணிகள் சற்று தென்படுவதால், பங்குகளின் அடிப்படை பகுப்பாய்வை ஆராய்ந்த பின்னரே, முதலீடு செய்வது சிறந்தது. விலையை மட்டும் கருத்தில் கொண்டு பங்குகளை வாங்குவதை தவிர்ப்பது நன்று.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

2020ம் ஆண்டில் இந்திய வாகனத்துறை மீண்டு எழுமா ?

2020ம் ஆண்டில் இந்திய வாகனத்துறை மீண்டு எழுமா ?  

Will the Indian Automotive Industry recover in 2020 ?

கடந்த ஒரு ஒன்றரை வருடமாக இந்திய வாகனத்துறை மட்டுமில்லாமல் உலகளவிலும் வாகனத்துறையின் வளர்ச்சி குறைந்துள்ளது. சீன-அமெரிக்க வர்த்தக போர், கச்சா எண்ணெய் உற்பத்தியில் நிலவும் மாற்றம், பிரிட்டனின் பிரெக்ஸிட் ஒப்பந்தம் மற்றும் உள்நாட்டில் நிலவும் பலவீனமான தேவை நுகர்வு என பொருளாதாரம் மந்தநிலையில் இருப்பதற்கான காரணிகள் சொல்லப்படுகிறது.

உள்நாட்டில் வாகனத்துறையின் வளர்ச்சி சில காலாண்டுகளாக இறங்குமுகத்தை சந்தித்து வருகிறது. மத்திய அரசு சார்பில் சில கொள்கைகள் பொருளாதாரத்தை ஊக்குவிக்க பயன்பட்டாலும், வரும் 2020ம் ஆண்டு இந்திய வாகனத்துறை மீண்டு எழுமா என்பதே பெரும்பாலானோரின் கேள்வி.

சமீப காலமாக வாகனத்துறையில் ஏற்பட்ட பலவீனமான நுகர்வு தன்மை(Weak Demand Consumption) மற்றும் அதனை சார்ந்த தேக்க நிலை ஆகியவை இந்த துறை மாற்றமடைந்து வருவதையும் சுட்டி காட்டுகிறது. கடந்த சில ஆண்டுகளாக வாகனத்துறை எதிர்பாராத அபரிதமான வளர்ச்சியை கொண்டிருந்தது. இதுவே தற்போது சந்தைக்கு மந்தநிலையை ஏற்படுத்தியுள்ளது.

இனி வரும் காலத்தில், ஒவ்வொரு துறையிலும் ஏற்படக்கூடிய மாற்றம், மிகப்பெரிய அளவில் பொருளாதார ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தலாம். அதே சமயத்தில், அவை அதிக வேலை வாய்ப்புகளை கொண்டிருக்கும் என்பதிலும் ஐயமில்லை. மாற்றம் நடைபெற்று வருகிறது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளா  விட்டாலும், உலகளவில் அனைத்து துறைகளிலும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளன.

2020ம் ஆண்டில் உலகளவிலான வாகனத்துறையில் பல மாற்றங்கள் ஏற்படலாம். வாகனத்துறை உற்பத்தியாளர்கள் மற்றும் உபகரணங்களை வழங்கி வரும் நிறுவனங்கள் பல சவாலான நிகழ்வுகளை சந்திக்க நேரிடலாம் என மூடிஸ்(Moodys) நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்த வருடத்தில் கார் வாகன விற்பனை(Car Sales) மற்றும் வணிக ரீதியிலான வாகன விற்பனை வளர்ச்சி  குறையக்கூடும் எனவும், இதன் காரணமாக பெரும்பாலான வளர்ந்து வரும் நாடுகளில் பொருளாதார வளர்ச்சி குறைவாக இருக்கக்கூடும் எனவும் கூறியுள்ளது.

பருவநிலை மாற்றங்களும், அதன் சார்ந்து எடுக்கப்படும் புதிய கொள்கைகளும்  தற்போதைய வாகன சந்தையை பாதிக்கலாம் என சொல்லப்படுகிறது. விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம். இதன் காரணமாக அவற்றின் வருவாயில் துண்டு விழலாம்.

நாட்டின் உற்பத்தி துறையில்(Manufacturing in GDP) வாகனத்துறையின் பங்கு 50 சதவீதமாக உள்ளது. கடந்த 2018ம் ஆண்டு வணிக வாகன உற்பத்தியில் உலகளவில் 7வது மிகப்பெரிய நாடாக இந்தியா இருந்தது கவனிக்கத்தக்கது. வாகனத்துறை விரைவாக மீண்டு எழுந்தால் மட்டுமே, நாட்டின் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி சாத்தியப்படும். இருப்பினும், இலக்கின் மீது நம்பிக்கை கொண்டிருப்போம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

கொப்பளித்த விலைவாசி உயர்வு – நவம்பர் மாத சில்லரை விலை பணவீக்கம்

கொப்பளித்த விலைவாசி உயர்வு – நவம்பர் மாத சில்லரை விலை பணவீக்கம் 

Rising Prices on Essential Needs – CPI Retail Inflation to 5.54 Percent in November 2019

நாட்டின் நுகர்வோர் விலை பணவீக்கம் அக்டோபர் மாதத்தில் 4.62 சதவீதமாக இருந்த நிலையில், கடந்த நவம்பர் மாத பணவீக்கம் 5.54 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டில் சொல்லப்பட்ட இதே காலத்தில் பணவீக்கம்(Inflation) 2.33 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை உயர்வால் கடந்த மாத சில்லரை விலை பணவீக்கம் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக காய்கறிகளின் விலை நவம்பர் மாதத்தில் 36 சதவீதமாக இருந்துள்ளது. இது அக்டோபர் மாத இறுதியில் 26 சதவீதமாக இருந்துள்ளது.

பருப்பு வகைகளின் விலை 14 சதவீதமும், மாமிசம் மற்றும் மீன் ஆகியவற்றின் விலை 9.38 சதவீதமும் உயர்ந்து காணப்பட்டுள்ளது. இது போல முட்டையின் விலையும் 6 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆக, அக்டோபர் மாதத்தில் 7.89 சதவீதமாக காணப்பட்ட உணவுப்பொருட்களின் சில்லரை விலை பணவீக்கம் நவம்பர் மாதத்தில் 10 சதவீதமாக இருக்கிறது.

வீட்டுமனை விலையும் 4.5 சதவீதம் உயர்ந்துள்ளது. புகையிலை பொருட்களின் விலை 3.26 சதவீதமும், துணிமணிகள் மற்றும் காலணிகள் 1.30 சதவீதமும் அதிகரித்துள்ளது. அதே வேளையில் எரிபொருட்களின் விலை இரண்டு சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

நவம்பர் மாதத்தில் நகர்ப்புற சில்லரை விலை பணவீக்கம்(Urban Retail Inflation) 5.76 சதவீதமாகவும், கிராமப்புறங்களில்(Rural) 5.27 சதவீதம் என்ற அளவிலும் சில்லரை விலை பணவீக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அக்டோபர் மாதத்தை ஒப்பிடுகையில் இரு சார்பிலும் விலை உயர்ந்துள்ளது.

மத்திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்திருந்த குறுகிய கால இலக்கான 4 சதவீத பணவீக்கம் என்ற நிலையை கடந்த அக்டோபர் மாத பணவீக்கம் மீறியது. தற்போது அதனை விட சில்லரை விலை பணவீக்கம் அதிகரித்து காணப்பட்டுள்ளது. கடந்த நிதி கொள்கை குழு கூட்டத்தில் பாரத ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை(REPO Rate) குறைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

என் முதலீட்டு கொள்கை, என் செல்வத்திறன் – பங்கு முதலீட்டு சூத்திரம்

என் முதலீட்டு கொள்கை, என் செல்வத்திறன் – பங்கு முதலீட்டு சூத்திரம்

My Investment Strategy and its my Wealth Potential – Equity Investing Secrets

முதலீடு என்பது ஒரு கலை. அவற்றில் பங்கு முதலீடு என்பதே செல்வ சூத்திர கலை. பங்குகளில் விளையாட்டு பல்வேறாக இருந்தாலும், இறுதியில் பங்கு ஜெயிக்க வைப்பதோ தன் நீண்டகால நண்பனை தான். அதனால் தான் என்னவோ நான் நீண்டகால முதலீட்டாளராக இருப்பதில் மகிழ்வடைகிறேன்.

 

நம்மில் எண்ணற்றோருக்கு உடனடியாக பணம் பண்ண வேண்டிய ஆசை, விரைவாக பணக்காரராக வேண்டுமென்ற பேராசை. ஆனால் அப்படியொன்று இதுவரையும் கண்டுபிடிக்கப்படவில்லை. நான் எப்போதும் சொல்லிக்கொள்வது இது தான், ‘ போன்சி(Ponzi Schemes) திட்டத்தின் மூலம் ஒருவர் விரைவாக பணக்காரராக முடியும் என எண்ணினால், ஏன் அதனை அம்பானியும், அதானியும் முயற்சிக்க கூடாது ‘. ஏனென்றால் அப்படி ஒரு ரகசியம் எதுவும் தொழிலுலகில் இல்லை.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தொழில் முதலீட்டில் மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது. அதனை சார்ந்து தொழில்கள் நகரக்கூடும். ஆனால் வளர்ச்சி என்பது நீண்டகாலத்திற்கு உரியது. நான் ஐந்து வருடத்தில் கோடீஸ்வரனாக மாறி விட்டு, தொழிலை தூக்கி போட்டு விட்டு செல்வதல்ல தொழில் வளர்ச்சி. அது தான் பங்கு முதலீடும். 

 

நம் முதலீடு வளர்வதற்கான காலம் தேவை. நான் படித்தவுடன் மேதையாகவில்லை; கை நிறைய சம்பளம் வாங்கவில்லை. எனக்கு அனுபவம் தேவைப்படுகிறது. கற்க முயற்சிக்கிறேன். ஏற்ற-இறக்கங்களுக்கு உட்படுகிறேன். சில வருடங்களுக்கு பின்பு, எனது துறையில் நான் வலுவடைகிறேன். இப்போது நான் விரைவாக முன்னேறுவதற்கான பாதை எனக்கு தெரிகிறது. இது தான் பங்கு முதலீட்டிலும்.

 

ஒரு மருத்துவராக, ஒரு பொறியாளராக அல்லது எந்த துறையிலும் மேதையாக நாம் சில நாட்களில் உருவாகி விட முடியாது. அப்படியிருக்கும் போது, பங்குச்சந்தையில் மட்டும் நாம் அவ்வாறாக நடந்து கொள்வதில்லை. பங்குகளை வாங்கிய உடனே விற்று லாபம் சம்பாதிக்க வேண்டும். முதலீடு செய்த ஆறு மாதங்களில் அது கோடிகளாக மாற வேண்டும் – எவ்வாறு சாத்தியம் ? அப்படி ஒரு வேளை கோடிகளாக மாறி விட்டாலும், அதனை கொண்டு நீங்கள் என்ன திட்டத்தை கொண்டுள்ளீர்கள் ?

 

பங்குச்சந்தைக்கும் கற்றல் அவசியம். முறையாக படிக்கும் வாய்ப்பு கிட்டவில்லை என்றாலும், புத்தகங்கள் வாயிலாகவோ, இணையம் வாயிலாகவோ கற்க முயலுங்கள். நாளிதழ்களில் உள்ள வணிக பக்கம் என்ன சொல்கிறது என கேளுங்கள். பங்குச்சந்தையில் உள்ள நிறுவனங்களின் தரத்தை பிரித்து பாருங்கள். வங்கிக்கும், பங்குச்சந்தைக்கும், தங்கத்திற்கும் என்ன சம்பந்தம் என ஆராயுங்கள். நீங்கள் பங்குகளில் முதலீடு செய்யாவிட்டாலும் பரவாயில்லை, பங்குச்சந்தையை பற்றிய கற்றலை ஐந்து வருடங்களுக்கு தொடருங்கள். 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நீங்களாகவே ஒரு நிறுவன பங்கை Fundamental Analysis அடிப்படையில் ஆராய்ந்து தேர்ந்தெடுங்கள். கடினமாக உள்ளது என முடிவெடுத்தால், தகுந்த முதலீட்டு ஆலோசகரை உங்கள் இடத்தில் வைத்து கொண்டு, பங்குகளை அலசுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பங்குகளில் பின்வருமாறு முதலீடு செய்து பாருங்கள். யாரும் இதற்கு முன்பு இவ்வாறு உங்களுக்கு சொல்லி இருப்பார்களா என தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக உங்கள் பங்கு தரகர் சொல்லியிருக்க மாட்டார். 

 

என் பங்கு முதலீட்டு கொள்கை – முதலீட்டு சூத்திரம்:

 

  • ஆரம்ப  நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கின் மீது சிறிய அளவில் முதலீடு செய்யுங்கள். அதாவது உங்கள் மொத்த முதலீட்டு தொகையில் 5-10 சதவீத தொகைக்கு மட்டும்(Investing in a Small Quantity or Little Money). பங்குகளின் எண்ணிக்கை முக்கியமல்ல. மற்றவர் 1000 பங்குகள் வாங்கியுள்ளார்; நானும் வாங்கி விரைவாக லாபம் சம்பாதிக்கிறேன் என மாட்டிக்கொள்ள வேண்டாம்.

 

  • எந்தவொரு பங்குகளில் முதலீடு செய்யும் போது, முதற்கட்டமாக சிறிய அளவில் முதலீடு செய்யும் காலத்தை சோதனை செய்யும் காலமாக எடுத்து கொள்ளலாம். அந்த பங்கு அதிக ஏற்ற-இறக்கங்களுக்கு உட்படுகிறதா என்பதனை நம்மால் அறிய முடியும். நன்றாக பங்கு வீழ்ச்சியடையும் பட்சத்தில், மலிவான விலையில் நாம் சராசரி(Average on Share Price) செய்து கொள்ளலாம். ஏற்றமடைந்தால் கவலை கொள்ள வேண்டியதில்லை.

 

  • வாங்கிய பங்கின் ஒவ்வொரு காலாண்டு விற்பனை மற்றும் லாப வளர்ச்சியை(Track Financial Results) குறித்து கொள்ளுங்கள். வளர்ச்சியில் ஏதேனும் குறை இருந்தால் காரணத்தை கண்டுபிடியுங்கள். டிவிடெண்ட், போனஸ் அறிவிப்பு ஏதும் இருந்தால் தெரிந்து கொள்ளுங்கள்.

 

  • நீங்கள் வாங்கிய பங்கின் விலை, நீங்கள் வாங்கிய விலையிலிருந்து இரு மடங்காக சென்றால், உங்களிடம் உள்ள பங்குகளின் எண்ணிக்கையில் பாதியை விற்று விடுங்கள்(Sell half after doubled the price). இவற்றில் எந்த சமரசமும் செய்யாதீர்கள். பாதி பங்குகளை விற்ற நிலையில், உங்களது முதலீடு உங்களிடமே திரும்ப வந்து விட்டது. வந்த முதலீட்டை கொண்டு மற்றொரு நல்ல பங்குகளில் முதலீடு செய்வது உங்கள் திறமை. இல்லையென்றால், உங்களுக்கான மற்ற முதலீட்டு தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்ளுங்கள்.

 

  • மீதம் இருக்கும் பங்குகளை நிறுவனம் நன்றாக செயல்படும் காலம் வரை வைத்திருங்கள்(Keep the half for a long to Wealth). இங்கே இரு மடங்கு விலை அவசியமில்லை. உங்களிடம் உள்ள இந்த மீத பங்குகள் தான் செல்வத்தை குவிப்பதற்கான வாய்ப்புகள். அவை பல காலங்களை கடக்க கூடியது. 

 

  • மேலே சொன்னவற்றை ஒவ்வொரு நிறுவன பங்கை தேர்ந்தெடுக்கும் போதும் கடைபிடிக்க வேண்டும். கையிருப்பில் வைத்திருக்கும் பங்குகளை கொண்டு டிவிடெண்ட் வருவாய் பெறுவதற்கான சாத்தியங்களையும் உருவாக்கி கொள்ளுங்கள்(Create Cash Flow from Stocks). இதனை தான், ‘பணக்கார தந்தை ஏழை தந்தை’ புத்தக ஆசிரியர் ராபர்ட் கியோசகி எப்போதும் சொல்லி வருகிறார். பங்குகளை கொண்டு தொடர் வருமானத்தை ஏற்படுத்துவது அவசியமென்று.

 

  • தொடர் நஷ்டத்தில் இயங்கி கொண்டிருக்கும், அதிக கடனை சுமக்கும் சரியில்லாத பங்குகளை வைத்திருக்காதீர்கள். நிறுவனம் திவால் நிலைக்கு செல்லும் வரை காத்திருக்காமல், பங்குகளை விற்க தயாராகுங்கள்.

 

  • தெளிவான நோக்கத்தை கொண்ட நிறுவனர், நல்ல நிர்வாகம், குழப்பமில்லா நிதி அறிக்கைகள் ஆகியவற்றை கொண்ட நிறுவன பங்குகளை தேடுங்கள். (Promoter, Corporate Governance and Financial Statements) 

 

இது தான் நான் கற்ற பங்கு முதலீட்டு சூத்திரம். பிடித்தால் பழகுங்கள். இல்லையெனில் நீங்கள் ஒரு முதலீட்டு சூத்திரத்தை கண்டறியுங்கள். செல்வத்திறன் செவிமடுக்கட்டும்.

 

Let us listen to Wealth !

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

பரஸ்பர நிதிகளில் ஏன் டிவிடெண்ட் திட்டத்தை தேர்ந்தெடுக்க கூடாது ?

பரஸ்பர நிதிகளில் ஏன் டிவிடெண்ட் திட்டத்தை தேர்ந்தெடுக்க கூடாது ?

Why you should not choose a Dividend Plan in Mutual Funds ?

பரஸ்பர நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் பண்டுகளில் இரு வகையான பிரிவுகள் உள்ளன. ஒன்று வளர்ச்சி(Growth Plan) சார்ந்த பிரிவு, மற்றொன்று டிவிடெண்ட் என சொல்லப்படும் ஈவுத்தொகை(Dividend Plan) சார்ந்த பிரிவாகும். இவற்றில் நான் எதனை தேர்ந்தெடுக்க வேண்டுமென கேட்டால், பொதுவாக வளர்ச்சி சார்ந்த பிரிவு தான். இது ஒரு சிறந்த முதலீட்டு உத்தியும் கூட.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

என் கையில் இப்போது ஒரு லட்சம் ரூபாய் உள்ளது. நான் அதனை உங்களுக்கு தர விரும்புகிறேன். நீங்கள் அதனை இப்போது வாங்கி கொள்வீர்களா அல்லது ஒரு மாதத்திற்கு பிறகு அல்லது ஒரு வருடத்திற்கு பிறகு வாங்கி கொள்வீர்களா ?

 

இது தான் பணத்தின் கால மதிப்பு (Time Value of Money). உங்களுக்கு மற்றொரு வாய்ப்பை நான் வழங்க விரும்புகிறேன். அதாவது நீங்கள் என்னிடமிருந்து பெறக்கூடிய ஒரு லட்சம் ரூபாயை, ஒரு வருடத்தின் முடிவில் பெற்றால் நான் 12 சதவீத வட்டியுடன் (ஆண்டுக்கு) தர தயாராக உள்ளேன். இப்போது உங்கள் முடிவு என்ன ?

 

இல்லையெனில், நீங்கள் இன்றே அந்த ஒரு லட்சம் ரூபாயை பெற்று கொண்டு, நாளை உங்களால் ஒரு நல்ல முதலீட்டு வாய்ப்பை கண்டறிய முடியுமா ? நான் சொன்ன 12 சதவீத வட்டி வருவாயை காட்டிலும் அற்புதமான திட்டத்தை ஏதும் நீங்கள் கண்டறிந்து உள்ளீர்களா ? இது தான் முதலீட்டு வாய்ப்பிற்கான தேடல். 

 

பொதுவாக பணக்காரர்கள் (ஊகத்தில் இருப்பவர்கள் அல்ல) பங்குகள், பரஸ்பர நிதிகள், வங்கி சேமிப்புகள் மற்றும் வீட்டு மனையை காட்டிலும் தங்கள் தொழில் மீது தான் ஆர்வம் காட்டுவர். உண்மையில் அவர்கள் வணிகத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். காரணம் என்னவென்றால், அவர்கள் தங்கள் தொழிலின் ரிஸ்க் தன்மையை உணர்ந்து நீண்டகாலத்தில் நல்ல வருவாயை பெற தயாராக உள்ளனர்.

 

பணக்காரர்கள் அதிக வளர்ச்சி இல்லாத எந்தவொரு திட்டத்திலும் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவதில்லை. அவர்கள் தொழிலில் தோல்வி அடைந்தாலும் கூட, நல்ல முதலீட்டு வாய்ப்பை தேடுகின்றனர். எனவே அவர்கள் பங்குகள் மற்றும் பரஸ்பர நிதிகளில் சிறிய அளவில் முதலீடு செய்வர். அவர்களின் முக்கிய பங்கு, தொழில் முதலீட்டில் தான். பணக்காரர்கள் தங்கள் முதலீட்டின் மூலம் தொடர்ச்சியான பணப்புழக்கத்தை உருவாக்க முற்படுகிறார்கள். அதனால் தான் அவர்களால் வேலைவாய்ப்புகளும், தொழில் விருத்தியும் ஏற்படுகிறது. இது தான் பணத்தின் கால மதிப்பு.

 

பொதுவாக வளர்ச்சி பங்குகளும்(Growth Stocks), பரஸ்பர நிதிகள் வழங்கும் வளர்ச்சி திட்டங்களும்(Growth Plan – Mutual Funds) உங்கள் மூலதனத்தை  பெருக்க கூடியவை. அதே நேரத்தில், டிவிடெண்ட் அளிக்கும் நிறுவனங்களும், டிவிடெண்ட் திட்டங்களும் நல்ல ஈவுத்தொகையை கொடுக்கும். ஆனால், பெருவாரியான வளர்ச்சியை பெறாது. சந்தையில் நல்ல நிறுவன பங்குகளின் விலை எப்போதும் அதிகமாக தான் இருக்கும். டிவிடெண்ட் அளிக்கும் நிறுவனங்களின் பங்கு விலை நீண்டகாலத்தில் முதலீட்டு பெருக்கத்தை ஏற்படுத்தாது. காரணம் என்னவென்றால், அளிக்கப்பட்ட டிவிடெண்ட் தொகை எந்த வளர்ச்சியையும் பெறுவதில்லை.

 

உங்கள் வீடு குறிப்பிடத்தக்க வாடகை வருமானத்தை தராமல் போகலாம், ஆனால் அவற்றின் முதலீடு அருமையான விலையை கொண்டிருக்கலாம். அதனால் தான் நகர்ப்புறங்களில் நெரிசலான இடங்களில் வீட்டு மனையின் விலை அதிகமாக உள்ளது. காரணம், அவை நல்ல தொடர் வருவாயை அளிக்கும் என்ற எதிர்பார்ப்பால்.

 

நீங்கள் ஏன் டிவிடெண்ட் திட்டத்தை தேர்ந்தெடுப்பது சிறந்ததாகாது எனில், அவை கூட்டு வட்டியின் மதிப்பை இழக்கின்றன. நீங்கள் வீட்டில் வைத்திருக்கும் ஒரு லட்சம் ரூபாய் (தேவையில்லாத நிலையில்) எந்தவொரு வளர்ச்சியையும் பெறுவதில்லை. ஆனால் அதனை அருகிலுள்ள வங்கியிலோ அல்லது அஞ்சலகத்திலோ டெபாசிட் செய்திருந்தால், அது மற்றொருவருக்கு வங்கியின் மூலம் கடனாக கொடுக்கப்படும். உங்களுக்கான வருவாய் வளர்ச்சியும் கிடைக்கும். 

 

டிவிடெண்ட் பங்குகளும், பரஸ்பர நிதிகளின் டிவிடெண்ட் திட்டங்களும் பொதுவாக ஓய்வு பெறும் நபர்களுக்கு பயன்படும். ஏனென்றால் அவர்களுக்கு வளர்ச்சியை விட, தொடர் வருவாய் அவசியமாகும். இது போல தொடர் வருவாய் பெற விரும்புபவர்கள் வேண்டுமானால், இது போன்ற திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். அதே வேளையில் எந்த பங்கும், டிவிடெண்ட் திட்டமும் ஒரே  அளவிலான டிவிடெண்ட் தொகையை தொடர்ச்சியாக அளிக்கும் என சொல்ல முடியாது. 

 

இளைய தலைமுறையினரும், ரிஸ்க் எடுக்கும் முதலீட்டாளர்களும் வளர்ச்சி பெறக்கூடிய நிறுவனங்களையும், வளர்ச்சி பிரிவு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களையும் தேர்ந்தெடுக்கும் போது, அபரிதமான முதலீட்டு பெருக்கத்தை ஏற்படுத்தலாம். பொதுவாக, முதலீடு என்பது வளர வேண்டும். இது போன்ற டிவிடெண்ட் திட்டங்களால் அவை கட்டுப்படுத்தப்பட கூடாது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

 

 

Financial Blog in Tamil