இனி அஞ்சலகத்தில் குறைந்தபட்ச இருப்பு தொகை ரூ. 500 – இந்தியா போஸ்ட்
India’s Post Savings Account – Maintain the minimum balance of Rs. 500
20 வருடங்களுக்கு முன்பு, நம் நாட்டில் வங்கி கணக்கு இல்லாவிட்டாலும், அருகே உள்ள அஞ்சலகத்தில் சிறு சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மட்டும் என்றில்லாமல், அனைவருக்குமான பாதுகாப்பான சேமிப்பு திட்டமாக அஞ்சலகத்தில் கிடைக்க பெற்றது.
பின்னர், தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக அஞ்சலக சேவையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டது. தற்போது ஒரு வங்கியை போன்று இந்திய அஞ்சலக கிளைகள் செயல்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களுக்கான சேமிப்பு கணக்கு, ஏ.டி.எம்.(ATM) கார்டு, இந்தியா போஸ்ட் செயலி(Mobile App) மற்றும் இணைய பரிவர்த்தனை(Internet Banking) என இந்தியா போஸ்ட் பல முகங்களில் வலம் வருகிறது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கு துவங்க இரு வகைகள் பின்பற்றப்படுகிறது. காசோலை இல்லா சேமிப்பு(Non-Cheque Facility) கணக்கு துவங்க 20 ரூபாயும், காசோலை வேண்டுமென்பவர்களுக்கு 500 ரூபாயுடன் துவங்க வேண்டும். காசோலை இல்லாதவர்கள் குறைந்தபட்ச இருப்பாக 50 ரூபாயை பராமரிக்க வேண்டும். காசோலை பெறுபவர்கள் தங்களின் குறைந்தபட்ச இருப்பு தொகையாக ரூ. 500 ஐ பராமரிப்பது அவசியம்.
குறைந்தபட்ச இருப்பு தொகையை(Minimum Balance) பராமரிக்காதவர்களுக்கு அபராத கட்டணமும் வசூலிக்கப்படும். தொடர்ச்சியாக இருப்பு தொகையை பராமரிக்காதவர்களின் சேமிக்கு கணக்கு குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு, செயல்படாத கணக்காக மாற்றப்படும்.
இந்நிலையில் கோவா போஸ்ட்(Goa Post) பிராந்தியங்களில், அஞ்சலக சேமிப்பு கணக்கு துவங்க 500 ரூபாய் என உயர்த்தப்பட்டுள்ளது. இது போல ஆர்.டி.(RD) கணக்கிற்கும் 10 ரூபாயிலிருந்து 100 ரூபாயாக உயர்த்தி சொல்லப்பட்டுள்ளது. குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்காதவர்களுக்கு விதிக்கப்படும் அபராத கட்டணமும் 20 ரூபாயிலிருந்து 100 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் முன்னர் காசோலை(Cheque) பரிமாற்றத்திற்கான அதிகபட்ச தொகை ரூ. 25,000 ஆக இருந்த நிலையில், இதனை தற்போது எவ்வளவு தொகையாக இருந்தாலும் பரிமாற்றத்திற்கு எடுத்து கொள்ளப்படும் என கூறியுள்ளது.
நடப்பு டிசம்பர் மாத பனிரெண்டாம் தேதிக்கு முன்னர் கணக்கு துவங்கியவர்கள் குறைந்தபட்ச இருப்பு தொகையாக 500 ரூபாயை பராமரிக்க வேண்டும். இதற்கான காலக்கெடுவாக வரும் மார்ச் 31,2020 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறை அடுத்தபடியாக மற்ற பிராந்தியங்களிலும் செயல்படுத்தப்படும் என தெரிகிறது.
சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் (October – December 2019)
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை