பான் – ஆதார் எண் இணைப்பிற்கான காலக்கெடு – டிசம்பர் 31, 2019 – இணைப்பது எப்படி ?
Deadline for PAN – Aadhaar Linking – 31, December, 2019
பான் கார்டு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி தேதி வரும் டிசம்பர் 31ம் தேதி, 2019 என வருமான வரி அலுவலகம் கூறியுள்ளது. வருமான வரி செலுத்தும் வரம்பில் இல்லாதவர்களும் பான் – ஆதார் எண் இணைப்பை ஏற்படுத்துவது அவசியம் என கூறப்பட்டுள்ளது.
சொல்லப்பட்ட தேதிக்குள், இணைக்காத பட்சத்தில் வரும் நாட்களில் வருமான வரி தாக்கல் செய்ய முடியாது. மேலும் நாம் வாங்கிய பான் கார்டு(PAN) எண்ணும் செயலிழக்கப்படும். இந்த இணைப்பை இந்திய குடிமக்கள் (பான் இருப்பு) அனைவரும் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த முறை, பட்ஜெட் தாக்கலில் பான் எண் இல்லையென்றாலும், ஆதார் எண்ணை(Aadhaar) கொண்டு வருமான வரி தாக்கல் செய்யலாம் என சொல்லப்பட்டிருந்தது. பின்பு பான் – ஆதார் இணைப்பிற்கான காலக்கெடு 30, செப்டம்பர், 2019 என சொல்லப்பட்டது. இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டு தற்போது வரும் 31, டிசம்பர், 2019 என நிர்ணயிக்கப்பட்டது.
ஆதார் – பான் எண் இணைப்பை இரண்டு வகைகளில் கையாளலாம். முதல் முறை, வருமான வரி தாக்கல் இணைய தளத்திற்கு சென்று பதிவிடுவது. மற்றொன்று குறுஞ்செய்தி (SMS) வாயிலாக இந்த இணைப்பை ஏற்படுத்தலாம். இதனை எவ்வாறு செய்வது என பார்ப்போம்.
பான் – ஆதார் எண் இணைப்பு – இரு முறைகள்(PAN – Aadhaar Linking)
மேலே உள்ள இணைப்பை கிளிக் செய்து பான் – ஆதார் எண் இணைப்பு வழிமுறையை பின்பற்றுங்கள்.
பான் – ஆதார் எண் இணைப்பதில் சில நபர்களுக்கு விதிவிலக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. ஆதார் மற்றும் பான் எண்ணில், உங்கள் பெயர், பிறந்த காலம் மாறுபட்டிருந்தால் உடனடியாக தேவையான மாற்றத்தை ஏற்படுத்துங்கள். அதன் பின்பு, மறு இணைப்பை ஏற்படுத்த முயற்சியுங்கள்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை