பங்கு சந்தை பகுப்பாய்வு 4.0 – Return on Equity

 பங்கு சந்தை பகுப்பாய்வு 4.0 – Return on Equity

 

Return on Equity (ROE):

 

ஒரு நிறுவனத்தின் பங்கு முதலீடு மீதான வருமானத்தை தான் “Return on Equity” என்கிறோம்.

 

ROE = Net Income / Share Holder’s Equity

( நிகர லாபம் / பங்குதாரர்களின் முதலீடு)

 

நினைவில் கொள்க:

 

  • பொதுவாக, நமது முதலீடுக்கு கிடைக்கும் வருமானம் ஆதலால், ROE அதிகமாக இருக்கும் பங்குகள் சிறந்தது.
  • ROE கடந்த ஒரு, மூன்று, ஐந்து மற்றும் பத்து ஆண்டுகளில் எத்தனை சதவிகிதம் தந்துள்ளது என்பதை பார்த்தும் பங்கினை தேர்ந்தெடுக்கலாம்.
  • சில பங்குகளுக்கு, ROE குறைவாகவோ (அ) எதிர்மறையாகவோ (Negative) இருக்கலாம். அந்த சமயத்தில் அதன் பண வரத்து அறிக்கையை (Cash Flow statement) சரி பார்த்து தேர்ந்தெடுக்கலாம்.
  • ROE விகிதம் நமது நாட்டின் பண வீக்கத்திற்கு அதிகமாக(More than Inflation Rate) இருக்கும் பங்குகளை கவனிக்கலாம்.
  • ROE ஐ  Return on Networth (RONW) என்றும் அழைப்பார்கள்.

 

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !

 

www.varthagamadurai.com

 

நன்றி, வர்த்தக மதுரை

Advertisement

பங்கு சந்தை பகுப்பாய்வு 3.2 – Other Income

பங்கு சந்தை பகுப்பாய்வு 3.2 – Other Income

 

Other income / Exceptional Income:

 

இதர வருமானம் / விதிவிலக்கான வருமானம் என்பது, ஒரு நிறுவனம் தனது
சொத்தையோ (அ) பிற உபகரணங்களையோ விற்பனை செய்ததன் மூலம் வருமானத்தை ஈட்டியிருக்கும். இவற்றை அந்த நிறுவனத்தின் லாப-நட்ட கணக்கில் “Other Income” என்று சேர்க்கப்பட்டிருக்கும்.

 

நினைவில் கொள்க:

 

Other Income / Exceptional Income லாப-நட்ட கணக்கில் இருந்தாலும், நாம்
அவற்றை நமது பகுப்பாய்வு சார்ந்த கணக்கில் எடுத்து கொள்ள கூடாது.
ஏனெனில், அவை ஒரு தொடர்ச்சியான, நிரந்தர வருமானம் அல்ல.
மாறாக அவை ஒரு சொத்தினை விற்றதால் வந்தது மட்டுமே. இவை ஒரு நிறுவனத்தின்
லாப வளர்ச்சி அல்ல.

 

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !

 

www.varthagamadurai.com

 

நன்றி, வர்த்தக மதுரை

பங்கு சந்தை பகுப்பாய்வு 3.1 – Net Profit Margin (Profit)

பங்கு சந்தை பகுப்பாய்வு 3.1 – Net Profit Margin (Profit)

Net Profit (நிகர லாபம்):
நிகர லாபம் என்பது, ஒரு நிறவனத்தின் மொத்த வருமானத்திலிருந்து, மொத்த செலவுகளை கழித்து கிடைப்பது.
NET PROFIT = TOTAL REVENUE – TOTAL EXPENSES
இதனை நிகர வருமானம் (அ) வருவாய் (Net Income or Net Earnings) என்றும் சொல்வார்கள்.
NPM (Net Profit Margin):      நிகர லாப விகிதம்:
நாம் மேலே பார்த்த நிகர லாபத்தை, அந்த நிறுவனத்தின் ஒவ்வொரு காலாண்டிலோ (அ) வருடத்திலோ ஒப்பிட்டு பார்க்கலாம். இதனை தான் நாம் நிகர லாப விகிதம் என்கிறோம்.
உதாரணம்:
SKYTECH நிறுவனத்தின், 2012-13 ஆண்டின் மொத்த வருமானம் மற்றும்  நிகர லாப முடிவுகள் முறையே… 50,00,000 & 20,00,000 ரூபாய்.
NPM % = NET PROFIT / TOTAL REVENUE = நிகர லாபம் / மொத்த வருமானம்.
நிகர லாப விகிதம்(2012-13) = 20,00,000 / 50,00,000 =  40 %
நினைவில் கொள்க:
  • நாம் பார்த்த நிகர லாப விகிதத்தை (NPM), அந்த துறையை சார்ந்த மற்ற சக நிறுவனங்களுடனும் காலாண்டு (Recent Quarters)வாரியாகவோ, (Annual)வருட வாரியாகவோ ஒப்பிட்டு கொள்ளலாம். இதன் மூலம் நாம், அந்த துறையின் சிறந்த ஒரு நிறவனத்தை தேர்ந்தெடுக்கலாம்.
  • NPM என்பது ஒரு நிறுவனத்தின் விற்பனை விகிதத்துடன் தொடர்புடையது. ஆதலால், விற்பனைக்கும், லாபத்திற்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ளலாம்.
  • லாப விகிதத்தை ஒப்பிடும் போது, குறைந்தது 5-10 வருட காலத்தின்  அடிப்படையில் ஒப்பிடுவது நல்லது. 3 வருட காலத்துக்கோ (அ), 5,10 வருட காலத்திற்கோ நாம் லாப விகிதத்தை சேர்த்து கணக்கிடுவதை Compounded Profit Growth (CPR) என்கிறார்கள்.

 

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !

 

www.varthagamadurai.com

 

நன்றி, வர்த்தக மதுரை

பங்கு சந்தை பகுப்பாய்வு 3.0 – Operating Profit Margin (Sales)

பங்கு சந்தை பகுப்பாய்வு 3.0 – Operating Profit Margin (Sales)

 

Operating Profit: இயக்க லாபம் (விற்பனை)

 

Operating Profit என்பது வட்டி மற்றும் வரிக்கு முந்தைய வருமானம் (Earnings before interest and tax – EBIT).

 

Operating Profit Margin: இயக்க லாப விகிதம்

 

Operating Profit Margin(OPM) என்பது விற்பனைக்கும், லாபத்திற்கும் உள்ள விகிதம்.

OPM = EBIT / Sales (or) Operating Profit / Net Sales

 

உதாரணம்:

SKYTECH நிறுவனத்தின் 2012-13 ஆண்டுக்கான விற்பனை லாபம் 18,50,000 / – மற்றும் மொத்த விற்பனை 80,00,000 / – ரூபாய் என கொள்வோம்.

OPM = 18,50,000 / 80,00,000 = 0.2313 x 100 = 23.13 %

 

நினைவில் கொள்க:

 

  • இயக்க லாப விகிதத்தை, நாம் காலாண்டு (அ) வருட அடிப்படையிலோ கணக்கிடலாம்.
  • இயக்க(விற்பனை) லாபம், அந்த நிறுவனத்தின் நிகர லாபத்திலிருந்து எவ்வளவு வேறுபடுகிறது என்பதையும் கணிக்கலாம்.
  • ஒரு நிறுவனத்தின் நிகர லாபம், பெரும்பான்மையாக விற்பனையிலிருந்து வந்திருந்தால் அதன் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

 

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !

 

www.varthagamadurai.com

 

நன்றி, வர்த்தக மதுரை

பங்கு சந்தை பகுப்பாய்வு – 2.0 – Earnings Per Share (EPS)

பங்கு சந்தை பகுப்பாய்வு – 2.0 – Earnings Per Share (EPS)

முதலில் Price/EPS (P/E) பார்ப்பதற்கு முன், Earning per share (EPS) என்றால் என்ன என்பதை எளிமையாக தெரிந்து கொள்வோம்.
EPS:  (Earnings Per Share)
EPS என்பது ஒரு பங்குக்கான வருமானம்.  நாம் முதலீடு செய்யும் நிறுவனம், ஒரு பங்குக்காக எவ்வளவு வருமானத்தை சம்பாதித்து கொடுத்துள்ளது என்பது தான்.
EPS கணக்கிடும் முறை,
           EPS = Net Profit / No., of Shares
உதாரணம்:   2013-14 நிதியாண்டில் நிறுவனம் “SKYTECH” ன் நிகர லாபம் (Net Profit) 3,00,000 ரூபாய் மற்றும் மொத்த பங்குகளின் எண்ணிக்கை 20,000(No. of Shares) என கொள்வோம்.
இப்போது அதன் EPS ஐ கணக்கிட்டால் கிடைப்பது,  15.0
EPS =  300000 / 20000 = 15.0   (For the year 2013-14)
நினைவில் கொள்க: 
  • EPS ஒரு நிறுவனத்தில் காலாண்டு மற்றும் ஒரு வருட முடிவின் அடிப்படையில் கணக்கிடப்படும்.
  • EPS வளர்ச்சி அதிகமாக உள்ள நிறுவன பங்குகளை வாங்குவது சிறந்தது.

 

 

பங்கு சந்தை பகுப்பாய்வு – 1.4 – Price to Book value

பங்கு சந்தை பகுப்பாய்வு – 1.4 – Price to Book value 

விலை / புத்தக மதிப்பு (P/Bv):
ஒரு பங்கின் சந்தை விலை அதன் ஒரு பங்கின் புத்தக மதிப்பை விட, எத்தனை மடங்கு உள்ளது என்பது தான், P/Bv.
உதாரணம்:
SKYTECH நிறுவனத்தின் ஒரு பங்கின் சந்தை விலை = 50 ரூபாய். அதன் ஒரு பங்கின் புத்தக மதிப்பு = 15. எனில், தோரயாமாக அதன் சந்தை விலை, புத்தக மதிப்பை விட 3 மடங்கு அதிகம் உள்ளது.
Market Price / Book Value (P/Bv):   50 / 15 = 3.33 Times (trading at 3.33 times its book value
 இந்த P/Bv விகிதத்தை அந்த நிறுவனத்தின், துறையில் உள்ள சக நிறுவனத்தின் P/Bv விகிதத்துடனும் ஒப்பிடு, நாம் பங்கினை தேர்ந்தெடுக்கலாம். ஒப்பிடுகையில், குறைவான(P/Bv) அதே சமயம் நல்ல நிறுவனமாக இருக்கும் பட்சத்தில் பங்கினை வாங்கலாம்.
நினைவில் கொள்க:
பொதுவாக, ஒரு நல்ல வளர்ச்சி நிறுவனத்தின் P/Bv விகிதம் அதிகமாக தான் இருக்கும்.

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !

 

www.varthagamadurai.com

 

நன்றி, வர்த்தக மதுரை

பங்கு சந்தை பகுப்பாய்வு – 1.3 – Book Value

பங்கு சந்தை பகுப்பாய்வு – 1.3 – Book Value 

புத்தக மதிப்பு (Book Value):
புத்தக மதிப்பு(Bv) என்பது, நிறுவனத்தின் சொத்துக்களிலிருந்து, கடன்களை கழித்தால் வருவது. (Assets – Liabilities)
உதாரணம்:
சொத்துக்கள்:  80,00,000 /-
கடன்கள்:  5,00,000 /-
புத்தக மதிப்பு = 80,00,000 – 5,00,000 = 75,00,000 /- ரூபாய்.
இந்த புத்தக மதிப்பு (75,00,000 /-) நாம் SKYTECH நிறுவனத்தில் பார்த்த 5,00,000 பங்குகளுக்கு சமம். ஆக, ஒரு பங்கின் புத்தக மதிப்பு :
75,00,000 Bv / 5,00,000 Shares =  15.
நினைவில் கொள்க:
  • புத்தக மதிப்பை நிகர மதிப்பு (NET WORTH) என்றும் சொல்வதுண்டு.
  • ஒரு பங்கின் புத்தக மதிப்பு அதிகமாக இருப்பது, நல்லது.
  • ஒரு நிறுவனம், ஏதோ சில காரணங்களால் மூடப்பட்டால், அதன் சொத்துக்களை விற்றால் பங்குதாரர்களுக்கு எவ்வளவு பணம் திரும்ப கிடைக்கும் என்றும் புத்தக மதிப்பை மதிப்பிடுவார்கள். ஆனால் நாம் காணும் புத்தக மதிப்பு உண்மைதானா என கண்டறிய நிறுவனத்தின் Balance Sheet ஐ ஆராய வேண்டும்.

 

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !

 

www.varthagamadurai.com

 

நன்றி, வர்த்தக மதுரை

பங்கு சந்தை பகுப்பாய்வு – 1.2 – Price to Book Value

பங்கு சந்தை பகுப்பாய்வு – 1.2 – Price to Book Value 

Price / Book Value (P/Bv) :      Price to Book Value
Price / Book Value பார்ப்பதற்கு முன், Book Value (புத்தக மதிப்பு), Face Value (முக மதிப்பு) பற்றி தெரிந்து கொள்வோம்.
Face Value (Fv):
முக மதிப்பு என்பது, SKYTECH நிறுவனம் தனது தொழிலுக்கான முதலீட்டை பொது மக்களிடம் இருந்து பெரும் நோக்கில், 50 லட்சம் நிதி திரட்டுகிறது. இந்த 50 லட்சங்களை, 10 ரூபாய் மதிப்பு கொண்ட 5,00,000 பங்குகளாக திரட்ட முடிவு செய்யப்படுகிறது.
அதாவது,  5,00,000 பங்குகள் X 10 ரூபாய்  =  50,00,000 ரூபாய்.
இந்த 10 ரூபாய் விகிதத்தை தான் நாம் முக மதிப்பு (Face Value) என்கிறோம்.
பொதுவாக, சந்தையில் ஒரு நிறுவனம் முக மதிப்பினை மற்றும் சந்தை முதலீடு கொண்டே பட்டியலிடப்படிகிறது. நீங்கள் ஒரு பங்கினை வாங்குகிறீர்கள் என்றால் 10 ரூபாய் பங்கினை தான் வாங்குகிறீர்கள் என்று அர்த்தம். சில நிறுவனங்கள் 10 ரூபாய் மதிப்பினை 50 ரூபாயாக சந்தையில் பட்டியலிட்டிருக்கும். இவ்வாறு 40 ரூபாய் அதிகமாக பட்டியலிட்டிருப்பதால், அதனை ப்ரீமியம் (Premium) என்கிறோம். இந்த ப்ரீமியம் தொகை கொண்ட முக மதிப்பு, அந்த நிறுவனத்தின் வளர்ச்சியை (அ) வளர போகும் நிலையை பொருத்து, நிறுவனமே நிர்ணயிக்கும். சந்தை முதலீடும் (50 லட்சம்) இந்த முக மதிப்பை கொண்டிருக்கும்.

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !

 

www.varthagamadurai.com

 

நன்றி, வர்த்தக மதுரை

பங்கு சந்தை பகுப்பாய்வு – 1.1 – Price to Earnings Growth

பங்கு சந்தை பகுப்பாய்வு – 1.1 – Price to Earnings Growth

P/E (Market Price/EPS): Price to Earnings

 

P/E (Price to Earnings) என்பது ஒரு பங்குக்கான வருமானத்தை போல, அந்த பங்கின் சந்தை விலை எத்தனை மடங்கு உள்ளது என கணக்கிடுவது.

 

உதாரணம்:

நாம் முன்னர் பார்த்த “SKYTECH” நிறுவனத்தின் EPS = 15.0 ரூபாய். அதனுடைய சந்தை விலை 90 ரூபாய் என கொள்வோம்.

இப்போது அதன் P/E = 90/15 = 6.0 மடங்கு

குறைந்த P/E இருப்பது நல்லது.

இந்த P/E விகிதத்தை நாம் தலை கீழாக பயன்படுத்தினால், நமது பங்கு முதலீடு எவ்வளவு லாபம்/நட்டம் தரும் என்பதை கணக்கிடலாம்.

1/PE * 100 = 1/6 * 100 = 16.66 %

ஆக, நமது பங்கு முதலீடு, 16.66 % லாபம் தருகிறது.
P/E ஐ நாம் வளர்ச்சியடனும் பொருத்தி பார்க்கலாம்.

 

P/E to Growth (PEG):    Price to Earnings Growth

 

உதாரணம்: 
“SKYTECH” நிறுவனம் கடந்த 5 வருட காலங்களாக, 15 % EPS வளர்ச்சியை கொடுக்கும் பட்சத்தில், அவற்றின் PEG

PEG Ratio = 5/15 = 0.333

PEG விகிதம் 1.0 கீழ் இருக்கும் பட்சத்தில், அந்த பங்கு சிறந்தது.

நினைவில் கொள்க:

 

  • P/E & PEG விகிதத்தை மட்டுமே ஒரு காரணியாக ஏற்று, நாம் பங்குகளை தேர்ந்தெடுக்க கூடாது. மற்ற காரணிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
  • பொதுவாக, நாம் கவனிக்கும் துறையில் மற்ற நிறுவனங்களை காட்டிலும் குறைந்த P/E உள்ள நிறுவனமாகவும், அந்த துறையின் சராசரி P/E ஐ விட குறைவாக உள்ள நிறுவனமாகவும் பார்க்கலாம்.
  • P/E விகிதம் ஒரு நிறுவனத்திற்கு குறைவாகவோ (அ) அதிகமாகவோ தேவைப்படலாம். அது அந்த நிறுவனம் மற்றும் துறையின் Demand & Supply + Growth பொருத்தது.

 

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !

 

www.varthagamadurai.com

 

நன்றி, வர்த்தக மதுரை

பங்கு சந்தை பகுப்பாய்வு – காரணிகள் ( Fundamental Analysis – Factors)

பங்கு சந்தை பகுப்பாய்வு – காரணிகள் ( Fundamental Analysis – Factors)

 

பங்கு சந்தை பகுப்பாய்வு பற்றிய புத்தகங்கள் இன்று  ஏராளமாக வந்து விட்டன.  நாம் அடிப்படை பகுப்பாயவுக்காக சில காரணிகளை இங்கு எடுத்துள்ளோம்.

Fundamental Analysis – Factors:

 

1. P/E  &  P/B (Price to Earning and Price to Book value)

2. EPS (Earning per share)

3. Sales & Profit – OPM, NPM, Other Income

4. ROE  & CAGR (Return on equity)

5. Debt Free / Debt – Equity Ratio

6. Dividend Yield

7. Interest Coverage Ratio

8. Cash Flow

9. Study the business of the stock (Think like a Biz-Bee !)

10. Pay your price (Intrinsic Value – Margin of Safety)

 

மேலுள்ளவற்றை, நமக்கு புரிகிற மொழியில் ஒன்றன் பின் ஒன்றாக பார்ப்போம்.

Read also:  Share Market Fundamental Analysis – Introduction

 

 

 

Financial Blog in Tamil