2017-18 பட்ஜெட்டும் , வருமான வரியும்…
Union Budget 2017 Highlights…
2017-18(Financial Year) ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கலை கடந்த பிப். 1 ம் தேதி நிதி அமைச்சர் அருண் ஜெட்லீ அறிவித்தார். அறிக்கைகளில் சில…
- விவசாய துறை 4.6 சதவீத அளவில் வளர்ச்சி அடையும். விவசாயத்துக்கான கடன் ரூ.10 லட்சம் கோடி வழங்கப்படும்.
- கிராமப்புற, விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த துறைகளுக்கு ரூ.1,87,223 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 24% அதிகம்.
- பிரதம மந்திரி கிராம் சதக் யோஜனாவின்(Pradhan Mantri Gram Sadak Yojana (PMGSY)) கீழ் ஒரு நாளைக்கு 133 கி.மீ சாலை அமைக்கப்படும்.
- 2019 ம் ஆண்டுக்குள் ஒரு கோடி ஏழைகளுக்கு வீடுகள் மற்றும் ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கு ரூ. 48,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
- வரும் நிதி ஆண்டில்(2017-18) உரமானியத்துக்கு ரூ.70,000 கோடி மற்றும் சுகாதார துறைக்கு ரூ.48,900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- உள் கட்டமைப்புத் துறைக்காக ரூ.3,96,135 கோடி மற்றும் பென்ஷன் இல்லாமல் பாதுகாப்புக்கான நிதி ரூ.2.74 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- மூத்த குடிமக்களுக்கான ஆதார் அட்டையில், அவர்களின் உடல் நலம் சம்மந்தமான விவரங்கள் (அறிக்கை) இடம்பெறும் வசதி.
- ரயில் பாதுகாப்பு நிதிக்காக ரூ. 1 லட்சம் கோடி ஒதுக்கப்படும்.
- IRCTC இணையதளத்தில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்களுக்கு சேவை கட்டணம் ரத்து மற்றும் 3,500 கி.மீ தூரத்துக்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும்.
- பென்ஷன் இல்லாமல் பாதுகாப்புக்கான நிதி ரூ.2.74 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் நீக்கப்படுகிறது மற்றும் அந்நிய நேரடி முதலீடு 36% உயர்ந்துள்ளது; தற்போதைய அந்நிய செலவாணி கையிருப்பு – 36,100 கோடி டாலர்.
- டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான ‘BHIM APP’ செயலியை 1 கோடி மக்கள் பயன்படுத்துவதாகவும், வணிகர்களுக்கான ‘AADHAR PAYMENT’ செயலி விரைவில் அறிமுகமாகும்.
- வரும் நிதியாண்டுக்கான(FY 2017-18) நிதி பற்றாக்குறை இலக்கு – 3.2 % அதற்கு அடுத்த அடுத்த ஆண்டுக்கான நிதி பற்றாக்குறை இலக்கு – 3 %
- ரொக்க பரிவர்த்தனைக்கான வரம்பு ரூ. 3,00,000 /-(Cash Transaction Limit)
- அரசியல் கட்சிகள் காசோலை மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் நன்கொடைகளை பெறலாம்.
- அரசியல் கட்சிகள் ரொக்கமாக ரூ.2,000/- மட்டுமே நன்கொடையாக வாங்க முடியும் மற்றும் கட்சிகள் கடன் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டுவதற்கு ரிசர்வ் வங்கி சட்டம் கொண்டு வர உள்ளது.
- ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 5 % வரி செலுத்தினால் போதும்; தற்போது இது 10 % வரியாக உள்ளது.
- ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலான வருமானத்துக்கு 10 % சர்சார்ஜ்(Surcharge) செலுத்த வேண்டும்.
- ரூ. 1 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் இருப்பவர்கள் 15 % சர்சார்ஜ்(Surcharge) செலுத்த வேண்டும்.
2017-18 நிதி ஆண்டுக்கான வருமான வரிகள்(Income Tax Slabs):
நன்றி,