நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் ? Personal Cash Flow

நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் ?  Personal Cash Flow

 

பணம், பணம், பணம் – எங்கும் பணம், எல்லாம் பணம்…

இந்த மாயை (நவீன யுகம்) உலகில் எங்கும் நிறைந்திருக்கிறது பணம் ! ஆனால் உண்மையில் நீங்கள் பணம் வைத்திருக்கிறீர்கள்; எவ்வளவு பணம் சம்பாதிக்கிறீர்கள் என  தெரியுமா ?

ஏன் சிலருக்கு பணம் பண்ணுவது  மிக எளிமையானதாகவும், சிலருக்கு கடினமானதாகவும் உள்ளது ?

பணம் படைத்தவர்கள் ஏன் பணத்தை பெருக்கி கொண்டே போகிறார்கள்; மற்றவர்களால் ஏன் முடியவில்லை ? பணக்காரர்கள் எப்படி அவ்வளவு அபரிதமான சொத்துக்களை கொண்டு வருமானம் சேர்க்க முடிகிறது (ஊழல்வாதிகள் எல்லாம் பணக்காரர்கள் அல்ல ) ? இதற்கான ரகசியம் தான், ‘நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள்  ? ’ என்பது. நான் நீங்கள் வேலைக்கு செல்வதையோ, தொழில் புரிவதையோ சொல்லவில்லை; மாறாக உங்களின் பணம் உங்களுக்கு எவ்வளவு சம்பாதித்து கொடுக்கிறது என்பதை தான் கேட்கிறேன்; உங்கள் சொத்து / முதலீடு உங்களுக்கு எவ்வளவு சம்பாதித்து கொடுக்கலாம் என்று தான் வினவுகிறேன்.

நீங்கள் சம்பாதித்தது…

ஒரு தனிநபர் மாதம் ரூ. 1,00,000 /- சம்பாதிக்கிறார் என வைத்துக்கொள்வோம்; அவரது மாதச்செலவு ரூ. 99,000 /- என்றால், உண்மையில் அவர் சம்பாதித்தது (1,00,000 -99,000)  ரூ. 1000 /- மட்டுமே;  1,00,000 /- சம்பளத்தை அல்ல ! இவ்வாறு நிலைமை இருக்கும் போது, எதிர்பாராவிதமாக ரூ. 1,00,000 வருமானம் உள்ளவரை நாம் பணக்காரர் என சொல்லிவிட்டு, மாதச்சம்பளம் ரூ. 20,000 /- பெறும் ஒருவர் மாத இறுதியில் ரூ. 5,000 /- மிச்சம் வைப்பவரை நடுத்தர / ஏழை என சாலையோரமாக சொல்லிவிட்டு செல்கிறோம்;

உண்மையில் நீங்கள் சம்பாதித்தது என்பது உங்கள் தேவை, விருப்பம் போக உள்ளது தான்;  உங்களிடம் ஒருவர் பணஉதவி நாடி வருகிறார்; நீங்கள் வாங்கும் ரூ. 1 லட்சம் சம்பளத்தில் 99,000 ரூ. செலவு என்று அவரிடம் சொன்னால், அவர் உங்களை எதுவும் சொல்லாமல் விட்டுவிட்டு சென்றாலே நீங்கள் தப்பித்தீர்கள் தான் 🙂   

பகவத்கீதையில் சொல்வது போன்று, ‘எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு ? ‘ – நிதி சார்ந்த விஷயத்திலும் சரியான கூற்று தான். இது தான் பணக்காரர்கள் பணக்காரர்களாக இருப்பதற்கும், ஏழைகள் ஏழைகளாக தொடர்வதற்குமான காரணம் ! கோடீஸ்வரர் பில் கேட்ஸ் சொல்வது  போல, ‘If you born poor, it’s not your fault. But if you die poor, it’s your mistake’  இதற்கும் பொருந்தும்; சரி விஷயத்திற்கு வருவோம்; தலைப்பை வைத்து விட்டு சீக்கிரம் விஷயத்தை சொல்ல வேண்டுமல்லவா !

உங்கள் சம்பாத்தியம் என்பது, ‘ உங்கள் வரவுக்குள் அடங்கும் செலவும், முதலீடு  மற்றும் சொத்து மீதான தொடர் வருமானமும் தான் ’.

 

உங்களிடம் ஒரு  சொந்த வீடு அன்றாட தேவைக்கு உள்ளது; இன்னொரு வீடு வாங்க (அ) கட்ட ஆசைப்படுகிறீர்கள்; ஆசைப்படுவது சரி தான், கடன் வாங்கி வீடு வாங்கியாச்சு, இதனை நாம் ஒரு சொத்தாக கருதுகிறோம்(கவுரவ சொத்து );  உங்களின் முதலாவது வீடு போல சும்மா வைத்திருந்தால் யாருக்கு என்ன லாபம் ?  –  வீட்டு வரிவசூல் செய்யும் நிர்வாகத்திற்கும், வீட்டு தேய்மானத்தை சரி பார்ப்பவருக்குமே 🙂  கண்டிப்பாக உங்களுக்கு இல்லை !  எந்த வருமானத்தையும் தராமல்  செலவை மட்டும் கொண்டது, எப்படி ஒரு சொத்தாகும் ? மாறாக அது ஒரு கடனே; அது உங்களை சுமக்க வைக்கும் வரிகள், தேய்மான செலவுகள், காப்பீடுகளால். அதற்கு பதிலாக நாம் அந்த வீட்டை கொண்டு மற்றவருக்கு உதவி செய்தால்(வாடகை) ஒரு சேவையும் செய்ததாகி விடும், ஒரு மாத தொடர் வருமானமும் கிடைக்கும்; வீட்டு வாடகை வருமானத்திலும் நாம் கவனம் கொள்ளவும்; அதாவது வீட்டு வாடகை மூலம் சராசரியாக மாத வருமானம் நமக்கு (முதலீட்டின் மீது-ஆண்டு வட்டி) 4 % கிடைத்தால் சரி, அதற்கு குறைவாக இருந்தால் வீடு வாங்குவதற்கு பதில் அந்த பணத்தை வங்கியிலோ (அ) வேறு முதலீட்டையோ அறியலாம்; முதலீட்டு பெருக்கத்தையும் சிந்திக்க வேண்டும். (வீட்டு வாடகை அதிகரிப்பு என கொள்ளை அடிக்காமல் இருந்தால் சரி )

 

உங்களிடம் தங்கம் ஆபரணமாக உள்ளது. வெறும் ஆபரணமாக பல வருடங்கள் வைத்திருப்பதால் பயனேதும் இல்லை; அது ஒரு செலவே. மாறாக, அது உங்களுக்கு ஒரு அவசர தேவையாக பணமாக மாறினால், முதலீட்டு பெருக்கமடைந்தால் பயனாக இருக்கும்; தங்கப்பத்திரமாக இருந்தாலும் வட்டி வருமானம் கிடைக்கலாம்; நீங்கள் பங்குச்சந்தையில் மற்றும் அதன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்தாலும் தொடர் மாத வருமானமும் பெறலாம், நீண்ட காலத்தில் முதலீடும் லாபமடையலாம்; ஆக, உங்களின் வேலை / தொழில் மூலம் கிடைத்த வருமானம், முதலீடு மற்றும் சொத்து மூலமாக உங்களுக்கு ஒரு தொடர் வருமானம் பெறுவது தான், சம்பாத்தியம்(Personal Cash Flow) ஆகும்.

 

உதாரணமாக, நீங்கள் ஒரு தொழிலை ரூ. 5,00,000 /- முதலீட்டில் தொடங்குகிறீர்கள். அந்த தொழிலுக்கான மாதச்செலவு ரூ.2,000 /- ஆகவும், மாத வருமானம் ரூ. 10,000/- ம் கிடைக்கிறது. இப்போது உங்கள் மாத லாபம்(10000 – 2000)  ரூ. 8,000/-. தொழிலில் ஏற்ற இறக்கமும் இருக்கலாம், வருமானத்திற்கும் கூட… அப்படி சில நேரங்களில் உங்களுக்கான வாடிக்கையாளர் தாங்கள் பெற்ற பொருள் (அ) சேவைக்கு தாமதமாக பணம் செலுத்துகிறார் என்றால், நீங்கள் நிர்ணயித்த காலத்திற்கான லாபமும் குறையலாம்; இதனால் உங்கள் மாதச்செலவுகளில் வித்தியாசம் ஏற்படலாம். நீங்கள் உண்மையில் கையில் பெற்ற தொகையை (தொடர் வருமானம்) சம்பாத்தியம் என்றேன். அப்படி என்றால் இந்த தொழிலிலும் தொடர் வருமானம் என்பது சில நேரங்களில் தாமதமாகிறது. – வேலைக்கும் இது தான் !

 

வேலைக்கு செல்பவருக்கு போனஸ் / சம்பள உயர்வு அறிவிப்பு வந்தவுடன், அவர் அப்போதே தனது கனவு கோட்டையை கட்டி விட்டு செலவுகளை செய்து விடுவார்; ஆனால் போனஸ் / சம்பள உயர்வு என்னவோ சில மாதங்களுக்கு பிறகு தான் கையில் வந்து சேரும். சம்பளம் அதிகமாக வரும் என முன்கூட்டியே கடன் வாங்கி செலவழிப்பவரும் உண்டு; கடனுக்கு வட்டியும் கட்ட வேண்டும்; ஆனால் அவருக்கு தாமதமாக கிடைத்த போனஸ் / சம்பளத்துக்கான வட்டியை யாரிடம் கேட்பது ? !

 

RichDad PoorDad இணைய தளத்தில் Robert Kiyosaki அவர்களின் “CASH FLOW CLASSIC” விளையாட்டை ஒரு முறை விளையாடி பாருங்கள்; உங்களது வரவு-செலவுகளை பற்றிய ஒரு புரிதல் கிடைக்கும்; நீங்கள் எவ்வளவு தான், ‘ எனக்கு இவ்வளவு  மதிப்பில் சொத்து உள்ளது (அ) என் தகுதிக்கு இவ்வளவு சம்பளம் கிடைக்கும் ‘ என சொன்னாலும் அனுபவித்தால் (கையில் ரொக்கமாக பெறுதல்) மட்டுமே அது சம்பாத்தியம். இதை தான் பெரும் பணக்காரர்கள் தங்கள் தொழில், முதலீடு மற்றும் கட்டிடங்களின் மூலம் ஒவ்வொரு நாளும் தொடர் வருமானம் பெறுகின்றனர்; Cash Flow என்பது பணக்காரருக்கு மட்டுமானதல்ல… மாத வருமானம், சிறு தொழில் செய்பவருக்கும் தான். உங்கள் அஞ்சலக சேமிப்பில், சீட்டு சேமிப்பில், வங்கி வட்டி வருமானத்தில் பெறுங்கள். உங்கள் சொத்துக்களை சும்மா இருக்க விட வேண்டாம்.

 

அனுபவியுங்கள் உங்கள் சம்பாத்தியத்தை !

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !  

(Feature image courtesy: startupbros.com)

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s