வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.40 சதவீதமாக குறைப்பு
REPO rate cut to 5.40 Percent – RBI
நேற்று (07-08-2019) நடைபெற்ற மத்திய நிதி கொள்கை குழு கூட்டத்தின்(Monetary Policy Committee) முடிவில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 35 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய ரெப்போ வட்டி விகிதம் 5.75 சதவீதத்திலிருந்து 5.40 சதவீதமாக குறைந்துள்ளது.
ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 5.15 சதவீதமாகவும், வங்கி விகிதம் மற்றும் விளிம்பு நிலை(MCLR) விகிதம் 5.65 சதவீதமாகவும் மாற்றப்பட்டுள்ளது. ரொக்க கையிருப்பு 4 சதவீதம் என்ற நிலையிலும், எஸ்.எல்.ஆர்.(SLR) விகிதம் 18.75 சதவீதமாகவும் உள்ளது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பொருளாதார மந்த நிலை காரணமாகவும், அதே சூழ்நிலையில் பணவீக்க விகிதத்தை கவனத்தில் கொண்டும், இந்த வட்டி விகித குறைப்பு அறிவிக்கப்பட்டதாக பாரத ரிசர்வ் வங்கி(Reserve Bank of India) சார்பில் கூறப்பட்டுள்ளது. இரு நாடுகளிடையே ஏற்பட்டுள்ள வர்த்தக போர், அமெரிக்காவில் தொழில் முதலீடு பலவீனமாக இருப்பது, பிரிட்டனின் பிரெக்ஸிட்(Brexit) நிகழ்வால் உற்பத்தி துறைக்கு சாதகம் இல்லாமை போன்றவை உலகளாவிய பாதிக்கும் காரணிகளாக சொல்லப்பட்டுள்ளன.
ஜப்பானின் தொழில்துறை புள்ளி விவரங்கள், வரும் இரண்டாம் காலாண்டிலும் பொருளாதாரம் மந்தமடைய கூடும் என்ற செய்தியை தெரிவிக்கிறது. வேகமாக வளரும் நாடுகளில் பொருளாதார புள்ளி விவரங்கள் சாதகமாக இல்லை என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
சீனா, ரஷ்யா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் உற்பத்தி துறை மற்றும் விற்பனை வளர்ச்சி வெகுவாக குறைந்துள்ளது. இந்த நிலை அடுத்த காலாண்டிலும் நீடிக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது. வாகன துறையில்(Automotive Sector) ஏற்பட்டுள்ள சுணக்கம் சரி செய்யப்பட்டால் தான் அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்குவிக்கும்.
பணப்புழக்கத்துக்கான உபரி தொகை(Liquidity Surplus) போதுமான அளவு இருப்பதாக மத்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ஜூன் மாத முடிவில் இது 51,710 கோடி ரூபாயாகவும், ஜூலையில் ரூ. 1,30,931 கோடியாகவும் இருந்துள்ளது. நடப்பு ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி வரை உள்ள உபரி தொகை, ரூ. 2,04,921 கோடி.
உள்நாட்டில் மழைப்பொழிவு, உற்பத்தி துறை மற்றும் வீட்டு மனை துறை தொய்வு நிலையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தனியார் முதலீடும் தேவையான அளவு வரவில்லை. நடப்பு நிதி வருடத்தில் நாட்டின் பணவீக்க விகிதம்(Inflation) 4 சதவீதத்திற்குள் இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இது போல நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்திற்கு கீழ் இருக்கும் எனவும், தற்போது குறைக்கப்பட்ட வட்டி விகிதம் கடந்த ஒன்பது வருடங்களில் இல்லாத அளவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை