ரெப்போ வட்டி விகிதம் 6 சதவீதமாக குறைப்பு – பாரத ரிசர்வ் வங்கி
REPO Rate reduced to 6 percent by 0.25 bps cut – RBI
மத்திய நிதி கொள்கை குழு கூட்டம் மூன்று நாட்களாக நடந்திருந்த நிலையில் நேற்றுடன் முடிவடைந்தது. கடைசி நாளான நேற்று(04-04-2019) நிதி கொள்கை குழு சார்பில் அறிவிக்கப்பட்ட வட்டி விகித மாற்றத்தில் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி(Repo Rate) விகிதம் 0.25 புள்ளிகள் குறைக்கப்பட்டு 6 சதவீதமானது. நடப்பு 2019ம் வருடத்தில் இரண்டாவது முறையாக பாரத ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ஆறு நபர்கள் கொண்ட நிதி கொள்கை குழுவில்(Monetary Policy Committee) நான்கு பேர் மட்டுமே வட்டி விகித குறைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது. தற்போதைய ரெப்போ வட்டி விகித குறைப்பு, வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் வட்டி விகிதத்திலும் குறைக்கப்பட வேண்டும்.
ரிவெர்ஸ் ரெப்போ(Reverse Repo) விகிதம் 5.75 சதவீதமாகவும், வங்கி விகிதம்(Bank Rate) 6.25 சதவீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சி.ஆர்.ஆர்.(CRR) விகிதம் 4 சதவீதத்திலும், எஸ்.எல்.ஆர்.(SLR) விகிதம் 19.25 சதவீதத்தில் இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. கடந்த ஐந்து வருட காலத்தில் வங்கிகளின் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் பத்து சதவீதத்திலிருந்து 8.7 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் வங்கி வைப்பு நிதிக்கான(Fixed Deposit) வட்டி விகிதம் 9 சதவீதத்திலிருந்து 6.7 சதவீதம் வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
What is Bank Repo Rate ?
நடப்பு நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் எனவும், இது முதல் அரையாண்டில் 6.8 – 7.1 சதவீதம் என்ற அளவிலும், இரண்டாம் அரையாண்டில் 7.3 – 7.4 என்ற சதவீதத்திற்குள் இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. 2019-20ம் நிதி வருடத்தின் முதல் அரையாண்டில் நாட்டின் பணவீக்கம்(Inflation Rate) 3 சதவீதத்திற்குள் இருக்கும் எனவும், இரண்டாம் அரையாண்டில் 3.5 சதவீதத்திலிருந்து 3.8 சதவீதம் வரை இருக்கலாம் என பாரத ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
சொல்லப்பட்ட பொருளாதார வளர்ச்சி மற்றும் பணவீக்க மதிப்பீடு, முன்னர் சொல்லியிருந்த மதிப்பீட்டை விட குறைவாகும். நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் முதலீட்டு நடவடிக்கைகளில் மந்த நிலை காணப்படுவதால் கடந்த 2018-19ம் நிதியாண்டில் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறைவாக இருந்திருக்கும் என பாரத ரிசர்வ் வங்கி(Reserve Bank of India) தெரிவித்துள்ளது.
பொதுவாக வங்கிகளின் வட்டி விகிதம் குறையும் போது, 10 வருட கால அரசு பத்திரங்களின்(Bond yield) வட்டி அதிகரிக்கும். அதே போல வங்கிகளில் வட்டி விகிதம்(Interest Rate) அதிகரிக்கப்படும் நிலையில், பத்திரங்களின் வட்டி விகிதம் குறைவாகவே காணப்படும். இதனை சார்ந்து முதலீட்டாளர்களின் முதலீட்டு சாதனமும் மாறுபடும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை