ஒன்பது மாதங்களில் 44 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது – EPFO

ஒன்பது மாதங்களில் 44 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது – EPFO

44 Lakhs Jobs Created in 9 Months – EPFO

 

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees’ Provident Fund Organization -EPFO) கடந்த வெள்ளிக்கிழமை வேலைவாய்ப்பு சம்மந்தமான ஒரு தகவலை வெளியிட்டது. கடந்த செப்டம்பர் 2017 இலிருந்து 2018 மே மாதம் வரை, ஒன்பது மாதங்களில் நாட்டில் 44 லட்சத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என கூறியுள்ளது.

 

2017 செப்டம்பர் – 2018 ஏப்ரல் காலத்தில் வருங்கால வைப்பு நிதி புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 41.26 லட்சமாகும். கடந்த மே மாதத்தில் மட்டும் புதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 7 லட்சமாகும்.

 

மே மாதத்தின் புதிய உறுப்பினர் சேர்க்கையில் 18-21 வயது பிரிவில் மட்டும் 2.50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். 22-25 வயது பிரிவில் புதிய உறுப்பினர்களின் சேர்க்கை 1.90 லட்சமாகும் என்பது கவனிக்கத்தக்கது.

 

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியமைப்பு சுமார் 6 கோடி உறுப்பினர்களையும், 10 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியையும் நிர்வகிக்கிறது.

 

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதியில் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை தங்களது வருமானத்திலிருந்து சேமிக்கின்றனர். ஊழியர்களின் நிறுவனமும், ஊழியர்களின் சார்பில் ஒரு குறிப்பிட்ட சதவீத பங்களிப்பை செலுத்திகிறது.

 

EPFO அமைப்பின் சார்பில் மூன்று விதமான வருங்கால வைப்பு நிதி திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியமைப்பு(EPFO) 1952 ம் வருடம் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும். இது தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் (Ministry of Labour and Employment) மற்றும் இந்திய அரசின் கீழ் இயங்கி வருகிறது.

 

மேலே குறிப்பிடப்பட்ட தரவுகள் அந்தந்த மாதத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை என்றும், அவர்களின் பங்களிப்பு அடுத்தடுத்த மாதத்தில் தவறும் பட்சத்தில் தரவுகளின் எண்ணிக்கையிலும் மாறுபாடு இருக்கலாம் என EPFO அமைப்பு கூறியுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

ஜூன் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 17.57 சதவீதமாக உயர்வு

ஜூன் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 17.57 சதவீதமாக உயர்வு

India’s Export rose to 17.57 Percent – June 2018

 

ஜூன் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி விகிதம் 17.57 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த உயர்வு இருந்த போதிலும் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 16.6 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது.

 

ஜூன் மாதத்தின் வர்த்தக பற்றாக்குறை (Balance of Trade) கடந்த ஐந்து வருட அதிகபட்ச உயர்வாக உள்ளது. இந்த பற்றாக்குறை உயர்வுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரித்ததே காரணமாகும். எண்ணெய் இறக்குமதி ஜூன் மாதத்தில் 57 சதவீதமாக அதிகரித்து 12.73 பில்லியன் டாலராக இருந்தது.

 

மே மாதத்தில் வர்த்தக பற்றாக்குறை 14.62 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதத்தின் ஏற்றுமதி 27.7 பில்லியன் டாலராக (ஒரு வருடத்தில்) இருந்துள்ளது. இறக்குமதி 21 சதவீதம் அதிகரித்து 44.3 பில்லியன் டாலராக உள்ளது.

 

தங்கம் இறக்குமதி (Gold Import) கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது, 2.8 சதவீதம் குறைந்து ஜூன் மாதத்தில் 2.39 பில்லியன் டாலராக உள்ளது. ஜூன் மாத சில்லரை பணவீக்கம் 5 சதவீதமாக இருப்பதாக மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

 

India Trade balance

(Data courtesy: tradingeconomics.com)

 

நாட்டின் சில்லரை பணவீக்கம்(Retail Inflation) கடந்த மே மாதத்தில் 4.87 சதவீதமாக இருந்தது கவனிக்கத்தக்கது. மத்திய ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் 6.25 % அளவில் உள்ளது. வரும் ஆகஸ்ட் 1 ம் தேதி ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கூட்டத்தில் வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

.

 

2000 எஸ்.பி.ஐ. கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களை ஏமாற்றிய கால்சென்டர்

2000 எஸ்.பி.ஐ. கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களை ஏமாற்றிய கால்சென்டர்

SBI Credit Card Holders cheated by Fake Call center

 

தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருந்த போதிலும், தொழில்நுட்ப திருட்டுகளும் அதிகமாக நடந்து வருகின்றன. இதிலும் குறிப்பாக வங்கி மோசடிகள் தொழில்நுட்பத்தின் உதவி கொண்டே பெரும்பாலும் நடைபெறுகின்றன.

 

சமீபத்தில் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்  நகரில் உள்ள ஒரு ஆன்லைன் ஷாப்பிங் இணையதளத்தின் மூலம் மோசடி நடந்துள்ளது. போலி கிரெடிட் கார்டு கால் சென்டர் மூலம்,  jayyshree.com என்ற இணையதள பரிவர்த்தனைகள் வாயிலாக OTP – ஒரு முறை கடவுச்சொல்லை கொண்டு 2000 எஸ்.பி.ஐ. கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களை  ஏமாற்றியுள்ளனர்.

 

2000 கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களிடம் மொத்தமாக சுமார் 5 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடியில் 30 டெலி காலர்கள்(Tele Callers) என்று சொல்லப்படும் கால்சென்டர் தொலைபேசி அழைப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவற்றில் பெரும்பாலும் பெண் அழைப்பாளர்களே ஆவர்.

 

மோசடியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் சைபர் கிரைம் போலீசார் கடந்த ஜூலை 8 ம் தேதி கைது செய்துள்ளனர். இது குறித்து சைபர் கிரைம் ஆணையர் கூறியதாவது, ‘ எஸ்.பி.ஐ. கிரெடிட் கார்டு பிரிவு ஊழியர்கள் பேசுவது போன்று, வாடிக்கையாளர்களிடம் தொலைபேசியில் பேசி கிரெடிட் கார்டு விவரங்களை  சேகரித்து, அதன் மூலம் ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு மோசடி செய்துள்ளனர் ‘ என்றார்.

 

இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட விஜய் குமார் சர்மா என்ற நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர். ஆன்லைன் பரிவர்த்தனைகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளில் வாடிக்கையாளர்கள் கவனமாக செயல்படும் படி சைபர் கிரைம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

வருமான வரி தாக்கலுக்கு எந்தெந்த படிவங்களை பயன்படுத்த வேண்டும் ?

விவசாயிகளுக்கான கரீப் பருவ குறைந்த பட்ச ஆதார விலையை உயர்த்தியது – அமைச்சரவை

விவசாயிகளுக்கான கரீப் பருவ குறைந்த பட்ச ஆதார விலையை உயர்த்தியது – அமைச்சரவை

Government hikes Minimum Selling Price for Kharif Crops

பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதலுக்கு பின், கரீப் பருவ பயிர்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலையை (Minimum Selling or Support Price – MSP) உயர்த்துவது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்தார்.

 

விவசாயிகளுக்கான கரீப் பருவம் வரும் அக்டோபர் மாதம் துவங்கும் நிலையில், கோடை கால அறுவடை பயிர்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலையை அரசு அறிவித்துள்ளது.

 

குறைந்த பட்ச ஆதார விலையை உயர்த்தும் வண்ணம் அரசு 15,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். வருட – வருடாந்திர காலத்துடன் ஒப்பிடும் போது ராகி முதலிடத்திலும், அதற்கடுத்தாற் போல் எண்ணெய் வித்துக்களும் உள்ளன.

 

ராகி 100 கிலோவுக்கு ரூ. 2897 /- ஆக உயர்த்தியுள்ளது. இது கடந்த வருடத்துடன் பார்க்கும் போது, 52 சதவீதம் அதிகமாகும். அதே போல எண்ணெய் வித்துக்களுக்கு 100 கிலோவுக்கு 5,977 /- ரூபாயாக நிர்ணயித்துள்ளது. இது 45 சதவீத உயர்வாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கலப்பின சோளம் 100 கிலோவுக்கு 2,430 /- ரூபாயாக 42 சதவீதம் உயர்த்தி விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொது ரக நெல்லுக்கு 100 கிலோவுக்கு ரூ. 200 வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. 2018-19 பருவ காலத்தில் 100 கிலோ ரூ. 1,750 /- என சொல்லப்பட்டிருக்கிறது.

 

ஏற்கனவே கடந்த பட்ஜட்டில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லீ, அனைத்து பயிர்களுக்கும் அதன் உற்பத்தி தொகையில் குறைந்தபட்சம் அரை மடங்கு விலையை அரசு நிர்ணயிக்கும் என கூறியிருந்தார். அதன் அடிப்படையில் இப்போது விலை உயர்த்தப்பட்டதாக அமைச்சரவை வெளியிட்டுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

நிதி பற்றாக்குறை ஒதுக்கப்பட்ட அளவை விட குறைவாக இருக்கும் – நிதி அமைச்சர்

நிதி பற்றாக்குறை ஒதுக்கப்பட்ட அளவை விட குறைவாக இருக்கும் – நிதி அமைச்சர்

Fiscal Defit would be below budgeted level of 3.3 percent

 

2018-19 ம் நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதி பற்றாக்குறை (Fiscal Deficit)  3.3 சதவீத அளவுக்குள் இருக்கும் என நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். நடப்பு நிதியாண்டு முழுவதும், ஒதுக்கப்பட்ட 3.3 சதவீத அளவை விட நிதி பற்றாக்குறை குறைவாக இருக்கக்கூடும் என அவர் கூறியுள்ளார்.

 

அதே நேரத்தில், நடப்பு நிதியாண்டின் முதல் இரு மாதங்களிலேயே ஒதுக்கப்பட்ட அளவில் 55 சதவீத அளவை எட்டியது. இந்த நிதி வருடத்தின் ஒதுக்கப்பட்ட நிதி பற்றாக்குறை விகிதம் நாட்டின் ஜி.டி.பி. (GDP) ல் 3.3 சதவீதம் என்ற போதிலும், 2017-18 இந்த அளவு 3.53 சதவீதமாக இருந்தது.

 

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-மே மாத காலத்தில், நிதி பற்றாக்குறை அளவு ரூ. 3.45 லட்சம் கோடியாகும். இந்த அளவு, இந்த வருடத்தின்ஒதுக்கப்பட்ட நிதி பற்றாக்குறை அளவில் 55 சதவீதத்தை எட்டியது. நிதி பற்றாக்குறை என்பது பொதுவாக அரசின் வரவுக்கும், செலவுக்கும் இடையேயான அளவாகும்.

 

இந்த நிதியாண்டில் சரக்குகள் மற்றும் சேவை வரிகளின் (GST) வருவாய் ரூ. 13 லட்சம் கோடிக்கு மேலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  2017-18 ம் ஆண்டில் ஏப்ரல்-மே மாதத்தில் நிதி பற்றாக்குறை ஒதுக்கப்பட்ட அளவில் 68 சதவீதத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது.

 

தொழில் துறை தொழிலாளர்களின் பணவீக்கம் (Retail Inflation for Industrial Workers)  கடந்த மே மாதத்தில் 3.96 சதவீதமாக இருந்தது. இந்த விகிதம் ஏப்ரல் மாதத்தில் 3.97 % ஆக இருந்தது. உணவு பொருட்களுக்கான சில்லரை பணவீக்கம் 1.66 சதவீதமாக உயர்ந்துள்ளது.

 

மீன், கோழி, முட்டை, வெங்காயம், உருளை கிழங்கு, பால் மற்றும் நெய் போன்ற உணவு பொருட்கள் விலை உயர்ந்தும், கோதுமை, மாம்பழம், வெண்டை, மற்றும் கடுகு எண்ணெய் போன்றவை விலை குறைந்தும் காணப்பட்டது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

பிரான்சைஸ் வியாபாரத்தை ஊக்குவிக்கும் முதல் முறை தொழில்முனைவோர்

பிரான்சைஸ் வியாபாரத்தை ஊக்குவிக்கும் முதல் முறை தொழில்முனைவோர்

First time Entrepreneurs are promoting the Franchise Business Model

 

இந்தியாவில் புதுமையான தொழில்களும், தொழில்முனைவோர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உரிமையாளர்கள் வணிகம் என்று சொல்லப்படும் பிரான்சைஸ் (Franchise Business) வியாபாரம் இன்றளவில் மேம்பட்டு கொண்டிருக்கும் தொழிலாகவும் உள்ளது.

 

ஏற்கனவே சந்தையில் வியாபாரமாகும் ஒரு தொழிலின் உரிமையை பயன்படுத்துவதற்கு பிரான்சைஸ் முறை துணைபுரிகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த துறை 30-35 சதவீத வளர்ச்சியை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இந்திய சந்தை வளர்ந்து வரும் சூழ்நிலையில், பிரான்சைஸ் வியாபாரம் உலகளவில் 25 சதவீத இடத்தை தக்க வைத்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இதன் விகிதம் 13 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

 

தற்போது நாட்டில் உள்ள பிரான்சைஸ் வியாபார அளவு சுமார் 48 பில்லியன் அமெரிக்க டாலராகும். உலகளவில் அமெரிக்காவை அடுத்து இந்தியா தான் பிரான்சைஸ் முறை தொழிலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

இந்தியாவில் 4600 பிரான்சைஸ் நிறுவன உரிமையாளர்களும், ஒன்றரை லட்சம் பிரான்சைஸீகளும் உள்ளனர். பிரான்சைஸ் வியாபாரம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 150 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையதாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.

 

பிரான்சைஸ் வியாபாரத்தில் ஈடுபடுவோரில் 35 சதவீதம் முதல் முறை தொழில்முனைவோர் ஆவார்கள். இந்த 35 சதவீதம் பேர், இதுவரை எந்த தொழிலும் செய்யாமல், முதல் முறை தொழிலாக பிரான்சைஸ் வியாபாரத்தை தேர்ந்தெடுத்துள்ளனர்.

 

மேலும் இந்த வியாபாரத்தை பெரிதும் ஊக்குவிப்பது முதல் முறை தொழில்முனைவோர்கள் தான் என்று சொல்லப்படுகிறது. பிரான்சைஸீ(Franchisee) என்பவர் தான் பெறும் தொழிலின் உரிமையாளருக்கு (Franchisor) ஒரு தொகையை கட்டணமாக செலுத்தி விட்டு, அந்த தொழிலின் பகுதி உரிமையை பெறுகிறார். வியாபார வளர்ச்சியை பொறுத்து, அதன் உரிமையாளருக்கு ராயல்டி தொகையை பிரான்சைஸீ கொடுக்கிறார்.

 

அதற்கு பதிலாக உரிமையாளரின் வணிக சின்னம், தொழில் கொள்கை மற்றும் பயன்பாடை பிரான்சைஸீ பெறுகிறார். ஒரு வணிக உரிமையாளர் தனது சேவை மற்றும் தயாரிப்புகளை மற்றொருவருக்கு பகுதி அளவில் உரிமையை கொடுப்பதே பிரான்சைஸ் வியாபாரத்தின் நோக்கம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

2025 ல் மூன்றாவது மிகப்பெரிய நுகர்வோர் சந்தையாக இந்தியா திகழும்

2025 ல் மூன்றாவது மிகப்பெரிய நுகர்வோர் சந்தையாக இந்தியா திகழும்

Aim to World’s third and largest Consumer Market in 2025

 

நாட்டின் தொழில் முனைவு முன்னேற்றமும், முதலீட்டு வாய்ப்புகளும் அதிகரித்து இருப்பதால் இந்தியா 2025 ல் மூன்றாவது மிகப்பெரிய நுகர்வோர் சந்தையாக திகழும் என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.

 

மேலும் அவர் கூறுகையில், ‘ இந்தியாவின் பொருளாதாரம் சுமார் 5 டிரில்லியன் அமெரிக்க டாலரை நோக்கி பயணித்து வருகிறது. உலக வங்கி மற்றும் சர்வேதச நாணய நிதிய அறிக்கையின் படி, நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகரித்து கொண்டே செல்கிறது. வருங்காலத்திலும் இது நல்ல முன்னேற்றத்தில் பயணிக்கும்.

 

இந்தியா – கிரீஸ் இரு நாடுகளுக்கிடையே வர்த்தகம் 530 மில்லியன் டாலராக உள்ளது. இன்று நம் நாட்டில் வணிக ரீதியாக ஏராளமான வாய்ப்புகள் குவிந்துள்ளன. வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பங்களிப்பும் திருப்திகரமாக உள்ளது.

 

மத்திய ஐரோப்பிய நாடுகளில் உட்கட்டமைப்பு, மருந்து மற்றும் எஃகு துறைகளில் சில இந்திய நிறுவனங்களும் உள்ளன. கிரீஸ் மற்றும் இந்தியாவின் பண்டைய கால நாகரிகம் மற்றும் பண்பாடு தங்கள் கொள்கைகளை பறைசாற்றுகின்றன.

 

இரு நாடுகளுக்கிடையேயான உறவும் மிக பழமையானது மற்றும் ஆழமானதும் கூட ‘ என்றார். கடந்த 11 ஆண்டுகளில் கிரீஸ் நாடு சென்ற முதல் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆவார்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

மே மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி – 20 % வளர்ச்சி

மே மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி – 20 % வளர்ச்சி

20 Percent rise in Exports on May 2018

 

கடந்த மே மாதத்தில் நாட்டின் மொத்த ஏற்றுமதி விற்பனை 20 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. பொறியியல் சாதனங்கள், ரசாயனங்கள் மற்றும் மருந்து பொருட்கள் இந்த ஏற்றுமதி வளர்ச்சிக்கு துணை புரிந்துள்ளன.

 

கச்சா எண்ணெய் விலை உயர்வால், வெளியே செல்லும் போக்குவரத்தின் மதிப்பும் அதிகரித்ததால் ஏற்றுமதிக்கான வளர்ச்சியை அதிகப்படுத்தியுள்ளது. 20 சதவீத வளர்ச்சியானது கடந்த 6 மாத காலத்தில் அதிகபட்ச வளர்ச்சியாகும். ஏப்ரல் 2018 ல் ஏற்றுமதி வளர்ச்சி 5.7 சதவீதமாகும்.

 

சமீபத்தில் வெளியிடப்பட்ட பணவீக்க அறிக்கையில், நடந்து முடிந்த மே மாதத்தின் பணவீக்கம் 4.43 % ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது ஒரு வருடத்தில் இல்லாத அதிகபட்ச பணவீக்கமாகும். இந்நிலையில் அந்த மாதத்தில் ஏற்றுமதி வளர்ச்சி விகிதம் சற்று நிறைவை கொடுத்துள்ளது.

 

மே மாதத்தில் ஏற்றுமதி 28.80 பில்லியன் அமெரிக்க டாலராகவும், அதே நேரத்தில் இறக்குமதி 43.40 பில்லியன் டாலராகவும் உள்ளது கவனிக்கத்தக்கது. வர்த்தக பற்றாக்குறை(Trade Deficit) நான்கு மாத உயர்வாக 14.60 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது.

 

ஆடை ஏற்றுமதி சரிந்திருந்த போதிலும், ஜவுளித்துறை இரட்டை இலக்க வளர்ச்சியை கொண்டிருக்கிறது. பொறியியல் சாதனங்கள் 14 சதவீதத்தையும், மருந்து பொருட்கள் 25 சதவீதத்தையும், பால் மற்றும் இறைச்சி 14 சதவீத வளர்ச்சியையும் கொண்டுள்ளன. ஆனால் பெட்ரோலிய ஏற்றுமதி வளர்ச்சி 100 % க்கு மேலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

வர்த்தக பற்றாக்குறை அதிகரிப்புக்கு, இறக்குமதி சதவீதம் அதிகரித்ததே பெரும் காரணமாக அமைந்தது. கடந்த ஏப்ரலில் 4.60 % ஆக இருந்த இறக்குமதி வளர்ச்சி சதவிகிதம், மே மாதத்தில் 15 % ஆக அதிகரித்தது. இதனால் முதல் காலாண்டில் (2018-19) நடப்பு கணக்கு பற்றாக்குறை(Current Account Deficit – CAD) பாதிக்கப்படும். கடந்த நிதியாண்டின்(2017-18)  நான்காம் காலாண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை GDP ல் 1.9 சதவீதமாகும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

மெய்நிகர் நாணய தடையில் எந்த மாற்றமுமில்லை – ரிசர்வ் வங்கி

மெய்நிகர் நாணய தடையில் எந்த மாற்றமுமில்லை – ரிசர்வ் வங்கி

No Change or Research on Cryptocurrency Ban – RBI

‘கிரிப்டோ கரன்சி’ (Cryptocurrency) எனப்படும் மெய்நிகர் நாணய வர்த்தகம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒன்று. மெய்நிகர் நாணயங்கள்  Bitcoin, Ethereum, Litecoin, Ripple, Stellar என பல்வேறு வகைகளில் இணையத்தில் வர்த்தகமாகின்றன.

 

ஏறத்தாழ 1500 க்கும் மேற்பட்ட மெய்நிகர் நாணய வகைகள் மற்றும் அதன் வர்த்தக மதிப்பு 27,320 கோடி அமெரிக்க டாலராக இருப்பதாகவும் மெய்நிகர் நாணய தளங்கள் சொல்கின்றன.

 

இணையதள வாயிலாக செயல்படும் இந்த பரிமாற்றத்தில் தொழில்நுட்ப ரீதியாக நம்பகத்தன்மை இல்லை என்று பல நாடுகள் மெய்நிகர் பரிமாற்றத்தை தடை செய்துள்ளன. இவற்றில் இந்தியாவும் ஒரு நாடாக உள்ளது. இருப்பினும், சில வெளிநாட்டு மெய்நிகர் இணையதள தரகர்கள் மூலம் இந்தியாவில் இந்த கிரிப்டோ கரன்சி வர்த்தகம் சட்டவிரோதமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

 

இன்னும் இதற்கான சட்டங்களும், ஒழுங்குமுறை கொள்கைகளும் தெளிவாக தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் தகவல் அறியும் உரிமை (RTI) சட்டத்தின் கீழ் வருண் சேதி என்ற தொழில் ஆலோசகர், மெய்நிகர் நாணயம் சம்மந்தமாக பாரத ரிசர்வ் வங்கியிடம் தகவல் கேட்டிருந்தார்.

 

இதற்கு பதிலளித்த ரிசர்வ் வங்கி, ‘ மெய்நிகர் நாணயம் சம்மந்தமாக இதுவரை  எந்த குழுவும் அமைக்கப்படவில்லை, இது சார்ந்து எந்த ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்படாது. மேலும் மற்ற நாடுகளுடன் கலந்து ஆலோசிக்கும் எண்ணம் இதுவரை இல்லை’ எனவும் கூறியுள்ளது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

கடந்த ஏப்ரல் 6 ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஒரு அறிக்கையில் (Prohibition on dealing in Virtual Currencies) மெய்நிகர் நாணய வர்த்தகம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒன்று எனவும்(Ban in India), இதனை கையாள்வதில் வங்கிகள், இ-வாலட் தளங்கள், பணப்பரிமாற்ற சேவை வழங்குவோர் மற்றும் வேறு ஏதேனும் தொழில் முனைவோர்களும் ஈடுபட வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

Financial Blog in Tamil