மெய்நிகர் நாணய தடையில் எந்த மாற்றமுமில்லை – ரிசர்வ் வங்கி

மெய்நிகர் நாணய தடையில் எந்த மாற்றமுமில்லை – ரிசர்வ் வங்கி

No Change or Research on Cryptocurrency Ban – RBI

‘கிரிப்டோ கரன்சி’ (Cryptocurrency) எனப்படும் மெய்நிகர் நாணய வர்த்தகம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒன்று. மெய்நிகர் நாணயங்கள்  Bitcoin, Ethereum, Litecoin, Ripple, Stellar என பல்வேறு வகைகளில் இணையத்தில் வர்த்தகமாகின்றன.

 

ஏறத்தாழ 1500 க்கும் மேற்பட்ட மெய்நிகர் நாணய வகைகள் மற்றும் அதன் வர்த்தக மதிப்பு 27,320 கோடி அமெரிக்க டாலராக இருப்பதாகவும் மெய்நிகர் நாணய தளங்கள் சொல்கின்றன.

 

இணையதள வாயிலாக செயல்படும் இந்த பரிமாற்றத்தில் தொழில்நுட்ப ரீதியாக நம்பகத்தன்மை இல்லை என்று பல நாடுகள் மெய்நிகர் பரிமாற்றத்தை தடை செய்துள்ளன. இவற்றில் இந்தியாவும் ஒரு நாடாக உள்ளது. இருப்பினும், சில வெளிநாட்டு மெய்நிகர் இணையதள தரகர்கள் மூலம் இந்தியாவில் இந்த கிரிப்டோ கரன்சி வர்த்தகம் சட்டவிரோதமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

 

இன்னும் இதற்கான சட்டங்களும், ஒழுங்குமுறை கொள்கைகளும் தெளிவாக தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் தகவல் அறியும் உரிமை (RTI) சட்டத்தின் கீழ் வருண் சேதி என்ற தொழில் ஆலோசகர், மெய்நிகர் நாணயம் சம்மந்தமாக பாரத ரிசர்வ் வங்கியிடம் தகவல் கேட்டிருந்தார்.

 

இதற்கு பதிலளித்த ரிசர்வ் வங்கி, ‘ மெய்நிகர் நாணயம் சம்மந்தமாக இதுவரை  எந்த குழுவும் அமைக்கப்படவில்லை, இது சார்ந்து எந்த ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்படாது. மேலும் மற்ற நாடுகளுடன் கலந்து ஆலோசிக்கும் எண்ணம் இதுவரை இல்லை’ எனவும் கூறியுள்ளது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

கடந்த ஏப்ரல் 6 ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஒரு அறிக்கையில் (Prohibition on dealing in Virtual Currencies) மெய்நிகர் நாணய வர்த்தகம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒன்று எனவும்(Ban in India), இதனை கையாள்வதில் வங்கிகள், இ-வாலட் தளங்கள், பணப்பரிமாற்ற சேவை வழங்குவோர் மற்றும் வேறு ஏதேனும் தொழில் முனைவோர்களும் ஈடுபட வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

7000 கோடி ரூபாய்க்கு அதிகமான ஜி.எஸ்.டி. ரீபண்ட் – CBIC

7000 கோடி ரூபாய்க்கு அதிகமான ஜி.எஸ்.டி. ரீபண்ட்  – CBIC

GST Refund Over 7000 Crore Rupees from CBIC

மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வரி வாரியம் (Central Board of Indirect Taxes and Customs) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கடந்த சில நாட்களில் மட்டும் 7000 கோடி ரூபாய்க்கும் அதிகமான ஜி.எஸ்.டி. ரீபண்ட் ஏற்றுமதியாளர்களுக்கு திரும்ப வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

 

ஜி.எஸ்.டி. நிலுவை சம்மந்தமான ஏற்றுமதியாளர்களின் புகார்கள் மற்றும் ரீபண்ட் களுக்கு கடந்த மே மாதம் 31 ம் தேதி முதல் இந்த மாதம் ஜூன் 14 ம் தேதி வரை, ஜி.எஸ்.டி. ரீபண்ட் சிறப்பு திட்டம் அதன் அலுவலகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் கலந்து கொண்டு ஏற்றுமதியாளர்கள் பயன் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

 

சரக்கு போக்குவரத்து ரசீது மற்றும் ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கலில் வேறுபாடு  இருந்தாலும் ரீபண்ட் வழங்கும் முறையும் கொண்டுவரப்பட்டுள்ளது எனவும், கடந்த எட்டு தினங்களில் மட்டும் டெல்லி வட்டாரத்தில், 12,000 சரக்கு போக்குவரத்து ரசீதுகளுக்கு 290 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. ரீபண்ட் (GST Refund) வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தாங்கள் செலுத்திய வரிகளை திரும்ப பெறும் நடைமுறை விரைவில் விமான நிலையங்களிலே ஏற்படுத்தப்படும் என்றும், ஆரம்பகட்டத்தில் பெரிய சில்லரை விற்பனையாளர்களிடம் இருந்து வாங்கப்படும் பொருட்களுக்கு மட்டும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வரி செலுத்தியதை திரும்ப பெறும் நடைமுறை கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் செலுத்திய வரிகளை திரும்ப பெறுவதில் ஒற்றை சாளர முறை கடைபிடிக்கப்படுவதும் கவனிக்கத்தக்கது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

கடனுக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு – RBI

கடனுக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு – RBI

RBI hikes Repo rate and Banks already hiked Interest Rate

 

கடந்த 4-6 ம் தேதி காலத்தில், பாரத ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கூட்டப்பட்டது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டமுடிவுகள் சில:

 

கடந்த சில காலங்களாக மாற்றம் பெறாத ரெப்போ வட்டி விகிதத்தில் இப்போது ரிசர்வ் வங்கி வட்டி விகித மாற்றத்தை அறிவித்துள்ளது. கடந்த காலத்தில் இருந்த ரெப்போ வட்டி விகிதமான 6 சதவீதத்திலிருந்து 0.25 % அதிகரித்து 6.25 % ஆக வெளியிடப்பட்டுள்ளது.

 

இதன் விளைவாக வங்கிகள் வழங்கும் கடன்கள் மற்றும் டெபாசிட் போன்றவைகளுக்கு வட்டி விகிதங்கள் அதிகரிக்க கூடும். ஆனால் சில வங்கிகள் ரிசர்வ் வங்கி நிதி கொள்கை முடிவு வருவதற்கு முன்னரே வட்டி விகித அதிகரிப்பை ஏற்படுத்தி விட்டன.

 

RBI Rates updated on June 2018

 

ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 6 சதவீதத்தில் தொடரும் எனவும், 2018-19 ம் நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 7.4 % ஆக இருக்கும் எனவும் பாரத ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

 

வரும் காலத்தில் (ஏப்ரல்- செப்டம்பர் 2018) நாட்டின் சில்லரை பணவீக்கம் 4.8 – 4.9 % ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் பணவீக்கத்தை அதிகரிக்க கூடும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

 

வங்கி வட்டி விகிதங்கள் ஏன் மாறுகிறது ?

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

திவால் சட்டத்தின் மூலம் விரைவான தீர்வுகளை எட்டும்பட்சத்தில் பெறப்படும் முதலீடுகளை அதிகரிக்க முனைவதாக மத்திய வங்கி சொல்லியுள்ளது. அடுத்த நிதி கொள்கை குழு(Monetary Policy Committee)  வரும் ஜூலை மாதம் 31 ம் தேதியில் கூடுகிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

ஒரே வருடத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்த வங்கிகள்

ஒரே வருடத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்த வங்கிகள்

One Lakh Crore worth written off loans by the banks in a financial year 2017-18

வங்கிகளில் கடன் வாங்குவதும், வைப்பு நிதியில் முதலீடு செய்வதும் தினசரி நடைமுறையாக இருந்தாலும் இன்றைய நாட்களில் வங்கிகளுக்கு வாராக்கடன் என்ற கடன் நிலுவை விகிதமே அதிகரித்து கொண்டு செல்கிறது. வங்கி வட்டி விகிதமும் முதலீட்டிற்கு அதிகமான பலனை தரவில்லை. இருப்பினும் சமீபத்தில் சில தேசிய வங்கிகள் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன.

 

வாராக்கடன் சிக்கல் நாட்டில் உள்ள பெரும்பாலான வங்கிகளுக்கு உள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின் படி சில வங்கிகள் தங்களிடம் உள்ள கடன் நிலுவைகளை தள்ளுபடி செய்வதும் சில வருடங்களாக அதிகமாக உள்ளது.

 

இந்நிலையில் கடந்த 2017-18 நிதியாண்டில் மட்டும் 10 வங்கிகள் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான கடன்களை தள்ளுபடி செய்துள்ளன. இந்த குறிப்பின் படி, பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India -SBI) ரூ. 40,100 கோடி கடனை, 2017-18 ம் நிதியாண்டில் தள்ளுபடி செய்துள்ளன.

 

பாரத ஸ்டேட் வங்கி 2016-17 ல் 20,500 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது. கடந்த இரு வருடத்தில் இது மற்றைய வங்கிகளை காட்டிலும் அதிகமாகும். கடந்த 2016-17 ம் வருடத்தில் பொது துறை வங்கிகள் மட்டும் 80,000 கோடி ரூபாய் மதிப்பிலான கடனை தள்ளுபடி செய்துள்ளன.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

புதிய திவால் சட்டம் (Insolvency and Bankruptcy Code – IBC) மூலம் வங்கிகள் கடன் நிலுவையை திரும்ப பெறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. இதன் காரணமாகவே தங்களது கடனை வங்கிகள் பெரும்பாலும் தள்ளுபடி செய்து வருகின்றன.

 

சமீபத்தில் திவால் சட்டத்தின் வாயிலாக, பினானி சிமெண்ட் (BCL) நிறுவனத்தை அல்ட்ரா டெக் நிறுவனம் சுமார் 7200 கோடி ரூபாய்க்கு வாங்குவதும், எலெக்ட்ரோ ஸ்டீல்(Electrosteel) நிறுவனத்தை 5300 கோடி ரூபாய்க்கு வேதாந்தா நிறுவனம் (Vedanta) வாங்க முயன்றதும், வங்கிகளுக்கு கடன் தள்ளுபடி நிகழ்வை எளிதாகியுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கையில் பாம்பே டையிங் உள்ளிட்ட 37 நிறுவனங்கள் – மும்பை பங்குச்சந்தை

கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கையில் பாம்பே டையிங் உள்ளிட்ட 37 நிறுவனங்கள் – மும்பை பங்குச்சந்தை

37 Stocks under Additional Surveillance Measure (ASM) Frame work – BSE India

 

மும்பை பங்குச்சந்தை கடந்த மே மாதம் 31 ம் தேதி வெளியிட்ட ஒரு அறிக்கையில் சந்தையில் பட்டியலிடப்பட்ட 37 நிறுவனங்களை தனது கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கையின்(ASM) கீழ் கொண்டு வந்துள்ளது. இந்த நிறுவன பட்டியலில் பாம்பே டையிங்(Bombay Dyeing) நிறுவனமும் உள்ளடக்கம்.

 

கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கையில்(ASM Framework)  சேர்க்கப்பட்ட நிறுவனங்களை இரு மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்யப்படும் என மும்பை பங்குச்சந்தை -BSE India தெரிவித்துள்ளது.

 

சந்தை பங்கேற்பாளர்களும் தெரியும் வண்ணம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது எனவும், அவ்வப்போது செய்யப்படும் மாற்றங்களும் அனைத்து முதலீட்டாளர்களின் நலனை கருத்தில் கொண்டு மும்பை பங்குச்சந்தை இணையத்தளத்தில் வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளது.

 

அதே சமயத்தில் இந்த கூடுதல் கண்காணிப்பில் இடம் பெற்றுள்ள நிறுவனங்கள் பட்டியலில் மட்டுமே உள்ளது எனவும், இதன் காரணமாக நிறுவனங்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கையாக கருத கூடாது எனவும் மும்பை பங்குச்சந்தை தெரிவித்துள்ளது.

 
( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

37 நிறுவனங்கள் பட்டியலில் உள்ள சில நிறுவனங்கள் – கிராஃபைட் இந்தியா (Graphite India), ஜி.வி.கே. பவர் (GVK Power and Infra), ரெயின் இண்டஸ்ட்ரீஸ்(Rain Industries), ரேடிக்கோ கைத்தான்(Radico Khaitan).

 

நிறுவனங்களின் பட்டியலை அறிய / பதிவிறக்கம் செய்ய…

https://www.bseindia.com/markets/MarketInfo/DispNoticesNCirculars.aspx?Noticeid=%7B7D4FFAA4-B3F0-48C1-B1AE-D049947C806C%7D&noticeno=20180531-35&dt=05/31/2018&icount=35&totcount=36&flag=0

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் இந்தியா முன்னிலை

வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் இந்தியா முன்னிலை

India ahead on Fastest growing economy

மத்திய புள்ளியியல் அமைச்சகம் (Minsitry of Statistics -CSO) வெளியிட்ட அறிவிப்பில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது என கூறியுள்ளது.

 

நாட்டின் பொருளாதார வளர்ச்சி (GDP – Gross Domestic Product) ஜனவரி – மார்ச் மாத காலத்தில் 7.7 சதவீதமாக உள்ளது.  இந்த வளர்ச்சி இதற்கு முந்தைய மூன்று காலாண்டுகளை விட அதிகமாகும். முதல் மூன்று காலாண்டுகள் முறையே பொருளாதார வளர்ச்சி – 5.6 %, 6.3 % மற்றும் 7 % ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

2017 ம் நிதியாண்டுக்கான நான்காம் காலாண்டு வளர்ச்சி (7.7 %), சீனாவை காட்டிலும் அதிகமாகவும் உள்ளது. சீனா தனது நான்காம் காலாண்டில் 6.8 % வளர்ச்சியை பெற்றுள்ளது.

 

விவசாயம், உற்பத்தி மற்றும் கட்டுமான துறைகளில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் அதனை சார்ந்த வளர்ச்சி வேகம், பொருளாதார சதவீதத்தை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் 2017-18 ம் நிதியாண்டின் மொத்த பொருளாதார வளர்ச்சி 6.7 % ஆக உள்ளது. இது இதற்கு முந்தைய 2016-17 (7.1 %) ஆண்டை காட்டிலும் குறைவு.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

GVA (Gross Value Added) என்று சொல்லப்படும் மொத்த மதிப்பு சேர்ப்பு 2017-18 ம் நிதியாண்டில் 6.5 சதவீதமாக உள்ளது.  இது 2016-17 ல் 7.1 சதவீதமாக இருந்தது. மொத்த மதிப்பு சேர்ப்பு என்பது பொருளாதார வளர்ச்சி விகிதத்தில் வரிகளை தவிர்த்தது போக கிடைக்கும் மதிப்பாக கணக்கிடப்படுகிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

முத்ரா திட்டத்தில் 12 கோடி குடிமக்கள் பயனடைந்துள்ளனர் – பிரதமர் மோடி

முத்ரா திட்டத்தில் 12 கோடி குடிமக்கள் பயனடைந்துள்ளனர் – பிரதமர் மோடி

12 Crore Indian citizens benefited from Mudra Yojana

 

பிரதான் மந்திரி முத்ரா யோஜனா (PMMY – Pradhan Mantri MUDRA Yojana) திட்டம் 2015 ஏப்ரல் மாதத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடியால் துவக்கப்பட்டது. இந்திய அரசினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்தின் நோக்கம் சிறு மற்றும் குறு தொழில், பெரு நிறுவனம் அல்லாத (Non-Corporate) தொழிலுக்கு ரூ. 10 லட்சம் வரை கடன் வழங்குவதாகும். மேலும் புதிய தொழில்முனைவோர் மற்றும் பெண்களை ஊக்குவிக்கும் திட்டமாகவும் இது வழங்கப்பட்டது.

 

இது சம்மந்தமான நிகழ்வில் நேற்று பிரதமர் பேசும் போது, முத்ரா திட்டத்தில் இதுவரை 6 லட்சம் கோடி ரூபாய் கடன், வங்கி மூலம் வழங்கப்பட்டதாகவும், அதன் மூலம் 12 கோடி இந்திய குடிமக்கள்(12 Crore Beneficiaries) பயனடைந்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.

 

கடந்த நிதியாண்டில் மட்டும் முத்ரா திட்டத்திற்காக ரூ.2.53 லட்சம் கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டதாக கூறினார். மேலும் அவர் சொன்னதாவது, “ இத்திட்டம் இளம் தொழில்முனைவோரை ஏற்படுத்தவும், தொழிலில் பெண்களின் பங்களிப்பை அதிகப்படுத்தவும் உதவும்.

 

சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் பெற்று, தொழில் செய்ய ஏதுவாக முத்ரா திட்டம் உள்ளது. 12 கோடி பயனடைந்த மக்களில் 28 சதவீதம் பேர் முதல் தலைமுறை தொழில்முனைவோர்கள்(First Generation Entrepreneurs) என்பது கவனிக்கத்தக்கது.

 

முத்ரா திட்டத்தில் கடன் பெற்றவர்களில் 74 சதவீதம் பேர் பெண்கள்; சுமார் 9 கோடி பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற்று தொழில் செய்து வருகின்றனர். 12 கோடி பயனாளிகளில் 55 % மக்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுகளில் உள்ளோர் “ என்றார்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

முத்ரா திட்டத்தில் பயன்கள் பல உள்ளதென்றாலும், இன்னும் இத்திட்டம் ஏழை மக்களை சென்றடையவில்லை எனவும், வேலைவாய்ப்பை பெருக்கவில்லை என்ற கருத்தும் இருந்து வருகிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

கரூர் வைசியா வங்கியின் நிகர லாபம் 77 % வீழ்ச்சி

கரூர் வைசியா வங்கியின் நிகர லாபம் 77 % வீழ்ச்சி

Karur Vysya Bank Net Profit declines 77 Percent

 

கரூர் நகரத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தனியார் நிறுவனமான கரூர் வைசியா வங்கி தனது காலாண்டு முடிவுகளை அண்மையில் (25-05-18) வெளியிட்டது. இந்த முடிவு வங்கியின் 2017-18 ம் ஆண்டுக்கான நான்காம் காலாண்டு நிதி அறிக்கையாகும்.

 

2017-18 ம் வருடத்திற்கான நான்காம் காலாண்டில் வங்கி நிகர லாபமாக ரூ. 50.56 கோடியை சம்பாதித்துள்ளது. கடந்த டிசம்பர் 2017 ல், அதாவது மூன்றாவது காலாண்டில் நிகர லாபம் ரூ. 71.50 கோடியாக இருந்தது.

 

இதற்கு முந்தைய வருடத்தில் (2016-17) இதே காலத்தில் வங்கியின் நிகர லாபம் 217.56 கோடி ரூபாயாகும். இதனை ஒப்பிடும் போது, தற்போதைய  நிகர லாபம் 77 சதவீதம் சரிந்தது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

கடந்த காலத்துடன் (2016-17) ஒப்பிடும் போது, 2017-18 ம் நிதியாண்டில் நிகர வட்டி வருமானம்(Net Interest Income) 11 % உயர்ந்து ரூ. 643 கோடியாக உள்ளது. மொத்த வாராக்கடன் மார்ச் 2018 காலாண்டில் 6.56 % ஆக உள்ளது. இது டிசம்பர் 2017 ம் காலாண்டில் 5.94 சதவீதமாக இருந்தது.

 

வங்கியின் நிகர வாராக்கடன் தற்போது முடிந்த காலாண்டில் 4.16 சதவீதமாகவும், 2017-18 ன் மூன்றாவது காலாண்டு முடிவில் 3.88 சதவீதமாகவும் உள்ளது.

 

இதர வருவாய்(Other income) குறைந்து மார்ச் காலாண்டில் ரூ. 480 கோடியாக உள்ளது. இது இதற்கு முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் 5.4 % குறைவாகும். கடந்த நிதியாண்டை 2016-17 வருத்தத்துடன் பார்க்கும் போது, இதர வருவாய் 2017-18 ல் ரூ. 208 கோடி ஆகும். இது 10 % இதர வருவாய் சரிவாகும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

ஐந்து வருட குறைவாக பி.எப். வட்டி விகிதம் – 8.55 %

ஐந்து வருட குறைவாக பி.எப். வட்டி விகிதம் – 8.55 %

5 Years Low on EPF Interest Rate – Cuts to 8.55 %

 

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 8.55 சதவீதமாக வழங்க EPFO(Employees’ Provident Fund Organization) முடிவெடுத்துள்ளது. 2017-18 ம் நிதியாண்டுக்கான வட்டி விகிதமாக 8.55 சதவீதத்தை ஏற்கனவே தனது மத்திய குழு கூட்டத்தில் EPF அமைப்பு அறிவித்தது.

 

2016-17 ம் நிதியாண்டுக்கான வட்டி விகிதம் 8.65 % ஆகவும், 2015-16 ம் ஆண்டுக்கு 8.8 சதவீதமாகவும், 2014-15 ல் 8.75 % ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.  தற்போது சொல்லப்பட்டுள்ள 8.55 சதவீதம் கடந்த ஐந்து வருட குறைவாக உள்ளது என்பது கவனிக்கத்தக்கது. 2012-13 ம் நிதி வருடத்தில் EPF வட்டி விகிதம் 8.5 சதவீதமாக இருந்தது.

 

இந்த ஐந்து வருட வட்டி குறைப்பு, சுமார் ஆறு கோடி பி.எப். சந்தாதாரர்களை பாதிக்கும் என ஏற்கனவே பொருளாதார நிபுணர்களால் சொல்லப்பட்டிருந்தது. கடந்த பிப்ரவரி மாதத்திலேயே அறிவிக்கப்பட்ட இந்த 8.55 % வட்டி, கர்நாடக தேர்தலை மேற்கோள் காட்டி வழங்கப்படாமல் இருந்தது. தற்போது இதனை நடைமுறைப்படுத்த கூறியுள்ளது.

 

கடந்த மார்ச் 2018 ன் படி, 8.4 கோடி சந்தாதாரர்கள் தங்களின் பிறப்பு தேதியை சமிர்ப்பிக்கவில்லை என்றும், 11 கோடி பி.எப். கணக்கில் சந்தாதாரர்களின் தந்தை பெயர் குறிப்பிடப்படவில்லை எனவும் அமைச்சரவையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

தொழிலாளர்களுக்கான பி.எப். கணக்கு நடைமுறை தற்போது எளிமையாக்கப்பட்டுள்ளது. UAN (Universal Account Number) என்ற பொது கணக்கு எண் ஒவ்வொரு சந்தாதார்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் எந்த நிறுவனத்தில் பணிபுரிந்தாலும் ஒரே கணக்கு எண்ணை கொண்டு நிர்வகிக்கலாம். தங்கள் விவரங்கள் மற்றும் பி.எப். பணத்தை கையாளும் முறையும் எளிதாக உள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

தேசிய பென்ஷன் திட்டத்தின் சமீபத்திய மாற்றங்கள்

தேசிய பென்ஷன் திட்டத்தின் சமீபத்திய மாற்றங்கள்

Recent Changes in National Pension System (NPS)

 

என்.பி.எஸ் (NPS) எனப்படும் தேசிய பென்ஷன் திட்டம் மத்திய அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு, 2004 ஜனவரி மாதம்(January 1,2004) முதல் இந்தியாவில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும், 2009 ம் வருடம் முதல் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் என கொண்டு வரப்பட்டது. இதனை புதிய பென்ஷன் திட்டம் எனவும் கூறுவதுண்டு.

 

NPS(National Pension System) செயலாக்கத்தால் 2004 ஜனவரி 1 ம் தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு முன்பிருந்த வரையறுக்கப்பட்ட பயனமைப்பை (Defined Benefit System) கொண்ட பென்ஷன் முறை ரத்து செய்யப்பட்டது. இதனால் 2004 முதல் அரசு ஊழியர்களுக்கு பென்ஷன் முறைக்கு மாற்றாக, வரையறுக்கப்பட்ட பங்களிப்பு திட்டம் (Voluntary Defined Contribution System) என்னும் தேசிய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டது.

 

என்.பி.எஸ் திட்டத்தில் பயன்பெறும் ஊழியர் சந்தாதாரர்(Subscriber) எனப்படுவார். இந்த திட்டம் PFRDA (Pension Fund Regulatory and Development Authority) அமைப்பால் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சந்தாதாரர் சார்ந்த தகவல்கள் மற்றும் முதலீட்டு முறைகள் தனியார் நிறுவனங்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

 

தேசிய பென்ஷன் திட்டத்தில் அவ்வப்போது சில மாற்றங்கள் கொண்டு வருவதுண்டு. சமீபத்தில் அது போன்ற மாற்றங்கள் சில அறிவிக்கப்பட்டுள்ளன. சந்தாதாரராக உள்ளவர் திட்டத்தில் இணைந்த மூன்று வருடங்களுக்கு பிறகு தனது பங்களிப்பில் 25 சதவீத பணத்தை விரும்பினால் பெற்று கொள்ளலாம்(25 percent withdrawal). பணத்தை திரும்ப பெற்று கொள்ளும் காரணமாக, தனது துறை சார்ந்த உயர்கல்வி படிப்பது, புதிதாக தொழில் துவங்குவது போன்றவையாக இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

( Read this post after the advertisement… )

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

தனியார் துறையில் பணிபுரியும் சந்தாதார்களுக்கு தனது என்.பி.எஸ். கணக்க்கில் சமபங்கு முதலீட்டை(Equity Investment) 75 சதவீதம் வரை மேற்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த விகிதம் 50 % ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

சந்தாதாரர் தனது திட்ட காலத்தில் அதிகபட்சமாக மூன்று முறை தனது பங்களிப்பு பணத்தை பெற்று கொள்ளலாம் எனவும், இது சம்மந்தமான விண்ணப்ப கோரிக்கையை CRA (Central Record Keeping Agency) என்ற மத்திய ஆவண பதிவு அமைப்பில் கொடுக்கலாம் எனவும் கூறியுள்ளது. அருகில் உள்ள நோடல் அலுவலகத்திலும் விண்ணப்பத்தை கொடுக்கலாம் என தனது அறிவிப்பில் வெளியிட்டுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

Financial Blog in Tamil