விவசாயிகளுக்கான கரீப் பருவ குறைந்த பட்ச ஆதார விலையை உயர்த்தியது – அமைச்சரவை
Government hikes Minimum Selling Price for Kharif Crops
பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதலுக்கு பின், கரீப் பருவ பயிர்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலையை (Minimum Selling or Support Price – MSP) உயர்த்துவது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்தார்.
விவசாயிகளுக்கான கரீப் பருவம் வரும் அக்டோபர் மாதம் துவங்கும் நிலையில், கோடை கால அறுவடை பயிர்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலையை அரசு அறிவித்துள்ளது.
குறைந்த பட்ச ஆதார விலையை உயர்த்தும் வண்ணம் அரசு 15,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக உள்துறை அமைச்சர் கூறியுள்ளார். வருட – வருடாந்திர காலத்துடன் ஒப்பிடும் போது ராகி முதலிடத்திலும், அதற்கடுத்தாற் போல் எண்ணெய் வித்துக்களும் உள்ளன.
ராகி 100 கிலோவுக்கு ரூ. 2897 /- ஆக உயர்த்தியுள்ளது. இது கடந்த வருடத்துடன் பார்க்கும் போது, 52 சதவீதம் அதிகமாகும். அதே போல எண்ணெய் வித்துக்களுக்கு 100 கிலோவுக்கு 5,977 /- ரூபாயாக நிர்ணயித்துள்ளது. இது 45 சதவீத உயர்வாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கலப்பின சோளம் 100 கிலோவுக்கு 2,430 /- ரூபாயாக 42 சதவீதம் உயர்த்தி விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொது ரக நெல்லுக்கு 100 கிலோவுக்கு ரூ. 200 வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. 2018-19 பருவ காலத்தில் 100 கிலோ ரூ. 1,750 /- என சொல்லப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே கடந்த பட்ஜட்டில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லீ, அனைத்து பயிர்களுக்கும் அதன் உற்பத்தி தொகையில் குறைந்தபட்சம் அரை மடங்கு விலையை அரசு நிர்ணயிக்கும் என கூறியிருந்தார். அதன் அடிப்படையில் இப்போது விலை உயர்த்தப்பட்டதாக அமைச்சரவை வெளியிட்டுள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை